WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
விக்கிலீக்ஸூம்,
இரகசிய இராஜாங்கதந்திரமும்
Joseph Kishore
7 December 2010
Use
this version to print | Send
feedback
கைப்பற்றப்பட்ட இராஜாங்க கசிவுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்
—உலகின் வெவ்வேறு பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட கீழ்தரமான
சூழ்ச்சிகளைக் குறித்த புதிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் நிலையில்—
அமெரிக்க அரசாங்கம் எதிர்தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அது விக்கிலீக்ஸ்
ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேவையும்,
அவ்வமைப்பின் வலைத்
தளத்தையும் குறிவைத்து ஒரு சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
எவ்வித
குற்றத்தையும் செய்திராத விக்கிலீக்ஸிற்கு எதிரான மாயவேட்டையை நியாயப்படுத்த,
கணக்கில்லா அரசாங்க
அதிகாரிகளும்,
ஊடக விமர்சகர்களும்
இரகசிய இராஜதந்திரத்தையும்,
பேச்சுவார்த்தைகளை
நடத்துவதற்கான நடைமுறை வழக்கத்தை அறிவித்தலையும்,
திட்டங்கள்
வகுப்பதையும்,
ஒரு நேர்மறையான
நல்லெண்ணத்திற்காகவும்,
அமைதி மற்றும்
ஜனநாயகத்தின் ஒரு பாதுகாப்பிற்காகவும் கூட,
மக்களின்
முதுகுக்குப் பின்னால் உடன்படிக்கைகளைச் செய்யும் செயல்களையும் பாதுகாப்பதில்
இறங்கி இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான கசிவுகளை வெளிப்படுத்தி இருப்பதானது,.
சர்வதேச
பாதுகாப்பையும் நவீன பொருளாதார செல்வசெழிப்பையும் பாதுகாக்கும் சாசனங்கள் மற்றும்
பேச்சுவார்த்தைகள்,
கூட்டணிகள் உறவுகள்
மீதான,
மற்றும் சர்வதேச சமூகத்தின்
மீதான ஒரு தாக்குதலாக இருக்கிறது என்று அறிவித்ததன் மூலமாக,
விக்கிலீக்ஸைக்
குற்றஞ்சாட்டி குரலெழுப்புவதில் அமெரிக்க வெளிவிவாகரத்துறை செயலாளர் ஹிலாரி
கிளின்டன் முதன்மை நபராக இருக்கிறார்.
“சர்வதேச
பாதுகாப்பை பாதுகாப்பதற்கான இத்தகைய பேச்சுவார்த்தைகளின் உண்மையான உள்சாரம் என்ன?”
அமெரிக்க
அரசாங்கத்தால் நடத்தப்பட்ட மோசடி உறவுகள் மற்றும் கிரிமினல் செயல்பாடுகளின்
தொடர்பைக் குறித்த ஒரு சிறு உட்பார்வையை தான் விக்கிலீக்ஸ் ஆவணங்கள்
அளிக்கின்றன—அவற்றின் ஒரு மிகச் சிறிய பகுதி தான் இதுவரையில் பொதுமக்களுக்காக
கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மார்ச்
2009இல்
கிளின்டனுக்கும்,
அப்போதைய ஆஸ்திரேலிய
பிரதம மந்திரி கெவின் ரூட்டிற்கும் இடையிலான ஓர் உரையாடல் ஒரு வெளிப்படையான
எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இது நேற்றைய உலக
சோசலிச வலைத் தளத்தில்
எழுதப்பட்டிருந்தது. 2
ட்ரில்லியன் டாலர்
மதிப்பிலான சொத்துக்களை சீனா கையில் வைத்திருக்கும் நிலையில்,
சீனாவின் செல்வாக்கு
வளர்ந்து வருவதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையில் அமெரிக்காவிற்கு
இருக்கும் சிக்கல் குறித்து கிளின்டன் குறைபட்டார்.
“உங்கள் வங்கியுடன்
நீங்கள் எவ்வாறு கடுமையாக நடந்து கொள்ள முடியும்?”
என்று அவர் கேள்வி
எழுப்பினார்.
அமெரிக்க
செல்வாக்கின்கீழ் இருக்கும் ஓர் ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தின் கட்டமைப்பிற்குள் சீனாவையும் ஒருங்கிணைத்து வைக்கலாம் என்று தாம்
நம்புகிற போதினும்,
"ஒருவேளை ஏதேனும்
குளறுபடி நடந்தால்,
துருப்புகளைக்
களத்தில் இறக்க"
அமெரிக்காவும்,
அதன் நேசநாடுகளும்
தயாராக இருப்பது அவசியமாகும் என்று ரூட் வலியுறுத்தினார்.
அமெரிக்காவிற்கும்,
சீனாவிற்கும்
இடையில் உருவாகும் ஒரு யுத்தம் ஓர் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும்.
அதுவும் ஒரு
வாய்ப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையானது,
வாஷிங்டனின் இரகசிய
இராஜதந்திரத்தில் இராணுவ சதித்திட்டங்களும் உள்ளடங்கி இருக்கின்றன என்பதற்கு ஓர்
அறிகுறியாக வெளிப்பட்டிருக்கிறது.
சீனா அதன் செலாவணியை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்ற
கோரிக்கைகளுடன் சேர்ந்து,
சீனாவிற்கு எதிராக அதன் ஆத்திரமூட்டல்களையும் அமெரிக்கா கடந்த சில மாதங்களில்
கூர்மையாக தீவிரப்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனக்கடலில் தியாவு/சென்காகூ
தீவுகள் மீது சீனாவிற்கும்,
ஜப்பானுக்கும் இடையிலான பிரச்சினையை விவாதிக்கும் போது,
கிளின்டனே கூட கடந்த மாதம் ஓர் அமெரிக்க-ஜப்பானிய
இராணுவ உடன்படிக்கை குறித்து மேற்கோளிட்டுக் காட்டி இருந்தார்.
முதலாம் உலக
யுத்தத்திற்கும்,
இரண்டாம் உலக
யுத்தத்திற்கும் இட்டுச் சென்ற காலக்கட்டங்களையே தற்போதைய சர்வதேச உறவுகள் மேலும்
மேலும் ஒத்திருக்கின்றன.
இதில் அமெரிக்கா
தொடர்ந்து ஸ்திரமில்லா முரண்பாடுகளின் மையத்தில் இருக்கிறது.
நூறு
ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்த இரத்தந்தோய்ந்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்
யுத்தங்களைக் கட்டியமைத்த அமெரிக்கா,
புதிய
ஆத்திரமூட்டல்களைத் தயாரித்து வருகிறது.
முதலாளித்துவ
நெருக்கடியோடு சேர்ந்து சர்வதேச பதட்டங்களும் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு மூலையிலும்
உலகளாவிய அச்சுறுத்தலில் மாட்டிக்கொண்டிருக்கும் பெரும்சக்திகளின் நலன்கள்,
ஐரோப்பாவிலும்,
ஆசியாவிலும்,
ஆபிரிக்காவிலும்,
இலத்தீன்
அமெரிக்காவிலும்,
மத்திய கிழக்கிலும்
நிலவும் கணக்கில்லா உள்நாட்டு மோதல்களை அணுஆயுதம் தாங்கிய அரசுகளுக்கு இடையிலான
உலகளாவிய பேராபத்துக்களுக்குள் திருப்ப அச்சுறுத்துகின்றன.
இராஜதந்திர
இரகசியத்தின் பிரச்சினையில்,
ஆரம்பகாலக்கட்டங்களில் அமெரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மனோபாவங்களை மீண்டும்
நினைவுக்கு கொண்டு வருவது மதிப்புடையதாக இருக்கும்.
முதலாம் உலக
யுத்தத்திற்குப் பின்னர்,
1918இல் அமெரிக்க
ஜனாதிபதி ஊட்ரோவ் வில்சன்,
இராஜாங்க விஷயங்களை
வெளிப்படையாக கையாளும் ஒரு சகாப்தத்திற்கு அழைப்புவிடுத்தார்.
அவருடைய
பதினான்கு அம்ச திட்டத்தை அறிவிக்கையில்,
அவர் அறிவித்ததாவது:
“அமைதிக்கான
செயல்முறை,
அவை தொடங்கும் போதே,
முற்றிலும்
வெளிப்படையாக இருக்க வேண்டும்;
அதற்குப் பின்னரும்
அவை எவ்வகையான இரகசிய புரிதல்களையும் அனுமதிக்க கூடாது;
ஈடுபடவும் கூடாது
என்பது நம்முடைய விருப்பமாகவும்,
தேவையாகவும் உள்ளது.
செல்வங்களைக்
குவிப்பது,
வெற்றி கொள்வது
போன்ற காலங்கள் போய்விட்டன;
இதேபோன்று
குறிப்பிட்ட அரசாங்கங்களின் நலன்களுக்குள் நுழையும் இரகசிய உடன்படிக்கைகளும்
போய்விட்டன;
அதேபோன்று உலக
அமைதியைக் கெடுக்கக்கூடிய சில எதிர்பாரா காலக்கட்டங்களும் போய்விட்டன.”
"அமைதி
குறித்த வெளிப்படையான உடன்படிக்கைகள்,
வெளிப்படையாக கொண்டு
வரப்பட்டதாக இருக்க வேண்டும்,
அதன் பின்னர்
எந்தவிதத்திலும் தனிப்பட்ட சர்வதேச புரிதல்கள் இல்லாமல்,
ஆனால் இராஜாங்க
விஷயங்கள் எப்போதும் வெளிப்படையாகவும்,
பொதுமக்களின்
பார்வையிலும் நடக்க வேண்டும்"
என்பதற்காக
விடுக்கப்பட்ட அழைப்பு தான் பதினான்கு அம்ச திட்டத்தில் முதலாவதாக இருந்தது—இதை
யுத்தத்திற்குப் பிந்தைய ஓர் உடன்படிக்கையின் அடித்தள முன்மொழிவாக வில்சன்
முன்னிருத்தினார்.
வில்சனின்
சமரசவாதம்
(யுத்தமின்றி
பேச்சுவார்த்தையில் தீர்க்கும் முறை),
இராஜாங்க விஷயங்களை
வெளிப்படையாக கையாள்வதற்கான அழைப்பும் முற்றிலும் போலித்தனமானது.
இது அதன் ஐரோப்பிய
போட்டியாளர்களுக்கு குழிபறிப்பதற்கான அமெரிக்க முயற்சிகளால் உந்தப்பட்டிருந்தது.
இதன்மூலம்
மேலெழுந்து வந்த ஏகாதிபத்திய சக்தியாக இருந்த அமெரிக்க முதலாளித்துவம்,
பழைய
காலனியாக்கத்தையும்,
இங்கிலாந்தின்
செல்வாக்கின்கீழ் உருவான நாடுகளுக்குடனான கட்டமைப்புகளையும் உடைப்பதிலிருந்து
ஆதாயம் பெற முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
அந்த பதினான்கு
அம்சங்கள் பேரழிவுமிக்க யுத்தத்தையும்,
ரஷ்ய புரட்சியையும்
ஒட்டி முதலாளித்துவத்திற்குப் புத்துணர்வளிக்க நோக்கம் கொண்டிருந்தது.
பிராந்தியங்கள்,
சந்தைகள் மற்றும்
ஆதாரவளங்களுக்கான உந்துதலையும்,
யுத்தத்தையும்
உருவாக்கி இருந்த—உலகை துண்டுதுண்டாக வெட்டுவதற்கான ஏகாதிபத்தியத்தின்
நோக்கத்தை—யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து சக்திகளின் உண்மையான யுத்த நோக்கங்களையும்
ஆவணப்படுத்த,
லெனின் மற்றும்
ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்த புரட்சிகர அரசாங்கம் அது வைத்திருந்த அனைத்து
இரகசிய உடன்படிக்கைகளையும் உடனடியாக வெளியிட்டது.
இருந்தபோதினும்,
இராஜாங்க
விவகாரங்கள் வெளிப்படையாக கையாளப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பானது,
இரகசிய
பேச்சுவார்த்தைகளும்,
உடன்படிக்கைகளும்
உலக அமைதிக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது என்ற பரந்த கண்ணோட்டத்தை
அங்கீகரிப்பதாக இருந்தது.
ஜனநாயகத்தின்
புறக்கணிக்கப்பட்ட அடிப்படை கருத்துருக்கள்,
வெளிநாட்டு
கொள்கைகளை மக்கள் பார்வையிலிருந்தும்,
கட்டுப்பாட்டில்
இருந்தும் நீக்கிவிட்டிருக்கிறது.
தற்போது
அமெரிக்கா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறது என்பது தான் இந்த
இரகசியங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது.
அமெரிக்க
முதலாளித்துவத்தின் பலம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில்,
பொய்கள்,
குற்றங்கள் மற்றும்
ஏகாதிபத்திய சூழ்ச்சிகளால் கலந்திருக்கும் அதன் வெளிநாட்டு கொள்கையின் உட்பொருள்கள்
அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்கா இப்போது
இடைவிடாமல் சூறையாடும் யுத்தங்களில் ஈடுபட்டுள்ளது;
அத்துடன் அடுத்த
யுத்தத்திற்கும் தொடர்ந்து திட்டமிடுகிறது.
அமெரிக்காவின் கொள்கை முழுவதுமாக இரகசியம் மற்றும் பொய்களைச் சார்ந்திருக்கிறது.
ஏனென்றால்,
அது அமெரிக்க
மற்றும் உலக மக்களின் நலன்களுடன் சமரசப்பட முடியாத முரண்பாட்டில் உள்ளது.
சமீபத்தில் வெளியான
விக்கிலீக்ஸ் ஆவண தொகுப்புகளுக்கு அது காட்டிய உத்தியோகபூர்வ எதிர்வினை,
ஈராக் மற்றும்
ஆப்கானிஸ்தான் யுத்த குற்றங்களை வெளிப்படுத்திக் காட்டிய முந்தைய வெளியீடுகளுக்கான
எதிர்வினைகளை விட மிகவும் கொடூரமாக இருக்கிறது.
அரசுத்துறை
கசிவுகளின் வெளியீடுகள்,
உலகின் ஒவ்வொரு
பாகத்திலும் அமெரிக்க கொள்கையைக் கொண்டு செல்வதில் முக்கியமாக ஸ்திரமின்மையை
ஏற்படுத்தியுள்ளது.
இரகசிய
இராஜதந்திரங்களை தோற்றப்பாட்டளவில் ஒருமித்து பாதுகாத்தல் மற்றும் விக்கிலீக்ஸைக்
குற்றஞ்சாட்டுதல் ஆகியவற்றில் தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகள் மத்தியில்,
ஊடகங்கள் உட்பட
ஆளும் மேற்தட்டுகளுக்குள் எந்தவித ஜனநாயக நனவின் அடித்தளத்திலும் ஒரு
கருத்துவேறுபாடும் இல்லை.
Watergate மற்றும்
Pentagon Papers
காலக்கட்டங்களின்
போது,
ஊடகங்களின் சில பிரிவுகள்
இரகசிய உடன்படிக்கைகளையும்,
மக்களைக் குறித்த
அரசாங்கத்தின் பார்வையும் வெளிப்படுத்துவதை அவற்றின் வேலையாக கொண்டிருந்தன.
ஆனால் இன்று,
அமெரிக்க அரசாங்கம்
அசாங்கேயிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் போது,
பல மேதாவிகளும்,
விமர்சகர்களும்
அதன்மீது பார்வையைத் திருப்புவதாக கூட இல்லை.
இந்த இரகசிய
பேச்சுவார்த்தைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவி இருப்பதன் மூலமாக விக்கிலீக்ஸ்
உலக மக்களுக்கு ஒரு பெரும் சேவையை செய்திருக்கிறது.
பெருநிறுவன மற்றும்
நிதியியல் மேற்தட்டுக்களின் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் நிலையில்,
இந்த வெளியீடுகள்
அதன் கரங்களைப் பலப்படுத்தி இருக்கிறது.
எவ்வாறிருப்பினும்,
வெளியீடுகளுக்காக
உலக சக்திகளால் காட்டப்படும் கடுமையான எதிர்வினையானது,
ஏகாதிபத்திய
சூழ்ச்சியையும் யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதென்பது அவற்றைக்
கட்டியெழுப்பி வரும் முதலாளித்துவ சமூக உறவுகளுக்கு முடிவு கட்டுவதன் மூலமாக
மட்டுமே ஏற்படும் என்பதை எடுத்துக்காட்டவே உதவுகிறது. |