World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Julian Assange granted bail            

ஜூலியன் அசாங்கேக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது

By Ann Talbot
17 December 2010
Back to screen version

வியாழனன்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் ஜூலியன் அசாங்கேக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது. குற்றம் செய்தவர் என்று கண்டறியப்படுவது ஒருபுறம் இருக்க, குற்றம் ஏதும் சாட்டப்படாத விக்கிலீக்ஸின் நிறுவனர் பல மணி நேரம் விடுவிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற முன் கதவு வழியே ஜாமின் கொடுக்கப்பட்டு ஐந்து மணி நேரத்திற்கும் பின்னர்தான் அசாங்கே வெளியேவந்தார்.

நீதிமன்றத்திற்கு வெளியே நடைபாதையில் அவருடைய ஆதரவாளர்களும் உலகச் செய்தி ஊடகத்தினரும் அவரை எதிர்பார்த்து நின்றபோது பிற்பகல் முடியும்போது அவர் தோன்றினார். அவர் ஏன் விடுவிக்கப்படவில்லை என்பது பற்றிப் பல கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்தன.

முதலில் அவருடைய ஜாமினின் முன்னிபந்தனைகளில் ஒன்றாக இலத்திரனியல் தகட்டு இணைப்பைப் பொருத்துவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்டது. அதன் பின் அசாங்கே செவ்வாயன்று முதலில் ஜாமின் கொடுக்கப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முழுத் தொகையும் கட்டப்படவில்லை என்ற தகவல் வந்தது. இறுதியாக நீதிபதி ஔஸ்லே உத்தரவாதம் கொடுத்து, தேவையான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்குப் பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டிய அனைவரையும் தொடர்பு கொண்டு அழைத்துவருவதில் பிரச்சினை இருப்பதாக செய்தியாளர்களுக்குக் கூறப்பட்டன.

ஒரு கட்டத்தில் இந்த வழிவகைகள் சிறைப் பேரூந்து வாண்டஸ்வொர்த்திற்கு செல்வதற்கு முன் முடிக்கப்படவில்லை என்றால், அசாங்கே மற்றொரு இரவும் சிறையில் இருக்க வேண்டும் என்ற கருத்தும் கூறப்பட்டது. பிற்பகல் 5.45 வரை அவரால் சபோக் எலிங்காம் ஹாலில் அவருடைய பிணை எடுப்பு விலாசத்தைக் கொடுப்பதற்கு வெளியே செல்லத் தடை இருப்பதால், உரிய நேரப்படி இரவு 10 மணிக்கு முன் செல்ல முடியாது என்பதால் அவர் விடுவிக்கப்பட முடியாது என்று கூறப்பட்டது.

அவர் வெளியே வந்தபோது, கடுமையான குளிரில் நாள் முழுவதும் காத்திருந்த மக்கள் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தபோது, 'கடுமையான கஷ்டத்திற்கும் திசைமாற்றங்களை முகங்கொண்ட போது அவருடைய ஜாமினுக்கு உத்தரவாதம் அளித்தவர்களுக்கு அசாங்கே நன்றி கூறினார்.

ஸ்வீடன் நாட்டு அரசாங்க வக்கீல் அலுவலகம் அது English Crown Prosecution Service (CPS) க்கு பிணை எடுப்பிற்கு எதிராக முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியதிலிருந்து அசாதாரண நிகழ்வுகள் நடந்து அவற்றின் உச்சக்காட்டமாக அவர் இறுதியில் வெளியே வந்தார். அரசாங்க வக்கீலின் அலுவலகம் Sky News இடம், “திரு அசாங்கேக்கு கொடுக்கப்பட்ட ஜாமினுக்கு எதிராக முறையிடுவது பற்றிய முடிவு முற்றிலும் பிரிட்டிஷ் அதிகாரிகளுடைய பொறுப்பு, எங்களுக்கு அதில் தொடர்பு ஏதும் இல்லை”  என்று கூறியது.

ஸ்வீடனின் அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் தொடர்புப் பிரிவு இயக்குனராக இருக்கும் Karin Rosander கார்டியனிடம்இதை செயல்படுத்துவது முழுவதும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பொறுப்புத்தான்என்றார்.

அன்று காலை BBC Radio 4 ல் “Today” நிகழ்ச்சியில் பேசிய CPS ன் தலைமை அதிகாரி Keir Starmer, டிசம்பர் 14ம் தேதி செவ்வாயன்று முதலில் ஜாமின் கொடுக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் அவர் வெளிவருவதை தடுத்தனர் என்ற வெளிப்பாட்டை மறைக்க முயன்றார். “பொது நிலைமையும் செய்ய வேண்டியதும் தெளிவாகத்தான் இருந்தன. அரசாங்கக் குற்றவியல் வழக்குப் பிரிவு இங்கு அரசாங்கம் அவரை நாட்டில் இருந்து வேறுநாட்டிற்கு அனுப்பவதற்கு முகவர்கள் போல் செயல்படுகின்றனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை ஸ்வீடன் அரசாங்கத்தின் சார்பில் இந்த நடவடிக்கைகள் ஸ்வீடன் அரசாங்கத்தின் முகவர்கள் என்ற முறையில் நடத்தப்படுகின்றனஎன்று அவர் கூறினார்.

 “முகவர்கள்எனச் செயல்படுகின்றனர் என்ற குறிப்பு இங்கிலாந்து அசாங்கேயை காவலில் தொடரக் கேட்டுக் கொள்ளப்பட்டதா என்ற வினாவைத் தவிர்க்கிறது. அதுவும் ஸ்வீடன் முறையீடு செய்துள்ளது என்று கூறியபின். வியாழன் வழக்கு விசாரணையின்போது CPS அசாங்கே ஏன் ஜாமினில் வெளிவரக்கூடாது என்பதற்கு சுற்றி வளைத்த காரணங்கள் பலவற்றைக் கூறியது. ஜாமினில் உள்ளபோது அவர் தங்குவதற்கு ஒப்புக் கொண்ட Captain Vaughan Smith உடைய வீட்டிற்கு அருகேயுள்ள கிராமப்புற பொலிஸ் நிலையம் நாள் ஒன்றிற்கு இரண்டு மணி நேரம்தான் திறந்திருக்கும், கிறிஸ்துமஸ் காலத்தில் மூடப்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதன் பின் அவருக்கு உத்தரவாதம் அளிக்க முன்வந்தவர்களைப் பற்றிச் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

அசாங்கேயின் ஆதரவாளர்கள் செவ்வாயன்று பிணை நிதி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து 48 மணி நேரத்திற்குள் 200,000 பவுண்டுகள் ரொக்கப் பணத்தைத் திரட்டியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் மூர் இப்பணத்தில் 20,000 டொலர் கொடுத்தார். CPS, இது ஒப்புமையில் குறைந்த அளவுப் பணம் என்று வாதிட்டது. மற்ற தனி நபர்கள் அளிப்புக்களும் உள்ளன என்று கூறியது. அரசாங்க வக்கீல் மூர், அசாங்கேயின் மற்ற ஆதரவாளர்கள் அவர் ஓடிப்போனால் இப்பணத்தை இழப்பது பற்றி எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்று வாதிட்டார்.

நீதிபதி Duncan Ouseley அசாங்கேயின் ஆதரவாளர்களுடைய நோக்கம் பற்றி ஐயம் எழுப்பினார். விக்கிலீக்ஸில் அவருடைய பணிக்கு அவர்களுடைய ஆதரவு நாட்டைவிட்டு ஓடிப்போவதற்கும் அவருக்கு உதவக்கூடும் என்றும் கூறினார். அவர்கள் அதுநேர்மையான செயல்என்று வாதிடக் கூடும் என்றார். எனவே அவர் கூடுதலாக உத்தரவாதம் தருபவர்கள் தேவை என்றும் உத்தரவாதம் இருக்கத் தயார் என்று கூறியவர்களின் பட்டியலிலிருந்து அவர் ஏற்க விரும்பிய பலரைத் தேர்ந்தெடுத்து இன்னும் சில முக்கிய நபர்களிடமிருந்து கொடுக்கத் தேவையான பணத்தையும் அதிகப்படுத்தினார்.

நீதிபதி நியமித்த ஐந்து நபர்கள், ஆசிரியர் மற்றும் செய்தியாளரான Sir Phillip Knightley, பதிப்பாளர் Felix Dennis, நோபல் பரிசு பெற்ற Sir John Sulston, Faber & Faber நிறுவனத்தின் தலைவரான Lord Matthew Evan மற்றும் பேராசிரியர் Patricia David ஆகியோர் ஆவர்.

ஆனால் செய்தி ஊடகம் பரந்த அளவில் கூறியுள்ளது போல் அசாங்கே பிரிட்டனுக்கு தஞ்சம் நாடி வரவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் நீதிபதி இருந்தார். பிரிட்டனில் உள்ள காலம் முழுவதும் அசாங்கே மெட்ரோபொலிடன் பொலிசாருடன் தொடர்பைக் கொண்டிருந்தார், அவர் செல்லுமிடங்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தன என்றும் நீதிபதி ஒப்புக் கொண்டார். ஆகஸ்ட் 30ம் தேதி ஸ்டாக்ஹோமில் அசாங்கே சுயவிருப்பத்துடன் ஒரு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார், பொலிசார் அனுமதி கொடுத்தபின்தான் அந்நாட்டை விட்டு செப்டம்பர் 30ம் திகதி நீங்கினார் என்பதையும் நீதிபதி ஒப்புக் கொண்டார்.

அப்பொழுது முதல் அசாங்கே Frontline Club ல் தங்கி வருகிறார், ஸ்வீடன் அரசாங்க வக்கீல் அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்பைக் கொண்டுவருகிறார். ஐரோப்பிய ஆணை வெளியிடப்பட்டதும் அவர் தானே முன் வந்து ஒரு லண்டன் பொலிஸ் நிலையத்தில் சமூகமளித்துக் கொண்டார்.

நீதிபதி ஔஸ்லே, Vaughan Smith ன் சபோக்கிலுள்ள தொலைதூர வீடு அசாங்கேயின் ஜாமின் முகவரிக்குப் பொருத்தமாக இராது என்ற வாதத்தை ஏற்கவில்லை. கிறிஸ்துமஸ் நேரத்தில் வெளிநாட்டிற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரிகள் உள்ளூர் பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருக்கும் நேரத்திலும் அவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றார். ஸ்வீடிஷ் அரசாங்க வக்கீல் வழக்கை நடத்திய வழி அசாங்கே வழக்கு விசாரணைக்கு வந்தால் தான் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையை நியாயமாகக் கொடுத்துள்ளது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். அவர் தப்பியோடுவது என்னும் இடரைக் குறைக்கும் காரணி இதுதான் என்றும் கூறினார்.

ஆங்கிலச் சட்டத்தின்கீழ் ஜாமின் கொடுக்கலாம் என்ற முன்கருத்து உண்டு. காவலில் வைக்கப்படுபவர் தப்பியோடிவிடக்கூடும் என்ற அச்சம் இருந்தால்தான் ஜாமின் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் சரியான பாதுகாப்பு நெறிகள் செயல்படுத்தப்பட்டால், அதாவது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள முகவரியில் வசித்தல், நிதிய உறுதியாளர்கள் பணம் அளித்தல், நன்னடத்தை உள்ளவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு உறுதி அளித்தால், ஜாமின் கொடுக்கப்படலாம். இவை அனைத்தும் அசாங்கே வழக்கில் உள்ளன.

ஜாமின் கொடுத்த பின்னரும்கூட அசாங்கே விடுவிக்கப்படுவது குறித்து விடை அளிக்கப்படாத வினாக்கள் உள்ளன. செவ்வாயன்று CPS ஸ்வீடிஷ் அரசாங்க வக்கீல்களைக் கலந்து ஆலோசிப்பதாகக் கூறியது என்ற தாமதிக்கும் செயல், உயர்நீதிமன்றத்தில் அவ்வாறு கூறுவது ஆகியவை நிலைமையை வாஷிங்டனுடன் கலந்தாலோசிக்கத் தேவையான நேரத்தைப் பெறுவதற்கான உபாயம்தான். ABC News இடம் பேசிய, புஷ் நிர்வாகக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலகத்தின் முன்னாள் சட்ட ஆலோசகராக இருந்த ஜோன் பெல்லிஞ்சர் ஒருவேளை எடுக்கக் கூடிய நடவடிக்கை பற்றிக் கோடிட்டுக் காட்டினார்.

நம் நீதித்துறை திரு அசாங்கே மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்குப் பல குற்றவியல் சட்டங்களைப் பரிசீலிக்கிறது, இதில் 1917 உளவுத் தடைச் சட்டமும் உண்டு. அது தேசியப் பாதுகாப்பு தொடர்பான தகவலை அணுக அல்லது அது பற்றி அங்கீகாரம் இல்லாத வகையில் தெரிவிப்பதை ஒரு குற்றமாக்குகிறது.”

உளவுச் சட்டத்தின் கீழ் குற்றவிசாரணைக்கு உட்படுத்துவது கடினமாகப் போகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவேகுறைந்தபட்சம் பகிரங்கமாகவேனும் குற்றச்சாட்டுக்கள் இன்னும் சுமத்தப்படவில்லை என்பதற்கான காரணத்தை நாம் பார்க்கிறோம்.”

திரு அசாங்கேக்கும் அவருடைய வக்கீல்களுக்கும் பத்து நாட்கள் முன்பு  ஒரு கடின நோக்கு உடைய கடிதத்தை வெளியுறவுச் செயலகத்தின் தற்பொழுதைய சட்ட ஆலோசர் எழுதினார்என்று பெல்லிஞ்சர் கூறினார். இக்கடிதத்தின் நோக்கம் அசாங்கேயை நீதிமன்றத்திற்கு இழுத்தல் என்னும் அமெரிக்க அரசாங்க நிலைப்பாட்டை உறுதிப்படுத்துதல் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க நிர்வாகம், பிராட்லி மானிங் அசாங்கேயுடன் சதி செய்து இரகசிய ஆவணங்களைக் கசிய விட முயன்றார் என்பதை நிரூபிக்க முயல்கிறது. சதித் திட்டக் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்க எளிமையாகப் போகும்.

Daily Telegraph ன் அமெரிக்க ஆசிரியரான டோனி ஹார்டென் அமெரிக்க அதிகாரிகள் ஒரு முத்திரயிடப்பட்டு, மூடப்பட்டுள்ள ஆணையைத் தயாராக வைத்துள்ளனர் என்றார். “என்ன நடக்கிறது என்றால், அமெரிக்கா சரியான நேரம், சரியான இடத்தில் அசாங்கையைப் பிடிக்க முயல்கிறது. பிரிட்டன் அல்லது ஸ்வீடனிலிருந்து அமெரிக்கா மீது உளவுக் குற்றங்களைக் கொண்டுவந்து அவற்றையொட்டி அமெரிக்காவிற்கு அவரை அழைத்து வருதல் என்பது மிகப் பெரிய அட்லான்டிக் கடந்த விவகாரமாக மாறக்கூடும்.”

கிட்டத்தட்ட வீட்டுக் காவல் என்ற நிலையில், சபோக்கிற்கு அவர் செல்லும்போது அசாங்கேயின் வருங்காலம் சந்தேகத்திற்கு உரியதாகத்தான் உள்ளது. ஆங்கிலச் சட்ட முறையிலிருந்து முன்னாள் சிலி இராணுவச் சர்வாதிகாரி தளபதி ஒகுஸ்டோ பினோஷேக்கு கொடுத்த நடைமுறையை விட முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத்தான் இவர் கொண்டுள்ளார்.

அக்டோபர் 1998ல் பினோஷே ஸ்பெயின் நாட்டு மாஜிஸ்ட்ரேட் Baltazar Garcon வெளியிட்ட பிடி ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டார். 3,000த்திற்கும் மேற்பட்ட கொலைகளில் அவரைப் பற்றிய முறையான குற்றச்சாட்டு  தொடர்புபடுத்தினாலும்கூட அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இன்னும் பல இறப்புக்களுக்கும் பினோஷே காரணமாக இருந்தார். அதைத்தவிர ஆயிரக்கணக்கான முறையான சித்திரவதைகள், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றிற்கும் காரணமாக இருந்தார்.

அவருடைய குற்றங்களின் கொடூரத்தன்மை இருந்தபோதிலும், பினோஷே சரேயில் வென்ட்வொர்த் பிரத்தியேகப் பகுதி ஒன்றில் வசதியான வீட்டால்தான் வைக்கப்பட்டார். ஆனால் அசாங்கேயோ வாண்ட்ஸ்வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். மார்க்கரெட் தாட்சர் பினோஷே விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியதுடன் பலமுறை அவரைக் காண வந்திருந்தார். இறுதியில் தொழிற் கட்சியின் உள்துறை மந்திரி ஜாக் ஸ்ட்ரோ சர்வாதிகாரி நாடு கடத்தப்பட வேண்டும் என்பதை உடல் நலமின்மையைக் காரணம் காட்டி அனுப்ப மறுத்துவிட்டார். இந்த இரண்டிலும் பொதுவாக இருப்பது பிரிட்டிஷ் அரசியல் உயரடுக்கு வாஷிங்டனின் ஆணைகளுக்கு முற்றிலும் தாழ்ந்து இருப்பதுதான். அவர்களுடைய குற்றங்களில் அது நேரடியாகத் தொடர்புடையது.