சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

How France’s unions aided police strike-breaking at Grandpuits refinery

பிரான்ஸின் தொழிற்சங்கங்கள் எவ்வாறு கிரோண்ட்புயி சுத்திகரிப்பு ஆலையில் வேலைநிறுத்தத்தை முறியடிக்க பொலிஸிற்கு உதவின

By Kumaran Ira and Antoine Lerougetel
9 December 2010

Use this version to print | Send feedback

இந்த அக்டோபர் மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் செல்வாக்கற்ற ஓய்வூதியவெட்டுக்களை எதிர்த்துத் தொழிலாளர்கள் சக்தி வாய்ந்த வேலைநிறுத்த அலையை தொடக்கினர். சார்க்கோசியின் திட்டத்தில் ஓய்வு பெறத் தகுதி உடைய வயது 60ல் இருந்து 62க்கு உயர்த்தப்பட்டது, முழு ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான வயது 65ல் இருந்து 67 வரை உயர்த்தப்பட்டது ஆகியவையும் அடங்கியிருந்தன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற மூலோபாய துறைகளைத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்ததால் நாடெங்கிலும் எரிபொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு பிரான்ஸ் முடக்கமுற்றது. வெட்டுக்களுக்கு சமூக எதிர்ப்பு பரந்து விரிந்தது. ஒரு கருத்துக் கணிப்பின்படி அப்பொழுது 70 சதவிகித மக்கள் வேலைநிறுத்தங்கள் தொடர்வதற்கு ஆதரவு கொடுத்தது வெளிப்பட்டது.

இறுதியில் இந்த இயக்கம் தொழிற்சங்கங்களால் நெரிக்கப்பட்டது. அவை சார்க்கோசியுடன் சேர்ந்து தயாரித்திருந்த சமூக வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கு விரோதப் போக்கைக் காட்டின. எண்ணெய்த்துறை வேலைநிறுத்தங்களை அவை தனிமைப்படுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸ் அடக்குமுறையை எதிர்க்கும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுக்களைத் திரட்டுவதற்கு முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அக்டோபர் எண்ணெய்த்துறை வேலைநிறுத்தம் பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதை பொலிஸ் முறிப்பதற்கு நேரடியாக தொழிற்சங்க அதிகாரிகள் உதவினார்கள் என்றும் காட்டுகின்றன.

வேலைநிறுத்த நடவடிக்கை அக்டோபர் 12 இல் இருந்து தொடங்கி அனைத்துப் பிரெஞ்சு சுத்திகரிப்பு ஆலைகளிலும் பரவியது. இத்தொழில்துறை நடவடிக்கையும், மார்செயிலுள்ள Fos-Lavera எண்ணெய்த் துறைமுக வேலைநிறுத்தமும் நாட்டின் அனைத்துச் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தக் கட்டாயப்படுத்தின. பிரான்ஸ் முழுவதும் பாரிய விநியோகத் தடைகளும் பெட்ரோல் நிலையங்களில் பீதியில் வாங்குதலும் ஏற்பட்டன. இதன் விளைவாக பிரான்ஸில் பெட்ரோல் நிலையங்களில் கால் பகுதிக்கும் மேலானவற்றில் எரிபொருள் விற்பனைக்கு இல்லாமல் போயிற்று. இந்த நெருக்கடியை சார்க்கோசி அரசாங்கம் எதிர்கொண்டபோதுதான், தொழிற்சங்கள் தலையிட்டு கிரோண்புயி சுத்திகரிப்பு ஆலையில் வேலைநிறுத்தத்தை பொலிஸ் முறியடிப்பதற்கு உதவின.

கிரோண்ட்புயியிலுள்ள பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் டோட்டலின் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். இந்நிறுவனம் பிரான்ஸின் 12 சுத்திகரிப்பு ஆலைகளில் 6 ஐக் கட்டுப்படுத்துகிறது. இந்த நிலையம் ஆண்டிற்கு 5.7 மில்லியன் டன்கள் சுத்திகரிப்பு பெட்ரோலியப் பொருட்களை தயாரிக்கிறது. தலைநகரம் மற்றும் முக்கிய பாரிஸ் பகுதி, மற்றும் ஓர்லி, றுவஸ்சி-சார்ல்ஸ் டு கோல் விமான நிலையங்களுக்கும் விமானப் பெட்ரோலையும் அளிக்கிறது.

ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொழில்துறை நடவடிக்கை எரிபொருள் உற்பத்தியை முடக்கி, பிரெஞ்சுப் பொருளாதாரத்தையும் முடக்கிய வகையில், பிரெஞ்சு அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலைகளை மீட்பதற்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பக் கட்டாயப்படுத்துவதற்கும் பொலிஸிற்கு உத்தரவிட்டது. வேலைநிறுத்த முறியடிப்பு பொலிஸார் தெற்கு பிரான்ஸிலுள்ள Fos, மற்றும் Donges, Le Mans, Le Rochelle ஆகிய இடங்களில் இருக்கும் எண்ணெய்க் கிடங்குகளையும் தாக்கினர்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள், குறிப்பாகப் பாரிஸ் பகுதியில் ஏற்பட்டிருந்த இடர்களினால், Seine-et-Marne வின் உள்ளூர் அதிகாரிகள் கிரோண்ட்புயி சுத்திகரிப்பு ஆலை செயற்பட வேண்டும் என உத்திரவிட்டு அங்குள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்தினர். கட்டாயப்படுத்திய உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது: “வேலைநிறுத்தம் தொடர்வது பொது ஒழுங்கில் (பற்றாக்குறைகள், கலகங்கள் என) தீவிர தொந்திரவுகளுக்கு வகை செய்கிறது.” பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற உத்தரவை மீறும் தொழிலாளர்கள் ஆறு மாதகால சிறைத்தண்டனை மற்றும் 10,000 ஈரோக்கள் அபராதம் கட்ட வேண்டும் என்றும் உத்தரவானது அச்சுறுத்தியது.

அக்டோபர் 22 அதிகாலையில்  சுத்திகரிப்பு ஆலைத் தடுப்புக்களை அகற்றுவதற்கு பொலிஸ் குவிக்கப்பட்டது. AFP அறிக்கை ஒன்று கூறியுள்ளபடி, “நான்கு இராணுவப் பொலிஸ் வாகனங்கள் காலை 3 மணியளவில் வந்தன, சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டன. அங்கு பொலிசார் பணி செய்ய வேண்டிய தொழிலாளர்கள் பெயரைக் குறிப்பிட்டனர்.”

பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) கிரோண்ட்புயி பிரிவின் பிரதிநிதி, WSWS னால் தொடர்பு கொள்ளப்பட்டபோது, தங்கள் பணியிடங்களை ஆக்கிரமித்திருந்த கிரோண்ட்புயி தொழிலாளர்களுடன் மற்ற தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் சேர்ந்துகொண்டனர் என்று விளக்கினார். அவர்கள் சுத்திகரிப்பு ஆலையின் நுழைவாயிலில் மனிதச் சங்கிலி ஒன்றை அமைத்து ஆணையிடப்பட்ட தொழிலாளர்கள் உள்ளே செல்லமுடியாமல் தடுக்க முயன்றனர். ஆனால் நுழைவாயிலில் இருந்த கூட்டத்தை அகற்றுவதற்கு பொலிஸார் முயன்றவுடன் சிறு மோதல்கள் வெடித்தன. பொலிஸார் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியதுடன் இடத்திலிருந்து அனைவரையும் அகற்றினர். மூன்று தொழிலாளர்கள் இதில் காயமுற்றனர்.

தாக்குதலின் தீவிரத் தன்மையைக் குறைக்கும் வகையில் CGT பிரதிநிதி கூறினார்: “மூன்று பேர் காயமுற்றனர். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே தாக்கப்படவில்லை. ஒருவர் தரையில் விழுந்தார், மற்றொருவர் ஏற்கனவே தரையில் விழுந்துகிடந்தார்.” உண்மையில் CGT பிரதிநிதியின் சொந்தக்கூற்றே பொலிஸார் வேண்டுமென்றே வேலைநிறுத்தம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்பதைத் தெளிவாக்குகிறது.

அவர் மேலும் கூறினார்: “ஒரு காயமுற்ற தொழிலாளி 10 நாட்கள் மருத்துவ விடுப்பைப் பெற்றார். மருத்தவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த மற்ற இருவரும் உடனேயே சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.”

கிரோண்ட்புயியில் பொலிஸ் தலையீட்டு தினத்தில் எடுக்கப்பட்ட வீடியோக் காட்சி, உண்மையில் தொழிற்சங்கங்கள் பொலிஸுடன் நெருக்கமாக ஆலையை மீண்டும் திறக்கவும் எண்ணைய்த் துறை முற்றுகையை முடித்துக் கொள்ளவும் செயல்பட்டனர் என்பதைத்தான் காட்டுகிறது. மோதல்களைத் தொடர்ந்து தொழிற்சங்கவாதிகள் அமைதிக்கு அழைப்பு விடுத்து, பொலிஸுடன் பேசி, தாங்கள் வேலைத்தள பொறுப்பைப் பெற வேண்டும் என்றும் எவ்வித நிகழ்வுகளையும் தவிர்க்க விரும்பினர் என்றும் கூறினார்கள். பணி செய்ய ஆணையிடப்பட்ட தொழிலாளர்கள் எரிபொருள் விநியோகத்திற்கான செயற்பாடுகளை மீண்டும் தொடக்குமாறு உத்திரவிடப்பட்டனர்.

ஒரு CGT செய்தித் தொடர்பாளர் கூடியிருந்த மறியலில் ஈடுபட்டவர்களிடம், “நாம் நிர்வாகத்தின் பிரதிநிதி ஒருவருடன் சேர்ந்து தொழிலாளர்கள் எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை நிரப்ப அனுமதிக்கும் செயல்களைத் தொடங்க முற்படுவோம். இத்தொழிலாளர்கள் ஆணைப்படி பணிசெய்ய வேண்டியிருக்கும், பின்னர் விரும்பும்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம்என்று கூறியதை வீடியோ காட்டுகிறது.

இதே வீடியோவிலிருந்து ஒரு காட்சி டோட்டல் நிர்வாகப் பிரதிநிதி ஒருவர் CGT அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஆணையிடப்படும் தொழிலாளர்களின் பெயர்களை வாசிப்பதைக் காட்டுகிறது. புகைப்படக்கருவி மூலம் வந்துள்ள படங்கள் ஆணையிடப்பட்ட தொழிலாளர்கள் மறியல் கூட்டத்தில் வழியே புகுந்து உள்ளே செல்வதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில் CGT அதிகாரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களுக்கு வழிவிடுமாறு கேட்டுக் கொள்கிறார்.

வீடியோக் காட்சிகள், தொழிற்சங்கங்கள் இழிந்த, பயனற்ற எதிர்ப்புக்களைக் காட்டுவதைத்தான் புலப்படுத்துகின்றன. சுத்திகரிப்பு ஆலையின் CFDT மற்றும் CGT  அதிகாரிகள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் காலின் கீழ் மிதிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவது காட்டப்படுகிறது. CGT-Total தலைவர் சார்ல்ஸ் பௌலார் ஜனநாயகத்தின் இறப்பிற்கு ஒரு நிமிட மௌனம் கடைப்பிடிக்குமாறு கோருகிறார். இறுதிப்பாடலை அடுத்து, ஒரு சவப்பெட்டி முழுத் தீவிர உணர்வுடன் எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் எரியூட்டப்படுகிறது. CGT பிரெஞ்சு தேசிய கீதமான Marseillaise இசைக்கிறது.

இக்கொள்கை தேசிய CGT தலைமை மற்றும் உள்ளூர் CGT பிரதிநிதிகளால் தொடரப்படுகிறது. பொலிஸ் கிரோண்ட்புயில் தாக்குதல் நடத்திய பின்னர், CGT அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொலிஸாரின் கிரோண்ட்புயி ஆக்கிரமிப்பை முறியடிக்கும் தாக்குதலுக்குஅடையாள எதிர்ப்புக்களைத்தான்காட்டும் என்று கூறியுள்ளது. அதாவது கிரோண்ட்புயி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சி ஏதும் இராது.

இது தொழிலாளர்களுக்கு எதிராக, சட்டத்தையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் முற்றிலும் இழிவுற நடத்திய விதத்தில், அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. கட்டாயப்படுத்திய வேலை ஆணையை தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் சவால் விட்டனர். நீதிமன்றமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தது. மறுநாளே உள்ளுர் அதிகாரிகள் சுத்திகரிப்பு ஆலையில் கட்டாய வேலைக்கான ஆணையைய மறுபடியும் பிறப்பித்தனர்.

தொழிற்சங்கங்கள் பொலிஸின் வேலைநிறுத்த முறியடிப்பைச் சவாலுக்கு அழைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது கிரோண்ட்புயியில் அவர்கள் நடந்து கொண்ட முறையில் மட்டும் காட்டப்படவில்லை.  CRS கலகம் அடக்கும் பிரிவுப் பொலிசை ஒரு வாரம் முன்பு நடைபெற்ற முற்றுகையை முறியடிக்க Fos ஆலைக்கு சார்க்கோசி அனுப்பியதில் தெளிவாகிறது. Fos சுத்திகரிப்பு எண்ணெய் கிடங்கு தெற்கு பிரான்ஸில் மார்செய்க்கு அருகே ஒரு மூலோபாய எண்ணெய்ச் சேமிப்புக் கிடங்கு ஆகும். (See மார்செய் எண்ணெய் கிடங்குகளின் ஆக்கிரமிப்பை கலக தடுப்பு பொலிஸ் எவ்வாறு முறித்தது”)

Fos எண்ணெய் கிடங்கு வேலைநிறுத்தமானது தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டது, சார்க்கோசி அரசாங்கத்திற்கு அதன் வேலைநிறுத்த முறியடிப்பு நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கும், கிரோண்ட்புயி போன்ற மற்ற ஆலைகளில் அடக்குமுறையைத் தொடரவும் ஊக்கமளித்தது.

வேலைநிறுத்தங்களை தகர்ப்பதற்கு அரசிற்கு உதவி, பெட்ரோல் நிலையங்கள் மீண்டும் விநியோகங்களைப் பெறுவதற்கு உதவியபின்ஆளும் வர்க்கத்திற்கு முழு எண்ணெய்த்துறை வேலைநிறுத்தங்களையும் எப்படி முடிவிற்குக் கொண்டுவருவது என்று தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூறின.

Le Journal du Dimanche  கொடுத்துள்ள தகவல்: “தொழிற்சங்கங்கள் வலிமையால் முற்றுகைகளை முறித்தல் என்பது மீண்டும் எரிபொருளை விநியோகிக்க உதவும், ஆனால் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புவது என்பது Fos-Lavra  மற்றும் Le Havre போன்ற எண்ணெய் சுத்திகரிப்பு இறுதிப் பகுதிகளில் வேலைநிறுத்தம் முடிக்கப்படுவதைத்தான் நம்பியிருக்கும்.”

தொழிலாளர்களுடைய வேலைநிறுத்தங்களை விற்றுவிட்டதற்கு ஈடாக தொழிற்சங்கங்கள் அவற்றிற்கு எதுவும் பெற்றுத் தந்துவிடவில்லை. தேசிய அளவிலோசார்க்கோசி தன் வெட்டுக்களை இயற்றிய பகுதிஅல்லது கிரோண்ட்புயி போன்ற தனித் தொழிலிடங்களிலோ. எந்த நிபந்தனையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்புமாறு கிராண்ட்புயியில் கேட்டுக் கொண்டன என்று WSWS ஆல் கேட்கப்பட்டதற்கு, CGT பிரதிநிதி அப்பட்டமாகக் கூறினார்: “எந்த நிபந்தனைகளும் இல்லை. அதாவது ஏதேனும் ஒரு இடத்தில் இயக்கம் (வேலைநிறுத்தம்) முடிக்கப்பட வேண்டும்.”