World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

WikiLeaks continues exposure of predatory US foreign policy

அமெரிக்க வெளியுறவுக் கொள்ளைக்கார  கொள்கையை விக்கிலீக்ஸ் தொடர்ந்து அம்பலப்படுத்துகிறது

By Patrick Martin
6 December 2010

Back to screen version

அமெரிக்காவின் முன்னோடியில்லாத வகையிலான துன்பப்படுத்தல் மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை  எதிர்கொண்டுள்ள இணைய தள அடிப்படையைக் கொண்ட விக்கிலீக்ஸ் குழு உலகெங்கிலும் நிகழும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கொள்ளைக்கார முறையை அம்பலப்படுத்தும் அதன் முயற்சிகளைத் தொடரும் வகையில் ஒவ்வொரு நாளும் இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வருகிறது.

250,000 க்கும் மேலான கசிவுற்ற அமெரிக்கத் இராஜதந்திர தகவல்களை விக்கிலீக்ஸ் பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கடந்த ஐந்து ஆண்டுகளில் பரிமாற்றம் செய்யப்பட்டவை. இதுவரை அதன் வலைத் தளத்தில் அது கிட்டத்தட்ட 700 தகவல்களை வெளியிட்டுள்ளதுடன், அதன் முழுத் தொகுப்பையும் ஐரோப்பாவில் உள்ள நான்கு செய்தி அமைப்புக்களுக்குக் கொடுத்துள்ளது. இந்த நான்கில் ஒன்றான பிரிட்டிஷ் நாளேடான கார்டியன்  இவற்றை  நியூ யோர்க் டைம்ஸ்  பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

ஞாயிறன்று பகிரங்கமாக்கப்பட்ட தகவல்கள் உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலை ஆழமடைகையில் அதிகரித்துவரும் முறையில் உலக உறவுகள் எரியூட்டும் நிலையில் இருப்பதைத்தான் காட்டுகின்றன. குறிப்பாக சரிந்துவரும் உலகசக்தியான அமெரிக்கா, சீனா போன்ற தன் போட்டி நாடுகளுக்கு எதிரான தன் மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளைக் காட்டுகிறது. மார்ச் 24, 2009 வெளிவிவகாரத்துறையின் தகவல்கள் இம்மோதல்களின் மத்தியில் உள்ளது. அது ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட்டிற்கும் அப்பொழுது அங்கு வாஷிங்டனில் இருந்து பயணித்திருந்த அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் நடத்திய பேச்சுக்களை பற்றி விவரிக்கிறது.

தகவல் சுருக்கத்தின்படி, சீனாவுடனான பாரிய அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், அமெரிக்கக் கருவூலங்கள் உட்பட டாலர் ஆதிக்கம் நிறைந்த கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர் மகத்தான நிதியத் தொகுப்பை சீனா கொண்டிருக்கையில்சீனாவின் பெருகிய வெளியறவுச் செல்வாக்கை தடுக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள இடர்கள் பற்றி கிளின்டன் ஒரு உணவுநேர விவாதத்தின்போது  குறைகூறினார்: “உங்கள் வங்கியாளரிடம் எப்படி நீங்கள் கடினமாக நடந்து கொள்ள முடியும்?”

ரூட்டின் விடை வியப்பானது. தன்னைசீனா பற்றி மிகவும் யதார்த்தவாதியாக காட்டுக்கொள்பவராகதன்னை விளக்கிக் கொண்டு, அவர் ஆஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புக்கள் சீனாவின் பெருகும் இராணுவ வலிமை பற்றி நெருக்கமான கவனம் கண்டுள்ளன, ஆஸ்திரேலியா தன் கடற்படைச் சக்திகளைதெற்கு பசிபிக்கில்சீனாவின் பெருகும் திறனுக்கு ஏற்ப விடையிறுக்கும் வகையில்கட்டமைத்து வருவதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் உறவுகளில் சீனாவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் அனைத்தும் பிழையாக போகும் நிலையில் பலத்தை பயன்படுத்த தயார் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு வலிமையான உலக சக்திகளிடையே, இரண்டும் அணுவாயுதங்களை கொண்டுள்ள நிலையில், ஒரு கொள்கை விருப்புரிமையாக இராணுவ மோதல் கருதப்படலாம் என்ற கருத்தை கிளின்டன் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதற்குச் சான்று இல்லை. அதேபோல் ரூட் தான் மற்றொரு அணுவாயுத சக்தியான ரஷ்யாவை தன்னுடைய ஆசிய-பசிபிக் சமூகத்திலே சேர்ந்து, அதையொட்டி ஒருசீன மன்ரோ கோட்பாடுபோன்ற சிந்தனை வருவதைத் தவிர்க்க முடியும் என்ற தெரிவித்த ஆலோசனைக்கும் கிளின்டனுடைய விடையிறுப்பு பதிவு செய்யப்படவில்லை. அச்சொற்றடரை ரூட் சீனா அமெரிக்கா போன்ற பிற வெளிச்சக்திகளை ஆசிய-பசிபிக் பகுதியில் ஒதுக்கி வைக்கும் முயற்சியை பற்றி அவ்வாறு சுருக்கமாகக் கூறினார்.

இக்கருத்துப் பறிமாற்றம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முந்தைய தசாப்தங்களில் பெரும் சக்திகள் அதிகாரம் மற்றும் செல்வாக்கை வலுப்படுத்தி அதே நேரத்தில் அச்சக்தியின் இறுதிச் சோதனையாக இராணுவ வலிமையை வளர்த்தபோது நடத்தி வந்த இரகசிய விவாதங்களைத்தான் நினைவூட்டுகிறது. இரு காலங்களிலும், பால்கன்களில் தூர கிழக்கு, வட ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்த உள்ளூர்ப்பகுதி மற்றும் பிராந்திய அழுத்தங்கள் உலக மோதலுக்குப் எரியூட்டும் நிகழ்வுகள் ஆயின.

இன்று அத்தகைய வெடிப்பை தூண்டிவிடும் பங்கைக் கொள்ளக்கூடிய பகுதிகளில் மத்திய கிழக்கும் ஒன்றாகும்; இங்கு ஏற்கனவே அமெரிக்கச் சக்திகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் நிலை கொண்டுள்ளன, அமெரிக்காவும் இஸ்ரேலும் வெளிப்படையாக பொருளாதாரத் தடைகள் தெஹ்ரானை அடிபணிய வைக்கவில்லை என்றால் இராணுவ நடவடிக்கை ஈரானுக்கு எதிராக வரும் என்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸும், கார்டியனும் பகிரங்கமாக்கியுள்ள இரகசிய ஆவணங்களின் சுருக்கங்கள் அப்பகுதியில் வெளிப்பட்டுள்ள அழுத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. டிசம்பர் 2009ல் வெளிவிவகார செயலாளர் கிளின்டன் அளித்த இரகசிக் குறிப்பு பாரிசீக பகுதியில் சவுதி அரேபியா மற்றும் அரபு ஷேக் அரசுகள் அமெரிக்க எதிர்ப்புப் பயங்கரவாத செயல்களுக்கு முக்கியமாக நிதி அளிக்கின்றன என்று புகார் கூறியுள்ளது. “சவுதி அரேபிய நன்கொடையாளர்கள் உலகெங்கிலும் உள்ள சுன்னிப் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்கும் ஆதாரங்களில் முக்கியமானவர்களாக உள்ளனர்என்று அக்குறிப்பு அறிவிக்கிறது.

இந்த மதிப்பீடு ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிதான் அல் குவேடா பயங்கரவாதத்தின் தளம் என்று அமெரிக்கா பகிரங்கமாகக் குவிப்பு காட்டிவருவதுடன் முற்றிலும் மாறுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான போரின் முக்கிய நோக்கம் மத்திய ஆசியாவில் ஒரு மேலாதிக்க அமெரிக்க பங்கை நிறுவுதல் ஆகும். ஏனெனில் இப்பகுதிதான் உலகின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிகளில் உலகின் இரண்டாம் பெரிய வளங்கள உள்ளன.

தன்னுடைய தகவல்களில் கார்டியன் (டைம்ஸ்  அல்லசவுதி பயங்கரவாதத்திற்கு நிதியைக் கொடுக்கும் பங்கில், அமெரிக்க எண்ணெய் நலன்களுக்கு அடுத்த இடம்தான் கொடுக்கிறது என்று அமெரிக்கா புகார் கூறுவதாகக் குறிப்பிடுகிறது. கார்டியன்  கூறுகிறது: “எண்ணெச் செழிப்பு உடைய சக்தி வாய்ந்த நட்பு நாடுகள் என்று வரும்போது அமெரிக்கத் தூதர்கள் தங்கள் கவலைகளை மூடிய கதவிற்குள் நடக்கும் பேச்சுக்களில்தான் கொள்ளுகின்றனர்; இது பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்னும் நட்பு நாடுகளுக்கு பலமுறையும் வெளிப்படையாகக் கூறப்படும் புகார்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் உள்ளது. மாறாக, ரியாத்தில் உள்ள தூதரக அதிகாரிகள் அல் குவேடா தாக்குதல்களில் இருந்து சவுதி எண்ணெய் வயல்களைக் காப்பது பற்றிக் கவலை கொண்டுள்ளனர்.”

கார்டியனில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள இரண்டாம் தொகுப்பு தகவல் தந்திகள், ஈரான் அல்ல சவுதி அரேபியாதான் உறுதிக் குலைப்பிற்கான பெரிய அச்சுறுத்தைக் கொண்டுள்ளது என்று ஈராக்கிய அரசாங்க அதிகாரிகளின் கருதுவதாக மேற்கோளிட்டுள்ளன. பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதர், செப்டம்பர் 2009ல் அனுப்பிய தவகல் தந்தி, ஈராக்கியத் தலைவர்கள் சவுதியின் நோக்கம்சுன்னிச் செல்வாக்கை அதிகப்படுத்துவது, ஷியா மேலாதிக்கத்தை நீர்க்க வைத்தல், ஒரு வலுவற்ற, சிதைவுற்ற ஈராக்கிய அரசாங்கத்தை அமைத்தல்என்று பார்க்கிறார்கள் என உள்ளது என்று விளக்குகிறது. இதே தகவல் “9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் மதரீதியாக பிற்போக்கான மற்றும் அரசியல் அடக்குமுறைத் தன்மையைக் கொண்டுள்ள சவுதி அரேபியாதான் (அங்கிருந்துதான் பெரும்பாலான 9/11 பயங்கரவாதிகள் வந்தனர்) மேற்கிற்கு உண்மையான விரோதிஎன்று  கூறுவதாகச் செயச்தித்தாள் முடிவுரை கூறுகிறது.

அங்கீகாரம்பெற்றுள்ள செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி முன்கூட்டியே அமெரிக்க வெளிவிவகாரத்துறை மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகங்கள் நடக்கும் ஏகாதிபத்தியச் செயல்களினால் ஏற்பட்டுள்ள சேதத்தைக் குறைக்க முயல்வதை தெளிவாக காட்டுகின்றது. அதனால் இந்த அறிக்கைகள் உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்யும் வக்கிரமான சூழ்ச்சி பற்றி ஒரு தெளிவான படத்தை வழங்க முடியாது இருக்கின்றன. .

விக்கிலீக்ஸ் தளத்தில் ஒரு வார இறுதியிலேயே வந்த ஒரு சில உதாரணங்கள் வாஷிங்டனின் கொள்ளை முறை வெளியுறவுக் கொள்கையின் சாரமாக முறையான இரட்டை வேடம் பற்றிய பார்வையை அளிக்கின்றன. ஒவ்வொரு நிகழ்விலும், தகவல்கள் உண்மையைக் கூறுகின்றன. இது அமெரிக்க அரசாங்கத்தின் பொய்யான, வெளிப்படையான நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரான தன்மையைக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 9, 2009-அஜர்பைஜானிலுள்ள பக்கு விலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வந்துள்ள ஒரு தகவல், அண்மைப் பகுதியான ஈரானிய எல்லைக்கு அருகே உள்ள கஷ்காய் பழங்குடி மக்களின் ஆயுதமற்ற தலைவர்கள் இருவர் வருகை பற்றித் தெரிவிக்கிறது. பூசலுக்கு உட்பட்ட ஈரானிய ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு பின்னர், இந்த இருவரும் தங்கள் பழங்குடி உறுப்பினர்கள், துருக்கிய மொழி பேசும் இனவழிக் குருவுடன் தொடர்பு கொண்டவர் என்ற முறையில் எதிர்க்கட்சி வேட்பாளர் மெஹ்தி கரௌபியைச் சாதகமாகக் கருதினாலும்பெரும்பாலான கஷ்காய் மக்கள் அஹெமதிநெஜட்டிற்குத்தான் வாக்களித்தனர்; ஏனெனில் அவரால் முன்னேற்றமான சுகாதாரம், கல்வி, உள்கட்டுமானப் பணிகள் மற்றும்/அல்லது பிற நிதிய ஊக்கங்கள் கிடைத்தன.” என்றனர்

அஹ்மெதிநாஜெட் ஜனாதிபதித் தேர்தலைத்திருடினார்என்னும் உத்தியோகப்பூர்வ அமெரிக்க பொய்யை, ஈரானுக்கு எதிரான தற்பொழுதைய பிரச்சாரத்தின் முக்கியமான கூறுபாடுகளில் ஒன்று, இந்த தகவல் நேரடியாக முரண்படுத்துகிறது. கரௌபி தன் தாயகப் பகுதியான வடமேற்கு ஈரானில் வாக்குகளைப் பெறுவதில் அடைந்த தோல்விதான் எப்பொழுதும் உத்தியோகபூர்வ வாக்குத் தில்லுமுல்லுக்குநிரூபணம்என்று மேற்கோளிடப்பட்டது. ஆனால் இராஜதந்திர தகவல்கள் அமெரிக்க அரசாங்கம் அப்பகுதியில் கரௌபிக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதை நன்கு அறிந்திருந்தது.

டிசம்பர் 26, 2009-யேமன் சானாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வந்துள்ள தகவல், ஒபாமா நிர்வாகம் அந்நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் அல் குவேடா இலக்குகள் மீது அமெரிக்க வான் தாக்குதல்களுக்கான பொறுப்பை மறுக்க வேண்டும் என்னும் யேமன் வெளியுறவு மந்திரியின் வேண்டுகோளைக் கொடுக்கிறது; அத்தாக்குதல்கள் பல டஜன் குடிமக்கள் உயிரைக் கவர்ந்தது. மாறாக அந்த அதிகாரி அமெரிக்காநாட்டில் இருக்கும் பயங்கரவாத எதிர்ப்புக்களின் திறனை உயர்த்திக் காட்ட வேண்டும்…” என்று வலியுறுத்தினார்.

வேறுவிதமாகக் கூறினால், யேமன் அரசாங்கம் தன்னுடைய மக்களிடமும் உலகிற்கும் தான் கூறும் பொய்களுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது; வாஷிங்டனும் அவ்வாறே செய்தது.

ஜனவரி 15, 2010-மொரோக்கோ தூதரகத்தில் இருந்து வந்த தகவல் ஒன்று மேற்கு ஆபிரிக்க கினியா நாட்டில் நடந்த இராணுவ ஆட்சி மாற்றத்தின் தலைவர் டாடிஸ் காமராவிற்கு எதிரான ஒரு வெற்றிகர அமெரிக்க நடவடிக்கையைப் பற்றி தவகல் தந்துள்ளது. டாடிஸ் காமரோ ஒரு மொரோக்கோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். வெளிவிவகாரத்துறை காமராவை அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவருக்குப் பதிலாகச் செயலாற்றி வந்த மற்றொரு அதிகாரியை விட அவர் மீது குறைந்த நம்பிக்கையைத்தான் கொண்டிருந்தது.

மொரோக்கோ அதிகாரிகள் காமராவை ஒரு சிறிய விமானத்தில் அனுப்பி அவர் கினியாவிற்கு மீண்டும் செல்கிறார் என்று கூறினர்.  ஆனால் அதற்குப் பதிலாக அண்டை நாடான பர்க்கினா பாசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இது காமரா அமெரிக்க அரசாங்கத்தின் ஏவலில் கடத்தப்பட்டார் என்பதைக் காட்டுகிறது. அமெரிக்கா பகிரங்கமாக இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துவிட்டது.

மார்ச் 2010ல் பாரிஸில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வந்த தொடர்ச்சியான தகவல்கள் பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி முன்னாள் ஆபிரிக்க பிரெஞ்சு காலனிகளுக்கு சென்றிருந்தது பற்றிக் கூறுகின்றன. பிரெஞ்சு இராணுவத்திலும் அப்பகுதியில் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிக் கூறுகின்றன. நைஜரில் இருக்கும்போது சார்க்கோசி மாபெரும் யுரேனிய ஏகபோக உரிமை நிறுவனமான AREVA விற்கு விசுவாசமான பிரச்சாரகராகச் செயல்பட்டார் என்றும் தகவல் குறிப்பிடுகிறது.

இத்தகவல் அனைத்து ஏகாதிபத்தியச் சக்திகளுடைய உந்துதல் சக்திகள் ஒன்றைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது மாபெரும் பெருநிறுவனங்களின் நிதிய நலன்களில் அவை கொண்டுள்ள அக்கறை பற்றி. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கு அல்ல; விக்கிலீக்ஸ் வார இறுதியில் கொடுத்துள்ள இரு தகவல்களின் சுருக்க இதை நிரூபிக்கிறது.

மாட்டிரிட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஜனவரி 2009ல் ஜெனரல் எலக்ட்ரிக் சார்பாக அமெரிக்க தூதர் தலையிட்டது பற்றிக் குறிப்பிடுகிறது; அந்நிறுவனம் ஸ்பெயினின் அரசாங்கம்பொருட்களைப் பெறும் ஒப்பந்தங்களில் அமெரிக்காவின் ஏலம் கேட்பவர்களை வரவேற்பதில்லைஎன்று புகார் கூறினார். ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சரகம் ஹெலிகாப்டர் இயந்திரங்கள் வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை பிரிட்டிஷ் தளமுடையை ரோல்ஸ் ரோய்ஸுக்குக் கொடுத்தபோது, பிரதம மந்திரி ஸாப்பாத்தேரோ, “அந்த முடிவை மாற்றி ஜெனரல் எலக்ட்ரிக் தான் ஏலத்தில் வெற்றி பெற்றது என்று அறிவித்தார். அமெரிக்கத் தூதர் ஸாப்பாத்தேரோ நேரடியாகக் குறுக்கிட்டு ஜெனரல் எலக்ட்ரிக்கிற்கு ஆதரவாக ஒப்பந்தத்தை அளித்தார் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.”

பொலிவியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டமற்றொரு தகவல், அமெரிக்கப் பெருநிறுவனங்களின் சொத்துக்கள் மீது ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸின் தேசியவாத அரசாங்கம் நடத்தும் தாக்குதல்கள் பற்றி விரிவாகக் கூறுகிறது. “ஈவோவின் சமீபத்திய நடவடிக்கைகள், அறிக்கைகள் பல பாதிக்கப்பட்ட தொழில்துறைகளால் முதலீட்டு-எதிர்ப்பு நடவடிக்கையாக காணப்படுகின்றன: பெட்ரோலிய ஒப்பந்தங்கள் கட்டாயமாக மறு பேரத்திற்கு உட்படுத்தப்படல், கிளேன்கோரின் வின்டோ ஸ்மெல்டர் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது, அரசாங்க எரிசக்தி மற்றும் மின்விசை நிறுவனத்தை உருவாக்கும் விருப்பம் ஆகியவை சில உதாரணங்கள் ஆகும்.”

அமெரிக்க முதலீட்டில் பாதிப்பிற்கு உட்படக்கூடியது சார் கிறிஸ்டோபால் சுரங்கம் ஆகும்; இதில் 65% பங்கு ஏபெக்ஸ் சில்வர் நிறுவனத்திடம் உள்ளது. காங்கிரசில் தற்பொழுது உள்ள ஒரு சட்டத்தால் சான் கிறிஸ்டோபால் குறிப்பாகப் பாதிக்கப்படும்.”

நிதிய மூலதனம், பேராசைத் தன்மை மற்றும் கொள்ளையடித்தல் ஆகியவற்றின் உலகக் கொள்கைதான் ஏகாதிபத்தியம் ஆகும். லெனின் தன்னுடைய தொல்சீர்ப் படைப்பான ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்பதை 1915ல் எழுதியிருப்பது இன்றும் உண்மையாக உள்ளது. விக்கிலீக்ஸின் மாபெரும் பெருமை இந்த அமைப்பு இந்த வரலாற்று உண்மைக்கு மறுக்க முடியாத ஆவணச் சான்றுகளைக் கொடுத்துள்ளதுதான்.