WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
ஸ்பெயின் விமானப்
போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் சொல்கிறார்:
“பிராங்கோவின் கீழ்
வாழ்வது போல் இருக்கிறது”
By Chris
Marsden
7 December 2010
Use
this version to print | Send
feedback
ஸ்பெயின் நாட்டின் விமானக் கட்டுப்பாட்டு ஊழியர்களில் ஏராளமானோர் உலக சோசலிச வலைத்
தளத்தை தொடர்பு கொண்டு சோசலிசத் தொழிலாளர் கட்சி
(PSOE)
அரசாங்கம் சுமத்தியுள்ள அவசரகால நடவடிக்கைகளின் கீழ் தங்களுக்கு எதிராக
பிரயோகிக்கப்படும் அரச பயங்கரவாதத்தை விவரித்தனர்.
வெள்ளியன்று ஒட்டுமொத்தமாய் மருத்துவ விடுப்பு எடுத்து இந்த ஊழியர்கள் ஸ்பெயினின்
விமான நிலையங்களை ஸ்தம்பிக்கச் செய்தனர்.
அந்நாளின் ஆரம்பத்தில்,
விமானக் கட்டுப்பாட்டு ஆணையமான
AENA
பாதி
தனியார்மயமாக்கப்படுவதற்கும்,
அத்துடன் தனித்தனியான விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களால்
நிர்வகிக்கப்படுவதற்கும் பாதை திறந்து விடுகிற சட்டத்திற்கு அரசாங்கம்
ஒப்புதலளித்தது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் வேலை நேரங்களை மேலும்
நீட்டிப்பதும் இந்த சட்டத்தில் இடம்பெற்றிருந்தது.
தங்களது
போராட்ட
நடவடிக்கையில் இந்த ஊழியர்கள் அரசாங்கத்தின் பரந்த சிக்கன நடவடிக்கைகளுக்கும்
எதிரான ஒரு நிலைப்பாட்டையும்
எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து
இராணுவம் மூலம் வேலைநிறுத்தத்தை உடைக்கும் அரசாங்கத்தின்
செயல்பாடுகளினால் விளைந்த காட்சிகள் திடுக்கிடச் செய்வதாய் இருந்தன.
தாங்கள்
சட்டபூர்வமாய் கடமைப்பாடு கொண்ட
1,670
மணி நேர
வேலையை ஏற்கனவே செய்து முடித்து விட்ட நிலையில் இன்னமும் வேலை செய்யக் கூறப்படும்
போது தொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலையை உணர்ந்ததாக உ.சோ.வ.த.விடம்
ஒரு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் மின்னஞ்சல் வழி தெரிவித்தார்.
அவர்
தொடர்ந்து கூறினார்:
“விமானப்
போக்குவரத்து
கட்டுப்பாட்டு மையங்கள் இப்போது இராணுவ கட்டுப்பாட்டின்
கீழ் இருக்கின்றன.
இப்போதைக்கு குறைந்தபட்ச சேவைகளில் மட்டும்
அரசு ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்,
ஆனால் எப்போது வரை அதுவும் கூட நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது.
பிராங்கோ,
பினோசே,
ஸ்ராலின்,
மாவோ,
பொல்
பொட்
அல்லது வேறெந்த சர்வாதிகாரிக்கும் கீழ் வாழ்வது போலத் தான் நாங்கள் இப்போது
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”
தனது
உடனடியான சூழல்களை விவரிக்கும் போது,
“நாங்கள்
அனைவரும் ஒரு விடுதியில் இப்போது போலிஸ் பாதுகாப்பின் கீழ்
(எங்கள்
பாதுகாப்பிற்காக!)
தங்கவைக்கப்பட்டிருக்கிறோம்.
AENA
இராணுவ
போலிசாருடன் இங்கு வந்து எங்களை வேலைத்தலங்களுக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ கொண்டு
செல்வதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்”
என்று எழுதியிருந்தார்.
பின்னர்,
ஆயுதமேந்திய போலிசின் உத்தரவின் கீழ் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்ட
பின்னர் அவர் இன்னொரு மின்னஞ்சலையும் அனுப்பினார்.
“வேறு
எந்த சுதந்திர நாட்டிலும் போன்ற அதே உரிமைகள் எங்களுக்கு இல்லை,
ஏனென்றால் நாங்கள் சுதந்திரமாய் இல்லை”
என்று கூறியிருந்த அவர் தொடர்ந்து பின்வருமாறு
எழுதுகிறார்.
“ஸ்பெயினில்
ஸ்டாசி
[நாஜிகளின்
உளவு அமைப்பு]
திரும்ப
வந்துள்ளது.
எங்களில்
சிலரை அழைத்துச் சென்று ஒவ்வொருவராய் இராணுவ போலிஸ் மூலம் விசாரிக்கப்படலாம் என்று
அவர்கள் மிரட்டியுள்ளனர்.
பத்து வருட சிறைத் தண்டனை என்றும்,
சேர்த்து வைத்ததெல்லாம் போய் விடும்
என்றும் மிரட்டுவார்கள்,
அதுவும் பத்தாதென்றால்,
அவர்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை அவர்களுக்குக் காட்டி குடும்பங்களையும்
அவர்கள் இழக்க நேரிடும் என்று மிரட்டுவார்கள்.”
இன்னொரு
மின்னஞ்சலில் அவரது சகா தெரிவித்தார்:
“சொல்லவே
வேதனை தான்,
சென்ற பிப்ரவரியில் இருந்து நாங்கள் நோயுற்றிருப்பதாகத்தான் உணர்கிறோம்.
சரியாய் தூங்க முடியவில்லை.
சரியாய் ஓய்வெடுக்க முடியவில்லை.
எங்களது விடுமுறை நாட்களும் ஓய்வு நாட்களும் மாற்றப்படுகின்றன,
எந்த நேரமும் எந்த மாற்று
பணிமுறையிலும்
(shift)
வேலை
செய்ய நாங்கள் கோரப்படுகிறோம்,
எங்கள் விருப்பத்தின் படி அல்ல,
பலவந்தமாக.”
“நாங்கள்
அயற்சியிலும்,
களைத்தும்,
உடைந்தும் போயுள்ளோம்”
என்று கூறி
அவர் தொடர்ந்தார்.
”இந்த
சூழ்நிலை அகல விரும்புகிறோம்....ஆனால்
எப்படி என்பது தான் தெரியவில்லை.
நாளுக்கு நாள் புதிய சட்டங்கள்
கண்டறியப்படுகின்றன.
”மனஉளைச்சலுடனான
விரக்தியான உணர்வினால் தான் இந்த உத்தியோகபூர்வமற்ற
திடீர் வேலைநிறுத்தம் நடந்தது.
மாட்ரிட்டில் துவங்கிய இது
மற்ற கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் கோபுரங்களின் ஆதரவைப் பெற்றது.”
ஒரு
கோரிக்கையுடன் அவர் முடித்தார்:
“தயவுசெய்து
உதவுங்கள்.
ஓய்வில்லாமல் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
மோசமான மன உளைச்சலுடன் நாங்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறோம்
12
இராணுவ
போலிசாரும் ஒரு கேப்டனும் எங்களை பயமுறுத்துவதற்காக கோபுரத்திற்கு வந்தபோது நான்
மேற்பார்வையாளனாக
வேலையை செய்து கொண்டிருந்தேன்....எங்களுக்கு
உதவுங்கள்.”
1975ல்
பிராங்கோவின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பின்னர் அரச அவசரகால
நிலையை அரசாங்கம் அறிவிப்பது இதுவே முதன்முறை ஆகும்.
முன்னாள் பிராங்கோவாதியான அடோல்ஃபோ சுவாரசின் அரசாங்கத்தால்
1978ல்
ஜனநாயக அரசியலமைப்பாக கூறப்பட்ட ஒன்று
வரைவு செய்யப்பட்டதன் பின்னரும் இத்தகைய அவசர கால அதிகாரங்களை ஏவ வழிசெய்யும்
சட்டங்கள் சட்டப் புத்தகங்களில் பராமரித்து வைக்கப்பட்டிருந்தன.
முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்தவும் தொழிலாள வர்க்கத்தை பிரித்தாளவும்
கம்யூனிஸ்டு கட்சியும்
PSOEயும்
தீர்மானகரமாக
செய்த முயற்சிகளால் தான் இது சாத்தியமானது.
”மூலோபாயத்
துறைகளில்”
வேலை செய்ய மறுப்பவர்களைக் கைது செய்ய அரச அவசரகால
நிலை அரசாங்கத்தை அனுமதிக்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த தாக்குதலை எதிர்ப்பதில் இருந்து வெகு விலகி,
ஸ்பெயினின் தொழிற் சங்கங்களும் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான ஐக்கிய இடது கட்சியும்
(IU)
அரசாங்கத்திற்கு உதவின.
இவை
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களை தனிமைப்படுத்தியதோடு,
‘மற்ற
தொழிலாளர்கள் எல்லாம் வெட்டுகளை ஏற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த சிறப்புரிமை
பெற்ற உயரடுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ஸ்பெயினை பிணைக்கைதியாக்குகிறார்கள்’
என்னும் அவதூறை திரும்பத் திரும்பக் கூறின.
விமான
நிலையங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களை துப்பாக்கி முனையில் வேலைக்குத்
திரும்பச் செய்த அவசரநிலை சட்டத்தை நீட்டிக்க பிரதமர்
ஜோஸே
லூயிஸ்
ரொட்ரிகஸ்
ஸாபத்தேரோ
அச்சுறுத்தியுள்ளார்.
இந்த
அரச அவசரகால
நிலையை
15
நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவித்த ஸாபத்தேரோ மேலும் கூறினார்:
“சூழ்நிலை
எப்படிச் செல்கிறது என்பதைப் பார்த்து இந்த நடவடிக்கையை நீட்டிக்கும் முடிவினை
அரசாங்கம் எடுக்கும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொதுமக்களின் கருத்து மனதில் கொள்ளப்பட்டு அரசியல்
கட்சிகளுடன் பேசிய பிறகே அம்முடிவு எடுக்கப்படும்”.
விமானப்
போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அணுகுமுறை
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்துறை
நடவடிக்கையில் இறங்கும் எந்த தொழிலாளர் குழுக்களுக்கும் எதிராக இதனையொத்த
தாக்குதல்கள் நடப்பதற்கான ஒரு முன்னோடியை
உருவாக்குகின்றது.
ஸ்பெயினின் பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்து அமைச்சரான ஜோஸ் பிளாங்கோ,
விமானநிலையத் துறை வாரியத்தினால் பணியமர்த்தப்பட்ட
2,300
விமானப்
போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களில்
442
பேரைக்
குறிவைத்து ஒரு பழிதீர்க்கும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
அவர்களின்
“பொறுப்பற்ற
நடத்தைக்கு”
அபராதங்கள் மற்றும் வேலைநீக்கங்கள் உள்ளிட்ட
“பொருத்தமான”
தண்டனைகள் வழங்கப்பட அவர் கோரியிருக்கிறார்.
PSOE
சர்வதேசரீதியாக தனது சகாக்கள் செய்வதைப் போலவே தான் நிதித்துறையைச் சேர்ந்த சிலவர்
கும்பலின் ஒரு அரசியல் கருவியே என்பதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.
தொழிற்சங்கங்கள்,
தங்களது பங்காக,
தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களும் ஜனநாயக உரிமைகளும் அழிக்கப்படுவதற்கு எதிராக
பதில்தாக்குதல் தொடுப்பதற்கான
முக்கிய
முட்டுக்கட்டையாக தங்களது பாத்திரத்தை உறுதி செய்திருக்கின்றன.
கீழிருந்து கிளம்பும் அச்சுறுத்தலுக்கு எதிராக பெரு வணிகத்தை பாதுகாப்பதில்
தொழிற்சங்க தலைமைகள் எந்த கோட்டையும் தாண்டுவதற்கு தயங்க மாட்டார்கள்.
ஒரு போலிஸ்-இராணுவ
சர்வாதிகாரத்தை தழுவிக் கொள்வது வரையும் கூட செல்வார்கள் என்பதையே விமானப்
போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு எதிராக போலிஸ்-அரசு
நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராய் இருந்தது
எடுத்துக்காட்டுகிறது. |