சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After the Australian election: The way forward for the working class

ஆஸ்திரேலியத் தேர்தலின் பின்: தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கிய பாதை

Socialist Equality Party (Australia)
24 August 2010

Use this version to print | Send feedback

சனிக்கிழமைத் தேர்தலுக்குப் பின்னான தொங்கு பாராளுமன்ற தோற்றப்பாடானது ஆஸ்திரேலியாவிலும் சர்வதேச அளவிலும் பாராளுமன்ற அமைப்புமுறை ஆழ்ந்த நெருக்கடிக்குள் உள்ளது என்பதின் மற்றொரு வெளிப்பாடு ஆகும்.

1931க்குப் பின்னர் முதல் தடவை ஆட்சியில் இருந்த அரசாங்கம் மீண்டும் அதிகாரத்திற்கு வராதது இப்பொழுதுதான், அதே போல் 1940ல் இருந்து தொங்கு பாராளுமன்றமும் ஏற்பட்டதில்லை. இந்த நிகழ்வுகள் முறையே பெருமந்த நிலையின் ஆழ்ந்த காலத்திலும் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பக் கட்டத்திலும் நடந்தன என்பது தற்போதைய விளைவின் அடித்தளத்தில் உள்ள பொருளாதார, அரசியல் அழுத்தங்களின் தீவிரத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த முடிவு அரசியல் ஸ்தாபனத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியனில் வந்துள்ள ஒரு தலையங்கம் கூறுகிறது: “கூட்டமைப்பு தோன்றியதில் இருந்து நாட்டிற்கு நல்ல முறையில் செயல்பட்டுவந்த முக்கியமான இரு கட்சி முறைக்கு இத்தேர்தல் ஒரு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.” மற்றொரு கட்டுரை இந்த முடிவு “மெத்தனமாக இருந்த இரு கட்சி முறை, இரண்டாம் உலகப் போரில் இருந்து ஆஸ்திரேலிய அரசியலில் ஆதிக்கத்தை கொண்டிருந்ததற்கு, ஒரு முறிவைக் கொடுத்துள்ளது.” தனிச்சிறப்புவாதத்திற்கு மாறாக, எந்த நாடும் உலகப் பொருளாதார, அரசியல் கொந்தளிப்பில் இருந்து கூருணர்ச்சியை கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரிட்டிஷ் தேர்தல் ஒரு தொங்கு பாராளுமன்றத்தில் முடிவுற்ற நான்கு மாதங்களுக்குள் ஆஸ்திரேலியாவிலும் அப்படிப்பட்ட நிலை வந்துள்ளது. கனடாவைப் போலவே கடந்த மூன்று தேர்தல்களும் சிறுபான்மை அரசாங்கங்களை ஏற்படுத்தி, பாராளுமன்றம் மூடவேண்டிய நிலையை தோற்றுவித்த அரசியல் நெருக்கடிகளும் வந்துள்ளன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிற் கட்சி பிரதம மந்திரி கெவின் ருட்டை அகற்றிய அரசியல் சதியானது பாராளுமன்ற ஜனநாயகம் என அழைக்கப்படும் முகப்பிற்குப் பின் இருந்து உண்மையான அதிகாரத்தைச் செலுத்தும் சக்திகள் பற்றி புரிந்துகொள்ளும் விதத்தில் வெளிச்சமாக காட்டியுள்ளது. இதே பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகள் தான், அரசாங்கக் கருவிகளுடனேயே சேர்ந்து அடுத்த அரசாங்கத்தின் அமைப்பு, செயற்பட்டியல் ஆகியவற்றையும் நிர்ணயிக்கும்.

இரு பெரும் கட்சிகளில் எதுவும் உறுதியான அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையானது ஆளும் வர்க்கத்திற்கு பாராளுமன்ற வழிவகைகள் பெருகியமுறையில் ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் நிலைநிறுத்த முடியாது என்பதைக் காட்டுவதுடன் புவிசார்-அரசியல் அழுத்தங்களையும் உயர்த்திக் காட்டுகிறது. “கூட்டணிக்கு டோனி ஆபோட் அல்லது தொழிற் கட்சியின் ஜூலியா கில்லர்ட் தலைமை தாங்கினாலும், உறுதியான அரசாங்கம், உலக மந்தநிலைக்கு எதிராக ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த தேவையான மக்களிடம் ஆதரவில்லாத பொருளாதாரச் சீர்திருத்தங்களை செயல்படுத்தவும், ஆதாரங்களானது பெரும் ஏற்றம் பெறுவது நின்றுள்ள நிலை மற்றும் ஒரு வயதாகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகையின் சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு, இது ஒரு மோசமான விளைவு ஆகும்.” என்று ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவ்யூ எழுதியுள்ளது.

மூன்று சுயேச்சை உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்தி எந்த அரசாங்கம் உருவாகினாலும், “எந்தக் கூட்டும் ஒரு தீவிர பொருளாதார சீர்திருத்தச் செயற்பட்டியல் புதுப்பிக்கப்படுவதற்கு உகந்தது அல்ல” என்பதுடன் “சீர்திருத்த முடக்கம் ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதுடன்” “சர்வதேச முதலீட்டாளர்களிடையே ஆஸ்திரேலியா பற்றிய புகழிற்கு உறுதியையும் தாரது” என்று செய்தித்தாள் எச்சரித்துள்ளது.

“அடுத்த பிரதம மந்திரியின் முதல் பணிகளில் ஒன்று உலகின் பிற பகுதிகளுக்கு தன் அரசாங்கம் உறுதித்தன்மை, நிதியக் கட்டுப்பாடு மற்றும் சீர்திருத்தத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று இருக்க வேண்டும். அரசாங்கம் உருவாகும் முறையைக் காணும்போது இது எளிதில் கொடுக்கப்படாது, ஆனால் இது தான் செய்யப்பட வேண்டும்.” என்று அது தொடர்ந்து எழுதியுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, முக்கியமான பிரச்சினை வாக்காளர்களின் தேவைகளையும், விழைவுகளையும் பூர்த்தி செய்தல் என்று இல்லாமல், நிதியச் சிக்கன “சீர்திருத்த” செயற்பட்டியல் மூலமும், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலமும் சர்வதேச நிதியச் சந்தைகளின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளுதல் என்று உள்ளது.

அதேபோல், அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆளும் அதிகாரம் “தேசிய நலனைத் தியாகம் செய்யாமல் உறுதிக்குச் சிறந்த நம்பிக்கை கொடுக்கும் கட்சிக்கு உள்ளது” என்று ஆஸ்திரேலியன் குறிப்பிட்டுள்ளது. சமரசங்கள் ”சீர்திருத்தத்தில் இருந்து விடுமுறையை அதிகரிக்கும், குறுகிய காலத்திற்கேனும்” மற்றும் “ஒத்துப் போதல், அமைதிப்படுத்துதல் என்பதுதான் புதிய தேர்தல் இன்னும் தெளிவான முடிவைக் கொடுக்கும் வரை நடைமுறையாக இருக்கும்” என்றும் ஆஸ்திரேலியன் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மற்றொரு தேர்தல் இன்னும் உறுதியான பாராளுமன்ற ஆட்சியைத் தோற்றுவிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவேதான் தங்கள் செயற்பட்டியலை நடைமுறைப்படுத்த ஆளும் உயரடுக்குகள் பெருகிய முறையில் பாராளுமன்றத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்.

ருட்டிற்கு எதிராக தொழிற் கட்சிக் கருவிகளினால் சக்திவாய்ந்த பெருநிறுவன நலன்களின் ஆணையில் செயல்படுத்தப்பட்ட சதியானது அமெரிக்க உளவுத்துறைச் சக்திகளுக்கு தெரிந்து நடப்பது, ஒருவேளை அவற்றின் நேரடித் தலையீடு கூட இருக்கலாம் என்பது, இத்திசையில் முதல் படியாகும். இதைத் தொடர்ந்து பல நடவடிக்கைகள் வரும்.

ஆளும் வர்க்கமும் பழைய முறைகளில் செல்ல முடியாதது போல், தொழிலாள வர்க்கமும் செல்ல முடியாது.

பாராளுமன்ற முறையின் வழியே சாதாரண உழைக்கும் மக்களும் இளைஞர்களும் தங்கள் தேவைகளையும் நலன்களையும் முன்னேற்ற இயலாததால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பெருகிய அரசியல் கொந்தளிப்பின் வெளிப்பாட்டின் சமீபத்திய நிகழ்வுதான் ஆகஸ்ட் 21 தேர்தல் ஆகும்.

மார்ச் 1996 தேர்தல் தொழிற் கட்சிக்கு எதிரான ஒரு பெரும் ஊசலாட்டத்தை கண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத் தொகுதிகளில், அதுவும் ஹாக்-கீட்டிங் தொழிற் கட்சி அரசாங்கங்கள் நிகழ்த்திய “பொருளாதாரச் சீர்திருத்த” செயற்பட்டியல், அதையொட்டி நூறாயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டது எதிர்க்கப்பட்டவற்றிற்கு இடையே நடந்த தேர்தலில்.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்குள், 1998ல், ஹோவர்ட் அரசாங்கம் மொத்தத்தில் மக்களின் வாக்குகளை இழந்தது. அதற்குப் பாராளுமன்ற முறையின் எதிர்பாரா வகையினால் பெரும்பாலான தொகுதிகள் கிடைத்தன. இல்லையெனில் அது ஒரு முறையிலேயே ஆட்சியை இழந்திருக்கும்.

2001ம் ஆண்டு கூட்டணி அரசாங்கம் மீண்டும் தேர்தல் தோல்வியை நோக்கிச் சென்றது. ஆனால் தம்பா அகதிகள் “நெருக்கடியை” உருவாக்கியதுடன், செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களையும் பயன்படுத்தி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றது.

2004ம் ஆண்டு ஹோவர்ட் ஒரு சாதகமான திருப்பத்தை பெற்றார். தொழிற் கட்சியின் ஆரம்ப வாக்குகள் 1931ல் இருந்து மிக மோசமான நிலையைக் கண்டன. இந்த முடிவு 1970 களின் கடைசிக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு செனட்டில் ஒரு பெரும்பான்மையைக் கொடுத்தது. ஆனால் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மிகக் கடுமையான பணி விருப்புரிமைகள் பற்றிய தொழில்துறைச் சட்டத்தை எப்படியும் இயற்றுவது என்னும் ஹோவர்டின் முயற்சி ஒரு பெரிய பின்தாக்குதலைக் கொடுத்து, 2007 நவம்பரில் அது கணிசமான தோல்விபெற வழிவகுத்தது. ருட் உரிய பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்தார்.

இப்பொழுது, மூன்று ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே, இரு முக்கிய கட்சிகள் மீதும் உள்ள எதிர்ப்புணர்வு ஒரு தொங்குப் பாராளுமன்றத்தை தோற்றுவித்துள்ளது.

இந்தத் தேர்தல் வித்தைகளில் பொதுவாக இருப்பது, தொழிலாளர்கள் தங்கள் நலன்களை முன்னேற்றுவிக்க முதலில் ஒரு கட்சியையும் பின்னர் மற்றொரு கட்சியையும் தண்டிக்கும் விதத்தில் வாக்களித்தது ஆகும். அதே நேரத்தில் முழு உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபனத்தின் அழுகிய தன்மையானது சுயேச்சைகளின் எழுச்சியையும் பசுமைவாதிகளின் வளர்ச்சியையும் கண்டுள்ளது.

2010ல், தொழிற் கட்சிக்கு எதிரான மாற்றம் க்குவீன்ஸ்லாந்து, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தொழிலாள வர்க்கத் தொகுதிகளில் மிகவும் உயர்ந்தது. அதிலும் குறிப்பாக எங்கு அதிகமாக வேலையின்மை விகிதங்கள் உள்ளனவோ அங்கு. இப்பகுதிகள் மிக அதிகமான முறைசாரா எதிர்ப்புக்களையும் பதிவு செய்தன.

அதே நேரத்தில், தொழிற் கட்சி மீதான விரோதப்போக்கு, குறிப்பாக சுற்றுச்சூழல் மாற்றத்தை அது கையாள்வதில் கண்ட தோல்வி பசுமைவாதிகளுக்கு மிக அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்தது. 1998ல் பசுமைவாதிகள் பிரதிநிதிகள் மன்றத்தில் 2.6 சதவிகித வாக்குகளையும், செனட்டில் 2.7 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். இத்தேர்தலில் அது முறையே11.4 சதவிகிதம் மற்றும் 13 சதவிகிதம் என்று இருந்தன.

ஆனால் பசுமைவாதிகளுக்கான வாக்குகள் என்பதும் ஒரு முன்நோக்கிய பாதை அல்ல. எப்படி தொழிற் கட்சியிடம் இருந்து லிபரலுக்கோ அல்லது முறைசாரா எதிர்ப்பு வாக்குகள் அளித்தல் உள்ளதோ அப்படித்தான் இதுவும். செனட்டில் சக்திகளின் சமநிலை இருக்கும் நிலையில், பசுமைவாதிகள் தங்கள் முக்கிய அக்கறை “உறுதிப்பாடு”—அதாவது இரு பெரிய கட்சிகளில் எது அரசாங்கம் அமைத்தாலும் அதன் செயற்பட்டியலுக்கு ஆதரவு தருவது என்று வலியுறுத்தியுள்ளனர்.

இப்பொழுது ஒரு இருப்புநிலைக் குறிப்பை வரையும் நேரம் வந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தை அழுத்திக் கொண்டிருக்கும் அவசரப் பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற அமைப்புமுறை வடிவமைப்பிற்குள் தீர்வு ஏதும் கிடையாது. உண்மையில் அமைப்புமுறையின் நெருக்கடியே சமூகத்தின் பொருளாதார அஸ்திவாரங்களில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த மாற்றங்களால் வந்துள்ளன. அவற்றிற்கு தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் நிலைநோக்கு இன்றியமையாததாகும்.

பூகோளமயமான உற்பத்தி முறை மற்றும் உலக நிதியச் சந்தைகள் ஒவ்வொரு தேசிய பொருளாதாரத்தின் மீதும் என்றுமில்லாத அளவு அதிகமாகக் கொண்டுவரும் அழுத்தங்களும் இந்த அல்லது அந்த அரசாங்கத்தின் மீது கொடுக்கும் அழுத்தத்தின் ஊடாக பழைய சீர்திருத்த திட்டம் சரிவைத்தான் ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளும் மக்கள் போடும் வாக்குகளினால் என்று இல்லமால், சக்தி வாய்ந்த உலக நிதிய, பெருநிறுவன உயரடுக்குகளின் ஆணைகளால் முடிவு செய்யப்படுகின்றன.

உண்மையில், இந்த நிகழ்ச்சிப்போக்கின் தாக்கம் அதன் நேரடி வெளிப்பாட்டை தற்போதைய பாராளுமன்ற நெருக்கடியில் காண்கிறது. உலக நிதி ஆணையிட்ட “தடையற்ற சந்தை” செயற்பட்டியலை ஏற்றபோது தேசியக் கட்சியிலிருந்து விலகிய மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் தான் எந்தக் கட்சி அதிகாரத்திற்கு வரும் என்பதை நிர்ணயிப்பர். இன்னும் கூடுதலான தேசியக் கட்டுப்பாடு மறுபடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்னும் அவர்கள் முயற்சி தோல்வியில்தான் முடிவடையும். எப்படி தொடர்ச்சியான முயற்சிகள் அரசியல் செயற்பட்டியலை மாற்ற எதிர்ப்பு வாக்குகள் அல்லது பசுமைவாதிகளுக்கு வாக்குகள் என்று வந்து பயனில்லையோ, அப்படித்தான் இதுவும்.

21ம் நூற்றாண்டின் அரசியல், பொருளாதார யதார்த்த நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் புதிய பாதையை தொழிலாள வர்க்கம் கட்டமைக்க வேண்டும். இந்த புதிய நிலைநோக்குத்தான் SEP யின் தேர்தல் பிரச்சாரத்தின் அச்சாக இருந்தது. பாராளுமன்றத்தின் மூலம் தேசிய சீர்திருத்தம் என்னும் முன்னோக்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களினால் சிதைந்து விட்டது என்று நாம் வலியுறுத்தினோம். ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீன அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

தேர்தலில் பிரதிபலித்த சீற்றம், ஏமாற்றத் திகைப்பு, கொந்தளிப்பு ஆகியவை ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் யதார்த்த நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் வெளிப்படையாக ஆளும் உயரடுக்கின் கருவிகளாக மாறியுள்ளது என்பது போராடுவதற்கு எந்த அமைப்பும் இல்லை என்ற நிலைக்குத் தொழிலாளர்களை தள்ளியுள்ளது என்று பொருளாகும். அவர்கள் ஒரு பயனற்ற வழி மூலம் சமூகப் பிரச்சினைகளுக்கு தனிப்பட்ட முடிவுகளைக் காண முற்படுகின்றனர். இந்த நெருக்கடியானது தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சி கட்டமைக்கப்படுவதின் மூலம் தான் தீர்க்கப்படமுடியும்.

இழிசரிவுற்றுள்ள பாராளுமன்ற அமைப்புமுறையின் மூலம் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த முன்னேற்றப் பாதையும் கிடையாது. உண்மையில் அதற்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் வரை, தொழிலாளர்கள் முற்றிலும் புதிய மற்றும் பாராளுமன்றத்திற்கு புறம்பாக இப்பொழுது திரைக்குப் பின்னால் தயாரிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தயார் அற்றவர்களாகவே இருப்பர்.

SEP தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய ஆதரவைப் பெற்றுள்ளது. இது அது பெற்றுள்ள கூடுதலான வாக்குகளில் பிரதிபலிப்பாகிறது. ஆனால் இதையும் விட முக்கியமானது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கட்சியின் பகுப்பாய்வுகள், வேலைத்திட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதுதான். SEP பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவரையும் அதன் கொள்கைகள், முன்னோக்கு ஆகியவை பற்றித் தீவிர கவனம் செலுத்தும்படி வலியுறுத்துவதுடன், அதனுடைய உறுப்பினர் அணியில் சேர்ந்து தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர கட்சியை கட்டமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்துகிறோம்.