சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

ISSE and SEP hold meeting on Detroit Symphony strike at the University of Michigan

Michigan பல்கலைக்கழகத்தில் டெட்ரோய்ட் சிம்பொனி போராட்டம் குறித்து ISSE மற்றும் SEP கூட்டம்!

By Shannon Jones 
18
November 2010

Use this version to print | Send feedback

டெட்ரோய்ட் சிம்பொனி இசைக்குழுவின் (DSO) இசைக் கலைஞர்களின் போராட்ட முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதற்காக அன் ஆர்பாரிலுள்ள Michigan பல்கலைக்கழகத்தில் நவம்பர் 15 ஆம் தேதியன்று சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்களும் (ISSE), சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினர். Michigan பல்கலைக் கழகம் மற்றும் கிழக்கு Michigan பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருந்த மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் இதர சமூக உறுப்பினர்களுடன் சேர்ந்து கலந்துகொண்டனர்.


டேவிட் வோல்ஷ் உரை நிகழ்த்துகின்றார்


உலக சோசலிச வலைத் தள கலைப் பிரிவு ஆசிரியர் டேவிட் வோல்ஷ் அளித்த அறிக்கை:

33 சதவிகித ஊதிய வெட்டுக்கள், புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு 42 சதவிகித வெட்டு, சுகாதார காப்பீட்டு குறைப்புகள் மற்றும் ஓய்வூதியத்தில் முடக்கம் ஆகியவை உள்ளிட்ட நிர்வாகம் கோரும் பாரிய சலுகை கோரிக்கைகளுக்கு எதிரான ஏழு வார வேலை நிறுத்தத்தில் டெட்ரோய்ட் சிம்பொனி இசைக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

கூட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் கலைப் பிரிவு ஆசிரியர் டேவிட் வோல்ஷ் நிகழ்த்திய ஒரு உரையும் இடம் பெற்றது. டெட்ரோய்ட் சிம்பொனி இசைக்குழுவின் வயலின் கலைஞராக இருக்கும் ஜோசப் ஸ்ட்ரிப்ளின், வேலைநிறுத்தம் செய்பவர்கள் சார்பாக நிகழ்வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். (பார்க்க DSO இசைக்கலைஞர்கள் போராட்டத்தின் ஏழாவது வாரத்தில் உணர்வுபூர்வமாக நடத்திய மறியல்)

கிழக்கு Michigan பல்கலைக்கழகத்தில் ISSE  தலைவரான க்ளிமென்ட் டேலி, பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார். அக்டோபர் 4 ல் தொடங்கிய DSO இசைக் கலைஞர்களின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை சோசலிச சமத்துவ கட்சியும், உ.சோ.வ.தளமும் உடனடியாக அங்கீகரித்ததை அவர் குறிப்பிட்டார்.

"அதற்கு அடுத்த வாரங்களில், இசைக் கலைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கும், போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கவும் பேட்டிகள் மற்றும் காணொளி காட்சிகள் உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் அதிகமான கட்டுரைகளை உ.சோ.வ.த. அர்ப்பணித்திருந்தது. "தங்க -தட்டு நலன்களை" பெற்ற  வாகன தொழிலாளர்கள் அல்லது "அதிக சம்பளம்" வாங்கும் மற்றும் 'தன்னிறைவு'  உடையவர்கள் என்று அழைக்கப்பட்ட பொது பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் எதிரொலித்த பிரச்சாரத்தின் அதே நன்கு தெரிந்த பிரச்சாரங்கள் இசைக் கலைஞர்களுக்கு எதிராக குறைந்த ஊதிய தொழிலாளர்களை தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டது. இதுமாதிரியான முயற்சிகள் வெறுப்புடன் நிராகரிக்கப்பட வேண்டும்." 


கிழக்கு
Michigan பல்கலைக்கழகத்தின் ISSE மாணவர் தலைவரான க்ளிமென்ட் டேலி, வேவிட் வோல்ஷ், போராடும் DSO இசைக் கலைஞர்களுக்காக ஜோசப் ஸ்ட்ரிப்ளின்.

அவர் தொடர்ந்தார், " எமது சிக்கலான நவீன சமூகத்தில், உழைக்கும் மக்களுக்கு கலாச்சாரத்தை அணுகக்கூடியதாக இருப்பது ஒரு அடிப்படை தேவையாக உள்ளது என்ற கொள்கையை அதனுடைய வேலைத்திட்டத்தில் SEP முன்னெடுக்கிறது. இந்த பண்பினால் கலாச்சாரத்தை அணுகுவது என்பது ஒரு மாற்றமுடியாத சமூக உரிமையாக உள்ளது - அதாவது, அதை பிரிக்கவோ, அல்லது அதை வைத்திருப்பவர்களால் அதனை கைவிடவோ முடியாதது. மனித கலாச்சாரத்தின் பாதுகாப்பிலிருந்து சோசலிசத்திற்கான போராட்டம் பிரிக்க முடியாததாக நாம் பார்க்கிறோம். மேலும், சோசலிசத்தை நிறுவுதல் மூலமாக மட்டுமே மனித கலாச்சாரம் விரிவடைந்து வளர்ச்சியடையும். 

"கலாச்சார பிரச்சனைகளை தீர்ப்பதில் மார்க்சிச இயக்கத்தில் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. இன்று அந்த பாரம்பரியம், SEP ன் இணைய தள பதிப்பான-உலக சோசலிச வலை தளத்தில் உச்சநிலையைடைந்துள்ளது. உ.சோ.வ.தளத்தின் கலைப் பிரிவு ஆசிரியர் டேவிட் வோல்ஷ் நம்முடன் இருப்பது குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கலை மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகள் மீது டேவ் எழுதியும், விரிவாக உரையாற்றியும் உள்ளதோடு, சோசலிச சமத்துவ கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும் உள்ளார்."

அதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபடுதல் விடயங்கள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்த DSO வின் முதுபெரும் வயலின் கலைஞரான ஜோசப் ஸ்ட்ரிப்ளினை, டேலி அறிமுகப்படுத்தினார்.  

1972 ல் இசைக்குழுவில் சேர்ந்த ஸ்ட்ரிப்ளின், சமீபகாலமாக நுழைவுச்சீட்டு விற்பனையில் சரிவு ஏற்பட்ட அதே நேரத்தில் செல்வந்தர்களிடமிருந்து வரும் நன்கொடையும் குறைந்துபோனதையும் டெட்ரோய்ட் சிம்பொனி உணர்ந்ததாக விளக்கினார். மேக்ஸ் பிஷர் மியூசிக் சென்டர் என்ற ஒரு புதிய இசை வளாகத்தை கட்ட எடுத்த முடிவினால், வங்கியில் பெரும் கடனை ஏற்படுத்தியது. 

இந்த நெருக்கடிக்கு தற்போதைய தரத்திலான தீர்வுடன் நிர்வாகம் பதிலளித்ததாக ஸ்ட்ரிப்ளின் தெரிவித்தார்."தீவிரமாக வெட்டிக் குறைப்பதை அமுல்படுத்துவது."இசைக் குழுக்களுக்கான DSO வின் அந்த வேலை மாதிரி Memphis Plan” என்று அழைக்கப்படும் திட்டத்தைப்போன்று இருந்தது. அது ஒரு சில இசைக் கச்சேரிகளை மட்டும் நடத்துவதற்கும்,  இசைக் கலைஞர்கள் தங்களுக்கு செய்து பழக்கமில்லாத கற்பித்தல் மற்றும் அலுவலக பணியைக் கூட செய்யும் நிலைக்குத் தள்ளியது. 

"வேறு எந்த இசைக்குழுவும் இதனை ஒருபோதும் செய்ததில்லை."

பணமே கிடைப்பதில்லை என்ற நிர்வாகத்தின் கூற்றை அவர் எதிர்த்தார்."Michigan ல் 10 முதல் 12 வரையிலான பில்லியனர்களும், ஏராளமான மில்லியனர்களும் உள்ளனர்."இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள வெட்டுக்கள் அமுலானால் கலைகளில்"ஒரு தொடர் தாக்கம்" இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

இறுதியில், உ.சோ.வ.தளத்தின் வேலை நிறுத்தத்தை பற்றி கவனம் செலுத்தியதை அவர் புகழ்ந்தார்."உங்களுடைய அருமையான அமைப்பு மிகவும் உதவியாக இருந்துவருகிறது. நமது போராட்டம் ஒரு பெரிய போராட்டத்தின் அங்கமாக உள்ளதாக நான் உணர்கிறேன்."  

உ.சோ.வ.தளத்தின் கலைப்பிரிவு பொறுப்பாளர் டேவிட் வோல்ஷ், முக்கிய அறிக்கையை அளித்தார். DSO இசைக் கலைஞர்களின் போராட்டத்தில் தொடர்புடைய இரண்டு உடனடிப் பிரச்சனைகள் மற்றும் பரந்த சமூக மற்றும் இசைக் கருவி வாசிப்பாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலின் வரலாற்று முக்கியத்துவத்துவம் ஆகியவற்றைப் பற்றி அவர் பேசினார். சமீப தசாப்தங்களாக பற்றாக்குறையாக இருக்கும் சமூக பிரஞையுடனான கலை மீண்டும் உருவாவதன் அவசியத்தை வோல்ஷ் வலியுறுத்தினார்.

வோல்ஷின் பேச்சைத் தொடர்ந்து ஒரு உயிரோட்டமான விவாதம் தொடர்ந்தது. சமீப தசாப்தங்களில் அமெரிக்க சமூகத்தின் குறிப்பாக பல்வேறு இசை போக்குகளின் தொடர்பு, பிரபல மற்றும் வேறுவகையில், விரிவான வளர்ச்சிக்கு, மற்றும் ஒட்டுமொத்த வீழ்ச்சி போன்றவை குறித்து பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

DSO போராட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் பங்களிப்பு குறித்த விவாதிக்கப்படுவதாக இருப்பது தொடர்பாக பார்வையாளர்களிடமிருந்து வந்த ஒரு கேள்விக்கு DSO வின் ஜோ ஸ்ட்ரிப்ளின் பதிலளித்தார். பெருமளவிலான நிதிய சொத்துக்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தாலும் கூட, ஐக்கிய ஆட்டோ தொழிலாளர்கள் போன்ற முக்கிய தொழிற்சங்கங்கள், DSO போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு விரலைக்கூட தூக்கவில்லை என்று ஒரு SEP ஆதரவாளர் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பலபேரை இந்த நிருபர் பேட்டிகண்டார். Michigan பல்கலைக்கழகத்தின் visual arts மாணவரான அலிசன் ரிச்சர்ட்ஸ், வோல்ஷின் உரையை படம்பிடித்தார்."அந்த பேச்சு தெளிவாகவும், விடயத்துடனும் இருந்ததை நான் கண்டேன். எனது தேடலின் ஏதோ ஒன்றாக இசை இருக்கிறது. அதை உணர்வது ஏதோ ஒரு முக்கியத்துவமாக உள்ளதாக நான் கருதுகிறேன்."

கூட்டம் குறித்த ஒரு துண்டறிக்கையை தான் வாசிக்கும் வரை போராட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாமல் இருந்ததாக அவர் கூறினார்." ஒரு குழந்தையாக டெட்ரோய்ட் சிம்பொனிக்கு நான் சென்றுள்ளேன் என்பதால், அது என்னை தனிப்பட்ட முறையில் தொட்டது." 

கலை நிகழ்ச்சிகளை நடாத்துவதிலும், அதன் அங்கமாக இருப்பதையும் நான் எப்போதுமே நேசிக்கிறேன். அது வெட்டி குறைப்பதாக இருக்கவேண்டிய ஏதோ ஒன்றாக நான் கருதவில்லை. எனது கருத்துப்படி, அது இன்றியமையாதது." 

டெட்ரோய்ட் பாடல்குழு சங்கத்தின் ஒரு உறுப்பினர் கூறுகையில், இசைக்குழு உறுப்பினர்கள் 33 சதவிகித ஊதிய வெட்டை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதவில்லை.  Ford  மற்றும் GM ஆகியவை திடீரென ஆதாயம் ஈட்டுகிறார்கள். டெட்ரோய்ட்டுக்கு இந்த இசைக் குழு தேவை. நாங்கள் Ann Arbor சிம்பொனியை கொண்டிருந்தாலும் கூட, DSO இன்னும் எங்களுக்கு தேவையாக உள்ளது. அது ஒரு உலகத்-தரம் வாய்ந்த இசைக்குழு" என்றார்.

சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில், DSO வை விட இசைக் கலைஞர்கள் ஏற்கனவே அதிகமாக சம்பாதிக்கிறார்கள். பரவலாக பார்க்கப்போனால், பெரும் செல்வந்தர்களால் நாம் அனைவரும் சுரண்டப்படுகிறோம்."