WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
WikiLeaks cables cast
fresh light on coup against former Australian PM Rudd
விக்கிலீக்ஸ் தகவல்
தந்திகள் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ரூட்டிற்கு எதிரான ஆட்சிசதி பற்றி புதிய
தகவல்களைக் கொடுக்கின்றன
By Patrick O’Connor
8 December 2010
Back
to screen version
விக்கிலீக்ஸால் வழங்கப்பட்டுள்ள சமீபத்திய
சுற்று
அமெரிக்கத் தூதரக
தகவல்கள் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த கெவின் ரூட் பதவியில் இருந்து அகற்றப்பட்ட
ஜூன்
23-24 திகதிகளில்
நடைபெற்ற ஜனநாயக விரோத தொழிற்கட்சியின் ஆட்சி மாற்றத்தைச் சூழ்ந்திருந்த
நிலைமைகளைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
2008 மற்றும்
2009ல் அமெரிக்கத்
தூதரகம் ரூட்டின் செயல்கள்
பற்றிக் கடுமையான
மதிப்பீடுகளைத தொடர்ந்து வெளியிட்டது.
சீனாவிடத்தில் அவர்
கொண்டிருந்த மனப்பாங்கினை
அவை மையமாகக்
கொண்டிருந்தன.
முழு விவரங்களும்
இன்னும் வரவிருக்கையில்,
WSWS ஆட்சி மாற்றம்
நடந்தவுடனேயே, “பெய்ஜிங்கிற்கு
எதிராகப் பெருகிய முறையில் வாஷிங்டன் கொண்டுள்ள ஆக்கிரோஷமான நிலைப்பாடு
கான்பெர்ராவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புக்களில் ஒரு பெரிய காரணி
என்பதில் ஐயமில்லை.”
என்று குறிப்பிட்டது.
இத்தகவல்
தந்திகள் பிரதம மந்திரி ஜூலியா
கில்லர்ட் கொண்டுள்ள
பங்கு பற்றியும் தெரிவிக்கின்றன.
ரூட்டிற்கு எதிரான
ஆட்சிமாற்றத்தால் முக்கிய ஆதாயத்தை அடைந்துள்ள கில்லர்ட்,
ஒபாமா நிர்வாகத்தின்
சார்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
விக்கிலீக்ஸின்
ஆசிரியர் ஜூலியன் அசாங்கேயை இழிவாகச் சித்தரித்துக்காட்டும் அமெரிக்க வலதுசாரி
சக்திகளுடன் இணைந்த வகையில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியும் கூட்டத்தில் சேர்ந்து
ஒருதுளிச் சான்றுகூட இல்லாமல் ஆவணங்கள் வெளியிடப்பட்டது
“சட்டவிரோதம்”
என்று
அறிவித்துள்ளதுடன் அசாங்கே
மீது குற்றவிசாரணை
நடத்தப்படும் என்னும் அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கும்
ஆதரவு
கொடுத்துள்ளார்.
சமீபத்திய
தகவல்களின் சுருக்கங்கள் இன்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் அண்ட் ஏஜ்
செய்தித்தாட்களால் வெளியிடப்பட்டன.
இவை அமெரிக்கா
பெருகியமுறையில் சீனா ஒரு போட்டி உலகச் சகத்தியாக எழுச்சி பெற்றுவருவதை
எதிர்ப்பதில் தீவிரம் கொண்ட அமெரிக்க நிலைப்பாட்டின் இரு ஆண்டுக் காலம் பற்றிக்
கூறுகின்றன.
இன்னும்
வெளியிடப்படாத தகவல்கள்
2010ம் ஆண்டைச்
சேர்ந்தவை.
அது ரூட் பதவி
அகற்றப்பட்டதை
அடுத்து
உடனடியாக வந்த
காலக்கட்டம் ஆகும்.
ஆனால் இதுவரை
காணப்பட்டுள்ளதே வாஷிங்டனைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முக்கியப்
பொறுப்பு சீனாவைக் கட்டுப்படுத்தும் மூலோபாயத்திற்கு
அடிபணிந்து
நடக்கும் இளைய
பங்காளியாக இருந்து,
தேவைப்படும்போது
இராணுவ,
இராஜதந்திர
ஆதரவைத் தரவேண்டும்
என்பதுதான்.
அமெரிக்கத் தூதரகம்
ரூட்டிற்கு எதிராகக் கொண்டிருந்த சீற்றத்தின் பெரும்பகுதி வாஷிங்டனில் இயற்றப்படாத
வெளியுறவுக் கொள்கைகள் பலவற்றை அவர் தொடக்கியது என்பதுடன்,
குறைந்த பட்சம் அவை
அமெரிக்க அதிகாரிகளின் பரிசீலனைக்குக்கூட உட்படவில்லை என்பதுதான்.
கசிவுற்றுள்ள தகவல்கள்
“வெளியுறவுக்
கொள்கையில் தொடர்ச்சியான தவறுகளை”
விளக்குகின்றன.
டிசம்பர்
2008 ல் ரூட்
பதவியில் இருந்த முதலாண்டு பற்றிய பரிசீலனையைக் கொண்ட தகவல்
ஒன்று உள்ளது.
இது ஆஸ்திரேலியாவில்
அமெரிக்க தூதராக இருந்த ரோபர்டன் மக்கால்லமினால் எழுதப்பட்டது.
அத்தூதர் ரூட்டின்
இராஜதந்திர
“தவறான
நடவடிக்கைகள்” “மற்ற
நாடுகளைக் கலந்துகொள்ளமலோ,
ஆஸ்திரேலிய
அரசாங்கத்திற்குள் பிரிவுகளைக் கலந்து ஆலோசிக்கமாலோ திடீரென அறிவிப்புக்களை”
வழங்கும் போக்கினால்
ஏற்பட்டவை என்று அறிவித்துள்ளார்.
மேலும்
தொழிற்கட்சி
அரசாங்கத்தின்
“கணிசமான பெரும்
தவறுகள்”
பெப்ருவரி
5, 2008ல்
தொடங்கின என்றும் அப்பொழுது வெளியுறவு மந்திரியாக இருந்த ஸ்டீபன் ஸ்மித்
(இப்பொழுது
பாதுகாப்பு மந்திரி)
ஆஸ்திரேலியா இன்னும்
கூடுதலாக ஆஸ்திரேலியா,
அமெரிக்கா,
ஜப்பான் மற்றும்
இந்தியாவிற்கு இடையே
“நான்கு தரப்பு”
மூலோபாயப்
பேச்சுக்களுக்கு ஆதரவு தராது என்று அறிவித்தார் என்றும் தூதர் சுட்டிக்
காட்டியுள்ளார்.
இந்த
நால்வர் தரப்புப் பேச்சுக்கள் முதலில் மே
2007ல்
நடைபெற்றதுடன்,
சிங்கப்பூருடன்
சேர்ந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சிகள் செப்டம்பர்
2007ல் வங்காள
விரிகுடாவில்
நடத்தப்பட்டன.
பெய்ஜிங் இந்த
நான்கு நாடுகள் கூட்டிற்கு விரோதமாக இருந்ததில் வியப்பு இல்லை.
அத்தகைய கூட்டு
கிழக்கு ஆசியாவில் சீனாவின் மேலாதிக்கத்தைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது
என்று அது கருதியது.
சீன அரசாங்கம் இந்த
“நால்வர்
கூட்டை”
ஐ
“ஆசிய நேட்டோ”
என்று
முத்திரையிட்டது.
ஸ்டீபன் ஸ்மித்
ஆஸ்திரேலியா இக்குழுவில் இருந்து வெளியேறுகிறது என்ற அறிவிப்பு சீன வெளியுறவு
மந்திரி யாங் ஜீச்சியுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில்
அறிவிக்கப்பட்டது.
ஸ்மித் சீனாவின்
கவலையான நான்கு நாடுகள் கூட்டு பற்றி வெளிப்படையாகக் குறிப்பிட்டாலும்,
“அமெரிக்கா
சமீபத்திய வாரங்களில் இதே போன்ற நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது
[அதாவது,
நால்வர்
கூட்டை தொடர்வதில்லை
என],
அனைவராலும் இது
வரவேற்கப்படும் என்று நான் நம்புகிறேன்”
என்றும் கூறினார்.
ஆனால்
அமெரிக்கத் தூதரின் கருத்து முற்றிலும் வேறுபட்ட வகையில் இருந்தது.
கசிந்துள்ள தகவல்
தொழிற்கட்சி
அரசாங்கத்தின்
அறிவிப்பு வாஷிங்டனுடன்
“முன்கூட்டி கலந்து
பேசாமல்”
வந்துள்ளது என்று கூறுகிறது.
இந்த ஆவணம்
தொழிற்கட்சி பதவிக்கு வந்த
10 வாரங்களிலேயே,
வாஷிங்டன் ரூட் ஒரு
நம்பிக்கையான நண்பராக,
பசிபிக் பகுதியில்
அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சீனா விடும் சவாலைக் கட்டுப்படுத்தும் உந்துதலைக்
கொண்டிருப்பாரா என்ற கணிசமான சந்தேகங்களைக் கொண்டிருந்தது என்று ஆவணம்
சித்தரிக்கிறது.
ஜூன்
2008ல் ஆஸ்திரேலியப்
பிரதம மந்திரி ஆசிய-பசிபிக்
சமூகம் என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும்,
இந்தப் பரந்த
அரங்கில் பொருளாதார,
மூலோபாய உறவுகள்
ஒருங்கிணைக்கப்பட்டு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பெருகும் அழுத்தங்களில்
மத்தியஸ்தம் செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தார்.
இந்த முனைப்பை
அமெரிக்கத் தூதர் தனிப்பட்ட முறையில் எள்ளி நகையாடி,
“மற்ற நாடுகள்
எவற்றுடனும் கலந்து ஆலோசிக்காமல்
(தென்கிழக்கு ஆசிய
நாடுகள் உட்பட,
முக்கிய சிங்கப்பூர்
அதிகாரிகள் அதையொட்டி கருத்து தோன்றியவுடன் மடிந்து விட்டது என்று முத்திரையிட்டனர்)
தொடக்கப்பட்டது
என்றும்,
ஆஸ்திரேலிய அரசாங்கப்
பிரிவுகளுக்குள்ளும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்றும் கூறினார்
(இதில் அவர்
திட்டமிட்டிருந்த இக்கருத்தாய்வை வளர்க்க மூத்த தூதரான,
சிறப்புத் தூதராக
நியமிக்கப்பட இருந்த ரிச்சர்ட் வுல்கோட் உட்பட).
முன்னதாக
வெளியிடப்பட்ட ஒரு தூதரகத் தகவல் தந்தி மார்ச்
2009ல் ரூட்
அமெரிக்க வெளிவிவகார
செயலாளர்
ஹில்லாரி
கிளின்டனைச் சந்தித்து ஆசிய-பசிபிக்
சமூகம் கிழக்கு ஆசியாவில் ஒரு சீன
“மன்ரோக் கோட்பாடு”
வெளிவருவதைத்
தடுக்கும் வழிவகையாக வளர்க்கப்படலாம் என்று கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதம
மந்திரி “ஒருவேளை
ஏதேனும் தவறு”
நிகழ்ந்துவிட்டால்
“பலத்தை”
பயன்படுத்தப்படலாம்
என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்திய
விக்கிலீக்ஸ் தகவல்கள் இந்த விவாதத்திற்கு முன்பே சீனா பற்றிய ரூட்டின் நிலைப்பாடு
பற்றி வெளிவிவகாரத்துறையில் கணிசமான அவநம்பிக்கைத்தனம் இருந்தது என்பதை
சுட்டிக்
காட்டுகின்றன.
டிசம்பர்
2008ல் தூதர்
மக்காலமின் ஆய்வு ரூட் முன்னதாக ஜூன் மாதம் வெளியிட்டிருந்த அணுவாயுத பரவா மற்றும்
ஆயுதக் களைப்புக் குழு என்பதையும் தீவிரமாக ஒதுக்கித் தள்ளியது.
இந்த முனைப்பு
“ஜப்பானுக்கு
புகைப்படப் புகழ் பெறும் நோக்கத்துடன் ரூட் சென்றபோது வெளிவந்தது.
அவருடைய ஜப்பானிய
விருந்தனர்கள் முன்கூட்டியே போதுமான தகவல்களைப் பெறாததால் கூட்டு அறிக்கை ஒன்றை
வெளியிட மறுத்துவிட்டனர்.”
என்று அமெரிக்கத்
தூதர் எழுதியுள்ளார்.
மேலும் ரூட்
அணுவாயுதங்களைக் கொண்ட எந்த ஐக்கிய
நாடுகள்
பாதுகாப்புக்குழுவில் இருக்கும் எந்த நாடுகளையும் இது பற்றிக் கலந்து
ஆலோசிக்கவில்லை என்றும் ரஷ்யா இதையொட்டி ஒரு பொதுவான
எதிர்ப்பைக்
காட்டியுள்ளது என்றும் கூறினார்.
ரூட்டின்
அதிகாரிகளில் ஒருவர் அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவிப்பிற்கு சில மணி நேரம்
முன்னதாகத் தகவல் கொடுத்திருந்தார் என்றும்
“அதில்
முழு விவரங்கள் கொடுக்கப்படவில்லை”
என்றும் அவர்
எழுதியுள்ளார்.
மற்ற
அமெரிக்க
தகவல்கள் ரூட்டின்
“கட்டுப்பாட்டில்
ஆர்வம் என்ற வினோதத் தன்மை”
மற்றும்
“ரூட் ஒரு சிறிய
அளவு நிர்வாகி,
செய்தி ஊடகத்தை
நிர்வகிப்பதில் பெரும் கவனத்தைச் செலுத்துபவர்
என்றும்,
அந்த அளவிற்கு
கூட்டுழைப்பு மூலம் முடிவெடுப்பதற்கு
கவனம்
காட்டுவதில்லை”
என்னும் மூத்த
ஆட்சித்துறை அதிகாரிகளிடம் இருந்து தொடர்ந்து குறைகூறல் உள்ளது பற்றியும்
குறிப்பிடுகின்றன.
நவம்பர்
2009ல் தூதரக
பொறுப்பாளர் டான் க்ளூன் வெளியுறவுக் கொள்கையில் ரூட்
மேலாதிக்கம்
செலுத்தினார், “அவருடைய
வெளியுறவு மந்திரியை வெறும் சிறு காரியங்களைத்தான் செய்ய அனுமதித்தார்,
வெளியுறவு மற்றும்
வணிகத் துறையைப் பின்னுக்குத் தள்ளிய விதத்தில்
வெறும் அலங்காரக்
கடமைகள் செய்யத்தான் அனுமதித்தார்,”
என்றும்
எழுதியுள்ளார்.
தூதரக முகவர்
ரூட்டின் “தான்தோன்றித்தன,
இரகசியமாக
முடிவெடுக்கும் வழிவகை”
வெளியுறவுக்
கொள்கைகளில் பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்படுத்தும் என்றும் முடிவுரையாகக்
கூறியுள்ளார்.
பிரதம
மந்திரியாக இருத்தப்பட்டதில் இருந்து,
ஜூலியா கில்லர்ட்
அமெரிக்கக் கூட்டிற்குச் சிறிதும் குழப்பமும்
அற்ற
உறுதிப்பாட்டை
வலியுறுத்தி வந்துள்ளதுடன்,
ஆப்கானிஸ்தானில்
நடைபெறும் புதிய காலனித்துவ வகைப் போரில் ஆஸ்திரேலியப் பங்கிற்கு குறைந்த பட்சம்
அடுத்த பத்து ஆண்டுகளுக்காவது உறுதிமொழி கொடுத்துள்ளார்.
பிரதம மந்திரி
என்னும் முறையில் ரூட் மத்திய ஆசியாவில் இன்னும் கூடுதலான ஆஸ்திரேலியப் படைகள்
நிலைப்பாடு கொள்ள வேண்டும் என்னும் அமெரிக்க அரசாங்க மற்றும் இராணுவ ஆலோசனைகளை
எதிர்த்துள்ளார்.
இதற்கு வாஷிங்டன்
காட்டிய பிரதிபலிப்பு
இன்னும்
பகிரங்கமாக்கப்படாத கசிவுத் தகவல்களில் விரிவாக இருக்கக் கூடும்.
கடந்த மாதம்
AUSMIN பேச்சுக்கள்
ஹில்லாரி கிளின்டன் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்தியதில்,
கில்லர்ட் இன்னும்
கூடுதலான அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறைப் பிரிவுகள் ஆஸ்திரேலியாவில் தளமாக
கொண்டிருக்கலாம்
என்று அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க
இராணுவத்தின் சக்தி வாய்ந்த இராணுவத் தலைவர்களில் ஒருவரும் அமெரிக்கப் பசிபிக்
கட்டுப்பாட்டின் தலைவருமான அட்மைரல் பாப் வில்லர்ட் இப்பொழுது நாட்டில் சுற்றுப்
பயணம் மேற்கொண்டு எங்கு அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்படலாம் என்பதற்கான
பாதுகாப்புத் தளங்களை அடையாளம் காண்கிறார்.
இத்தளங்கள்,
உண்மையில் புதிய
அமெரிக்க ஆஸ்திரேலியக் கூட்டு நிலையங்களாகச் செயல்படக்கூடியவை,
சந்தேகத்திற்கு
இடமின்றி சீனாவுடனான அமெரிக்க மோதலில் முக்கிய பங்கைக் கொள்ளும்.
கிழக்கு
ஆசியாவில் அமெரிக்க இராணுவ மூலோபாயத்துடன் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தை
நிபந்தனையின்றி பிணைக்கும் வகையில்,
கில்லர்ட்,
ரூட்டிற்கு முன்பு
தொழிற்கட்சி தலைவராக இருந்த கிம் பீஸ்லியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்.
இன்று
வெளியிடப்பட்டுள்ள கசிவுத் தகவல் தந்திகளில் ஒன்று
2008ல்
எதிர்த்தரப்புத் தலைவராக இருந்த பீஸ்லி தூதர் மக்காலமைச் சந்தித்து,
ஒரு எதிர்கால
தொழிற்கட்சி
அரசாங்கம் சீனாவிற்கு
எதிரான அமெரிக்காவுடன் சேர்ந்து போராடும் என்ற உத்தரவாதத்தை அளித்திருந்தார்.
ஆஸ்திரேலியா,
தைவான் மூலம்
ஏற்படக்கூடிய ஒரு அமெரிக்க-சீனப்
போரில் ஒதுங்கியிருக்கலாம் என்ற ஹோவர்ட் அரசாங்கத்தின் கருத்தை எதிர்தார்.
“அமெரிக்காவிற்கும்
சீனாவிற்கும் இடையே ஒரு போர் ஏற்பட்டால்,
அமெரிக்காவிற்கு
ஆதரவாக ஆஸ்திரேலிய இராணுவம் திறமையுடன் நிற்கும் என்பது தவிர வேறு மாற்றீடு ஏதும்
இல்லை.”
என்று தொழிற்கட்சி தலைவர்
அறிவித்தார். “இல்லாவிடின்,
கூட்டு உண்மையில்
மடிந்து புதைந்துவிடும்,
அவ்வாறு நடக்கக்
கூடாது என்றுதான் ஆஸ்திரேலியா எப்பொழுதும் கருதும்.”
என்றும் கூறினார்.
விக்கிலீக்ஸில் கில்லர்டின் ஆத்திரமூட்டும்
தாக்குதல் பற்றி
அசாங்கே பதிலடி கொடுத்துள்ளார்;
இது
Australian ல் இன்று
ஒரு தலையங்க
கட்டுரையாக
வெளியிடப்பட்டுள்ளது.
“ஆதரவற்ற
உண்மைகளை வெளிப்படுத்தியதற்காக தகவல் கொண்டுவருபவரைச் சுட்டு விடாதீர்கள்”
என்ற தலைப்புக்
கொண்ட கட்டுரையில் அசாங்கே அவருக்கு எதிராக இயக்கப்பட்டுள்ள பல அச்சுறுத்தலைகளைச்
சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஜூலியா கில்லரடும்
அவருடைய அரசாங்கமும் காட்டும் இத்தகைய உணர்வுகள் பற்றி ஆஸ்திரேலியர்கள் எந்தப்
பெருமையும் கொள்ளக்கூடாது,
இவை இழிந்த
தன்மையுடையவை”
என்று செய்தியாளர்
எழுதியுள்ளார். “ஆஸ்திரேலிய
அரசாங்கத்தின் அதிகாரங்கள் முற்றிலும் அமெரிக்க முடிவுப்படிதான் உள்ளன,
அது என்னுடைய
ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை இரத்து செய்வதாயினும் சரி,
விக்கிலிக்ஸ்
ஆதரவாளர்களை உளவு பார்த்தாலும் மற்றும் துன்புறுத்தினாலும் சரி.
ஆஸ்திரேலிய
அரசாங்கத்தின் தலைமை வக்கீல் ஆஸ்திரேலியக் குடிமக்கள்மீது புனையப்படும்
குற்றச்சாட்டுக்களுக்காக நடக்கும் அமெரிக்க விசாரணைகளுக்கு அனைத்து உதவியையும்
செய்வதுடன் அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பவும் உதவுகிறார்….
தகவல் கொடுப்பவரைச்
சுட்டூவீழ்த்த கில்லரட் அரசாங்கம் முயல்கிறது,
ஏனெனில் அது உண்மை
வெளிப்படுவதை விரும்பவில்லை,
அதுவும் தன்னுடைய
இராஜதந்திர ,
அரசியல்
செயற்பாடுகள்
பற்றிய தகவல்கள்
வெளிவருவதை.” |