WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
UK education protests subjected to police attack
பிரிட்டன் கல்வி
எதிர்ப்புக்கள் பொலிஸ் தாக்குதலுக்கு உட்பட்டன
By Robert Stevens
2 December 2010
Back to
screen version
பல்கலைக்கழக மற்றும்
பள்ளி மாணவர்கள் நாடெங்கிலும் ஆயிரக்கணக்கில் அரசாங்கத்தின் திட்டமான இங்கிலாந்தில்
பயிற்சிக் கட்டணத்தை ஆண்டுக்கு
9.000 பவுண்டுகள் என
உயர்த்துதல்,
கல்விப் பராமரிப்புப் படியை அகற்றுதல்
பிற கல்வித்துறைக் குறைப்புக்கள் ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம்
நடத்தினார்கள்.
மீண்டும் கருத்து வேறுபாட்டை பொலிஸார்
மிருகத்தனத்துடனும்,
குற்றத்தன்மையாக்கும் நோக்கத்திலும்
நடவடிக்கைகளை விடையிறுப்பாக கொடுத்துள்ளனர்.
லண்டன் டிரபால்கர்
சதுக்கத்தில் மாணவர்கள் குழுவினர்
லண்டனிலும் மற்ற சிறிய,
பெரிய நகரங்களிலும் இங்கிலாந்து முழுவதும் செவ்வாயன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
நடைபெற்றன. இவற்றுள் பர்மிங்ஹாம்,
மான்செஸ்டர்,
லீட்ஸ், ஷெபீல்ட்,
கேம்பிரிட்ஜ்,
லிவர்பூல்,
நியூகாசில்,
பிரைட்டன்,
கிளாஸ்கோ,
எடின்பரோ மற்றும் கார்டிப்
ஆகியவை அடங்கும்.
நாடெங்கிலும்
40 இடங்களில் நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டன. பல இடங்களிலும் முந்தைய எதிர்ப்புக்களையடுத்து,
பல்கலைக்கழக ஆக்கிரமிப்புக்கள்
ஏற்கனவே தொடங்கிவிட்டன.
தேசிய மாணவர்கள்
சங்கமும் தொழிற்சங்கங்களும் கல்வித்துறை மீதான தாக்குதல்களுக்கு எதிராக எந்த
நடவடிக்கையையும் எடுக்க மறுத்துவிட்டதின் விளைவாக,
இவையும் முந்தைய
ஆர்ப்பாட்டங்களும் பெரும்பாலும் சிறிய தற்காலிக குழுக்கள் மற்ற அமைப்புக்களால்
நடத்தப்பட்டன.
இந்த எதிர்ப்புக்கள் அனைத்தின் ஒரு
கூறாக இருப்பது, தொழிற்சங்கப் பதாகைகள் காணப்படாததும்,
வீட்டிலேயே தயாரிக்கப்படும் கோஷ
அட்டைகளின் பெருக்கமும்தான்.
செவ்வாயன்று நடைபெற்ற
எதிர்ப்புக்கள் நவம்பர்
24 தேசிய நடவடிக்கை தினத்தன்று
நடந்த ஆர்ப்பாட்டங்களை விடச்
சிறியவையாக இருந்தன.
கடும் பனி,
குளிர் நிலைமைகள் இதற்கு ஓரளவு
காரணம் என்றாலும்,
கல்வித்துறை வெட்டுக்களின் எதிர்ப்பு,
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான
வெகுஜன எதிர்ப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை கன்சர்வேடிவ்/லிபரல்
ஜனநாயக அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கமுடைய இயக்கத்துடன் இணைக்கும் அரசியல் தலைமை
ஏதும் இல்லாததால் இயக்கம் இடருற்றுள்ளது.
லண்டனில்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் டிரபால்கர் சதுக்கத்தில் கூடினர். இவர்களை ஒரு பலத்த
பொலிஸ் நடவடிக்கை எதிர்கொண்டது.
மாணவர் எதிர்ப்பிற்கு எதிரான
முந்தைய பொலிஸ் நடவடிக்கைகளில்,
“சுற்றி வளைத்தல்”
எனப்படும் உத்தி
பயன்படுத்தப்பட்டது.
இந்தத் தந்திரத்தின் அடிப்படையில்
பொலிசார் எதிர்ப்பாளர்களை சிறு பகுதிகளில் சுற்றிவளைத்துப் பல மணி நேரம் தப்ப
முடியாமல் செய்துவிடுவர்.
இது ஆர்ப்பாட்டக்காரர்களை
கட்டாயச் சிறைவைப்பதுபோல் ஆகும். அவர்களுக்கு உணவு,
குடிநீர்,
கழிப்பறை வசதிகள்
மறுக்கப்படுவதோடு,
சட்டப்பூர்வப் பாதுகாப்பிற்கும்
இடமில்லாமல் போகிறது.
எதிர்ப்பாளர்களை
மீண்டும் பொலிசார் சுற்றிவளைத்தலைத் தடுக்கும் வகையில்,
லண்டன் ஆர்ப்பாட்ட அணிவகுப்பின்
பிரிவுகள் பல திசைகளிலும் பிரிந்து சென்றனர். பொலிசார் விரட்டத் தொடங்கினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு
செய்திருந்த அமைப்புக்களில் ஒன்றான கட்டணம்,
குறைப்பிற்கு எதிரான தேசியப்
பிரச்சாரமானது பொலிசார்,
எதிர்ப்பு நடை பாதையை
“முன்கூட்டியே தடைக்கு
உட்படுத்திவிட்டனர்”
என்று கூறியது.
“நூற்றுக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் வொயிட்ஹால் அலுவலகப் புறங்களில் இருந்தும் ஓடினர். ஏனெனில்
அவர்கள் திட்டமிடப்பட்டுள்ள அணிவகுப்பின் தொடக்கத்தில் இருந்து சில கஜ
தூரங்களுக்குள் “சுற்றி
வளைக்கப்பட்டு விடுவோம்”
என்று அஞ்சினர்.
லண்டன்
West End
சுற்றிச் சிறு பிரிவுகள் பொலிசாரால்
துரத்தப்பட்டபோது,
கடும் குளிர் நிலையினால் ஏற்பட்டுள்ள
பெரும் குழப்பங்களை இது அதிகரித்தது.
ஆயிரக்கணக்கானவர்கள்
ஏராளமான பொலிசாரால்
விரட்டப்பட்ட லண்டனின் West
End பகுதியில் சிதறியோடினர்.
கடும் குளிரில் தாங்கள் சுற்றிவளைக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் இருந்திருக்க
வேண்டும்”
என்று
டெய்லி
மெயில்
எழுதியுள்ளது.
ஒரு சுதந்திரச்
செய்தியாளரான கோல்ட்,
“பிக்காடில்லி சர்க்கஸ்,
ரிஜேன்ட் ஸ்ட்ரீட்,
ஆக்ஸ்போர்ட் ஸ்ட்ரீட்”
இவற்றின் வழியே ஓட்டம் பிடித்து
எம்பாங்மென்ட்டில் சிதறித் தப்பி ஒரு மாணவர் குழுவின் நடுவே
தான் இருந்ததாக”
கார்டியனில்
எழுதியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பொலிசார் பொறுப்பற்ற முறையில் வன்முறையைப்
பயன்படுத்தினர்.
ஒரு பள்ளிச் சிறுவனை எப்படி
பொலிஸ் மிருகத்தனமாகத் தாக்கியது என்பதை கோல்ட் விவரித்து,
“எந்தத் தூண்டுதலும் இன்றி ஒரு
சிறுவனை ஒரு பொலிஸ் அடித்து அகற்றியதை நான் கண்டேன்”
என்றும் அவர் கூறியுள்ளார்.
BBC
தகவலின்படி,
லண்டனில் மூன்று பேர்
காயமுற்றனர்.
மெட்ரோபொலிடன் பொலிஸ் ஆணையர் பாப்
பிராட்ஹர்ஸ்ட் எதிர்ப்புக்கு முன்னதாக
“பள்ளிச் சிறுவர்கள்
மற்றவர்களைப் போல் எதிர்க்கும் உரிமையை உடையவர்கள்தான்,
ஆனால் வன்முறை வெடித்தால்
சிறுவர்கள் காயம் பெறுவதற்கான ஆபத்துக்கள் அதிகம்”
என்று கூறியிருந்ததை அடுத்து
இத்தாக்குதல்கள் வந்தன. “ஆயிரக்கணக்கான
மக்கள் இருக்கும் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஓரளவுதான் செய்ய முடியும்”
என்றும் அவர் கூறினார்.
அரச வன்முறை,
மாணவர்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகத் திரட்டப்பட்டது மொத்தம்
153 பேர் கைது
செய்யப்பட்டதிலிருந்து அறியப்படலாம்.
முந்தைய பெரிய
ஆர்ப்பாட்டங்களைவிட செவ்வாயன்று அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர்.
டிரபால்கர் சதுக்கத்தில்
200 பேர் கொண்ட குழு
“கலைந்து செல்ல மறுத்தபின்னர்”
இவற்றுள்
139 பேர் அமைதிக்குப் பங்கம்
விளைவித்தனர் என்று கூறிக் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் கூறியுள்ளது.
Indymedia
வலைத்
தளம் ஒன்று முன்னதாகச்
“சுற்றி விளைக்கப்பட்ட”
நூறு பேர் கைது செய்யப்பட்டதை
தொடர்ந்து, “கிட்டத்தட்ட
20
பேர் இன்னும் சுற்றிவளைப்பில்
இருந்தனர்.
பொலிசார் அவர்கள் வெளிவந்தபோது
கைவிலங்கு இட்டனர்.
ஒரு சில இளைஞர்களை விட்டுவிட்டாலும்,
பொலிசார் அனைவரையும் கைது
செய்வது போல் தோன்றியது.”
கைதுக்கள் அவ்வப்பொழுது
செய்யப்படுவதை வலைத்
தளத்தில் போட்டுவந்த
இண்டிமீடியா பொலிசார் “குற்றப்பிரிவு
சட்டம் 3வது
விதியை”
சுற்றிவளைப்பு செய்வதற்குக் காரணம்
காட்டினர் என்று எழுதியுள்ளது—இப்பிரிவு
பொலிஸுக்கு குற்றத் தடுப்பிற்கு,
கைது செய்வதற்குப் போதிய
சக்தியைப் பயன்படுத்தும் அதிகாரங்களை அளிக்கிறது.”
கைது
செய்யப்பட்டவர்களில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்,
ஆனால் தங்களைப் பற்றிய
விவரங்களைக் கொடுக்கமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். சிலர் புகைப்படம் எடுக்கப்பட
பொலிஸ் முன்னேற்ற உளவுத்துறைக் குழுக்களுக்கு (Forward
Intelligence Teams-FIT)
அவை அனுப்பப்பட்டன.
FIT எனப்படும் இந்த அமைப்பு
இப்பொழுது பொலிசாரால் எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவலைச் சேகரிப்பதற்கு வாடிக்கையாகப்
பயன்படுத்தப்படுகின்றன. இது அரசின் பெரிய உளவு வலையமைப்பின் ஒரு பகுதி ஆகும்.
ஒரு வலுவான பொலிஸ்
நடவடிக்கை,
நடந்து கொண்டிருந்த மற்ற
எதிர்ப்புக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டன.
மான்செஸ்டரிலும்,
லீட்ஸிலும் நூற்றுக்கணக்கான
பொலிஸ் அதிகாரிகள் அணிவகுப்பாளர்கள் கூடி,
அணிவகுத்துச் சென்றபோது
அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
முக்கிய
பல்கலைக்கழகத்தில் தொடங்கி நகர மையத்திற்குச் சென்ற மான்செஸ்டர் ஆர்ப்பாட்டத்தில்,
எதிர்ப்பாளர்கள் பொலிசார் அதிக
குதிரைப்
படையினர்களையும் எதிர்கொண்டனர்.
பொலிசாரின்
“சான்றுகள் சேகரிக்கும்”
குழுக்களும் ஆர்ப்பாட்டத்தில்
பங்கு பெற்றவர்களை வீடியோ எடுத்தன.
கலந்துகொண்டவர்களில் சிலர்
13 வயதுதான் நிரம்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் பல
இடங்களிலும் பொலிசாரின் விரைவுப் பிரிவு கூட்டத்தில் புகுந்து எதிர்ப்பாளர்களை
தாக்கிப் பிடித்தனர்.
ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஷெப்பீல்ட்டில் பல
நூற்றுக்கணக்கான மக்கள் துணைப் பிரதம மந்திரி நிக் க்ளெக்கின் தொகுதி
அலுவலகத்திற்கு அருகே ஆர்ப்பரித்தனர்.
அலுவலகத்திற்கு வெளியே
ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில் நுழைவாயிலில்
இருந்து 30
மீட்டர்கள் தள்ளி பொலிஸ் தடுப்புக்களை
நிறுவி 30
அதிகாரிகளைக் கொண்டு அவற்றை காவல்
காத்தனர்.
பிரிஸ்டலில் பல
ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகரத்தில் இரு பல்கலைக்கழகங்களில் இருந்து ஆர்ப்பாட்டம்
நடத்தினர். பொலிசார்
10 பேரைக் கைது செய்தனர்.
மாணவர்கள்
ஆக்கிரமித்திருந்த லீட்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்த மைக்கேல் சாட்லர் கட்டிடத்திற்கு
மீண்டும் மாணவர்கள் நுழைந்த போது,
அவர்கள் புகைப்படம்
எடுக்கப்பட்டனர்.
எதிர்ப்புக்கள் இன்னும்
வெகுஜனத் தன்மையை அடையவில்லை என்றாலும்,
ஆளும் வட்டங்களுக்குள்,
உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள்
உட்பட,
இவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள
அமைப்புக்கள் எவற்றினாலும் வழிநடத்தப்படவில்லை என்ற பெருகிய கவலைகள் உள்ளன.
இந்த ஆபத்துக்களை
வெளிப்படுத்திய
Avon மற்றும்
Somerset பொலிசைச் சேர்ந்த
தலைமைக் காவல் ஆய்வாளர் மார்கற் ஜாக்சன் பிரஸ்டலில் நடந்த எதிர்ப்பு பற்றிக்
கூறினார்: “முன்பு
இருந்தது போல் இங்கு மாற்று நோக்கம் கொண்ட கூறுகள் பல உள்ளன. இன்று எதிர்ப்பில்
அவர்களின் செல்வாக்கு கூடுதலாக இருந்தது. இது கூடுதல் தடையை ஏற்படுத்தியுள்ளது,
உண்மையான மாணவர்களின்
வாதங்களின் மதிப்பைக் குறைப்பதற்குத்தான் உதவியது.”
“ஜாக்சன்
மாணவர் அமைப்பில் இருந்து எவரேனும் வெளிவரவேண்டும் என்று குரல் கொடுக்கிறார்,
அதையொட்டி
“தலைவர் இல்லாத எதிர்ப்பு”
என்று அவர் குறிப்பிடுவதை,
இயக்கத்தை நன்கு
ஒருங்கிணைத்துச் செல்ல முடியும் என்கிறார்”
என்று
டெய்லி
மெயில்
கூறியுள்ளது.
“இவர்கள்
மாணவர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்ப்புக்களை இன்னும் நல்ல முறையில் அமைக்க முடியும்
என்று அவர் கூறினார். அதையொட்டி மாணவர்கள் இழப்படைய மாட்டார்கள்,
எதிர்ப்புக்கள் மாணவர்
கட்டணத்தில் அக்கறை இல்லாதவர்கள் தலையீட்டால்
“பெரும் குழப்பமாக
இழிந்துவிடாமல்”
இது தடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய அழைப்பு தேசிய
மாணவர் சங்கத்தின் தலைவர் ஆரோன் போர்ட்டர் செவ்வாய் எதிர்ப்புக்களுக்கு முன்னதாக
எதிர்ப்புக்களுக்கு பொது ஆதரவு இல்லை என்று
“முதுகெலும்பற்ற”
விதத்தில் கூறியதற்கு
மன்னிப்புக் கேட்க கட்டாயப்படுத்தலை தொடர்கிறது.
நவம்பர்
24 எதிர்ப்புக்களில்,
செவ்வாய் ஆர்ப்பாட்டங்களுக்கு
முன்பு நடந்தவற்றில்,
தான் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர்
உயர்மட்ட தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி வந்ததால்தான் என்றும் அவர்
ஒப்புக் கொண்டார்.
தலைமை ஆய்வாளர் மார்க்
ஜாக்சனுடைய கருத்துக்கள் ஆளும் உயரடுக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை,
அவர்கள் சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிரான இளைஞர்கள்,
மாணவர்களின்
“தலைவரற்ற எதிர்ப்பு”
இயக்கம்,
ஒரு அரசியல் சுயாதீனத்தன்மை
கொள்ளக்கூடும், NUS
மற்றும் தொழிற்சங்கங்கள் சுமத்தும்
இரும்புக் கவசம் போன்ற முறையில் இருந்து அகன்றுவிடக்கூடும் என்று அஞ்சுகின்றனர். |