WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
அசாங்கேயின் வழக்கறிஞர் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை அம்பலப்படுத்துகிறார்
By James
Cogan and Nick Beams
6 December 2010
Use
this version to print | Send
feedback
அசாங்கே ஆஸ்திரேலிய
குடிமகனின் உரிமைகளைப் பெற்றிருக்கிறார் என்ற ஒரு முன்மாதிரி அறிக்கையை
வெளியிட்டதன் மூலமாக,
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன்
அசாங்கே மீதான சர்வதேச பிரச்சாரத்திற்கான எதிர்ப்பை திசை திருப்ப ஆஸ்திரேலிய
அரசாங்கம் முயன்றிருக்கிறது.
"ஆஸ்திரேலியாவிற்குத்
திரும்புவதற்கான உரிமை அசாங்கேயிற்கு உண்டு.
அவர் வெளிநாட்டில் இருக்கும்
போது,
தேவையானால்,
இராஜாங்க உதவிகளைப் பெறுவதற்கான
உரிமையும் அவருக்கு உண்டு,”
என்று நீதியரசர் ரோபர்ட்
மெக்ளெல்லாந்து அறிவித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த
Guardian
இதழுக்கு அசாங்கேயினால் அளிக்கப்பட்ட ஓர் இணையவழி பேட்டிக்கு பிரதிபலிப்பாக அந்த
அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த
பேட்டியில்,
அநியாயமாக
ஆறு ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்த
Guantánamo Bay
சிறைச்சாலை
முகாம் கைதி டேவிட் ஹிக்ஸை கையாண்டதைப் போன்றே தொழிற்கட்சி அரசாங்கத்தால் தாமும்
கையாளப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இலண்டனில்,
அசாங்கேயின் வழக்கறிஞர் மார்க்
ஸ்டீபன் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு ஆணையத்திற்குத் தெரிவித்ததாவது:
“அவருக்கு எந்த உதவியும் இல்லை,
உதவிக்கரம் நீட்டவும் யாரும்
இல்லை. …
அவர் என்ன செய்தாரோ அதனோடு நீங்கள்
உடன்படுகிறீர்களோ இல்லையோ,
ஆனால் ஓர் ஆஸ்திரேலிய
கடவுச்சீட்டின் மதிப்பு என்ன என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
ஓர் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை
நீங்கள் வைத்திருந்தால் உங்களுக்கு ஏதேனும் உதவி கிடைக்கும் என்று ஒருவர்
நினைக்கலாம்,
ஆனால் இதுவரையில் அப்படியொன்றும்
நடக்கவில்லை, [ஆஸ்திரேலிய]
உயர் ஆணையங்களும்,
தூதரகங்களும் ஜூலியன்
ஆசாங்கேவிற்கு அவற்றின் கதவுகளை மூடிவிட்டிருக்கின்றன என்று தான் நான் சொல்ல
வேண்டியுள்ளது.”
சுமார்
250,000
இராஜாங்க கசிவுகளை விக்கிலீக்ஸ்
வெளியிடத் தொடங்கிய அந்த வாரத்திலிருந்து,
மூத்த அமெரிக்க அரசியல்
பிரமுகர்கள் அசாங்கேயை ஒரு "பயங்கரவாதியாக"
தொடர்ந்து முத்திரைக் குத்தி
கொண்டிருக்கிறார்கள்.
இணையம் முழுவதும் கொலை மிரட்டல்கள்
குவிந்திருக்கும் நிலையில்,
ஒபாமா நிர்வாகம் அந்த
39
வயது ஆஸ்திரேலியருக்கு எதிராக
கிரிமினல் குற்றச்சாட்டுக்களை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இது அவரை மறைந்து வாழும்
நிலைக்குத் தள்ளியுள்ளது.
அசாங்கேயை வெளியில்
"இழுத்து
வர"
அவருடைய மகனை வீட்டிலிருந்து கடத்தி வர
அழைப்புவிடுக்கும் அளவிற்கு ஓர் அமெரிக்க வலைத்தளம் சென்றுள்ளது.
ஆஸ்திரேலிய தொழிற்கட்சி
அரசாங்கமும் விசாரணையின்றி மரணதண்டனை விதிக்கக்கோரும் சர்வதேச கும்பல்களோடு
சேர்ந்து கொண்டிருக்கிறது.
வெளியிடப்பட்ட அமெரிக்க
இராஜாங்க கசிவுகளை,
பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டும்
"சட்டவிரோதமானவை"
என்று முத்திரை குத்தினார்.
அசாங்கேயிற்கு எதிராக கிரிமினல்
குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய முடியுமா என்று ஆஸ்திரேலிய பொலிஸ் ஆராய்ந்து
வருவதாக அறிவித்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி கெவின் ரூடும்,
மெக்ளெலாந்தும்,
'அமெரிக்காவின் எவ்வித
வழக்கிற்கும் ஆஸ்திரேலியா உதவும்'
என்று அறிவித்தார்கள்.
சட்டபூர்வமான செயல்முறை
குறித்து தொழிற்கட்சி தலைவர்களை விட,
தேசிய எதிர்கட்சியான வலது-சாரி
தாராளவாத கட்சி அதன் கவலைகளைப் பெரிதும் வெளிப்படுத்தி உள்ளது.
"அரசாங்கம் விக்கிலீக்ஸை
உடனடியாக கண்டனம் செய்தது,
ஆனால் ஆஸ்திரேலிய சட்டவிதிகள்
உடைக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வரையில் தீர்ப்பை முடிவு செய்ய அது
அவசரப்படக்கூடாது,”
என்று வெளிவிவகாரத்துறை
செய்திதொடர்பாளர் ஜூலி பிஷாப் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
இதுவரை அசாங்கேவிற்கு
எதிரான பிரச்சாரத்திற்கு எதிராக பேச மறுத்த வந்த பசுமைக் கட்சி தலைவர் பாப் பிரௌன்,
'ஆஸ்திரேலிய குடியுரிமை
மதிக்கப்பட வேண்டும்;
அசாங்கேயின் குடியுரிமை பாதுகாப்பாக
இருப்பது அவருக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்'
என்பதைக் குறிப்பிடும் ஓர்
அறிக்கையை வெளியிட்டார்.
“திரு.
அசாங்கே மீது எந்த கிரிமினல்
குற்றமும் கிடையாது;
அவருக்கு எதிராக பல ஊகங்களும்,
வதந்திகளும் நிலவுகின்றன,”
என்று அவர் தெரிவித்தார்.
தாராளவாத மற்றும்
தொழிற்கட்சி ஆகியவற்றிற்கு ஒரு மாற்றீடாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் பிரௌன்,
அசாங்கே மீதான தாக்குதல்
குறித்தோ அல்லது தொழிற்கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தோ கண்டனம் எதுவும்
தெரிவிக்கவில்லை.
அல்லது அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும்
சக்திகளை அச்சுறுத்தும் வெளியீடுகளை வெளிப்படுத்தியதில் விக்கிலீக்ஸின் உரிமையையும்
அவர் ஆதரிக்கவில்லை.
அதற்கு மாறாக,
ஆஸ்திரேலிய ஊடங்களால்
பரப்பப்பட்டிருக்கும் அனுமானங்களைக் கொண்டு அவற்றை மட்டந்தட்ட முயற்சித்தார்.
“இந்த
கசிவுகள் நேராக ஏதேனும் ஆஸ்திரேலிய செய்தியிதழ்கள் ஒன்றிற்கு சென்றிருந்தால்,
அவையும் அதை
பிரசுரித்திருக்கும்.
பத்திரிக்கைகள் எப்போதும் இவ்வாறு தான்
கசிவுகளில் இருந்து வேலை செய்கின்றன,”
என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் வரலாற்று
ஆவணங்கள் வேறுவிதமாக எடுத்துக்காட்டுகின்றன.
2003இல் ஈராக் ஆக்கிரமிப்பு
குறித்து எடுத்துக்காட்டப்பட்டதில்,
ஆஸ்திரேலிய பெரு ஊடகங்கள் அங்கே
நிஜமான சூழ்நிலையில் இருந்தன,
இருந்தபோதினும்
"பெருந்திரளான
மக்களை அழிப்பதற்கான ஆயுதங்கள்"
குறித்த அனைத்து பொய்களையும்
முடிவில்லாமல் கட்டவிழ்த்துவிட்டன.
ஆஸ்திரேலிய பிரதம
மந்திரி கெவின் ரூட்டுக்கும்,
அமெரிக்க வெளிவிவாகரத்துறை
செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையில் மார்ச்
24, 2009இல்
நடந்த ஒரு 75
நிமிட உரையாடலின் ஆவணமும் சமீபத்திய
விக்கிலீஸ்க் வெளியீடுகளில் உள்ளடங்கி உள்ளது.
அமெரிக்க இராஜாங்க
விஷயங்களின் கசிவுகளின்படி,
சீனாவுடன் இராஜாங்கரீதியாக
இணைந்திருக்க கோரினாலும், "அதேநேரம்
ஏதேனும் குளறுபடியானால் துருப்புகளை உடனடியாக நிலைநிறுத்தவும் அமெரிக்கா தயாராக
இருக்க வேண்டும்"
என்று ரூட் கிளிண்டனிடம் கூறினார்.
(பார்க்கவும்:
“WikiLeaks
continues exposure of predatory US foreign policy”)
ரூட்டின் கருத்தை
ஆதரித்த பசுமைக்கட்சி தலைவர் பிரௌன்,
ரூட்டின் அறிவுரை
"நெருடலாக"
இருப்பதாக ஜூலி பிஷாப்பால்
வெளியிடப்பட்ட கவலைகளை விமர்சித்தார்.
“எனக்கு
நல்லதாக போனது,
பாதுகாப்பு துருப்புகளை நாம் கைவிட
வேண்டுமா?
துருப்புகளைப் பயன்படுத்துவதற்கான வேறு
சூழ்நிலைகள் இல்லையா?
என்று நான் ஜூலி பிஷாப்பைக்
கேட்டிருந்தேன்,”
என்று அவர்
ABC
ரேடியோவிற்கு அறிவித்தார்.
சீனா குறித்த
விவாதத்திற்கு அப்பாற்பட்டு,
பாகிஸ்தான் அரசாங்கத்துடன்
அமெரிக்கா ஓர் உடன்படிக்கையைப் பெற்றால்—ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான
ஆக்கிரமிப்பு துருப்புகளை எதிர்த்து போராடும் போராளிகளைக் கொல்லும் மற்றும்
வேட்டையாடும் முயற்சியில் உதவுவதற்கு,
பாகிஸ்தானுக்குள் ஆஸ்திரேலிய
சிறப்பு நடவடிக்கை படைகளை அனுப்புவதற்கான ரூட்டின் முறையீடும்,
அந்த ரூட்-கிளிண்டன்
உரையாடல்களில் இருந்த பிற முக்கிய வெளிப்பாடாக இருந்தது.
பாகிஸ்தானுக்குள்
சட்டவிரோத போராளிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள,
2009இன் போது செய்து கொண்ட ஒரு
மொத்த தீவிரமுனைப்பாட்டின் ஒரு பகுதியாக,
பாகிஸ்தானுக்குள் அமெரிக்க
சிறப்புப்படைகளை நிறுவ ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியின் அரசாங்கத்தால் அவற்றிற்கு
அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பதையும்,
பாகிஸ்தான் தாக்குதல்கள்,
சிறப்பு நடவடிக்கை
மனிதவெடிகுண்டுகள் மற்றும் வேட்டையாடும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றால்
ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பழங்குடி முகமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள்
கொல்லப்பட்டார்கள் என்பதையும் தொடக்கத்தில் வந்த கசிவுகள் ஏற்கனவே வெளிப்படுத்திக்
காட்டின.
ஆஸ்திரேலிய
பாராளுமன்றத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியப்படுத்தாமல்,
ஆஸ்திரேலிய துருப்புகளும்
பாகிஸ்தானுக்குள் இறக்கப்பட வேண்டுமா என்ற வெளிப்படையான பிரச்சினை தான் ரூட்
மற்றும் கிளிண்டனின் உரையாடலால் முன்னிறுத்தப்பட்டது.
தொழிற்கட்சி
அரசாங்கத்தில் தற்போது வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்து வரும் ரூட்,
வாரயிறுதியில் வெளியான கசிவுகள்
குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
எவ்வாறிருப்பினும்,
ஏகாதிபத்திய இராஜாங்க
விஷயங்களைக் குறித்த விக்கிலீக்ஸின் வெளியீடுகள் குறித்து கடுகடுப்பாக குறை
கூறினார்.
மாநாடுகளுக்காக
பஹ்ரெய்ன் சென்றிருந்த ரூட்
Al Arabiya
நாளிதழிலிடம் தெரிவித்ததாவது:
“வெளிப்படையான தீர்வுகள்
இல்லாதபோது பிரச்சினைகளை தீர்க்க இராஜாங்க விஷயங்கள் தேவைப்படுகின்றன என்பதால்,
இராஜாங்க விஷயங்கள் இரகசியமாக
வைக்கப்படுகின்றன… இவை அனைத்தும் பொதுவில் கொண்டு வரப்பட்டால்,
அடிப்படை சவால்களை கையாள்வதில்
இருக்கும் நம்முடைய முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் நம் எல்லோருக்குமே பிரச்சினை
உருவாகும்,”
என்றார்.
வேறு வார்த்தைகளில்
கூறுவதானால்,
ஏகாதிபத்திய அரசாங்கங்கள்
அவற்றின் எதிரிகளுக்கு எதிராக யுத்தங்களை திட்டமிடும் விதத்தையும்,
உலக மக்களின் முதுகுக்குப்
பின்னால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்
விதத்தையும் அவை வெளிப்படுத்தியிருக்கின்றன என்ற உண்மை தான் விக்கிலீக்ஸ் மற்றும்
ஜூலியன் அசாங்கேயிற்கு எதிரான அனைத்துவிதமான கண்டனங்கள் மற்றும் மிரட்டல்களுக்குப்
பின்னால் இருக்கிறது.
|