WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Who is French trade
union leader Bernard Thibault?
யார் இந்த பிரெஞ்சு
தொழிற்சங்க தலைவர் பேர்னார்ட் திபோ?
By
Anthony Torres
4 December 2010
Back to
screen version
ஜனாதிபதி
நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான பிரெஞ்சுத்
தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின்
அனுபவங்கள் பல முக்கிய அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளன.
இவற்றுள்
நடவடிக்கைகளைத் தோற்கடிக்கச்
செய்ததில் மிக முக்கியமானது பொதுவாகத் தொழிற்சங்கங்களின் பங்காகும்,
குறிப்பாக பொதுத் தொழிலாளர்
கூட்டமைப்பும் (CGT)
அதனுடைய தலைவர் பெர்னார்ட் திபோவினுடைய பங்காகும்.
சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிரான பெரும் விரோதப் போக்கு இருந்தாலும்,
திபோ ஒரு பொது
வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுதலை
“அருவமானது”,
“விளங்கிக் கொள்ள முடியாதது”
என்று வலியுறுத்தியுள்ளார்.
துறைமுகங்கள்,
எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள்
மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் ஆகியவற்றில் நடந்த வேலைநிறுத்தங்களை அவர் கைவிட்டு,
தொழிலாளர்களின் தடைகளை
முறியடிப்பதற்கு பொலிஸ் தலையீடு ஏற்பட்டதை எதிர்ப்பதற்குத் தொழிலாள வர்க்கத்தை
திரட்டவும் மறுத்துவிட்டார்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தான்
சார்க்கோசியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக வலியுறுத்தி,
திபோ எதையும் சாதிக்காத
“நடவடிக்கை
தினங்களை”
தொடர்ச்சியாக முன்வைத்தார்.
இந்த
நடவடிக்கைகள் “அதிகாரத்தை
எதிர்த்துப் போராடும்”
ஒரு தொழிற்சங்கக்
கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்குகிறார் என்னும் கூற்றை மறுக்கின்றன.
வரவிருக்கும் போராட்டங்களுக்கு
தொழிலாளர்கள் மீண்டும் அரசியல் ஆயுதத்தை ஏந்துவதற்கு—இது
தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வளர வேண்டும்—திபோவின்
பங்கு பற்றி ஒரு வரலாற்றளவு மற்றும் கோட்பாட்டளவு மதிப்பீடு தேவைப்படுகிறது.
ஆனால் அவரோ அரசாங்கத்திற்கு
எதிரான ஒரு போராளித்தனத் தோற்றத்தை அளித்து அரசாங்கத்திற்கு தொழிற்சங்க ஆதரவு
கொடுப்பதில் பங்கை மூடிமறைக்கத்தான் முற்பட்டுள்ளார்.
பேர்னார்ட்
திபோ ஜனவரி 2ம்
தேதி 1959ல்
பாரிசில் பிறந்தார்.
ஒரு இயந்திரக் கைவினைஞர் சான்றிதழைப்
பெற்றபின்,
அவர்
SNCF தேசிய அரச இரயில்
நிறுவனத்தில் 1976ம்
ஆண்டு Paris-la-villette
depot இல் சேர்த்துக்
கொள்ளப்பட்டார். 1977ல்
அவர் CGT
யில் சேர்ந்து தொழிற்சங்கத்தின் இளைஞர்
குழு உறுப்பினர் ஆனார். 24
வயதில் அவர்
CGT இரயில் தொழிலாளர்களின்
கிழக்கு பாரிஸ் தொகுதிக்குச் செயலாளர் ஆனார்.
1987ம்
ஆண்டு திபோ ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் (PCF)
சேர்ந்து CGT
இரயில் தொழிலாளர்கள் கூட்டமைப்பின்
உறுப்பினர் ஆனார்.
பனிப்
போர்க்காலத்திற்கும்
சோவியத்திற்குப் பிந்தைய சகாப்தத்திற்கும் இடைப்பட்ட இடைமருவக் காலத்தில் திபோ
அரசியலில் நுழைந்தார். CGT
மற்றும்
PCF ஆகியவற்றின் தலைமை
பொறுப்புகளுக்கு தேர்தலில் நிற்க அவர் எடுத்த முடிவு,
அதுவும் இந்த அமைப்புக்கள்
தொழிலாளர்கள் மீது பெரும் தோல்விகளைச் சுமத்திய நேரத்தில்,
என்பது,
தொழிற்சங்கம் மற்றும்
அரசாங்கத்தின் ஒரு கருவியாகத் தன் போக்கைக் காண விரும்பினார் என்பதைத்தான்
குறிக்கிறது.
1970
மற்றும்
1980 களில்
PCF ஆனது பிரெஞ்சு சமூக
ஜனநாயகக் கட்சியின் ஒரு கருவியாகச் செயல்பட்டு,
வேலைநிறுத்தங்களை முறிப்பதிலும்
தொழிலாளர் வர்க்கத்தின் நோக்குநிலையைக் குழப்புவதிலும் ஈடுபட்டது.
1972ல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட்
கட்சி,
சோசலிஸ்ட் கட்சி (PS)
அரசாங்கத்துடன் பொதுத் திட்டத்தை
(Common Programme) ஏற்றது.
இது
1976ல் தேசியப்
பொருளாதாரத்திற்கான அதன் ஆதரவை அறிவிப்பதற்காக
“சோவியத் மாதிரியை”க்
கைவிட்டது. 1936
மற்றும்
1968 பொது
வேலைநிறுத்தங்களின்போது ஏற்கனவே கட்சி முதலாளித்துவத்தின் பணியாள் என்று தன்னை
நிரூபித்துக் கொண்டுவிட்டது என்றால்,
1970 களில் வந்த அறிக்கைகள் அது
நிறுவப்பட்டிருக்கும் ஒழுங்கு முறைக்குப் பாதுகாவலராகத் தான் வந்துவிட்டதை
உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததைத்தான் காட்டுகின்றன.
PS
உடன்
PCF ம் ஒரு அரசாங்கக்
கட்சியாயிற்று.
மித்திரெண்ட் அரசாங்கத்தில்
1981ம் ஆண்டு அது நான்கு
கம்யூனிஸ்ட் மந்திரிகள் பங்கு பெற்ற விதத்தில் கலந்து கொண்டது.
1983ம் ஆண்டு மித்திரெண்ட்
அரசாங்கம் தீவிரமாக வலதிற்குச் சென்று சிக்கன நடவடிக்கைகளை அலையெனச்
செயல்படுத்தியது.
ஒரு ஆண்டிற்குப் பிறகு கம்யூனிஸ்ட்
கட்சி மந்திரிகள் இராஜிநாமா செய்தனர்.
இக்காலக்கட்டம்
குறிப்பாக மோட்டார்த் தொழில்துறையில் ஆலைகள் மூடப்பட்டன—Renault,
Citroen மற்றும் கனரகத்
தொழில்துறையான வடக்கில்
லோங்வியில் எஃகு ஆலைகள்
ஆகியவற்றில் தொழிலாளர்களின் நிலைமகள் பெரும் தாக்குதல்களைச் சந்தித்தது.
“1991ம்
ஆண்டு ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்டது,
இதையொட்டி சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு பேராபத்தான விளைவுகள்
ஏற்பட்டன.
சோவியத் ஒன்றியம் பற்றிய
ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுகள் உறுதியாயின.
சோவியத் ஒன்றியத்தின்
வருங்காலம் பற்றி, “அரசியல்
வருங்காலம் பற்றிய கணக்கீடு ஒரு மாற்றுத் தன்மையைக் கொண்டுள்ளது. தொழிலாளர் அரசானது
உலக முதலாளித்துவத்தின் கருவியாக இன்னும் தீவிரமாக அதிகாரத்துவம் மாறும்,
புதிய சொத்துரிமை
வடிவமைப்புக்களை மாற்றி நாட்டை மீண்டும் முதலாளித்துவத்தில் ஆழ்த்திவிடும். அல்லது
தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கிவிட்டு சோசலிசத்திற்கான பாதையைத்
திறக்கும்.”
சோவியத்
ஒன்றியம் சரிவதற்கும் முன்னரே,
CGT மற்றும்
PCF ஆகியவை அரசாங்கத்தின்
கருவிகளாகச் செயல்பட்டு,
தொழிலாளர்களிடம் விரோதப் போக்கு
கொண்டு,
வங்கிகளின் ஏவலாளர்களாவும் இருந்தன.
இது திபோ ஸ்ரானிசக் கருவியில்
நுழைந்ததுடன் நின்றுவிடவில்லை.
1990ல் இருந்து
1993 வரை அவர் ஒரு துணைச்
செயலாளராக இருந்தார்,
பின்
1993ல் இருந்து
1999 வரை
CGT இரயில் தொழிலாளர்கள்
கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார்.
இறுதியில்
1999 ஜனவரி-பெப்ருவரியில்
அவர் கூட்டமைப்பின் தலைவராக
Louis Viannet க்குப் பின்
பதவியேற்றார்.
சோவியத்தின்
சரிவிற்குப் பின்னர் CGT (ஸ்ராலினிஸ்டுக்களுடன்
பிணைந்திருந்த)
உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை
விட்டு விலகி,
ஐரோப்பியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பில்
சேர்ந்தது.
இது முதலாளித்துவ சார்புடைய
CFDT (பிரெஞ்சு தொழிலாளர்
ஜனநாயகக் கூட்டமைப்பு)
போன்றவற்றின் மேலாதிக்கத்தில்
இருந்தது.
ஆனால்
CGT முதலாளித்துவத்திடம்
விசுவாசமாக இருப்பது ஒன்றும் புதிதல்ல.
CGT மற்றும்
PCF ன் முகவராக அது
1936 மற்றும்
1968
பொது வேலைநிறுத்தங்களைக்
காட்டிக் கொடுத்து செயல்பட்டிருந்தது.
உண்மையில் பேர்னார்ட் திபோ
தலைமையில் CGT
இன்னும் கூடுதலான முறையில் அரச
மூலோபாயத்தை இயற்றுவதில் பங்கு பெற்றார்.
அரசியல்
வரலாற்றாளர் René
Mouriaux கருத்துப்படி,
1995 வேலைநிறுத்தங்களில்
முக்கிய நபர்களில் ஒருவராக திபோ இருந்து,
புதுப்பிக்கப்பட்ட
CGT யின் சின்னமாக மாறினார்.
இது அவரை 1997ம்
ஆண்டு கூட்டமைப்பின் தலைமைக் குழுவில்
(பிரோவில்)
நுழைய உதவியது.
1995ல்
பிரதம மந்திரி அலன் யூப்பே இன் கோலிச அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள்
மீது தாக்குதலைத் தொடங்கியது.
இரயில் தொழிலாளர்களின்
தலைமையில் ஒரு சக்தி வாய்ந்த இயக்கம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து
முறித்துக் கொண்டு வெளிப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது
கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றவுடன் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த இயக்கத்தை நெரித்தன.
1995ல் திபோ தொழிற்துறை
மந்திரியுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிற்துறை மந்திரி இரயில்
தொழிலாளர்களுக்குப் பாதிப்பு வராது என்று ஒப்புக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் மற்ற
பிரிவுகள் மீது தாக்குதலை தொடர்ந்தார்.
இந்த
உடன்பாடு ஒரு வெற்றியைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு பொய்த்தோற்றமாகும்.
சமூகப் பாதுகாப்பு முறையின்
மீதான தாக்குதல்கள் பெரும்பாலானவை ஒப்புக் கொள்ளப்பட்டன.
இதற்குப் பின் திபோவின்
வாழ்க்கைப் போக்கு பொதுவாக சீர்திருத்தங்களைப் பேச்சுவார்த்தைகள் மூலம்
கொண்டுவருவதில் கழிந்தது. அதாவது தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை கீழ்நோக்கிய
விதத்தில் சமன்படுத்துவதில்.
2003,
2008, மற்றும் இப்பொழுது
2010ன் தொடர்ச்சியான
சீர்திருத்தங்களையொட்டி வலதுசாரி அரசாங்கங்கள் ஓய்வூதியம் பெறத் தகுதி வயதை
நீட்டித்து தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவுகளில் வாழ்க்கத் தரங்களை இழக்கச்
செய்துள்ளன.
1997ல்
இருந்து அக்டோபர் 2001
வரை திபோ
PCF ன் தேசியக் குழுவின்
(முன்னர் மத்திய குழு)
உறுப்பனராக இருந்தார்.
2001ல் அவர்
PCF
இன் தேசிய அளவிலான பொறுப்புக்களை
விட்டு நீங்கி,
கட்சியின் கருத்துக்களை
தொழிற்சங்கத்திற்குள் கொண்டு செல்லும் என்ற நிலை மாறிவிட்டது என்பதற்கு அடையாளம்
காட்டினார்.
இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்.
PCF உடன் அதன் வரலாற்றுப்
பிணைப்பைப் பின்னுக்குத் தள்ளிய விதத்தில்
CGT இன்னும் எளிதாகவும்
வெளிப்படையாகவும் முதலாளித்துவச் சார்புடைய சக்திகளுடன் அரசிற்கான சேவைகளில் ஈடுபட
முடிந்தது.
‘சார்க்கோசி
ஏன் பேர்னார்ட் திபோவினுடைய
CGT ஐக் காப்பாற்ற
விரும்புகிறார்”
என்று
2007ல் வெளிவந்த கட்டுரை
ஒன்றில்,
வார ஏடு
Marianne 2004ல்
சார்க்கோசிக்கும் (அப்பொழுது
நிதி மந்திரியாக இருந்தார்)
திபோவிற்கும் இடையே இருந்த
உறவுகள் பற்றி விவரமாக எழுதியது. அப்பொழுது
EDF-GDF என்னும்
அரசாங்கத்திற்கு சொந்தமான மின்சார மற்றும் எரிவாயு நிறுவனங்களில் சீர்திருத்தமான
அவைகள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கான தயாரிப்புக்கள் நடைபெற்று வந்தன.
EDF-GDF
கொடுக்கும்
வெட்டு நிதிகளைக் கொண்டு CGT
அவற்றை மாற்றுவித நிதியாகப்
பயன்படுத்தும் வகையில் “தொழிலாளர்
கமிட்டியின் சமூக நிதியம் நடத்தும் முறையை”
வெளிப்படுத்துவேன் என்று
அச்சுறுத்திய விதத்தில் திபோ
“ஒரு குறைந்தபட்சச் சலுகை”இருந்தால்
போதும் என்று விரும்பியதை சார்க்கோசி அறிந்தார்.
பல மாதங்கள் நன்கு
கட்டுப்பாட்டிற்குள் நடத்தப்பட்ட மோதல்களுக்குப் பின்னர் ஒரு தற்காலிக உடன்பாடு
ஏற்பட்டது.
நிறுவனத்தின் அந்தஸ்து மாற்றப்பட்டது.
ஆனால் அரசாங்கம் EDF-GDF
மூலதனத்தின் பெரும்பாலான
பங்கைக் கொண்டிருக்கும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டது
(பின்னால் இது முறிக்கப்பட்டது).
2007ல்
சார்க்கோசி அதிகாரத்தில் உயர்ந்தது,
அரசாங்கத்திற்கும்
CGT க்கும் இடையே உறவுகள்
ஆழமுறுவதற்கு வகை செய்தது.
2009 இறுதியில் நடைபெற்ற அதன்
மாநாடு திபோவிற்கும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கும் இடையேயுள்ள நெருக்கமான
ஒத்துழைப்புக் கொள்கையை உறுதிபடுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இதுவோ
சார்க்கோசியின் பதவிக்காலம் தொடங்கியதில் இருந்து நடைபெற்று வந்துள்ளது.
ஏப்ரல்
2008 ல்
“வலுவான
தொழிற்சங்கங்களுக்கு”
என்ற தலைப்பில்
Le Monde
யில் சார்க்கோசி ஒரு
கட்டுரையில் தொழிற்சங்கங்களுடன் அவர் ஒத்துழைப்பு கொண்டதில் தர்க்கத்தை விளக்கினார்.
“நம் நாட்டிற்குத் தேவையான
சீர்திருத்தங்களை விளக்கிச் செயல்படுத்துவதற்கு,
நாம் தொழிலாளர்கள் மற்றும்
வணிகங்களின் நலன்களைப் பிரதிபலிப்பவர்களுடன் நெருக்கமான பங்காளித்தனம் கொள்ள
வேண்டும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு….”
இந்த
ஒத்துழைப்பு சார்க்கோசி கருத்துப்படி விரைவாகவே நிறுவப்பட்டது:
“ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்
உடனடியாக,
இன்னும் எலிசேயில் நுழைவதற்கு முன்னரே,
நான் தொழிற்சங்கத் தலைவர்கள்
மற்றும் முதலாளிகள் அமைப்புக்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டினேன். நான்
செயல்படுத்த விரும்பிய முதல் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் நிலைப்பாட்டைக் கேட்க
வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அப்பொழுது முதல் நான் தொடர்ந்து
அவற்றின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன்.
நான் அவர்களை நன்கு அறிவேன்.
சில நேரம் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் வரும்,
ஆனால் எங்கள் விவாதங்கள்
எப்பொழுதும் வெளிப்படையாகவே இருந்தன”
என்று எழுதியுள்ளது.
“உதாரணமாக,
சிறப்பு ஓய்வூதியத்
திட்டங்களின் சீர்திருத்தம் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இவை தேசிய அளவில் தீவிர
கலந்துரையாடல்கள் மூலமும் நிறுவனங்கள் ஒவ்வொன்றுடனும் பேச்சுக்களை நடத்தியதின்
மூலமும்தான் சாதிக்கப்பட்டது”
என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
CGT
மற்றும்
CFDT இரண்டும் முதலாளிகள்
குழுக்கள் மற்றும் அரசாங்கத்துடன்
“பொது
நிலைப்பாடு”
என்பது பற்றிய உடன்பாட்டை நிறுவிய
நேரம் ஆகும்.
இந்த உடன்பாட்டில் பெரிய
தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிக்கப்படும் வடிவமைப்பு உள்ளது. இதையொட்டி
அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தை கண்காணிப்பதற்கு இன்னும் கூடுதலான
மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம் கிடைக்கிறது.
பரந்த
மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட,
CGT யும் சார்க்கோசியும்
இதைத்தொடர்ந்து 2008
கோடைகாலத்தில் சட்டங்கள் இயற்றப்பட
ஒத்துழைத்தனர். இது பிரான்ஸில் வர்க்க உறவுகளில் ஒரு முக்கியத் திருப்பு முனை ஆகும்.
தொழிலாளர்களின் பணி வார நேரம்
அதிகரிப்பு,
வேலையின்மை நலன்களில் குறைப்பு,
தொழிற்சங்கங்கள் மற்றும்
வேலைநிறுத்தங்கள் பற்றிய சட்டங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் பெருவணிகம்,
நிதியியல் ஆகியவற்றிற்கு
முக்கியச் சலுகைகள் ஆகியவை இவற்றில் இடம் பெற்றுள்ளன. |