WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
Australia: SEP public meetings defend WikiLeaks and Julian Assange
ஆஸ்திரேலியா:
விக்கிலீக்ஸையும்,
ஜூலியன் அசாங்கேயையும் பாதுகாத்து சோசலிச சமத்துவ கட்சியின் பொதுக்கூட்டங்கள்
By
our correspondents
22 December 2010
விக்கிலீக்ஸையும்,
அதன் ஸ்தாபகர் ஜூலியன்
அசாங்கேவையும் பாதுகாத்து
சிட்னியிலும்,
மெல்போர்னிலும்
சோசலிச சமத்துவக் கட்சி
(ஆஸ்திரேலியா)
இந்த வாரம் வெற்றிகரமாக
பொதுக்கூட்டங்களை நடத்தியது.
“ஏகாதிபத்தியத்தின்
இராஜதந்திரம் வெளிப்பட்டது:
விக்கிலீக்ஸ் மற்றும்
ஜூலியன் அசாங்கே மீதான
மாயவேட்டைக்குப் பின்னால்"
என்று தலைப்பிடப்பட்ட,
இந்த நிகழ்வுகளில்,
மாணவர்கள்,
தொழிலாளர்கள்,
தொழில்வல்லுனர்கள்
மற்றும் பணி ஓய்வூ பெற்றவர்கள்
என பல தரப்பு மக்களும் கலந்து
கொண்டனர்.
பலருக்கு,
இது அவர்களின் முதல்
சோசலிச சமத்துவக் கட்சி
நிகழ்வாக இருந்தது.
சோசலிச
சமத்துவ
கட்சியின் தேசிய செயலாளரும்,
உலக சோசலிச வலைத்
தளத்தின்
சர்வதேச ஆசிரியர் குழுவின்
ஓர் உறுப்பினருமான நிக் பீம்ஸ்
மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
மற்றும் உலக சோசலிச எழுத்தாளர்
ஜேம்ஸ் கோகன் ஆகியோரால் இந்த
இரண்டு கூட்டங்களிலும்
உரையாற்றப்பட்டது.
விக்கிலீக்ஸின்
முக்கிய கசிவுகளை மீள்பார்வையிட்ட
அந்த சொற்பொழிவாளர்கள்,
விக்கிலீக்ஸ் மற்றும்
அசாங்கேயிற்கு எதிராக தீவிரமாக
தூண்டிவிடப்பட்டிருக்கும்
அரசியல் முக்கியவத்துவத்தை
வரையறுத்துக் காட்டினர்.
அத்துடன்,
கசிவான
ஆவணங்களால் வெளிப்பட்டிருக்கும்
பொய்கள்,
அரசு
குற்றங்கள் மற்றும்
சூழ்ச்சிகளுக்குப் பொறுப்பான
ஓர் அமைப்புமுறையை முடிவுக்குக்
கொண்டுவர,
சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் ஒரு
புரட்சிகர அரசியல் இயக்கத்தைக்
கட்டியெழுப்ப வேண்டியதன்
அவசியத்தையும் விளக்கினர்.
அறிக்கைகளுக்குப்
பின்னர் கேள்வி-பதில்
அமர்வு தொடர்ந்தது.
சோசலிச
சமத்துவக் கட்சியின் மாதாந்திர
நிதிக்காக
2,700
டாலருக்கும்
அதிகமான நிதி சேர்க்கப்பட்டது.
சிட்னி
கூட்டத்தில்,
முதலில் பேசிய ஜேம்ஸ்
கோகன் பேசுகையில்,
ஜூலியன்
அசாங்கேயை ஒரு
"உயர்-நுட்ப
பயங்கரவாதி"
என்ற
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ
பிடெனின்,
கோபத்தைத்
தூண்டக்கூடிய முறையீடு உட்பட,
தொடர்ச்சியான
வெறித்தனமும்,
விக்கிலீக்ஸ்
மீதான ஜனநாயக விரோதமான
தாக்குதல்களும் எதை
எடுத்துக்காட்டுகிறது என்றால்,
அமெரிக்காவின் ஆளும்
வட்டங்களும்,
சர்வதேச
அளவிலான ஆளும் வர்க்கமும்
"ஜனநாயக
உரிமைகள்,
உள்நாட்டு சுதந்திரம்
மற்றும் பத்திரிக்கை
சுதந்திரத்தின் மீது இருக்கும்
மிக அடிப்படையான கருத்துக்களையும்,
ஒட்டுமொத்த மதிக்காமல்
இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது,”
என்றார்.
அசாங்கேயை
அமெரிக்காவிற்குள் இழுத்து
வந்து,
உளவுவேலையில்
ஈடுபட்டமைக்கான குற்றச்சாட்டுக்களில்
அவரைத் தண்டிக்கும் முயற்சிகளில்
வாஷிங்டன் ஈடுபட்டுள்ளதாக
கோகன் எச்சரித்தார்.
விக்கிலீக்ஸிற்கு
சட்டவிரோதமாக ஆவணங்களைக்
கசியவிட்ட,
ஓர்
இராணுவ உளவுப்பிரிவு வல்லுனரான
பிரைவேட் பிரேட்லி மேன்னிங்,
அதிகபட்ச பாதுகாப்பு
கொண்ட ஒரு சிறைச்சாலையின்
கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கலாம்,
மற்றும்
"விக்கிலீக்ஸிற்கு
அந்த ஆவணங்களை வழங்க அசாங்கே
அவருக்கு அழுத்தம் அளித்ததாகவோ
அல்லது பணம் அளித்ததாகவோ ஒரு
பொய்யான ஒப்புதலை அளிக்க
அதிகபட்சமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு
வரலாம்"
என்ற
"சட்டத்துறை
அச்சங்கள்"
இருப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.
“விக்கிலீக்ஸையும்,
ஜூலியன் அசாங்கேயையும்
பாதுகாப்பதில் தொழிலாள
வர்க்கம் அளவிடமுடியாத
விருப்பத்தைக் கொண்டிருக்கிறது,”
என்று தெரிவித்த
கோகன்,
தொடர்ந்து
தெரிவித்ததாவது:
“ஈராக்கில்
அப்பாவி குடிமக்களைக் கொன்றதன்
ஆதாரங்களையும்,
ஈராக்
மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு
இடங்களிலும் செய்யப்பட்ட
பெரும் அட்டூழியங்களிள்
ஆதாரங்களையும் கசியவிட்டமைக்காகவும்,
ஏகாதிபத்திய
இராஜதந்திரத்தின் அன்றாட
உண்மைகளை வெளிச்சமிட்டுக்
காட்டியமைக்காகவும்,
அமெரிக்க முதலாளித்துவ
அரசால் விக்கிலீக்ஸை அழிக்கவும்,
அசாங்கேயை கைது செய்யவோ
அல்லது படுகொலை செய்யவோ
முடியுமானால்,
பின்
நம் அனைவருடைய உரிமைகளும்
ஒரு மோசமான பின்னடைவைச்
சந்திக்கும்,”
என்றார்.
விக்கிலீக்ஸ்
மற்றும் அசாங்கேக்கு எதிராக
கட்டவிழ்த்துவிடப்படும்
முறைமைகளின் அசாதாரண இயல்பானது,
அமெரிக்க இராஜாங்க
கசிவுகளில் வெளிப்பட்டிருந்த
ஆழமான வரலாற்று முக்கியத்துவத்தை
எடுத்துக்காட்டுகிறது என்று
நிக் பீம்ஸ் தெரிவித்தார்.
(நிக்
பீம்ஸின் முழுமையான
உரையை உலக சோசலிச வலைத்
தளம்
(ஆங்கிலத்
தளத்தில்)
டிசம்பர்
23இல்
பிரசுரிக்கும்.
1917
ரஷ்ய புரட்சிக்குப்
பின்னர்,
ஜார்
ஆட்சியின் மற்றும் ஏகாதிபத்திய
அதிகாரங்களின் இரகசிய இராஜாங்க
ஆவணங்கள்,
லியோன்
டிரொட்ஸ்கியால் வெளியிடப்பட்ட
பின்னர் ஏற்பட்ட சர்வதேச
அதிர்வுகளையும் பீம்ஸ்
நினைவுகூர்ந்தார்.
ஆவணங்களைப்
பிரசுரித்த போது வெளியிட்ட
அறிக்கையில்,
ட்ரொட்ஸ்கி
எழுதினார்:
“உடைமைகளைக்
கொண்டிருக்கும் சிறுபான்மை,
அதன் நலன்களுக்கு
ஏற்ப பெரும்பான்மையை வளையச்
செய்வதற்காக,
அவர்களை
ஏமாற்ற பலவந்தப்படுத்தும்.
அதற்காக அந்த
சிறுபான்மைக்கு,
இரகசிய
இராஜதந்திரங்கள் ஓர் அவசியமான
கருவியாக இருக்கிறது.
ஏகாதிபத்தியம்,
வெற்றி கொள்வதற்கான
அதன் நிழலுலக திட்டங்கள்
மற்றும் அதன் கொள்ளைகூட்ட
கூட்டணிகள் மற்றும் உடன்படிக்கைகள்
ஆகியவற்றுடன்,
இரகசிய
இராஜதந்திர அமைப்புமுறையை
உச்சக்கட்டத்திற்கு அபிவிருத்தி
செய்தது.
ஐரோப்பிய
மக்களை உறிஞ்சும்,
மற்றும்
அழித்து கொண்டிருக்கும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
போராட்டமானது,
அதே
நேரத்தில்,
ஒருநாள்
வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ
என்று அச்சப்படுவதற்குப்
போதிய காரணத்தைக் கொண்டிருக்கும்
முதலாளித்துவ இராஜதந்திரத்திற்கு
எதிரான ஒரு போராட்டமாக
இருக்கிறது.”
"உலக
மக்களுக்கு
எதிராக கபடத்தனம் செய்யும்
ஏகாதிபத்தியம் இன்றும்
தொடர்ந்து கொண்டிருப்பதால்”,
ட்ரொட்ஸ்கியின்
மதிப்பீடு இன்றைய நிலையில்
சக்திமிக்க வகையில் பொருந்தி
நிற்பதாக பீம்ஸ் விளக்கினார்.
அவர் தொடர்ந்து
கூறுகையில்:
"முடிவில்லா
'பயங்கரவாதத்திற்கு
எதிரான யுத்தத்தின்'
இரண்டாவது தசாப்தத்திற்குள்
நாம் நுழைந்திருப்பதாலும்,
சீனாவிற்கு எதிரான
யுத்த தயாரிப்புகள் நடந்து
வருவதாலும்,
விக்கிலீக்ஸின்
வெளியீடுகள்,
ஏகாதிபத்திய
இராணுவ மற்றும் அரசியல்
வட்டாரங்களுக்குள் இவை
சுறுசுறுப்பான விவாதத்தின்கீழ்
உள்ளன,”
என்றார்.
இரண்டு முன்னாள்
தொழிற்கட்சி தலைவர்கள்—கெம்
பீஜ்லே மற்றும் கெவின்
ரூட்—சீனாவிற்கு
எதிரான
எதிர்கால யுத்தத்தில்
ஆஸ்திரேலியாவின் பொறுப்புக்களைக்
குறித்து,
அமெரிக்க
அதிகாரிகளுடன் இரகசியமாக
விவாதித்துள்ளனர்.
தொடர்ந்து
கொண்டிருக்கும் இராஜாங்க
பொய்களும்,
வஞ்சகங்களும்
தனிநபர்களின் விளைபொருட்கள்
அல்ல,
மாறாக
ஏகாதிபத்தியத்தின் இயல்பாக
உள்ளது என்பதையும் பீம்ஸ்
குறிப்பிட்டுக் காட்டினார்.
நீண்டகால அரசியல்
வித்தைகளும்,
வரலாற்று
பொய்களும்—அதுமட்டுமின்றி,
2008இல்
அமெரிக்க
வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட
பெரும் பிணையெடுப்புகளாலும்,
உலகளாவிய நிதியியல்
நெருக்கடியாலும் வெளிப்பட்ட
சந்தையின்
தாக்குப்பிடிக்க
முடியாததன்மையும்,
முதலாளித்துவ அரசின்
மற்றும் பூர்ஷூவா நீதிமுறையின்
உண்மையான வர்க்க இயல்பும்—வெறுமனே
மேலோட்டமாக கைவிடப்படுகின்றன
என்று அவர் விளக்கினார்.
இந்த ஆண்டு
ஆஸ்திரேலிய பிரதம மந்திரி
ரூட்டை பதவியிலிருந்து
வெளியேற்றிய அந்த இராணுவ
சூழ்ச்சியில் சம்பந்தப்பட்ட,
தொழிற்கட்சி செனட்டர்
மார்க் அர்பீப் போன்றவர்கள்,
அமெரிக்க தூதரகத்துடன்
தொடர்ந்து இரகசிய தொடர்பில்
இருந்ததை வெளிப்படுத்திய
சமீபத்திய கசிவுகளின் அரசியல்
முக்கியத்துவத்தையும் அவர்
விளக்கிக் காட்டினார்.
விக்கிலீக்ஸ்
மற்றும் அசாங்கே மீதான
தாக்குதல்கள் மிகச் சரியாக
உலகெங்கிலும் உள்ள மில்லியன்
கணக்கான
மக்களின் எதிர்ப்பைத்
தூண்டிவிட்டிருப்பதாகவும்
பீம்ஸ் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறும்
போது,
“முதலாளித்துவ
அரசியல்வாதிகள்,
அவர்களின்
பொதுவான அரசியல் வர்ணப்பூச்சுகளுக்கு
ஏற்ப,
மனிதயினத்தின்
எதிர்காலத்தை அச்சுறுத்தும்
கொள்கைகளை செயல்படுத்தி
வருகிறார்கள் என்பதைக் குறித்த
ஓர் ஆழமான ஒப்புதல் நிலவுகிறது,”
என்றார்.
"ஆனால்,
இந்த கவலை ஒரு தெளிவான
அரசியல் முன்னோக்கு இல்லாமல்
இருக்கிறது.
யுத்த
அபாயமும்,
ஜனநாயக
உரிமைகள் மீதான தாக்குதலும்
முதலாளித்துவ அமைப்புமுறை
உடைவின் ஒரு வெளிப்பாடாக
இருக்கின்றன என்ற புரிதல்
தான் தேவையாய் இருக்கிறது.
பொருளாதார வட்டத்தில்,
தொழிலாள வர்க்கம்
எதிர்கொண்டிருக்கும் அனைத்து
பிரச்சினைகளும்,
சர்வதேச
தன்மையை பெற்றிருக்கின்றன
என்பதையே உலகளாவிய நிதி
நெருக்கடி வெளிப்படுத்துகிறது.
தற்போது,
விக்கிலீக்ஸ்
கசிவுகளும் அரசியல் வட்டத்தில்
இதே புள்ளியைத் தான்
எடுத்தியம்புகின்றன.”
“ஒரு
கட்சியைக்
கட்டியமைப்பதற்கான முன்னோக்கிய
பாதை,
வேலைத்திட்டமும்,
நிலைநோக்கும் கொண்ட,
தொழிலாள வர்க்கத்தை
சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதற்கான
அக்கட்சியின் போராட்டத்தில்
தங்கியிருக்கிறது.
இதுதான்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக
குழுவின்,
உலக சோசலிச
புரட்சிகர கட்சியின்,
மற்றும் அதன் ஆஸ்திரேலிய
பிரிவின்,
சோசலிச
சமத்துவ கட்சியின் முன்னோக்காகும்.”
அறிக்கைகளுக்குப்
பின்னர்,
நீளமான
விவாதங்கள் தொடர்ந்தன.
தொழிலாள வர்க்கத்தை
எவ்வாறு வரையறுப்பது,
அரசியல் முன்னோக்கு
மற்றும் நனவின் நெருக்கடியை
எவ்வாறு தீர்ப்பது ஆகியவைக்
குறித்தும்,
பாராளுமன்றம்
மற்றும் தேர்தல்களின் சோசலிச
சமத்துவக் கட்சியின் அணுகுமுறை
மீதும்;
அமெரிக்காவிற்குள்
விக்கிலீக்ஸின் வெளியீடுகளுக்கு
சாதாரண மக்கள் மத்தியில்
நிலவும் பிரதிபலிப்பு
குறித்தும்,
மெல்போர்னில்
கேள்விகள் கேட்கப்பட்டன.
பிரதமர் பதவியிலிருந்து
ரூட் நீக்கப்பட்டதில்
வாஷிங்டனின் பாத்திரத்தைக்
குறித்த கேள்விகளும்,
கருத்துரைகளும்
இருந்தன.
அமெசன்
மற்றும்
பேபால் போன்ற நிதியியல்
அமைப்புகள்,
விக்கிலீக்ஸின்
சேவைகளை எவ்வாறு சட்டப்பூர்வமாக
வெட்ட முடிந்தது என்பது
குறித்தும்;
அடுத்த
10
அல்லது
20
ஆண்டுகளில்
சீனாவிற்கு என்ன நடக்கக்கூடும்
என்பது குறித்தும்;
மற்றும்
ஏன் பல
"இடது"
கட்சிகள் வலதின்
பக்கம் திரும்புகின்றன;
அவை ஏன் ஏகாதிபத்தியத்திற்கும்,
வெட்டுக்களுக்கும்
தங்களைத்தாங்களே சமரசப்படுத்திக்
கொள்கின்றன என்பது குறித்தும்
சிட்னியில் கேள்விகள்
எழுப்பப்பட்டன.
*
* *
சிட்னியில்,
தம்முடைய முதல் சோசலிச
சமத்துவ கட்சி கூட்டத்தில்
கலந்து கொண்ட கெர்ரி,
அந்த
கூட்டத்தில்
"நிறைய
தகவல்கள்"
கிடைத்ததாக
தெரிவித்தார்.
கெர்ரி
தொடர்ந்து
கூறுகையில்:
“வெகுகாலமாக
மார்க்சிசம் வளர்த்தெடுத்து
வரப்படுகிறது;
ஒரு
மார்க்சிச அணுகுமுறையில்
எனக்கு எப்போதும் ஆர்வம்
உண்டு—அது
எனக்கு அர்த்தமுள்ளதாக
தெரிகிறது,”
என்று
அவர் தெரிவித்தார்.
“சமுதாயம்
எவ்வாறு செயல்படுகிறது என்பதை
நான் கவனிப்பதால்,
விக்கிலீக்ஸ்
குறித்து நான் மிகவும் ஆர்வமாக
உள்ளேன்.
பெருந்திரளான
மக்கள் ஒரு மேற்தட்டாலும்,
பெரும் சக்திகளாலும்,
செல்வந்தர்களாலும்
அடக்கப்படுகிறார்கள்.
மேலும் நம்மிடமிருந்து
நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதால்,
அந்த குறிப்பிட்ட
மேற்தட்டு அவர்களின் நன்மைக்காக,
நாம் எதை நம்ப வேண்டும்
என்று விரும்புகிறதோ அதை
நாம் நம்புகிறோம்.
இந்த
அனைத்து உண்மைகளையும்
வெளியிட்டதன் மூலமாக,
நீண்டகாலமாக நம்மிடமிருந்து
எது மறைத்து வைக்கப்பட்டிருந்ததோ,
அதை விக்கிலீக்ஸ்
வெளியே கொண்டு வந்திருக்கிறது.”
“நம்மிடையே
உண்மைகளைக் கொண்டு வருவதற்காக
-
நாம்
யாருக்கு
வாக்களிக்கிறோம் என்பதை நாம்
தெரிந்து கொள்வதற்காக
-
நாம் வாழும்
இந்த
சமூகத்தில் என்ன நடந்து
கொண்டிருக்கிறது என்பதை நாம்
அறிந்து கொள்வதற்காக
-
ஜூலியன்
அசாங்கே
உட்பட,
மக்களில்
ஒரு குழுவினர் அவர்களின்
வாழ்க்கையை அபாயத்திற்கு
உட்படுத்தி,
முயற்சி
எடுக்கிறார்கள்.”
“இங்கே
உட்கார்ந்து
கொண்டு பொய்களை பரப்பிக்
கொண்டு,
'பெரும்
பீரங்கிகளுக்கும்',
அவர்களின்
நலன்களுக்கும் தங்களின்
வாழ்க்கையை அளித்துக்
கொண்டிருப்பதை விட,
சோசலிச
சமத்துவ கட்சி போன்ற குழுக்கள்
மூலமாக,
ஒரு பேச்சிற்காக
சொல்வதானால்,
எல்லா
'சிறிய
மனிதர்களும்',
ஒன்றுபட முடியும்;
உண்மைக்கு ஒப்புதல்
அளிக்க முடியும்;
எதற்காக
போராடுவது மதிப்புடையதாக
இருக்கும் என்பதில் உடன்பட
முடியும்.”
உலக சோசலிச
வலைத்
தளத்திடம் சாம் கூறுகையில்,
விக்கிலீக்ஸ்
"உண்மையைக்
காப்பாற்றுகிறது"
என்பதாலும்,
“அமெரிக்காவிலும்,
உலகின் ஏனைய பெரும்பாலான
பகுதிகளிலும் ஏறத்தாழ
முற்றிலுமாக நசுக்கப்பட்டிருக்கும்
ஜனநாயக உரிமைகளைக்
காப்பாற்றுவதற்காகவும்,
மற்றும் அனைத்துவிதமான
வெறுக்கத்தக்க யுத்தங்களுக்குப்
பின்னாலிருக்கும் அனைத்து
பொய்களுக்கும் முற்றுப்புள்ளி
வைப்பதற்காகவும்"
தான்
சிட்னி கூட்டத்தில் கலந்து
கொள்ள முடிவெடுத்ததாக
தெரிவித்தார்.
வேலையற்ற
ஓர்
இளம் தொழிலாளியான ஹீத்,
கூட்டத்தில் அளிக்கப்பட்ட
பகுப்பாய்வின் ஆழத்தாலும்,
தெளிவாலும் தாம்
"மிகவும்
கவர்ந்திழுக்கப்பட்டதாக"
தெரிவித்தார்.
“விக்கிலீக்ஸ்
மீதான
தாக்குதலோடு சம்பந்தப்பட்ட
பரந்த பிரச்சினைகளை
சொற்பொழிவாளர் விளக்கிய
விதத்தையும்,
பின்
அதன் ஆழத்திற்கு சென்றதையும்
நான் மிகவும் விரும்பினேன்,”
என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த
கட்சி சிறந்த
கோட்பாடுகளைக் கொண்டிருப்பது
என்னை மிகவும் கவர்ந்தது.
நான் தொடர்பு கொண்ட
கட்சிகளிலேயே,
ஒரு
தொடர்ச்சியான கருத்துக்கள்
மற்றும் கோட்பாடுகள் மற்றும்
ஒரு தெளிவான முன்னோக்கைக்
கொண்டிருக்கும் ஒரே கட்சி
இது தான்,”
என்றார்.
“ஒரு
பெரிய
அமைப்புமுறை மோசடியின் ஒரு
பகுதியைத் தான் விக்கிலீக்ஸ்
வெளிப்படுத்தியுள்ளது"
என்று விளக்கிய நிக்
பீம்ஸ்,
விக்கிலீக்ஸ்
வெளியிட்டிருக்கும் பொய்களும்,
சூழ்ச்சிகளும்,
இதுநாள்வரையில்
மார்க்சிச பகுப்பாய்வால்
மக்கள் எதை அறிந்திருக்கிறார்களோ
அவற்றை இவை எவ்வாறு
உறுதிப்படுத்துகின்றன
என்பதையும் விளங்கப்படுத்தினார்.
விக்கிலீக்ஸ்,
பொய்மைகளின் ஒரு மிகச்
சிறிய பகுதியை மட்டும் தான்
வெளிப்படுத்துகிறது,
ஆனால்
அது ஒரு வடிவத்தை காட்டியுள்ளது.
“ஒபாமா
மற்றும் கில்லார்ட் அரசாங்கங்கள்
இந்த கசிவுகளுக்குக்
காட்டியிருக்கும் பிரதிபலிப்பானது,
விக்கிலீக்ஸ்
துண்டுதுண்டாக்கப்படுவதற்கான
விளிம்பில் நிற்கிறது என்பதை
நாம் புரிந்து கொண்டிருப்பதைப்
போலவே அவர்களும்
புரிந்துகொண்டிருக்கிறார்கள்
என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இது உத்தியோகபூர்வ
மாளிகையை உடைக்கத் தொடங்கி
இருப்பதைப் போல இருக்கிறது.
யுத்த கசிவுகளின்
முந்தைய விக்கிலீக்ஸ்
வெளியீடுகள்,
ஆப்கானிஸ்தான்
மற்றும் ஈராக்கில் அமெரிக்காவினாலும்,
அதன் நேச நாடுகளாலும்
செய்யப்பட்ட உண்மையான குற்றங்களை
வெளிப்படுத்தின.
ஆனால்
அந்த இராஜாங்க கசிவுகள்,
அரசாங்கங்கள் எவ்வாறு
ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன
என்பதை குறித்திருந்தன.
அது
மறைமுகமாகவும்,
கபடங்களாலும் ஆன
இராஜதந்திரங்களாக இருக்கின்றன.
அவர்கள் ஒவ்வொன்றையும்
குறித்து பொய் பேசுகிறார்கள்.
இந்த அமைப்புமுறையில்
நம்பிக்கை வைத்திருக்கும்
அனைவருக்கும்,
அதுவே
அதனை வெளிப்படுத்திக்
காட்டுகிறது.”
அவர்
தொடர்ந்து
கூறுகையில்,
'தொழிலாள
வர்க்கம் தான் சோசலிசத்திற்கான
வாகனம் என்பதைக் கைவிடாத ஒரே
கட்சியாக சோசலிச சமத்துவக்
கட்சி ஒன்று மட்டும் தான்
இருக்கிறது'
என்பது,
இந்த கூட்டத்தின்
மற்றொரு முக்கிய கூறுபாடாகும்"
என்றார்.
“தொழிலாள
வர்க்கம் தான் சமூகத்தை
மாற்றக் கூடிய புரட்சிகர
வர்க்கம் என்ற அதன் பகுப்பாய்வில்,
சோசலிச சமத்துவக் கட்சி
உறுதியாக உள்ளது.
இது
ஏதோவொரு நம்பிக்கை அல்ல,
மாறாக ஒரு புரிதலாகும்.”
மெல்போர்னில்
கலந்து கொண்ட,
12வது
வகுப்பு மாணவி சிண்டி கூறியதாவது:
“ஒட்டுமொத்த
விக்கிலீக்ஸ்
பிரச்சினையும்,
அமெரிக்க
அரசாங்கத்தின் பிரச்சினைகளையும்,
மற்றும் திரைக்குப்
பின்னால் உண்மையில் என்ன
நடக்கிறது என்பதையும்
எடுத்துக்காட்டுகின்றன,”
என்றார்.
“பேச்சாளர்களில்
ஒருவர்,
உலகளாவிய
நிதி நெருக்கடியுடனான
தொடர்பையும்,
மேலும்
அது முதலாளித்துவத்தின்
உடைவுமாகும் என்பதையும்
விளக்கினார்.
அந்த
விதத்தில் நான் ஒருபோதும்
சிந்தித்ததே இல்லை;
இவற்றைக்
குறித்து மேலும் கேட்க ஆர்வமாக
இருக்கிறேன்.
வங்கி
தலைமை செயலதிகாரிகள் ஓய்வுபெறும்
போது என்ன பெறுகிறார்கள்
என்பதை—உண்மையில்
பெரும்
தொகையைப் பெறுகிறார்கள்—தொழிலாளர்
பெறுவதோடு
(இவர்களுக்கு
ஒன்றுமே கிடைப்பதில்லை)
நீங்கள் ஒப்பிட்டிருக்கலாம்.
அந்த விதத்தில்
ஒருவரும் அதை சிந்திக்கவில்லை.”
“என்னுடைய
ஆசிரியர்களில் ஒருவர் வளைகுடா
எண்ணெய் பேரழிவு குறித்தும்,
BP
இன் மேலதிகாரிகள்
அது நிகழும் என்று அறிந்திருந்ததாகவும்
எனக்கு கூறினார்கள்.
தொழிலாளர்கள் அந்த
பிரச்சினையைக் கண்டவுடன்,
அதை சரிசெய்ய
விரும்பினார்கள்.
ஆனால்
நிறுவனம் ஒன்றுமே செய்யவில்லை.
அது வெடித்தது.
அதில்
11
தொழிலாளர்கள்
உயிரிழந்தார்கள் என்பதே
பலருக்குத் தெரியாது என்று
நினைக்கிறேன்.”
“அரசாங்கங்களின்
மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன,
எவ்வாறு தலைவர்கள்
உருவாக்கப்பட்டார்கள் என்பதைக்
குறித்து கற்க,
பிரெஞ்சு
மற்றும் ரஷ்ய புரட்சிகளைப்
[பன்னிரெண்டாம்
வகுப்பில்]
படிக்க
விரும்பினேன்.
நான்
லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து
படித்தேன்.
போல்ஷ்விக்குகள்
ஒழித்திருந்த ஒட்டுமொத்த
வல்லாண்மையையும் நான்
ஆதரிக்கிறேன்.
லெனின்,
ட்ரொட்ஸ்கி போன்றவர்கள்
மார்க்சிசத்தின் முன்னுதாரணங்களாக
இருந்தார்கள்.
யுத்தத்தை
வெறுத்த லெனின்,
முதலாளித்துவ
யுத்தமாக இருந்த முதலாம் உலக
யுத்தத்தை முடிவுக்குக்
கொண்டு வர விரும்பினார்.”
சூரியவொளித்துறை
வன்பொருள் பொறியாளரான
(solar hardware engineer)
காசீப்
கூறியதாவது:
“முடிவெடுக்கும்
அதிகாரத்தில் யார் இருக்க
வேண்டும் என்பதை நாம்
தேர்ந்தெடுத்தாலும் கூட,
இவர்கள் நமக்காக
செயல்படுவதில்லை,
மாறாக
இவர்கள் மூலதனத்தின் கைப்பாவைகளாக
மாறிவிடுகின்றனர்.
இது
ஏனென்றால்,
முதலாளிகள்
ஆதிக்கம் செலுத்துகிறார்கள்;
அவர்கள் பொதுவான
நலன்களுக்காக அல்லாமல்,
அவர்களின் சொந்த
நலன்களுக்கான அரசாங்கங்களைப்
பயன்படுத்துகிறார்கள்,”
என்றார்.
“நான்
ஜூலியன்
அசாங்கே மீதான தாக்குதல்களுக்கு
எதிராக நிற்கிறேன்.
நான்
பேச்சு சுதந்திரம் மீதான
எவ்வித தாக்குதலுக்கும்
எதிராக நிற்கிறேன்.
யாராவது
தவறு செய்தால்,
அது
எங்கே நடக்கிறது என்பது
முக்கியமல்ல,
அது
வெளி கொண்டு வந்து காட்டப்பட
வேண்டும்.
ஒருவர்
தவறு செய்கிறார் என்பதை
வெளிப்படுத்துவதில் என்ன
தவறு இருக்கிறது?
அவர்
ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?
அவருடைய வலைத்
தளம்
ஏன் முடக்கப்படுகிறது?
உண்மையை பின்தொடரும்
ஒருவரை துன்புறத்த,
அவர்களிடம்
எந்த சட்டமும் இல்லை.
அசாங்கேயின் செயல்பாடுகள்
சட்டவிரோதமானவை என்று ஜூலியா
கில்லார்ட் எந்த சட்டத்தின்
அடிப்படையில் கூறினார்?”
“அசாங்கேயை
துன்புறுத்தும் நாடுகள் ஒரு
பொதுவான நலனைக் கொண்டிருக்கின்றன.
இந்த நாடுகள்—அமெரிக்கா,
ஆஸ்திரேலியா,
ஸ்வீடன்
மற்றும் இங்கிலாந்து—விரல்விட்டு
எண்ணக்கூடிய நபர்களுக்கு,
முதலாளிகளுக்கு
பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட
ஒரு வெளிநாட்டுக் கொள்கையைக்
கொண்டிருக்கின்றன.
விக்கிலீக்ஸ்
அவர்களின் வெளிநாட்டு
கொள்கைகளுக்கு ஒரு பலத்த
அடியாக இருக்கிறது.
இது
அவர்களின் கொள்கைகளுக்கு
கிடைக்கும் நிதியுதவியை
பாதிக்கச் செய்திருக்கிறது.
அதனால் தான் அவர்கள்
ஜூலியன் அசாங்கேயைத் தடுக்க
முயற்சிக்கிறார்கள்.” |