WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama administration steps up vendetta against WikiLeaks’
Julian Assange
விக்கிலீக்ஸின் ஜூலியன்
அசாங்கேக்கு எதிராகப் பழிவாங்கும் படலத்தை ஒபாமா நிர்வாகம் முடுக்கி விடுகிறது
By
Patrick O’Connor
10 December 2010
புதன் கிழமை
அன்று பிரிட்டனின்
இன்டிபென்டன்ட்
பத்திரிகை
அமெரிக்க,
ஸ்வீடன் நாட்டு
அதிகாரிகள் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அமெரிக்கச் சிறையில்
தள்ளப்படுவதை நோக்கம் கொண்ட மூடிய கதவிற்குப் பின் நடக்கும் விவாதங்களில்
ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலைக் கொடுத்துள்ளது.
தற்பொழுது அசாங்கே
ஸ்வீடனில் எழுப்பப்பட்டுள்ள போலியான,
அரசியல் உந்துதலைக்
கொண்ட பாலியல் புகார்களுக்காக அந்நாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற வழக்கு
விசாரிக்கப்படுவதற்காக
லண்டன் சிறையில்
காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.
ஆதாரமற்ற
தூதரகத் தகவல்களை மேற்கோளிட்டு,
இன்டிபென்டன்ட்,
அமெரிக்க,
ஸ்விஸ்
அதிகாரிகளுக்கு இடையே
“முறைசாரா
விவாதங்கள்”
நடைபெறுவதாகச்
சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்த ஆதாரங்கள்
அமெரிக்க அரசாங்கம் திரு.அசாங்கேக்கு
எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் ஒழிய ஸ்வீடனுக்கு அழைத்துவருதல் பற்றிய
வேண்டுகோள் விடுக்கப்பட மாட்டாது என்று வலியுறுத்தின;
மேலும் ஸ்வீடனில்
சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பின்னர்தான் அவரை அமெரிக்காவிற்குக் கொண்டு
செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”
என்றும்
செய்தித்தாள் தெரிவிக்கிறது.
அசாங்கே
சார்பாகச் செயல்படும் வக்கீல் ஜேனிபர் ரோபின்சன்,
ஆஸ்திரேலிய
ABC வானொலியிடம்
ஸ்வீடனுக்குக் கொண்டு செல்லும் எந்த நடவடிக்கையும் அமெரிக்காவிற்கு அழைத்துச்
செல்லுவதற்கு முன்னோடியாக இருக்கும் என்றார்.
“அமெரிக்காவில்
பெரும் நடுவர் மன்றம் முன் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுவிட்டன என்று வதந்திகள்
ஏற்கனவே பரவியுள்ளன”
என்றும் அவர்
கூறினார்.
ஸ்வீடனின்
குற்றச்சாட்டுக்கள்,
ஜனாதிபதி பாரக்
ஒபாமாவின் நிர்வாகம் தொடர்ந்துள்ள அசாங்கேக்கு எதிரான இழிந்த பழிவாங்கும் நடவடிக்கை
என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
செய்தியாளர்
அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய குற்ற நடவடிக்கைகளை ஏராளமான தூதரகத் தகவல்
குறிப்புக்களை உலகம் முழுவதும் அன்றாடம் அம்பலப்படுத்தி
பரப்பி
வெளியிடுவதில் கொண்டிருந்த பங்கிற்குப் பதிலடியாகத்தான் அமெரிக்கப் பிரச்சாரம்
நடத்தப்படுகிறது.
அமெரிக்க
அரசாங்கத் தலைமை வக்கீல் எரிக் ஹோல்டர் இந்த வாரம் தன்னுடைய அலுவலகம்
விக்கிலீக்ஸின் ஆசிரியரைக் குற்றவிசாரணைக்குட்படுத்தும் அனைத்து வாய்ப்புக்களையும்
பரிசீலித்து வருவதாக வலியுறுத்தினார்.
“குறிப்பாக எதையும்
இங்கு நான் கூறவிரும்பவில்லை,
ஆனால் நாங்கள்
உளவுபார்க்கும்
சட்டத்தை
மட்டும்
கருத்தில்
கொண்டுள்ளோம் என்று
எவரேனும் நினைத்தால் அது தவறாகிவிடும்”
என்று அவர்
அறிவித்தார். “அச்சட்டமும்
ஒரு பங்கை வகிக்கும்,
ஆனால் பிற
சட்டங்களும்,
மற்ற கருவிகளும்
உள்ளன,
நாங்கள் செயல்படுத்துவதற்கு.”
என்று சேர்த்துக்
கொண்டார்.
செவ்வாயன்று
“விக்கிலீக்ஸ்
குற்றவிசாரணை பற்றி அமெரிக்க குற்றவிசாரணை அதிகாரிகள் ஆராய்கிறார்கள்”
என்ற தலைப்பில்
வெளிவந்த நியூ
யோர்க் டைம்ஸ்
கட்டுரை ஒன்று அசாங்கேயைத் தொடர்வதற்கு ஒரு சட்டபூர்வ போலிக்காரணத்தைத்
தயாரிக்கும் பெரும் திகைப்புடன் கூடிய ஒபாமா நிர்வாகத்தின் முயற்சிகளில் சிலவற்றைச்
சுட்டிக்காட்டியுள்ளது.
பெயரிடப்படாத ஒரு
அரசாங்க அதிகாரி விசாரணை அலுவலர்கள் விக்கிலீக்ஸ் உண்மையில் தூதரக ஆவணங்கள்
கசிவிற்குத் தீவிரமாக உதவினவா அல்லது வெறுமே அவற்றை வெளியிட்டனவா என்று
விசாரிப்பதாகக் கூறினார்.
இது அவற்றை
கசியவிட்ட
அசாங்கே
மீது என்ன
குற்றச்சாட்டுக்களோ,
அவையே பதிவு
செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது முன்னாள்
இராணுவ,
உளவுத்துறை பகுப்பாய்வாளர்
பிராட்லி மானிங் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களே என்று.
ஆவணங்களை
வெளியிட்டதைத் தவிர வேறு எதையும் விக்கிலீக்ஸ் செய்துள்ளது என்பதற்கான சான்றுகள்
இல்லை என்பதை
நியூ யோர்க் டைம்ஸ்
ஒப்புக் கொள்கிறது.
நீதித்துறையும்
அசாங்கே “திருடப்பட்ட
அராசங்கச் சொத்துக்களை விற்பவர்”
என்ற
குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட முடியுமா என விசாரிப்பதாக மற்றொரு நிர்வாக
அதிகாரியை செய்தித்தாள் மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.
தகவல் கோப்புத்
தொகுப்புக்களின் நகல்கள் அப்படியே வெளியிடப்பட்டனவே ஒழிய,
ஆவணங்கள் அல்ல
என்பதால் இவை அபத்தமான குற்றச்சாட்டுக்கள் ஆகிவிடும்.
அமெரிக்க
அதிகாரிகளிடம் ஒருவேளை ஒப்படைக்கப்பட்டால்,
படுகொலை,
அல்லது
“மறைந்துவிடுதல்”
என்ற உண்மையான
ஆபத்தை அசாங்கே எதிர்கொள்வார்.
ஜனநாயக,
குடியரசுக்
கட்சிகளின் மூத்த அரசியல் தலைவர்கள் விக்கிலீக்ஸின் ஆசிரியரை
“எதிரிப்போராளி”
என்று அடையாளம்
கண்டு,
அவர் படுகொலை செய்யப்பட
வேண்டும் என்று கோருகின்றனர்.
அத்தகைய
அடாவடித்தனத் தூண்டுதல் அறிக்கைகளில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்ள ஒபாமா
நிர்வாகம் ஏதும் கூறவும் இல்லை,
செய்யவும் இல்லை.
வாஷிங்டன்
மற்றும் அதன் நட்பு நாடுகளின் உடனடி நோக்கம் ஸ்வீடன் நாட்டின் அசாங்கே மீதான
சகதியான குற்றச்சாட்டுக்கள் நிறைந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் இயன்றளவு நீடித்து,
அவர் தகவல்களை
வெளியிடுவதை மேற்பார்வையிடுவதிதல் இருந்து திசைதிருப்பி,
அதபோல் வெள்ளை
மாளிகையில் இருந்து ஒருங்கிணைப்பதுவதாகக் கூறப்படும் வலைத்தள தாக்குதல்களுக்கு
எதிராகப் பாதுகாப்பு செய்ய முடியாமல் செய்துவிடுவதும் ஆகும்.
சர்வதேச
சட்டம் பற்றி நன்கு அறிந்த பல வல்லுனர்கள் அசாங்கேக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைக்
கண்டித்துள்ளனர்.
ஸ்வீடனில் எந்தக்
குற்றச்சாட்டும் செய்தியாளர்
மீது பதிவு
செய்யப்படாத நிலையில்,
இவருக்கு பிணை
எடுப்பு மறுக்கப்பட்டு,
லண்டனில்
வாண்ஸ்வொர்த் சிறையில் தனிக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார்;
நாள் ஒன்றிற்கு ஒரு
மணி நேரம் மட்டுமே
“குறைந்த பட்ச”
இணையத்தளத்
தொடர்பும் கொள்ள முடியும்.
மேலும் ஸ்வீடன்
நாட்டு குற்றவிசாரணை அதிகாரிகள் அவர் விடையிறுக்க வேண்டிய குற்றச்சாட்டுக்கள்
எதையும் பதிவு செய்வதற்கு முன்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருடைய சட்டக்குழு
லண்டன் உயர்நீதி மன்றத்தில் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பும் முயற்சி குறித்து சவால்
விடுவதற்குத் தயாரிப்புக்கள் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இண்டிபென்டன்ட்
“அவர்கள் இந்த
வழக்கில் இங்கு தோற்றால்,
தலைமை நீதிமன்றம்
வரை எடுத்துச் செல்ல முடியும்,
இந்த வழிவகைக்குப்
பல மாதம் பிடிக்கும்”
என்று கூறியுள்ளது.
புதன் கிழமை
அன்று
பிரிட்டிஷ் கார்டியனில்
வெளியிடப்பட்ட
கடிதம் ஒன்றில் கற்பழிப்பிற்கு எதிராக மகளிர் என்ற பாலியல் குற்றவாளிகள்
தண்டிக்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை நடத்தும்
அமைப்பைச் சேர்ந்த
Katrin Axelesson
விக்கிலீக்ஸ் நிறுவனர் வழக்கை
“பெரும் ஆர்வத்துடன்”
தொடர்வது பற்றி வினா
எழுப்பியுள்ளார்.
“எந்தக் குற்றவியல்
தண்டனையையும் பெறவில்லை என உள்ள அசாங்கே,
பிணைப்பணமாக
£120,000க்கும்
மேல் கட்டுவதற்குத் தயாராக உள்ள போதிலும் இங்கிலாந்தில் பிணை எடுப்பு
மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கற்பழிப்புக்
குற்றச்சாட்டு வழக்குகளில் பிணை கொடுத்தல் வாடிக்கையாக நடைபெறுவதுதான்…..
மகளிர்
பாதுகாப்புடன் எந்தத் தொடர்பும் இல்லாத அரசியல் செயற்பட்டியலுக்காக நீண்டகாலமாக
கற்பழிப்பு,
பாலியல் பலாத்காரம்
ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது”
என்று அவர்
கூறியுள்ளார்.
பிரதம
மந்திரி ஜூலியா கில்லார்டின் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி
அரசாங்கம் நேற்று
ஒபாமா நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு விரைந்து செயல்பட்டு அசாங்கேயை
பழிதீர்க்கும் வேட்டையையும் துரிதப்படுத்தியது.
அரசாங்கத் தலைமை
வக்கீல் ரோபர்ட் மக்கிளெல்லாந்து ஆஸ்திரேலியச் சட்டத்தின்படி இரகசியத் தகவலைப்
பெறுவது என்பது ஒரு குற்றும் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் மக்களிளெலாந்து கூறினார்:
“அமெரிக்காவின்
சட்டத்தை அறியாமல் அத்தகவலை வினியோகித்தல் ஒரு குற்றமாக இருக்கலாம்.
ஆனால் அத்தகைய தகவலை
காமன்வெல்த் அதிகாரி ஒருவர் வெளியிட்டால்,
அது ஒரு
ஆஸ்திரேலியத் தகவல் என்று இருந்தால்,
அதில் குற்றம்
சார்ந்த பல பிரச்சினைகள் உறுதியாக எழும்;
மீண்டும் நான்
அமெரிக்கச் சட்டங்கள் பற்றிப் பேச இயலாது…[கசிவுற்ற
தகவல்கள்]
கூடுதலாக
வினியோகிக்கப்படுவதைப் பொறுத்தவரை பெரும் திறமையுடைய
வக்கீலான
அமெரிக்க
அரசாங்கத்தின் தலைமை வக்கீல் எரிக் ஹோல்டர்
இது பற்றி
நெருக்கமாக ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க
அரசாங்கத்தின் அத்தகைய விசாரணைகளுக்கு தேவையான
அனைத்து உதவிகளையும்
நாம் வழங்குகிறோம் என்று நான் கூறியுள்ளேன்.”
அரசாங்கத்தின் நீதித்துறை மந்திரி பிரெச்டன் ஓ’கானர்
ஆஸ்திரேலியக் கூட்டாட்சிப் பொலிஸ் அதன் விசாரணையைத் துவக்கியுள்ளது என்பதை
உறுதிபடுத்தினார்.
“இந்த நாடு மற்றும்
இதன் குடிமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்பொழுதும்
விரும்புகிறோம்.
நம் தேசியப்
பாதுகாப்புப் பற்றி ஏதேனும் கவலைகள் வெளிப்பட்டால்,
அவை முறையாகப்
பரிசீலிக்கப்பட்டு இப்பொழுது என்ன செய்யப்பட வேண்டும் என்று ஆராயப்பட வேண்டும்.”
அவுஸ்திரேலிய
மத்திய
பொலிஸ்
விசாரணை அசாங்கேயைத்
துன்புறுத்துவதற்கு மற்றொரு நீதித்துறை வழியைத் திறக்கும் திறனைக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய
அரசாங்கம் அத்தகைய வழிவகைகள் பற்றிய உறுதி வடிவமைப்புக்களைக் கொண்டுள்ளது.
சாலோமன் தீவுகளின்
முன்னாள் தலைமை அரசாங்க வக்கீல் ஜூலியன் மோட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக இதுவரை
தீர்க்கப்படாத வழக்கு
ஒன்றை எதிர்க்க
முயன்றுவருகிறார்;
அசாங்கே வழக்குப்
போல் அதிலும் பாலியல் தவறுகள் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இது அரசியல்
உந்துதலில் உள்ள போலித்தயாரிப்பு என்றுதான் மோட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய
அரசாங்கம் பிரதம மந்திரி கில்லர்டின் ஆத்திரமூட்டுதல் நிறைந்த,
பெரிதும் முறையற்ற
டிசம்பர் 2ம்
திகதி அறிக்கையில் விக்கிலீக்ஸ் அமெரிக்கத் தகவல் தந்திகளை வெளியிட்டது
“சட்டவிரோதம்”
என்று கூறியதில்
இருந்து பின்வாங்கவில்லை.
வெளியுறவு மந்திரி
கெவின் ரூட் முன்னதாக கசிவிற்குக் காரணம்
“அமெரிக்கர்கள்தான்”
என்று குற்றம்
சாட்டி,
ஆஸ்திரேலியாவில்
கில்லார்டின் நிலைப்பாட்டிற்குப் அதிகரித்து
வந்துள்ள
கண்டனத்திற்கு எதிராகப் பேசினார்.
(See: “Support builds for Julian Assange in Australia
<http://www.wsws.org/articles/2010/dec2010/auwi-d10.shtml>”)
வாஷிங்டனில்
இருந்து இந்நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று பிரதம மந்திரிக்கு
உறுதியான உத்தரவுகள்
வந்திருக்க வேண்டும்.
“கேபிள்கேட்”
விவகாரம் முழுவதும்
அவர் அமெரிக்க அரசியல் நடைமுறையில் ஊதுகுழலாகத்தான் செயல்பட்டு,
ஒரு ஆஸ்திரேலியக்
குடிமகனான அசாங்கேயின் ஜனநாயக,
சட்டப்பூர்வ
உரிமைகளுக்குத் தன் இகழ்வைத் தெளிவாக்கியுள்ளார்.
அசாங்கேயை
இழிவாக வேட்டையாடுதல் மற்றும் குற்றப் பதிவு செய்தல் ஆகியவற்றிற்கு எதிரான உலகம்
முழுவதும் எதிர்ப்பு பெருகிவருகிறது.
Facebook
வலைத்தளத்தில் உத்தியோகப்பூர்வ விக்கிலீக்ஸ் பக்கம் நவம்பர்
28ல்
151,000 ஆதரவாளர்கள்
என்பதில் இருந்து டிசம்பர்
7 அன்று
930,000 எனப்
பெருகிவிட்டது.
இன்று அது
1.1 மில்லியனையும்
விட அதிகமாக உள்ளது.
விக்கிலீக்ஸின்
ஆவணக் காப்பகத்தைத் திறக்க உதவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
“சிறு”
சர்வர்கள்(servers)
உலகின் ஒவ்வொரு
பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளது.
100,000 மேற்பட்டோர்
விக்கிலீக்ஸின்
“காப்பீட்டுத்
தொகுப்பான”
உயர் இரகசிய
ஆவணங்களின் தொகுப்பைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
விக்கிலீக்ஸ்
மற்றும் ஜூலியன் அசாங்கே மீதான தாக்குதல்கள் விரிவாக்கப்பட்டால்,
இந்த இரகசிய
மொழிக்குறிப்பு மறைவிலக்கப்பட்டு
அறியப்பட்டுவிடும்.
1,500
கணினியைத் தாக்குபவர்கள்
விக்கிலீக்ஸைத் தாக்குதலில் தொடர்பு கொண்ட பெறுநிறுவனங்கள்,
அரசாங்கங்கள்
ஆகியவற்றின் வலைத்
தளங்களைப் பதிலடியாகத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிலீக்ஸுக்கு
நன்கொடையை நிறுத்தியுள்ள நிறுவனங்களான
PayPal, MasterCard, Visa,
மற்றும் அமைப்பின்
சர்வர்களைத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்த
Amazon போன்றவை
தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன.
சாரா போலின் உட்படப்
பல அரசியல்வாதிகளும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர்.
இதேபோல் ஸ்வீடன்
நாட்டின் தலைமை அரசாங்க குற்றவியல் வக்கீலும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார்.
டச்சுச் செய்தி
ஊடகத் தகவல்படி,
ஹாலண்டில் உள்ள
ராட்டர்டாமில் ஒரு
16 வயதுப் பையன்
புதன்கிழமை அன்று
MasterCard இற்கு
எதிரான நடவடிக்கையில் பங்கு கொண்டதாகக் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டான்.
அவருடைய
வக்கீல் ஜேனிபர் ரோபின்சன் ஓர் அறிக்கையில் தெரிவித்த்தாவது,
இன்றைய
ஆஸ்திரேலியனில்
வெளியிடப்பட்ட தகவல் இந்த
கணனித்தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பின் தான் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்
சாட்டுக்களுக்கு விடையிறுக்கும் நிலையில் தான்
இல்லாது பற்றி
அசாங்கே
கவலைப்படுகிறார்.
“அத்தகைய உத்தரவுகள்
எதையும் அவர் கொடுக்கவில்லை;
உண்மையில் அவர் இதை
தாக்குதல் நடத்தும் அமைப்புக்களுக்கு ஊக்கம் தருவது,
விக்கிலீக்ஸின் மீது
கணினித் தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு ஊக்கம் தருவது என்றும் காண்கிறார்.
எங்களுடையது ஒரு
செய்தி நிறுவனம்,
ஒரு வெளியீட்டு
நிறுவனம்.”
என்று கூறியுள்ளார்.
இன்றும் வார
இறுதியிலும் பல நாடுகளில் எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற உள்ளன.
விக்கிலீக்ஸ்,
ஜூலியன் அசாங்கே,
பிராட்லி மான்னிங்
அனைத்தும் இப்பொழுது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைச் சர்வதேச அளவில்
எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் ஆகும்.
பாரிய
தகவல்
கசிவுகள்
21ம் நூற்றாண்டில்
உள்ள உண்மையான சமூக,
அரசியல் உறவுகளை
அப்பட்டமாகக் காட்டியுள்ளன.
அமெரிக்க
ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளால் விக்கிலீக்ஸ் ஒரு மாபெரும்
அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது.
இதற்குக் காரணம்
ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த இலக்குகள்,
செயற்பாடுகள்தான்.
இவை உலக மக்களின்
பரந்த பிரிவுகளின் நலன்கள்,
உணர்வுகள்
ஆகியவற்றிடம் இருந்து முற்றிலும் எதிரிடையானவை;
அவை முழு இரகசியமாக
இருக்க வேண்டும்
என
அவர்கள்
கருதுகின்றனர்..
அசாங்கே
மீதான குற்றவிசாரணை அவரைக் பாதுகாப்பதற்கு தீவிர ஆர்வம் கொண்ட இயக்கத்தைத்
தூண்டியுள்ளது என்றாலும்,
அதற்கு ஒரு தெளிவான
அரசியல் குவிப்பு இல்லை.
ஜனநாயக உரிமைகள்,
மற்றும் இணைய தள
சுதந்திரம் ஆகியவை ஏகாதிபத்தியம்,
இலாபமுறைக்கு எதிராக
ஒரு சர்வதேச சோசலிசத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவில்
ஐக்கியப்படுத்தப்பட்ட இயக்கத்தின் வளர்ச்சிக்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க
முடியாததாகும். |