WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
British police training facility opened in former mining
village
பிரிட்டிஷ் பொலிஸ் பயிற்சி நிலையம் முன்னாள் சுரங்ககக்
கிராமத்தில் திறக்கப்பட்டது
By Dave Hyland
21 December 2010
இந்த மாதம்
ஒரு புதிய
7 மில்லியன்
பவுண்டுகள் செலவிலான பொலிஸ் பயிற்சி மையம்,
முன்னர்
South Yorkshire
நிலக்கரிச் சுரங்கம் என்று
அழைக்கப்பட்டதின் நடுவில் திறந்து வைக்கப்பட்டது;
இந்த இடம்
வேண்டுமென்றே 25
ஆண்டுகளுக்கு முன்பு
மார்கரெட் தாட்செரின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் தகர்க்கப்பட்டது.
South Yorkshire Times
ல்
வந்த ஒரு
தகவல்படி, “கிட்டத்தட்ட
100 பயிற்சி
கொடுப்பவர்களும்
70 முக்கிய நிகழ்வு
உறுப்பினர்களும்
Bamsley, Doncaster
மற்றும்
Rotherham ஆகிய
இடங்களில் இருந்தும்
Cold CaseReview
குழுவுடன் இங்கு ஆகஸ்ட்டில் இருந்து வந்துள்ளனர்.”
“பொது
ஒழுங்கு பயிற்சித் தளத்தின் மற்றொரு பிரிவு
Manvers
ல் இருக்கையில்,
மிக நவீன வளாகம்
இப்பொழுது இணையற்ற நிகழ்வு மற்றும் பொது ஒழுங்குப் பயிற்சி நிலையங்களை
Dearne
பள்ளத்தாக்கில் கொண்டுள்ளது.”
தலைமைப்
பொலிஸ் அதிகாரி
Meredydd Hughes
கூறினார்:
“நம்முடைய பயிற்சிப்
பள்ளி Sheffield
ல் இருந்த
எக்கிள்ஸ்பீல்ட்
2007 வெள்ளங்களில்
சேதமுற்றபின்,
நம் மாவட்டத்தில்
சுரங்கச் சமூகங்களிடையே கட்டப்பட்ட இப்பயிற்சி நிலையம்,
நம் எதிர்த்து
நிற்கும் தன்மையையும் வருங்காலத்தில் சவால்களை நாம் எதிர்கொள்ளும் திறனையும்
நிரூபிக்கிறது.
பயிற்சி மற்றும்
நல்ல நடைமுறை இவை பெருகிய முறையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையின்
நடுவே இது வந்துள்ளது.”
Hughes
இன் சொற்கள் திமிர்த்தனமாக
இழிந்த தன்மை உடையவை.
குதிரைப்படை மீது,
கேடயங்களையும்
தடிகளையும் கொண்டிருந்த பொலிசார்தான்
1984-85
வேலைநிறுத்தத்தின்போது சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டனர்.
சுரங்கத்
தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்,
கிராமங்கள் இரவில்
சோதனைக்கு உட்படுத்தப்பட்டன,
குடும்பங்கள்
மிரட்டப்பட்டன.
வேலைநிறுத்தம் முடிந்தபின்,
முழுச் சமூகங்களும்
சிதைக்கப்பட்டன.
Manvers Main ல்
இருந்த சுரங்கத் தொழிலாளர்கள் யோர்க்ஷயரிலேயே பெரும் போராளித்தனம் கொண்டவர்கள்,
ஒரு பெரிய பொலிஸ்
நடவடிக்கை சுரங்கத் தொழிலின் தொழில்பிரிவு மறியல்காரர்களை தகர்த்து சுரங்க
வேலைக்குச் செல்ல வைத்தது.
இந்த
இடத்தில் ஒரு பொலிஸ் வளாகத்தைக் கட்டமைப்பது என்பது பழிவாங்கும் கூறுபாடு உறுதியாக
உள்ளது.
இந்த வளாகம்
செய்ய முடியும் என்று அவர் நம்பும்
“சவால்களை”
பற்றிய வகைகளை
Hughes
விரிவாகக் கூறவில்லை;
அதேபோல்
“பெருகிய முறையில்,
நல்ல நடைமுறையை
பகிர்ந்துகொள்வது”
தேவை என்று அவர் ஏன்
நினைக்கிறார் என்றும் விரிவாகக் கூறவில்லை.
ஆனால் பொலிசார்
இரண்டாம் உலகப் போர் முடிந்ததில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள ஒவ்வொரு சமூக
நலனையும் அழிப்பதற்கான அரசாங்க வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்புக்களை அடக்குவதற்கு
போலிசாரின் பணி இருக்கும்.
பெரும்
இடர்களை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்கள்மீது இத்தகைய நிலத்தை
எரித்துவிடும் சமூகக் கொள்கையினால்தான் அது பெரும் வெகுஜன அமைதியின்மையைத்
தூண்டிவிடும் என்பதை ஆளும் உயரடுக்கு நன்கு அறியும்.
சமூகப் பணிகளின்மீது
சுமத்தப்பட்டுள்ள முழு விளைவுகளின் விவரங்கள் உணரப்படுமுன்பே,
தேவைகளுக்கான
கட்டணங்கள்,
உணவுப் பொருட்கள்,
பெட்ரோல்
ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்வைக் கழிப்பதை
இயலாமல் செய்துள்ளது.
இக்காரணத்தை
ஒட்டித்தான் பொது ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான ஒரு பெரும் செலவிலான பொலிஸ் மறு
பயிற்சி மையம் தேவைப்படுகிறது.
அரசாங்கம் பொலிஸ்
எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது;
இது சில இடங்களில்
அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
வார்டன்கள் மற்றும்
ஊதியம் பெறாத தன்னார்வத் தொண்டர்களை சில வாடிக்கையான பணியைச் செய்ய ஊக்கம்
அளிக்கிறது;
இதையொட்டி
அதிகாரிகள் நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சிக்குக்கு குவிப்புக் காட்ட
முடியும்,
அதேபோல் முன்னேற்றம்
அடைந்துள்ள தொழில்நுட்ப வசதி உதவியுடன் இரகசியக் பொலிஸ் கண்காணிப்பு முறையிலும்
குவிப்புக் காட்ட முடியும்.
இந்த வளாகம்
ஒரு மூலோபாய இடத்தில் கட்டப்பட்டுள்ளது:
இதையொட்டி
தேவையானபோது அது அருகிலுள்ள சிறு நகரங்களின்மீது தாக்குதல் நடத்த முடியும்.
Manvers வளாகம்
தூண்டுதல்களை ஏற்படுத்த பொலிஸாருக்குப் பயிற்சி கொடுக்கும்,
ஆர்ப்பாட்டங்கள்,
வேலைநிறுத்தங்கள்
இவற்றை தடைசெய்ய பயிற்சி அளிக்கும்,
மற்றும்
தொழிலாளர்களின் அரசியல் அமைப்புக்களில் ஒற்றுவேலை நடவடிக்கைகளையும் செயல்படுத்தும்.
1970,
1980
களில் சிறப்பு ரோந்துக்
குழு போன்றவை அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
சுரங்கத்
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது,
இராணுவத்தினருக்கு
பொலிஸ் சீருடை அணிவிக்கப்பட்டு பொலிஸ் படைகள் நாடு முழுவதும் பயணிக்குமாறு
செய்ய்யப்பட்டது;
அதையொட்டி
மறியல்காரர்கள் பொலிசாரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போயிற்று.
ஆனால்
பொலிஸ் மற்றும் அரசாங்கச் சக்திகளின் வலிமையோ தொழில்நுட்பத் திறனோ சுரங்கத்
தொழிலாளர்களின் தோல்விக்குக் காரணம் அல்ல.
அவர்களுடைய தைரியம்,
வீரம் பொருந்திய
நிலைப்பாட்டையும் விட
முக்கியமாக இருந்தது
சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிற் கட்சி
ஆகியவற்றால் தனிமைப்படுத்தப்பட்டதுதான்.
அப்பொழுது
NUM எனப்பட்ட தேசிய
சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தில் தலைமை ஆர்தர் ஸ்கார்கிள் கீழ் இருந்ததால்தான்
இவ்வாறு நடந்தது.
கடந்த ஆண்டு
வேலைநிறுத்தத்தின்
25 ம் ஆண்டு நிறைவு
விழாவை நினைவுறுத்தும் வகையில் ஸ்கார்கிள்
“நாம்
சரண்டையலாம்—அல்லது
எதிர்த்துப்
போராடலாம்”
என்ற தலைப்பில்
கார்டியனில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
அதில் வேலைநிறுத்தத்
தோல்விக்கு நிலத்தடிப் பிரதிநிதிகள் சங்கம்
NACDO வில் இருந்து
NUM நிர்வாக,
வட்டாரத் தலைவர்கள்
உட்பட பிற உறுப்பினர்கள் அனைவரையும் குறைகூறியுள்ளார்.
1972
சுரங்கத் தொழிலாளர்கள்
வேலைநிறுத்தம் நடைபெற்றபோது பர்மிங்ஹாம்
Saltley coke
கிடங்கில் நடைபெற்ற வெகுஜன
மறியல்களுடன் ஒப்புமையை வெளியிட்டுள்ளார்—அந்த
மறியல் ஹீத்தின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தை ஒரு தற்காலிகப் பின்வாங்குதலை அடையச்
செய்தது;
அதேபோல்
1984ல்
Orgreave
லும் நடைபெற்றது.
“இதில்
அடிப்படை வேறுபாடு சால்ட்லியில் நான் கோரியதில் மறியில் அதிகரிக்கப்பட்டது;
ஆர்க்ரீவில் ஜூன்
18, 1984க்குப்
பின்னர் மறியல்கள் முற்றிலும்
NUM Yorkshire
மற்றும்
Derbyshire
பகுதிகளில் இருப்பவற்றாலும் பிற சுரங்கத் தொழிலாளர் தலைவர்களாலும் திரும்பப்
பெறப்பட்டன.”
என்று ஸ்கார்கிள்
எழுதினார்.
“Orgreave
வில் மறியல்
அதிகரித்திருந்தால்….ஆர்க்ரீவ்
மற்றும் ஸ்கன்தோர்ப் இரண்டும் உடனடியான மூடலை எதிர்கொண்டிருக்கும்,
அரசாங்கம்
வேலைநிறுத்தத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கும் என்பனதில்
எனக்குச் சந்தேகம் இல்லை.”
என்று அவர்
தொடர்ந்து எழுதியுள்ளார்.
ஸ்கார்கிளை
பொறுத்தவரை,
உலகிலோ,
பிரிட்டனிலோ எதுவும்
Saltley
மற்றும்
Orgreave
க்கும் இடையிலேயான
12 ஆண்டுகளில்
எதுவும் மாறவில்லை.
ஆனால் உண்மையில்
அனைத்துமே மாறிவிட்டன.
1973ம்
ஆண்டு எண்ணெய்துறை நெருக்கடி,
சர்வதேச நாணய
நிதியத்தில் குறுக்கீடு லேபர் அரசாங்கத்தின்போது தொடர்ந்து வந்தது,
ஆகியவை பிரிட்டிஷ்
முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தன்மை பொருந்திய சரிவை முழுதாக அம்பலப்படுத்தின.
IMF பிரிட்டன் தன்
சக்திக்கு மீறிய வகையில் வாழ்கிறது என்று வலியுறுத்தி,
பொருளாதாரத்தில்
குறைப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது.
இச்செயற்பட்டியல்
தொழிற் கட்சியின் கீழ் ஜேம்ஸ் கலாகனால் செயல்படுத்தப்பட்டது,
லிபரல்-லேபர்
கூட்டணியால் 1977ல்
செயல்படுத்தப்பட்டது,
அதன் பின் தாட்சரின்
கீழ் இருந்து கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது.
இக்காலக்கட்டத்தில்,
கணினித் தொழில்நுட்ப
வளர்ச்சியின் உதவியுடன்,
உலகப் பொருளாதாரம்
உண்மையிலேயே உலகம் முழுவதையும் இணைத்து,
நிறுவனங்கள்,
உற்பத்தி முறை
ஆகியவை ஒரு தேசிய எல்லைக்குள் நடத்தப்படாமல் போயின.
NUM ன் கொள்கை
“நிலக்கரிக்குத்
திட்டமிடுக”
என்று உள்ளூர்ச்
சந்தையை இறக்குமதி மீதான தடைகள்,
உற்பத்திக்
கட்டுப்பாடுகள் ஆகிய நடவடிக்கைகள் மூலம் காத்தல் என்று இருந்தது.
இத்திட்டம்
NUM
அதிகாரத்துவத்தின் நலன்களுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது;
அது அவர்களுக்கு
முக்கூட்டுப் பேச்சுக்களில் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் அதிகாரத்தில்
ஓரிடத்தை பெற்றுத்தர உதவியது.
ஆனால் அத்தகைய தேசிய
பெருநிறுவனத்துடனான திட்டங்கள் முற்றிலும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பொதுநிலை
வளர்ச்சிகளால் குறைமதிப்பிற்கு உட்பட்டன.
நிலக்கரிக்கான திட்டம் என்று தொழிலாளர்களை தேசிய வகையில் பிரித்த திட்டத்திற்குப்
பதிலாக,
சுரங்கத்
தொழிலாளிகளுக்கு உலகெங்கிலும் இருந்த தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றுபடுத்தும்
முன்னோக்கு தேவையாக இருந்தது.
அத்தகைய முன்னோக்கு
ஸ்கார்கிளின் அரசியில் முன்னோக்கை நிராகரித்து,
தொழிற்சங்கம்
மற்றும் தொழிற் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவது என்று
இருந்திருக்கும்.
ஸ்கார்கிளின் கட்டுரை தொடர்கிறது:
“1984-85
வேலைநிறுத்தத்தின் முழு விவரம் இன்னும் எழுதப்படவில்லை.
ஆனால் அப்பொழுது
தொழிற் கட்சியின் தலைவராக இருந்த
Neil Kinnock
இன் சதிகள்,
TUC யின் காட்டிக்
கொடுப்புக்களைப்
பற்றி,
மற்றும்
தொழிற்சங்கத் தலைவர்கள் எரிக் ஹாம்மண்ட்
(EETPU எனப்பட்ட
மின்விசை ஊழியர்கள் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்],
[பொறியியல் மற்றும்
நிர்வாகிகள் சங்கத்தின்]
ஜோன் லயன்ஸ்
போன்றோரின் காட்டிக் கொடுப்புக்கள் ஆகியவற்றைப் பற்றி அதிகமாக அறிந்தோம்.
இவர்கள் தங்கள்
உறுப்பினர்களை,
மறியலை மீறுமாறு
உத்தரவிட்டனர்,
சுரங்கத்
தொழிலாளர்களைத் தோற்கடிக்க இயன்றதைச் செய்தனர்.”
இத்தகைய
நடவடிக்கைகள்
“சுரக்கத்
தொழிலாளர்களுக்குத் தேவையான ஆதரவு கொடுக்கப்படுவதில் ஒரு தோல்வி என்ற பொருளைத்
தந்தது;
அது டோரிக்கள் சுரங்கங்களை
மூடும் திட்டத்தை நிறுத்தி நாட்டின் அரசியல் இயக்கத்தையே மாற்றியிருக்கும்.”
என்று ஸ்கார்கிள்
எழுதினார்.
சுரங்கத்
தொழிலாளர்கள் மறியல்களில் தாக்குதலுக்கு உட்பட்டு அரசாங்கத்தால் கைது
செய்யப்பட்டபோது ஸ்கார்கிள் ஏன்
TUC தலைவர்களை
வெளிப்படையாக சவாலுக்குஉட்படுத்தி முழுத் தொழிற்சங்க இயக்கமும் சுரங்கத்
தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை
என்ற வினாவிற்கு பதில் கூறாமல் மழுப்புகிறது.
டோரி அரசாங்கத்தை
வீழ்த்தி,
அதற்குப் பதிலாக சோசலிசக்
கொள்கைகளில் உறுதியாக இருக்கும் ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்காக,
அவர் ஏன் தொழிற்
கட்சியின் தலைமையில் இருந்து கின்னோக்கை அகற்றுவதற்கு ஒரு போராட்டத்தை நடத்த தொழிற்
கட்சி “இடதுகள்”
சுரங்கத்
தொழிலாளர்களுக்கு ஆதரவு தருவதாகக் கூறிய டோனி பென்னை கோரவில்லை என்று கூறவில்லை?
இது
அவருக்கு,
தாட்செரின்
இடைவிடாத் தாக்குதல்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மில்லியன் கணக்கான
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுத் தந்திருக்கும்.
தொழிலாள
வர்க்கத்தின் வெகுஜன இயக்கத் தாக்குதல் என்பது முழு அரசியல் சூழ்நிலையையும் மாற்றி,
வர்க்க சக்திகளின்
உறவுகளையும் மாற்றியிருக்கும்.
மாறாக
TUC, மற்றும் தொழிற்
கட்சி தலைமைகள் சுரங்கத் தொழிலாளர்களை தனிமைப்படுத்தித் தோல்வியுறச் செய்தனர்;
அதே நேரத்தில்
அவர்கள் வலதிற்கு தாங்கள் பாய்ந்ததைத் தொடர்ந்தனர்.
“NUM
1984-85ல்
நடத்திய வேலைநிறுத்தத்தின் மரபியம்,
தொழிலாளர்களுக்கு
ஒரு ஊக்கம் தரும் செயல் மட்டும் அல்ல,
இன்றைய தொழிற்சங்கத்
தலைவர்களுக்கு அவர்களுடைய உறுப்பினர்கள்மீது கொள்ள வேண்டிய பொறுப்பு பற்றிய
எச்சரிக்கையும் ஆகும்,
அரசாங்கம் மற்றும்
முதலாளிகளை அனைத்து வகை அநீதிகள்,
சமத்துவமற்ற தன்மை,
சுரண்டல்
ஆகியவற்றிற்கு எதிராகச் சவால் விடும் பொறுப்பு பற்றியும் ஒரு எச்சரிக்கை ஆகும்.”
இது உண்மை
அல்ல.
இதன் மரபியம்
பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் தங்களை வேலையை இழந்தனர்,
இன்று ஆழமான
8
சுரங்கங்கள் மட்டுமே
பிரிட்டனில் உள்ளன என்பதாகும்.
NUM 300,000 மொத்த
உறுப்பினர்கள் என்பதில் இருந்து
1,500க்கும் குறைவான
தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
ஓர் ஊக்கம்
என்பதற்குப் பதிலாக இது தொழிற்சங்கக் கருவியின் தேசிய சீர்திருத்த வாத முன்னோக்கின்
திவால் தன்மைக்கு சோகம் ததும்பிய சான்றாகத்தான் உள்ளது.
இப்பொழுது
72 வயதாகியுள்ள
ஸ்கார்கிள் 1996ல்
புதிய தொழிற் கட்சியில் இருந்து பிரிந்து
Socialist Labour Party
ஐ ஆரம்பித்தார்,
இது மீண்டும் பழைய
தேசியவாத சீர்திருத்தக் கருத்துக்கள் என்று தொழிற் கட்சியின் கருத்துக்களுக்கு
திரும்புவதற்குத்தான்.
ஆனால் ஸ்கார்கிளின்
முன்னோக்கிற்கு சுரங்கத் தொழிலாளர்கள் சாவுமணி அடித்தனர்;
அது
தோல்விக்குத்தான் வழிவகுக்கும்,
இன்னும் கூடுதலான
இழிவு,
சமுக சரிவிற்குத்தான்
வழிவகுக்கும்.
தொழிலாள
வர்க்கத்தின் முன்னேற்றப் பாதைக்கு,
அது தன்னுடைய
போராட்டங்களை விஞ்ஞானபூர்வ மார்க்சிச வழிவகையிலும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கும்
கொண்ட புரட்சிகர வகையில் இயக்க வேண்டும். |