WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
What is the situation facing immigrants and asylum
seekers in Britain?
பிரிட்டனில் குடியேறுபவர்களும் புகலிடம் தேடுபவர்களும் எதிர்கொள்ளும் நிலைமை என்ன?
By Jean Shaoul
24 April 2010
Use this version
to print | Send
feedback
பிரிட்டன், குடியேறுபவர்களால் "சகதியாக்கப்பட்டுள்ளது" என்னும் கூற்றுக்களை உத்தியோகபூர்வ
புள்ளி விவரங்கள் மறுப்பதுடன், குடியேறுபவர்கள் பெரும் நம்பிக்கையின்மையுடன், வாழ்வதும் உழைப்பதுமான வறிய
நிலைமைகளையும் காட்டுகின்றன.
ஆண்டில் நிகர குடியேற்றம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியுடன் நெருக்கமாக
இடைத் தொடர்பு கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக பிரிட்டனுக்குள் வந்தவர்களை விட வெளியேறியவர்கள் தான்
அதிகம். IPPR
எனப்படும் பொதுக் கொள்கை ஆய்வுக் கூட கருத்தின்படி 2005ல் 5.5 மில்லியன் பிரிட்டஷ்காரர்கள் வெளிநாடுகளில்
வசித்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 90,000 பிரிட்டஷ் குடிமக்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய
பிரிட்டனை விட்டு வெளியேறுகின்றனர்.
1980 களின் பொருளாதார ஏற்றம் அடைந்த ஆண்டுகளில் இந்த எதிர்மறை நிகரக்
குடியேற்றம் தலைகீழாயிற்று. ஆனால் நிகர குடியேற்றம் 1990 களின் மந்த நிலைக்குப் பின்தான் உண்மையிலேயே
வந்தது. இது அனேகமாக எல்லா தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஏற்பட்டது. 1998ல் இருந்து இது
ஆண்டுக்கு 100,000 விட அதிகமாகிவிட்டது. ஆனால் பல குடியேறும் தொழிலாளர்கள் சிறிது காலம் தங்கிய பின்
தாயகம் திரும்புகின்றனர்.
பொருளாதர ரீதியில் குடியேறும் பலர் குறைவாக ஊதியம் பெறும், குறைந்தபட்ச
ஊதிய வேலைகளில் தான் ஈடுபட்டுள்ளனர். சிலரைத் தவிர பலரும் ஆட்களை கடத்தும் இரக்கமற்ற பணச்
சுரண்டல்காரர்களுக்கு கட்டுப்பட்டவர்கள். அவர்களோ பிரிட்டனுக்குள் கொண்டு வருவதற்கு மிக அதிக பணத்தை
கட்டாயப்படுத்திப் பெறுகின்றனர். அல்லது மிரட்டும் கும்பலின் தலைவர்களால் இவர்களை அடிமைகளைப் போல் நடத்தி
மிக ஆபத்தான நிலைமைகளில் தள்ளுகின்றனர். 2004ல் உயிரிழந்த 19 சீன
cockle-pickers
நிகழ்வு மிக துன்பியலான உதாரணங்களில் ஒன்றாகும்.
2004ம் ஆண்டு குடியேறுதலின் உச்சக் கட்டத்தில்கூட--ஐரோப்பிய ஒன்றியம்
விரிவடைந்த பின் பிரிட்டன் அதன் கதவுகளை புதிய உறுப்பு நாடுகளுக்கு திறந்துவிட்ட மூன்றில் ஒரு
நாடாகும்--மொத்த குடியேறியவர் எண்ணிக்கை 244,000 என்றுதான் இருந்தது. அதிக அளவில் போலந்து,
கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்திருந்தனர். பொருளாதாரத்தை ஒட்டிய குடியேற்றம் அதன்பின் சரிந்துவிட்டது.
ஏனெனில் பல குடியேறியவர்கள் தாயகம் திரும்பிவிட்டனர். 2008ல் குடியேறுதல் பெரிதும் குறைந்தது. காரணம்
மந்த நிலை ஆகும். இது இனி ஆண்டிற்கு 100,000 என்று கூடக் குறையலாம்.
2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற் கட்சி அரசாங்கத்தின் புள்ளிகள்
அடிப்படையை கொண்ட முறை பிரிட்டனின் "பொருளாதார நலன்கள்" என்று கருதப்படுவதற்காக குடியேற்றத்தை
குறைத்துள்ளது. மிக அதிக வேலைத் திறமை உடையவர்களுக்குத்தான் வேலை செய்யும் உரிமம் கொடுக்கப்படுகிறது.
அதுவும் வேறு விண்ணப்பதாரர்கள் இல்லை என்றால் தான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். 2006ல்
இருந்து ஆண்டுக்கு 96,000 பேருக்குத்தான் வேலை உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஆசியா,
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காகும்.
47,000 பேர் கணவன், மனைவி என்றோ, உடனிருப்பவர்கள் என்றோ,
மற்றவர்களில் தங்கி வாழ்பவர்கள் என்றோ அனுமதிக்கப்படுகின்றனர்--ஆனால் இந்த உறவுகளை நிரூபிக்க
கணக்கிலடங்கா நடவடிக்கைகள் மூலம் அவர்கள் நிருபிக்க வேண்டும். ஆண்டிற்கு 309,000 விசாக்கள் வெளிநாட்டு
மாணவர்களுக்கு பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் கட்டணம் கொடுத்துப் படிப்பதற்கு--பெரும்பாலும் சீனா, ரஷ்யா,
ஜப்பான், அமெரிக்காவை சேர்ந்த இளைஞர்கள்-- கொடுக்கப்படும் போது, அவர்ளுக்கான கல்வி உரிய
நேரத்தில் அவர்கள் பெறுவது தாமதமாகி விடுகிறது. கல்வி இப்பொழுது ஒரு முக்கிய ஏற்றமதித் தொழிலாகி
உள்ளது.
லண்டன் பொருளாதாரப் பயிலகம் கொடுத்துள்ள அறிக்கை இங்கிலாந்து அதன் மக்களில்
குறைந்த விகிதத்தைத்தான் குடியேறுபவர்கள் எனக் கொண்டிருக்கிறது அதாவது (10.2%); ஆஸ்திரேலியாவில் 25
சதவிகிதம், அமெரிக்காவில் 13.6 சதவிகிதம், ஸ்வீடனில் 13.6 சதவிகிதம், ஜேர்மனியில் 12.9 சதவிகிதம்
மற்றும் நெதர்லாந்தில் 10.7 சதவிகிதம் ஆகியவற்றுடன் இது ஒப்பிடத்தக்கது. இவர்கள் முன்பு இல்லாததைக்
காட்டிலும் பல வேறுபாடுகளை உடைய நாடுகளில் இருந்து வருகின்றனர். மிக அடிக்கடி போலந்து, இந்தியா,
பாக்கிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் இருந்து. அவர்கள் இளைஞர்களாகவும், இங்கிலாந்தில்
பிறந்த மக்களை விட அதிகம் கற்றவர்களாகவும் உள்ளனர். சமீபத்தில் வரும் குடியறுபவர்கள் இன்னும் கூடுதலான
படிப்பறிவு உடையவர்கள் ஆவார்கள்.
புகலிடம் தேடுவோர் மற்றும் அகதிகளின் எண்ணிக்கையும் குறைவு ஆகும். 2007ல்
உள்துறை அலுவலகப் புள்ளி விவரங்களின்படி, 23,430 புகலிடம் நாடும் விண்ணப்பங்கள் இருந்தன. இவை
பெரும்பாலும் உலகின் போரினால் சிதைவுற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள். கொங்கோ ஜனநாயக குடியரசு,
எரித்ரியா, சோமாலியா, சிம்பாப்வே, துருக்கி, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், ஈராக் மற்றும் இலங்கை
என. இவர்களை சார்ந்துள்ளவர்கள் உட்பட மொத்தத்தில் 27,900 புகலிடம் தேடுபவர்கள் தான் இருந்தனர்.
பலரும் ஆதரவு கொடுப்போர்கள் இல்லாத இளைஞர்கள் ஆதலால், அவர்கள் தொழிற் கட்சியின் 1999
குடியேற்ற, புகலிட சட்டத்தின்படி சமூக வீடுகளுக்கு தகுதி அற்றவர்கள் ஆவர்.
தாங்கள் வசிக்கும் உரிமையை பாதுகாப்பதற்கு புகலிடம் நாடுபவர்கள் கிட்டத்தட்ட
கடக்க முடியாத தடைகளை எதிர் கொள்கின்றனர். 2007ல் புகலிட விண்ணப்பத்திற்கு தொடக்க முடிவைப்
பெற்றவர்களில், 16 சதவிகிதத்தினர் தான் அகதி அந்தஸ்து பெற்றனர். 11 சதவிகிதத்தினர் மனிதாபிமானப்
பாதுகாப்பு அல்லது விருப்புரிமையில் வசிக்கலாம் என்ற அனுமதியைப் பெற்றனர். 73 சதவிகிதத்தினர் அனுமதி
மறுக்கப்பட்டனர். முடிவிற்கு எதிராக முறையிட்டவர்களில் 23 சதவிகிதத்தினர் தான் வெற்றி பெற்றனர்.
ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின், உள்துறை அலுவலகம் அனைத்து நிதிய உதவியையும்
நிறுத்திவிடுகிறது. இது பொதுவாக 21 நாட்களுக்குள் நடைபெறும். அதன் பின் அது ஒரு வெளியற்ற உத்தரவைப்
பிறப்பிக்கிறது. தோல்வியுற்ற புகலிடம் நாடுபவர்கள் அதன்பின் இங்கிலாந்தின் எல்லைப் பிரிவு பொலிசாரால்
முன்னறிவிப்பு இல்லாமல் பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்படும் வரை சிறையில் வைக்கப்படுகின்றனர்.
National Coalition of Anti-Deportation
Campaigns, கருத்துப்படி குறைந்தது 55 புகலிடம்
தேடுவோர் 2000த்தில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு மாறாக தற்கொலை செய்து
கொண்டு விட்டனர்.
பல தோல்வியுற்ற புகலிடம் தேடுபவர்கள் "காணாமற் போய்விடுகின்றனர்".
பெருகும் கறுப்பு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக போகின்றனர். அதில் அவர்கள் கொடூரமாகச் சுரண்டப்படுகின்றனர்.
மற்றவர்கள் திக்கற்றவர்களாகி, பிச்சை எடுத்தல் அல்லது நண்பர்கள் வீட்டுத் தரைகளில் தூங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
உள்துறை அலுவலகம் இத்தகைய "முறையற்றவர்கள்" அல்லது ஆவணமற்ற குடியேறுபவர்களின் எண்ணிக்கை 2001ல்
330,000ல் இருந்து 500,000 வரை இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. அவர்களுடைய நிலைமை கொடூரமானது.
2004ல் இருந்து ஆவணமற்ற தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்கள்
இது பற்றிப் பெரும் கவலை கொண்டனர்.
பொருளாதார ரீதியாக குடியேறுபவர்கள் மிகக் குறைந்த சமூக நல உரிமைகளைத்தான்
பெறுகின்றனர். இது அவர்களுடைய குடியுரிமை மற்றும் வசிக்கும் தகுதியைப் பொறுத்தும், தேசிய காப்பீட்டிற்குக்
கொடுக்கும் கட்டணங்களைப் பொறுத்தும் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக பிரிட்டனில் இருப்பவர்கள் சமூக
வீடுகள் அல்லது வீட்டு நலன்கள், வரிச் சலுகைகள் ஆகியவற்றை, குறைந்த வருமானத்தைக் கொண்டிருந்தாலும் பெற
முடியாது.
பொருளாதார ரீதியில் வரும் குடியேறுபவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தனிப்பட்ட
வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து வாடகைக்கு வீட்டைப் பெறுகின்றனர். சிலர் முன்னாள் நகராட்சி வீடுகளை வாங்கியுள்ளனர்.
இதுதான் "வரிசையை மீறுதல்" என்ற தவறான கருத்திற்கு எரியூட்டுகிறது. சமூக வீடுகளில் வசிக்கும் 10 மில்லியன்
மக்களில் 2 சதவிகிதத்திற்கும் குறைந்தவர்கள் தான் புதிதாகக் குடியேறியவர்கள் ஆவார்கள். அவர்கள்
பெரும்பாலும் பிரிட்டனில் தங்க அனுமதிக்கப்பட்ட அகதிகள் ஆவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்திற்கு வடக்கே
காலியான சமூக வீடுகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. |