சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canada’s government foments reaction over Tamil refugee boat

கனடா அரசாங்கம் தமிழ் அகதிகள் கப்பல் சம்பந்தமாக பிற்போக்கைத் தூண்டிவிடுகின்றது

By Keith Jones
17 August 2010

Use this version to print | Send feedback

கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டொவ்ஸ், கொடுமை மற்றும் வறுமையில் இருந்து தப்பி ஏக்கத்துடன் கனடாவில் புகலிடம் கோரி கப்பல்களில் வரும் மக்களை தடுப்பதற்காக நாட்டின் சட்டங்களை பலப்படுத்த வேண்டும் என நேற்று மீண்டுமொருமுறை பிரகடனம் செய்தார்.

கடந்த வியாழக் கிழமை, கனடாவின் கன்சர்வேடிவ் (பழமைவாத) அரசாங்கம், நாட்டின் மேற்குக் கடற்கரையில் கனடாவின் ஆயுதப் படை போர்க் கப்பலைப் பயன்படுத்தி ஒரு பெரும் இராணுவ-பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்ததோடு 492 இலங்கை தமிழர்களை ஏற்றிவந்த தாய்லாந்து கொடி ஏற்றப்பட்டிருந்த சரக்குக் கப்பலை இடைமறிக்கவும் திட்டமிட்டது.

கூட்டுத்தாபன ஊடகங்களால் பிரச்சாரம் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை, அதிகளவு பெண்கள் மற்றும் சிறுவர்களுடன் வருகை தந்த தமிழர்களை ஒரு மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக சித்தரிப்பதோடு அவர்களது புகலிடக் கோரிக்கையை சட்டவிரோதமாக "வரிசையில் நுழையும்" நடவடிக்கையாகக் காட்டி அதை மறுதலிப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

உண்மையில், கனேடிய மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ், அரசியல் தண்டனைகளால் இடம்பெயர்பவர்களுக்கு தங்குமிடமும் புகலிடம் கோருவோருக்கு தமது கோரிக்கையின் நியாயத்தை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க சட்ட ரீதியில் கனடா கடமைப்பட்டுள்ளது.

எம்.வி. சன் சீ கப்பலைக் கைப்பற்றிய பின்னர், அதை கனடாவின் இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் அருகில் உள்ள கனேடிய பாதுகாப்புப் படையின் கடற்படை தளமொன்றுக்கு கொண்டு சென்றனர். அங்கு "கப்பலில் வந்த தமிழ் மக்கள்" விசாரிக்கப்பட்டு, பின்னர் அவர்களை தடுத்து வைப்பதற்காக இரு சிறைகளுக்கு கொண்டு சென்று, அவர்களது அரசியல் அகதிகள் என்ற அந்தஸ்த்துக் கோரிக்கை சம்பந்தமான விசாரணையை அவர்கள் ஒத்திவைத்துள்ளனர்.

டொவஸ் மற்றும் ஏனைய அரசாங்கப் பேச்சாளர்களும், கனடாவுக்குள் பயங்கரவாதத்தை ஊடுருவச் செய்து நிதி சேகரிக்கும் இலக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே எம்.வி. சன் சீ கப்பலின் கனடாவுக்கான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என எந்தவொரு ஆதாரமும் காட்டாமல் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். கப்பலில் இருந்தவர்கள் தமது பயணத்துக்காக 40,000 டொலர்கள் அல்லது 50,000 டொலர்கள் செலுத்தியதாக கூறப்படுகிறது.

தோன்றியுள்ள இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல், கனடாவின் அகதிகள் சட்டங்களை மேலும் கட்டுப்பாடுடையதாக்க வேண்டியுள்ளதைக் காட்டுகிறது என பழமைவாத அரசாங்கமும் ஊடகங்களில் பெரும் பகுதியும் வலியுறுத்துகின்றன.

அரசாங்கம் எந்தவொரு உறுதியான பிரேரணைகளையும் முன்வைக்காத அதே வேளை, அதிகாரமற்ற கப்பல்களில் கனடாவுக்கு வருபவர்கள் அகதி அந்தஸ்த்து கோருவதற்கு உள்ள உரிமைகள் சிலவற்றை அல்லது அனைத்தையும் அகற்றும் விதத்தில் சட்டங்களை மாற்றுமாறு அவர்கள் யோசனை கூறுகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை பேசிய டொவ்ஸ், எம்.வி. சன் சீ கப்பலில் தமது உறவினர்களின் கனடா பயணத்துக்கு உதவி செய்த எந்தவொரு தமிழர் வம்சாவளி கனேடியர்களுக்கும் எதிராக வழக்குத் தொடர நாட்டின் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அரசாங்கம் பயன்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டினார். கனடாவின் கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பாக உத்தியோகபூர்வாக அறவிக்கப்பட்ட புலிகள் போன்ற அமைப்புக்கு நிதி வழங்குவது சட்ட விரோதமானதாகும்.

சந்தேகத்திற்கிடமின்றி திரைக்குப் பின்னால் பழமைவாத அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ள பத்திரிகைகள், ஒரு தொகை ஏனைய பிற்போக்கு நடவடிக்கைகளை பிரேரிக்கின்றன. அவற்றில் பல ஆஸ்திரேலியாவினால் கையாளப்பட்ட முறையிலானவையாகும். கனடாவின் கடற் பிராந்தியத்துக்குள் அகதிகள் நுழைவதை தடுப்பதற்காக, சமுத்திரத்தில் வைத்தே கடற்படையை பயன்படுத்தி கப்பல்களை மறிப்பது மற்றும் மத்திய நகர் பகுதியில் இருந்து தொலைவில் அல்லது கனடாவுக்கு வெளியிலும் கூட விருந்தோம்பல் இல்லாத பிரதேசங்களில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களுக்கான தடுப்பு முகாங்களை ஸ்தாபிப்பதும் இவற்றில் அடங்குகின்றன.

பிரதமர் ஸ்டெபென் ஹாபர், ஆஸ்திரேலியாவின் முன்னால் பிரதமரும் ஜோர்ஜ் டிபிள்யு புஷ்ஷின் நெருங்கிய பங்காளியுமான ஜோன் ஹவார்ட்டை மீண்டும் மீண்டும் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் ஒடுக்குமுறை சக்திகளை கட்டியெழுப்புவதை நியாயப்படுத்துவதோடு குவிந்துவரும் சமூக அதிருப்தியை திசை திருப்புவதற்காக நாட்டுப்பற்றை பயன்படுத்தி அதை பிற்போக்கான வழியில் நகர்த்தும் நோக்கில், ஹவார்ட் மீண்டும் மீண்டும் நச்சுத்தனமான குடியேற்ற-விரோத மற்றும் அகதிகள்-எதிர்ப்பு பிரச்சாரத்தை குவித்தார். ஹவார்டும் அவரது லிபரல் கட்சிக்காரர்களும் அகதிகள் சம்பந்தமாக "கடும் போக்கை" கடைப்பிடித்து மீண்டும் தெரிவாக முயற்சித் போது, இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துகொண்டிருந்த அகதிகள் படகு ஒன்றை காப்பாற்றும் நடவடிக்கையை ஏற்பாடு செய்யாமல் அவரது அரசாங்கம் வேண்டுமென்றே தாமதித்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் இருப்பது ஒரு அருவருப்பான விடயமாகும். (பார்க்க: “The tragedy of SIEV X: Did the Australian government deliberately allow 353 refugees to drown?”—Part 1 of a four-part series.)

சிறுபான்மை ஹாபர் அரசாங்கம், அதனது சொந்த பிற்போக்கான மற்றும் திசை மாற்றுவதற்கான குற்றத்-தடுப்பு மற்றும் பயங்கரவாத-தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னிலைப்படுத்தவும் அவ்வாறு செய்வதன் மூலம் குறியேற்ற விரோத பாகுபாட்டை வெளிப்படையாக தூண்டிவிடுவதற்கும் எம்.வி. சன் சீ கப்பலின் வருகையை பற்றிக்கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

அத்தகைய சூழ்ச்சிகரமான வேண்டுகோள்களை விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அது உணருமானால், அதற்குக் காரணம், பெதுச் சேவைகளை வெட்டித் தள்ளும், பெரும் வர்த்தகர்களுக்கும் பணக்காரர்களுக்கும் வரிகளைக் குறைக்கும், மற்றும் வெளிநாட்டில் நடக்கும் யுத்தங்களுக்கு அனுப்பி வைக்கக் கூடிய வகையில் இராணுவத்தை மீண்டும் ஆயுதபாணியாக்கி விரிவாக்கும் அதன் திட்டங்களுக்கு வெகுஜன ஆதரவுத் தளம் மிகவும் குறுகியதாகவே உள்ளது என்ற உண்மையை அது அடையாளங் கண்டுகொண்டுள்ளதே ஆகும். அதே சமயம், தேசிய பாதுகாப்பு இயந்திரங்களை கட்டியெழுப்புவதிலிருந்து மாற்றுக் கருத்தை குற்றமுள்ளதாக்குவது வரை கைகோர்த்துக் கொண்டு செல்கின்றது. இரண்டு மாதத்துக்கு முன்னர் டொரன்டோவில் ஜி 20 மாநாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பிரமாண்டமான ஆத்திரமூட்டும் பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதன் மூலம் இதற்கு முன் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது எந்தளவுக்கு கடுமையானதும் காலக்கேடானதும் என்றால், இலங்கை தமிழ் "கப்பல் அகதிகள்" சம்பந்தமாக பகைமையை கிளறுவதன் மூலம், ஹாபர் அரசாங்கம் வெறுமனே தனது சொந்த பிற்போக்கு திட்டத்தை மட்டும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை. அது இலங்கையின் அதிகாரத்துவ இனவாத அரசாங்கத்துக்கும் –கொடூரமான யுத்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்ட அரசாங்கம்— ஒரு உந்துதலைக் கொடுக்கின்றது.

கனடாவின் இராணுவத்தால் எம்.வி. சன் சீ கப்பலைக் கைப்பற்றிய கடந்த வார நாட்களில், அது ஒரு பயங்கரவாத கப்பல் என்ற முறையில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் கனடா அரசாங்கத்தைத் தூண்டியது.

இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை கடற்படையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டில், நாட்டின் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய இராஜபக்ஷ, எம்.வி. சன் சீ கப்பல் புலிகளின் சர்வதேச பயங்கரவாத வலையமைப்பின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் புலிகள் மீதான அதன் இராணுவத்தின் வெற்றியை தூக்கிப் பிடித்தாலும், தமிழ் புகலிடம் கோருவோர் அல்லது வெளிநாட்டில் குடியேறியோர் மூலமாக உட்பட, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலின் கீழ் இருப்பதாக தொடர்ந்தும் காட்டிக்கொள்ள உறுதிபூண்டுள்ளது. இது இரண்டு காரணங்களுக்காகும். முதலாவது, முப்பது ஆண்டுகால யுத்தத்தினதும் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினதும் பிரமாண்டமான செலவுகளுக்கு, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக இலங்கையின் தொழிலாளர்களையும் உழைப்பாழிகளையும் விலை கொடுக்க வைக்கும் குறிக்கோளுடன் சில நடவடிக்கைகளை அது அறிமுகப்படுத்தியுள்ளதால், சிவில் உரிமைகள் மீது ஒரு பெரும் ஒடுக்குமுறை இயந்திரத்தையும் கட்டுப்பாடுகளையும் திணிப்பதற்கு அதற்கு ஒரு சாக்குப் போக்குத் தேவை. இரண்டாவது, அதன் பேரினவாத தமிழர் விரோத கொள்கைகள் தொடர்பான எந்தவொரு மற்றும் அனைத்து எதிர்ப்பையும் சட்டவிரோதமானதாக்க அது விரும்புகின்றது.

புலிகளின் இனப் பிரிவினைவாத அரசியலையும் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான முதலாளித்துவ அரசை உருவாக்குவதற்கான அதன் பிரச்சாரத்தையும் உலக சோசலிச வலைத் தளம் தெளிவாக எதிர்த்து வந்துள்ளது. அவ்வாறு செய்த அதே வேளை, 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்துக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது, தசாப்த காலங்களாக தொடர்ச்சியாக ஒரு தொகை பாகுபாட்டு நடவடிக்கைகளை உக்கிரப்படுத்துவதன் மூலமும் இனவாத வன்முறை அலைகள் மூலமும் தமிழ் சிறுபான்மையினரை தாக்கிய சிங்கள முதலாளித்துவமே, என நாம் தெரிவித்துள்ளோம். அடிப்படையில், இந்த இனவாத அரசியல் அரச வளங்கள் மீது பிரத்தியேக உரிமை கொண்டாடுவதற்கானது மட்டமல்ல. சுதந்திர முதலாளித்துவ ஆட்சியின் தோல்வியினால் எழும் சமூக பதட்டங்களை திசை திருப்பவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் ஒரு ஆயுதமாக அது பயன்பட்டு வந்துள்ளது.

உள்நாட்டு யுத்தத்தின் முடிவால் எதுவும் மாற்றமடையவில்லை.

நஷனல் போஸ்ட்டுக்கு கிடைத்த கடிதமொன்றில் எம்.வி. சன் சீ கப்பலில் இருந்த அகதிகளில் சிலர் குறிப்பிட்டிருந்தது போல்: "இலங்கையில் இன மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் தெரவிக்கின்றது. ஆயினும் [பொது மக்களை எதேச்சதிகாரமாக கைது செய்ய அனுமதிக்கும்] பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அவசரகாலச் சட்டமோ அகற்றப்படவில்லை. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்கள் விடுவிக்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக் குடியேற்றப்படவில்லை. மாறாக, பரந்தளவிலான காணாமல் போகும் சம்பவங்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் கப்பம் பெறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன."

அத்தகைய இனவாத அரசியல் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. உண்மையில், ஏறத்தாள ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் வறுமைப் பிடிக்குள் அகப்பட்ட சகல முதலாளித்துவ நாடுகளிலும் தசாப்த காலங்களாக முதலாளித்துவ ஆட்சியின் முகச்சாயலாக இனவாதம் இருந்து வருகின்றது.

அகதிகளுக்கு எதிரான ஹாபர் அரசாங்கத்தின் தாக்குதல், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், அமெரிக்க-மெக்ஸிகன் எல்லையில் ஒபாமாவின் இராணுவமயமாக்கங்கள் தொடக்கம் பர்தாவை தடைசெய்யும் பிரான்சின் முயற்சிகள் வரை, வளர்ச்சி கண்டுவரும் அகதிகள்-விரோத, குடியேற்ற-எதிர்ப்பு, மற்றும் முஸ்லிம் விரோத பழி சுமத்தல்களின் எடுத்துக் காட்டுகளின் ஒரு அங்கமாகும்.

ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், வரலாற்று ரீதியில் செல்வந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவம், இப்போது தனது சொந்த இனவாத அரசியலை கருக்கட்ட வைப்பதோடு இது ஜனநாயக உரிமைகள் மீதான முன்னெப்போதும் இல்லாத கடுமையான தாக்குதல்களுடன் ஒன்றுக்கொன்று இணைந்து செல்கின்றது.