World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US drones slaughter 54 in Pakistan

அமெரிக்க ட்ரோன்கள் பாக்கிஸ்தானில் 54 பேரை படுகொலை செய்தன

By Bill Van Auken
18 December 2010
Back to screen version

வெள்ளியன்று நடந்த பல தொடர் CIA ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானிய எல்லைக்கு அருகேயுள்ள பாக்கிஸ்தானின் கைபர் பழங்குடிப் பகுதிகளில் குறைந்தபட்சம்  54 பேரையாவது கொன்றுவிட்டன.

ஆப்கானியப் போரில் இன்னும் கூடுதலாக 30,000 அமெரிக்கத் துருப்புக்களை ஜனாதிபதி பாரக் ஒபாமா ஈடுபத்திய பின்னர் அமெரிக்க மூலோபாயம் பற்றிய முறையான ஓராண்டிற்கு பிந்தைய பரிசீலனைக்கு மறுநாள் இத்தாக்குதல்கள் நடந்தன. இந்த முடிவுகளை அளிக்கையில் ஒபாமா வியாழனன்று பாக்கிஸ்தானிய அரசாங்கம் எல்லைப் பகுதிகளில் தாலிபன் எழுச்சியாளர்களின்பாதுகாப்பான புகலிடங்களைதாக்கியதில்முன்னேற்றம் போதிய விரைவில் வந்துவிடவில்லைஎன்று எச்சரித்தார்.

வெள்ளியன்று நடைபெற்ற ட்ரோன் தாக்குதல்கள் இந்த ஆண்டு இதுவரை நடந்த பெரும் குருதி சிந்திய நிகழ்வுகளில், ஒரு நாள் இறப்புக்களில் அதிகமானவற்றில் ஒன்றாகும். இத்தாக்குதல்களில் முதலாவது சான்டனா பகுதியில் திராப் பள்ளத்தாக்கில் பயணித்திருந்த இரு வாகனங்கள் மீது நடத்தப்பட்டன. அதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமுற்றனர்.

இரண்டாவது தாக்குதல் ஸ்பீன் டரங் கிராமத்தில் ஒரு வளாகத்தைத் தாக்கியது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோளிட்ட பெயரிடப்படாத பாக்கிஸ்தானிய அதிகாரிகள் கருத்துப்படி 32 பேரைக் கொன்ற இத்தாக்குதலின் இலக்கு பாக்கிஸ்தானின் தாலிபன் அமைப்பு என்று அழைக்கப்படும் Lashkar-e-Islam நடத்திய ஒரு கூட்டத்தின் மேலாகும். மூன்றாவது தாக்குதல் 15 பேர்களை நரல் பாபா கிராமத்தில் கொன்றது.

இத்தகைய அனைத்து CIA தாக்குதல்களில் நடப்பதைப் போலவே, பாதிக்கப்பட்டவர்கள்போராளிகள்என்று விவரிக்கப்பட்டனர். ஆனால் இது சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. பல நேரமும் இத்தகைய அறிக்கைகள் தவறு என நிரூபணம் ஆகியுள்ளன. ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமற்ற கிராமவாசிகள், இவற்றுள் பெண்களும் குழந்தைகளும் அடங்கியுள்ளனர் என்பதற்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளன.

வெள்ளியன்று நடைபெற்ற தொடர் தாக்குதல்களும் அவை நடத்தப்பட்ட இடத்தையொட்டி முக்கியமானவை ஆகும். வடமேற்குப் பாக்கிஸ்தானில் கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழுள்ள பழங்குடிப் பகுதிகள் (FATA) தனித்தனியே 8 உள்ளன. அவற்றுள் ஒன்றான கைபர் நிர்வாகம் முன்பு ட்ரோன் நடவடிக்கைக்கு ஒரு முக்கிய இலக்காக இருந்ததில்லை. இதற்கு முன்னதாக ஒரே ஒருமுறைதான் அங்கு தாக்குதல் நடந்ததாகத் தகவல் வந்துள்ளது. அதிலும் கூட பாக்கிஸ்தானிய அதிகாரிகள் தாக்குதல் நடந்ததா என்ற வினாவைத்தான் எழுப்பினர்.

கைபர் நிர்வாகத்தில் பாக்கிஸ்தானை ஆப்கானிஸ்தானிருந்து பிரிக்கும் மலைப் பகுதிகளிலுள்ள கைபர் கணவாய் உள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளுக்கு இதுதான் முக்கிய தளவாடங்களை அனுப்புவதில் முக்கிய பாதைகளில் ஒன்றாகும். எரிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லும் பாரவாகன வரிசைகள் இப்பகுதியில் தாலிபன் தொடர்புடைய அமைப்புக்களால் பலமுறை தாக்கப்பட்டுள்ளன.

இதுவரை CIA ஏவுகணைத் திட்டம் இன்னும் தெற்கிலுள்ள வடக்கு வஜீரிஸ்தானில்தான் குவிப்பைக் காட்டியுள்ளது.

ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க இராணுவமும் பாக்கிஸ்தானிய அரசாங்க இராணுவம் ஆகியவற்றின் மீது வடக்கு வஜீரிஸ்தானில் ஒரு தீவிரத் தாக்குதலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன.அமெரிக்க ஆப்கானிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆயுதமேந்திய குழுக்களின் தளமாக இது காணப்படுகிறது.

அமெரிக்கப் படைகளில் கூட்டுத் தலைவரான அட்மைரல் மைக் முல்லென் இந்த வாரம் இன்னும் அதிக இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்காக இஸ்லாமாபாத்திற்குத் திடீர் வருகை செய்திருந்தார்.

நாங்கள் ஒரே இரவில் இதை முடிக்க விரும்புகிறோம்என்று அட்மைரல் முல்லென் இஸ்லாமாபாத் வருகைக்குப் பின் ஒரு பேட்டியில் செய்தியாளர்களிடம் கூறினார். “என்னிடமும் மற்றவர்களிடமும் ஒரு மூலோபாய வழியிலான பொறுமையின்மை உள்ளது. நீடித்தகால உறவிற்கு ஒரு மூலோபாயப் பொறுமை தேவை. ஆனால் இப்பொழுது அங்கு அழுத்தம்தான் நிலவுகின்றது. நாங்கள் இருவருமே அதை அறிந்து கொண்டுள்ளோம் என்றுதான் நினைக்கிறேன்.”

நியூ யோர் டைம்ஸ்  வெள்ளியன்று கொள்கைப் பரிசீலனையில் ஒபாமா நிர்வாகம் கண்டுள்ள முடிவுரைகளில் ஒன்று அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு எதிரான அதன் தாக்குதலைத் தொடங்கும் என்பதுதான்.

பாக்கிஸ்தானிய அதிகாரிகள் நீண்டகாலமாகக் கோரப்படும் வடக்கு வஜீரிஸ்தான் மீதான செயல்பாட்டை அடுத்த ஆண்டு தொடக்குவதாக உத்தரவாதங்களை அளித்துள்ளபோதிலும், “உண்மையான மூலோபாயம் அமெரிக்காதான் பெரும்பாலான செயல்களைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறதுகுறைந்தபட்சம் பாக்கிஸ்தானியர்கள் அதில் அதிக ஈடுபாடு கொள்ளும் வரைஎன்று டைம்ஸ் கூறியுள்ளது. “இதன் பொருள் பிரிடேட்டர் மற்றும் ரீப்பர் ட்ரோன்ஸ் ஆகியவற்றை பாக்கிஸ்தான் பழங்குடிப் பகுதியில் கூடுதல் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்த உதவுவதும் எல்லை முழுவதும் சிறப்புப் படைகளின் செயற்பாட்டை நடத்துவதுமாக இருக்கலாம்.”

கடந்த மாதம் விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட இரகசியத் தகவல் கேபிள்கள் அமெரிக்கச் சிறப்புப் படைகளின் சிறு பிரிவுகள் ஏற்கனவே பாக்கிஸ்தானில் பாக்கிஸ்தானிய இராணுவத்துடன் செயல்பட்டு வருகின்றன என்பதைக் காட்டியுள்ளன.

உத்தியோகபூர்வமாக இஸ்லாமாபாத்திலுள்ள அரசாங்கம் அமெரிக்கப் படைகளால் நடத்தப்படும் எந்த தரைத் தாக்குதலும் ஏற்கத்தக்கது அல்ல, நாட்டின் இறைமையை மீறுவது ஆகும் என்று கூறியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தான் பகுதிக்குள் அமெரிக்க ஹெலிகாப்டர் விமானத்தாக்குதல்கள் நடத்தி, பாக்கிஸ்தானிய எல்லைத் துருப்புக்கள் மூவரைக் கொன்றபின், அரசாங்கம் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தானத்திற்குச் செல்லும் அமெரிக்கப் பொருட்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் முக்கிய எல்லைப் பாதையை மூடிவிட்டது. அப்பொழுது நேட்டோ பாரவண்டிகள் பல தொடர்ச்சியான தாக்குதல்களில் சிக்கி அழிக்கப்பட்டுவிட்டன.

கொள்கைப் பரிசீலனை அறிக்கை அளிக்கப்பட்ட வியாழனன்று நடந்த பென்டகன் செய்தியாளர் கூட்டத்தில், ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ஆப்கானிய ஆயுதமேந்திய எழுச்சிக் குழுக்களின்புகலிடங்களைத் தாக்குவதற்கு எல்லை கடந்து பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க இராணுவம் துருப்புக்களை அனுப்பும் வாய்ப்பு குறித்துப் பேசினார். இராணுவப் படைகளின் துணைக் கூட்டுத் தலைவரான தளபதி ஜேம்ஸ் கார்ட்ரைட் அத்தகையஒருதலைப்பட்ச நடவடிக்கை” “உறுதியாக ஆனால், கடைசி நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில் அத்தகைய நிலைப்பாட்டில் நாம் உண்மையிலேயே பிடிக்கவில்லை என ஒதுக்க வேண்டிய உறவுத்தன்மைகளின் பல கூறுபாடுகளின் பாதிப்பைக் கொண்டுள்ளதுஎன்றார்.

CIA ட்ரோன் போர் விரிவாக்கமே பாக்கிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெருகிய வெறுப்புணர்வினால்தான் தோன்றியது. அதேபோல் நாட்டிற்குள் அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதை அடுத்தும் தோன்றியது.

CIA இன் நிலையத் தலைவர், ஜோனாதன் பாங்கஸ், வியாழனன்று அன்று நாட்டை விட்டு நீங்கும் நிலை ஏற்பட்டது. ட்ரோன் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கில் அவருடைய மறைப்பு வெளிப்பட்டுவிட்டதுதான் காரணம்.

இந்த வழக்கு திங்களன்று முறையாக ஒரு செய்தியாளரும் வடக்கு வஜீரிஸ்தானில் ஒரு செய்தியாளராக இருக்கும் கரீம் கானால் பதிவு செய்யப்பட்டது. அவருடைய மகன் ஜாஹினுல்லாக கான், அவருடைய சகோதரர் ஆசிப் இக்பால் ஆகியோர் ஒரு ட்ரோன் தாக்குதலில் கடந்த டிசம்பரில் கொல்லப்பட்டனர். இக்குற்றச்சாட்டுக்கள் பாங்க்ஸ், அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் ரோபர்ட் கேட்ஸ், CIA இயக்குனர் லியோன் பனேட்டா ஆகியோர் கொலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றிற்குப் பொறுப்பு என்று கூறியுள்ளன.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகத்திலிருந்து ஜோனாதன் பாங்க்ஸ் செயல்படுவது, தூதரக நெறிமுறைகள் விதிகள் ஆகியவற்றை மீறுவதாகும். ஏனெனில் அயல்நாட்டுப் பணிக்குழு இறைமை பெற்ற ஒரு நாட்டிற்குள் குற்ற நடவடிக்கை எடுக்கப் பயன்படுத்தப்பட முடியாதுஎன்று சட்டபூர்வ குற்றச்சாட்டுக்கள் கூறுகின்றன. “செய்தி ஏடுகள் தகவல்களின்படி, அவர் ஒரு வணிக விசாவில் உள்ளார். எனவே எத்தகைய தூதரக அந்தஸ்த்தும் அவருக்குக் கிடையாது.”

CIA அதிகாரி நாட்டை விட்டை வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும், கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்படவேண்டும் என்றும் கான் கூறியுள்ளார்.

நிலையத் தலைமை அதிகாரியை பெயரிடாத அசோசியேட்டட் பிரஸ் தன்னுடைய வாசகர்களுக்குஅவருடைய பெயர் இரகசியமாக, மறைப்பிற்குள் உள்ளது என்று விளக்கிபிரிடேட்டர் ட்ரோன் திட்டத்தைச் செயல்படுத்தும்பயங்கராவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போரில் ஒரு இரகசியத் தளபதிஎன்றும் விவரித்துள்ளது.

CIA  ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குறைந்தது 15 பேராவது பாக்கிஸ்தானிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே கடந்த வாரம் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி தாக்குதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும் என்றும் CIA, அமெரிக்க இராணுவத்துடன் பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஒத்துழைத்தலுக்கும் முடிவு வேண்டும் என்று கோரினர் என்று கரீம் கான் தெரிவித்தார்.

டிசம்பர் 10 அன்று பல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களும் சேர்ந்துகொண்டுஅமெரிக்காவே, எங்களை தனியே விட்டு நீங்கு என்று எழுதப்பட்ட அட்டைகளை வைத்திருந்ததுடன் அமெரிக்காவேஉண்மையான பயங்கரவாத நாடு என்றும் முத்திரையிட்டனர்.

ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் 15 வயதுச் சிறுவனாகிய சததுல்லா, இவர் இரு கால்களையும் ஒரு கையையும் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றில் இழந்துவிட்டார். “என்னுடைய குடும்பத்தினருடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் தாக்கப்பட்டேன்என்று அச்சிறுவன் ஒரு மக்கிளாட்சி நிருபரிடம் கூறினான். அத்தாக்குதல்களில் அவனுடைய மூன்று உறவினர்களும் இறந்து போயினர். அதில் சக்கர வண்டியிலேயே இருக்கும் ஒரு சிற்றப்பாவும் அடங்குவார். தாக்குதல் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் இறந்தவர்களை தாலிபன் தளபதிகள் என்று பட்டியலிட்டது.

ஆர்ப்பாட்டத்தில் 13 வயதான சதாம் ஹுசைன் என்ற சிறுவனும் இருந்தான். இவன் தன்னுடனைய 10 மாதமே ஆகியிருந்த சகோதரியின் பெரிய புகைப்படத்தை ஏந்தியிருந்தான். அக்குழந்தை கடந்த அக்டோபர் மாதம் வடக்கு வஜீரிஸ்தானில் தத்தா கேல் என்ற இடத்தில் அவர்களுடைய வீட்டின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

டிரோன்கள் இரவும் பகலும் ரோந்து வருகின்றன. குறைந்த உயரத்தில் அவை பறக்கும்போது ஒலியைக் கேட்க முடியும். சில சமயம் நாங்கள் ஆறு ட்ரோன்களை ஒரே நேரத்தில் பார்க்கிறோம். அவை கீழிறங்கும்போது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஒடுகின்றனர், இரவில்கூடஎன்று அவன் கூறினான்.

ஒரு 18 வயது மாணவனாகிய மஹம்மத் பஹிம் வடக்கு வஜீரிஸ்தானிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற வந்திருந்தான். ஜனவரி 2009ல் ஒரு தாக்குதலின் போது அவன் ஆபத்தான காயத்திற்கு உட்பட்டு, இடது கண்ணை இழந்துவிட்டான்.

மூன்று அல்லது நான்கு ட்ரோன்கள் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தன, நாங்கள் அவை எங்களைத் தாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் நாங்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. எங்களை அவை ஏன் தாக்கவேண்டும்?” என்று பாக்கிஸ்தானிய நாளேடு Nation  இடம் அவன் கூறினார். “ஆனால் திடீரென நாங்கள் தேனீர் குடித்துக் கொண்டு பேசியிருந்த நிலையில், டிரோன்கள் எங்களைத் தாக்கின. அவருடைய நெருங்கிய உறவினர்கள் உட்பட ஏழு பேர் இத்தாக்குதலில் இறந்து போயினர்.”

இந்த ஆண்டு பாக்கிஸ்தானிய அரசாங்க அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேஷன்  செய்தித்தாள் தயாரித்திருந்த ஒரு அறிக்கை 2009ல் CIA நடத்திய 44 பிரிடேட்டர் ட்ரோன் தாக்குதல்கள் 708 பேரைக் கொன்றதாகக் கண்டறிந்துள்ளது. வாஷிங்டனும் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வாடிக்கையாகப் பாதிக்கப்பட்டவர்களைபோராளிகள்என்று குறித்தாலும், அறிக்கை ஐந்து தாக்குதல்கள்தான் தாலிபன் அல்லது அல்-கெய்தாத் தலைவர்களைக் கொன்றது எனவும் 700  நிரபராதிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறுகிறது.

அமெரிக்க ட்ரோன்களால் கொல்லப்பட்ட ஒவ்வொரு அல் கெய்டா, தாலிபன் பயங்கரவாதிக்கும் 140 நிரபராதியான பாக்கிஸ்தானியர்கள் இறக்க நேர்ந்துள்ளது. இறப்பைக் கொடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் இறந்தவர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் சாதாரண குடிமக்கள் என்றுதான் அதிகாரிகள் கூறுகின்றனர்.”

இந்த ஆண்டு ஒபாமா நிர்வாகம் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்களை இரு மடங்காக அதிகரித்துள்ளது. குறைந்தது 110 தாக்குதல்களாவது இதுவரை நடந்துள்ளன. இத்தகைய கொலைகார நடவடிக்கை பெருகியுள்ள அச்சுறுத்தலுக்கு இன்னும் கூடுதலான குடிமக்களின் மரணம், மேலும் கூடுதலாக பாக்கிஸ்தானின் அரசியல் சீர்குலைதல் என்று பொருளாகும்.