World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European officials demand new cuts following Greek bailout request

ஐரோப்பிய அதிகாரிகள் கிரேக்க பிணை எடுப்பு கோரிக்கையை தொடர்ந்து புதியவெட்டுக்களை கோருகின்றனர்

By Alex Lantier
26 April 2010

Use this version to print | Send feedback

ஒரு கூட்டு ஐரோப்பிய ஒன்றிய (EU), சர்வதேச நாணய நிதிய (IMF) பிணை எடுப்பு உதவிக்கு பரிமாற்றாக ஏதென்ஸிடமிருந்து ஐரோப்பிய அதிகாரிகள் இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளைக் கோருவர் என்று சமிக்கை காட்டியுள்ளனர். கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜியஸ் பாப்பாண்ட்ரூ சம்பிரதாயமாக ஏப்ரல் 23ம் தேதி பிணை எடுப்புப் பொதியைக் கோரியிருந்தார். முன்பு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள ஒரு திட்டத்தின் படி EU, IMF இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து ஏதென்ஸுக்கு கிட்டத்தட்ட 45 பில்லியன் யூரோக்களை கடனாக கொடுக்கும். இது அரசாங்கக் கடனாக இருக்கும் 300 பில்லியன் யூரோக்களைத் திருப்பிக் கொடுப்பதில் தாமதத்தைத் தவிர்க்க உதவும்.

ஈஜியன் கடலில் துருக்கியக் கடலோரப் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள தொலைதூர கிரேக்கத் தீவு ஒன்றான காஸ்டெல்லோரிசியோவில் இருந்து கொண்டு பாப்பாண்ட்ரூ சம்பிரதாயமாக பிணை எடுப்புப் பொதியைக் கோரினார். அதற்கு முந்தைய தினம் அவர் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரான ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ஜாபடெரோ மற்றும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெலுடன் தொலைபேசித் தொடர்பு கொண்டிருந்தார். வெள்ளியன்று பாப்பாண்ட்ரூ துருக்கியப் பிரதம மந்திரி Recep Tayyip Erdogan உடன் பேசியதாகவும் தெரிகிறது.

காஸ்டெல்லோரிசா 19ம் நூற்றாண்டில் கிரேக்கக் கப்பல் வணிகத்தின் மையமாக இருந்தது. இப்பொழுது அங்கு 500 பேர்தான் வசிக்கின்றனர். அமெரிக்கா முன்பு கிரேக்கத்தை இத் தீவைத் துருக்கிக்கு கொடுப்பது பற்றி பரிசீலிக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அதையொட்டி கிரேக்க-துருக்கி உறவுகள் மேம்பாடு அடையும் என்றும் கூறப்பட்டது. பாப்பாண்ட்ரூவின் உதவியாளர்கள் மே 14-15 தேதிகளில் எர்டோகனுடன் பேசுவதற்கு முன் காஸ்டெல்லோரிசாவிற்கு பயணிக்க விரும்பியதாகக் கூறினர்.

கிரேக்க செய்தித்தாள்கள் வெள்ளியன்று எர்டோகன் பாப்பாண்ட்ரூவிற்கு நிதி உதவி அளிக்க முன்வந்ததாக தெரிவித்துள்ளன. பாப்பாண்ட்ரூ "கனிவுடன் ஏற்க மறுத்துவிட்டார்" என்றும் இத்தகவல்கள் கூறுகின்றன. துருக்கிய அதிகாரிகள் இத்தகவலை மறுத்து நிதிய உதவி பற்றி ஏதும் "உறுதியாக விவாதிக்கப்படவில்லை" என்றனர்.

பிணை எடுப்புக் கோரிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர், ஏதென்ஸில் 2,500 ஆர்ப்பாட்டக்காரர்களும், தெசலோனிகியில் நூற்றுக்கணக்கான அணிவகுப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸுடன் மோதினார்கள். "முதலாளித்துவம் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும்", "IMF , திரும்பிச் செல்க" என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.

பாப்பாண்ட்ரூவின் அரசாங்கமானது IMF, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் ஐரோப்பிய ஆணையத்துடன் இந்த ஆண்டு, மற்றும் 2011, 2012 ஆண்டுகளில் செயல்படுத்த இருக்கும் கூடுதல் வெட்டுக்கள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன் பிறகு பிரதம மந்திரி, IMF உடன் "விருப்பக் கடிதம்" ஒன்றில் கையெழுத்திடுவார். அதில் கிரேக்கம் பல ஆண்டுகள் கடைபிடிக்க உள்ள சிக்கன நடவடிக்கை பற்றிய உறுதிப்பாடு இருக்கும். இதை IMF ஒப்புதலுக்குப் பரிசீலிக்கும். ஐரோப்பிய ஒன்றிய-IMF திட்டத்திற்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளர் பின்னர் கிரேக்கம் எப்படி வெட்டுக்களை செயல்படுத்துகிறது என்பதின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள்.

மே 19ம் தேதிக்குள் கிரேக்கம் 8.5 பில்லியன் யூரோக்கள் கடன்களைப் புதுப்பிக்க வேண்டும். கிரேக்கமானது தான் வாங்கும் புதுக் கடன்களுக்கு அதிக வட்டி கொடுப்பது விரைவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது--கடந்த வார இறுதியில் இது 2 ஆண்டுக் கடன் பத்திரத்திற்கு 10.23 சதவிகிதம் என்றும் 10 ஆண்டுக் கடன் பத்திரத்திற்கு 8.67 சதவிகிதம் என்றும் நிறைவுற்றிருந்தது. பாப்பாண்ட்ருவும் நிதியச் சந்தைகளும் கிரேக்க மக்கள் மீது இன்னும் அதிக வெட்டுக்களை ஏற்குமாறு பெரும் அழுத்தம் கொடுக்கின்றன. கிரேக்க வாராந்திர ஏடு Proto Thema ஆனது 23 சதவிகிதத்தினர் தான் பாப்பாண்ட்ரூவின் கொள்கைக்கு ஆதரவு தருவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுவதாகத் தெரிவித்துள்ளது. கலந்து கொண்டவர்களில் 65 சதவிகிதத்தினர் பாப்பாண்ட்ரூ கிரேக்கப் பொருளாதாரத்தின் நிலை பற்றி மக்களிடம் தவறாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.

கிரேக்கம் ஏற்கனவே சமூக நலச் செலவுகளை 10 சதவிகிதம் வெட்டியும், ஓய்வூதிய வயதையும் 2 ஆண்டுகள் அதிகரித்தும், பொதுச் சேவை ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தையும் நீக்கிவிட்டது.

இந்த வெட்டுக்கள் அரசாங்கத்தின் வரித்தள அளவைக் குறைப்பதால், ஏதென்ஸ் போதுமான வருவாயை கடனைத் திருப்பிக் கொடுப்பதைத் தாமதப்படுத்தாமல் இருப்பதற்கு எழுப்ப முடியுமா என்பது தெளிவாக இல்லை. Societe Generale வங்கியின் வெளிநாட்டு நாணய மாற்றுவிகிதம் மற்றும் வட்டி விகிதத்தில் வல்லுனரான Vincent Chaigneau கூறினார்: "45 பில்லியன் யூரோப் பொதி கிரேக்கத்தை குறைந்தது 15 மாதங்களுக்கு பிரச்சினை இல்லாமல் செய்யும். கடன் மற்றும் பின்னர் தாமதத்திற்கான மறுகட்டமைப்பைத் தவிர்க்கும் திறனையும் உடையது. ஆனால் கடனை தீர்க்கும் இயங்குமுறை இயக்கப்பட்டாலும், அவர்கள் ஒரு பேராபத்து கொடுக்கக்கூடிய ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்க முடியுமா என்பது வினாவிற்கு உரியதுதான்."

கிரேக்கத்திடம் கோரப்படும் முழு வெட்டுக்களை ஐரோப்பிய, IMF அதிகாரிகளுடன் நடக்கும் பேச்சுக்கள் முடிவிற்கு வருவதற்கு முன் தெரியவராது. ஆனால் கடந்த கால அனுபவமானது அவர்கள் பெரும் வெட்டுக்களை விரும்புவார்கள், அவை நாட்டை வறிய நிலைக்குத் தள்ளி, பல தசாப்தங்கள் பின்னோக்கிச் செல்லுமாறு செய்துவிடும் என்று தான் காட்டுகின்றன.

லாட்வியாவிற்கான ஒரு சமீபத்திய IMF பிணை எடுப்புப் பொதியில் பொதுத்துறையில் 45 சதவிகித ஊதிய வெட்டுக்களும், தனியார் துறையில் 5 முதல் 30 வெட்டுக்களும் அடங்கியுள்ளது. லாட்வியாவின் பொருளாதாரம் இத்தகைய வெட்டுக்களின் கனத்தினால் தொடர்ந்து சுருங்குகிறது.

ஐரோப்பிய அதிகாரிகள் ஏப்ரல் 24 அன்று வாஷிங்டன் D.C. யில் நடந்த G20 உச்சிமாநாட்டிற்குப் பிறகு இன்னும் கூடுதலான வெட்டுக்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ஜேர்மன் நிதி மந்திரி வுல்ப்காங் ஷெளபில் Bild am Sonntag இடம் கூறினார்: "ஐரோப்பிய ஒன்றியமோ ஜேர்மனிய அரசாங்கமோ [கிரக்கத்திற்கு கடன் கொடுப்பது பற்றி] ஒரு முடிவு எடுக்கவில்லை என்பதின் பொருள் விடையிறுப்பு நேரிடையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம் என்பதுதான். கிரேக்கமானது அது தொடங்கியுள்ள செலவினக் வெட்டுக்களை கடுமையாகத் தொடருமா என்பதைப் பொறுத்துத்தான் அனைத்தும் உள்ளன. இதைப் பற்றி நான் கிரேக்க நிதி மந்திரியிடம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளேன்." கிரேக்கத்திற்கு ஜேர்மன் உதவி இன்னும் கொடுப்பதற்கான அடிப்படை முன்நிபந்தனை "ஆக்கம் நிறைந்த மறுகட்டமைப்புத் திட்டம்தான்" என்றும் அவர் கூறினார்.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி Guido Wesgterwelle "கிரேக்கத்திற்கு பணம் எவ்வளவு என்ற இடத்தை நிரப்பாத ஒரு காசோலையைத் (blank cheque) தராது" என்றார்.

Journal du Dimarche இடம் பேசிய பிரெஞ்சுப் பொருளாதார மற்றும் பொருளாதார மந்திரி Christine Lagarde பிரான்ஸானது கிரேக்கப் பிணை எடுப்பிற்கு திட்டமிட்டுள்ள பிரெஞ்சு அளிப்பான 6.3 பில்லியன் யூரோக்களில் 3.9 பில்லியன் யூரோக்கள் தான் தரமுடியும் என்றார். எஞ்சிய பொதியை கிரேக்கத்திற்கு அளிக்கும் முன் பிரெஞ்சு அரசாங்கம் "உறுதியாகவும்", "மிகத்தீவிரமாக விளைவுகளைக் கண்காணிக்கவும் செய்யும்" என்று அவர் கூறினார். கிரேக்கத்திடம் இருந்து 150 மில்லியன் இலாபத்தை பிரான்ஸ் ஈட்டும், பத்திர சந்தைகளில் (bond) 1.5 சதவிகிதத்திற்கு கடன் வாங்கி அதை கிரேக்கத்திற்கு கடனாக 5 சதவிகிதத்திற்குக் கொடுப்பதின் மூலம்" என்றும் அவர் கூறினார்.

கிரேக்கத்திற்கு ஐரோப்பிய பிணை எடுப்புத் திட்டங்களில் மற்றொரு சிக்கல் ஜேர்மனியானது அது கொடுக்க இருக்கும் 8.4 பில்லியன் யூரோ அளிப்பிற்கு தொடர்ந்த எதிர்ப்பு, நடைமுறைத் தடைகள் வெளிவந்ததுள்ளது ஆகும். தற்பொழுது மேர்க்கெல் அரசாங்கமானது KfW அரசாங்க வளர்ச்சி வங்கி இந்த நிதியை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாராளுமன்ற ஒப்புதல் வேண்டும். அதுதான் பணத்தை இழப்பதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும். நிதி மந்திரி வுல்ப்காங் ஷெளபில் இதையொட்டி, விரைவில் எடுக்கப்படும் பாராளுமன்ற நடவடிக்கையை 10 நாட்களுக்குள் முடிக்கப் பார்க்கிறார்.

மேர்க்கெல் அரசாங்கத்திற்கு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் பிணைஎடுப்பு பற்றி சவால் வந்தால் நல்ல முறையில் பாதுகாப்பு கொடுப்பதற்கு ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய எதிர்ப்பு பொருளாதார வல்லுனரும் யூரோவைப் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ள பேராசிரியர் Joachim Starbatty கொண்டுவரக்கூடும். இது அரசியல் அளவில் உணர்ச்சிமயமானது, ஏனெனில் ஜேர்மனிய மக்களிடையே பிணை எடுப்பு பற்றி ஆதரவு இல்லை என்பதுடன், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் மே 9ல் தேர்தலும் வரவிருக்கிறது. இத்தேர்தல் ஜேர்மனியப் பாராளுமன்றத்தின் மேல் சபையில் கூட்டணி அரசாங்கம் கட்டுப்பாட்டை இழக்கும் விதத்தை ஏற்படுத்தலாம்.

மேர்க்கெலின் கூட்டணிப் பங்காளிகளில் பல, பவேரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU), Free Democrats (FDP) உட்பட, பிணை எடுப்புத் திட்டங்களுக்கு சவால் விடக்கூடும். இக்கட்சிகளில் பல முக்கிய உறுப்பினர்கள் பாப்பாண்ட்ரூவின் அறிக்கைக்கு பின்னர் கிரேக்கத்தை தாக்கி அறிவிப்புக்களை விடுத்துள்ளனர்.

CSU பாராளுமன்ற உறுப்பினர் Hans-Peter Friedrich, "கிரேக்கத்திற்கு கடன் திருப்பிச் செலுத்தும் திறன் பிரச்சினை மட்டும் இல்லை, அடிப்படை வளர்ச்சி, கட்டுமான அமைப்புப் பிரச்சினையும் உண்டு" என்று கூறியுள்ளார். போட்டித்தன்மையை மீண்டும் அடைவதற்கு, கிரேக்க தேசிய நாணயத்தை மதிப்புக் குறைவு செய்வதை மறு அறிமுகப்படுத்துவதின் மூலம் என்பது, கிரேக்க அரசியல்வாதிகளை "யூரோப் பகுதியை விட்டு நீங்குவது பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்க வைக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் ஆகிய குழுக்களின் தலைவர் Werner Langen, கூறியது: "ஐரோப்பிய ஒன்றிய சட்டம் மற்றும் ஜேர்மனிய அரசியலமைப்பிற்கு உட்பட்டு இந்த உதவிப் பொதிகள் உள்ளனவா என்பது பற்றி எனக்கு மிகவும் நம்பிக்கை இல்லை. கிரேக்கத்திற்கு உண்மையான மாற்றீடு ஒன்றியத்தின் நாணயத்தை விட்டு விலகி, கடுமையான கட்டுமானச் சீர்திருத்தங்கள் மூலம் மீண்டும் போட்டித்தன்மையை அடைவதுதான்."