சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama joins attack on WikiLeaks

விக்கிலீக்ஸ் மீதான தாக்குதலில் ஒபாமாவும் இணைகிறார்

By Joseph Kishore
13 December 2010

Use this version to print | Send feedback

விக்கிலீக்ஸிற்கும், அதன் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேவிற்கும் எதிராக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் வெறித்தனமான பிரச்சாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் வாரயிறுதியில் அவரின் சொந்த கருத்துக்களைக் கொணர்ந்து சேர்த்தார். உலகின் பல்வேறு பாகங்களில் நடந்த வாஷிங்டனின் கீழ்தரமான சூழ்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்ட உதவிய விக்கிலீக்ஸின் நடவடிக்கைகளை, ஒபாமா "வருந்ததக்க ஒன்றாக" குறிப்பிட்டார்.     

வெள்ளை மாளிகை செய்தியின்படி, துருக்கிய பிரதம மந்திரி ரெசிப் தாயெப்பை அழைத்து, விக்கிலீக்ஸின் "வருந்தத்தக்க நடவடிக்கைக்காக ஜனாதிபதி அவருடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார்.” வெளியான கசிவுகள்—துருக்கி தலைநகர் அன்காராவிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பட்ட ஆயிரக்கணக்கான கசிவுகள் உட்பட, இவை—"அமெரிக்காவிற்கும், துருக்கிக்கும் இடையில் நிலவும் நெருங்கிய உறவுகளைப் பாதிக்கவோ அல்லது இடைஞ்சல் ஏற்படுத்தவோ செய்யாது" என்பதில் இரண்டு தலைவர்களும் உடன்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.    

மெக்சிக்கன் ஜனாதிபதி பிலிப் கால்டிரனை அழைத்து பேசிய போதும், ஒபாமா இதேபோன்ற குறிப்புகளை அளித்தார்.

இந்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் இருந்து வந்திருக்கும் நேரடியான முதல் கருத்துரைகளாக இருந்தன. விக்கிலீக்ஸைத் தாக்குவதிலும், வழக்கிற்கு அச்சுறுத்துவதிலும் வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளின்டனையும், தலைமை நீதிபதி எரிக் ஹோல்டரையும் ஒபாமா தலைமேயேற்க செய்திருந்தார். கசிவுகளை வெளியிட்டமைக்காக அசாங்கேயையும், விக்கிலீக்ஸையும் ஏதேனும் ஒருவகையில் குற்றஞ்சாட்ட அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கடந்த வாரம் ஹோல்டர் தெரிவித்தார். தங்களின் வாதிக்கு (அசாங்கேவிற்கு) எதிராக உடனடியாக ஓர் அமெரிக்க குற்றப்பத்திரிக்கை கொண்டு வரப்படலாம் என்று அசாங்கேயின் வழக்கறிஞர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.   

விக்கிலீக்ஸிற்கு கண்டனம் தெரிவித்த போது, அசாங்கேவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதன் மீதோ, அல்லது விக்கிலீக்ஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்த வேண்டும் என்பதன் மீதோ, அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் சில பிரிவுகளால் எழுப்பப்பட்டு வரும் தொடர்ச்சியான முறையீடுகள் குறித்து ஒபாமா ஒன்றும் கூறவில்லை— இதன்மூலம், படுகொலை செய்யப்படுவதை மௌனமாக அங்கீகரிக்கிறார்.

சர்வதேசரீதியில் ஒருங்கிணைந்த அரசியல் இடர்பாடுகள் மற்றும் அடிப்படை அரசியல் அமைப்புமுறை உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றின் முன்பாக, அமெரிக்க ஊடகங்கள் அவற்றின் பங்கிற்கு, ஏறத்தாழ முற்றிலும் மௌனமாக இருந்து வருகின்றன. அனைத்து கசிவுகளையும் முதலிலேயே பெற்ற செய்தி நிறுவனங்களில் ஒன்றான New York Times, விக்கிலீக்ஸிற்கு அளிக்கப்படும் இடர்பாடுகள் குறித்து ஒரு தலையங்கம் கூட எழுதவில்லை; மேலும் கசிவுகள் மீது எழுதப்பட்ட கட்டுரைகளையும் பெரும்பாலும் பதிப்பிக்காமல் நிறுத்தியிருந்தது.

பிரிட்டனில் அசாங்கே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து—ஸ்வீடனால் இட்டுக்கட்டப்பட்ட தகாத பாலியல் நடத்தை குறித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்—அமெரிக்காவிடம் அவரை ஒப்படைக்கச் செய்வதற்கான ஒரு முயற்சி தொடரக்கூடிய, உண்மையான ஆபத்து நிலவுகிறது. கடந்த வாரம் வெளியான ஊடக செய்திகளின்படி, அமெரிக்காவும், ஸ்வீடனும் இதை எவ்வாறு செய்வது என்பதன் மீது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. (பார்க்கவும், “விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாங்கேக்கு எதிராகப் பழிவாங்கும் படலத்தை ஒபாமா நிர்வாகம் முடுக்கி விடுகிறது")

அவருடைய கைது நடவடிக்கைக்கு முன்னர் பெறப்பட்ட நேர்காணல்களுடன், ஞாயிறன்று ஸ்வீடன் அரசு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட ஓர் ஆவணப்படத்தில், அசாங்கே அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தார். விக்கிலீக்ஸ் வெளியீடுகளுக்காக அமெரிக்க அதிகாரிகளால் கொண்டு வரப்படும் வழக்கை முகங்கொடுக்க எச்சரிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்தார்

அவர் கூறியதாவது: “பிரசுரிப்புகளுக்காக பெண்டகனுடன் ஓர் அசாதாரண போராட்டத்தில் ஈடுபட்ட, ஒரு புகலிடம் தேடி வந்த பதிப்பாளராக நான் ஸ்வீடனுக்கு வந்தேன். ஆனால் அங்கே உளவுவேலையில் ஈடுபட்டமைக்கான வழக்கில் என்னை சிக்க வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. ஸ்வீடன் நீதி அமைப்புமுறை இந்தளவிற்கு மோசமடைந்திருப்பதைக் கண்டு நான் ஏமாற்றமடைந்தேன்; அதற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்

அசாங்கே தற்போது இலண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார். இணையம், தொலைபேசி மற்றும் ஏன் அவருடைய வழக்கறிஞர்களைச் சந்திப்பதில் கூட அவருக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அசாங்கேயை இந்த நிலைமைகளில் வைத்திருப்பதற்கான முடிவும், பிணை அளிக்க மறுக்கப்பட்டதும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் நிலவும் மிக அசாதாரணமான போலித்தனத்தை எடுத்துக்காட்டுகின்றன

அசாங்கேயின் வழக்கறிஞர் பிஜோர்ன் ஹர்டிங் வாரயிறுதியில் இலண்டனின் Daily Mail இதழிடம், அசாங்கேவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று கூறுகையில், “அந்த பெண்கள் [அசாங்கேயிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்திருந்தவர்கள்] பொய் கூறுகிறார்கள் என்பது தெளிவாக உள்ளது. மேலும் அவர்கள் ஒரு நோக்கத்தோடு தான் பொலிஸிடம் சென்றிருக்கிறார்கள். அது, நடந்ததாக கூறப்படும் ஒரு குற்றத்துடன் சிறிது கூட சம்பந்தப்பட்டதல்ல.” 

ஹர்டிங் தொடர்ந்து கூறுகையில், “எனக்கு என்ன தெரிந்ததோ, அதை என்னால் வெளியிட முடியும் என்றால், இவை அனைத்தும் ஒரு கேலிக்குரிய பொய்கள் என்பதை அனைவரும் உணர்வார்கள். பிரிட்டிஷ் நீதிமன்றங்களிடம் என்னால் எடுத்துக்கூற முடியுமானால், வெளிநாட்டிடம் ஒப்படைப்பது குறித்து அதுவொரு விவாதப்புள்ளியை உருவாக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன். ஆனால் இப்போது நான் ஸ்வீடன் சட்ட அமைப்புமுறையின் விதிகளால் கட்டுண்டுள்ளேன். அது, அந்த தகவல் இந்நாட்டில் [ஸ்வீடனில்] ஆதாரமாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறுகிறது. நான் வேறு வழியில் ஏதாவது செய்வதென்பது, என்னை அந்த வழக்கிலிருந்து வெளியேற்றும் நிலைமைக்குத் தான் இட்டுச் செல்லும்,” என்றார்.  

தொடக்கத்தில், குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்று இருப்பதாக கூறி ஒட்டுமொத்தமாக அந்த வழக்கு ஸ்வீடன் வழக்கறிஞர்களால் கைவிடப்பட்டது. ஆனால் பின்னர்—ஒருவேளை வாஷிங்டனின் அழுத்தத்தின்கீழ்—அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாரயிறுதி வாக்கில், விக்கிலீக்ஸ் மற்றும் அசாங்கேயின் வழக்கிற்கு எதிராக ஸ்பெயினிலும், ஏனைய நாடுகளிலும், விக்கிலீக்ஸிற்கு ஆதரவான ஒரு ஸ்பானிய குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் நடந்த பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் குழுமினர். ஐரோப்பாவின் ஏனைய நகரங்களிலும் ஆர்பாட்டங்கள் காணப்பட்டன, இதில் டஜன்கணக்கானவர்களில் இருந்து பல நூறுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

வெள்ளியன்று, ஆஸ்திரேலியாவில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.