World Socialist Web Site www.wsws.org |
: செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
An interview with Philippe Lioret, director of WelcomeWelcome திரைப்பட இயக்குனர் பிலிப் லியோரேயுடன் ஓர் நேர்காணல்By Richard Phillips இது பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் பிலிப் லியோரே கடந்த மாதம் ஆஸ்திரேலியா வந்திருந்த போது உலக சோசலிச வலைத்தளத்திற்கு அளித்த நேர்காணலாகும். 1980களின் தொடக்கத்தில் ஒலிக்கோர்ப்பாளராகவும் (sound mixer), கதை எழுத்தாளராகவும் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய 54 வயது நிரம்பிய லியோரே, அவருடைய முதல் திரைப்படத்தை லிஷீst வீஸீ ஜிக்ஷீணீஸீsவீt (ஜிஷீனீதீஙs பீu நீவீமீறீ) 1993இல் இயக்கினார். அவருடைய சமீபத்திய திரைப்படமான Welcome தற்போது ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த சில வாரங்களில் வெகு குறைந்த வெளியீடுகளுடன் அமெரிக்காவிலும் வெளியிடப்பட உள்ளது. ஆவணமற்ற அகதிகள் மற்றும் பிரெஞ்சு மக்கள் மீது, அதிகரித்து வரும் பிரெஞ்சு புலம்பெயர்வு ஒடுக்குமுறை சட்டங்களின் மனித தாக்கங்களை இந்த திரைப்படம் வெளிப்படுத்திக் காட்டுகிறது. (மேலும் பார்க்க: பிரான்சில் இருந்து வெளியாகி இருக்கும் Welcome: புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான முறைமைகளின்மீது ஓர் உணர்வுபூர்வமான வெளிப்பாடு) ரிச்சார்ட் பிலிப்ஸ் (ரி. பி): சமீபத்திய ஆண்டுகளில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் குறித்து வெகு சில படங்களே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த படத்தில் நீங்கள் எதை ஆராய விரும்பினீர்கள், ஏன் அவ்வாறு விரும்பினீர்கள் என்று சொல்ல முடியுமா? பிலிப் லியோரே (H.L): புலம்பெயர்ந்தவர்கள் தான் என்னுடைய திரைப்படத்தில் மையக்கருவாக இருந்தார்கள், ஆனால் இரண்டு தம்பதிகளுக்கு இடையிலான கதையோட்டத்தில் அதுவொரு விஷயமாக கையாளப்பட்டிருந்தது. பொதுவாக ஆவணமற்ற அகதிகளின் பிரச்சினைகளைக் குறித்தும், இந்த சிக்கலை எதிர்கொள்ளும் போது, எவ்வாறு இது வாழ்க்கையை மாற்றிவிடுகிறது என்றும் நிறைய தெரிந்திருக்காதவர்களுக்கு, மக்களின் உங்களையும் என்னையும் போன்றவர்களின் நிஜமான வாழ்க்கை மூலமாகவே இந்த கருவை வெளிப்படுத்திக்காட்ட விரும்பினேன். Welcome திரைப்படம் இரண்டு காதல் கதைகளோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குழப்பங்களோடு ஏனென்றால் இந்த வித்தியாசமான மற்றும் முரண்பட்ட உலக அமைப்புமுறையின் சுவர்களில் அந்த இரண்டு காதல் கதைகளும் மோதுகின்றன. இந்த காதல் கதைகள் இல்லாமல் இருந்திருந்தால், நான் ஒரு திரைப்படத்தைச் செய்திருக்க முடியாது. மாறாக, அது புலம்பெயர்ந்தவர்களைப் பற்றிய ஓர் ஆவணப்படமாக ஆகியிருக்கும். இதுபோன்ற நிறைய ஆவணப்படங்களை நான் பார்த்திருக்கிறேன் அவை அனைத்துமே மிகவும் சிறந்தவை ஆனால், துரதிருஷ்டவசமாக மக்கள் அவற்றிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். என்னுடைய திரைப்படம் மக்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் அது அவர்களோடு உணர்வுரீதியாக பேசுகிறது.Welcome திரைப்படத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளரான சிமோன் என்ற கதாபாத்திரத்தைக் கொண்டிருந்தோம். இவர் பொதுவாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புகலிடம் கோருபவர்கள் மீது அக்கறையற்றவர். இதிலிருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், அவருடைய முன்னாள் மனைவி ஒரு சுய-ஆர்வலர். அவர் சிமோன் மிகவும் சுயநலமாக இருக்கிறார், அவருடைய வாழ்க்கையை மட்டுமே பார்க்கிறார் என்பதற்காக அவரை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். தான் மற்றவர்களுக்கு உதவக்கூடிய ஒரு நபர் தான் என்பதை சிமோன் தம்முடைய மனைவிக்கு நிரூபித்து காட்ட விரும்புகிறார். இவ்வாறு செய்யும் போது, அந்த இளைஞன் பிலால் யார் என்பதை மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் அவர் தள்ளப்படுகிறார். பின்னர் அவனுடன் அவர் நட்பாகி விடுகிறார்.K.H: இந்த கதையை எவ்வாறு உருவாக்கினீர்கள்? பி.லி: நான் கலேயில் ஆறு வாரங்கள் புலம்பெயர்ந்தவர்களோடும், சுய-ஆர்வலர்களோடும் தங்கியிருந்தேன். பின்னர் தான் இந்தக் கதையை எழுதுவதற்கு அந்த பிரச்சினைகள் குறித்து போதியளவிற்கு தெரிந்து கொண்டேன். முற்றிலும் நாடகபாணியில் இல்லாத, ஆனால் நிஜ வாழ்க்கையைக் கொண்டிருக்கும் ஒரு கதையை நான் விரும்பினேன். இதில் முக்கிய கதாப்பாத்திரமாக யார் இருக்கப் போகிறார்கள் என்று தெரிந்த பின்னர் தான் நிஜமாகவே இந்த திரைப்படம் தொடங்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, பிலால் இரண்டு நபர்களின் ஒரு கலவையாக இருக்கிறான். நான் சந்தித்த ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருந்த 17 வயது நிரம்பிய இளைஞன், இவர் இலண்டனில் வசிக்கும் தன்னுடைய தோழியுடன் சேர விரும்பினார் மற்றொருவர், இவரைப் பற்றி கேட்டறிந்தது தான், கால்வாயை நீந்தியே கடந்து சென்றவர். உண்மையில் அவர் அவ்வாறு கடந்து சென்றாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது, இருந்தாலும் இந்தப் படம் அவருக்கே அர்பணிக்கப்படுகிறது. இந்த கலவையான கதாபாத்திரம் குறித்து என் உதவி எழுத்தாளருடன் நான் விவாதித்த போது, இந்த யோசனை நன்றாக இருப்பதாகவும், ஆனால் அப்படி ஒருவர் நீந்தியே அந்த கால்வாயைக் கடக்க வேண்டும் என்று நான் விரும்பினால், அவருக்கு எவ்வாறு நீந்துவது என்று கற்றுக்கொடுக்கக் கூடிய ஒருவர் வேண்டும் என்றும் அவர் சொன்னார். பின்னர் நாங்கள் நீச்சல் பயிற்சியாளர் கதாபாத்திரத்தை உருவாக்கினோம். இவர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் ஓர் சுய-ஆர்வ தொழிலாளியாக இருப்பவரின் கணவராவார். ஒரு சிறந்த நாடகத்தை உருவாக்குவாக்குவது தான் என்னுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, நான் மேலும் மேலும் நிறைய அரசியல் சிக்கல்களைக் குறித்து அறிந்து கொண்டேன். ரி.பி: இந்த திரைப்படத்திற்கு நிதி கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்ததா? பி.லி: இல்லை, ஏனென்றால் கதை அருமையாக இருந்ததாகவே உணர்கிறேன். மேலும் உங்களிடம் ஒரு நல்ல கதை இருந்தால், பொதுவாக உங்களால் நிதியைத் திரட்ட முடியும். இது எப்போதும் முடியாது, ஆனால் பொதுவாக முடியக்கூடியதே. ரி.பி: ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் பிரெஞ்சு மக்களைத் தண்டிக்கும் சட்டமான L622-1 குறித்து சொல்ல முடியுமா? பி.லி: இதுவொரு இயல்புக்கு பொருந்தாத, முட்டாள்தனமானவொரு சட்டமாகும். நீங்கள் சட்டவிரோதமான புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவினால், நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்த திரைப்படம் வெளியிட்டதும், எதிர்கட்சியான சோசலிஸ்ட் கட்சி, இந்த சட்டத்தைத் திருத்த விரும்பியதால், இதை பிரெஞ்சு பாராளுமன்றத்தில் திரையிடுமாறு கேட்டுக் கொண்டது. நானும் அவ்வாறே செய்தேன். ஆனால், சார்க்கோசி பெரும்பான்மை பெற்றிருந்ததால், இந்த சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சி தோல்வி அடைந்தது. பின்னர் இந்த திரைப்படம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடப்பட்டு, லக்ஸ் விருதை வென்றது. இந்த சட்டம் ஏற்புடையதும் அல்ல, மேலும் மாற்றப்பட வேண்டியதுமாகும் என்ற ஓர் அரசியல் செய்தியை இது எடுத்துக்காட்டுகிறது என்று தான் நான் நினைக்கிறேன். ரி.பி: சார்க்கோசியின் புலம்பெயர்வுதுறை மந்திரி எரிக் பெஸ்ஸென் இதைவிட கடுமையான சட்டவரைவைக் கொண்டு வந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். பி.லி: ஆம், விசாரணையின்றி கைது செய்யலாம், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அங்கேயே உங்களைத் திருப்பி அனுப்ப முடியும். நீங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்கும் 17 வயது நிரம்பியவர் என்றால், தாலிபானின்கீழ் ஒரு குரானிய பள்ளிக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள் அல்லது வழக்கமான இராணுவத்திற்கு அனுப்பப்பட்டு மரணத்தை முகங்கொடுப்பீர்கள் என்பதையே இது குறிக்கிறது. நாட்டின் எல்லா பிரச்சினைகளும் புலம்பெயர்ந்தவர்களாலும், ஏனையவர்களாலும் தான் ஏற்படுகின்றன, ஆகவே நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் இந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என்று கூறுவது அரசியல்வாதிகளுக்கு மிகவும் சாதாரணமாக இருக்கிறது. இது பிரித்து ஆட்சி செய்வதற்கான ஒரு கொடூரமான பாப்புலிசம் ஆகும் பெஸ்ஸென் நம்பத்தகுந்த நபர் கிடையாது. உண்மையில் அவர் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் சார்க்கோசியின் புலம்பெயர்வு சட்டங்களுக்குக் கண்டனம் தெரிவித்து கோபமாக ஓர் அறிக்கையும் எழுதினார். ஆனால் கடந்த தேர்தலுக்குப் பின்னால், காற்று திசைமாறுவதை உணர்ந்த பெஸ்ஸென், அந்த வெற்றியாளர்களின் பக்கம் தன்னைத் திருப்பிக் கொண்டார். இதுமாதிரியான நபர்கள் மிகவும் மோசமானவர்கள். இவர்கள் அம்பலப்படுத்தப்பட்ட பாதிரிகளைப் போன்றவர்கள். ரி.பி: "வித்தியாசமான உலக அமைப்புமுறை" என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினீர்கள், அதை நீங்கள் சிறிது விரிவாக கூற முடியுமா? பி.லி: மக்கள் எங்கே, எப்போது பயணிக்க வேண்டும் என்பதை அரசாங்கங்கள் சொல்வதென்பது மிகவும் விசித்திரமானது, அத்துடன் தவறானதும் கூட. சட்டவிரோதம் என்றும், வெளியாட்கள் என்றும் அரசாங்கங்கள் பேசுகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவை ஆங்கிலேயர்கள் கையில் எடுத்த போது, அவர்கள் வெளியாட்களாக இருக்கவில்லையா? நீங்கள் தெருவில் நடந்து செல்லும் போது, ஒருபுறம் வெயிலும், மறுபுறம் மழையும் இருந்தால், இயற்கையாகவே நீங்கள் மழையில்லாத பக்கத்திற்கு செல்லத் தான் விரும்புவீர்கள். இது வெளிப்படையானது. யுத்தங்களிலிருந்து தப்பித்து, ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஏன் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை? உலக பிரிவு மிகவும் ஒடுங்கியும், குறுகியும் இருக்கிறது. காதல் சார்ந்த கண்ணோட்டமாக கூட இருக்கலாம். ஆனால், மக்கள் அவர்கள் எங்கே விரும்புகிறார்களோ, அங்கே பயணிக்கவும், வாழவும் அனுமதிக்கப்பட வேண்டும். அந்த கண்ணோட்டத்தைத் தான் நாம் கொண்டிருக்க வேண்டும். K.H: Welcome திரைப்படம் பிரான்சில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த பிரதிபலிப்பை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? இது ஓர் அரசியல் நிலைமையின் மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக உணர்கிறீர்களா? பி.லி: பார்வையாளர்கள் காதல் கதையால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் ---அதுவோர் உணர்வுப்பூர்வமான காந்தம்--- ஆனால் Welcome திரைப்படத்தைப் பார்த்த பின்னர், அகதிகள் முகங்கொடுக்கும் நிஜமான நிலைமை குறித்தும் அவர்கள் சிந்திக்கிறார்கள். K.H: Welcome திரைப்படத்திற்கு கிடைத்த பிரதிபலிப்புகளில் மிகவும் நினைவுகூறத்தக்க பிரதிபலிப்பைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? பி.லி: பல்வேறு பிரதிபலிப்புகள் நிறைய கிடைத்தன. பொதுவாக நீங்கள் ஒரு நல்ல திரைப்படத்தைச் செய்யும் போது, மக்கள் உங்களை சபாஷ்! என்று சொல்லி வாழ்த்துவார்கள். இந்தப் படம் முடிந்ததும் என்னைப் பார்க்க வந்த மக்கள், நன்றி என்று சொன்னார்கள். இது சபாஷ்! என்பதை விட சிறப்பாக இருந்தது. மிகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது. ஆமாம், இந்த திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் ஆதரவு அரசியல் சிந்தனையில் இருக்கும் மாற்றத்தைக் குறிப்பிட்டு காட்டுவதாகவே நினைக்கிறேன். நிச்சயமாக நான் அவ்வாறு தான் நினைக்கிறேன். இந்த திரைப்படம் புலம்பெயர்ந்தவர்களைக் குறித்து எடுக்கப்பட்ட என்னுடைய முதல் படமல்ல. மேலும் இதுவே கடைசி படமாகவும் இருக்காது என்பது எனக்குத் தெரியும். ஒரு புதிய சூழ்நிலை அபிவிருத்திகண்டு வருகிறது. |