சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

SEP member addresses student occupation at the University of Manchester

சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர் மான்செஸ்ட்டர் பல்கலைக்கழக மாணவர் ஆக்கிரமிப்பில் உரையாற்றுகிறார்

By our reporter
30 November 2010

Use this version to print | Send feedback


மான்செஸ்ட்டர் பல்கலைக்கழக ஆக்கிரமிப்பில்
Jean Shaoul பேசுகிறார்

நவம்பர் 26ம் திகதி சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினரும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பிரிவுக் கூடத்தில் பேராசிரியையாகவுமுள்ள Jean Shaoul, பல்கலைக்கழத்தின் Roscoe கட்டிடத்திலுள்ள விரிவுரை அரங்கு B யை ஆக்கிரமித்திருந்த மாணவர்களுக்கு உரையாற்றுமாறு அழைக்கப்பட்டிருந்தார். பொருளாதார நெருக்கடியும் மற்றும் அதனுடைய விளைவுகள் பயிலுதலின்ஒரு பகுதியாகப் பேசுவதற்கு அழைக்கப்பட்ட சில விரிவுரையாளர்களில் அவரும் ஒருவராவார்.

உலக சோசலிச வலைத் தளத்தில் தொடர்ச்சியாக எழுதுபவரும், மத்திய கிழக்கு அரசியலில் சிறப்புத் தேர்ச்சியுமுடைய Shaoul உரையைக் கேட்க கிட்டத்தட்ட 90 முதல் 100 மாணவர்கள் வந்திருந்தனர்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் 50 மாணவர்கள் உரை அரங்கை புதன்கிழமை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். இது நாடு முழுவதும் வெட்டுக்கள் மற்றும் கட்டண அதிகரிப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடக்கும் எதிர்ப்புக்களுடன் இணைந்த விதத்தில் நடந்தது.

தன்னுடைய கருத்துக்களின்போது, Shaoul “அடுத்த தலைமுறையின் கல்வி உரிமை இப்பொழுது தாக்குதலுக்குள்ளாகி உள்ளது. பயிற்சி கட்டணம் மற்றும் அத்துடன் கூடிய கடன்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. ஆசிரியர் வரவு-செலவுத் திட்டத்திலும் வெட்டுக்கள் உள்ளன. அவை முழுப் பல்கலைக்கழகத் துறைகளையும், குறிப்பாக மனிதயின இயல் துறையை மூடக்கூடிய விளைவுகளைத் தரும்என்றார்.

மாணவர்கள் எதிர்ப்புக்களுக்கு மிக அதிக பொலிஸ் நிலைநிறுத்தப்பட்டது வருங்காலத்தில் அதிகாரிகள் எப்படி கையுறைகளை அகற்றிவிட்டுச் செயல்படப் போகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் பாதுகாப்பது எல்லாம் ஒரு குறுகிய நிதிய உயரடுக்கின் நலன்களைத்தான்அதாவது பெரும் செல்வம் கொழித்தவர்களுடைய நலன்கள். கடந்த 10 ஆண்டுகளில் போலித்தனமாக பயங்கராவாதத்திற்கு எதிரானது என்று தொழிற் கட்சி கூறியும் எழுதியும் அறிமுகப்படுத்திய சட்டங்கள் அனைத்தையும், அவர்களுடைய கொள்கையை எதிர்க்கும் இளைஞர்களுக்கு எதிராக அனைத்தையும் அதிகாரிகள் பயன்படுத்துவார்கள்.

இன்றுஅரசாங்கங்கள் நிதிய உயரடுக்குகளின் அரசியல் பிரதிநிதிகளாகச் செயல்படுகின்றன, அவர்கள் அரசியலில் எப்படித் தங்களை அழைத்துக் கொண்டாலும் இந்நிலைதான். இதில் வெற்றி பெற்றுள்ளவர்கள் வங்கியாளர்கள். அதே நேரத்தில் பரந்த மக்கள் பிரிவுகளுக்கு இது இன்னும் கூடுதலான சமூக சமத்துவமின்மையைத்தான் கொண்டு வந்துள்ளது.

இன்று வங்கிகளை நீங்கள் கவனித்தீர்களானால், நான்கு பெரிய இங்கிலாந்தின் உயர் தெருக்கள், அவற்றின் சொத்துக்கள், அவற்றின் கடன் புத்தகங்கள் இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். எனவே அவர்கள் எங்கிருந்து தங்கள் பணத்தை  மீண்டும் பெறப்போகின்றன? இது நீடித்திருக்க முடியாது, இந்த வங்கிகள் திவாலானால், அது பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் திவாலாக்கும்.

“2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் திவாலாக அனுமதிக்கப்பட்டது. அது வங்கிகளுக்கு அரசாங்கத்திடம் தங்களுக்கு பிணை எடுப்பு கொடுப்பதற்கு குழப்பமான நெருக்கடிக்கான சாத்தியத்தை உருவாக்கி, ஒவ்வொரு நாட்டிலும் திறைசேரியை நேரடியாக கட்டுப்படுத்த முயற்சிகள் இருந்தன. பிரிட்டனில் பிரதம மந்திரி கோர்டன் பிரௌன், “எப்படியும் இதைச் செய்வோம் என்றார். அவர்கள் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் பவுண்டுகளை உட்செலுத்தி, வங்கிகளை முட்டுக் கொடுத்து நிறுத்த £1.2 டிரில்லியன் பவுண்டுகளுக்கும் உறுதியளித்தனர். ஆனால் IMF கூறியிருப்பது போல், கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன், பிரிட்டனின் வங்கிகளுடைய மோசமான கடன்களில் 40 சதவிகிதம் தான் உண்மையில் உயர்த்திக் காட்டப்பட்டன. இன்னும் மோசமானது இனித்தான் வரவுள்ளது. வங்கிகள் சிக்கனத் திட்டத்தை இதற்கு விலை கொடுப்பதற்காகக் கோரியுள்ளன….

இப்பொழுது எம் அனைவரையும் எதிர்கொள்ளும் வினா இதுதான்: பொருளாதாரத்தை எந்த சமூக வர்க்கம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்? எவருடைய நலனுக்காகப் பொருளாதாரம் செயற்படும்?” Shaoul சமீபத்திய அரசியல் வளர்ச்சிகள் பற்றிய படிப்பினைகளைப் பற்றியெடுத்தல் மிக முக்கியமானது என்று விளக்கினார். “கடந்த காலத்தில் 2003ல் ஈராக் போருக்கு எதிரான பெரும் வெகுஜன இயக்கங்களில் இருந்து என்ன படிப்பினைகளை நாம் கற்க முடியும்? அப்பொழுது கிட்டத்தட்ட 2 மில்லியன் பிரிட்டிஷ் மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்?

அந்த இயக்கம் தோல்வியுற்றது, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கமும் அதே ஆபத்தைத்தான் எதிர்கொள்கிறது. ஏனெனில் தொழிற்சங்கங்கள், அதனுடைய தலைமைகள் ஆகியவை இயக்கத்தை முன்னேக்கிச் செல்ல எந்தக் கொள்கையையும் முன்வைக்கவில்லை. அவர்கள் ஒரு முதலாளித்துவ முன்னோக்கில்தான் முற்றிலும் பிணைந்துள்ளனர், அதாவது இருக்கும் அரசியல் ஸ்தாபனத்திற்கு, அத்துடன் பல தசாப்தங்களாக இந்தப் புதிய தாராளவாத சந்தைச் செயற்பட்டியலுக்குத்தான் சேர்ந்து உழைத்திருந்தனர்.”

பிரிட்டனிலும், சர்வதேச அளவிலும் மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின்பால் கவனத்தைத் திருப்ப வேண்டும்  என்று அவர் வலியுறுத்தினார். “போராட்டம் என்பது சர்வதேச முதலாளித்துவத்திற்கு எதிராக, உற்பத்திக் கருவிகளின் உடைமையாளர்களுக்கு எதிராக மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தில்  நாம் கூறும் சமூகத்தை மறுஒழுங்கமைப்பு செய்வது என்பது பொருளாதாரத் தேவைகளையொட்டியே ஒழிய இலாபமுறைக்கானது அல்ல என்ற அடித்தளத்தில்தான். இதற்கு நமக்குத் தேவைப்படுவது ஒரு சர்வதேச முன்னோக்கு, ஒரு சோசலிச முன்னோக்குஅதற்கு வங்கிகளும் மிகப் பெரிய தொழிற் துறைகளும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

இதன் பொருள் கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்தி சோசலிசக் கொள்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவப் போராடுவதுதான்….இதன் பொருள் ஒரு புதிய சோசலிசக் கட்சியைக் கட்டமைப்பதுதான்.”

Shaoul உரைக்கு இதயபூர்வமான கரவொலிகளைப் பெற்றார். இதன்பின் கூட்டம் விவாதத்திற்கு விடப்பட்டது. முதலாவதாகப் பேசிய மாணவர், இக்கூட்டம் உள்ளூர் தேசிய மாணவர் சங்கத்தின் (NUS) தலைமையை இராஜிநாமா செய்யக் கோர வேண்டும், ஏனெனில் இது ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு எதையும் மறுத்துவிட்டது என்றார். “எங்களுக்கு அவர்கள் எதுவும் செய்யில்லை, செய்யவும் மாட்டார்கள், அவர்கள் பல்கலக்கழக உயரதிகாரிகளுடன் ஒன்றுபட்டு நிறகின்றனர். ஒரு போதும் மாணவர்களுடன் இணைந்து நிற்க மாட்டார்கள்.”

சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் (SWP) உறுப்பினர் ஒருவர் உடனடியாக எழுந்து NUS தலைமை இராஜிநாமா கோரிக்கையை எதிர்த்தார், “ஏனெனில் உண்மையில் அவர்கள் பலரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், நாம் அவர்களை முற்றிலும் நிராகரிக்க விரும்பவில்லைஎன்றார்.

பார்வையாளர்களில் பலர், தம்மை SWP உறுப்பினர்கள் என்று அடையாளம் காட்டியவர்கள் அரசாங்கம் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் NUS மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் அல்லது தொழிற் கட்சி குறித்து எந்த விமர்சனத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒரு SWP  உறுப்பினர் ஒரு புதிய அரசியல் கட்சியைக் கட்டமைப்பதுநடைமுறைச் சாத்தியம் இல்லைஎன்றும்கட்சிகள் அமைப்பது மிகவும் கடினம்என்றும் கூறினார். ஆக்கிரமிப்பையும் பரந்த சிக்கன எதிர்ப்பு இயக்கத்தையும் ஒரு முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்காக ஒரே முன்னோக்கில் இணைப்பது என்பதை எதிர்த்த அவர், “நிலைமை என்ன என்றால், இந்த இயக்கத்தில் நமக்கு ஒரு புதிய கட்சியைத் தோற்றுவிக்கும் ஆதாரங்களுக்கு அர்ப்பணிக்கும் நேரம் இல்லை, அது போதுமான விளம்பரத்தையும் தோற்றுவிக்காது.”

SEP உறுப்பினர் ஒருவரான ரோபர்ட் ஸ்டீவன்ஸும் விவாதத்தில் பங்கு பெற்றார். WSWS மிகப் பரந்த முறையில் கிரேக்கக் கடன் நெருக்கடி பற்றியும் கடந்த ஆண்டு சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் பற்றியும் வெளியிட்டுள்ளது என்று அவர் கூறினார். இதைத்தான் “PASOK தொழிற் கட்சி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதின் விளைவாக, “வாழ்க்கைத் தரங்கள் 30 சதவிகிதம் குறைந்துவிட்டது, மேலும் சமீபத்தில் மில்லியன் கணக்கான மக்கள் சாதாரணப் பயன்பாடுகளுக்கான கட்டணங்களைக் கூட கொடுக்க முடியவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. … ஆனால் கிரேக்கத்தில் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலை தொழிற்சங்கங்கள் இதற்காகப் போராடத் தயாராக இல்லை என்பதுதான்

 “கிரேக்கத்திலுள்ள முக்கிய தொழிற்சங்கத் தலைவர்கள் PASOK உறுப்பினர்கள் ஆவர். தனியார் தொழிற்சங்கங்களின் செய்தித் தொடர்பாளரை நாங்கள் பேட்டி கண்டோம், இன்னும் பிற உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகளையும் பேட்டி கண்டோம். அவர்கள் சிக்கன நடவடிக்கை இன்னும் ஆழ்ந்துபோகையில், அவற்றைத் தாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் தொழிற்சங்கங்கள் இல்லை என்றும் அவர்கள் கூறிவிட்டனர்.”

பிரிட்டனிலுள்ள தொழிற்சங்கங்களும் இதே வகையில்தான் உள்ளன என்று அவர் தொடர்ந்து கூறினார்: “தொழிற் சங்கக் காங்கிரஸ் (TUC) எந்த நடவடிக்கையும் எடாது, ஒருவேளை வெட்டுக்கள் வந்து ஓராண்டிற்குப்பின், ஒரு அணிவகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று கூறியுள்ளன.”

பிரிட்டனில் மாணவர் ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுவதற்குக் காரணம் NUS உம் மற்ற தொழிற்சங்கங்களும் கல்வியைக் காப்பாற்ற ஏதும் செய்யவில்லை. “தொழிலாளர்களும் இளைஞர்களும், மாணவர்களும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, ஆக்கிரமிப்புக்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள் போன்றவற்றை நடத்த வேண்டும்.”

ஸ்டீவன்ஸுக்குப் பதில் கூறும் வகையில், ஒரு SWP உறுப்பினர் கிரேக்க நிலைமையோடு ஒப்பிடுவது சரியாகாது என்றார். “அயர்லாந்தில், தொழிலாளர்கள் வெற்றிகரமாகப் போராடவில்லை, ஒருங்கிணந்து செயல்படவில்லை. நெருக்கடிக்கான விலையை அவர்கள் இப்பொழுது உண்மையில் கொடுக்கின்றனர்என்றார் அவர். “கிரேக்கத்தில், தொழிலாளர்கள் திரும்பிப் போராட முயன்றபோது, நாம் அந்நாட்டில் எப்படித் தொழிலாளர்கள் உண்மையில் மாறுபட்ட விதத்தில் செயல்படுகின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது.”

நாம் இவற்றிலிருந்து பற்றியெடுக்க வேண்டிய படிப்பினை அதிகாரத்துவத்தின் பங்கு பற்றி அல்ல,  போராட்டத்தை அவர்கள் எப்படி நசுக்குகிறார்கள் என்பது அல்ல, நாம் எப்படி ஒரு தேசிய அளவில் போராட முடியும் என்பதுதான்.” என்று அவர் முடிவுரையாகக் கூறினார். “கிரேக்கத்தில் இருந்து நாம் கற்கக் கூடிய படிப்பினை ஒரு பொது வேலைநிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான்.”

இது மற்றொரு வெளிப்படையான தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பாதுகாக்கும் முறையாகும், கிரேக்கத்தின் பொது வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களினால் சில மாதங்களுக்கு ஒரு முறை அழைப்பு விடப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னேடுப்பதற்கென்று இல்லாமல், அத்தகைய இயக்கத்தைத் துல்லியமாகக் கட்டுப்படுத்துவதற்கும் PASOK அரசாங்கம் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்கும்தான்.

SWP ஆனது Shaoul உரைக்குக் கொடுத்துள்ள விடையிறுப்பு முக்கியமானது ஆகும். அவர்கள் உண்மையான சோசலிச கட்சி ஒன்று அபிவிருத்தியடைவதை எதிர்க்கின்றனர் என்றும் அதே நேரத்தில் ஒவ்வொரு வாய்ப்பின்போதும் தொழிற் கட்சியின் அரசியல் ஏகபோக உரிமை மற்றும் TUC உடைய ஏகபோக உரிமை ஆகியவை சவாலுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்பதைத் தெளிவாக்குகின்றன.