WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இலங்கை
Sri Lankan president forced to sack deputy minister
இலங்கை ஜனாதிபதி பிரதி அமைச்சரை பதவி விலக்கத் தள்ளப்பட்டார்
By Nanda Wickremasinghe
14 August 2010
Back
to screen version
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அதிகரித்துவந்த தொழிலாளர்களின் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்ததால், செவ்வாய்கிழமை மேர்வின் சில்வாவை அவரது நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலக்கினார். ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) உறுப்புரிமையில் இருந்தும் சில்வா விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
சில்வா ஆகஸ்ட் 3 அன்று மொஹமட் இஷாட் என்ற ஒரு அரசாங்க அலுவலரை மரத்தில் கட்டிவைத்து, அவரது சக ஊழியர்கள் முன்னிலையில் அவரை தண்டித்ததோடு அதை எதிர்த்தவர்களையும் அதே முறையில் நடத்துவதாக அச்சுறுத்தியதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. களனி பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன் இந்த சம்பவம் நடந்த போது பொலிசார் அங்கிருந்த போதும் தலையிடவில்லை. ஊடகங்கள் தன் கையில் இருப்பதை சில்வா உறுதிப்படுத்திக்கொண்டாலும், இந்த சம்பவம் பற்றிய செய்தி வெளிவந்தவுடன் மக்களின் எதிர்ப்பு அவர் பக்கமே திரும்பியது.
சில்வா ஆகஸ்ட் 3 அன்று மொஹமட் இஷாட் என்ற ஒரு அரசாங்க அலுவலரை மரத்தில் கட்டிவைத்து, அவரது சக ஊழியர்கள் முன்னிலையில் அவரை தண்டித்ததோடு அதை எதிர்த்தவர்களையும் அதே முறையில் நடத்துவதாக அச்சுறுத்தியதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. களனி பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன் இந்த சம்பவம் நடந்த போது பொலிசார் அங்கிருந்த போதும் தலையிடவில்லை. ஊடகங்கள் தன் கையில் இருப்பதை சில்வா உறுதிப்படுத்திக்கொண்டாலும், இந்த சம்பவம் பற்றிய செய்தி வெளிவந்தவுடன் மக்களின் எதிர்ப்பு அவர் பக்கமே திரும்பியது.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது பற்றி கலந்துரையாடுவதற்கு கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்குபற்றத் தவறியமைக்காக, அரசாங்கத்தின் சமுர்தி என்ற நலன்புரித் திட்ட கள அலுவலரான இஷாட் ஒதுக்கி வைக்கப்பட்டார். அவரது பிள்ளை சுகயீனமுற்றிருந்த காரணத்தால் அவரால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போயிருந்தது. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கூர்மையாக அதிகரித்துள்ளது தொடர்பாக குவிந்துவரும் கவலைகளின் மத்தியில், ஒருவரை பகிரங்க உதாரணமாகக் காட்ட சில்வா தீர்மாணித்திருந்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 165 பேர் டெங்கினால் உயிரிழந்துள்ளதோடு 23,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சுகாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தசாப்தகால அலட்சியமே காரணம் என்ற உண்மையில் இருந்து கவனத்தை திசை திருப்ப எடுக்கப்பட்ட ஒரு குறுகிய முயற்சியே இந்த ஊடக நிகழ்வாகும்.
டெங்கு நோயை கட்டுப்படுத்த "அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்காமல்... மக்கள் தமது கடமையைச் செய்ய வேண்டும்" என அண்மையில் ஜனாதிபதி இராஜபக்ஷ பிரகடனம் செய்திருந்தார். ஜனாதிபதி கூறியதில் இருந்து ஒரு பகுதியை எடுத்துக்கொண்ட சில்வா, இஷாட்டை தான் அவமதித்ததை நியாயப்படுத்தினார். "வேலைத் தளங்களில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அரசாங்கம் இப்போது டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இராணுவத்தையும் பொலிஸையும் அனுப்பியுள்ளது, ஆனால் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பதில்லை. அரசாங்க அலுவலர்களின் தவறுகளாலேயே டெங்கு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன," என அவர் கூறினார்.
ஆகஸ்ட் 6 அன்று நாடு பூராவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் பத்தாயிரக்கணக்கான சமுர்தி உத்தியோகத்தர்கள் சில்வாவின் நடவடிக்கைக்கு பதிலிறுத்தார்கள். களனிக்கு அருகில் கிரிபத்கொடையில் நடந்த மறியல் போராட்டத்தில் சுமார் 3,000 தொழிலாளர்கள் பங்குபற்றினார்கள். குருணாகல் மாவட்டத்தில் சமுர்தி அலுவலகங்கள் இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 9 அன்று, சில்வாவுக்கு கண்டனம் தெரிவிக்க கண்டியில் 3,000 க்கும் அதிகமான சமுர்தி உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடினர்.
குறிப்பிடத்தக்க வகையில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் நலன்புரி தொழிலாளர்களும் நாடங்கெலும் தமது சிங்கள சமதரப்பினருடன் இணைந்துகொண்டனர். இந்தப் பிரதேசங்கள் இரண்டு தசாப்தகாலங்களாக பிரிவினை உள்நாட்டு யுத்தத்தால் அழிந்து போயுள்ளன. 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்த பின்னரே யுத்தம் முடிவடைந்தது.
"எமது தொழிலாளி மீது ஒரு அமைச்சர் தாக்குதல் நடத்தியது சட்ட விரோதமானது. அவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டார். [யுத்தத்தின் பின்னர்] முதல் முறையாக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் கூட்டாக போராடுவது மகிழ்ச்சிகரமானது," என வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் ஒரு சமுர்தி உத்தியோகத்தர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறியமைக்கு அரசாங்கமே பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் போராட்டங்கள், வாழ்க்கைத் தரத்தின் மீதான அரசாங்கத்தின் உக்கிரமடைந்துவரும் தாக்குதல்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமை மீறல்கள் சம்பந்தமாக நிலவும் பரந்த எதிர்ப்பை பிரதிபலிக்கின்றன. சமுர்தி திட்டத்தில் பங்கெடுக்கும் 24,000 நலன்புரி தொழிலாளர்கள், நலன்புரி நிதிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் விதம் பற்றி நன்கு அறிந்தவர்கள். இந்தத் துறையில் உள்ள தொழிற்சங்கத்துடன் கூட்டாக செயற்படும் ஆளும் கூட்டணி, குறிப்பாக கிராமப்புற வறிய மக்கள் மத்தியில் செல்வாக்கை விலைகொடுத்து வாங்க, ஒரு வழியாக இந்த அற்ப நலன்புரி நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்துகின்றது.
அரசாங்க மற்றும் எதிர்க் கட்சி தொழிற்சங்கங்கள், சில்வாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளுக்கு வரையறுக்க முயற்சித்தன. அனைத்து இலங்கை சமுர்தி விவசாய மற்றும் ஆய்வு உதவி அலுவலர்கள் சங்கம் உட்பட ஸ்ரீ.ல.சு.க. கட்டுப்பாட்டிலான சங்கங்கள், சில்வாவை பகிரங்மாக மன்னிப்புக் கோர அழைப்பு விடுத்தன. எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த தொழிற்சங்கமான சமுர்தி அபிவிருத்தி அலுவலர்கள் சங்கமும் இதே கோரிக்கையை முன்வைத்தது.
எதிர்க் கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள், மற்றும் ஊடகங்களும் முழு கவனத்தையும் சில்வா மீதே குவிமையப்படுத்தின. அவர் அரசியல் எதிரிகள் மற்றும் விமர்சகர்கள் மீதான தனது தாக்குதல்களுக்கு குறிப்பாக இழிபுகழ்பெற்றவர். 2007 டிசம்பரில், தேசிய தொலைக் காட்சி நிலையமான ரூபவாஹினி வளாகத்துக்குள் நுழைந்த சில்வா, தனது உரைகளில் ஒன்றை ஒளிப்பரப்பத் தவறியமைக்காக செய்தி ஆசிரியரை அடித்தார். உழியர்கள் அவரை உள்ளே பூட்டிவைத்த பின்னர், அவரை விடுவிப்பதற்காக அரசாங்கம் துருப்புக்களை அனுப்பத் தள்ளப்பட்டது.
இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமனறத் தேர்தல்களின் போது, எதிர்க் கட்சி பிரச்சாரகர்கள் மீது குண்டர் தாக்குதல் நடத்தியதாக சில்வா மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் வந்தன. அவரும் அவரது ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தொந்தரவு செய்துள்ளனர். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து சில செய்திகளை ஒளிபரப்பிய சிரச தொலைக்காட்சி சேவையையும் குறிப்பாக சில்வா இலக்கு வைத்திருந்தார்.
எவ்வாறெனினும், சில்வாவின் குண்டர் வழிமுறைகள், முழு இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் எதேச்சதிகார பண்பின் ஒரே ஒரு அறிகுறி மட்டுமே. கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்திரிகையாளர்ள், அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள், பாதுகாப்பு படையினருடன் கூட்டாக அல்லது அவரது கட்டளைகளின் கீழ் இயங்கும் அரசாங்க சார்பு கொலைப் படைகளால் கடத்திச் செல்லப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். மிகப் பெரும்பான்மையான சம்பவங்களில் தண்டனை கொடுப்பது ஒருபுறம் இருக்க, எவரும் கைது செய்யப்படவேயில்லை.
ஏனையவர்கள் மிக மோசமான குற்றங்களை செய்துவிட்டு தப்பியிருக்கும் போது, தன்னால் தண்டனையின்றி செயற்பட முடியும் என சில்வா உணர்ந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இராஜபக்ஷ தானே அரசியலமைப்பை வெளிப்படையாக மீறியுள்ளதோடு நாட்டின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களையே அலட்சியம் செய்துள்ளார். உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதங்களில், இராணுவம் பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை ஆட்டிலறி மற்றும் வான் தாக்குதல்கள் மூலம் கொன்றது. இதற்கு இன்னமும் எவரும் குற்றஞ்சாட்டப்படவில்லை -எந்தவொரு பொது மகனது இறப்புக்கும் இராணுவம் பொறுப்பல்ல என அரசாங்கம் சாதாரணமாக மறுத்துவிட்டது.
சில்வாவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னதாக ஜனாதிபதி இராஜபக்ஷ ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருந்தார். எதிர்ப்பு அலைகள் தணிந்துவிடும் என அவர் தெளிவாக எதிர்பார்த்தார். இறுதியாக இராஜபக்ஷவுக்கு சில்வாவை பதவி விலக்க நேர்ந்தது என்ற உண்மை, அவரது கூட்டணி அரசாங்கம் எந்தளவுக்கு ஆட்டங்கண்டு போயுள்ளது என்பதை குறிக்கின்றது.
நேற்றைய டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு ஒன்று தெரிவித்ததாவது: "மேர்வின் சில்வாவுக்கு, பல ஆண்டுகளாக தனது வெளிப்படையான ஜனநாயகமற்ற வழிகளுடன் இலங்கையின் ஜனநாயகத் தராதரத்தை தாழ்த்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. காலங் கடந்த திருத்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளமை, அது [ஆளும்] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் [கூட்டணி] இருப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே அன்றி, அவரது நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை புரிந்துகொண்டதால் அல்ல.''
சில்வாவை பதவி விலக்க ஜனாதிபதி எடுத் முடிவை ஸ்ரீ.ல.சு.க. சார்பு சங்கங்கள் ஆதரித்தமை ஆச்சரியத்திற்குரியதல்ல. அனைத்து இலங்கை சமுர்தி விவசாய மற்றும் ஆய்வு உதவி அலுவலர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.டி. ஜகத் குமார, "ஒருவர் சட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டால், அவர் சக்திவாய்ந்த மனிதனாக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை" ஜனாதிபதி இராஜபக்ஷ காட்டிவிட்டார் என கூறிக்கொண்டார்.
அரசாங்ம் "மக்களின் சக்திக்கு" விட்டுக்கொடுத்துள்ளது மற்றும் மீண்டும் அவ்வாறு செய்யும் என்ற மாயையை எதிர்க் கட்சியான ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க முன்னிலைப்படுத்தினார். பிரதி அமைச்சர் பதவி விலக்கப்பட்டமை, அரசாங்கம் அதனது ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் நீண்ட காலத்துக்கு முன்னெடுக்க முடியாது என்பதையே காட்டியுள்ளது எனவும் திசாநாயக்க கூறிக்கொண்டார்.
உண்மையில் விடயம் மாறுபட்டதாகும். இந்த சம்பவத்தில் இருந்து இராஜபக்ஷ அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் முடிவு, தொழிலாள வர்க்கத்திடமிருந்து எழும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதாகும். அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு அரசியல் இயக்கத்தையும் தடுக்கும் என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள தொழிற்சங்கங்களில் இருந்து இதை கணக்கிட முடியும்.
ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை ஏற்கனவே அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத் திட்டமொன்றின் அடிப்படையில், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கன்னைகளில் இருந்தும் பிரிந்து சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தமது வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை தொழிலாளர்களால் காக்க முடியும். |