World Socialist Web Site www.wsws.org |
: செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Welcome from France: A compassionate exposure of anti-immigrant measures பிரான்சில் இருந்து வெளியாகி இருக்கும் Welcome: புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான முறைமைகளின்மீது ஓர் உணர்வுபூர்வமான வெளிப்பாடு By Richard Phillips இயக்கம் - பிலிப் லியோரே (Philippe Lioret); எழுத்தாக்கம் - லியோரே, இமானுவேல் கோர்கொல் மற்றும் ஓலிவியே ஆடம் Welcome என்ற நடப்பிற்கு முரண்பட்ட தலைப்புடன் பிரெஞ்சு இயக்குனர் பிலிப் லியோரேயின் சமீபத்திய திரைப்படம், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் வாழும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களின் மீது அரசாங்கம் தொடர்ந்து அடித்து வரும் தம்பட்டத்திற்கும், ஊடகத்தின் மனிதநேயமற்றதன்மைக்கும் ஒரு புத்திசாலித்தனமான மாற்று மருந்தாக இருக்கிறது.பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் அரேபிய மொழிகளில் வெளியாகி இருக்கும் லியோரேயின் திரைப்படம், கலே (Calais) என்ற இடத்தை மையமாக வைத்து நிஜ சம்பவங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு 17 வயது நிரம்பிய ஈராக்கிய- குர்திஷ் அகதியான ஏழை பிலால் கயானிக்கும் (Firat Ayverdi), கலேயில் நீச்சல் பயிற்சியாளராக இருக்கும் நடுத்தர வயதுடைய சிமோன் கால்மத்திற்கும் (Vincent Lindon) இடையில் உருவாகும் நட்பை மையமாக கொண்டிருக்கிறது. பிலால், இலண்டனில் வசிக்கும் அவனுடைய தோழியான மினாவுடனும் (தெர்யா அய்வெர்தி), அவளுடைய குடும்பத்துடனும் சேர விரும்புகிறான். ஆயிரக்கணக்கான விடலைப் பருவத்தினரைப் போலவே, மான்செஸ்டருக்காக கால்பந்து விளையாட விரும்புகிறான். சிமோன், பள்ளி ஆசிரியையான அவருடைய மனைவி மேரியனால் விவாகரத்து செய்யப்பட்டவர். இங்கிலாந்திற்கு கால்வாயைக் கடந்து செல்ல முயன்றதால், சட்டவிரோதமாக புலம்பெயர முயற்சித்தவர்கள் என்றழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள், ஓர் சட்டத்திற்குப் புறம்பான சூப் அங்காடியை நடத்துவதற்கு மேரியன் உதவி வருகிறார். கால்வாயை கடந்து செல்பவர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், இதயத் துடிப்பொலி மற்றும் கார்பன்டை ஆக்சைடு அறியும் கருவிகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் போன்ற கால்வாய் போக்குவரத்து நிறுவனங்களால் (cross-Channel trucking companies) உண்மையாகவே கையாளப்பட்டு வரும் முறைமைகளை உள்ளபடியே எடுத்துக்காட்டுவது போல, கலேயின் சரக்கேத்தும் பணிமனைகளின் இரவுநேர காட்சியமைப்பும், கால்வாய்க்கான தீவிர கண்காணிப்பு அணுகுமுறைகளும் திகைப்பூட்டுகின்றன.படத்தின் ஆரம்ப காட்சிகளில் பிலாலும், மேலும் ஐந்து அகதிகளும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு லாரியில் இரகசியமாக வருகிறார்கள். அந்த லாரியில் ஏறி வருவதற்கு அந்த இளஞ்சிறுவன் 500 யூரோ "விலை" கொடுக்க வேண்டியிருக்கிறது. கார்பன்டை ஆக்சைடு அறியும் கருவிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு தமது தலைகளை மூடிக்கொள்கிறார்கள். ஆனால், பிலால் மூச்சு திணறி தன்னுடைய தலையிலிருந்து பிளாஸ்டிக் பையை நீக்கியதும், பிரெஞ்சு அதிகாரிகள் அவர்களைக் கண்டறிந்து, கைது செய்கிறார்கள். முன்னதாக துருக்கியில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, எட்டு நாட்கள் அடிவாங்கி இருந்ததால் பிலால் மிரண்டு போகின்றான். பிலால் கலேயில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறான். சட்ட நிர்ணய அளவிற்கு வயது முதிர்வு அடையாததாலும், "பாதுகாப்பற்ற நாடு" என்ற உத்தியோகப்பூர்வமாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு நாட்டிலிருந்து வந்திருந்ததாலும் அவன் விடுவிக்கப்படுகிறான். பின்னர் எவ்வித இருப்பிடமோ அல்லது உதவியோ இல்லாமல் அவன் தெருக்களில் அலைகிறான். "ஒளிந்துவாழும்" மற்றவர்களைப் போலவே, பிலாலும் அதே "காட்டிற்குள்", அதாவது நூற்றுக்கணக்கான அகதிகளால் உருவாக்கப்பட்ட கூடாரங்களுக்குள் வந்து சேர்கிறான். அதில் பாதி பேர் முக்கியமாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வந்தவர்கள் ஆவர். எவ்வாறிருப்பினும், இலண்டனை அடையத் தீர்மானிக்கும் பிலால், தூரத்தில் மினுமினுக்கும் டோவரின் ( Dover) வெள்ளை செங்குத்தான மலைகளைப் பார்த்த பின்னர், அந்தக் கால்வாயை நீந்திக் கடப்பது என்று தீர்மானிக்கிறான். பிலால் ஒரு திறமைவாய்ந்த கால்பந்தாட்டக்காரனாக இருந்தான். ஆனால் அதே அளவிற்கு அவனிடம் நீச்சல் திறமை இல்லை. ஆகவே அவனின் கையிலிருக்கும் கடைசி பணத்தையும், சிமோனிடம் நீச்சல் படிப்பதற்காக செலவிடுகிறான். முன்னதாக அகதிகளைச் சந்திப்பதில் அலட்சியம் காட்டிய ---இது தான் இவருக்கும், இவர் மனைவிக்கும் இடையிலான மனஸ்தாபத்திற்கு காரணமாக இருந்தது--- இந்த முரட்டு நீச்சல் பயிற்சியாளர், பிலால் மீது சந்தேகப்படுகிறார். இருப்பினும், இந்த ஈராக்கிய-குர்திஷ் இளைஞனுக்கு உதவுவதன் மூலம் தம்முடைய மனைவியின் அன்பை மீண்டும் திரும்ப பெற முடியும் அல்லது குறைந்தபட்சம் தம்மால் "மற்றவர்களுக்கு உதவ" முடியும் என்று நிரூபிக்கவாவது செய்யலாம் என்ற நம்பிக்கையில், பிலாலுக்குக் நீச்சல் கற்றுத் தர சம்மதிக்கிறார்.ஆனால் விரைவிலேயே, பிலால் நீச்சல் படிப்பதற்கான உண்மையான நோக்கத்தை சிமோன் புரிந்து கொள்வதோடு, மேலும் விடலைப்பருவத்தினரை எது ஊக்குவிக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார். அவர்களுக்கு இடையில் ஓர் ஆழ்ந்த பிணைப்பு உருவாகிறது. உலகில் எப்போதும் தொடர்ந்து வேலை நடந்துகொண்டிருக்கும் கடல்தடங்களில் ஒன்றான அந்த கால்வாயிற்குக் குறுக்காக ஆபத்து நிறைந்த 30 கிலோமீட்டர் தூரம் நீந்திச் செல்வதைத் தடுக்க, அந்த 17 வயது நிரம்பிய இளைஞனை சிமோன் அறிவுரை கூறுகிறார். ஆனால், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போகிறது. ஈராக்கில் பிலாலின் முந்தைய வாழ்க்கையைப் பற்றியோ, அந்த நாட்டின் சிக்கலான நிலைமையைப் பற்றியோ, அல்லது மினாவுடனான பிலாலின் உறவைப் பற்றியோ Welcome திரைப்படம் விவரமாக எடுத்துக்காட்டவில்லை. ஆனால், அனைத்து எல்லைக்கட்டுப்பாட்டு முறைமைகளின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஒடுக்குமுறையான இயல்பைக் குறித்த ஒரு நிஜமான உணர்வை இப்படம் வெளிப்படுத்தி இருக்கிறது. எவ்வாறிருப்பினும், இளம் அகதிகளுக்கு ஆதரவாக உதவ முயற்சிக்கும் சாதாரண மக்களைப் பிரெஞ்சு சட்டம் எவ்வாறு தண்டிக்கிறது என்பது தான் இதில் லியோரேயின் முக்கிய ஆக்க கூறாக இருக்கிறது.பிலாலுக்கு உதவ நினைக்கும் சிமோனின் முடிவு, உண்மையில், பிரெஞ்சு குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டம் L622-1க்கு எதிராக அவரைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்களுக்கு உதவுவதை இந்த சட்டம் ஒரு கிரிமினல் குற்றமாக வரையறுக்கிறது. இந்த சட்டத்தின்கீழ், "ஒரு வெளிநாட்டினர் நுழைவதற்கோ, பயணிப்பதற்கோ அல்லது ஆவணமில்லாமல் தங்குவதற்கோ உதவினால், அதன்கீழ் ஒருவர் குற்றவாளியாக பிடிக்கப்பட்டால், அவருக்கு 30,000 யூரோ அபராதத்துடன் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டம் L622-1இன் கீழ் ஆண்டுக்கு இத்தனை நபர்கள் ---2009இல் 5000 நபர்கள்--- என்று உள்ளூர்வாசிகளை முயற்சித்து கைது செய்யவும், பிரெஞ்சு அரசாங்கத்தால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.ஒரு பிட்சா (pizza) விருந்திற்காக பிலாலையும், அவனுடைய நண்பன் ஜோரனையும் சிமோன் தம்முடைய வீட்டிற்கு அழைத்து வந்த அடுத்த நாள், அந்த நீச்சல் பயிற்சியாளர் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். பின்னர் ஒரு புலம்பெயர்ந்தவருக்கு உதவினார் என்றும், இங்கிலாந்திற்கு நீந்தி செல்வதற்கான பிலாலின் முயற்சியில் உதவுவதற்காக, ஆட்களை கடத்தும் போக்குவரத்தில் ஈடுபட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு சிமோன் கைது செய்யப்படுகிறார். லியோரேயின் இந்த திரைப்படம் அப்படியொன்றும் அசாதாரணமான படமல்ல. ஆனால், அதுவொரு நேர்மையான மற்றும் இரக்க உணர்ச்சியின் படைப்பாக இருக்கிறது. பிரான்சில் இப்படம் வெளியிடப்பட்ட முதல் இரண்டு மாதங்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைச் சென்று பார்த்தார்கள். இது அரசாங்கத்தாலும், ஊடகத்தாலும் அகதிகள் உறிஞ்சப்பட்டு தாக்கப்படுவதை சாதாரண மக்கள் விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதற்கு முன்னர் நடிப்பு அனுபவமற்ற ஃப்ரட் அய்வெர்தி, பிலாலாக ஒரு சிறப்பார்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக லிண்டன், சிமோன் வேடத்தை அவர் நன்றாக செய்திருந்தார். பிலாலின் போராட்டத்திற்குள் வருவதும், அவர்களின் நட்பால் உணர்வுப்பூர்வமாக மாறுவதும் ஆகிய இவரின் இரண்டு மாற்றமும் அவருக்குள் கருத்தளவில் ஏற்படும் மாற்றமாகவும் மற்றும் ஆறுதலாகவும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட Welcome திரைப்படம், கடந்த இரண்டு தசாப்தங்களில் பல திரைப்பட கலைஞர்களால் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு வந்த ஒரு விஷயத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு முக்கிய பங்களிப்பாகும். குறிப்பாக, சேவியர் ஃபுல்லரால் இயக்கப்பட்ட Journey of Hope (1990), மற்றும் நிக் புரூம்ஃபீல்டால் இயக்கப்பட்ட Ghosts (2006) ஆகியவை நினைவுகூறத்தக்கவையாகும். துரதிருஷ்டவசமாக, இந்த பிரச்சினைக் குறித்து ஆஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர்களால் விரல்விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ---பழமைவாத மற்றும் தொழிற்கட்சி போன்றவை--- திட்டமிட்டே அகதிகளை ஆத்திரமூட்டி இருக்கின்றன என்பதுடன், தொடர்ந்தும் புகலிடம் கோருவோருக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டவரைவுகளையும் கொண்டு வந்திருக்கின்றன. இதுவொரு மன்னிக்க முடியாத வெளிப்பாடாகும். பிரான்சின் L622-1 சட்டங்கள் மீது உள்நாட்டு விமர்சகர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருமே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ரூட் தொழிற்கட்சி அரசாங்கம் தான் இதைக் கொண்டு வந்தது என்பதை குறிப்பிடவில்லை. |