World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US and Israel use sabotage and assassinations to thwart Irans nuclear program

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தகர்க்க அமெரிக்காவும் இஸ்ரேலும் நாசவேலை மற்றும் படுகொலைகளை பயன்படுத்துகின்றன

By Keith Jones
14 December 2010
Back to screen version

தெஹ்ரானுக்கும் P5 + 1 (.நா.பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம்) நாடுகளுக்கும் இடையேயான கடந்த வாரப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கிய அணுசக்தி விஞ்ஞானி சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதை ஈரானிய பிரதிநிதி கண்டித்த வகையில் தொடங்கியதுநாட்டின் அணுசக்தித் திட்டத்தை இலக்கு வைக்கும் இரகசிய நடவடிக்கையின் பரந்த தன்மையில் ஒரு பிரிவுதான் அது.

இன்றைக்கு ஒருவாரத்திற்கு முன்பு, பயங்கரவாதிகள் இரு ஈரானிய விஞ்ஞானிகள் மீது இலக்கு வைத்தனர். ஒருவர் தியாகியாகிவிட்டார்என்று ஈரானின் தலைமைத் தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரும் ஜெனிவா பேச்சுக்களில் அதன் முக்கிய பேச்சுவார்த்தையாளருமான Saeed Jalill குறிப்பிட்டார் என்று கூறப்படுகிறது.

ஈரானின் ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜட் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் முன்னாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இன்னும் மற்றய மேலை சக்திகள் கலாநிதி மஸ்ஜிட் ஷஹ்ரியாரியின் படுகொலைக்கு ஒருங்கிணைந்து செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். “இத்தீயவர்கள் தங்கள் இழிந்த தன்மையைக் காட்ட விரும்பினர். இது அவர்களுடைய காரட்டும் தடியும் என்ற கொள்கைய அணுசக்திப் பேச்சுக்களுக்கு முன்னால் காட்டப்படுவதை நிரூபிக்கிறதுஎன்றார் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் தலைவரான அலி அக்பர் சலேஹி.

நவம்பர் 27 காலையில் ஷஹ்ரியாரி தன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார். பெரும் நுட்பமாக செய்யப்பட்ட இந்த நடவடிக்கையில், மோட்டார் சைக்கிளில் ஏறிவந்த தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு காந்தக் குண்டை ஷஹ்ரியாரியின் காரில் பொருத்தி, அதை விரைவில் வெடிக்குமாறு செய்தனர்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரண்டாவது ஒரு ஈரானிய விஞ்ஞானி பெரிய்டூன் அப்பாசி, இதேபோன்ற விதத்தில் படுகொலைக்கு உட்பட இருந்ததை குறுகிய நேரத்தில் தவிர்த்தார். தன்னுடைய காரில் ஏதோ வைக்கப்பட்டுள்ளது என்று அறிந்த அப்பாசி, ஓட்டுனர் இடத்திலிருந்து வெளியேறி காரில் இருந்த தன்னுடைய மனைவியையும் வெளியேற்ற முற்பட்டபோது, காந்த வெடிகுண்டு வெடித்தது. தம்பதிகள் சிறு காயங்களுடன் தப்பினர்.

தெஹ்ரானிலுள்ள ஷஹித் பெஹிஷ்டி பல்கலைக்கழகத்தில் அணுசக்திப் பொறியியல் துறையில் உறுப்பினராக இருக்கும் ஷஹ்ரியாரி AEOI  எனப்படும் ஈரானிய அணுசக்தி அமைப்பின் தலைவரான சலேஹியுடன் பல அறிக்கைகளையும் இதழ்களிலும் கூட்டாக எழுதினார். படுகொலைக்குப் பின், ஷஹ்ரியாரி AEOI திட்டங்கள் பெரியவற்றுள் ஒன்றிற்குபொறுப்புக் கொண்டிருந்தார் என சலேஹி கூறியதாக மேற்கோளிடப்பட்டுள்ளது. மான்செஸ்டர் கார்டியன்  கருத்துப்படி, “ஷஹ்ரியாரி தடை செய்யப்பட்டுள்ள அணுப் பணியுடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரியவில்லை, ஆனால் அவருடைய துறையில் அவர் பெரிதும் மதிக்கப்பட்டிருந்தார்.” அதாவது அணுசக்தி பற்றிய  சங்கிலித் தொடரின் ஆற்றல்கள் பற்றிய கோட்பாடுகளில்.

அப்பாசியும் ஷாஹித் பெஹிஷ்டி பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார். நவம்பர் 29 திகதி அவர் உயிரைக் கொல்ல நடந்த முயற்சிக்குப் பின் அப்பாசி பகிரங்கமாக அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களில் தொடர்புடையவர்என்று ஈரானை இலக்கு கொண்டிருந்த 2007 .நா.பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தில் குறிக்கப்பட்டவர் என்பதை விரைந்து அறிந்து கொண்டனர்.

ஈரானிய தூதுக்குழு P5+1 க்கு அனுப்பிய நவம்பர் 29 ஒருங்கிணைந்த தாக்குதலைக் கண்டித்து அனுப்பிய அறிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புப் பிரதிநிதி கத்தரின் ஆஷ்டன் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் எல்லா பிரதிநிதிகள் சார்பிலும் ஒரு முறையான அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த வாரப் பேச்சுக்களில் பங்கு பெற்ற அனைவரும் அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் மேலை நட்பு நாடுகள் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக நாசவேலை நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டுள்ளனர் என்று நன்கு அறிவர். பிரிட்டனின் M16 உடைய தலைவர் கடந்த அக்டோபர் கடைசியில் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிரான உளவுத்துறை வழிநடத்தும் நடவடிக்கைகள்முடுக்கிவிடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பிரிட்டனின் வெளிநாடுகள் பற்றிய உளவு அமைப்பின் முதலாவது பொது உரை என்று கூறப்படும் பேச்சில் சாயர் அத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில், “ஈரான் அணுவாயுதத் தொழில்நுட்பத்தைப் பெறுவதை தடுப்பதில் சர்வதேச முயற்சிகள் தாமதப்படுத்தினால், நாம் அரசியல் அளவில் ஒரு தீர்மானம் காண்பதற்கு நேரத்தைப் பெறுவோம்என்று கூறினார்.

ஷஹ்ரியாரியும் அப்பாஸும் ஒன்றும் முதன் முதலாக படுகொலைக்கு இலக்கு வைக்கப்பட்ட ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் அல்ல. கடந்த ஜனவரி மாதம், அணுசக்தி இயற்பியலாளர் கலாநிதி மசூத் அலி மகம்மதி டெஹ்ரான் தெருவில் குண்டுவீச்சால் கொல்லப்பட்டார். 2007ல் மற்றொரு அணுசக்தி விஞ்ஞானி ஆர்தேஷிர் ஹொசின்பௌர் எரிவாயு நச்சுவினால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது ஒரு மூலோபாய உளவுத்துறை ஆராய்ச்சி நிறுவனமான Stratfor, அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டது, ஹொசின்பௌரின் இறப்பு ஒரு இஸ்ரேலிய நடவடிக்கையின் முத்திரைகள் அனைத்தையும் கொண்டிருந்தது என்று கூறியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் மாயமாகக் காணாமற் போய்விட்ட தன் விஞ்ஞானிகள் பலரைக் கடத்தியதாகவும் டெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது. டெஹ்ரான் ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் காணாமற் போன விஞ்ஞானிகள் தாங்களாகவே ஓடியிருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர்.

இத்தகைய நாசவேலை நடவடிக்கை, அமெரிக்கத் தலைமையில் .நா. மற்றும் மேலை நாடுகள் ஈரானின் எரிசக்தித் துறையில் அதற்கு மிகவும் தேவைப்படும் முதலீட்டைப் பெறும் வாய்ப்பைப் பெறாமல் இருக்கவும், அதன் வங்கி முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், இராணுவ அழுத்தத்தை அதிகப்படுத்தவும் இலக்கு கொண்டுள்ளது. பேர்சிய வளைகுடா-அரேபியக் கடல் பகுதியிலும் ஈரானின் எல்லையிலுள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா மாபெரும் இராணுவ நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன்அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமுறை ஈரானின் அணுசக்தி விழைவுகளைத் தகர்க்கும் விதத்தில் போர் தொடங்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளன.

தெஹ்ரானில் நடைபெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதல்களுக்கு மூன்று நாட்கள் முன்பு, அமெரிக்கப் படைகளின் கூட்டுத் தளபதி அட்மைரல் மைக் முல்லென் ஈரான் இராணுவ ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தை உடைய திட்டங்களை பென்டகன் கொண்டிருப்பதாகவும், தெஹ்ரானுடனான போருக்காக கணிசமான காலத்தயாரிப்புக்கள் நடைபெற்றுள்ளன என்றும் கூறினார்.

பிரிட்டனின் பாதுகாப்பு மந்திரி லியம் பாக்ஸ், கடந்த வாரம்  ஜெனீவாவில் இரு நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு முன் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்ற தன்னுடைய அச்சுறுத்தலை வெளியிட்டார். “நாம் ஒரு பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வைக் காண விரும்புகிறோம், இராணுவரீதியாக அல்லஎன்று பாக்ஸ் அறிவித்தார். “ஆனால் அந்த விளைவைக் கொண்டுவர ஈரான் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாம் இதைப் பொருட்படுத்தாமலும் இருக்க மாட்டோம், இதில் பின் வாங்கவும் மாட்டோம்.”

நவம்பர் 29 தாக்குதல்கள் மொசட் என்று அறியப்படும் இஸ்ரேலின் உளவுத்துறை, சிறப்பு நடவடிக்கைள் பிரிவினால்  தயாரிக்கப்படுவதாக லண்டனிலிருந்து டெலிகிராப் அப்பட்டமாக உறுதியான தகவலைக் கொடுத்துள்ளது.

டிசம்பர் 5ம் திகதி டெலிகிராப் மொசாட் தலைமையகத்தில் இருந்த ஊழியர்கள் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றிய செய்தியைக் குதூகலமாகக் கொண்டாடி, அதை தலைவரின் கடைசித் தாக்குதல்என்று குறிப்பிட்டனர்இது நவம்பர் 29ம் திகதி மொசட்டின் தலைமைப்  பதவியில் மேர் டாகனின் கடைசி நாளைக் குறிப்பிடுவது ஆகும்.

இஸ்ரேலிய நாட்டிற்கு எதிரிகள் என்று கருதப்படுபவர்களை விசாரணையின்றி கொல்வதில் மொசட் இழிந்த பெயரைக் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு படுகொலை கடந்த பெப்ருவரி மாதம் டுபாயில் நடைபெற்றதுஹமாசின் உயர்மட்டத் தளபதி மஹ்மூத் அல்-மஹ்பௌ கொலை செய்யப்பட்டது பெரும் இராஜதந்திர பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் மொசட்டின் கொலைப் பிரிவுப் படை நன்கு அறியக்கூடிய சான்றுகளை, ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுக்கு வந்து செல்லக்கூடிய போலி பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்களை சம்பவ இடத்தில் விட்டிருந்தது.

ஆனால் தனித்துச் செயல்பட்டோ, மொசட்டுடன் அல்லது பிற உளவுத்துறை அமைப்புக்களுடனை இணைந்தோ, வாஷிங்டனே படுகொலை முயற்சியை ஏற்பாடு செய்யும் திறனையும் கொண்டது.

பாரக் ஒபாமாவின் கீழ், வாஷிங்டன் பாக்கிஸ்தானில் அல் கெய்டா, தாலிபன் மற்றும் தாலிபனுடன் உடன்பாடு கொண்டுள்ள தலைவர்களுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல்களை விரிவாக்கியுள்ளதுடன், ஜனாதிபதி பயங்கரவாதிகள் என முத்திரையிடப்பட்டவர்கள் எந்த நீதித்துறை வழிவகையும் இன்றி அமெரிக்கக் குடிமக்களையும் கொலைசெய்யும் உரிமையையும் உறுதிபடுத்தியுள்ளது.

நவம்பர் 29ம் தேதி நிகழ்வுகளை பற்றிய தன் செய்தித் தகவலில் நியூ யோர்க் டைம்ஸ் அமெரிக்கத் தேசிய பாதுகாப்புப் பிரிவு இரட்டைக்  குண்டுத் தாக்குதல்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாக அடையாளம் காட்டியுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை நாசப்படுத்த இரகசிய வழிவகைகளை பயன்படுத்துகின்றன என்று பரந்த அளவில் நம்பப்படுகின்றனஎன்று ஒப்புக் கொண்ட பின்னர், செய்தித்தாள் ஒரு பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நபர்கள் மோசமானவர்கள், அவர்கள் செய்யும் பணி ஒரு குண்டைத் தயாரிப்பதற்கான துல்லியமான வேலைதான்என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது.

ஒரு சில நாட்களுக்கு முன்புதான்  டைம்ஸ்  சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் அறிக்கை பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆய்வாளர்கள் ஈரான் தற்காலிகமாக பல ஆயிரக்கணக்கான சென்ட்ரிப்யூஜ்களை (centrifuges) அதன் முக்கிய யுரேனிய அடர்த்தி ஆலையில் செயல்பாடுகளுக்காக இருந்ததை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இப்படி நிறுத்தி வைத்திருப்பது நாசவேலையின் விளைவாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர். “அமெரிக்க அதிகாரிகள் ஒபாமா நிர்வாகம் ஒரு பரந்த இரகசியத் திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது என்றும் அத்திட்டம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புஷ் திட்டத்தின் தொடர்ச்சியாகும்என்றும்  டைம்ஸ்  கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் பெயரிடப்படாத அமெரிக்க உளவுத்துறைச் செயலர்கள் அமெரிக்கத் தலைமையிலான இரகசிய நடவடிக்கைகள் ஈரானின் அணுத் திட்டங்களில் தாமதங்களையும் தடைகளையும் ஏற்படுத்துவதாகப் பெருமையாகக் கூறினர் என்று டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இரண்டும் தெரிவித்தன.

சமீபத்திய வாரங்களில் ஈரானின் அணுசக்தித் திட்டம் ஒரு கணனிப் புழுவால் தடைக்கு உட்பட்டது என்று பல தகவல்கள் வெளிவந்தன. கணனிகளின் நுட்பத்துவம் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு உளவுத்துறை அமைப்புகளால்தான் செய்யப்பட்டிருக்க முடியும் என்பதை உறுதியாக்கியது.

Stuxnet புழு என்பது இரு போர் முனைகளைக் கொண்டதுமுதலாவது திருட்டுத்தனமாக ஈரானில் யுரேனிய அடர்த்தி மையம் நடன்ஸில் இருக்கும் சென்ட்ரிப்யூஜஸின் மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இரண்டாவது இலக்கு ரஷ்யா கட்டமைத்த, விரைவில் புஷிஹெரில் முழுச் செயல்பாட்டில் ஈடுபடவுள்ள அணுசக்தி மின் நிலையத்தின் டர்பனைக் (turbine) கட்டுப்படுத்தும் இலக்கைக் கொண்டது.

நவம்பர் 23ம் திகதி AEOI தலைவர் சலேஹி ஈரானியச் செய்தி நிறுவனமொன்றிடம் நாட்டின் அணுசக்தித் திட்டம் கடந்த ஓராண்டாக சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது என்றார். அப்படியிருந்தும் நாட்டின் இளம் வல்லுனர்கள் கணனித் தொற்றை விரோதிகள் அவை ஊடுருவ வேண்டும் என்ற இடத்தில் சரியாக நிறுத்திவிட்டனர்என்றும் அவர் கூறினார்.

நவம்பர் 29 குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய ஜனாதிபதி அஹ்மதிநெஜட் நாசவேலைக்காரர்கள் நம்முடைய சென்ட்ரிப்யூஜ்களில் குறைந்த எண்ணிக்கையில் சில பிரச்சினைகளை உருவாக்குவதில் வெற்றி அடைந்துள்ளனர். இதற்கு அவர்கள் மின்னஞ்சல் பகுதியில் பயன்படுத்திய மென்பொருட்கள்தான் காரணம். அவர்கள் மோசமானதைச் செய்தனர் ஆனால் அதிருஷ்டவசமாக நம் வல்லுனர்கள் அதைக் கண்டுபிடித்து இன்று அவர்கள் சென்ட்ரிப்யூஜ்கள் தவறாகச் செயற்படாமல் செய்ய முடிந்துவிட்டதுஎன்றார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் பிரச்சாரம் முற்றிலும் பாசாங்குத்தனமானது, பிற்போக்குத்தனமானது. மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு ஆபத்தைத்தான் கொடுக்கக் கூடியது.

ஈரானை வாஷிங்டன் ஒரு பயங்ரவாதத்தை ஆதரிக்கும் அரசு”, ஹமாஸுக்கும் ஹெஸ்புல்லாவிற்கும் ஆதரவைக் கொடுப்பது என்று கண்டித்தாலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கவாதத்திற்கு விடையிறுக்கும் வகையில் தோன்றிய முதலாளித்துவ தேசியவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது என்று கூறினாலும், அமெரிக்காவும்தான் அரச பயங்கரவாதத்தைச் செயல்படுத்துகிறது. அமெரிக்க அரசாங்கம் படுகொலைகள், குண்டுவீச்சுக்கள், நாசவேலைத் திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதுடன், உலகத்தில் எப்பகுதியிலும் தான் அதைச் செய்யும் உரிமையையும் கொண்டாடுகிறது. இதற்கிடையில் பெருநிறுவனச் செய்தி ஊடகம், இத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருப்பது, இந்தத் தகவல்களை வெளியிட்டு குற்றம் செய்பவர்களை மன்னித்து இலக்குகளை அரக்கத்தனமாகச் சித்திரிக்கிறது.

கடந்த வாரம் இரு கட்சி அமெரிக்கச் செனட்டர்களும், ஜோன் மக்கையின், ஜோசப் லைபர்மன், ஜோன் கைல், போப் கேசி ஜூனியர் மற்றும் கிர்ஸ்டின் கில்லிப்ராண்ட் உட்பட, ஒபாமாவிற்கு ஒரு கடிதம் அனுப்பி அவரை ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் நிர்வாகம் தொடர்ச்சியாக எடுத்துள்ளது பற்றிப் பாராட்டினர். இக்கடிதம் பின்னர் அவர் ஈரான் முழுச் சுழற்சியுடைய சிவிலிய அணுசக்தித் திட்டத்தைப் பெறும் உரிமைகளை மறுக்குமாறு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளதுஅணுபரவா உடன்பாட்டின்படி மற்ற கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு அத்தகைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஈரானுடனான உறவுகளில், மற்ற பகுதிகளில் இருப்பதைப் போலவே, ஒபாமா நிர்வாகம் புஷ் நிர்வாகத்தின் பிற்போக்குத்தன கொள்கைகளை தொடர்வது மட்டும் இல்லை, அவற்றைத் தீவிரப்படுத்தியுமுள்ளது.