சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Police attack protesters during Greek general strike

கிரேக்கப் பொது வேலைநிறுத்தத்தின் போது ஆர்ப்பாட்டக்கார்களை பொலிஸ் தாக்குகிறது

By Ann Talbot
16 December 2010

Use this version to print | Send feedback

கிரேக்கத்தின் முக்கிய நகரங்களை நிலைகுலைய நிறுத்திவிட்ட ஒரு பொது வேலை நிறுத்தத்தின்போது கிட்டத்தட்ட 100,000 மக்கள் நிறைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களுக்கு வந்தபோது பொலிசார் அவர்களை மிருகத்தனமாகத் தாக்கியபோது அவர்களும் பதிலடி கொடுத்தனர்.

வங்கி ஊழியர்கள், நீதிமன்ற அதிகாரிகள், ஆசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள், பல் டாக்டர்கள், மருந்தகப் பிரிவினர், எரிசக்தி தொழிலாளர்கள், தொலைத்தொடர்புத் தொழிலாளர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், பிற விமான நிலைய ஊழியர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள், அரசாங்க, தனியார் நிறுவனச் செய்தியாளர்கள், போக்குவரத்துப்படகுப் பிரிவினர் மற்றும் டாக்ஸி டிரைவர்கள் என்று அனைவரும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்தனர். தங்கள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கிய பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் புதன்கிழமை காலை போக்குவரத்து உதவி வழங்கி மற்றைய வேலைநிறுத்தக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற உதவினர்.

செல்வந்தர்களுக்காக தியாகம் செய்யக்கூடாதுஎன்று எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பரித்தனர். அவர்கள் பிடித்திருந்த பதாகைகளில்நெருக்கடிக்கான விலையை தன்னலச் செல்வந்தர்குழு கொடுக்க வேண்டும்போன்றவை எழுதப்பட்டிருந்தன.

ஏதென்ஸில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகே சின்டகமா சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தபோது அவர்கள் பொலிசாரை எதிர்கொண்டனர். கைத்தடிகள், கண்ணீர்ப்புகைக் குண்டு ஆகியவற்றால் பொலிசார் அவர்களை தாக்கினர். மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன், செய்தியாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் அடித்துக் கீழே தள்ளப்பட்டனர். டெல்ட்டா பிரிவில் இருந்து பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுக்கள் முழுவேகத்தில் கூட்டத்தில் மோதி ஆர்ப்பாட்டக்காரர்களை சிறுசிறு எளிதில் சமாளிக்கக்கூடிய பிரிவுகளாப் பிரிக்கும் வகையில் வாகனங்களை உட்ச்செலுத்தினர்.. GSEE எனப்படும் கிரேக்க தொழிலாளர் கூட்டமைப்புத் தலைமையகத்தில் கூட்டம் புகலிடம் நாட முற்பட்டபோது அதைப் பொலிஸ் தாக்கியது; அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டை வீசி, கைத்தடியால் அடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுபடியும் குழுக்களாகத் திரண்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகே திரும்பினர்.

இதை ஏற்க முடியாது. இது இராணுவ ஆட்சியைவிட மோசமாக உள்ளது. இந்த ஜனநாயகத்திற்கா நாம் போராடினோம்? இது பாசிசம்என்று பொலிஸ் தாக்குதலில் புகைக் குண்டிற்குட்பட்ட 52 வயது ஆலைத் தொழிலாளரி ஜியோர்ஜோஸ் பாப்பஜியோர்ஜியூ கூறினார்.

இளம் எதிர்ப்பாளர்கள் சீற்றத்துடன் எதிர்கொண்டனர். சிலர் பெற்றோல் குண்டுகளையும், பட்டாசு வெடிகளையும் பெரும் ஆயுதமேந்திய பொலிசாரிடையே எறிந்தனர். பாராளுமன்றத்திற்கு செல்லும் வழி தடுக்கப்பட்டபோது, சிலர் தங்கள் கோபத்தை எதிரே இருந்த நிதியக் கட்டிடத்தின்மீது காட்டினர். மூன்று ஆடம்பரக்கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கலகத் தடுப்புப் பொலிஸ் பஸ்  எரிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் முன்னாள் போக்குவரத்து மந்திரி கொஸ்ரிஸ் ஹட்ஷிடாக்கிஸ், “திருடர்களே ! வெட்கம்! வெட்கம்!” என்று கூவிக் கொண்டு வந்த ஆர்ப்பாட்டக் குழுவினரால் தாக்குதலுக்கு உட்பட்டார். அவர் பொலிஸ் அதிகாரிகளால் கூட்டத்தில் இருந்து சிறு முகக் காயங்களுடனும் உடைந்த மூக்குடனும் மீட்கப்பட்டார்.

பொலிஸ்துறையின் செய்தித் தொடர்பனாளர் தானசிஸ் கொக்காலாக்கிஸ் ஏதென்ஸிலும் வடக்கு நகரமான தெஸ்லோனிகியிலும் பலர் கைது செய்யப்பட்டனர் என்றார். இரவு சூழ்கையில் பொலிஸ் ஹெலிகாப்டர்கள் இன்னமும் தலைநகருக்கு உயரே வட்டமிட்ட வண்டம் இருந்துன, பாராளுமன்றத்தை கலகத்தடுப்புப் பிரிவு பொலிஸ் தொடர்ந்து பாதுகாத்து வந்தது.

மோதல்கள் இன்னும் நடக்கின்றன; அவை இன்னும் முடிந்துவிடவில்லைஎன்று கொக்காலாககிஸ் எச்சரித்தார்.

செவ்வாயன்று இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வந்தது. ஆளும் கிரேக்க சமூக ஜனநாகக் கட்சியான PASOK ஒரு புதிய சட்டத்தை 10 மணி நேர விவாதத்தைத் தொடர்ந்தே இயற்றியது. அரசாங்கம் பெரும்பான்மை அல்லது சிறுபான்மைப் பங்குகள் கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஊதிய வெட்டுக்களைக் கொண்டுவர இச்சட்டம் அனுமதிக்கிறதுஇது குறிப்பாகப் பொதுப்பணித்துறை நிறுவனங்களைப் பாதிக்கும். மாதத்திற்கு 1,800 யூரோக்களுக்கு மேல் வருமானம் கொண்ட தொழிலாளர்கள் 10 சதவிகித ஊதியக் குறைப்பைப் பெறுவர். கிரேக்க விவசாய வங்கி இன்னும் பல அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கிகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் இதேபோன்ற செயற்பாட்டைத்தான் எதிர்கொள்வர். பிரயிஸ் மற்றும் தெஸ்லோனிகியில் உள்ள துறைமுகங்கள், நீர்நிலை நிறுவனங்கள், எரிசக்தி நிறுவனங்கள் அனைத்தும் பாதிப்படையும்.

ஏதென்ஸ் நகருக்கு வெளியே உள்ள பஸ் கிட்டங்கியில் நிலைய அதிகாரியாக உள்ள ஸ்டாமிஸ் கிளாப்ஸிஸ் தனக்கும் தன் சக ஊழியர்களுக்கும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கினார். “எங்கள் ஊதியங்களை பொறுத்த வரை, குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைக்குத் தள்ளப்படுவோம். அவர்கள் எங்களை மத்தியகாலத்திற்கு இட்டுச் செல்கின்றனர்.”

இச்சட்டம் பகுதி அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் தொழிலாளர்களை மற்ற நிறுவனங்களுக்கு மாற்ற அனுமதிக்கிறது; அவர்கள் திறமைகளும், அனுபவங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. நிர்வாகம் தேசிய ஊதிய உடன்பாடுகளைப் புறக்கணித்து தாங்கள் நிர்ணயிக்கும் ஊதியங்களைக் கொடுக்க முடியும்.

GSEE செய்தித் தொடர்பாளர் ஒருவர் புதிய சட்டம், “இழிந்தது, ஏற்கத்தக்கதல்ல நெருக்கடியின் கனத்தை மீண்டும் தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது, அடிப்படை உரிமைகளை இல்லாதொழிக்கின்றதுஎன்றார்.

இந்த கூக்குரல் தொழிலாளர்களின் சீற்றத்தைத் தணிக்கும் ஒரு போலிச்செயல் ஆகும்; ஆனால் இது தேவைப்படுவதற்கான காரணம் சட்டமன்றம் மிகத்திறமையுடன் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொழிற்சங்கங்களின்  கூட்டு பேரம்பேசும் உரிமையை அகற்றிவிட்டது.

பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ பாராளுமன்றத்தில் உள்ள எதிர்த்தரப்பு கட்சிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினர். அவை அனைத்தும் சமீபத்திய சட்டத்தை ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எதிர்த்தன. GSEE, ADEDY என்னும் பொதுத்துறை கூட்டமைப்புக்கள் இரண்டும் சட்டத்திற்கான தங்கள் எதிர்ப்பிற்கு பாராளுமன்ற ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அவர்களுடைய, மற்றும் கூடுதலான தொலைநோக்குடைய அரசியல்வாதிகளின் அடிப்படைக் கவலை புதிய சட்டம் தொழிற்சங்கங்கள் மக்கள் சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்கிவிடும் என்பதுதான்.

SYRIZA எனப்படும் தீவிர இடதுகளின் கூட்டணித் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் பாப்பாண்ட்ருவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டார். அவருடைய கட்சி தொழிற்சங்கங்கள் ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் சட்டரீதியான ஆதாரம் என்று கருதுகிறது, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் நடத்தும் தொழிற்சங்க தலைமையுடன் எந்த அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை.

ஆயினும்கூட PASOK அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் பதவிக்கு வந்த்தில் இருந்து இது 7வது பொது வேலைநிறுத்தம் ஆகும். பாரிய எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளை பற்றிய சட்டத்தை இயற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் அரசாங்கத்தில் ஒரு விரைவான ஆட்சிமாற்றச் சவாலைத் தடுக்க ஒன்றாக உழைத்துள்ளன. அவை சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றிற்கு எதிரான தொழிலாளர்கள் சீற்றத்தை திசைதிருப்புகின்றன; இவைதான் கிரேக்கத்தின் இறைமையை திருடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றன. புதிய சட்டம் சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றின் ஆணையின்பேரில் இயற்றப்பட்டுள்ளது என்று ADEDY கூறியது.

KKE எனப்படும் ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள PAME என்னும் சிறிய தொழிற்சங்கக் கூட்டமைப்பும் இதேபோன்ற தேசியவாதப் போக்கைத்தான் எடுத்துள்ளது. “ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், அரசாங்கம் ஆகியவை எங்களை வறுமை, வேலையின்மைக்கு இட்டுச் செல்லுவதால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்கிறோம்; அவை எங்கள்மீது தொடர்ந்து புதிய சுமைகளைச் சுமத்துகின்றன.

PASSOK பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையில் தொழிற்சங்கங்களுடன் விரைவில் உடன்டுகின்றனர். தன்னுடைய கட்சி புதிய சட்டத்தை இயற்றும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது பற்றி பனலெலோதிஸ் கொருபிலிஸ், “நாம் ஒன்றும் நாட்டின் மீதான உரிமைகளைக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிடவில்லை.” என்றார்.

ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் இதே போன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போது கிரேக்க நிதிய நெருக்கடியை தேசிய இறைமை பிரச்சினையாக சித்தரித்துக் காட்டுவது, எதிர்ப்புக்களை ஒரு முட்டுச் சந்திக்கு இட்டுசென்று தோல்வியை தழுவக் கூடிய விளைவைக் கொடுக்கும் ஒரு பொறியாகின்றது. தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று தங்கள் கிரேக்க இறைமையை காப்பவர்கள் என்ற தோற்றத்தை காட்டுபவர்களிடம் இருந்து முறித்துக் கொண்டால் ஒழிய, சிக்கன  நடவடிக்கைளுக்கு எதிரான எதிர்ப்பு நாசவேலைக்குள்ளாகும்.

கிரேக்கத் தொழிலாளர்கள் தங்களை PASOK அரசாங்கத்திற்கு  எதிராகக் காக்கக்கூடிய ஒரே வழி ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதுதான். எல்லாடா கிறிஸ்டோலோலு என்னும் ஆர்ப்பாட்டக்காரர் நிருபர்களிடம் கூறினார்: “உழைக்கும் உரிமைகள் அடக்கப்படுகின்றன, அனைத்து கிரேக்க மக்களும் கிளர்ந்தெழ வேண்டும் என்று நினைக்கிறேன். இது கிரேக்கத்தின் போராட்டம் மட்டும் அல்ல, முழு உலகத்தின் போராட்டம்”. அவர் கூறியது முற்றிலும் சரியே.