World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Lutte Ouvrière group defends union betrayal of French pension strikes

பிரெஞ்சு ஓய்வூதிய வேலைநிறுத்தங்களில் தொழிற் சங்கக் காட்டிக்கொடுப்பை Lutte Ouvrière குழு பாதுகாக்கிறது

By Alex Lantier
10 December 2010
Back to screen version

கடந்த மாதம், பிரான்சின் மத்தியதர வர்க்க இடது அமைப்பான Lutte Ouvrière (தொழிலாளர்கள் போராட்டம், LO) ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியக் வெட்டுக்களுக்கு எதிரான எண்ணெய்த்துறை மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள், மாணவர்களின் அக்டோபர்-நவம்பர் மாத வேலைநிறுத்தங்கள் பற்றித் தன்னுடைய இருப்பு நிலைக் குறிப்பை வெளியிட்டது.

சார்க்கோசியின் வெட்டுக்கள் இப்பொழுது சட்டமாக இயற்றப்பட்டபின், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் இடது ஆதரவு அமைப்புக்களின் பங்கு தெளிவாகிறது. தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அணிதிரள்வை அவைகள் எதிர்த்தன, ஐரோப்பா முழுவதும் வாழ்க்கைத் தரங்கள் மீது வரலாற்றுரீதியான தாக்குதல்கள் நடத்தப்படுவதை அவைகள் அனுமதித்தன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஏராளமான ஒரு நாள் தேசிய எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்தன, அதே நேரத்தில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி பொலிசார் ஆர்ப்பாட்டங்களில் ஊடுருவவும் எண்ணெய்த்துறை முற்றுகைகளை முறியடிக்கவும் அனுமதித்தனர். அதே நேரத்தில், அவை சோசலிஸ்ட் கட்சியின் (PS) எதிர்ப்புக்களிலும் கூட்டாகப் பங்கு பெற்று, 2012 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் இந்த வணிகச் சார்புடைய கட்சிக்கு ஆதரவு கிடைக்கவும் உதவியுள்ளன.

அதன் உறுப்பினர்கள் தொழிற்சங்கங்களில் தீவிரமாக இயங்கும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் அமைப்பான Lutte Ouvrière குழு இந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டது. இந்த நிகழ்வுகளை பிழைப்படுத்துவன் மூலம் அது தனது வலதுசாரி வரலாற்றினை மூடி மறைக்கின்றது

Lutte Ouvrière வெட்டுக்களைச் செயல்படுத்துவதில் சார்க்கோசியுடன் தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்பட்டன என்பதை மறுக்கும் விதத்தில் தொடங்குகிறது. அத்தகைய சமூகப் பிரச்சினை ஒன்றில், தாங்கள் பேச்சுவார்த்தைகளில் தொடர்பு கொள்ளப்படுவர், தங்கள் பங்கை அதையொட்டி அவர்கள் நியாயப்படுத்த முடியும், தொழிலாளர்களின் அதிருப்திக்கு எதிராக ஒரு சில சலுகைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்த விருப்புரிமை கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை கொள்ளும் உரிமையை தொழிற்சங்கத் தலைவர்கள் கொண்டுள்ளனர்.

தங்கள் பங்கை நியாயப்படுத்தும் விதத்தில், சில சிறிய சலுகைகளைப் பெறுவதில் தொழிற்சங்க அதிகாரிகள் பெரும் பங்கைக் கொண்டுள்ளனர் என்ற இழிந்த கொள்கையைத்தான் Lutte Ouvrière இங்கு குறிக்கிறது. இதன் பின் தொழிற்சங்கங்கள் சார்க்கோசியுடன் இணைந்து செயல்படுகின்றன என்பதை மறுக்கிறது. இது அபத்தமான தவறு ஆகும்.

வெட்டுக்களை செயல்படுத்துவதில் சார்க்கோசியின் உறுதிப்பாடு இருந்தும், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் வெளிப்படையாக ஒத்துழைத்தன. சார்க்கோசியின் சமூக ஆலோசகர் ரேய்மாண்ட் சுபி போன்ற நபர்கள் இவ்வகையில் செயல்பட்டனர். அக்டோபர் வேலைநிறுத்தங்களின்போது, சார்க்கோசியின் ஆலோசகர் ஒருவர் Le Monde  இடம், சுபியின் வழிமுறை இப்பொழுது உச்சக்கட்டத்தில் உள்ளது என்றார். பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) தலைவர் பிரான்சுவா ஷெரேக் கூறினார்: இரு மாதங்களுக்கு  சுபி  இல்லை என்று எவரும் என்னிடம் வந்து சொல்லக் கூடாது.

இத்தகைய ஒத்துழைப்பின் இலக்கு வெகுஜன எதிர்ப்பைமீறி வெட்டுக்களை இயற்றுவது ஆகும். தொழிலாளர் சக்தி (FO) தொழிற்சங்கத் தலைவர் Jean Claude Mailly, ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரளவுச் சடங்குகள் நடக்கும், எவரும் ஆம் என்று ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஆனால் இறுதியில் வெட்டுக்கள் இயற்றப்பட்டுவிடும் என்று  சுபி நினைத்தார் என்று விளக்கினார். இது தற்காலிகமாக அக்டோபர் மாதம் எதிர்பாராத் திருப்பத்தைக் கொடுத்தது, தொழிற்சங்க நடவடிக்கையும் மாணவர் எதிர்ப்புக்களும் வெடித்தன என்று கூறிப்பிட்ட Mailly மேலும் கூறினார்: நீங்கள் கயிறை இழுத்தீர்கள் என்றால், உங்களுக்கு முடிச்சுக்கள்தான் கிடைக்கும்.

இக்கேலிக்கூத்தில் பங்கு பெற்றிருந்த தொழிற்சங்கத்தின் தலைவரான Mailly அவரது கயிறுகள் இழுக்கப்படுவதை பற்றி கருதவில்லை. இதில் அவர் ஒன்றும் விதிவிலக்கு அல்ல: ஐரோப்பா முழுவதும் தொழிற்சங்கங்கள் அரசியலல்ரீதியாக செயலற்ற நடவடிக்கையான ஒருநாள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று கருதின. கிரேக்கத்தில் இந்த வசந்த காலத்திலும், ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் இந்த இலையுதிர்காலத்திலும் இவை நடைபெற்றன. ஆனால் இந்த நிகழ்வுகள் எதுவும் அரச கொள்கையை மாற்றிவிடவில்லை.

இந்த ஊழல் மலிந்த அரசியல் விளையாட்டை Lutte Ouvrière பாராட்டுகிறது. தொழிலாளர்களிடம் இருந்து வரும் அழுத்தத்தை ஒட்டித்தான் தொழிற்சங்கங்கள் இவற்றைச் செய்கின்றன என்ற சிறிய குறிப்பையும் சேர்த்துக் கொள்கிறது. ஆனால் வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புக் கொடுத்து அதே நேரத்தில் தங்கள் சொந்த அதிகாரத்துவ நலன்களைக் காப்பதற்கு, தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் தொழிலாளர்களுக்கு பெரும் வெறுப்பு வந்துள்ளது எனக் காட்டுவதற்கும் மடையென வாய்ப்பைக் கொடுத்தன.தொழிற்சங்கங்கள் திறந்து விட்ட இந்த மடை வெள்ளத்தை அடைக்கும் முயற்சியில் முதலில் தொழிற்சங்கவாதிகளே ஈடுபட்டனர்.

வீரமிக்க LO வின் வனப்புரை, ஏதோ வட்ட மேசை குதிரை வீரர்களின் வீரச்செயலைப் பற்றி விவரிப்பது போல் வருவது முற்றிலும் அபத்தமாகும்-அதுவும் Chereque மற்றும் Mailly போன்ற அதிகாரத்துவத்தினரைப் பொறுத்த வரையில்.

ஆனால் இது ஒரு உறுதியான அரசியல் தர்க்கத்தையும் கொண்டுள்ளது. சற்று அழுத்தத்துடன்' தொழிற்சங்கங்கள் சமூகப் போராட்டத்திற்கு வழிநடத்தும், ஒருவேளை அரச கொள்கையில் மாற்றத்தைக் கூடக் கட்டாயப்படுத்தும் என்று தொழிலாளர்களும், இளைஞர்களும் நம்புவதற்கான ஊக்கத்தை அளிப்பது என்பதே அது. உண்மையில் சமீபத்திய வேலைநிறுத்தங்களின் படிப்பினை இதற்கு முற்றிலும் எதிரிடையானதாகும். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டால், அது அவற்றை நெரிப்பதற்குத்தான். எந்தத் திருத்தங்களுமின்றி, சார்க்கோசியின் வெட்டுக்கள் சட்டமாக இயற்றப்பட்டு விட்டன.

அக்டோபர் வேலைநிறுத்தங்களின்போது, அரசாங்கம் தான் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தது. ஏனெனில் 3 மில்லியன் தொழிலாளர்கள் பலமுறை அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து அணிவகுப்புக்களை நடத்தினர். வேலைநிறுத்தங்களுக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு இருந்ததாகக் கருத்துக் கணிப்புக்கள் கூறின. இது வெகுஜனப் போக்குவரத்து, நகரசபை பணிகள், கனரக வாகனப் பிரிவு மற்றும் வணிகப் பொருட்கள் வழங்கும் தொழிலாளர்கள் பிரிவு எனப் பரவியது.

ஆயினும்கூட தொழிற்சங்கங்கள் வேறு கூடுதலான தொழில்துறை நடவடிக்கை எதற்கும் அழைப்பு விடுக்கவில்லை. பொலிஸ் தாக்குதலுக்கு எதிரான எண்ணெய்ச் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் முற்றுகைகளை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவில்லை. சார்க்கோசியை வீழ்த்தி சோசலிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கு போராடுவதற்கான முன்னோக்கு ஒன்று இல்லாது தேசிய சட்டமன்றம் வெட்டுக்களை இயற்றியபின், வேலைநிறுத்தங்கள் கரைந்து மடிந்தன.

தொழிற்சங்கங்களின் இந்த செயலை Lutte Ouvrière குற்றமற்றதாகக் காண்கிறது: ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடாததற்காக தொழிற்சங்கங்களைக் குறைகூறுவது சிறுபிள்ளைத்தனம் ஆகும் என்று கூறுகிறது. மேலும் தொழிலாள வர்க்கத்தைத்தான் அது குறைகூறுகிறது. மற்ற தொழில்துறைப் பிரிவுகளில் குறைந்த வேலைநிறுத்தங்களே நடந்தன என அபத்தமாகக் கூறியபின், தொழிற் சங்கங்களின் பொறுப்பு அனைத்தையும் LO கைவிடுகிறது: அவர்கள் எதையும் மறைத்துப் பின்வாங்கவில்லை, ஏனெனில் இதைப் பொறுத்தவரை நிறுத்தி வைப்பதற்கும் ஏதும் இல்லை.

இங்கு அதனது பிழைப்படுத்தல்கள் அவர்களின் தர்க்கரீதியான முடிவுகளுக்குத்தான் Lutte Ouvrière ஐ எடுத்துச் செல்கிறது. தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுப்பு எதையும் நடத்தவில்லை என்றால், காட்டிக் கொடுப்பு பற்றித் தொழிலாள வர்க்கம் எதிர்ப்பு எதையும் காட்ட வேண்டிய தேவை இல்லை. தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு அடிமைத்தனமாக பிணைப்பட்டுள்ள Lutte Ouvrière போன்ற கட்சிகள், தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுக்களின் நலன்களுக்கு விரோதப் போக்கை உடையதான, அத்தகைய நிலைப்பாட்டைத்தான் முன்வைக்கும்.

உண்மையில் Lutte Ouvrière சார்க்கோசியின் வெட்டுக்கள் இயற்றப்பட்டதை ஒரு பகுதி வெற்றி என்று கருதுகிறது. சார்க்கோசி பின்வாங்கவில்லை என்பதற்காக தோல்வி ஏற்பட்டுவிட்டது என்று கூறும் சில குழப்பமுற்ற போராளிகளை எவரும் பின்பற்றத் தேவையில்லை என்று அது வலியுறுத்தியுள்ளது. வேலைநிறுத்தங்கள் பற்றி எந்த உண்மை விவாதங்களையும் நடத்தாத நிலையில், அதன் பணிகள் இப்பொழுது சோசலிஸ்ட் கட்சி போன்ற சீர்திருத்தக் கட்சிகளின் தந்திரோபாயங்களை அம்பலப்படுத்துவதுதான் என்று Lutte Ouvrière கூறுகிறது.

Lutte Ouvrière எழுதுகிறது: மற்ற ஐரோப்பிய நாடுகளில் சோசலிஸ்ட் அரசாங்கங்கள் மற்றவற்றில் இருந்து வேறுபட்ட வகையில் நடக்கவில்லை ஒரு சோசலிச அரசாங்கம் தங்களைக் காப்பாற்றும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கவில்லை. சார்க்கோசியைத் தோற்கடிப்பதற்காகத்தான்  PS க்கு தொழிலாளர்கள் வாக்களிப்பர் என்று குறிப்பிட்டு Lutte Ouvrière, இப்பிரச்சினையில் கூடுதல் ஆதாயம் (சர்வதேச நாணய நிதியத் தலைவரும் PS ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடியவருமான டொமினிக்) ஸ்ட்ராஸ் கானுக்குத்தான், அவர்தான் வெற்றிபெறும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளார். ஆனால் Lutte Ouvrière மேலும் கூறுகிறது, அவரை எப்படி ஒரு இடது என்று கூறுவது, அது மிகக் கடினம் என்கிறது.

LO வின் வெற்றுத்தன கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, விஷயம் ஒன்றும் கடினமானது அல்ல. ஸ்ட்ராஸ் கான் ஒரு வங்கியாளர், பெருநிறுவனச் செல்வாக்கை நாடுபவர், நீண்டகாலமாக PS ன் முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருந்து கிரேக்கத்திலும், அயர்லாந்திலும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வெட்டுக்களைக் கண்காணித்துள்ளார். அவர் ஒன்றும் இடதுசாரியோ அல்லது சீர்திருத்தக்காரரோ அல்ல, ஆனால் ஒரு நிதியத் தாக்குதல் என்பது தொழிலாளர்களைப் பாரிய வறிய நிலைக்கு இட்டுச் செல்லும்.

இது பற்றி நன்றாகவே தெரிந்துள்ள Lutte Ouvrière எழுதியது: தொழிற்சங்கத் தலைமைகள் தங்களுக்கு ஒரு இடது (அதாவது PS) அரசாங்கத்தில் சிறப்பிடம் கிடைக்கும் என்று நம்பினால், இடது அரசாங்கத்துடனான அவர்களுடைய உடன்பாடு தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்ப இருக்காது, அதன் தீமைக்குத்தான் உதவும்.

இது விஷயத்தை வெளிப்படுத்தும் கருத்து ஆகும். தனிப்பட்ட PS அதிகாரிகள் இடதா என்பது பற்றி இது விவாதித்து தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு வேலைநிறுத்தங்களை நெரிப்பதற்கு அனுமதி கொடுத்தாலும், Lutte Ouvrière ற்கு இந்த வலதுசாரிக் கூறுகள், தொழிலாள வர்க்கத்தின்மீது வரலாற்று ரீதியான தாக்குதல்களுக்கு தயாரிப்பை நடத்துகின்றன என்பது நன்கு தெரியும். எவ்வாறிருந்தபோதிலும் இது தொழிற்சங்கங்களுக்கான அதன் ஆதரவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த இட்டுச்செல்லப்போவதில்லை.

இது ஒரு வினாவை எழுப்புகிறது: Lutte Ouvrière ஒரு இடது கட்சிதானா? தான் ஒரு இடதுசாரி என்பதை நிரூபிக்க அதன் அறிக்கையின் முடிவுரையில் சந்தேகத்திற்கு இடமின்றி Lutte Ouvrière சுட்டிக்காட்டுவது, தொழிலாளர்கள் உற்பத்தி கருவிகளின் தனியார் உடமை, சந்தையின் விதிகள் மற்றும் தனிநபர் இலாப சர்வாதிகாரத்தை மதிப்பதை நிறுத்தும் வகையில் அரசியல் வடிவத்தைக் கொள்ளுவது, சமூகத்திற்கு ஒரு புதிய முன்னோக்கைத் திறக்கும்.

இது தீவிரமான, கிட்டத்தட்ட மார்க்சிச கருத்துப் போல் தோன்றினாலும்  ஒரு விவரத்தை பாதுகாக்கவே அங்கே உள்ளது: தொழிலாளர்களை முதலாளித்துவத்தை மதிப்பதை நிறுத்த அழைப்பு விடுக்கையில், Lutte Ouvrière உண்மையில் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவச் சிக்கன நடவடிக்கைகளை உண்மையில் செயல்படுத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அதன் எல்லையில்லா மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வெற்றுக் கோஷங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதன் சக தீவிர இடது கட்சிகளான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் சுதந்திர தொழிலாளர் கட்சி (POI) ஆகியவை போல், உண்மையில் ஆளுமவர்க்க சார்புடைய அரசியலைத்தான் கொண்டுள்ளது.

இக்கட்சிகள் வாடிக்கையாக PS பிரிவுகளுடன் ஆர்ப்பாட்டங்களில் அணிவகுத்துச் செல்லுகின்றன. முற்றிலும் இடது சான்றுகளைக் கொண்டிராத ஸ்ட்ராஸ் கான் போன்றவர்களின் வேட்பாளர் தன்மைக்கு உதவுகின்றன. இவற்றின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் உள்ளூர் PS அதிகாரிகள் நூற்றுக்கணக்கானவர்களின் ஆதரவை வாக்குப் பதிவில் பெறுதல் என உள்ளது. இவை ஒன்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைவிட PS ல் இருந்து சுயாதீனமாக இல்லை. அவர்களைத்தான் இவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் உண்மையான தலைவர்களாக நடத்துகின்றனர்.

Lutte Ouvrière இன் சமீபத்திய வேலைநிறுத்தப் போராட்டம் பற்றிய தொழிற்சங்க சார்பு மதிப்பீடு அதன் பரந்த செயற்பாடுகளான முற்றிலும் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதப் போக்குடைய அரசியல் உயரடுக்கைப் பாதுகாக்கும் போலி இடதுகள் என்ற நிலைப்பாட்டுடன் இயைந்துதான் உள்ளது.