தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா Chinese leader denies any aim to replace the US as world hegemonஅமெரிக்காவின் உலக மேலாதிக்க நிலையை பிரதியீடு செய்ய சீனா முயற்சிக்கிறது என்பதை சீனத் தலைவர் மறுக்கிறார்
By John
Chan Use this version to print | Send feedback டிசம்பர் 6ம் திகதி சீன வெளியுறவு அமைச்சரகத்தின் வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய 9.000 சொற்கள் அடங்கிய கட்டுரையில் அரச ஆலோசகர் டை பின்குவோ (துணைப் பிரதமருக்கு இணையான உயர்நிலையில் உள்ளவர்), உலகின் மேலாதிக்க சக்தி என்னும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பெய்ஜிங் ஒருபொழுதும் மாற்ற முற்படாது என்று அறிவித்துள்ளார். இக்கட்டுரை ஆசியா முழுவதும் சீனாவின் எழுச்சியை எதிர்த்துபோராடும் ஒரு ஆக்கிரோஷப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஆளும் உயரடுக்கை சமாதானப்படுத்தும் வடிவமைப்பை கொண்டுள்ளது. “சீனா அமெரிக்காவைக் கடந்து உலகத்தின்மீது மேலாதிக்கம் செலுத்தும் என்றும் கருத்து ஒரு கற்பனையாகும்” என்று டை எழுதியுள்ளார். “நம் அடிப்படைக் கொள்கையும் மூலோபாயமும் தலைமையிடத்தில் நிற்க வேண்டும் என்றோ மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்பதோ அல்ல.” பெய்ஜிங்கின் “இரகசிய” முன்னெடுப்புகள் குறித்த அமெரிக்காவின் விமர்சனத்தை எதிர்க்கும் விதத்தில், குறிப்பாக இராணுவ விரிவாக்கம் பற்றி டை வலியுறுத்தியதாவது: “சிலர் கற்பனை செய்வது போல் சீனாவின் மூலோபாய முன்னெடுப்பு ஒன்றும் சிக்கல் வாய்ந்ததோ, இழிந்ததோ அல்ல-ஏதோ நாங்கள் இரகசியச் செயற்பட்டியல், நோக்கங்களை கொண்டதாக கருதப்படுகிறது.” சீனாவின் மூலோபாய இலக்கான “அமைதியான வளர்ச்சி” என்பது இன்னும் 1,000 ஆண்டுகளில்கூட மாறாது. பூகோளமயமாக்கப்பட்ட நிலைமையில், “ஒரு சமத்துவமான, ஒழுங்கான ஒருவருக்கொருவர் ஆதாயமளிக்கும் சர்வதேசப் போட்டி, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம்தான் ஒரு சக்தியின் எழுச்சி முழுமையாக அடையப்பட முடியும்.” என்று டை வாதிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளது: “சில சக்திகளின் எழுச்சி, வீழ்ச்சி ஆகியவற்றின் அனுபவங்களும், படிப்பினைகளும் நமக்கு அத்தகைய விரிவாக்கவாதம் மற்றும் ஆயுதப்போட்டியை நாம் பின்பற்ற முடியாது என்பதைப் போதிக்கிறது.” ஆசியாவில் ஒரு “மன்ரோ கொள்கையை” (“Monroe Doctrine”) இயற்ற சீனா முற்படாது என்று டை கூறினார் -இது 19, 20ம் நூற்றாண்டுகளில் தெற்கு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் போட்டி சக்திகளை ஒதுக்கி வைத்த அமெரிக்க கொள்கையாகும்; அதே போல் எங்கள் பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் மேலாதிக்கத்திற்காகப் போட்டியிடவும் மாட்டோம்.” சீன ஆசிய நாடுகளுக்கு “ஒரு நல்ல நட்பு நாடாக, நல்ல அண்டை நாடாக, நல்ல பங்காளியாக” இருக்கும். குறிப்பான ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க அங்கத்துவ நாடுகளுடன் அவ்வாறிருக்கும்.” நவம்பர் 23ம் திகதி இரு கொரியாக்களுக்கும் இடையே பீரங்கித் தாக்குதல் நடந்ததற்குப்பின் கொரிய தீபகற்பத்தின் தீவிர அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பெய்ஜிங் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் பெருகிய முறையில் சீனாதான் வட கொரியாவின் “முரட்டுத்தன” நடத்தைக்கு பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் மிகப்பெரிய அளவில் கூட்டு அமெரிக்க இராணுவப் பயிற்சிகள் நடத்தப்பட்டது சீன ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தும் தகவலைக் கொடுத்துள்ளது. இதைத்தவிர, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அழுத்தங்களைக் குறைப்பதற்காக வட கொரியா பற்றி 6 நாடுகளின் பேச்சுக்களை மீண்டும் தொடர வேண்டும் என்ற சீனாவின் முன்மொழிவையும் நிராகரித்துள்ளன. விக்கிலீக்ஸினால் கசியவிடப்பட்ட அமெரிக்கத் தூதரக தகவல்களும், சீனாவிற்கு எதிராக போர்த் தயாரிப்புக்களுக்காக தீவிர விவாதங்கள் அமெரிக்க நடத்திவருவது குறித்தும் வெளியிட்டுள்ளன. அமெரிக்க அரசாங்க கருவூலப் பத்திரங்கள் உட்பட, சீனா அமெரிக்க நாணயச் சொத்துக்களை $2 டிரில்லியன் அளவிற்கு வைத்திருப்பது பற்றி கவலை கொண்ட வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ரூட்டை 2009ல் பின்வருமாறு கேட்டிருந்தார்: “உங்கள் வங்கியாளரிடம் நீங்கள் எப்படிக் கடினமாக நடந்து கொள்ள முடியும்?’ சீனா அமெரிக்க தலைமையிலான ஆசிய-பசிபிக் ஒழுங்கில் ஒருங்கிணைய மறுத்தால் வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் பெய்ஜிங்கை கட்டாயப்படுத்த வலிமை பயன்படுத்தப்பட வேண்டும் என்று ரூட் அதற்கு விடையிறுத்தார். சமீபத்திய மாதங்களில் பெருகும் பிராந்திய அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கத்தில் டை இராஜதந்திர தந்திரோபாயங்களில் டை ஈடுபட்டுள்ளார். அக்டோபர் மாதம் அவர் முறைசாரா வகையில் கிளின்டனுடன் ஹைனன் தீவிகள் பற்றிப் பேசனார்; கிளின்டன் அப்பொழுது ஆசியாவில் இப்பிராந்தியத்தில் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த வியட்நாம், கம்போடியா முதல் ஆஸ்திரேலியா வரை சென்று சீனாவின் செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தினார். டையின் கட்டுரை ஜனாதிபதி ஹு ஜின்டாவோ வாஷிங்டனுக்கு திட்டமிட்டபடி ஜனவரி மாதம் பயணிக்க இருப்பது நடந்தால், இரு நாடுகளுக்கும் இடையே அழுத்தங்கள் பெருகுவது அப்பயணத்தின் நோக்கத்தைக் கவிழ்த்துவிடக்கூடாது என்பதை உறுதிபடுத்தும் பெய்ஜிங்கின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். கடந்த மூன்று தசாப்தங்களில் சீனாவின் எழுச்சி “புதிதாக எழுச்சியடையும் சக்திகள் தவிர்க்க முடியாமல் கொள்ளை, ஆக்கிரோஷம் மற்றும் மேலாதிக்கத்திற்கு வழி செய்துவிடும் என்ற வரலாற்றுச் சட்டத்தை முறித்துவிட்டது.” என்று டை வாதிட்டுள்ளார். ஆனால் பெய்ஜிங் வாஷிங்டனுடன் போரைத் தவிர்க்கலாம் என்பது வரலாற்றுப் படிப்பினைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியே ஒரு மோதல் போக்குடைய உந்துதலைத்தான் கொண்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரத்தின் அளவில் எட்டில் ஒரு பங்கை மட்டுமே கொண்டிருந்த சீனப் பொருளாதாரம், இப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று உள்ளது. மேலும் இந்த ஆண்டு உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற இடத்தையும் ஜப்பானைக் கடந்து பெற்றுவிட்டது. சீனாவின் விரிவாக்கம் அதற்கு எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் இருப்புக்களை ஆபிரிக்கா ஓஷியானா, மத்திய கிழக்கு, இலத்தின் அமெரிக்கா ஆகியவற்றில் இருந்து அடைய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அதன் உற்பத்திப் பொருட்களையும் அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதோடு அவற்றை அதிக அளவு நம்பியிருக்கும் நிலைமையில் வைத்துள்ளது. முக்கிய கடல்வழிப் பாதைகளை பாதுகாப்பதற்காக பெய்ஜிங் நீலக்கடல் கடற்படையை (blue-water navy) கட்டமைத்து, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் பகுதியில் ஏற்படுள்ள அமெரிக்க கடற்படையின் மேலாதிக்கத்திற்கு சவாலைக் காட்டுகிறது. தனது மூலவளங்களின் விநியோகத்தையும் மற்றும் கடற்படை துறைமுகங்களை அடைவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஈரான், இலங்கை மற்றும் சூடான் போன்ற நாடுகளுக்கு கடன்களையும் ஆயுதங்களையும் வழங்கி அமெரிக்காவின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கின்றது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஒரு தூதரகத் தகவல்கள் அமெரிக்க விடையிறுப்பிற்கு ஒரு உதாரணத்தை காட்டுகிறது. பெப்ருவரி மாதம் நைஜீரியாவில் உள்ள இணைத் தூதரகத்தில் இருந்து ஆபிரிக்க விவகாரங்கள் குறித்த உதவி வெளிவிவகார செயலாளர் ஜோனி கார்சனின் வருகையைத் தொடர்ந்து இது அனுப்பப்பட்டது. “சீனா ஒரு பெரும் ஆக்கிரோஷமான, தீய பொருளாதாரப் போட்டி நாடு, போட்டியில் அறநெறிகளைக் காட்டுவதில்லை.” என்று கார்சன் நைஜீரியாவில் உள்ள அமெரிக்க எண்ணெய் நிறுவன நிர்வாகிகள் குழு ஒன்றிடம் கூறி ஆபிரிக்காவில் எழும் சீனாவின் செல்வாக்கு பற்றியும் எச்சரித்துள்ளார். கார்சனின் கருத்தை எதிரொலிக்கும் வகையில் தகவல் கேட்டது: “சீனா ஒரு நீலக்கடல் கடற்படைக் கொள்கையை கொண்டுள்ளதா? அவர்கள் இராணுவத் தளம் பற்றி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனரா? அவர்கள் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கின்றனரா? அவர்கள் உளவுத்துறை செயற்பாடுகளில் வளர்ச்சியுற்றுள்ளனரா?.” இத்தகவல் வாஷிங்டன் தற்பொழுது சீனாவை ஆபிரிக்காவில் ஒரு இராணுவ அச்சுறுத்தல் என்று காணவில்லை என்றாலும், “இப்பகுதிகள் வளர்ச்சியுறத் தொடங்கியபின், அமெரிக்கா கவலைப்படத் தொடங்கும்” 2008 நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து அதன் பொருளாதாரச் சரிவு வேகமாகிக் கொண்டிருக்கையில், அமெரிக்கா, சீனாவின் எழுச்சி பெறும் செல்வாக்கை கீழறுக்க தீவிரமாக முயல்கிறது. இரு உலகப் போர்கள் முடிவுற்ற பின்னரே இறுதி நிலைக்கு வந்த பிரிட்டிஷ் பேரரசைப் போல், அமெரிக்காவும் உலக மேலாதிக்கத்தை தானாக கைவிட்டு விடாது. சீன ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவு, நாட்டின் அடுத்தக் கட்ட பொருளாதார வளர்ச்சி அமைதியான வகையில் இருக்காது என்று எச்சரித்துள்ளது. டையின் கட்டுரை வந்து மூன்றே நாட்களுக்குள் அரசாங்கம் நடத்தும் Global Times, வெளியுறவுக் கொள்கையில் சீன மேன்மைக்குப் பாடுபடுவது என்று நன்கு அறியப்பட்டுள்ளது, ஒரு சீனத் தளபதி பென் குவாங்கியனைப் பேட்டி கண்டது. அவர் “அமைதி என்ற போலித்தோற்றத்திற்கு” எதிரான எச்சரிக்கைகளைக் கொடுத்தார். பூகோளமயமான உற்பத்திமுறை மற்றும் நாடுகளுக்கு இடையேயான பொருளாதார இடைத்தொடர்புகள் “அடிப்படையில் போருக்கான காரணத்தை அகற்ற முடியாது”; “இவை ஏகபோக முதலாளித்துவத்தின் விரிவாக்கத் தன்மையில் வேர்களைக் கொண்டுள்ளவை” என்றார். இரண்டாவதாக, “சீனா அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடாது, ஆனால் இதன் பொருள் அமெரிக்க மேலாதிக்கம் சீனாவிற்கு சவால் விடாது என்பது அல்ல.” மூன்றாவதாக, “சீனா நேர்மையுடன் அமைதியான முறையில் எழுச்சி பெற வேண்டும் என்று விரும்பினாலும், பிரச்சனை 'சமாதானம் வேண்டுமா என்பதல்ல', சிலர் அடிப்படையில் நம் எழுச்சியை ஏற்க மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.” பெங்கின் பேட்டி சீன முதலாளித்துவ உயரடுக்கின் உறுதிப்பாடான தங்கள் நிலையை உலக சக்தியாக முன்னேற்றுவிப்பது என்பது அமெரிக்காவுடன் மோதல் என்றே பொருள்படும். அமெரிக்கா போட்டி நாடுகளிடம் தன் பொருளாதார மேன்மையை இழந்துவரும் நிலையில், வாஷிங்டன் பெருகிய முறையில் தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள இராணுவ வழிவகையை நம்பியுள்ளது. தற்போதைய சமாதான முறையீடு ஒருபுறம் இருந்தாலும், டையின் கட்டுரை இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள எழுச்சி பெற்று வரும் அழுத்தங்களை அகற்றிவிடாது. |
|
|