WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Greek strikes, debt crisis intensify fears of economic
collapse
கிரேக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் கடன் நெருக்கடியானது பொருளாதாரச் சரிவு அச்சங்களை
தீவிரப்படுத்துகின்றன
By Alex Lantier
21 April 2010
Use this version
to print | Send
feedback
நாளைய கிரேக்க வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக கிரேக்க அரசாங்கத்தின் வட்டிவிகிதங்களை
அதிகப்படுத்தும் முயற்சியை முக்கிய வங்கிகளும் முதலீட்டாளர்களும் தொடர்ந்து செய்தனர். இதை அடுத்து ஒரு கூட்டு
ஐரோப்பிய-IMF
பிணை எடுப்புத் திட்டங்கள் தோல்வி அடையலாம் என்ற அச்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பிணை எடுப்புக்களானது
கடன் நெருக்கடியைத் தூண்டிவிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளின் தளத்தைத் தீர்க்காது என்று நிதிய வட்டாரங்களில்
பரந்த அளவில் கருதப்படுகினறது. மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளும், செய்தி ஊடகத்தினரும் பெருகிய முறையில்
அரசாங்கத் திவால் அல்லது பொது ஐரோப்பிய நாணயமான யூரோ திவால் பற்றி விவாதிக்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கான கடன் பத்திரங்களுக்கு கிரேக்கம் கொடுக்கும் வட்டிவிகிதம் நேற்று
மிக அதிக 7.807 சதவிகிதத்திற்கு உயர்ந்தது. இது கிரேக்கம் பாதுகாப்புடன் அதன் கடன்களை புதுப்பிக்க
முடியும் என்று முதலீட்டாளர்கள் நம்பும் விகிதத்தை விட மிக அதிகம் ஆகும். மே மாத இறுதிக்குள் கிரேக்கம் பழைய
கடன்களை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க 10 பில்லியன் யூரோக்களை கோர வேண்டும்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கிரேக்க நிதி மந்திரி ஜோர்ஜ் பாப்பாகான்ஸ்டான்டினோ
ஐரோப்பிய மற்றும் IMF
அதிகாரிகள் ஏதென்ஸுக்கு 10 நாட்கள் அரசியல் பிணை எடுப்புத் திறன் உடைய பேச்சு வார்த்தைகளுக்காக
வருகை புரிவர் என்று கூறினார். பிணை எடுப்பு பற்றிய வேண்டுகோள் "கடன் வாங்கும் நிலைமைகள் மற்றும் ஏதென்ஸ்
பேச்சுக்களில் முன்னேற்றத்தைப்" பொறுத்து இருக்கும் என்று அவர் கூறினார். அமெரிக்காவில் நிதி கோருவதற்கு
தான் இன்னும் ஒரு "சாலைக் காட்சிக்கு" அதாவது நிதி கோரி பிரச்சார நடவடிக்கைத் திட்டம் கொண்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்க அல்லது ஆசிய நிதியச் சந்தைகளில் கிரேக்கம் கடன்களைப்
பெறுவது பெருகிய முறையில் சந்தேகம்தான். Bank of
New York Mellon ஐச் சேர்ந்த சைமன் டெரிக்கை
மேற்கோளிட்டு Daily Telegraph
"சீனாவானது ஐரோப்பா பற்றி கவலை கொண்டு
வருகிறது. தன் கடனை வாங்குவதற்கு எவரையேனும் பெறுவதற்கு கிரேக்கம் பாடுபடப்போகிறது. ஆசியாவில்
சாலைக் காட்சி இல்லை, அமெரிக்காவில் அதன் சாலைக் காட்சியை அது நிறுத்திக் கொள்ளக் கூடும்" என்று
எழுதியுள்ளது.
மேலும் நிதி கருத்துரையாளர்கள் பெருகிய முறையில் கிரேக்கமானது ஐரோப்பிய
மற்றும் IMF
கடன்களை பெற்றாலும் அதன் கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாது என்று எதிர்பார்க்கின்றனர். ஒரு கூட்டு
ஐரோப்பிய-IMF
பிணை எடுப்பு, கிட்டத்தட்ட 45 பில்லியன் யூரோக்களுக்கு என விவாதிக்கப்பட்ட போது, ஜேர்மனிய மத்திய
வங்கியின் கவர்னர் Axel Weber
சமீபத்தில் 80 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும் என்றார். ஜேர்மனியச் சட்டம் இயற்றுபவர்களின் மூடிய
கதவுகளுக்குப் பின் நடந்த கூட்டத்தில் அவர் கிரேக்கத்தின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது, "எல்லா
நேரத்திலும் எண்ணிக்கை மாறிவருகிறது" என்று குறிப்பிட்டார்.
Financial Times
கட்டுரை ஒன்றில் வொல்ப்காங் முஞ்சாவ் எழுதினார்: "மொத்த உள்நாட்டு
உற்பத்திக்கு 125 சதவிகிதம் என்ற முறையில் கிரேக்கம் கடனைக் கொண்டுள்ளது. கிரேக்கம் அடுத்த ஐந்து ஆண்டுகள்
ஒவ்வொன்றிற்கும் அதன் இருக்கும் கடனில் ஒரு பகுதியையும் வட்டியையும் கொடுப்பதற்குக் கிட்டத்தட்ட 50 பில்லியன்
யூரோக்களைப் பெற வேண்டும் (68 பில்லியன் டொலர், 44 பில்லியன் பவுண்டுகள்). அது கிட்டத்தட்ட 250 பில்லியன்
யூரோக்கள் என ஆகிறது, அல்லது கிரேக்கத்தின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவிகிதம் ஆகும்."
"மீட்புப் பொதியைப் பற்றி அதிகமாகக் கூறவேண்டும் என்றால் அது ஒரு ஒழுங்கான திருப்பிச் செலுத்த தவறுதல்
பற்றி பேச்சுவார்த்தை நடத்த அவகாசத்தை அளிக்கிறது" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
கிரேக்கத் தொழிலாளர்கள் சமூக ஜனநாயக
PASOK கட்சியின்
கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரு சுமத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக
இன்னும் கூடுதலான வேலைநிறுத்தங்களுக்கு தயாரிப்பு நடத்துகையில் இக் கருத்துக்கள் வந்துள்ளன. பாப்பாண்ட்ருவிற்கு
எதிராக நடவடிக்கைகள் எடுக்க ஒரு மாதமாக மறுத்து வந்த பின்னர், கிரேக்கத்தில் உள்ள முக்கிய
தொழிற்சங்கங்கள்--ADEDY
பொதுத்துறைத் தொழிலாளர்கள் சங்கமும், இன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்ராலினிச
PAME
தொழிற்சங்கமும்--ஏப்ரல் 22 வியாழனன்று வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
GSEE தனியார்
துறை தொழிற்சங்கங்கள் தாமும் "இம்மாதப் பின்பகுதியில்" வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு
கொடுக்கக்கூடும் என்று குறிப்புக் காட்டியுள்ளன.
தொழிற்சங்கங்களே பாப்பாண்ட்ரூவின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை--ADEDY,
GSEE தலைமைகள் பெரும்பாலும்
PASOK
உறுப்பினர்கள்தாம். மற்றும் அவர்களின் எதிர்ப்பு பாப்பாண்ட்ரூ சிறிய வெட்டுக்களை செயல்படுத்த அழுத்தம்
கொடுக்கப்படலாம் என்ற திவால் முன்னோக்கைத்தான் தளமாகக் கொண்டுள்ளது. இன்னும் கூடுதலான
வேலைநிறுத்தங்களுக்கு அவர்கள் அழைப்பு விடுக்கும் முடிவு பெருகும் சமூக சங்கடங்கள், ஊதிய, சமூகச் செலவுகள்
பாப்பாண்ட்ரூவின் வெட்டுக்களால் சரிவை ஒட்டி எழுந்துள்ளதற்கு தொழிலாள வர்க்கத்தின் பெருகிய சீற்றத்தைப்
பிரதிபலிக்கிறது. வேலையின்மை விகிதம் ஜனவரி மாதம் 11.3 சதவிகிதம் என உயர்ந்தது என்று சமீபத்தில்
கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் கூறுகின்றன-- டிசம்பரில் 69,000 வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன. அதுவும் 11
மில்லியன் மக்கள் தான் நாட்டிலேயே இருக்கும் நிலையில்.
தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு எழுச்சிக்கு நிதியச் சந்தைகளின் விடையிறுப்பு
தங்கள் தாக்குதலைப் பரந்து செய்வதாகும். கொடுமையான வட்டி விகிதம் விதித்து அவை கிரேக்கத்தை அழிக்க
முற்படுகையில், அவை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகவும் ஊக வணிகம் செய்ய முற்பட்டுள்ளன--பெரிய
ஐரோப்பிய நாடுகளின் பொது நிதிகளில் இருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அரசாங்கக் கடன்களில் பெரும்
இலாபத்தை அடையும் நோக்கத்தில்.
கடந்த வாரம் கிரேக்க பிணை எடுப்புத் திட்டங்கள் "முதலீட்டாளர்களை
ஐரோப்பாவின் பரிசோதனைக்கு--குறிப்பாக ஜேர்மனியின்--போர்த்துக்கல் தொடங்கி மற்ற தொந்தரவிற்குட்பட்ட
ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு மீட்பைக் கொடுக்க வேண்டிய விருப்பத்தை ஊக்குவித்துள்ளது" என்று
New York Times
கூறியுள்ளது.
"ஏற்கனவை வேதனையில் உள்ள மக்களை இன்னும் அதிக தியாகங்களை செய்யுமாறு
-- பொதுத்துறை ஊதிய வெட்டுக்கள் அல்லது மதிப்புக்கூட்டு வரி விகிதத்தை அதிகரிப்பது போன்றவற்றை--அவை
அவசியம் என்று கோருவது போர்த்துக்கல் அரசியல்வாதிகளுக்கு கடினமாக இருக்கும்." என்றும் அது சேர்த்துக்
கொண்டது. எப்படியிருந்தபோதிலும், Fitch
கடன் தர நிர்ணய நிறுவனமானது போர்த்துக்கலின் தரத்தை ஏற்கனவே தரம்
இறக்கியுள்ளது"
மொத்த தேசிய உற்பத்தியில் 9 சதவிகிதமான அதனது பற்றாக்குறையை போர்த்துக்கல் வெட்டிக் குறைப்பது சந்தேகமானதே"
என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவையும் போர்த்துக்கல் மற்றும் கிரேக்கத்தைப்
போல் குறைந்த சேமிப்புக்களைக் கொண்டாலும் அவை நிதியக் கடன்களுக்கு நாணயத்தை அச்சிட்டுக்
கொள்ளமுடியும்-- ஆனால் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு வருவது பற்றி கவனத்தில்--குறிப்பாக ஜேர்மனியிடம்
இருந்து--என்ற நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கி நீண்ட காலக் கொள்கையாக பணத்தை அச்சிட மறுக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் போர்த்துக்கல்லின் கடன் வாங்கும் செலவினங்களை
அதிகப்படுத்துகின்றன. அதையொட்டி முதலீட்டாளர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கிறது. அரசியல்வாதிகள் மக்களிடம்
வேதனை தரும் சமூகச் செலவினக் குறைப்புக்களுக்கு வலியுறுத்த வேண்டியுள்ளது. 10 ஆண்டுகள் போர்த்துக்கல் அரச
கடன்களுக்கு வட்டி விகிதம் கடந்த வாரத்தில் 0.25 சதவிகிதம் அதிகம் ஆகியது, நேற்று 4.61 சதவிகிதம் என்று
போயிற்று.
"ஐரோப்பிய தொற்று" என்று வந்துள்ள புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு நடுவே
IMF
நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு கிரேக்க நெருக்கடி உலக நெருக்கடியில் ஒரு "புதிய கட்டத்தின்" தொடக்க
நிலையைக் குறிக்கிறது என்று கூறியுள்ளது.
வங்கிகள் பொருளாதார நெருக்கடியினால் $2.3 டிரில்லியனை இழந்துவிட்டன, அதில்
$1.5 டிரில்லியன் ஏற்கனவே நஷ்டம் என்று எழுதப்பட்டுவிட்டது என்று
IMF தகவல்
கொடுத்துள்ளது--பங்கு அல்லது சொத்துச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க சரிவு இருந்தால், இந்த எண்ணிக்கை
விரைவில் அதிகமாகக்கூடும். கடன்களில் "குறிப்பான பகுதிகள்" இன்னும் எஞ்சியுள்ளன, அதுவும் வலுவற்ற வங்கிகளிடம்
என்று அது குறிப்பிட்டுள்ளது--அமெரிக்க பிராந்திய வங்கிகள், ஜேர்மனியின்
Landesbanken
மற்றும் ஸ்பெயினின் சேமிப்பு வங்கிகள் போன்றவற்றில்.
இப்பொழுது உலக நிதிகளின் தளத்தில் இருக்கும் பெரியளவு அரசாங்கக் கடன்
தரங்களைப் பற்றிய கவனத்தையும் அது காட்டியுள்ளது. இதையொட்டி "நிதிய ஒருங்கிணைப்பு" தேவை என்று
அழைப்பு விடுத்துள்ளது-- அதாவது, அரசாங்கத்தின் செலவுக் குறைப்புக்களுக்கு.
IMF ன் நிதிய
மற்றும் மூலதனச் சந்தைகள் பிரிவின் தலைவரான Jose
Vinals, "வளர்ச்சியடைந்துள்ள நாடுகள் ஒரு உலகப் போர்
இல்லாமலேயே இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் கொண்டிருந்த கடன் அளவுகளை கொண்டுள்ளன" என்று
குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய புள்ளி விவரங்கள் ஐரோப்பிய மற்றும் உலகப் பொருளாதாரங்கள் நிதியப்
பிரபுத்துவத்தால் பேரழிவு தரக்கூடிய நிர்வாகத்தை சுட்டிக் காட்டுகின்றன. அதிகாரிகள் முன்வைத்துள்ள
நடவடிக்கைகள் இவற்றுள் எதுவும் நேரியப் பொருளாதார, தொழில்துறைத் திட்டங்களை பொருளாதார
செயல்களை பாதுகாக்கக் கொண்டிருக்கவில்லை என்றும் இவை சமூக, அரசியல் பேரழிவை நோக்கிச் சென்று
கொண்டிருக்கின்றன என்பதையும் உயர்த்திக் காட்டுகின்றன.
IMF அறிக்கையை ஒட்டி,
IMF ன்
தலைமைப் பொருளாதார வல்லுனர் Olivier
Blanchard,
Le Monde
க்கு ஒரு விரிவான பேட்டியை அளித்தார். அதில் நிதிய அதிகாரிகள் இன்னும் கூடுதலான பணவீக்கக் கொள்கையை
தொடர வேண்டும், அதில் குறைந்த வட்டி விகிதங்களும் இருக்க வேணடும்" என்றார். "தானே தோற்றுவித்துக்
கொண்ட கடின நிலையில் இருந்து மீள்வதற்கு கிரேக்கம் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான்.
ஆனால் அதிக விகிதத்திற்கு கடனைக் கொடுப்பது என்பது பொருளற்றது. ஏனெனில் திருப்பிப் பெறுவது
இயலாததாகிவிடும்." "ஒரு உயர்ந்த பணவீக்க சராசரி விகிதம்" தேவை என்று கூறிய அவர் அதுதான் ஊதியங்கள்,
பொருளாதார செயல்களை சரிவைத் தவிர்க்கும்
என்றும் அது நாடுகளுக்கு கடன்களைத் திருப்பிக் கொடுப்பதை
எளிதாக்கும், அத்துடன் ஓய்வூதியங்களும் குறைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
Der Spiegel க்குக்
கொடுத்த பேட்டி ஒன்றில் ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷெளபில் கிரேக்கம் கடன் கொடுப்பதில் தாமதம்
காண்பதை லெஹ்மன் பிரதர்ஸ் செயலுக்கு ஒப்பிட்டார். பிந்தையது தான் செப்டம்பர் 2008 நிதிய நெருக்கடியைத்
தூண்டி விட்டிருந்தது. கிரேக்கத்தின் மொத்த அரசாங்கக் கடன் கிட்டத்தட்ட 300 பில்லியன் யூரோக்கள் இருக்கலாம்
என்று மதிப்பிடப்பட்டுள்ளது. "கிரேக்கத்தின் கடன்களை அனைத்தும் யூரோ நாணயத்தில் உள்ளன. ஆனால் எவர்
எந்த அளவு இக்கடன்களை கொடுத்துள்ளார் என்பது தெளிவாக இல்லை. தேசியத் திவாலின் விளைவுகள் கணக்கில்
கூறமுடியாதவை. ஒரு பெரிய வங்கி போலவே கிரேக்கமும் முறையான முக்கியத்துவத்தைத்தான் கொண்டுள்ளது."
சுருங்கக்கூறின், கிரேக்கம் தாமதப்படுத்தினால் அது கிரேக்கத்திற்கு கடன்கொடுத்த
முக்கிய இங்கிலாந்து, பிரெஞ்சு, ஸ்விட்ஸர்லாந்து, ஜேர்மனிய வங்கிகளுக்கு இடையே வெளிப்படையான போட்டிகளை
தூண்டும் அச்சுறுத்தலை கொண்டிருப்பதோடு, பரந்த நிதிய பீதியைக் கிளப்பும் அச்சத்தையும் கொண்டுள்ளது.
பேர்லின் கிரேக்கத்திற்கு ஒரு பிணை எடுப்பிற்கு உதவ ஏன் "இசைந்து விட்டது" என்று
Der Spiege ஆல்
கேட்கப்பட்டதற்கு ஷெளபில் தான் "இசைந்து விட்டது"
பற்றி மறுத்த அவர் கிரேக்கத்தின் சிக்கன நடவடிக்கை "நம்பகத்தன்மை" உடையது என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
போர்த்துக்கல், ஸ்பெயின் அல்லது மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளுமா
என்ற வினாக்களுக்கு பதில் கூற அவர் மறுத்துவிட்டார். அதற்குப் பதில் கூறுவது "சந்தேகத்திற்குட்பட்ட ஊக வணிகத்தினருக்கு
ஊக்கம் தருவது போல் ஆகும்" என்றார்.
கிரேக்கம் போன்ற கடனில் ஆழ்ந்துள்ள நாடுகளை பொது நாணய ஒன்றியத்தில்
இருந்து வெளியேற்றுவதற்கு முன்னதாக அவர் கொடுத்திருந்த திட்டங்களை அவர் மீண்டும் கூறினார். |