WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
கொரியா
கொரிய
நெருக்கடிப்
பேச்சுவார்த்தைகளுக்கு
சீனா அழைப்பு
விடுகையில்,
அமெரிக்கா தன்
பலத்தை
காட்டுகிறது
By Bill Van Auken
29 November 2010
Use
this version to print | Send
feedback
அமெரிக்க
மற்றும் தென் கொரிய இராணுவங்கள் ஞாயிறன்று மஞ்சள் கடல் பகுதியில் ஒரு தமது
பலத்தை பற்றி
ஒரு
பெரிய
காட்சியை நடத்தின.
இது வட கொரியாவிற்கு
ஒரு அச்சுறுத்தல் என்றும்,
கொரியத்
தீபகற்பத்தில் பெருகிவரும் நெருக்கடியைத் தீர்ப்பதை வாஷிங்டனிடம்
விட்டுவிடும்படி
சீனாவை அச்சுறுத்தும்
முயற்சி என்றும்
பரந்த அளவில் நோக்கப்படுகிறது.
மஞ்சள்
கடலில் வட கொரியக் கடலோரப்பகுதியில் பீரங்கித் தாக்குதல்கள் பரிமாற்றம் நடந்த ஐந்து
நாட்களுக்குள் இந்தப் போர் விளையாட்டுக்கள் நடைபெற்றுள்ளன.
அத்தாக்குதல்களில்
இரு கடற்படையினரும்
யிவோன்பியோங் தீவில்
இரு பொதுக்கட்டமைப்புத் துறை தொழிலாளர்களுமாக
நான்கு தென்
கொரியர்கள் மரணமாகினர்.
இப்பயிற்சிகள்
வாங்டன் திட்டமிட்டு வேண்டுமேன்றே அழுத்தங்களை அதிகரிப்பதைக் எடுத்துக்காட்டுவதுடன்,
அதே நேரத்தில் புதிய,
இன்னும் அதிக
ஆபத்தான இராணுவ மோதல்களைத் தூண்டும் அபாயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
வடகொரியா
இந்தப் பயிற்சியை
“ஒரு ஆபத்தான இராணுவ
ஆத்திரமூட்டல்”
என்று கண்டனம்
செய்து
ஒரு அறிக்கையை வெளியிட்டு,
வாஷிங்டனும்
சியோலும் அப்பகுதியில்
“போர்
உந்தல்மிக்க
கொள்கையை”
தொடர்வதாகும்
என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
USFK
எனப்படும்
‘கொரியாவில்
அமெரிக்கப் படைகள்‘
இப்பயிற்சி அமெரிக்க-தென்கொரிய
உடன்பாட்டின் “வலிமையை
நிரூபிக்கிறது”
என்றும்
“தாக்குதலை
தடுப்பதன்
மூலம் பிராந்திய
ஸ்திரத்தன்மைக்கு
உத்தரவாதம்
கொடுப்பது பற்றியும் நிரூபிக்கிறது”
என்று ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளது.
ஆயுதமேந்திய
மோதலுக்கான சாத்தியப்பாடு
ஞாயிறு நடந்த இரு
நிகழ்ச்சிகள் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன.
யுவோன்பியோங்கில்
மக்களும் துருப்புக்களும் தென் கொரிய இராணுவம் வடக்கில் இருந்து பீரங்கித்
தாக்குதல் ஒலியைக் கேட்டதாகத் தெரிவித்த பின் நிலத்தடி மறைவிடங்களுக்குள்
செல்லுமாறு உத்திரவிடப்பட்டனர்.
கொரியா அதன்
துருப்புக்கள்
“தவறாக”
ஒரு சுற்றுப்
பீரங்கித் தாக்குதலை மிக அதிகப் பாதுகாப்பு உடைய இராணுவ நடவடிக்கை இல்லாத பகுதியில்
நடத்தியது.
இது வட,
தென் கொரியாக்களைப்
பிரிக்கும் பகுதி ஆகும்.
தென் கொரிய
அதிகாரிகள் வட கொரியாவிற்கு ஒரு தகவல் அனுப்பி குண்டுவீச்சு எதிர்பாராமல் நடந்தது,
விரோதப் போக்குடையது
அல்ல என்று
வலியுறுத்தியது.
இதற்கிடையில் வட கொரியாவில் இருந்து தரையில் இருந்து வானுக்கும்,
தரையில் இருந்து
தரைக்கும் இயக்கப்படும் ஏவுகணைகள்,
தங்கள் ஏவுகணை
நிலையங்களில் இருந்து அமெரிக்கத்-தென்கொரிய
நடவடிக்கையை எதிர்கொள்ளும் வகையில் நிலைநிறுத்தப்பட்டன என்று தவகல்கள் வந்துள்ளன.
இந்த
உண்மையான
குண்டுத்தாக்குதல்
தந்திரங்களுக்கு
இட்டுச்சென்றது
அமெரிக்காவின்
அணுசக்தி பலம்
கொண்ட விமானம்தாங்கி
கப்பலான
USS George
Washington ஆகும்.
இந்த
100,000 டன்
எடையுள்ள கப்பல்
80 போர்
விமானங்களையும்
6,000 இயக்கும்
குழுவினரையும் கொண்டது ஆகும்.
இத்துடன் பல
நாசகாரக் கப்பல்களும் மற்ற போர்க்கப்பல்களும் ஒரு
E-8 கூட்டுக்
கண்காணிப்பு இலக்குத் தாக்குதல் ராடர் முறையும் உள்ளது.
இந்த
ராடார்
முறையானது
ஒரு பறக்கும்
கட்டளையிடும்,
கட்டுப்படுத்தும்
விமானம்,
வட கொரியத் தரைப்படைகள்,
விமானங்கள்,
தரையில் இருந்து
தரைக்கு இயக்கப்படும் ஏவுகணைகள் ஆகியவற்றின் நடமாட்டம் பற்றித் துல்லியக்
கண்காணிப்பு நடத்தும் திறன் உடையது.
இத்தகைய
பெரிய அளவிலான போர் விளையாட்டுக்கள் நான்கு நாட்கள் தொடரவுள்ளன.
USS George Washington
கொரியக் கடலோரப் பகுதியில்
நான்கு மாதங்களில் இரண்டாம் முறையாக நிலைநிறுத்தப்படுவதை இது குறிக்கிறது.
கடந்த ஜூலை மாதம்
அது தென் கொரிய கடற்படைகளுடன் மற்றொரு பலம்பார்க்கும்
காட்சியை
நிகழ்த்தியது.
அது தென் கொரியப்
போர்க்கப்பல்
Cheonan மார்ச்
மாதம் மூழ்கடிக்கப்பட்டதற்கு பதிலளிப்பாகும்.
அந்த விபத்தில்
46 கடற்படையினர்
உயிரிழந்தனர்.
தென் கொரிய
அரசாங்கம் கப்பல் மூழ்கியதற்கு ப்யோங்யாங்கைக் குற்றம் சாட்டியது,
ஆனால் வட கொரியா
அதற்கும்
தனக்கும்
எவ்விதமான
தொடர்புமில்லை என்று
மறுத்துவிட்டது.
இந்த
இராணுவப் பயிற்சிகள் மஞ்சள் கடலிலும்,
கொரியத்
தீபகற்பத்திற்கு மேற்கில்,
சீனத்
தரைப்பகுதிக்கு அருகே திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால்
பின்னர்
ஜப்பான் கடல்
பகுதிக்கு,
தீபகற்பத்தின்
கிழக்கே மாற்றப்பட்டன.
இதற்குக் காரணம்
பெய்ஜிங் மஞ்சள்கடலில் அமெரிக்கப் போர்ப் பயிற்சிகள் சீனப்பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தல் என்று சீற்றமான எதிர்ப்புக்களைத் தெரிவித்ததுதான்.
இம்முறை
சற்றே தணிந்த
குரலில்
பெய்ஜிங்
எச்சரிக்கைகளை விடுத்தது.
இந்த இராணுவத்
தந்திரப்பயிற்சிகளும் அதன் பிரத்தியேகப் பொருளாதாரப் பகுதியில் இருக்கக்கூடாது
என்று நிராகரித்த வலியுறுத்தல்களை வெளியிட்டது.
அப்பகுதி சீன
கடலோரப்பகுதியில் இருந்து
200 மைல்கள்
பரவியுள்ளது.
இப்பயிற்சிகள் பூசலுக்கு உட்பட்ட வடக்கு வரம்புக் கோட்டிற்கு
70 மைல்கள் தெற்கே
நடப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த கடல் எல்லைக்
கோடு ஒருதலைப்பட்சமாக கொரியப் போர் முடிவடைந்த போது அமெரிக்க இராணுவத்தால்
சுமத்தப்பட்டது.
இப்பொழுதும் அது
அமெரிக்கா வேண்டுமென்றே பெய்ஜிங்கின் கவலைகளை மீறுவதையும்,
அமெரிக்க சீன
அழுத்தங்களை அதிகரிப்பதையும்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீனா,
தன் சொந்த
இராஜதந்திர
வகைத் தாக்குதலைத்
தொடங்கியுள்ளது.
சியோலுக்கு ஒரு
தூதரை அனுப்பியுள்ளது,
பெய்ஜிங்கில்
அமெரிக்க தூதரை கலந்துரையாடலுக்கு
அழைத்துள்ளது.
அடுத்த மாதத்
தொடக்கத்தில் பெய்ஜிங்கில்
“நெருக்கடி
கலந்தாலோசித்தல்களுக்கும்”
அது அழைப்பு
விடுத்துள்ளது.
“கவனமான
யோசனைகளுக்குப் பின் சீனாவும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் அறுவர்
பேச்சுக்களுக்கு பிரதிநிதிகளின் குழுக்களை நெருக்கடி ஆலோசனைகளுக்கு அழைக்கத்
திட்டமிட்டுள்ளது.
இது தற்பொழுது
தரப்பினரிடையே கவலைகளை எழுப்பும் பிரச்சினைகள் பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்
கொள்ளலாம் என்று”
சீனாவின் கொரியத்
தீபகற்பத்திற்கான சிறப்புப் பிரதிநிதி கூறினார்.
கொரிய
தீபகற்பத்தில் அணுவாயுதங்கள் கூடாது என்பதை பற்றி விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள
அறுதரப்புப் பேச்சுவார்த்தைகளில் இரண்டு கொரியாக்கள்,
அமெரிக்கா,
சீனா,
ரஷ்யா மற்றும்
ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
இப்பேச்சுக்கள்
டிசம்பர் 2008
முதல் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன.
ஒபாமா நிர்வாகத்தின்
“மூலோபாய பொறுமைக்”
கொள்கையான
வட கொரியாவிற்கு
எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் தக்கவைக்கப்படுவது
செயல்படுத்தப்படுவதுடன்
பேச்சுவார்த்தைகளை
மீண்டும் ஆரம்பிக்க எந்த தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்படாத
நிலைமைக்கு
முகங்கொடுத்த
வடகொரியா கடந்த
ஆண்டு இறுதியில் ஒரு இரண்டாம் அணுவாயுதச் சோதனையை நடத்தியதுடன்,
ஒரு அமெரிக்க
விஞ்ஞானியை நவீன புதிய அணுக்களை
பிரிக்கும்
ஆலையைச் சுற்றிக்
காட்டவும் அழைத்துச் சென்றது.
அந்த ஆலையில்
அணுவாயுங்கள் தயாரிப்பதற்கு உரிய உயர் அடர்த்தி யுரேனியம் தயாரிக்கப்பட முடியும்.
சீனா,
வடகிழக்கு ஆசியாவில்
அழுத்தங்களைக் குறைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று
தொடர்ந்து வலியுறுத்துகையில்,
வாஷிங்டன்
அணுவாயுதப் பிரச்சினையை வடக்கு கொரியாமீது மட்டும் இல்லாமல்,
பெய்ஜிங்கின்மீதும்
அழுத்தத்தை அதிகரிக்க உபயோகமான வழிவகையாகக் காண்கிறது.
இந்த
அமெரிக்க நிலைப்பாடுதான் தென்கொரியாவும் ஞாயிறன்று ஜனாதிபதி லீ மியுங் பாக்கிற்கும்
சீனத் தூதர் டாய் பின்குவோவிற்கும் இடையே சியோலில் நடந்த பேச்சுக்களைத் தொடர்ந்து
எதிரொலித்தது.
இரண்டு மணி நேர
விவாதங்களுக்குப் பின்னர்,
சீனா,
“ஒரு நியாயமான,
பொறுப்பான”
அணுகுமுறையை கொரிய
நெருக்கடி பற்றி ஏற்க வேண்டும் என்று கோரிய அறிக்கையை தென்கொரிய அரசாங்கம்
வெளியிட்டது.
தென்கொரியச்
செய்தி ஊடகம்,
பெய்ஜிங்கில்
நெருக்கடி பற்றிய பேச்சுக்களுக்கான அழைப்பை லீ நிராகரித்தார் என்று தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணம்
“இது உரிய நேரம்
அல்ல”
என்று கூறப்படுகிறது.
சியோலும்
வாஷிங்டனும் வட கொரியா அதன் அணுசக்தித் திட்டங்கள்
பற்றிய
விட்டுக்கொ்டுப்புகளை
முன்னதாக
அறிவித்தால்தான்
அறுதரப்புப்
பேச்சுக்கள்
தொடரமுடியும் என்று
கோரியுள்ளன.
ஜப்பானிய
அரசாங்கமும் இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் ஏற்றுள்ளது.
“உரிய நாடுகளுடன்
ஒருங்கிணைப்போம்,
குறிப்பாகத் தென்
கொரியா,
அமெரிக்காவுடன்;
ஆனால் எங்கள்
நிலைப்பாடு எப்பொழுதும் வெறுமே பேசுவதற்காகப் பேச்சுவார்த்தைகள் தேவையில்லை
என்பதுதான்”
என்று ஜப்பானிய
வெளியுறவு மந்திரி கூறினார்.
“வடகொரியப்
புறத்தில் இருந்து ஏதேனும் நடவடிக்கை வேண்டும்…
சமீபத்திய
நிகழ்வுகளை
பார்க்கும்போது,
[சீனாவின் திட்டத்தை]
கவனமாகத்தான்
பரிசீலிக்க வேண்டும்.”
வாஷிங்டனில்
உயர்மட்ட அதிகாரிகளும் இதேபோல் சீனத்திட்டத்தை நிராகரிக்கும் விதத்தில் கருத்துத்
தெரிவித்தனர்.
கூட்டுப்படைகளின்
தளபதி
அட்மைரல் மைக்கேல் முல்லன்
CNN
ல் ஒரு நிகழ்ச்சியில்
“மோசமான நடத்தைக்கு
நாம்
வெகுமதி அளிப்பது கூடாது
என்று நம்புகிறவன் நான்”
என்றார்.
தன்
வணிகத்திற்கும் எரிபொருளுக்கும் சீனாவைப் பெரிதும் நம்பியுள்ள ப்யோங்யாங் மீது
வாஷிங்டனுடைய கொள்கையான இரட்டை அழுத்தத்தை கொடுக்கும் கொள்கையை பெய்ஜிங் பின்பற்ற
வேண்டும்
என்றும் முல்லன்
கூறினார். “ஏன்
சீனா அழுத்தம் கொடுக்கவில்லை என்பது புரியவில்லை”
என்று அமெரிக்க
இராணுவத் தளபதி கூறினார்.
நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என்றால்,
வடகொரிய பின்னர்
“அமெரிக்காவையும்
மற்ற நாடுகளையும் அச்சுறுத்தும் திறனுடைய கண்டம்விட்டு
கண்டம்
பாயும்
ஏவுகணைகளை
(ballistic
missile)
தயாரித்துவிடும்”
என்று அவர்
எச்சரித்தார்.
இன்னும்
அதிக போர்க்குணத்தைத்தான் ஞாயிறன்று அமெரிக்கக் குடியரசுக் கட்சி செனட்டரும்
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான அரிசோனாவின் ஜோன் மக்கெயின் வெளிப்படுத்தினர்.
CNN இடம்
அவர்
பின்வருமாறு
கூறினார்:
“வட
கொரியாவில்
ஆட்சி
மாற்றம்
பற்றி
பேச
வேண்டிய
நேரம்
வந்துவிட்டது
என்று
நினைக்கிறேன்”.
இதேபோல்
மக்கெயின்
வடகொரியாவிற்கு
எதிராக
சீன
நடவடிக்கை
வேண்டும்
என்று
கோரியதுடன்
“சீனா
ஒரு
பொறுப்பான
உலகச்
சக்தியாக
நடந்து
கொள்ளவில்லை”
என்றும்
குற்றம்
சாட்டினார்.
“பொறுப்பு”
என்பது
பெய்ஜிங்
வடகொரியாவைச்
சுற்றி
தன்
தூக்குக்
கயிறை
இறுக்குவது,
நாட்டின்
உள்வெடிப்பைக்
கொண்டுவரும்
நோக்கத்தையும்
பியோங்யாங்
அரசாங்கம்
சரிவதற்கு
ஈடுபட
வேண்டும்
என்பது
போலுள்ளது.
சீனாவைப்
பொறுத்தவரை,
இது
எல்லை
கடந்த
அலையென
ஏராளமான
அகதிகள்
வரும்
அச்சத்தையும்
கொடுக்கும்.
மேலும்
ஒரு
இடைப்பட்ட
மூலோபாயப்
பகுதியை
அகற்றுவது
போல்
ஆகும்.
அது
அமெரிக்கத்
தரைப்படைகள்
அதன்
எல்லையில்
நிலை
கொள்வதில்
முடியும்.
இதே
எல்லையில்தான்
அது
அமெரிக்கப்
படைகளை
60 ஆண்டுகளுக்கு
முன்னால்
எதிர்த்துப்
போரிட்டது.
இப்பகுதியில்
அழுத்தங்களையும்,
பெய்ஜிங்கின்
கவலைகளை
அதிகரிக்கவும்
இன்னும்
ஒரு
நிகழ்வாக
இருப்பது
வெளிவிவகாரத்துறையின்
அந்தரங்க
ஆவணங்களை
விக்கிலீக்ஸ்
வெளியிட்டதாகும்.
இது
அமெரிக்கா
மற்றும்
தென்கொரிய
அதிகாரிகள்
வட
கொரியா
இறுதி
வீழ்ச்சியடைவதை
காண்பது
பற்றிய
திட்டத்தையும்”
மேற்கோளிட்டுள்ளது.
இதில்
தென்கொரியா
பெய்ஜிங்கிற்கு
“வணிக
ஆதாயங்களை”
அளித்து,
சீனா
“ஒரு
ஒன்றுபட்ட
கொரியாவுடன்
இணைந்து
வாழ்வது
பற்றிய
கவலைகளை
நீக்குவதும்”
உள்ளது.
இதற்கு
அமெரிக்காவின்
“மேலாதரவான
கூட்டுடன்”
செய்யப்படலாம்
என்றும்
கூறப்பட்டுள்ளது. |