WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் குடிமக்கள்
மீது மற்றொரு படுகொலைத் தாக்குதல்
By
James Cogan
13 December 2010
Use
this version to print | Send
feedback
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டியா மாகாணத்திலுள்ள ரோஹணி பாபா கிராமத்தில்
சனிக்கிழமையன்று சிறப்புப் படைப் பிரிவினர் அதிகாலை நடத்திய சோதனையில் ஏழு பேரைச்
சுட்டுக் கொன்றனர்.
பாக்டியாவின் துணை
கவர்னரான அப்துல் ரஹ்மான் மங்கள்
CNN இடம்
பலியானவர்கள் சாலைக் கட்டமைப்புத் தொழிலாளர்கள் என்று கூறினார்.
அமெரிக்கத்
தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினர் (ISAF)
வெளியிட்ட செய்தி
அறிக்கை இந்நபர்கள் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் என்று
கூறியுள்ளது.
சம்பவத்தைப்
பற்றி அதிக விவரங்கள் அறியப்படவில்லை. ஆனால்
ISAF அறிக்கை தன்
துருப்புக்கள் ரோகணி பாபாவில் ஒரு வீட்டு வளாகத்தில்
“எழுச்சியாளர் என்று
சந்தேகிக்கப்பட்ட
“ஆயுத விற்பனையாளர்
நுழைந்தது பற்றி”
விசாரணை நடத்தி
அவரைக் காவலில் வைத்துள்ளதாகக் கூறுகிறது.
ஆயுதம் ஏந்தியவர்கள்
எனச் சந்தேகிக்கப்பட்ட
7 பேர் ஒரு
SUV ஐச் சுற்றி
உட்கார்ந்திருந்தனர்.
பஷ்டுன் மொழியில்
வளாகத்தை விட்டு நீங்குமாறு அவர்கள் உத்தரவிடப்பட்டபின்,
AK-47 ஏந்திய ஒரு
நபர் ஆக்கிரமிப்புத் துருப்புக்களை நோக்கி நடந்து வந்தார்.
அவர் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
அங்கிருந்த மற்ற
நபர்கள் திருப்பிச் சுட்டனர்,
இதையொட்டி நடந்த
துப்பாக்கிச் சண்டையில்
7 பேர்
கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் விரோதிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கைகளிலுள்ள சிறப்புப் படைப்
பிரிவினரின் கொலைகாரத் தன்மையைத்தான் இந்த இறப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நடவடிக்கைகளின்
அடித்தளத்திலுள்ள தத்துவம் முதலில் சுட்டுவிடுக,
பின்னர் வினாக்களை
எழுப்பவும் என்று உள்ளது.
செப்டம்பர்
மாதத்திலிருந்து
IASF தான்
368 எழுச்சித்
“தலைவர்களுக்கும்”
மேலாக கொன்றுவிட்டது
அல்லது சிறைபிடித்துவிட்டது என்று கூறுகிறது.
கடந்த மாதம்
அமெரிக்கத் தளபதிகள் ஒவ்வொரு
24 மணி நேரத்திலும்,
24 எழுச்சியாளர்கள்
கொல்லப்பட்டனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டனர் என்று தம்பட்டம் அடித்துள்ளனர்.
இவர்களுள் எத்தனை
பேர் “தாலிபன்கள்”,
ரோகணி பாபாவின்
7 பேரைப் போல்
எத்தனை பேர் தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்தவர்கள் என்பதை அறியமுடியாது.
ISAF
தான் கொலைகள் பற்றி
“விசாரணை நடத்தும்”
என்று கூறும்போது,
கொலைக் குழு என
மட்டுமே அழைக்கப்பட வேண்டியவர்கள் ஆப்கானிய மக்களை ஆக்கிரமிப்பிற்கு அடிபணிவதற்கு
அச்சுறுத்தலையும்,
மிரட்டலையும்தான்
நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது நன்கு புலனாகும்.
படுகொலை
பற்றிய செய்தி வெளிவந்தது பாகிடாவின் தலைநகரான கார்டெஸில் ஆர்ப்பாட்டத்தைத்
தூண்டியது.
நூற்றுக்கணக்கான
மக்கள் எரியும் டயர்களைக் கொண்டு ஆங்காங்கே தடுப்புக்களை ஏற்படுத்தி,
“அமெரிக்கா வீழ்க”
என்று
குரலெழுப்பியும்,
ஆப்கானிய-அரசாங்க
எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பியதோடு பாரக் ஒபாமாவின் உருவப் பொம்மையையும்
எரித்தனர்.
ஆப்கானிய
பொலிசாருக்கும் ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டுப்
பறிமாற்றங்கள் நடந்தன.
அல் ஜசிராவிடம் ஒரு
உள்ளூர் மருத்துவர் ஆறு குடிமக்களும் இரு பொலிசாரும் காயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
பாக்கிடா
சம்பவம் கடந்த
72 மணிநேரத்தில்
டஜன் கணக்கான ஆப்கானியக் குடிமக்கள் மற்றும் எழுச்சியாளர்கள் ஆகியோரின் உயிரைக்
குடித்த தொடர் அமெரிக்க துருப்பினர் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
பாக்கிஸ்தானிய எல்லையில் குனார் கிழக்கு மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் நடத்தி
வரும் நடவடிக்கைகளில்,
சனிக்கிழமையன்று
நடந்த வான்தாக்குதல் ஒன்றில் எழுச்சியாளர்கள் எனக்கூறப்பட்ட
25 பேர்
கொல்லப்பட்டனர்.
மற்ற
“தாலிபன்”களும்
மாகாணத்தின் மற்றொரு மாவட்டத்தில் அமெரிக்கத் துருப்புக்களால் ஒரு மோதலில்
கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஞாயிறன்று,
நாட்டின்
கிழக்கேயுள்ள வார்டக் மாகாணத்திலும் சிறப்புப் படைகள்
“தங்களை
அச்சுறுத்திய”
இரு நபர்களை கொன்றது,
படையினர் ஒரு
வளாகத்தை ஒரு தாலிபன் தளபதியைத் தேடுகையில் நுழைந்தபோது இது சம்பவித்தது.
இறந்தவர்களில்
ஒருவர் எழுச்சித் தலைவர் என்னும்
ISAF ன் கூற்றைத்
தவிர வேறு விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
வடக்கு
நகரமான குண்டுஸில்,
சனிக்கிழமையன்று ஒரு
ஆப்கானிய இராணுவச் சோதனைச் சாவடி அருகே வெடிமருந்துகள் ஏராளமாக இருந்த வாகனம் ஒன்று
தற்கொலைப் படை நபரால் இயக்கப்பட்டு வெடித்தது. தற்கொலைப்படை நபர் இறந்து போனார்,
ஐந்து ஆப்கானிய
படையினர்களும் ஒன்பது குடிமக்களும் இதில் இறந்தனர்.
தெற்கு
மாகாணமான ஹெல்மாண்டில் வெள்ளியன்று அவர்கள் சென்று கொண்டிருந்த ஒரு பாரவாகனம்
சாலையோர வெடிகுண்டினால் தாக்கப்பட்டபோது
15 பேர் இறந்து
போயினர்.
இது அப்பகுதியில் பெரிய
நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்பு படைகளைத் தாக்குவதற்காக
எழுச்சியாளர்களால் செயல்படுத்தப்பட்டு இருந்தது.
தெற்கில்
முக்கிய மாகாணமும்,
தாலிபனின் முன்னாள்
தளமுமான காந்தகாரில் எழுச்சியாளர்கள் சனிக்கிழமைன்று ஒரு பொலிஸ் தலைமையகத்திற்கு
அருகே ஒரு கார்க் குண்டை இயக்கினர். இதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் குறைந்தபட்சம்
ஒரு சாதாரணக் குடிமகனும் மாண்டு போயினர்.
இரு ஆப்கானிய
அரசாங்க அதிகாரிகள் கடந்த வாரம் அந்நகரத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
ஞாயிறன்று
ஒரு தற்கொலைக் குண்டுதாரி
2,000 கிலோகிராம்கள்
வெடிமருந்துகள் நிரப்பப்பட்ருந்த ஒரு சிறு வாகனத்தை காந்தகார் மாகாணத்தின் ஜாரி
மாவட்டத்திலுள்ள சாங்சர் நகர அமெரிக்கத் தளத்தில் மோதினார்.
தகவல்களின்படி இந்த
குண்டுத் தாக்குதல் விளைவால் கட்டிடமே சரிந்து விட்டது.
ஆறு அமெரிக்கர்கள்,
இரு ஆப்கானிய
அரசாங்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டனர்,
மற்றும்
குறைந்தபட்சம் வேறு
6 பேர் காயமுற்றனர்.
நேற்றைய
இறப்புக்கள்
US/ISAF மொத்த
இறப்புக்கள் இந்த ஆண்டில்
692 என்று உயர்த்தின—இதில்
479 பேர்
அமெரிக்கர்கள்.
500 முதல்
600 அமெரிக்கத்
துருப்பினர் ஒவ்வொரு மாதமும் ஆப்கானிஸ்தானில் காயம் அடைகின்றனர்,
பலரும் சாலையோர
வெடிகுண்டுகள் தாக்குதலால் கொடூரமான காயங்களைப் பெறுகின்றனர்.
ஹெல்மாண்ட்
மற்றும் காந்தகார் என்று தாலிபன் கணிசமாக மக்கள் ஆதரவைக் கொண்டுள்ள,
இனவழிப் பஷ்டூன்
நிறைந்த மாகாணங்கள்தான் ஆப்கானிஸ்தானில் ஒபாமா நிர்வாகத்தின் விரிவாக்கத்தின்
குவிப்பாக உள்ளன. இங்கு இன்னும்
30,000
துருப்புக்கள் நிலை கொண்டுள்ளன.
ISAF இப்பொழுது
கிட்டத்தட்ட மொத்தம்
150,000
துருப்புக்களைக் கொண்டுள்ளது.
கடந்த வாரம்
பிரிட்டிஷ் பாரட்ரூப்பர்களும் ஆப்கானிய அரசாங்கத் துருப்புக்களும் ஹெல்மாண்டில்
முன்பு தாலிபனின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்த நகர்-எ-சரஜ்
மாவட்டத்தைக் கைப்பற்றியதாக தகவல் கொடுத்துள்ளது.
அமெரிக்க மரைன்கள்
ஹெல்மாண்ட் மாகணத்திலுள்ள சாங்கின் மாவட்டத்தில் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மற்ற
அமெரிக்கத் துருப்புக்கள் காந்தகாரின் முக்கிய மாவட்டங்களை ஆக்கிரமித்துள்ளன. இது
எழுச்சியாளர்களை அப்பகுதியில் இருந்து ஓடும் கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.
சிறப்புப்
படைப் பிரிவினர் நடத்தும் கொலைக் குழு நடவடிக்கைகளினால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகப்
பெருகியிருப்பதுடன்,
எழுச்சியாளர்கள்
மீதான தாக்குதல் என்று கூறி நடத்தப்படும் வான் தாக்குதல்களும் அதிக இறப்புக்களை
ஏற்படுத்தியுள்ளன.
ஹெல்மாண்ட்
மற்றும் காந்தகாரில் எழுச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் வெற்றி அடையப்பட்டுள்ளது
எனக்கூறப்படுவது,
இம்மாதம் ஒபாமா
மற்றும் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் இருவரும் ஆப்கானிஸ்தானிற்குப் பயணித்ததை
அடுத்து விரிவாக்கத்தால்
“முன்னேற்றம்”
எனக் கூறுவதை
அடிக்கோடிட்டுக் காட்டும் நோக்கம் உடையது.
டிசம்பர்
3ம் தேதி ஒபாமா
ஆப்கானிஸ்தானிற்கு சென்றிருந்தார்,
கேட்ஸ் டிசம்பர்
8ம் தேதி சென்று
இருந்தார்.
முன்னேற்றம்
பற்றிய கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தாலும்,
ஒபாமாவின் வெள்ளை
மாளிகை ஜூலை 2011ல்
இருந்து ஆப்கானிஸ்தானிலிருந்து கணிசமான அமெரிக்கத் துருப்புக்கள் தாயகம் திரும்பும்
என்ற பேச்சையே கிடப்பிற்கு தள்ளிவிட்டது.
மாறாக இப்பொழுது
“2014 இறுதியில்”
என்ற புதிய தேதி
வலுயிறுத்தப்படுகிறது. அப்பொழுது ஆப்கானிய இராணுவம் மற்றும் பொலிஸ் பெரும்பாலான
பாதுகாப்பு
நடவடிக்கைகளைக் கையாள முடியும் என்று கருதப்படுகிறது.
போர் பற்றிய
மறுபரிசீலனை இந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு
ISAF ன் கூட்டுத்
தளபதி ஜெனரல்
டேவிட் பெட்ரீயசால் வழங்கப்படும்.
அதன் பொருளுரையை
பரந்த வகையில் கொடுத்த பெட்ரீயஸ் செய்தியாளர்களிடம் கடந்த வாரம் கூறியது:
“ஆப்கானிஸ்தானில் பல
பகுதிகளில் தாலிபனின் இயக்க சக்தியை தடுத்து விட்டோம் என்று நாங்கள் நம்புகிறோம்,
ஆனால் எல்லாப்
பகுதிகளிலும் அல்ல.”
ஆனால்
இப்பொழுது நடக்கும் மோதல்கள் போரின் மிகக் கடுமையானவை என்று பெட்ரீயஸ் எச்சரித்தார்.
ஹெல்மாண்டில்
செப்டம்பர் 20ம்
திகதியிலிருந்து
அமெரிக்க மரைன்கள்
42 பேர்
இறந்துவிட்டனர்,
500 பேருக்கு மேல்
காயமுற்றனர். அவர்கள் சாங்கின் போன்ற முக்கிய மாவட்டங்களில் பிரிட்டிஷ்
துருப்புக்களிடமிருந்து கட்டுப்பாட்டை எடுத்துள்ளனர்.
மாறாக,
இந்த அளவு
நடவடிக்கைகளை தாலிபனுக்கு எதிராக எடுக்கப் போதுமான துருப்புக்களை கொண்டிராத
பிரிட்டிஷ் படை முழு முந்தைய மூன்றரை ஆண்டுகளிலும்
76 பேரைத்தான்
இழந்திருந்தனர்.
“மிகவும்
முக்கியம் என்று எதிரி கருதும் பல பகுதிகளை நாம் எடுத்துக் கொள்ள முற்படும்போது
அவர்கள் கடுமையாகப் போரிடுகின்றனர்”
என்று பெட்ரீயஸ்
கூறினார். “ஹெல்மாண்டில்
அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளைப் பார்த்தால்,
சாங்கின் இன்னும்
தாலிபன் கட்டுப்பாடு கொண்டிருக்கும் முக்கிய எஞ்சிய பகுதிகளில் ஒன்றாகும்.”
கனரக டாங்குகள்
பிரிவு ஒன்று ஹெல்மாண்டிற்கு சாலையோர வெடிகுண்டுகளால் அமெரிக்க துருப்புக்களுக்கு
இழைக்கப்படும் பெரும் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில்
ஈடுபடுத்தப்படவுள்ளது.
2015
க்குள் குருதி கொட்டல்
பெரிதும் எழுச்சியை மூழ்கடித்தாலும் கூட,
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் நோக்கம் கால வரையறையற்று ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய எஞ்சிய படையை
நிலை கொள்ளச் செய்வதாகும். அப்படித்தான் அது ஈராக்கில் செய்துள்ளது.
இந்நாடு அமெரிக்கா
இராணுவத்திற்கு வளங்கள் செழிப்புள்ள மத்திய ஆசியப் பகுதி மீது ஒரு முன்னோக்கிய
மூலோபாயத் தளத்தை அளிக்கிறது. இப்பகுதியிலிருந்துதான் பாரிய எண்ணெய் மற்றும்
எரிபொருள் முக்கிய இருப்புக்களைப் பெறுதல் துவங்குவதற்கு முக்கியமாகும்.
அமெரிக்கா
மத்திய ஆசியா எண்ணெய்,
எரிவாயு
இருப்புக்களையொட்டி ஆப்கானிஸ்தானில் கொண்டுள்ள நீண்ட கால முக்கியத்துவம்
சனிக்கிழமையன்று
ஆப்கானிய நாட்டின் கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஒரு உடன்படிக்கையை அஷ்கபட்டில்
பல காலமாகத் தாமதித்து வரும் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான்-இந்தியா
(TAPI)
குழாய்த்திட்டம் தொடர்பாக கையெழுத்திட்டதில் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது.
இக்குழாய்த் திட்டம்,
15 ஆண்டுகளுக்கு
முன்பே திட்டமிடப்பட்டது,
மகத்தான
துர்க்மேனிஸ்தான் வயல்களிலிருந்து ஆப்கானிஸ்தான்,
பாக்கிஸ்தான்
நகரங்கள் வழியே வடக்கு இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்துச் செல்லும்
திட்டமாகும். இது அமெரிக்கப் போட்டி நாடுகளான ஈரான் அல்லது ரஷ்யா வழியே
இருப்புக்களை அனுப்புவதற்கு ஒரு மாற்றீட்டைத் தரும்.
குழாய்த்திட்டம் கட்டமைக்கப்படுவதற்கு
7.6 பில்லியன்
டொலருக்கு மேல் ஆகும். இது காந்தகார் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு அதிக எதிர்ப்புள்ள
மாகாணங்கள் மூலம் கடக்கப்பட வேண்டும்.
பலவற்றைப் போல் இந்த
உண்மைதான் எழுச்சியை அடக்குவதற்கு அமெரிக்க இராணுவம் சிவிலிய இறப்புக்களைப் பற்றிப்
பொருட்படுத்தாத,
மற்றும் இரக்கமற்ற
தன்மையை விளக்குகிறது. |