WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
General
strike hits further austerity demands in Greece
கிரேக்கத்தில்
கொண்டுவரப்படவிருக்கும் மேலதிக சிக்கனக் கோரிக்கைகளை பொது வேலைநிறுத்தம்
தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது
By Robert Stevens
15 December 2010
ஐரோப்பிய
ஒன்றியம் மற்றும் சர்வதேச-நாணய
நிதியம் ஒரு 110
ஈரோக்கள் கடன்
பொதிக்கு ஈடாகக் கோரியுள்ள பெரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் பெருகியுள்ள
போக்குவரத்து மற்றும் பிற துறைத் தொழிலாள வர்க்கத்தினரின் வெளிநடப்பையொட்டி
கிரேக்கத் தொழிலாளர்கள் புதன்கிழமை ஒரு பொது வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ளனர்.
நாடு தழுவிய
வெளிநடப்பு—கிரேக்கத்
தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு
(GSEE) மற்றும்
பொதுத்துறை ஆட்சிப் பணியாளர்கள் கூட்டமைப்பினால்
(ADEDY)
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது—விமானப்
பயணங்களை நிறுத்தும்,
பள்ளிகளை மூடப்படும்,
கப்பல்
போக்குவரத்தையும் துறைமுகப் பணியையும் பாதிக்கும் மற்றும் அரசாங்க அமைச்சரகங்கள்
மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாயன்று
ஏதென்ஸ் நகரில் டிராம்,
பஸ்,
இரயில் பணிகள்
நின்று போயின. வடக்குத் துறைமுக நகரான தெசலோனிகாவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள்
இரண்டாம் நாளாக தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்ததால் வேலைநிறுத்தம் செய்தனர்.
பாராளுமன்றம்
“தொழிலாளர் துறைச்
சீர்திருத்தங்களுக்கு”
வாக்களிக்கையில்
வங்கித் தொழிலாளர்களும் மற்றவர்களும் நடவடிக்கையில் சேர்ந்தனர்.
“சீர்திருத்தங்களில்”
அரசிற்குச் சொந்தமான
பஸ்,
இரயில் நிறுவனங்களில் ஊதிய
வெட்டுக்களுடன்,
தொழிலாளர்களின்
கூட்டுப் பேரம் வலுவிழக்கப்பட்டுள்ளது. நிறுவன அளவு உடன்பாடுகள்தான் செயல்படும்
என்று கூறப்பட்டுள்ளது.
“அவர்களுடைய
நெருக்கடிக்கு நாங்கள் விலை கொடுக்கமாட்டோம்”
என்று
33 வயது பஸ் சாரதி
யான்னிஸ் தியோடோரு ராய்ட்டர்ஸ் நிருபர்களிடம் செவ்வாய் நடந்த அணிவகுப்பின்போது
கூறினார். “ஒரு
நல்ல வாழ்வு கிடைக்கும் என்பதற்காக இந்த வேலையை எடுத்துக் கொண்டேன்,
இப்பொழுது எங்கள்
ஊதியங்கள் வெட்டப்படும்.”
புதன்கிழமையன்று ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் உட்பட மற்ற நாடுகளிலும் சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்புக்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவை வியாழன் மற்றும்
வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறுவதற்கு
முன் வருகின்றன.
கடந்த வாரம்
ஏதென்ஸுக்கு
IMF நிர்வாக
இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் வருகையையடுத்து பிரதம மந்திரி ஜோர்ஜ்
பாப்பாண்ட்ரூவின்
Pan-Hellenic Socialist Movement (PASOK)
அரசாங்கம் இந்த
கொள்கைகளுக்கு உடன்பட்டுள்ளது. பொதுநலச் செலவுகளில் பல பில்லியன் யூரோக்கள்
வெட்டுக்கள் செயல்படுத்தப்பட்ட ஒரு முழு ஆண்டிற்குப் பின்னர்,
சமீபத்திய
தாக்குதல்கள்,
கூட்டு ஒப்பந்தங்கள்
மற்றும் குறைந்தபட்ச ஊதியங்களை தகர்த்துள்ளன.
IMF உடன் நெருக்கமான
ஆலோசனைகளுக்குப் பின் மொத்தம்
6.5 பில்லியன் ஈரோ
வெட்டு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. பாராளுமன்றம் வரவு செலவுத் திட்டத்தின் மீது
அடுத்த வாரம் வாக்களிக்கவுள்ளது.
புதிய
சட்டத்தின்கீழ் நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தங்களைக் கடக்க இயலும்,
தொழிலாளர்களுக்கு
உள்ளூர் ஊதிய உடன்பாடுகளைத்தான் கொடுக்கும் கதேமெரினி
கூறியுள்ளபடி,
சட்டம்
“ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு குறைந்தபட்ச தேசிய ஊதியத்தை அளிக்க நிறுவனங்களை அனுமதிக்கலாம்.”
மதிப்புக்கூட்டு வரியும்
(VAT) 11
சதவிகிதத்திலிருந்து
13 சதவிகிமாக
உயர்த்தப்படும்.
புதிய
நடவடிக்கைகள்,
DEKO க்கள்
எனப்படும் கிரேக்கத்தின் அரசிற்குச் சொந்தமான பொது நிறுவனங்கள் அமைப்புக்களை
முறிக்கும் நோக்கம் கொண்டவை.
இவற்றுள் ஹெலனிக்
இரயில் நிறுவனம்,
ஏதென்ஸ் பெருநகரப்
போக்குவரத்து நிறுவனம் ஆகியவையும் அடங்கும்.
மொத்தம்
800 மில்லியன்
ஈரோக்கள் DEKO
க்கள் செலவுகளில்
இருந்து 2011க்குள்
குறைக்கப்பட உள்ளன.
800 மில்லியன்
ஈரோக்கள் சேமிப்புக்களைக் கொடுக்கும் ஊதிய வெட்டுக்களுடன்
DEKO நிறுவனங்கள்
வசூலிக்கும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களும் அடுத்த ஆண்டு
30 முதல்
50 சதவிகிதம்
அதிகரிக்கப்படவுள்ளன.
கிட்டத்தட்ட
8,500 முதல்
10,000 ஊழியர்கள்
வரை,
இப்பொழுது தற்காலிக
ஒப்பந்தத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
PASOK
மந்திரிகள்
DEKO க்களில் மாத
ஊதிய உச்சவரம்பு மொத்தம்
4,000 ஈரோக்களுக்கு
மிகாது என்று உறுதிபடுத்தியுள்ளதுடன் மாதம்
1,800 ஈரோக்களுக்கு
மேல் வருமானம் உடையவர்கள்
10 சதவிகித குறைப்பை
ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு
DEKO ஊழியர் கூடுதல்
நேரத்திற்குப் பெறும் ஊதியம் அவருடைய சம்பளத்தில்
10 சதவிகிதத்திற்கு
மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வரம்பு கட்டப்படும்.
பொதுத்துறையில் ஒரு பாரிய பணிநீக்கத்தின் ஒரு பகுதிதான் இவ்வெட்டுக்கள். இவை
நூறாயிரக்கணக்கான வேலைகளைத் தகர்த்துவிடும்.
அறிவிப்பிற்கு முன்
உள்துறை மந்திரி யியன்னிஸ் ரகௌசிஸ் பொதுத்துறை தொழிலாளர்கள் இன்னமும்
“அக்கிரமமான
நலன்களைத் அனுபவிக்கின்றனர்”
என்று கூறினார்.
அரசாங்கத்தின்
நான்கு ஆண்டு வரைகாலத்திற்குள் ஆட்சித்துறை ஊழியர்களின் எண்ணிக்கையில்
200,000
குறைக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.
இதைச்
சாதிப்பதற்கு அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்கள் நியமனத்தை முடக்க உத்தரவிட்டுள்ளதுடன்
ஐந்து ஓய்வு பெறுவோருக்கு ஒரு பதவி மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற விகிதத்தையும்
நிர்ணயித்துள்ளது.
பகுதி
மற்றும் முழுத் தனியார்மயமாக்குதல் ஏராளமாக
IMF மற்றும்
EU ஆல்
கோரப்பட்டுள்ளவை செயல்படுத்தப்படுகின்றன. இதையொட்டி
1.1 பில்லியன்
ஈரோக்களுக்கு உயர்த்துவது எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார்மயமாக்கப்படும் நிறுவனங்களில் ஹெலனிக் இரயில் நிறுவனம்,
டிரைனோஸ் ஆகியவையும்
அடங்கும்—இவை
இரயில் நிறுவனங்கள் ஆகும்.
இவற்றைத் தவிர,
ஹெலனிக் அஞ்சல் துறை,
பொது எரிவாயு
நிறுவனம்,
ஏதென்ஸ் சர்வதேச விமான
நிலையம் மற்றும்
33 பிற பிராந்திய
விமான நிலையங்களும் அடங்கும்.
கணிசமான அளவிற்கு
நிலச் சொத்துக்கள்,
அரச இரயில்
நிறுவனத்திற்கு உடைமையானவை விற்கப்படுகின்றன.
மே மாதம்
EU, ஐரோப்பிய மத்திய
வங்கி மற்றும்
IMF என்னும்
“முக்கூட்டுடன்”
கொண்ட
“குறிப்பு”
ஒன்றின் விதிகளுக்கு
முதலில் உட்பட்டபோது,
PASOK வெட்டுக்களை
வேலைக் குறைப்புக்கள் இல்லாமல் செயல்படுத்துவதாகக் கூறியது.
இது இப்பொழுது
அப்பட்டமான பொய் என்று அம்பலமாகியுள்ளது.
இதுகாறும்
செய்யப்பட்டுள்ள பாரிய வெட்டுக்களைத் தவிர,
பாப்பாண்ட்ருவின்
ஆட்சி குறிப்பிட்ட இலக்கையொட்டி அதன் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை முடிக்க
இயலாமல் உள்ளது.
மே மாதத்திலிருந்து,
வரவு செலவுத்
திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
2009 ம் ஆண்டு
15.4 சதவிகிதத்தில்
இருந்து இந்த ஆண்டு
GDP யில்
9.4 என்று
குறைந்துள்ளது.
இந்த ஆண்டிற்கான
இலக்கு GDP
யில்
8 சதவிகிதம் என
இருக்கும் என இருந்தது.
EU
மற்றும்
IMF ஆகியவற்றின்
110 பில்லியன்
ஈரோக்கள் கடன் பொதியைப் பெறுவதற்கு
PASOK அது இன்னும்
கூடுதலான தாக்குதல்களை கிரேக்கத்தின்
13 மில்லியன் மக்கள்
மீது சுமத்த வேண்டும் என்று உறுதியாகக் கூறப்பட்டது.
IMF வருகையின்
நோக்கம் ஏற்கனவே அது பெற்றுள்ள கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்ற
அச்சத்தினால் தேவையாயிற்று.
கிரேக்கத்திற்கு
இன்னும் 9
பில்லியன் ஈரோக்கள் இம்மாத
நடுப்பகுதிக்குள் தேவைப்படுவதோடு,
பெப்ருவரி மாதத்தில்
மேலும் 15
பில்லியன் ஈரோக்கள்
தேவைப்படும்.
பைனான்சியல்
டைம்ஸ் கடந்த
மாதக் கட்டுரை ஒன்று
“ஏதேன்ஸில் வருங்கால
மாற்றம் தடுக்கப்பட முடியும் என்ற கவலை உயர்ந்துள்ளது—இந்த
நடவடிக்கை இன்னும் உடனடியான கடன் கொடுக்கல் தவறை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன்
கிரேக்கத்தின் அரசாங்கக் கடனான
340
பில்லியன் ஈரோக்கள்
ஒழுங்கற்ற முறையில் கட்டமைக்கப்படக்கூடும் எனவும் தோன்றுகிறது”
எனக்
குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய
காட்சி,
யூரோவில் இருந்து
கிரேக்கம் தவிர்க்கப்பட முடியாமல் வெளியேறுவதைத்தான் காணும்.
கடந்த மாதம்
ஆஸ்திரிய அரசாங்கம் அடுத்த கிரேக்கக் கடன் கொடுத்தலுக்கு தன் பங்கு
நிறுத்திவைக்கப்படும் என்று அச்சுறுத்தியது.
இந்த அச்சுறுத்தல்
செயல்படுத்தப்படவில்லை என்றாலும்,
ஜேர்மனி,
ஆஸ்திரியா உட்பட ஒரு
ஐரோப்பிய நாட்டுக் குழு கிரேக்கத்தை யூரோப்பகுதியில் இருந்து கட்டாயமாக அகற்றத்
தாயர் என்பதைக் காட்டுகிறது.
அயர்லாந்து
அரசாங்கத்துடன் செய்து கொண்ட சிக்கன நடவடிக்கை உடன்பாட்டின் ஒரு பகுதியாக
அயர்லாந்து கிரேக்கத்திற்கு கடன்கள் கொடுப்பதற்குத் தன் பங்கு அளிப்புக்களை
நிறுத்திவிட்டது.
2014
மற்றும்
2015 ஆண்டுகளில்
கிரேக்கம் ஆண்டு ஒன்றிற்கு
70 பில்லியன்
ஈரோக்கள் இப்பொழுது இருக்கும் கடன்களுக்கு வட்டி கொடுப்பதற்காக கொடுக்க வேண்டும்,
இல்லாவிடின் திவால்
என்று அறிவிக்கப்பட்டுவிடும்.
கிரேக்கத்தின்
திருப்பிக் கொடுக்கும் திறனைப் பற்றி
IMF பெரும் கவலை
கொண்ட நிலையில் ஸ்ட்ராஸ் கான் திருப்பிக் கொடுக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட
வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
யூரோப் பகுதியின்
நிதி மந்திரிகள் நவம்பர்
28ம் தேதி
EU-IMF ஆகியவற்றின்
கிரேக்கக் கடன் திருப்பிக் கொடுக்கப்படும் காலங்களை நீட்டிக்க ஒப்புக் கொண்டனர்.
ஐரோப்பிய
பாராளுமன்றத்தின் ஒப்புதலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் பெறவேண்டியிருந்த உடன்பாடு
இப்பொழுது 2024
க்குள் கிரேக்கம்
இக்கடன்களை கொடுத்தால் போதும் என்று விதித்துள்ளது.
எப்படியிருந்தபோதும்,
கிரேக்கம் இந்த
நீட்டிப்பை ஏற்பதற்கு,
மிகக் கடுமையான
விதிகளை ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது.
தற்பொழுது
EU மற்றும்
IMF இடமிருந்து
கிரேக்கம் கிட்டத்தட்ட
4 சதவிகித ஏற்ற
இறக்கம் உடைய வட்டிவிகிதத்தில் கடன் வாங்குகிறது. நிலையான விகிதமோ
5.5 ஆகவுள்ளது.
புதிய
நிபந்தனைகளின்படி நிலையான விகிதம்
5.8 என்று
உயர்த்தப்படும்.
அதே
நேரத்தில் கிரேக்கம் அதன் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஐரோப்பிய ஒன்றியம்
நிர்ணயித்துள்ள வரம்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
3 சதவிகிதத்திற்கு
அதிகமாகாமலும்
2013க்குள் கொண்டுவர
வேண்டும்.
இந்த வரவிருக்கும்
“நிதிய நேரக் குண்டு”
பற்றிக்
கருத்துக்கூறி,
2013க்குள்
“தேவையான தொடக்கநிலை
உபரிகளை”
அடையும் பொருட்டு,
நிதி மந்திரி ஜோர்ஜ்
பாப்பாகான்ஸ்டான்டிநௌ,
“கடன் உடன்பாடு
காலாவதியானவுடன்,
ஐரோப்பாவில் மிகப்
பெரிய பொதுக் கடனைக் கொண்டுள்ள நாடு என்ற நிலை
“முடிந்துவிட்டது”
என்று சொல்லுவதற்கான
ஆடம்பர வாய்ப்பு இருக்காது”
என்று எச்சரித்தார்.
தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால்
தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தங்கள் தனித்தனியே,
ஆங்காங்கு நடக்கும்
நிகழ்வுகளாக,
முற்றிலும்
தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றன.
PASOK உடன் அரசியல்
ரீதியாக பிணைந்துள்ள நிலையில்,
தொழிற்சங்கங்கள்
பாப்பாண்ட்ருவின் அரசாங்கத்தை வீழ்த்தும் எந்த முயற்சியையும் எதிர்க்கின்றன.
நவம்பர்
30ம் திகதி
செய்தியாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒன்றை ஊதிய வெட்டுக்கள்,
பணிநீக்கங்கள்
ஆகியவற்றிற்கு எதிராக நடத்தினர்.
கடந்த வாரம் பொதுப்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து ஏதென்ஸ் முழுவதும் போக்குவரத்தை
ஸ்தம்பிக்க வைத்தனர்.
இந்த வாரம் கழிவுப்
பொருட்கள் பிரிவுத் தொழிலாளர்கள்,
விமானக்
கட்டுப்பாட்டாளர்கள்,
வங்கி ஊழியர்கள்,
அரச தொலைக்காட்சி
ஊழியர்கள் மற்றும் இரயில் தொழிலாளர்கள் தனித்தனிப் மோதல்களில் வேலைநிறுத்தம்
செய்யவுள்ளனர்.
இதை
எதிர்கொள்ளும் வகையில்,
PASOK ஆட்சி பெருகிய
முறையில் சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
மே மாதம் கடல்
பிரிவுத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம்
“சட்டவிரோதமானது,
தவறானது”
என்ற நீதிமன்ற
தீர்ப்பை பெற்றது.
மோதல் காலம்
முழுவதும் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு எதிராக கலகத்தை அடக்கும் பொலிஸ் பிரிவு
பயன்படுத்தப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் ஒரு
நாடு தழுவிய பாரவாகன சாரதிகளின் வேலைநிறுத்தம் அரசாங்கத்தினால் கட்டாயமாக
நிறுத்தப்பட்டது. இராணுவத்தில் இருந்த சாரதிகளை அரசாங்கம் ஈடுபடுத்தினர்.
அக்டோபர் மாதம்
கலகத்தை அடக்கும் பொலிஸ் பிரிவு தடிகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும்
பயன்படுத்தி அக்ரோபொலிசில் பண்பாட்டு அமைச்சரக ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த
முயற்சியைத் தாக்கினர்.
சமீபத்திய
பொது வேலைநிறுத்தம்,
கிரேக்க அரசாங்கம்
மீண்டும் மற்றொரு வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் நடவடிக்கையைப் பயன்படுத்தவுள்ள
நிலையில் வருகிறது.
நவம்பர்
23ம் திகதி பான்-ஹெலனிக்
கடல் பிரிவு கூட்டமைப்பு
(PNO) ஒரு
வேலைநிறுத்தத்தை கூட்டுப் பேர உடன்பாட்டிற்காக,
ஊதியங்கள்,
ஓய்வூதிய
உத்தரவாதங்கள்,
வேலைக்குறைப்புக்களுக்கான நிறுத்தம் ஆகியவற்றிற்காக மேற்கொண்டிருந்தனர்.
நவம்பர்
30ம் திகதி
வேலைநிறுத்தம் உணவு மற்றும் பிற உடனடிப் பொருட்கள் விநியோகத்தைப் பாதிக்கத்
தொடங்கியவுடன் அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிராக சிவில் அணிதிரள்வு உத்தரவைச்
சுமத்தி
அவர்களை கட்டாயமாக இராணுவப் படைகளில் சேர்த்து,
இராணுவக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
உடனே
PNO
வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு,
48 மணி நேரம்
கழித்து அது மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தத்தையும் கைவிட்டது.
அராசங்கத்திற்கு
எதிராகப் போராட்டம் எதையும் மேற்கொள்ள மறுத்த
PNO, “தன்
ஆட்சியில் இரண்டாம் முறையாக அரசாங்கம்,
தீர்வுகளைக் காண
முடியாத நிலையில்,
அதன் பிடித்த
செயற்பாட்டைக் கையாள்கிறது”
என்று
குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம்
ஒன்றும்
“தீர்வுகளைக் காண
இயலாத தன்மையில்”
இல்லை.
PASOK மிகத் தெளிவான
உறுதியான தீர்வை நெருக்கடிக்குக் கொண்டுள்ளது. இது தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய
சிக்கன நடவடிக்கை என்று சர்வாதிகார வழிவகைகள் மூலம் சுமத்தி அதை விலைகொடுக்க
வைப்பதுதான்.
தொழிற்சங்கங்கள் சிக்கன நடவடிக்கை திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளன.
இம்மாதம் முன்னதாக
GSEE, Sev எனப்படும்
ஹெலனிக் தொழில் முயல்வோர் கூட்டமைப்பின் தலைமைக் குழுவுடன் இரகசியப் பேச்சுக்களை
நடத்தியது என்பது வெளிவந்துள்ளது.
Sev உடைய தலைவர்
Dimitris Daskalopoulos, GSEE
யின் முக்கிய அதிகாரிகள்,
தலைவர் யியன்னிஸ்
பானாகோபௌலலோஸ் உட்பட,
விவாதங்களில்
தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஏதென்ஸ் நியூஸ்
உடைய வலைத் தளம்,
“சமூகப்
பங்காளிகளுடன் உடன்பாடு காண்பதற்கான விவாதங்கள் நடைபெற்றன. இவை கூட்டுப் பணி
ஒப்பந்தத்தில் வளைந்து கொடுக்கும் தன்மை,
சரியான தன்மை
ஆகியவற்றை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தும்”
என்று கூறியுள்ளது.
சில
நாட்களுக்குப் பின்னர் மந்திரிசபை புதிய சிக்கனப் பொதியை அறிவித்தது.
IMF
ன் ஸ்ட்ராஸ் கானுடைய
வருகையின்போது பெரிதும் வெறுப்பிற்குட்பட்ட சிக்கன நடவடிக்கைகளைப் பற்றி அவர்
கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்:
“நான் ஒரு
கிரேக்கனாக இருந்தால்,
நானும் தெருவிற்கு
வந்து போராடியிருப்பேன்.”
மேலும்
காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் பெரும் எதிர்ப்பை ஐயத்திற்கு இடமின்றித்
தூண்டிவிடும் என்பதை ஸ்ட்ராஸ் கான் பிரதிநிதித்துவப்படுத்தும் நிதிய உயரடுக்கு
நன்கு அறியும்.
அது
தொழிற்சங்கங்களைத்தான் எதிர்ப்புக்களைச் சிதறடிக்க நம்பியுள்ளது. அதையொட்டித்தான்
பெருவணிகம் மற்றும் உலக நிதியச் சந்தைகளின் கோரிக்கைகள் சுமத்தப்பட முடியும்.
பாசிசக் குழு
ஆட்சியை நினைவுறுத்தும் சர்வாதிகார நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுகையில்
தொழிற்சங்கங்கள் அதன் ஆணைகளை ஏற்கத் தயாராக உள்ளன. |