சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

A comment on Rules of Engagement

Rules of Engagement பற்றிய திரைப்பட மதிப்பாய்வு

By Joseph Tanniru
23 May 2000

Use this version to print | Send feedback

ஓரளவிற்கு எச்சரிக்கை உணர்வோடு தான் நான் Rules of Engagement திரைப்படத்தைக் காணச் சென்றேன். The French Connection, The Exorcist, To Live and Die in L.A. போன்ற படங்களை இயக்கிய வில்லியம் இஃப்ரெட்ன் இயக்கியிருக்கும் இப்படம், இதிலிருக்கும் வெளிப்படையான இனவாதத்திற்காக American-Arab Anti-Discrimination அமைப்பினாலும் (ADC), ஏனைய பிறராலும், கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்களில் ஹாலிவுட் இம்மாதிரியான திரைப்படங்களை உருவாக்கி வருகிறது என்பதை அறிந்திருக்கும்பட்சத்தில், இந்த குற்றச்சாட்டு சரியானதே என்று தான் நானும் நினைக்கிறேன். எவ்வாறிருப்பினும், இந்தப்படம் எந்தளவிற்கு இருக்கிறதென்றால், True Lies அல்லது Rising Sun போன்ற சோவனிச (chauvinist) படங்களை விடவும் கீழ்தரமாக இருக்கிறது.

படத்திலிருக்கும் கலைத்துவத்தைக் குறித்து கூறுவதானால், இப்படம் மதிப்பற்றது. (இதன் நிஜமான கதை ரீகனின்கீழ் கடற்படை செயலாளராக இருந்த ஜேம்ஸ் வெப்பால் படைக்கப்பட்டது!) கதையமைப்பு மேம்போக்காகவும், வெறுமையாகவும் இருக்கிறது; கதாபாத்திரங்களில் எந்த சாராம்சமும் இல்லை. வியட்நாம் யுத்தத்தில் பங்கெடுத்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றதால், பின்னர் விமானப்படைப்பிரிவு தளபதியாக சமீபத்தில் உயர்வைப்பெற்ற கேணல் சில்டர்ஸ் கதாபாத்திரத்தில் சாமுவேல் ஜாக்சன் நடித்திருக்கிறார். அவரும், “அவருடைய குழுவினரும்” சவூதி அரேபியாவின் எல்லையிலிருக்கும் ஒரு மத்திய கிழக்கு நாடான யேமனிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நடக்கும் ஒரு போராட்டத்தைச் சமாளிக்க அனுப்பப்படுகிறார்கள். சில்டர்ஸ் அங்கு வந்தபின்னர், நிலைமை மிகவும் மோசமடைகிறது; தூதரகத்திற்கு வெளியிலிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, யேமன் மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த சில்டர்ஸ் உத்தரவிட்டபின்னர், நிலைமை முடிவுக்கு வருகிறது.

படத்தின் பெரும்பாலான பகுதி, சில்டர்ஸின் நீதிமன்ற குற்ற-விசாரணை காட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது. வியட்நாமில் அவருடனிருந்த உடன்-அதிகாரி ஹேய்ஸ் ஹோட்ஜஸ் (இந்த வேடத்தில் டோம் லீ ஜோன்ஸ் நடித்துள்ளார்) சில்டர்ஸிற்காக வழக்காடுகிறார். சில்டர்ஸ் அவருடைய கடமையைத் தான் செய்தார் என்பதை எடுத்துக்காட்டவும், ஆத்திரத்தோடிருந்த போராட்டக்காரர்கள் ஆயுதமேந்தி இருந்ததாலும், அவர்கள் சில்டர்ஸின் துருப்புகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாலும் தான் அவர் அவ்வாறு உத்தரவிட நேர்ந்தது என்பதை நியாயப்படுத்தவும் ஹோட்ஜஸ் முயற்சிக்கிறார். ஆனால் சில கலகக்காரர்கள் தான் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள், அப்பாவி மக்கள் பயன்படுத்தவில்லை என்று கூறி, அமெரிக்க அரசாங்கம், எல்லா குற்றங்களையும் சில்டர்ஸ் மீது சுமத்த முயற்சிக்கிறது. படத்தின் முடிவில், எல்லா முக்கிய குற்றச்சாட்டுகளிலிருந்தும் சில்டர்ஸ் விடுவிக்கப்பட்டு, ஒரு “நல்ல மனிதராக” காட்டப்படுகிறார்.

இதனூடாக, அமெரிக்க தேசியவாதமும், அரேபிய எதிர்ப்பு சோவனிசமும் நமக்கு காட்டப்படுகிறது. யேமனியர்கள் அனைவரும் கொடூரமானவர்கள், என்பதாக காட்டப்படுகிறது. கதை முன்னேறி (அவ்வாறு ஒருவர் அழைக்கவிரும்பினால்) செல்லும் போதே, சில்டர்ஸ் அவருடைய நடவடிக்கைகளுக்காக முழுமையாக நியாயப்படுத்தப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. உண்மையில் போராட்டக்காரர்கள் சீற்றம்கொண்டவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கிறார்கள். இந்த சம்பவத்தின் பாதுகாப்பு ஒளிநாடா (அராசங்க விஷயத்தை மூடிமறைக்க படத்தின் ஒரு காட்சியில் பின்னர் இது தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் தீயிலிட்டு கொளுத்தப்படுகிறது), தூதரகத்திற்கு வெளியிலிருந்த குழந்தைகள் உட்பட, ஒவ்வொரு ஆர்பாட்டக்காரரும் ஆயுதமேந்தி இருப்பதைத் தெளிவாக காட்டுகிறது. அவர்கள் அனைவரும் காரணமில்லாமல் அமெரிக்கர்கள் மீதிருக்கும் ஏதோவொரு வெறுப்பால் சுடுகிறார்கள். இந்த வெறுப்பைப் பொறுத்த வரையில் நமக்கு ஒன்றும் கருத்து கூறுவதற்கில்லை, ஆனால் குழந்தைகளும் கூட இதில் சேர்க்கப்பட்டிருப்பதென்பது, ஏதோவொருவகையில் அரேபியர்களின் உளவியலைக் காட்டுவதற்கான முயற்சியாக நம்மை சந்தேகப்படச் செய்கிறது.

அரேபியர்கள் காட்டப்படும்விதம் உண்மைக்குப்புறம்பாக இருப்பதாக ADC குறிப்பிடுகிறது. மொழிபெயர்க்கப்படாத முழக்கங்களைக் (ஊகத்தில், “எல்லா அமெரிக்கர்களும் ஒழிக” என்ற ஏதோவொன்றாக தோன்றுகிறது) கூச்சலிட்டு கொண்டும், தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டுமிருக்கும் அவர்கள் “மற்றவர்களைப்” புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், குறிப்பாக அந்த சம்பவத்தின் போது கால்களை இழந்த ஒரு சிறுமிக்காகவும் (10 வயதிருக்கலாம்?) நாம் சிறிது இரக்கப்பட வேண்டியுள்ளது. யேமனுக்கு வரும் ஹோட்ஜஸ், அந்த பெண்ணுடைய பெயரைக் கேட்க அணுகும்போது, அவரைப்பார்த்து “கொலைகாரா!” என்று ஆக்ரோஷமாக கத்துகிறாள். துப்பாக்கிசூடு சம்பவத்தை நினைத்துப்பார்க்கும் காட்சியொன்றில் அந்த பெண்ணைக் கடைசியாக காட்டுகிறார்கள். அவள் தூதரகத்திற்கு வெளியில் வெறுப்பும், காட்டுமிராண்டித்தனமும் கலந்த ஒரு நிலையில், ஒரு கைதுப்பாக்கியைக் கொண்டு சுடுகிறாள்.

யெமனின் அரேபிய சமூகத்தை அவதூறாக காட்டியிருக்கும் ஒவ்வொரு விதத்தையும் பட்டியலிடுவதென்பது மிகவும் சிரமம். முக்கிய ஊடகத்தின் வழியாக, உண்மைக்குப்புறம்பாக, அரேபியர்களைப் பயங்கரவாதிகளாக இப்படம் துல்லியமாக (மேலும் தெளிவான வடிவத்திலும்) காட்டுகிறது என்பதைக் குறிப்பிடுவதே போதுமானதாகும். ஒரு மதசார்பற்ற அரேபிய-அமெரிக்க அமைப்பான ADC, இப்படத்திற்கு அளித்த பிரதிபலிப்பில், இப்படத்தைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அது குறிப்பிடுவதாவது, “வேண்டுமென்றே திட்டமிட்டு ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் நோக்கம் கொண்டிருந்த 'Birth of a Nation' மற்றும் ‘the Eternal Jew' போன்ற பிற படங்களின் அதே வரிசையில் தான் ‘Rules of Engagement' படத்தையும் கொண்டு வந்து சேர்க்க முடியும்.”

வெறுமனே மற்ற இனத்தை இழிவுபடுத்துவதன் மூலமாக எந்த தேசாபிமானமும் முழுமையடைந்துவிடாது. “அவர்கள்” என்பது எப்போதும் “நாங்கள்” என்பதற்கு எதிராக தான் நிறுத்தப்படும். இது ஒருபோதும் காட்டப்பட்டிருந்த சிறந்த கற்பனையாக —ஓர் அமெரிக்கராக— இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு இனங்கள் கலந்திருக்கும் அமெரிக்கா போன்ற நாட்டில், அமெரிக்கர்-அமெரிக்கரல்லாதவர் போன்ற பிரத்யேக தேசிய வகைப்பாடு அதன் அர்த்தத்தை இழந்துவிடும் என்று ஒருவர் நினைக்க விரும்பலாம். இருந்தாலும், சமரசப்படாத விரோதத்துடன் ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொரு நாட்டை நிறுத்தும் இந்த பாகுப்பாடுகள் இந்த நவீனகால சமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது. அதுதான் Rules of Engagementஇல் போதியளவிற்குக் காட்டப்பட்டிருக்கிறது.

திரைப்படம் முழுவதும் தேசிய அடையாளவாதமும் நிரப்பப்பட்டிருக்கிறது. அரேபிய வன்முறை கும்பலிடமிருந்து அமெரிக்க தூதரைக் காப்பாற்றிய பின்னர், படுகொலைக்கு உத்தரவிடுவதற்கு முன்னால், சுதந்திரம் மற்றும் நீதிக்கான தன்னிகரில்லா அடையாளமான—நாம் அவ்வாறு நம்பவேண்டும் என்று திரைப்படம் விரும்புகிறது—அமெரிக்க கொடியை மீட்க சில்டர்ஸ் திரும்பிச் செல்கிறார். தங்களின் கட்டுக்கடங்காத அமெரிக்கவாத எதிர்பை அடக்க முடியாமல், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடியை இறக்கும்போது அதை நோக்கி சுடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். படத்தின் ஓட்டத்தில் பார்த்தால், உண்மையில், அந்த கூட்டத்தின் வன்முறை அவ்வளவு கொடூரமாக இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் பார்வையில், அவர்களின் அமெரிக்க எதிர்ப்புணர்வு, குறைந்தபட்சம் கொடுமையான பாவங்களைவிட கொடுமையானதாக இருக்கிறது.

உணர்ச்சிகரமான கொந்தளிப்பிற்கு என்ன காரணங்கள் என்பதை ஆராய்வதற்கான எந்த முயற்சியும் நிச்சயமாக இப்படத்தில் இடம் பெறவில்லை. அதேபோல, இதுபோன்றவொரு கொந்தளிப்பான எண்ணமும், அமெரிக்க அரசாங்கம் போன்ற அமைப்பு மீதான வெறுப்பும் ஏன் என்பதற்கு படத்தில் எந்த தெளிவான விளக்கமும் இல்லை. (மிக துல்லியமாக கூற வேண்டுமானால், உண்மையில் அமெரிக்க அரசாங்கம் இந்த படத்தில் ஏதோவொருவகை வில்லனாக நடித்திருக்கிறது. ஆனால் தம்முடைய சொந்த வழியில் அதே அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இராணுவ உறுப்பினராக இருக்கும் சில்டர்ஸை மட்டும் அது தாக்குகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் விதத்தில், அரசாங்கத்தைப் பற்றிய விமர்சனம் வலதுசாரி கண்ணோட்டத்திலிருந்து அளிக்கப்படுகிறது.)

வெறுமனே கொடி வழிபாட்டைவிட, படத்தில் மிகவும் நுணுக்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேசியவாதம், இராணுவ அதிகாரிகளின் வாழ்க்கை மற்றும் செயல்களின் இழிவான வெளிப்பாடுகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகளாக இருக்கும் “மனிதர்கள்” என்பதாலேயே, படத்தில் இராணுவ பதவிக்கும், ஆவணத்திற்கும் சிறிது முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் சில்டர்ஸ் உட்பட, அந்த அதிகாரிகள் அமெரிக்க நாட்டிற்கு மதிப்பைத் தேடித்தரும் தைரியமான, வீரதீர “வீரர்களாக” இருக்கிறார்கள். இராணுவ செயல்பாடுகளைக் காட்டும் காட்சிகளில், அமெரிக்க துருப்புகள் எப்போதும் தாக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன; அவர்கள் ஒருபோதும் தாக்குவதே இல்லை. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்க தாக்குதலுக்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விளங்கிய வியட்நாம் யுத்தத்தில், சில்டர்ஸ் மற்றும் ஹோட்ஜஸ் போரிடுவதாக காட்டப்படும் முதல் காட்சியிலும் கூட இது இவ்வாறு தான் உள்ளது.

படம் வருந்தத்தக்கதாக இருக்கிறது. ஆனால் அதன் வருந்தத்தக்கத்தன்மை அமெரிக்க ஆளும் மேற்தட்டின் ஒருவகை கண்ணோட்டத்தையும், விருப்பங்களையும் எடுத்துக் கூறுகிறது. யுத்த குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விமானப்படை வீரருக்கு ஆதரவாக வழக்காடுவதில், 1970களில் ஆறு ஆண்டுகள் வியட்நாமில் கழித்த ஒரு விமானப்படை தளபதியான கதையாசிரியர் வெப்புக்கும், ஹாலிவுட்டிற்கும் இடையிலான தொடர்பு குறிப்பாக வேடிக்கையாக இருக்கிறது. இஃப்ரெட்கின் தசாப்தங்களாக சூத்திரத்தின்படி வேலையைச் செய்திருப்பதைத் தவிர, வேறொன்றும் செய்யவில்லை. சாமுவேல் எல். ஜேக்சனும், டாமி லீ ஜோன்ஸூம் இதில் நடித்ததற்காக வெட்கப்பட வேண்டும்.