World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்Sarkozy proposes total ban on the burqa in France பிரான்ஸில் பர்க்காவிற்கு முழுத் தடையை சார்க்கோசி முன்வைக்கிறார் By Antoine Lerougetel பிரெஞ்சு மந்திரி சபையின் ஏப்ரல் 21ம் திகதிக் கூட்டத்தில் பொது இடங்களில் பர்க்கா அல்லது நிகப் என்னும் முழு முகத்தை மறைக்கும் அங்கியை அணிவதைத் தடுப்பதற்கு ஒரு சட்டவரைவு கொண்டுவரப்பட உள்ளது, அது மே மாதம் மந்திரி சபை முன் வைக்கப்படும் என்று ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அறிவித்தார். இந்தச் சட்டவரைவு ஜனநாயக உரிமைகளின் மீது ஒரு அப்பட்டமான தாக்குதல் ஆகும். பிரான்ஸை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியை நோக்கித் தள்ளுவது ஆகும். அத்தகைய சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது, ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கையை மீறியது என்று தள்ளப்படும் வாய்ப்பு இருந்தாலும் கூட, அரசாங்கம் இச்சட்டவரைவை விரைவில் இயற்றும், என்று பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் கூறினார். "சட்டபூர்வ இடையூறுகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம், ஏனெனில் இதன் பணயங்கள் மதிப்புடையவை" என்றார் அவர். மேலும், "இன்றைய சமூகத்திற்கு பொருந்தாத ஒரு சட்டம் பற்றி நிதானம் என்று நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ...பிரெஞ்சு அரசியலமைப்புச் சபை மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை மாற்ற வேண்டும் என்றால், அவ்வாறு செய்தல் நம் பொதுக் கடமையாகும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார். மார்ச் 30 அன்று நாட்டின் மிக உயர்ந்த நிர்வாக நீதிமன்றமான அரச சபை (State Council) பர்க்கா அணிவதற்குத் தடை விதித்த ஒரு சட்டத்திற்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறும் தகுதியுடைய தீர்ப்புக்களை எழுதிய அச்சபை, "அதன் அறிக்கையில் முழு முகத்தை மறைக்கும் மறைப்பு எவ்வித தடையற்ற சட்டத் தளத்தில் இருந்தும் நலன்களை அடையாது" என்று Le Point எழுதியது. "முழு முகத்தை மறைக்கும் பர்க்காவை அணிவது பொதுத் தடைக்கு உட்படுவது, அல்லது எவ்விதத்திலும் ஒருவர் முகத்தை மறைப்பது என்பது பொது இடத் தன்மையைப் பெற்றுள்ளது, தீவிர இன்னல்களுக்கு உட்படக்கூடும், அரசியலமைப்பு வகையிலும், ஐரோப்பிய மனித உரிமைகள் வகையிலும்" என்றும் அது சேர்த்துக் கொண்டது. அரச சபை (State Council) ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கை விதிகளைப் பின்பற்றி, அதன் 9வது விதியான "சிந்தனை, மனச் சாட்சி, மத சுதந்திரங்கள்" என்பதைக் கருத்தில் கொண்டுள்ளது. அது கூறுவதாவது: "சுதந்திரமான சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரம் உண்டு. இதில் ஒருவருடைய மதம், நம்பிக்கை ஆகியவற்றை மாற்றும் சுதந்திரமும் உண்டு. தனியாகவோ, மற்றவர்களுடன் சமூகத்திலோ, அந்தரங்கமாகவோ, பகிரங்கமாகவோ, தன் மதம், நம்பிக்கை, வழிபாடு, கற்பித்தல், செயற்படுதல், கடைப்பிடித்தல் என்ற சுதந்திரங்களும் உண்டு" பிரெஞ்சு அரசாங்கம் இருக்கும் சட்டத்திற்குத் தான் இனி கீழ்ப்படிய வேண்டிய தேவை இல்லை என்று நினைப்பதைத்தான் பியோனுடைய அறிக்கைகள் உட்குறிப்பாகக் காட்டுகின்றன. மாறாக, அது ஒரு வலதுசாரி அரசியல் சூழ்நிலையைத் தூண்டுகிறது. இதில் முஸ்லிம்கள் அரசியலளவில் பாதிக்கப்படலாம். அரசியல் ஸ்தாபனத்தினால் உகந்தது அல்ல என்ற கருத்துக்களை உடைய எவரும் திறமையுடன் சட்டத்திற்குப் புறத்தே நிறுத்தப்படலாம். அத்தகைய ஒரு விவகாரத்தில், உள்துறை மந்திரி Brice Hortefeux, Lies Hebbadj என்னும் முஸ்லிம் நபரை பலதாரத் திருமணக் குற்றத்திற்கு உட்படுத்தி, ஒரு தீவிர இஸ்லாமியக் குழுவில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது அவருடைய மனைவி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் 22 யூரோக்கள் அபராதத்தை நிகப் அணிந்து கார் ஓட்டியதற்கு கொடுக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்துப் பேசிய பின் வந்துள்ளது. ஆனால் Nantesல் உள்ள அரசாங்க வக்கீல் Le Monde இடம் பிரான்ஸில் பலதாரத் திருமணம் குற்றம் என்றாலும், ஹெப்பாஜியின் குடும்பத்திற்கு எதிரான ஒரே தற்போதைய குற்றச்சாட்டு போக்குவரத்து விதியின்படியான அபராதம்தான் என்று உறுதிபடுத்தினார். Horgefeux ன் கூற்றுக்களில் உண்மை எப்படி இருந்தாலும், பிரான்ஸில் உள்ள முஸ்லிம்களை அரசியல் அளவில் இலக்கு வைத்து மிரட்டுவது அரசாங்கப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தெளிவாக உள்ளது.அரசாங்கம் இச்சட்டத்தை பர்க்கா அணிந்துள்ள பெண்களால் வரக்கூடிய ஆபத்துத் திறனை ஒட்டி சுமத்துகிறது என்ற கூற்று பிற்போக்குத்தனமானது, எள்ளி நகையாடக்கூடியது. பரந்த அளவில் பார்த்துள்ளபடி 5 மில்லியன் முஸ்லிம்களுக்கு மேல் இருக்கும் தொகுப்பில் 2,000 க்கும் குறைவான பெண்கள் தான் முழு முகத்தை மறைக்கும் உடுப்பை அணிகின்றனர். முதலாளித்துவ செய்தி ஊடகம், செல்வம் படைத்த செளதிக்களுடைய மனைவிகள், பாரிஸின் Champs-Elysees ல் பொருட்களை வாங்கும்போது என்ன நடக்கும் என்று கேட்டுள்ளது. பாராளுமன்ற ஆணைக்குழுவின் பர்க்கா பற்றித் தகவல் கொடுப்பவர் எந்த விதிவிலக்குகளும் இராது என்று ஆவேசமாகக் கூறினார். பர்க்கா-எதிர்ப்புச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை எனக் கூறப்படுவது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற சிந்தனைப் போக்கை ஒட்டியுள்ளது--அது உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கு ஒரு மறைப்பாக உள்ளது. மக்கள் எதிர்க்கும் ஆப்கானிஸ்தானில் இகழ்வான நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு ஒரு நம்பகத்தன்மை கொடுக்கும் வடிவமைப்பையும் இது கொண்டுள்ளது. அங்கு பிரான்ஸ் கிட்டத்தட்ட 3,000 துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளது. சார்க்கோசி வலதிற்குப் பாய்வது என்பது ஆளும் UMP (Union for a Popular Movement) கடந்த மாத பிராந்தியத் தேர்தல்களில் தோற்று, சார்க்கோசி பற்றிய மதிப்பீட்டுத் தரங்கள் முன்னோடியில்லாத குறைவான 35 சதவிகிதம் உள்ள நிலையில் வந்துள்ளது. கணிப்பில் கலந்து கொண்ட 70 சதவிகிதத்தினர் அவருடைய ஆட்சித் தன்மையை ஒப்புக் கொள்ளவில்லை, 60 சதவிகிதத்தினர் அவருடைய கொள்கைகளை எதிர்க்கின்றனர். குறிப்பாக, சார்க்கோசியின் பர்க்கா-எதிர்ப்புச் சட்ட திட்டங்கள் அவருடைய வலதுசாரி "தேசிய அடையாள" விவாதம் பற்றிய பெரும் விருப்பமின்மையை மீறி வந்துள்ளது. அந்த விவாதத்தை சார்க்கோசி பிராந்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொடக்கி வைத்திருந்தார். இச்சூழ்நிலையில் அவர் தனக்கு எஞ்சியிருக்கும் அரசியல் ஆதரவை, புதிய பாசிச வகையிலான இனவெறி, இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவை பாதகாக்கப்பட, வறிய புறநகர் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட இளைஞர்கள் மீது தாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிலைநிறுத்த முற்பட்டுள்ளார். சார்க்கோசியும் பியோனும் ஐரோப்பிய அரசியல் உயரடுக்கு நடத்தும் இனவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தின் தலைமையை பிரதிபலிக்கின்றனர். அதன் சரிவிற்கு சற்று முன், பெல்ஜிய பாராளுமன்றம் இதே போன்ற ஒரு தேசிய சட்டத்திற்கு வாக்களிக்க தயாராக இருந்தது. ஏற்கனவே பல பெல்ஜிய நகர சபைகளில் அனைத்துக் கட்சிகள் உடைய ஆதரவுடன் அத்தகைய விதிகள் உள்ளன. இத்தாலியில் பல வடக்கு நகரங்கள் ஏற்கனவே பர்க்காவை தடை செய்து விட்டன. ஜேர்மனிய நகர சபைகளும் இஸ்லாமிய தலை மறைப்புக்களை பள்ளிகளில் தடைசெய்ய தயாராகின்றன. சுவிட்ஸர்லாந்தில் இஸ்லாமிய மசூதிக் கோபுரங்களை கட்டுவதற்கு எதிராக ஒரு வெற்றிகரமான வாக்கெடுப்பு நடந்தது. பர்க்கா, நிகப் அணியும் பெண்களை இழிவென முத்திரையிடுவதும் பிரான்ஸ் அதன் முன்னாள் மக்ரெப் காலனிகளில் (மொராக்கோ, அல்ஜீரியா, துனிசி) உள்ள அடக்குமுறைகளுக்கு ஆதரவைக் கொடுப்பதின் அடையாளம் ஆகும். இவைகள் பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு முக்கியமான பகுதிகள் ஆகும். இவை அனைத்தும் இஸ்லாமிய இயக்கங்களின் அச்சுறுத்தலில் உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் தலைமை இல்லாத நிலையில், அடக்குமுறை, வறுமை இவற்றிற்கு எதிரான வெகுஜன அமைதியின்மையைப் பயன்படுத்தி அதிகாரத்திற்கு வரக்கூடும். சார்க்கோசியின் சட்டம் "இடது" என்று போலியாக கூறிக்கொள்ளும் சக்திகளின் ஆதரவால்தான் இயற்றப்பட முடியும். அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பு இல்லாதது தான் சார்க்கோசியையும் பியோனையும் இத்தகைய ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான மிருகத்தன நடவடிக்கைகளை எடுக்க ஊக்கம் கொடுத்துள்ளது. இது பொலிஸ்-அரச ஆட்சியை நோக்கி வைக்கப்படும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை பிரதிபலிக்கிறது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, André Gerin, கடந்த ஆண்டு பர்க்கா முறையை நசுக்குவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர், RTL ரேடியோவில் கூறினார்: "பாராளுமன்ற ஆணைக்குழுவின் முடிவின் தொடர்ச்சியாக இதை அரசாங்கம் எடுத்துள்ளது பற்றி நான் களிப்படைகிறேன்" என்றார். "இத்தடையைப் பற்றி முக்கியமானது என்ன என்றால், இது புறநகர்ப்பகுதிகளில் வாழ்க்கை மோசம் செய்யும் அடிப்படைவாத குருக்களை இரக்கமின்றி தடைக்கு உட்படுத்தும்" என்று அவர் வலியுறுத்தினார். முக்கிய முதலாளித்துவ எதிர்க் கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) கொள்கை அளவில் பர்க்கா அணியும் பெண்களின் குடி உரிமைகளை தாக்குவதற்கு ஆதரவு தருகிறது. இப்பிரச்சினையில் PS ன் செய்தித் தொடர்பாளரான Axel Urgin, PS "பூசலுக்கு உரிய சட்டமியற்றுதலுக்கு எதிரானது", ஆனால் பர்க்கா அணிவதை தடுப்பதற்கு சட்பூர்வ வழிவகைகளை ஆராய்வதற்கு தயார் என்று கூறினார். சார்க்கோசியின் கொள்கைகள் பற்றி PS ஆனது தயக்கம் காட்டுகிறது என்றால், அது முழுத் தடையாக இருந்தால் ஆபத்தான சமூக அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் தான். பிரான்ஸ் இன்டர் ரேடியோவில் PS தலைவர் Pierre Moscovici பர்க்கா மீது முழுத் தடை "பல மத, வகுப்புவாத பூசல்களைப் புதுப்பிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது" என்றார். PS, PCF , LO (தொழிலாளர்கள் போராட்டம்) மற்றும் NPA எனப்படும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முன்னோடியான Ligue Communiste Revolutionnaire (LCR) அனைத்தும் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய தலை மறைப்பை பள்ளிகளில் அணிவதை தடுக்கும் 2004ல் வெளிவந்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தன. திட்டமிடப்படும் சட்டத்திற்கு எதிராக NPA ஒரு சிறிய அறிக்கையை வெளியிடுவதற்கே பல மாதம் காத்திருந்தது. ஆனால் அதற்கு எதிராக பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை. |