சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Who is French trade union leader Bernard Thibault?    

யார் இந்த பிரெஞ்சு தொழிற்சங்க தலைவர் பேர்னார்ட் திபோ?

By Anthony Torres
4 December 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான பிரெஞ்சுத் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் அனுபவங்கள் பல முக்கிய அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளன. இவற்றுள்  நடவடிக்கைகளைத் தோற்கடிக்கச் செய்ததில் மிக முக்கியமானது பொதுவாகத் தொழிற்சங்கங்களின் பங்காகும், குறிப்பாக பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பும் (CGT) அதனுடைய தலைவர் பெர்னார்ட் திபோவினுடைய பங்காகும்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பெரும் விரோதப் போக்கு இருந்தாலும், திபோ ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுதலை அருவமானது”, “விளங்கிக் கொள்ள முடியாததுஎன்று வலியுறுத்தியுள்ளார். துறைமுகங்கள், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் ஆகியவற்றில் நடந்த வேலைநிறுத்தங்களை அவர் கைவிட்டு, தொழிலாளர்களின் தடைகளை முறியடிப்பதற்கு பொலிஸ் தலையீடு ஏற்பட்டதை எதிர்ப்பதற்குத் தொழிலாள வர்க்கத்தை திரட்டவும் மறுத்துவிட்டார். எல்லாவற்றிற்கும் மேலாகத்  தான் சார்க்கோசியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக வலியுறுத்தி, திபோ எதையும் சாதிக்காத நடவடிக்கை தினங்களை தொடர்ச்சியாக முன்வைத்தார்.

இந்த நடவடிக்கைகள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும்ஒரு தொழிற்சங்கக் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்குகிறார் என்னும் கூற்றை மறுக்கின்றன. வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாளர்கள் மீண்டும் அரசியல் ஆயுதத்தை ஏந்துவதற்குஇது தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வளர வேண்டும்திபோவின் பங்கு பற்றி ஒரு வரலாற்றளவு மற்றும் கோட்பாட்டளவு மதிப்பீடு தேவைப்படுகிறது. ஆனால் அவரோ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராளித்தனத் தோற்றத்தை அளித்து அரசாங்கத்திற்கு தொழிற்சங்க ஆதரவு கொடுப்பதில் பங்கை மூடிமறைக்கத்தான் முற்பட்டுள்ளார்.

பேர்னார்ட் திபோ ஜனவரி 2ம் தேதி 1959ல் பாரிசில் பிறந்தார். ஒரு இயந்திரக் கைவினைஞர் சான்றிதழைப் பெற்றபின், அவர் SNCF தேசிய அரச இரயில் நிறுவனத்தில் 1976ம் ஆண்டு Paris-la-villette depot இல் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1977ல் அவர் CGT யில் சேர்ந்து தொழிற்சங்கத்தின் இளைஞர் குழு உறுப்பினர் ஆனார். 24 வயதில் அவர் CGT இரயில் தொழிலாளர்களின் கிழக்கு பாரிஸ் தொகுதிக்குச் செயலாளர் ஆனார்.

1987ம் ஆண்டு திபோ ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் (PCF) சேர்ந்து CGT இரயில் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆனார்.

பனிப் போர்க்காலத்திற்கும் சோவியத்திற்குப் பிந்தைய சகாப்தத்திற்கும் இடைப்பட்ட இடைமருவக் காலத்தில் திபோ அரசியலில் நுழைந்தார். CGT மற்றும் PCF ஆகியவற்றின் தலைமை பொறுப்புகளுக்கு தேர்தலில் நிற்க அவர் எடுத்த முடிவு, அதுவும் இந்த அமைப்புக்கள் தொழிலாளர்கள் மீது பெரும் தோல்விகளைச் சுமத்திய நேரத்தில், என்பது, தொழிற்சங்கம் மற்றும் அரசாங்கத்தின் ஒரு கருவியாகத் தன் போக்கைக் காண விரும்பினார் என்பதைத்தான் குறிக்கிறது.

1970 மற்றும் 1980 களில் PCF ஆனது பிரெஞ்சு சமூக ஜனநாயகக் கட்சியின் ஒரு கருவியாகச் செயல்பட்டு, வேலைநிறுத்தங்களை முறிப்பதிலும் தொழிலாளர் வர்க்கத்தின் நோக்குநிலையைக் குழப்புவதிலும் ஈடுபட்டது. 1972ல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்துடன் பொதுத் திட்டத்தை (Common Programme) ஏற்றது. இது 1976ல் தேசியப் பொருளாதாரத்திற்கான அதன் ஆதரவை அறிவிப்பதற்காக  “சோவியத் மாதிரியைக் கைவிட்டது. 1936 மற்றும் 1968 பொது வேலைநிறுத்தங்களின்போது ஏற்கனவே கட்சி முதலாளித்துவத்தின் பணியாள் என்று தன்னை நிரூபித்துக் கொண்டுவிட்டது என்றால், 1970 களில் வந்த அறிக்கைகள் அது நிறுவப்பட்டிருக்கும் ஒழுங்கு முறைக்குப் பாதுகாவலராகத் தான் வந்துவிட்டதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததைத்தான் காட்டுகின்றன.

PS உடன் PCF ம் ஒரு அரசாங்கக் கட்சியாயிற்று. மித்திரெண்ட் அரசாங்கத்தில் 1981ம் ஆண்டு அது நான்கு கம்யூனிஸ்ட் மந்திரிகள் பங்கு பெற்ற விதத்தில் கலந்து கொண்டது. 1983ம் ஆண்டு மித்திரெண்ட் அரசாங்கம் தீவிரமாக வலதிற்குச் சென்று சிக்கன நடவடிக்கைகளை அலையெனச் செயல்படுத்தியது. ஒரு ஆண்டிற்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி மந்திரிகள் இராஜிநாமா செய்தனர்.

இக்காலக்கட்டம் குறிப்பாக மோட்டார்த் தொழில்துறையில் ஆலைகள் மூடப்பட்டனRenault, Citroen மற்றும் கனரகத் தொழில்துறையான வடக்கில்  லோங்வியில் எஃகு ஆலைகள் ஆகியவற்றில் தொழிலாளர்களின் நிலைமகள் பெரும் தாக்குதல்களைச் சந்தித்தது.

“1991ம் ஆண்டு ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்டது, இதையொட்டி சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு பேராபத்தான விளைவுகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுகள் உறுதியாயின. சோவியத் ஒன்றியத்தின் வருங்காலம் பற்றி, “அரசியல் வருங்காலம் பற்றிய கணக்கீடு ஒரு மாற்றுத் தன்மையைக் கொண்டுள்ளது. தொழிலாளர் அரசானது உலக முதலாளித்துவத்தின் கருவியாக இன்னும் தீவிரமாக அதிகாரத்துவம் மாறும், புதிய சொத்துரிமை வடிவமைப்புக்களை மாற்றி நாட்டை மீண்டும் முதலாளித்துவத்தில் ஆழ்த்திவிடும். அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கிவிட்டு சோசலிசத்திற்கான பாதையைத் திறக்கும்.”

சோவியத் ஒன்றியம் சரிவதற்கும் முன்னரே, CGT மற்றும் PCF ஆகியவை அரசாங்கத்தின் கருவிகளாகச் செயல்பட்டு, தொழிலாளர்களிடம் விரோதப் போக்கு கொண்டு, வங்கிகளின் ஏவலாளர்களாவும் இருந்தன. இது திபோ ஸ்ரானிசக் கருவியில் நுழைந்ததுடன் நின்றுவிடவில்லை. 1990ல் இருந்து 1993 வரை அவர் ஒரு துணைச் செயலாளராக இருந்தார், பின் 1993ல் இருந்து 1999 வரை CGT இரயில் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார். இறுதியில் 1999 ஜனவரி-பெப்ருவரியில் அவர் கூட்டமைப்பின் தலைவராக Louis Viannet க்குப் பின் பதவியேற்றார்.

சோவியத்தின் சரிவிற்குப் பின்னர் CGT (ஸ்ராலினிஸ்டுக்களுடன் பிணைந்திருந்த) உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை விட்டு விலகி, ஐரோப்பியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் சேர்ந்தது. இது முதலாளித்துவ சார்புடைய CFDT (பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயகக் கூட்டமைப்புபோன்றவற்றின் மேலாதிக்கத்தில் இருந்தது. ஆனால் CGT  முதலாளித்துவத்திடம் விசுவாசமாக இருப்பது ஒன்றும் புதிதல்ல. CGT மற்றும் PCF ன் முகவராக அது 1936 மற்றும் 1968 பொது வேலைநிறுத்தங்களைக் காட்டிக் கொடுத்து செயல்பட்டிருந்தது. உண்மையில் பேர்னார்ட் திபோ தலைமையில் CGT இன்னும் கூடுதலான முறையில் அரச மூலோபாயத்தை இயற்றுவதில் பங்கு பெற்றார்.

அரசியல் வரலாற்றாளர் René Mouriaux கருத்துப்படி, 1995 வேலைநிறுத்தங்களில் முக்கிய நபர்களில் ஒருவராக திபோ இருந்து, புதுப்பிக்கப்பட்ட CGT யின் சின்னமாக மாறினார். இது அவரை 1997ம் ஆண்டு கூட்டமைப்பின் தலைமைக் குழுவில் (பிரோவில்) நுழைய உதவியது.

1995ல் பிரதம மந்திரி அலன் யூப்பே இன் கோலிச அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது. இரயில் தொழிலாளர்களின் தலைமையில் ஒரு சக்தி வாய்ந்த இயக்கம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து முறித்துக் கொண்டு வெளிப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றவுடன் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த இயக்கத்தை நெரித்தன. 1995ல் திபோ தொழிற்துறை மந்திரியுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிற்துறை மந்திரி இரயில் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு வராது என்று ஒப்புக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகள் மீது தாக்குதலை தொடர்ந்தார்.

இந்த உடன்பாடு ஒரு வெற்றியைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு பொய்த்தோற்றமாகும். சமூகப் பாதுகாப்பு முறையின் மீதான தாக்குதல்கள் பெரும்பாலானவை ஒப்புக் கொள்ளப்பட்டன. இதற்குப் பின் திபோவின் வாழ்க்கைப் போக்கு பொதுவாக சீர்திருத்தங்களைப் பேச்சுவார்த்தைகள் மூலம் கொண்டுவருவதில் கழிந்தது. அதாவது தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை கீழ்நோக்கிய விதத்தில் சமன்படுத்துவதில். 2003, 2008, மற்றும் இப்பொழுது 2010ன் தொடர்ச்சியான சீர்திருத்தங்களையொட்டி வலதுசாரி அரசாங்கங்கள் ஓய்வூதியம் பெறத் தகுதி வயதை நீட்டித்து தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவுகளில் வாழ்க்கத் தரங்களை இழக்கச் செய்துள்ளன.

1997ல் இருந்து அக்டோபர் 2001 வரை திபோ PCF ன் தேசியக் குழுவின் (முன்னர் மத்திய குழு) உறுப்பனராக இருந்தார். 2001ல் அவர்  PCF இன் தேசிய அளவிலான பொறுப்புக்களை விட்டு நீங்கி, கட்சியின் கருத்துக்களை தொழிற்சங்கத்திற்குள் கொண்டு செல்லும் என்ற நிலை மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டினார். இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். PCF உடன் அதன் வரலாற்றுப் பிணைப்பைப் பின்னுக்குத் தள்ளிய விதத்தில் CGT இன்னும் எளிதாகவும் வெளிப்படையாகவும் முதலாளித்துவச் சார்புடைய சக்திகளுடன் அரசிற்கான சேவைகளில் ஈடுபட முடிந்தது.

 சார்க்கோசி ஏன் பேர்னார்ட் திபோவினுடைய CGT ஐக் காப்பாற்ற விரும்புகிறார் என்று 2007ல் வெளிவந்த கட்டுரை ஒன்றில், வார ஏடு Marianne  2004ல் சார்க்கோசிக்கும் (அப்பொழுது நிதி மந்திரியாக இருந்தார்) திபோவிற்கும் இடையே இருந்த உறவுகள் பற்றி விவரமாக எழுதியது. அப்பொழுது EDF-GDF என்னும் அரசாங்கத்திற்கு சொந்தமான மின்சார மற்றும் எரிவாயு நிறுவனங்களில் சீர்திருத்தமான அவைகள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கான தயாரிப்புக்கள் நடைபெற்று வந்தன.

EDF-GDF கொடுக்கும் வெட்டு நிதிகளைக் கொண்டு CGT அவற்றை மாற்றுவித நிதியாகப் பயன்படுத்தும் வகையில்தொழிலாளர் கமிட்டியின் சமூக நிதியம் நடத்தும் முறையைவெளிப்படுத்துவேன் என்று அச்சுறுத்திய விதத்தில்  திபோஒரு குறைந்தபட்சச் சலுகைஇருந்தால் போதும் என்று விரும்பியதை சார்க்கோசி அறிந்தார். பல மாதங்கள் நன்கு கட்டுப்பாட்டிற்குள் நடத்தப்பட்ட மோதல்களுக்குப் பின்னர் ஒரு தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. நிறுவனத்தின் அந்தஸ்து மாற்றப்பட்டது. ஆனால் அரசாங்கம் EDF-GDF மூலதனத்தின் பெரும்பாலான பங்கைக் கொண்டிருக்கும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டது (பின்னால் இது முறிக்கப்பட்டது).

2007ல் சார்க்கோசி அதிகாரத்தில் உயர்ந்தது, அரசாங்கத்திற்கும் CGT க்கும் இடையே உறவுகள் ஆழமுறுவதற்கு வகை செய்தது. 2009 இறுதியில் நடைபெற்ற அதன் மாநாடு திபோவிற்கும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கும் இடையேயுள்ள நெருக்கமான ஒத்துழைப்புக் கொள்கையை உறுதிபடுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இதுவோ சார்க்கோசியின் பதவிக்காலம் தொடங்கியதில் இருந்து நடைபெற்று வந்துள்ளது.

ஏப்ரல் 2008 ல் வலுவான தொழிற்சங்கங்களுக்கு என்ற தலைப்பில் Le Monde  யில் சார்க்கோசி ஒரு கட்டுரையில் தொழிற்சங்கங்களுடன் அவர் ஒத்துழைப்பு கொண்டதில் தர்க்கத்தை விளக்கினார். “நம் நாட்டிற்குத் தேவையான சீர்திருத்தங்களை விளக்கிச் செயல்படுத்துவதற்கு, நாம் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களின் நலன்களைப் பிரதிபலிப்பவர்களுடன் நெருக்கமான பங்காளித்தனம் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு….”

இந்த ஒத்துழைப்பு சார்க்கோசி கருத்துப்படி விரைவாகவே நிறுவப்பட்டது: “ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் உடனடியாக, இன்னும் எலிசேயில் நுழைவதற்கு முன்னரே, நான் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் முதலாளிகள் அமைப்புக்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டினேன். நான் செயல்படுத்த விரும்பிய முதல் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் நிலைப்பாட்டைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்பொழுது முதல் நான் தொடர்ந்து அவற்றின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். நான் அவர்களை நன்கு அறிவேன். சில நேரம் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் வரும், ஆனால் எங்கள் விவாதங்கள் எப்பொழுதும் வெளிப்படையாகவே இருந்தனஎன்று எழுதியுள்ளது.

 “உதாரணமாக, சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களின் சீர்திருத்தம் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இவை தேசிய அளவில் தீவிர கலந்துரையாடல்கள் மூலமும் நிறுவனங்கள் ஒவ்வொன்றுடனும் பேச்சுக்களை நடத்தியதின் மூலமும்தான் சாதிக்கப்பட்டதுஎன்று அவர் சேர்த்துக் கொண்டார்.

CGT மற்றும் CFDT இரண்டும் முதலாளிகள் குழுக்கள் மற்றும் அரசாங்கத்துடன் பொது நிலைப்பாடு என்பது பற்றிய உடன்பாட்டை நிறுவிய நேரம் ஆகும். இந்த உடன்பாட்டில் பெரிய தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிக்கப்படும் வடிவமைப்பு உள்ளது. இதையொட்டி அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தை கண்காணிப்பதற்கு இன்னும் கூடுதலான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம் கிடைக்கிறது.

பரந்த மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, CGT யும் சார்க்கோசியும் இதைத்தொடர்ந்து 2008 கோடைகாலத்தில் சட்டங்கள் இயற்றப்பட ஒத்துழைத்தனர். இது பிரான்ஸில் வர்க்க உறவுகளில் ஒரு முக்கியத் திருப்பு முனை ஆகும். தொழிலாளர்களின் பணி வார நேரம் அதிகரிப்பு, வேலையின்மை நலன்களில் குறைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் பற்றிய சட்டங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் பெருவணிகம், நிதியியல் ஆகியவற்றிற்கு முக்கியச் சலுகைகள் ஆகியவை இவற்றில் இடம் பெற்றுள்ளன.