WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஐரோப்பா :
அயர்லாந்து
ஐரோப்பிய ஒன்றிய-
சர்வதேச நாணய நிதிய வங்கிப்
பிணையெடுப்பிற்கு அயர்லாந்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள்
எதிர்ப்பு
By Chris Marsden
29 November 2010
Use
this version to print | Send
feedback
2
மில்லியன்
உழைப்பாளர் தொகுப்பை
கொண்ட
அயர்லாந்தின்
அளவிற்கு
கிட்டத்தட்ட
50,000 முதல்
100,000 மக்கள்
டப்ளினில் வங்கிகள் பிணை எடுப்பிற்கு எதிராக சனிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம்
ஒப்புமையில் மிகப் பெரியது ஆகும்.
இது
Fianna Fail-பசுமைக்
கட்சி கூட்டணி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும்
€85 பில்லியன்
கடன்கள்,
உத்தரவாதங்கள்
உள்ளடக்கிய
உதவிப்பொதிக்கு ஒரு
முன்னிபந்தனையாக
சுமத்தும்
மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு
தொழிலாளர்கள்,
இளைஞர்கள் மற்றும்
மாணவர்களின்
எதிர்ப்பின்
சக்திவாய்ந்த உறுதிப்பாட்டின் வெளிப்பாடு ஆகும்.
இதில்
ஏற்படும் வேதனை இன்னும் மோசமாகப் போகிறது.
ஐரோப்பிய ஒன்றிய
நிதி மந்திரிகள் ஞாயிறு இறுதியில் கொண்ட உடன்பாட்டின் பொருள் அயர்லாந்து தான்
வாங்கும் கடனுக்கு அதிர்ச்சியளிக்கும்
5.8 சதவிகித
வட்டியைக் கொடுக்க வேண்டும் என்பதாகும்;
இது கிரேக்கம்
கொடுக்கும் 5.2%
உடன் ஒப்பிடத்தக்கது.
அயர்லாந்து
அரசாங்கம் கிட்டத்தட்ட
€17.5 பில்லியனை
தேசிய ஓய்வூதியத் திட்ட இருப்பு நிதி,
மற்ற ஆதாரங்களில்
இருந்து வங்கிகளின் கருவூலங்களுக்குக் கொடுக்கும்.
2014க்குள்
இக்கடனுக்கான வட்டிப் பணம் ஆண்டிற்கு
€2.5
பில்லியனில் இருந்து
€6 பில்லியன் இது
அதிகரித்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது
வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதி இருக்கும்.
ஆயினும்கூட,
இன்னும் ஊதியங்களில்
10% வெட்டுக்கள்,
பல்லாயிரக்கணக்கான
வேலை இழப்புக்கள்,
வரி உயர்வுகள்
மற்றும் சமூகநல உதவிகள் அகற்றப்படுதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாத்துக்
கொள்ள
விரும்புபவர்களுக்கு ஒரு
அடிப்படை அரசியல்
சிக்கல்
நிலை
உள்ளது.
இவை அனைத்துமே
ஏற்கனவே சராசரியாக வருமானத்தில்
€4,000 இழப்பு
அடைந்தவர்களுக்கு கூடுதலான
€4,000
இழப்புக்களைக் கொடுத்துள்ளன.
மார்ச் மாத
இறுதியில் ஆர்ப்பாட்டத்தில்
இது
ஒரு அடையாள
வெளிப்பாட்டைக்கண்டது.
அங்கு அதன்
அமைப்பாளர்களான
Irish Coingress of Trade Unions
உடைய இரு முக்கியப்
பிரதிநிதிகள்,
கூட்டத்தில்
பேசும்போது பொது ஒலிபெருக்கிச் சத்தங்களையும் மீறி ஏளனக் குரல்களையும்,
எதிர்ப்புக்குரல்களையும்
கேட்கவேண்டி
இருந்தது.
ICTU
வின் பொதுச்செயலாளர் டேவிட்
பெக்,
அயர்லாந்தின் மிகப் பெரிய
தொழிற்சங்கமான
SIPTU வின் தலைவர்
ஜாக் ஓ’கானர்
ஆகியோரின்
பிரதிபலிப்பு
எதிர்ப்பானதாகவே
இருந்தது.
ஆனால் முக்கியச்
செய்தி ஊடகங்களில் இது சிறிதும் மதிப்பான தகவல் வெளியீட்டைப் பெறவில்லை.
அயர்லாந்தின்
சண்டே டைம்ஸ்
“ICTU
தலைவரான ஜாக் ஓ’கானரும்,அதன்
பொதுச் செயலாளரான டேவிட் பெக்கும் பெரும் ஏளனத்திற்கு உட்பட்டனர்.
சீற்றமடைந்த
ஆர்ப்பாட்டக்காரர்
“மேடையில்
இருந்து வெளியேறு”
என்று ஓ’கானரை
பார்த்துக்
கூச்சலிட்டனர்''
என
குறிப்பிட்டது.
“ஆத்லோனில்
நகரில்
உள்ள
Carraig Donn
என்ற
ஆடை ஆலையில்
தொழிலாளியாக இருக்கும் அமி பிரன்னென்,
தொழிற்சங்க
அதிகாரிகள் அதிக ஊதியம் ஈட்டி வருவதாகக் கூறினார்.
“அவர்கள்
யதார்த்த்த்துடன்
தொடர்பைக்
கொண்டிருக்கவில்லை.
குறைந்த
ஊதியத்திற்கு உழைப்பது என்றால் என்ன என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்;
அதே போல்
பலவற்றையும் மறந்துவிட்டனர்.
எனக்குக் கூறுவதற்கு
அவர்களிடம் ஏதும் இல்லை.”
என்றார்.
CNN
கூறியுள்ளது:
“எதிர்ப்பாளர்கள்
அரசாங்கத்திற்கு எதிர்ப்புக் காட்டியபோது,
பங்கு பெற்றவர்கள்
அனைவரும் அணிவகுப்பை ஏற்பாடு செய்த உத்தியோகபூர்வ அமைப்பாளர்களுடைய கருத்துக்களை
ஏற்கவில்லை. ‘மக்களுடைய
அதிருப்தி எதிர்ப்பை அடக்குவதற்கு
ICTU அரசாங்கத்தின்
பங்காளியாக இருக்கிறது’
என்று அயர்லாந்து
தேசிய ஆசிரியர்கள் ஒன்றியத்தின் தேசிய நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஒருவரான
கெவின் பாரல் கூறினார்.
இவர்களுக்கும்
அரசாங்கத்திற்குமிடையே ஒரே வேறுபாடு இவர்கள் சற்றே நீண்ட காலத்திட்டமாக இவற்றைச்
செய்ய வேண்டும் என்பதுதான்.
சர்வதேச
நாணய
நிதியத்திடம்
உறுதியாக இருக்குமாறு நாம் சொல்ல வேண்டும்.
இந்த பங்காளித்தன
வழிமுறை
[அரசாங்கம்,
தொழிற்சங்கங்கள்
மற்றும் வணிகம் ஆகியவற்றிற்கு இடையே தேசிய ஊதியம் பற்றிய பேச்சுவார்த்தைகள்]
எப்படிப் பேரம்
பேசுவது என்பதை மறந்து விட்ட அயர்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை
ஏற்படுத்தியுள்ளது.”
ஆனால்
இணையத்தில் பல ஆதாரங்கள் பெக் மற்றும் ஓ’கானருக்குக்
கிடைத்த
பிரதிபலிப்பின்
முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.
Kerry Public Servcice Workers Alliance
குறிப்பிட்டதாவது:
“வணிக வெகுமதி பெற்ற
ஜாக் ஓ’கானரும்
முன்னாள் வங்கியாளர் டேவிட் பெக்கும் மேடையில் இருந்து பேசியபோது பொது
தபால்
அலுவலக
(GPO)
பார்வையாளர்களிடம் இருந்து
முற்றிலும் ஏளனத்திற்கும் நகைப்பிடத்திற்கும்
ஆளாயினர்….”
“ஐரிஷ்
டைம்ஸ்
நிருபர் மேரி
பிட்ஸ்கெரால்ட்,
தன்னுடைய
உரையின்போது ஜாக் தடுமாறியபோது
“சரணடையும் குரங்கே!”
என்ற ஏளனத்
தாக்குதலை எதிர்கொண்டார்”
என்று ட்வீட்டரில்
கூறியுள்ளார்….”இதைத்
தொடர்து பின்னர் மேடையேறிய பெக்கும் இதேபோல் ஏளனத்திற்கு உட்பட்டு வெளிறிய
முகத்துடன் வெளியேறினார்….”
Politics
ல் வந்துள்ள ஒரு
கருத்து: “நானும்
கூட்டத்தில் இருந்து ஏளனப்படுத்தினேன்…
பெக்கும் ஓ’கானரும்
பல குழுக்களில் இருந்ததால் தாக்கங்களுக்கு
பொறுப்பு உடையவர்கள்….
இந்த அளவிற்கு உரத்த
எள்ளி நகையாடாலை அவர்கள் எதிர்கொண்டது இதுதான் முதல் தடவையாக இருக்கும்
என்று நான் கூற
வேண்டும்.
ஏளனக்குரல்கள் ஒலிபெருக்கி
ஓசையையும் மிஞ்சி அவர்கள் பேசியதை அடக்கிவிட்டன.”
Political World,
”ஓ’கானர்
மற்றும் பெக்கிற்கு
சீழ்க்கை
அடிக்கப்பட்டது,
ஏளனமாகக் குரல்
கொடுக்கப்பட்டது ஆகியவை
TV3 5.45 செய்தியில்
நன்கு தெரிய வந்துள்ளது;
ஆனால் விசித்தரமான
முறையில் RTE
6.01 செய்திக்
குறிப்பில் வரவில்லை.
ஒலியைப் பதிவு
செய்யும் கருவி வெவ்வேறு இடங்களில் இருந்தது இதற்குக் காரணமா அல்லது திறமையான
பதிப்பு வேலையா?’
ICTU,
ஏற்கனவே
Fianna Fail
எடுத்துள்ள தாக்குதல்கள் அனைத்திற்கும் உடனடிப் பொறுப்பைக் கொண்டது;
இப்பொழுது
திட்டமிடப்படும் தாக்குதல்கள் அனைத்திலும் ஒத்துழைக்கும்.
வாடிக்கையாக
“கடைசி வாய்ப்பு”
என்று
விவரிக்கப்படும் இதன் அணிவகுப்பு மக்கள் டிசம்பர்
7 அன்று நெருக்கடி
வரவு-செலவுத்
திட்டம் இயற்றப்படுவதற்கு முன் தங்கள் எதிர்ப்பை அறியச் செய்வதற்காக நடத்தப்படும்
போலித்தனமான மோசடி முயற்சியாகும்.
சர்வதேச அளவில்
இவர்களுடைய சக தொழிற்சங்க
அதிகாரத்துவத்தினர்
செய்வது போல் அயர்லாந்து தொழிற்சங்க
அதிகாரத்துவத்தினரும் ஒரு அடையாள எதிர்ப்பை நடத்திவிட்டு பின்னர் பிரஸ்ஸல்ஸில்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி மந்திரிகளுடன் ஏற்கப்பட்ட உடன்பாட்டை எப்படிச்
செயல்படுத்துவது என்று அரசாங்கத்துடன் திட்டமிட ஓடினர்.
பெக்,
ஓ’கானர்
மற்றும் அவர்களைப் போன்றவர்கள் பல தசாப்தங்கள்-அவர்களுடைய
அரசியல் வாழ்வு முழுவதுமே-வங்கியாளர்களுக்கும்
பெருநிறுவனங்களுக்கும் எடுபிடிகளாகத்தான் செயல்பட்டு,
ஒன்றன்பின் ஒன்றாக
முதலாளிகள் மற்றும் அரசாங்கங்களுடன் முத்தரப்பு உடன்பாடுகளை கொண்டுவந்து
வேலைநிறுத்தங்களை அடக்கியுள்ளனர்.
சமீபத்திய அத்தகைய
செயல் Corke Park
ஆகும்.
இது நெருக்கடி
ஏற்பட்டவுடன் அதை முகங்கொடுக்கும் வகையில் கையெழுத்திடப்பட்டது.
வேலைநிறுத்தம் இல்லை
என்ற உடன்பாட்டை அது அளித்ததுடன்,
முந்தைய
€14.5 பில்லியன்
மதிப்புடைய வெட்டுச் சுற்றிற்கும் ஒத்துழைப்பு கொடுத்தது.
அதற்கு ஈடாக இன்னும்
கூடூதலான ஊதியக் குறைப்பு இராது என்றும் கட்டாய பணிநீக்கங்களும் அறிவிக்கப்படமாட்டா
என்றும் உத்தவாதம் அளிக்கப்பட்டது.
இது
ICTU வினால்
நடைமுறையில் இருப்பதாகத்தான் கருதப்படுகிறது;
ஆனால் அரசாங்கமோ
25,000 பொதுத்துறை
ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது
-தொழிலாளர்
பிரிவில்
பத்தில் ஒருவரை-
குறைந்த
ஊதியத்தையும் இன்னும் குறைக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
ஒவ்வொரு
கறைபடிந்த உடன்பாடும் தயாரிக்கப்படும்போது பெக் அதில் முழுமையாக ஈடுபடுபவர்.
1995ல் இருந்து அவர்
மத்திய வங்கியின் ஒரு இயக்குனராக இருந்து வருகிறார்;
Aer Lingus ல்
நிர்வாகப் பொறுப்பு இல்லாத ஒரே
இயக்குனருமாவர்.
NESC எனப்படும்
தேசியப்
பொருளாதார,
சமூகக்
குழுவில்
ஒரு
உறுப்பினரும்
மற்றும்
அயர்லாந்தின்
வளர்ச்சி
ஒத்துழைப்பு
ஆலோசனைக்
குழுவிலும்
ஒரு
உறுப்பினராவார்.
தலைமை
அஞ்சல்
அலுவலகத்திற்கும்
முன்
கூடுமாறு
இவர்
அணிவகுப்பை
அனுப்பிவைத்தார்.
அந்த
இடம்தான்
அயர்லாந்து
குடியரசுக்
கட்சியனருக்கும்
பிரிட்டிஷ்
துருப்புக்களுக்கும்
இடையே
1916 ஈஸ்டர்
எழுச்சியின்போது
மோதல்
நடந்த
இடம்
ஆகும்;
இதற்குக்
காரணம்
தொழிற்சங்க
அதிகாரத்துவமும்
அதற்கு
வக்காலத்து
வாங்குபவர்களும்
தொழிலாள
வர்க்கத்தின்
முகங்களில்
தேசியவாதம்
என்னும்
மணலை
வாரி
இறைக்கலாம்
என்பதாகும்.
இவ்விதத்தில்
அவர்
அரசாங்கம்
“எச்சூழ்நிலையிலும்
இந்த
வெர்சாய்
உடப்டிக்கைக்கு
ஒப்புக்
கொள்ளக்கூடாது”
என்று
அறிவித்தார்;
அதே
நேரத்தில்
அதை
விற்பதற்குத்தான்
அவர்
தயாரித்துக்
கொண்டிருந்தார்.
தன்னுடைய
பங்கிற்கு ஓ’கானர்
அரசாங்கத்தை ஐரோப்பிய உறுதிப்பாடு நிதியப் பொதிக்கு,
மீட்புப் பணி என்று
முத்திரையிடப்பட்டுள்ளதற்கு
ஒப்புக் கொண்டதற்காக
அரசாங்கத்தின் “திமிர்த்தனத்தை”
கண்டித்தார்.
“நாம் அனைவரும்
ஒன்றாக அந்நாட்டின் செல்வந்தர்களின் உயரடுக்கு தோற்றுவிக்கும் பிரச்சினைகளை
கடப்பதற்குக் கூடியுள்ளோம்”
என்று அவர்
வலியுறுத்தினார்.
ஆனால் ஓ’கானரும்
செல்வந்தர் உயரடுக்குத் தட்டில் ஒருவர்தான்.
Business and Finance
இதழ் சமீபத்தில் ஓ’கானரை
“இம்மாத வணிகப்
பெருந்தகை”
என்று
வாக்களித்துள்ளது;
Croke Park
உடன்பாட்டிற்கு ஆதரவாகத் தன் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற ஆலோசனையைக்
கூறியதற்காக இந்தப் பாராட்டு வந்துள்ளது.
அதில்,
“வெளிநாடுகளில்
அயர்லாந்தின் புகழிற்கு இன்னும் சேதம் ஏற்படலாம் என்பதை உணர்ந்து,
ஓ’கானர்,
நீங்கள் நீண்டகால
தொழில்துறை நடவடிக்கையை விரும்பினால்…..அது
பற்றிய விளக்கம் அரசாங்கம் தன் உறுதிப்பாடுகளைச் செயல்படுத்த முடியாது என்று போகும்,
அதையொட்டி அரசாங்கப்
பங்குப்பத்திரங்களின் நம்பகத்தன்மை பெரிய வினாவிற்கு உட்பட்டுவிடும்’
என்றார்.
“என்று எழுதியுள்ளது.
“தொழிற்சங்கங்கள்
ஆயிரக்கணக்கானவர்களை பெரும் எதிர்ப்புக்களில் இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக
வழிநடத்தின.
ஆனால் அதன்பின்,
எதிர்ப்புக்கள்
குறைந்த தன்மை உடைய பிரச்சாரங்களாக அவ்வப்பொழுது பணிகளைச் சீர்குலைப்பதாக உள்ளனவே
ஒழிய,
தொலைபேசியில்
பதிலழிக்க முடியாது
என்பது
போல்தான் உள்ளன.”
பெக்கும் ஓ’கானரும்
தவறிழைத்தவர்கள்;
ஆனால் வெறும்
தனிப்பட்ட துரோகிகள் அல்ல.
அவர்கள் ஒரு கணிசமாக,
நல்ல ஊதியம் பெறும்
அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள்,
அமைப்புக்களின்
தலைவர்கள்;
அவற்றின்
உத்தியோகபூர்வ பங்கு
“சமூகப் பங்காளிகளாக
இருப்பது”-அதாவது
அவர்களுக்கு ஊதியம் கொடுக்கும் பெருநிறுவனத் தலைமையகங்கள் மற்றும் டப்ளின்,
லண்டன்,
பேர்லின்,
புரூஸ்ல்ஸ்,
வாஷிங்டனில் உள்ள
கருவூலங்கள் சார்பாக வர்க்கப்போராட்டத்தை அடக்குதல்
ஆகும்.
எனவேதான்
தங்கள் உறுப்பினர்கள் சார்பாக அனைத்து
அங்கத்தவர்களும்
தலைவர்கள்மீது
அழுத்தம் கொடுப்பது ஒருபுறம் இருக்க,
இந்த அல்லது அந்தத்
தலைவருக்குப் பதிலாக வேறு ஒருவரைப் பிரதியீடு
செய்வதை
தவிர முக்கிய
பிரச்சனை
உள்ளது.
ஆனால் இதுதான்
ICTU வின் இடது
விமர்சகர்களால்
கூறப்படுவது:
இதில் சோசலிஸ்ட்
கட்சி,
சோசலிச
தொழிலாளர்
கட்சி ஆகியவை
அடங்கும்.
அவர்கள் இப்பொழுது தங்கள்
இருப்புக்களை
United Left Alliance
உடன் ஒன்றாக இணைத்துக்
கொண்டு,
ஒரு நாள் பொது
வேலைநிறுத்தம் ஒன்றை அடுத்த ஆண்டு நடத்துவதில் முக்கியத்துவம்
காட்டுகின்றனர்.
அதே போல்
பாராளுமன்றத்திற்கு ஒரு சில இடது வேட்பாளர்களை அனுப்பி தொழிற்கட்சி மற்றும்
Fine Gael உடைய
கூட்டணி அரசாங்கம் வரும் வாய்ப்பிற்கும் அழுத்தம் கொடுக்க முயல்கின்றனர்.
முக்கிய
ஆர்ப்பாட்டத்தை
அடுத்து,
ஐரோப்பிய
பாராளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினரான
Joe Higgginjs ICTU
வினால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு
24-மணி நேரப் பொது
வேலைநிறுத்தம் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையொட்டி
“சர்வதேச
நாணய
நிதியத்துடன்
உணவருந்தும்”
பேரழிவுதரும் கொள்கை
நிறுத்தப்படலாம் என்கிறார்.
தன்னுடைய பங்கிற்கு
சோசலிச
தொழிலாளர்
கட்சியின்
முன்னணியின்
இலாபத்திற்கு முன்
மக்கள்
என்பதன்
Dun Laoghaine
குழு உறுப்பினர்
Richuard Boyd Barrett
வரவு செலவுத் திட்டம்
தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட வேண்டும் என்று
அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வறிய
கூழ் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் எதிர்ப்புக்
கழைக்கூத்தாடித்தனங்களால்
தொழிலாளர்கள்
முகங்கொடுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க
இயலாது.
ஐரோப்பா முழுவதும்
உள்ள தங்கள் சகோதர,
சகோதரி
தொழிலாளர்களைப் போல்,
இங்கும்
தொழிலாளர்கள்,
தொழிற்சங்கங்கள்
என்னும் பொறியில்
அகப்பட்டுக்
கொண்டுள்ளனர்;
அவை
நிர்வாகத்திற்கும் அவற்றின் கட்சிகளான தொழிற்கட்சி போன்றவற்றிற்கும் போலிஸ் போல்
செயல்படுகின்றன.
அவர்களது உண்மையான
வணிகச்சார்பினை மறைப்பதற்காக தங்களை மூவண்ண
கொடியால் மூடிக்கொள்கின்றன.
முதலாளிகள்
மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகளும்
எந்தக் கொடியை
ஏந்தினாலும் அவர்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை நடாத்துவதற்கு ஒரு ஐரோப்பிய,
சர்வதேச அளவில்
சோசலிசத்திற்காக போராட தம்மை அர்ப்பணித்துக்கொள்ளும் புதிய அமைப்புக்கள்தான்
தொழிலாளர்களுக்கு தேவையாகும். |