WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய பாராளுமன்ற
உறுப்பினர்கள் தங்களுக்கே தாராளமான கிறிஸ்துமஸ் போனஸை அளித்துக் கொள்கின்றனர்
By Stefan
Steinberg
20 December 2010
Use
this version to print | Send
feedback
இம்மாதம்
முன்னதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்துமஸ் போனஸாக தங்களுக்கே கணிசமான
தொகையை அளித்துக் கொண்டனர்.
ஐரோப்பிய பாராளுமன்ற
உறுப்பினர்கள்
(Members of the European parliament
-MEP
) 2 சதவிகித ஊதிய
உயர்வை கடந்த ஆண்டு நடுவில் இருந்து பின்தேதியிட்டு தங்களுக்கே அளித்துக் கொண்டனர்.
மேலும்
MEP க்கள்
2.3 சதவிகிதம்
தங்கள் இதர படிகளிலும் உயர்வை ஏற்றுள்ளனர்.
இதன் பொருள்
736 ஐரோப்பிய
பாராளுமன்ற உறுப்பினர்களும் புத்தாண்டில் மொத்த அளிப்பாக
5,400 பவுண்டுகளை
[US$8,378]
தங்கள் வழக்கமான
ஊதியங்கள்,
செலவுத் தொகைகளை
தவிர்த்து பெறுவர் என்பதாகும்.
ஊதியம் மற்ற
படிகளில் உயர்வு என்பது ஒவ்வொரு உறுப்பினர்களும்
2011ல்
170,000
பவுண்டுகளுக்கும் மேலாக அதிகரிக்கச் செய்துள்ளது.
இது
MEP க்கள்
ஓராண்டிற்குப் பெறும் ஊதியத்தை
£80,829 என்றும்
“அன்றாடத் தேவைப்படி”,
“பொதுச் செலவு”
ஆகியவற்றை
£90,975 என்றும்
ஆக்கும்.
இதன் பொருள் அன்றாட படிச்
செலவு MEP
க்குக்கு
€297 to €304 என்று
உயர்த்தும். MEP
க்கள் தங்கள்
படிகளுக்கான செலவுகளில் இரசீதுகளையோ கணக்கையோ காட்டத் தேவையில்லை.
இவர்கள்
£170,000 ஐயும் விட
அதிகமாகச் சம்பாதிக்கலாம்,
மற்ற பணி
ஆதாரங்களிலிருந்து,
அதாவது ஆலோசனை கூறல்,
சட்டப் பணிகள்
போன்றவற்றில் இருந்து கூடுதல் வருமானம் பெறலாம்.
ஊதியம்
மற்றும் பிற படிகளில் உயர்வு என்னும் திட்டம் ஸ்ட்ராஸ்பூர்க்கில் பாராளுமன்றப்
பிரிவின் கூட்டத்தில் ஒப்புதலைப் பெற்றது.
இந்த முடிவு எந்த
விவாதமும் இல்லாமல் ஏற்கப்பட்டது.
கடுமையான
சிக்கனத் திட்டங்களும் ஊதியக் குறைப்புக்களும் ஐரோப்பா முழுவதும் தேசிய
பாராளுமன்றங்களில் சுமத்தப்படும் நேரத்தில் இந்த ஊதிய உயர்வு பிரதிநிதிகளால்
ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுப் பணித்துறை,
ஆட்சிப்பணியாளர்கள்
அனைவரும் 5
முதல்
20 சதவிகித ஊதியக்
குறைப்புக்கள் சுமத்தப்பட்டுள்ளதை அயர்லாந்து,
ஸ்பெயின்,
கிரேக்கம் இன்னும்
பல கிழக்கு,
மத்திய ஐரோப்பிய
அரசுகள் ஏற்றுள்ளனர்.
ஐரோப்பிய
பாராளுமன்றத்தின் துணைத் தலைவரான டயனா வாலிஸ்,
MEP க்கள் தானே
தீவிரமாகச் செயல்பட்டுப் படிகளை உயர்த்திக் கொண்டதை பாதுகாத்துள்ளார்.
இந்த அதிகரிப்பு
“நியாயமானதே”
என்று அவர்
அறிவித்து,
ஒரு வலைத் தளத்தில்,
“இது மக்களிடையே
செல்வாக்குப் பெறாது என்பதை நான் அறிவேன்,
அதுவும் பல
மக்களுக்குக் கடினமான நேரத்தில்.
அதைப்பற்றிச் சற்றே
மன உளைச்சல் உண்டு,
ஆனால்….பலவற்றின்
விலைகள் பெரிதும் உயர்ந்துள்ள நிலையில்,
அதையும் நாம்
கருத்திற் கொள்ள வேண்டும்”
என்று எழுதியுள்ளார்.
கூடுதலான
படிச் செலவுகள் ஒரு தொழிற் கட்சி
MEP யான ஆர்லீன்
மக்கார்த்தியாலும் காக்கப்பட்டுள்ளது. அவர் புகார் கூறியது:
“ஸ்ட்ராஸ்பூர்க்
மற்றும் பிரஸ்ஸல்ஸில் நான் வீட்டு வாடகைக்காக கூடுதலான ஓராண்டிற்கு முன்
இருந்ததைவிட அதிகமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே செலவுகள் அதிகரிக்கும்போது
அதற்கேற்ப படிகள் அதிகரிப்பும் நியாயமனதுதான்.”
ஊதிய
அதிகரிப்புக்களைப் பற்றிக் குறைகூறியுள்ள
Sian Herbert,
அழுத்தம் தரும் குழுவான
Open Europe
உறுப்பினர்,
தனக்கே ஆதாயம்
தேடிக்கொள்ளும் பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவத்திற்கும் ஐரோப்பியக் குடிமக்களில்
பெரும்பாலானவர்களுக்கும் இடையே பெருகும் இடைவெளியைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
போனஸ் பற்றி
ஹெர்பர்ட் கூறுவதாவது:
“MEP க்களுக்கு
அதிகரிப்பிற்காக கொடுக்கப்படும் பெரும் நிதி,
இந்த முறையில்
இருந்தே மிக அதிகப் பணம் என்று ஆகியுள்ளது.”
உத்தியோகபூர்வ நிர்வாகிகள் ஊதிய அளிப்பு பற்றிய குறைகூறலைத் திசைதிருப்பும் வகையில்
அதிகரிப்புக்கள்
“வாடிக்கையானவை”,
“அசாதாரணமானவை அல்ல”
என்று அறிவித்தனர்.
£14,000
க்கும் மேல் மாத ஊதியம்,
2 சதவிகிதம் ஊதிய
உயர்வு, £5,400
கிறிஸ்துமஸ் போனஸ்
ஆகியவை கொழுத்த பூனைகளுக்கு
“அசாதாரணம் அல்ல”
என்று தோன்றலாம்.
ஆனால் ஐரோப்பியப் பாராளுமன்றம் வலியுறுத்தி சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளில்
வாடுபவர்களுக்கு நடைமுறை முற்றிலும் வேறாகத்தான் உள்ளது.
சமீபத்திய
ஐரோப்பிய ஆணையத்தின்
(EC) மதிப்பீடு
ஒன்றின்படி,
ஐரோப்பிய
குடிமக்களில் 75
சதவிகிதம்
வறுமையானது மந்த நிலையால் அதிகரித்துள்ளது என்றும் மக்களில் பெரும்பாலானவர்கள்
மாதக் கடைசியில் தங்கள் கட்டணங்களைக் கொடுக்க இடர்ப்படுகின்றனர் என்றும் தெரிய
வந்துள்ளது.
பொதுச்
செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை அறிவித்துள்ள கிரேக்கம் அல்லது ஸ்பெயின் போன்ற
நாடுகளில் வறுமை வளர்ச்சி அதிகமாக உள்ளது என்றும் மதிப்பீடு தெரிவிக்கிறது.
மதிப்பீட்டிற்குட்பட்ட கிரேக்க மக்களில்
74 சதவிகிதம் வறுமை
அதிகரித்துள்ளது பற்றிப் புகார் கூறியுள்ளனர்,
இதைத்தொடர்ந்து
ருமேனியாவில் 65
சதவிகிதம்,
போர்த்துக்கல்லில்
61 சதவிகிதம்,
ஸ்பெயினில்
60 சதவிகிதம் என்று
பங்கு கொண்டவர்கள் அதிகரிப்புப் பற்றிப் புகார் கூறியுள்ளனர்.
சற்றே
தீவிரத்தன்மை குறைந்து,
இன்னும் கூடுதலான
சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தியுள்ள நாடுகள்,
ஜேர்மனி,
பிரான்ஸ்,
இத்தாலி போன்றவையும்
வறுமையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தைக் கொண்டுள்ளன.
மிக அதிக ஊதியம்
உடைய MEP
க்கள் ஸ்ட்ராஸ்பூர்க்
மற்றும் பிரஸ்ஸல்ஸில் தங்கள் இரண்டாவது வீடுகளின் வாடகை பற்றிக் குறைகூறுகையில்,
தொழிலாள வர்க்க
வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் பெருகிய முறையில் தங்கள் தலைக்கு
மேல் ஒரு கூரையை கொள்ளுவதற்கான கட்டணங்களைச் செலுத்த முடியாமல் உள்ளனர் என்பதுதான்
உண்மை.
ஐரோப்பாவில்
வறுமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் சமத்துவமின்மையும் பெருகிக்
கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகமான
Eurostat நடத்திய
ஆய்வு ஒன்று வருமானம் மற்றும் சமூக சமத்துவமின்மையும் குழுவிலுள்ள
27 உறுப்பு
நாடுகளில் மந்த நிலையினால் மோசமாகிவிட்டதாகத் தெரிவிக்கிறது.
தலா நபர் வருமானம்
கண்டத்தின் செல்வமிக்க பகுதி,
மத்திய லண்டன்
ஆகியவற்றில்
49,100 யூரோக்கள்
என்று இருப்பது ஐரோப்பாவின் மிக வறிய பகுதியான வட மேற்கு பல்கேரியாவிலுள்ள
Severozapadan ல்
இருப்பதை விட எட்டு மடங்கு அதிகம் என்றும் அறிக்கை கூறுகிறது.
பெருகிய
வறுமை மற்றும் பெருகும் சமத்துவமின்மை,
வீடின்மை ஆகியவை
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் படர்ந்துள்ளது. அப்படி இருந்தும்,
ஐரோப்பியப்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கே கணிசமான ஊதிய உயர்வை அளித்துக் கொண்டுள்ளனர். |