சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மெய்யியல்

Investigating the foundations of equality

சமத்துவத்தின் அடித்தளங்களை ஆராய்தல்

ஜெரீம் வால்ட்ரொனால் எழுதப்பட்ட God, Locke and Equality

By Ann Talbot
16 June 2003

Use this version to print | Send feedback

ஜெரீம் வால்ட்ரொன் எழுதிய God, Locke and Equality, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம், 2002

பேராசிரியர் ஜெரீம் வால்ட்ரொனின் சமீபத்திய புத்தகம், பதினேழாம் நூற்றாண்டு ஆங்கில மெய்யியலாளர் ஜோன் லோக்கால் முன்வைக்கப்பட்ட சமத்துவத்திற்கான தத்துவத்தைப் பற்றிய ஓர் ஆய்வாக அமைகிறது. பெரும் பணக்காரர்களுக்கும், மீதமிருக்கும் மக்களுக்கும் இடையில் சமூக பிளவு விரிந்து வரும்நிலையில், இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயமாக அமைந்திருக்கும் இது, குறைந்தபட்சம் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை அளவிடுவதையாவது கைவிடாமல் இருக்கும் அரசியல் அமைப்புகளை அதிகளவில் அடிக்கோடிடுகிறது. இந்த நிலைமைகளின்கீழ், ஒரு தத்துவார்த்த கோட்பாடாக சமத்துவம் குறித்த ஓர் ஆய்வு வரவேற்கப்படுகிறது.

சமத்துவத்தைப் பற்றிய நவீன தத்துவங்களின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக லோக் இருக்கிறார் என்றும், சமூக சமத்துவமின்மை மீதான அரசியல் நிலைப்பாடுகள் குறித்த எந்த விவாதமும் அவருடைய பணிகளில் நன்கு வேரூன்றப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. லோக் அவருடைய Two Treatises of Government என்பதில், எல்லா மனிதர்களும் இயற்கையாகவே முழு சுதந்திரத்துடனும், சமத்துவத்துவத்துடனேயே இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு பொது ஒப்புதலுடன் அவர்கள் ஓர் அரசியல் அல்லது உள்நாட்டு சமுதாயத்திற்குள் ஒன்றிணையவும், அந்த சமுதாயம் பெரும்பான்மையினரின் முடிவுகளால் நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று அவர் கருதினார். உள்நாட்டு சமுதாயமாக உருவானவுடன், நீதி வழங்க ஏதோவொரு வகை அரசிற்கு அவர்கள் தங்களின் உரிமையை அளித்தார்கள். ஆனால் இந்த அரசை எதிர்ப்பதற்கான உரிமையை, தேவைப்பட்டால், ஆயுத பலாத்காரத்தின் மூலம் தூக்கியெறியும் உரிமையை அவர்கள் வைத்திருந்தார்கள்.

லோக் மரணமடைந்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், எல்லா மனிதர்களும் பெரும்பாலான பகுதிகளில் சமமாக இருந்தார்கள் என்பதை லோக்கின் தாக்கத்தால், தானாகவே தெளிவாய் தெரிகிறது போல்,அமெரிக்க புரட்சியாளர்களால் அதைப் பார்க்க முடிந்தது என்பது உண்மையாகும். சுதந்திர பிரகடனத்தை எழுதும் போது, தோமஸ் ஜெபெர்சன் (அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி) அவருடைய மேஜையில் இந்த புத்தகத்தைத் திறந்து வைத்திருக்கவும் இல்லை, அல்லது அதன் வார்த்தைகள் மிக இயல்பாக அவருக்குள் வந்துவிழும் அளவிற்கு அவர் அதன் கருத்துக்களை ஆழமாக உள்வாங்கி இருக்கவும் இல்லை என்றபோதினும், Second Treatise இல் இருக்கும் மொத்த வாக்கியங்களுமே, சுதந்திர பிரகடனத்தில் காணப்படுகின்றன. “வாழ்க்கை, சுதந்திரம், செல்வவளமை” என்ற லோக்கின் வார்த்தைகளை “வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சிக்கான தேடல்” என்று அவர் மாற்றும் போது கூட, லோக் சிந்தனையைப் பற்றிய ஓர் ஆழமான புரிதலையும், அவருடைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் மாற்றப்பட வேண்டிய வழியையும் ஜெபெர்சன் எடுத்துக்காட்டுகிறார். லோக் ஆதரித்த கருத்துக்கள் இந்த வடிவத்தில், அதைத் தொடர்ந்து வந்த ஜனநாயக தத்துவத்தின் அபிவிருத்தியில் பாகமாக மாறியது.

இந்த வரலாறு, ஒரு நவீன அரசியல் கருத்துருவாக சமத்துவத்தைக் கவனிக்கும் போது லோக்கைத் தவிர்க்கமுடியாமல் தொடக்க புள்ளியாக கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. ஆனால் அதேநேரத்தில் லோக் ஒரு நவீன சிந்தனையாளர் கிடையாது. 1632இல் பிறந்த அவர், ஆங்கில உள்நாட்டு யுத்தகாலங்களில் (1642-48) வளர்ந்தார். முதலாம் சார்லஸ் ஒருசில நூறு அடிகள் தூரத்தில் தூக்கிலிடப்பட்ட போது, அவர் வெஸ்ட்மின்ஸ்டெரில் பள்ளியில் இருந்தார். வெற்றிபெற்ற பாராளுமன்ற துருப்புகள் கல்வித்துறை பணியாளர்களை வெளியேற்றிய சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆக்ஸ்போர்டில் கிறிஸ்ட் சேர்ச் கல்லூரிக்குச் சென்றார். அவருடைய இளமைப்பருவமும், விடலைப் பருவ அனுபவங்களும் மத வடிவத்திலிருந்த ஓர் அரசியல் போராட்டத்தால் வடிவம் பெற்றது. அதில் பைபிள் தான் ஓர் அரசியல் கையேடாக மதிக்கப்பட்டது. இது நிச்சயமாக அவருடைய சிந்தனையில் பாதிப்பைக் கொண்டிருந்தது; லோக்கைப் பொறுத்தவரையில், கடவுளின் பார்வையில் மனிதர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும், அனைவரும் அவரவர் கடமையைச் செய்யவே உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும் எல்லா மனிதர்களும் சமம் என்பதாக உள்ளது. ஆனால் பலசமயங்களில் லோக்கின் சிந்தனைக்கான இந்த வரலாற்று பின்புலம், நவீன அரசியல் தத்துவவாதிகளின் படைப்புகளிலும் காணப்படுகிறது. லோக்கினுடைய அரசியல் தத்துவத்தின் மத அடித்தளங்களை வால்ட்ரொனின் புத்தகம் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது. இதில் ஓர் வரலாற்றுரீதியான உணர்வுபூர்வ கணக்கை உருவாக்க அவர் நோக்கம் கொள்கிறார்.

ஆங்கில உள்நாட்டு யுத்தத்தின் புரட்சிகர போராட்டங்களில் லோக் சிந்தனையின் வேர்கள் பெரும் பங்கு வகித்ததை அங்கீகரித்து, வால்ட்ரொன் அவருடைய எழுத்துக்களில் பொதுவாக அளிக்கும் தீவிரத்தன்மையை விட அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கிறார். அவருடைய விசேஷ முக்கியத்துவத்தோடு ஒப்பிட்டால், அவர் அளிக்கும் பொதுவான தீவிரத்தன்மை ஒன்றுமில்லாமல் இருக்கிறது. ஆங்கில புரட்சியின் மிக சாதாரணமான கூறுகளில் கூட லோக்கின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வால்ட்ரொன், வழக்கமாக இருப்பதை விட அவர் Levellersக்கு (ஆங்கில உள்நாட்டு யுத்தத்தின் போதிருந்த ஓர் அரசியல் இயக்கம்) மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறார். “உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்கள் முழுமையான ஒரு பகுத்தறிவார்ந்த வாழ்வை வாழ மாட்டார்கள்; அவர்களால் வாழ முடியாது” என்று லோக் நினைத்ததாக கூறும் C. B. மேக்பெர்சனால் முன்வைக்கப்பட்ட வாதத்தை அவர் நிராகரிக்கிறார். [1]

லோக் அவருடைய அரசியல் மற்றும் பொருளாதார தத்துவங்கள் இரண்டிற்கும் தொடர்புடைய வகையில் உழைப்பு குறித்து மிகவும் வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். லோக்கைப் பொறுத்த வரையில், அவருடைய பார்வையில், மக்கள் அவர்களுடைய உழைப்பு மூலமாக பெற்றதை மட்டுமே அவர்கள் வைத்திருக்க முடியும் என்பதால் உழைப்பு தான் மதிப்பின் ஆதாரமாகவும், சொத்துரிமைகளின் அடித்தளமாகவும் இருக்கிறது. உழைப்பு குறித்த லோக்கின் கருத்தை வால்ட்ரொன் அவருடைய மத கண்ணோட்டத்திலிருந்து, குறிப்பாக மனிதனின் வீழ்ச்சிக்கான (Fall of Man) அவருடைய மனோபாவத்திலிருந்து ஆராய்கிறார். சொர்க்கத்திலிருந்து ஆதாம் வெளியேற்றப்பட்ட போது, “உயிர்வாழ்வதற்காக ஆதாமை கடவுள் வேலை செய்ய பணிக்கிறார்; மேலும் உலகில் வசிப்போரை ஆட்சி செய்ய ஆதாமின் கரங்களில் ஒரு செங்கோலை அளிப்பதற்கு மாறாக, பூமியைக் கீழ்படிய செய்ய, ஒரு மண்வெட்டியை அவருக்கு அளிக்கிறார்” என்ற லோக்கின் எழுத்துக்களை வால்ட்ரொன் மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.

நிஜமான பாவத்திற்கு தண்டனை அளிக்கும் விதமாக எடுத்துக்காட்டாமல், சொர்க்கத்திலிருந்து அனுப்பப்படும் லோக்கின் பதிப்பில், உயிர்வாழ்வதற்காக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு மனிதகுலம் உள்ளாகிறது.

வால்ட்ரொனின் பக்கங்களிலிருந்து பெறப்படும் லோக்கின் படம், பதினேழாம் நூற்றாண்டு நிலைமையை ஆதரிக்கும் ஓர் ஆதரவாளரின் படமல்ல, மாறாக மரபார்ந்த கருத்துக்களுக்கும், நிலவிய சொத்து உறவுகளுக்கும் சவால்விட தயாராகியிருந்த ஒருவரின் படமாக தெரிகிறது. 1647இன் புட்னே விவாதங்களிலிருந்து, பொருளாதார சமத்துவமின்மை தவிர்க்கமுடியாமல் அரசியல் சமத்துவத்திற்குக் குழிபறிக்கும் பாதையானது, ஒரு தீர்க்க இயலாத பிரச்சினையாக இருந்து கொண்டிருந்தது. அதை Levellersக்கு (ஆங்கில உள்நாட்டு யுத்தத்தின் போதிருந்த ஓர் அரசியல் இயக்கம்) ஒருபோதும் தீர்க்க முடியாமல் இருந்தது. அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கு இடையிலான உறவு குறித்த இந்த பதினேழாம் நூற்றாண்டு விவாத சூழலில், சமத்துவம் குறித்த லோக்கின் விசாரணையை வால்ட்ரொன் களமிறக்குகிறார். ஒரு சமநிலையற்ற உடைமையின் பகிர்வானது, பணத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாதது என்று லோக் கருதுவதாக அவர் தீர்மானிக்கிறார். ஆனால் பெரிய நில பண்ணைகளை உருவாக்க உதவிய ஆங்கிலவாசிகளின் மரபுகளுக்கு லோக் எதிராக தான் இருந்தார். நிலத்தை மிக சமமாக பகிர்ந்தளிக்கும் ஒரு வழக்கமான, வாரிசுகளுக்குச் சொத்தைப் பகிர்ந்தளிப்பதை அவர் ஆதரித்தார்.

அவ்வாறே, லோகின் அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்களுக்கு அவரின் மத கருத்துக்கள் அடிப்படையாக இருக்கின்றன. “சமத்துவ கருத்திலிருந்து கடவுள் கருத்தைக் கட்டம் கட்டுவதென்பது” எவ்வகையிலும் பொருந்தாது என்று வால்ட்ரொன் வாதிடுகிறார். இது ஓரளவிற்கு உண்மை தான், லோக்கைப் பொறுத்த வரையில், மனித உயிர்கள் அனைத்தும் தெய்வீகமாக உருவாக்கப்பட்டிருப்பதால், அவை அனைத்தும் சமமாகும் என்பதன் அடிப்படையில் சமத்துவம் குறித்த கருத்து தர்க்கரீதியாக கடவுளிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால் லோக்கின் சிந்தனையிலிருக்கும் இறையியல் கருத்திலிருந்து சமத்துவத்தின் கோட்பாட்டை நம்மால் பிரிக்க முடியாது என்பதையா இது குறிக்கிறது? 1704இல் லோக்கின் மரணதிற்கு முன்னரே, First Treatise இல்லாமலேயே பிரான்சில் அவருடைய Two Treatisesஇன் பதிப்புகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இரண்டில் First Treatiseஇல் மதம் மிகவும் வெளிப்படையாக இருந்தது. இந்த பிரெஞ்ச் பதிப்பு தான் இறுதியாக அமெரிக்காவில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியானது. இந்த வகையில், ஆங்கில உள்நாட்டு யுத்தத்தின் கருத்துக்கள் அடிப்படையில் மதரீதியாகவும், அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் புரட்சிகளின் போது எழுந்த சமத்துவத்திற்கான மதசார்பற்ற தொடர் வாதங்களுக்கும் இடையில் நிற்கும் ஓர் இடைமருவு பிரபலமாகவும் லோக் விளங்குகிறார். “சமத்துவ கருத்திலிருந்து கடவுள் கருத்தைக் கட்டம் கட்டுவது” என்பது தான் நடைமுறையில் துல்லியமாக லோக்கின் தத்துவத்திற்கு ஏற்பட்டது.

சமத்துவம் குறித்த லோக்கின் தத்துவத்தை அதன் இறையியல் அடித்தளங்களிலிருந்து பிரித்துவிடக்கூடாது என்ற வால்ட்ரொனின் தீர்மானமானது, இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில் தாராளவாத சிந்தனையின் திசையை நோக்கி ஒரு பிரகாசமான வெளிச்சத்தை வட்டமிட்டுக் காட்டுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மரணமெய்திய அரசியல் தத்துவார்த்தவாதியான ஜோன் ராவ்ல்ஸ், யுத்தத்திற்குப் பிந்தைய காலம் முழுவதும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய ஓர் அரசியல் தத்துவத்தை லோக், ரூசோ, கான்ட் மற்றும் மில் ஆகியோரின் படைப்புகள் மீது தான் அபிவிருத்தி செய்தார். பொதுவான கருத்துக்கள் ஒன்றன்மேல் ஒன்று மோதிக்கொண்டிருக்கும் நிலைமை நிலவுகிறது என்பதால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களும், மதம் சார்ந்தவர்கள் அல்லது மதசார்பற்றவர்கள் அனைவரும், ஒன்றுகூடி நிறைவேற்றினால் சமத்துவத்திற்கான கோட்பாட்டை பாதுகாக்க முடியும் என்று அவர் எப்போதும் வாதிட்டார். அனைவருக்கும் ஒரு நீதியான உணர்வும், நன்மையைப் பற்றிய கருத்தும் இருப்பதால், மேலும் காரணத்தை எடுத்து கூறுவதற்கான திறமையும் அவர்களிடம் இருப்பதால் அனைவரும் சமமானவர்களே என்பது ராவ்ல்ஸின் கருத்து. [2]

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வாதத்தை தாம் ஏற்று கொண்டதாகவும், ஆனால் தற்போது அவரால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை என்றும், இதில் சமத்துவத்திற்கான கோட்பாட்டில் ஒரு மதமற்ற அடித்தளம் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் வால்ட்ரொன் எழுதுகிறார்.

இந்த மாற்றம், அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் பொதுவான ஒரு குறிப்பிட்ட இசைவை ஏற்றுக்கொள்ள ராவ்ல்ஸ் அல்லது வால்ட்ரொனுக்கு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதையே பிரதிபலிக்கின்றன. அவர்களின் நடைமுறை பயன்பாட்டில் கூர்மையான வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் முதன்மை அரசியல் வாழ்வில் சமத்துவம் போன்ற கோட்பாடுகள் வலதுசாரி மற்றும் இடதுசாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த நிலைமை இன்று இல்லை. சமத்துவத்திற்கான கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற ஊகத்தின்மீது ஒரு தாராளவாத அரசியல் மெய்யியலை நிறுத்துவது சாத்தியமில்லாமல் ஆகியிருக்கிறது.

சமத்துவத்திற்காக லோக் கண்டறிந்த இறையியல் அடித்தளம் நிச்சயமாக இருபதொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பொருந்தாது. அதாவது சமத்துவம் குறித்த பாரம்பரிய தாராளவாத தத்துவம் எப்போதும் வரவேற்கப்படுகிறது; இவ்வாறு அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான மதசார்பற்ற தத்துவத்தைக் கண்டறிய முயன்றது என்பது உண்மை தான். இன்றைய நிலைமையில், சமத்துவத்திற்கான ஒரு மத கருத்திற்குத் திரும்புவதற்கான முயற்சியானது, முழுவதுமாக மோசமடையச் செய்யக்கூடும்.

இன்றைய காலத்தில் சமத்துவத்திற்கான அடித்தளங்களை வால்ட்ரொன் ஆராயவில்லை அல்லது ராவ்ல்ஸின் முடிவற்ற ஆய்விற்கு மாறாக அதையும் விட சிறந்த அவருடைய ஒரு சொந்த தத்துவத்தையும் அவர் உருவாக்கவில்லை. இந்நிலையில், சமத்துவத்திற்கான கோட்பாட்டை நியாயப்படுத்துதல் என்பது ஏதோவொருவகையிலும் “ஆழமான மட்டத்தில்” இருக்க வேண்டும் என்று வால்ட்ரொன் அறிவுறுத்தும் போது, சிரமமான உணர்வைத் தான் அளிக்கிறது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனிநபர்களும் உள்ளார்ந்து மதிக்கப்பட்டார்கள், இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அவர்கள் உள்ளார்ந்து மதிக்கத்தக்கவர்களே என்பது அவருடைய புகழுக்காகவே அவர் வலியுறுத்துகிறார். ஆனால் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மத்தியில் வந்த ராவ்ல்ஸின் தாராளவாதத்தை நிராகரித்துவிட்டு, இந்த தீர்மானத்திற்கு உதவும் அனைத்து தத்துவார்த்த ஆதார புள்ளிகளிலிருந்தும் அவரை அவரே விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.

வால்ட்ரொனின் ஆழமான கவனிப்பு லோக்கின் சிந்தனையை ஒரு வரலாற்றுரீதியான சூழலில் அமைக்கிறது என்பதால், அது சில தீர்க்கமான பலன்களைக் கொண்டிருக்கிறது. ஒரு நீண்ட வரலாற்று காலக்கட்டத்தின் ஓர் ஆழமான விளக்கத்தைக் கொண்டிருக்கும் சமத்துவம் போன்ற ஒரு சிக்கலான கருத்துருவை வெளிப்படுத்துவதற்கும் அல்லது இதுபோன்றதொரு பிரபலமானவரை ஆராய்வதற்கும் இது போதாது. பரிணாமமோ அல்லது வரலாற்று விவாதங்களோ பரந்த சக்தியாக இல்லாதிருந்த லின்னேனியனுக்கும் முந்தைய, டார்வினியனுக்கும் முந்தைய ஓர் உலகில் லோக் எழுதினார் என்று லோக்கின் கருத்தைக் குறித்து வால்ட்ரொன் அவரே வலியுறுத்துகிறார். லோக்கின் மன உலகிற்குள் நம்மைநாமே கொண்டுசெலுத்துவது பெரும்பாலும் சிரமமாகும். அதேசமயம், கடந்த 300 ஆண்டு காலக்கட்டத்தின் வரலாற்றுரீதியான, பரிணாமரீதியான கருத்துருக்களுடன் மிக முழுமையாக நம்முடைய சிந்தனை கலந்திருக்கிறது என்பதால், லோக்கைப் புரிந்து கொள்வதென்பதும் மிகவும் அவசியமாகும்.

லோக் எடுத்துக்கூறாத வழியில், உயிரினங்கள் பரிணமித்து வருகின்றன என்றும், சமுதாயங்கள் பரிணமித்து வருகின்றன என்றும், கருத்துக்கள் பரிணமித்து வருகின்றன என்றும் நாம் கருதுகிறோம்.

எவ்வாறிருப்பினும், லோக்கின் மன உலகிற்குச் செல்ல செயற்கையாக நம்மைநாமே ஏன் வரையறைகளை வகுக்க வேண்டும், அவருடைய சிந்தனையைப் பற்றிய ஒரு புரிதலை எட்ட மிக நவீன புத்திஜீவிய சாதனங்கள் மொத்தத்தையும் நாம் ஏன் இழக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. விகோ மற்றும் ஹெர்டருக்கு முந்தைய உலகில், ஹெகல், டார்வின், மார்க்ஸிற்கு முந்தைய ஓர் உலகில் எழுதுகையில், சமத்துவம் குறித்த கோட்பாட்டின் ஒரு வரலாற்றுரீதியான புரிதல் லோக்க்கிற்கு கிடைக்கவில்லை, ஆனால் எமக்கு அது கிடைத்துள்ளது. சமத்துவம் என்பது தெய்வீக நெறிமுறையின் அடித்தளத்தில் அமைந்த ஒரு காலவரையற்ற கோட்பாடாகவும், ஒரு மாறாத மனித இயல்பாகவும் இருந்த லோக்கின் ஒரு-வரலாற்றுரீதியான உலக கண்ணோட்டத்தைத் தாண்டி வந்து, லோக்கோ அல்லது வால்ட்ரொனோ நமக்களிப்பதை விட ஒரு சிறந்த வரலாற்று அணுகுமுறையை நாம் கைக்கொள்ள வேண்டியுள்ளது.

லோக்கின் இறையியல் தத்துவம் இன்றைய காலக்கட்டத்திற்குப் பொருந்தாது என்பது மட்டும் பிரச்சினையல்ல, மாறாக பதினேழாம் நூற்றாண்டிலேயே கூட அது மெய்யியல் ரீதியாக பொருந்தாமல் தான் இருந்தது. கடவுளைப் பற்றிய கருத்துக்கள் ஒருபோதும் மெய்யியலின் ஒரு வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால், அவை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றப்படுகின்றன. ஜோன் லோக்கின் மனதில், கடவுள் தான் அனைத்து மக்களையும் சமமாக படைத்திருக்கிறார் என்பதாக இருக்கலாம். ஆனால் தங்கள் மக்கள்மீது ஆட்சி செலுத்துவதற்கான ஒரு தெய்வீக உரிமையை அரசர்களிடம் கடவுள் அளித்திருப்பதால், அவர் சமத்துவமின்மையை ஏற்படுத்தி இருப்பதாக, அவருடைய சமகாலத்தியவர்கள் பலர் முழுமையாக கருதினார்கள். அப்படியானால் பின்னர் ஏன் சமத்துவம் குறித்த தத்துவம் இத்துணை சக்திவாய்ந்ததாக ஆனது?

பல சிறந்த மனிதர்களின் அனுபவங்களில் சமத்துவம் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியதால், அது ஒரு சுய-ஆதார கருத்தாக மட்டுமே ஆகியிருக்கிறது. ஆழமான சமூக-பொருளாதார பிரிவுகளைக் கொண்டிருந்த, பெரும்பான்மையான மக்களின் தினசரி அனுபவம் சமத்துவத்தை அல்லாமல் சமத்துவமின்மையைக் கொண்டிருந்த, வரம்பிலா முடியாட்சிகளின் (monarchies) ஆதிக்கத்திலிருந்த ஓர் உலகத்தில் இது வித்தியாசமாக தோன்றலாம். நிலச்சுவான்தார்-வாடகைதாரர், எஜமான்-ஏவலர், அரசர்-குடிமக்கள்—இது தான் பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையிலிருந்த உறவுமுறையாக இருந்தன. லோக் காலனிய கரோலினாவின் (colonial Carolina) அரசியலமைப்பு சாசனத்திற்கு உதவிய போது, நிலவுடைமைக்கு சாதகமான அரசியல் உரிமைகளைக் கொண்டிருந்த, அடிமைமுறையை சட்டரீதியாக அங்கீகரித்த ஓர் அமைப்புமுறையைத் தான் அவரே கூட ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்த சமுதாய உண்மைகளுக்கு இடையில், சமத்துவம் குறித்த கருத்து ஆழமான வேர்களையும், ஒரு சிக்கலான வரலாற்றையும் கொண்டிருக்கிறது. அது தாமஸ் அக்யூனஸினால் (இத்தாலிய பாதிரியார்) உருவாக்கப்பட்ட இயற்கை உரிமைகள் இறையியலின் (natural rights theology) உத்தியோகப்பூர்வ கிறிஸ்துவ சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகவும், ப்லிபியன் ஹெரிசி மற்றும் கிளர்ச்சியாளர்களின் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகவும் இரண்டுமாகவும் எப்போதும் ஓர் இரட்டை வாழ்க்கையைக் கொண்டிருக்கிறது.

பிரெஞ்சு மத யுத்தங்கள் (1562-98) செய்ததைப் போன்றே, 1516ஆம் ஆண்டு சீர்திருத்தமும், ஜேர்மன் விவசாயிகள் யுத்தமும் (1524-6) அதற்கு ஒரு சக்திவாய்ந்த உந்துதலை அளித்தது. அனைவரும் சமமாக இருந்ததைப் போன்றே, ஒவ்வொருவரையும் சமமாக பாவிப்பதே சமுதாய அமைதியைத் தக்கவைப்பதற்கான ஒரே வழி என்பது முப்பது ஆண்டு யுத்தங்களிலிருந்து (1618-48) பெற்ற படிப்பினைகளில் ஒன்றாக இருந்தது. ஐரோப்பிய காலனிய விரிவாக்கத்தோடு இணைந்த இந்த அரசியல் அனுபவங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளின் பாதிப்புகளின் கீழ், இயற்கைச்சட்டம் மற்றும் இயற்கை உரிமை குறித்த பழைய மேதைமைவாய்ந்த தத்துவங்கள் தூசித்தட்டப்பட்டு, ஒரு புதிய வடிவத்தில் கொண்டு வரப்பட்டன. இவை சமத்துவம் குறித்த அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்ப்பு காட்டுவதற்கான ஆக்கப்பூர்வமான உரிமை ஆகியவற்றை பெருமளவிற்கு வலியுறுத்தின.

லோக்கின் Two Treatisesஇல் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் கருத்துக்கள், அரசர் முதலாம் சார்லஸிற்கு எதிரான போராட்டத்தின் போது நடைமுறையில் ஒழுங்கற்ற விதத்தில் எழுந்திருந்த எதிர்ப்பு மற்றும் சமத்துவம் குறித்த கோட்பாடுகளின் ஒரு தொகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. 1660இல் முடியாட்சியை மீண்டும் நிறுவிய பின்னர், அவர்கள் தொடர்ந்து ஓர் இணைவைத் தக்க வைத்திருந்தார்கள். பதினான்காம் லூயிஸிடமிருந்து மானியங்களைப் பெற்று வலுப்படுத்தியதுடன், அரசர் ஒரு வரம்பற்ற ஆட்சியாளர் திசையில் நகர்வது தெளிவான போது, இரண்டாம் சார்லஸ் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கத் துணிந்தார். அத்துடன் ரோமன் கத்தோலிக்கராக இருந்த அவருடைய சகோதரர் இரண்டாம் ஜேம்சை அரசுரிமை வாரிசாக அறிவித்தார். மத ஆணைகள் தங்களின் வர்க்க அந்தஸ்த்தை பறித்து கொண்டு, தங்களை அலுவலத்திலிருந்து விரட்டிவிடும், அதோடு மேரி டூடரின் கீழ் செய்தது போல தாங்களும் சித்திரவதைச் செய்யப்படலாம் என்று அஞ்சிய புரோடெஸ்டண்ட் ஆங்கிலேயர்களின் வாழ்வையும், சுதந்திரங்களையும், உடைமைகளையும் இது நேரடியாகவே அச்சுறுத்தியது.

இந்த நிலைமைகளின்கீழ், மிகத்தீவிர நகர்புற கைவினைஞர்களுடன் இணைந்த செல்வவளமிக்க வியாபாரிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கூட்டணி, மீண்டும் எழுச்சி பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. Whigs என்று அழைக்கப்பட்ட இந்த உறுதியற்ற இயக்கத்தில் லோக் மிகவும் ஈடுபட்டிருந்தார்.

அரசுக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஆக்ஸ்போர்டில் ஸ்டீபென் காலெஜ், “Whig உறுப்பினர்”, ஆயுள் தண்டனையில் இருந்த போது, அவருக்காக சட்டரீதியாக உதவியது லோக்கின் நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாகும். அமெரிக்க புரட்சியில் ஒரு தாக்கத்தைக் கொண்டிருந்த அல்ஜெர்னன் சிட்னியின் Discourse Concerning Government என்பதைச் சேர்த்த மொத்த Whig இலக்கியத்தின் ஒரு பகுதியாக Two Treatises இருந்தது. தேசதுரோக குற்றத்திற்காக சிட்னி குற்றஞ்சாட்டப்பட்டு, Discoursesஇல் அவர் வெளியிட்டிருந்த வலிமையான கண்ணோட்டங்களில் அவருக்கிருந்த ஈடுபாட்டிற்காக தூக்கிலிடப்பட்டார். ஆனால் லோக் மிகவும் அதிஷ்டசாலி, அவர் இதேபோன்ற கருத்துக்களை Two Treatisesஇல் வெளியிட்டிருந்தார்.

செல்வவளமிக்க வியாபாரிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் பிரத்யேக செய்திதொடர்பாளராக தான் லோக் நினைக்கப்படுகிறார். ஆனால் பணக்காரர்களின் உபரியிலிருந்து தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளும் உரிமை ஏழைகளுக்கு இருக்கிறது என்ற அவருடைய கருத்து, முதலாளித்துவ பொருளாதாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த கருத்துக்களோடும் பொருந்துவதாக இல்லை. நிச்சயமாக, இந்த தனிச்சலுகைப் பெற்ற குழுக்களின் ஒரு செய்திதொடர்பாளராக தான் லோக் இருக்கிறார். ஆனால் அதேநேரத்தில் உழைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் மத்தியிலிருக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் அவர் பேசுகிறார். Levellers உடன் இணைந்து லோக்கை வால்ட்ரொனும் சரியாக அடையாளம் காண்கிறார். உண்மையில், பொதுவான நிலங்களை உழுவதற்கு ஏழைகள் அனுமதிக்கப்பட வேண்டும்; பணக்காரர்கள் அவர்கள் பயன்பாட்டிற்கும் அதிகமாக இருப்பதைக் கொடுத்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதில் மிக தீவிரத்தன்மை கொண்ட Diggers களை விட (member of a group of radical dissenters formed as an offshoot of the Levellers, believing in a form of agrarian communism), லோக் தூரத்தில் இல்லை.

இங்கிலாந்தில் பதினேழாம் நூற்றாண்டு மத்தியிலும், பின்பகுதியிலும் வரம்பற்ற ஆட்சிவாதம் (absolutism) இணைந்து எதிர்த்த வர்க்கங்களின் கூட்டணியை லோக்கின் அரசியல் கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. இந்த வர்க்கங்கள் உள்ளார்ந்து பொருத்தமற்ற நலன்களைக் கொண்டிருப்பதாக நாம் கூறலாம், ஆனால் லோக் அவ்வாறு கூறவில்லை. அவர் வர்க்க நலன்களுக்கு இடையிலான ஓர் சமரசத்தை – ஆனால் விரைவிலேயே நிலைநாட்ட முடியாமல் போன அதை – எடுத்துக்காட்டினார்.

ஒப்பீட்டுவகையில், குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்த கட்சியாக, ஓர் ஊழல் அமைப்பின் மூலமாக அதிகாரத்தை நிர்வகித்த கட்சியாக Whigs(the British reforming party that sought the supremacy of Parliament, succeeded in the 19th century by the Liberal Party) உருவானது. அவர்களின் கடந்தகால புரட்சியானது, ஆங்கிலேயர்களின் பண்டைய உரிமைகளின் குறிப்பாக ஒருகாலத்தில் சொந்தமாக இருந்தவை மாற்றப்பட்டது. பெரும்பாலும் இந்த இரண்டாம் கட்ட Whig பாரம்பரியத்துடன் இணைத்து லோக் அடையாளம் காணப்படுகிறார், ஆனால் ஒரு பண்டைய அரசியலமைப்பின்கீழ் குறிப்பிட்ட உரிமைகளை ஆங்கிலேயர்கள் கோரலாம் என்ற அடித்தளங்களில் அவர் ஒருபோதும் புரட்சியை நியாயப்படுத்த முயலவில்லை. The Two Treatisesஇல் உள்ள அவருடைய வாதங்கள் எப்போதும் இயற்கையாகவே பிரபஞ்சத்தன்மையோடு (universalist) உள்ளன. மேலும் அவை தனியுரிமை, தனிச்சலுகை பெற்ற பண்டைய அரசியலமைப்பு பாரம்பரியத்தைச் சார்ந்தில்லாமல், இயற்கையான உரிமைகளின் அறிவொளி பாரம்பரியத்தை நோக்கியே குறிப்பிடுகின்றன. ஆங்கில உள்நாட்டு யுத்தத்தின் மத சித்தாந்தங்களுக்கும், பிந்தைய அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் புரட்சிகளுக்கு இடையிலான இடைமருவுதலை அவர் துல்லியமாக இணைக்கிறார் என்பதால், இயற்கை உரிமைகளின் பிந்தைய தத்துவங்களில் இருந்ததை விட, லோக்கின் வாதங்கள் அவற்றின் இறையியல் தன்மையில் மிகவும் தொலைவில் இருக்கின்றன. அதாவது ஒருவேளை கடவுள் தோன்றுகிறார் என்றாலும் கூட, அது “இயற்கை கடவுள்” என்ற பொய்தோற்றத்தில் இருக்கும் என்கிறார்.

God, Locke and Equality புத்தகம் லோக் சிந்தனையின் தீவிரத்தன்மையையும், ஒரு புரட்சிகர பாரம்பரியத்துடனான அவரின் தொடர்பையும் அங்கீகரிப்பதால் சமத்துவம் குறித்த நவீன கருத்தின் மூலங்களைப் பற்றிய ஆதாரங்கள் மீதான விவாதத்திற்கு இப்புத்தகம் ஒரு மதிப்பார்ந்த பங்களிப்பாக உள்ளது. ஆனால் இதை மேலும் எடுத்துச்செல்ல வேண்டிய தேவை உள்ளது.

லோக்கின் காலத்திய மரபார்ந்த சிந்தனையாளர்களுக்குத் திருப்தியளிக்காத ஒரு கருத்தாக இருந்த கடவுளைப் பற்றிய அவருடைய கருத்து, ஒரு மெய்யியல் கலவையாக இருந்தது—அதைப் பிரித்து பார்த்தால், சில மிகவுயர்ந்த வரலாற்று விஷயங்கள் அதில் அடைக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். அதில் ஐரோப்பிய யுத்தங்களின் வரலாற்றையும், மத மோதல்களையும் மற்றும் புரட்சிகளையும் அவருடைய சிந்தனையில் ஆக்கிரமித்திருந்ததை நாம் அறியலாம். அதுமட்டுமின்றி, அரசியல் மற்றும் மத பிரச்சினைகளுக்கு ஓர் மானிடவியல் அணுகுமுறையைக் கையாள அவரை ஊக்குவித்த அக்காலத்திய புதிய விஞ்ஞான அபிவிருத்திகளையும் காணலாம். ஆனால் பேராசிரியர் வால்ட்ரொன் இவற்றை மூடிவைத்துவிட்டார்.

Notes:
[1] C. B. Macpherson, The Political Theory of Possessive Individualism pp.232.
[2] John Rawls, Political Liberalism, p19