World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

State repression beats back Jammu and Kashmir public sector strike

ஜம்மு மற்றும் காஷ்மீர் பொதுத்துறை வேலை நிறுத்தத்தை அரச அடக்குமுறை தோற்கடிக்கிறது

By Arun Kumar and Ganesh Dev
15 April 2010

Back to screen version

வட இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் 450,000 தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களானது ஒரு போர்க்குணம்மிக்க 12-நாள் தொடர்ந்த வேலைநிறுத்தத்தை அரசாங்க அடக்குமுறை நடவடிக்கையை அடுத்து அடிபணிந்து புதனன்று கைவிட்டனர்.

பல நாட்களாக ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள், மருத்துவமனை தொழிலாளர்கள், ஒரு மின்சார சேவைகள் நிறுவனம் மற்றும் அரசாங்க நிறுவன ஊழியர்கள் உட்பட அனைவரும் இந்தியாவின் தொழிலாளர் விரோத ESMA எனப்படும் அடிப்படைப் பணிகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசாங்கம் வெளியிட்டிருந்த ஆணையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

செவ்வாயன்று, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் வேலைநிறுத்தத்தை முறிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அரசாங்கத்தை அறிவுறுத்தியது. "வேலை நிறுத்தத்தில் ஈடுட்டுள்ள ஊழியர்களுக்கு எதிராக தேவையான, கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து செயலையும் மேற்கொள்ள வேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

2002 ம் ஆண்டில் ஒரு இகழ்வான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி மாநில உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை கொடுத்தது. முந்தையதின்படி இந்தியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு அரசியலமைப்பு வகையில் உரிமை இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இது இந்தியாவின் கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்கள் தம் விருப்பப்படி வேலைநிறுத்தங்களை சட்ட விரோதமானவை என்று அறிவித்து வேலைநிறுத்தம் செய்பவர்கள், அதன் தலைவர்களை கைது செய்து, ஏராளமான பேரைப் பணிநீக்கம் செய்தல் உட்பட மிக கடுமையான பதிலடிகள் கொடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் கொடுக்க வைத்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்னதாகவே, மாநில அரசாங்கம்--ஒரு பிராந்திய கட்சியான ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாடும் இந்தியக் கூட்டணி அரசாங்கத்தின் மேலாதிக்க கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி--வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு தீவிர அச்சுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும் எடுத்தது.

அவற்றில் கீழ்கண்டவையும் அடங்கியிருந்தன:

* குறைந்தது 6 தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது.

* உள்ளுர் அதிகாரிகளுக்கு மறியல் கூட்டத்தை வீடியோ செய்யுமாறு மாநில அரசாங்கம் உத்தரவிட்டது. இதையொட்டி வருங்காலத்தில் பதிலடி கொடுக்க போர்க்குணம் மிக்க தொழிலாளர்கள் அடையாளம் காணப்படலாம்.

* நீர் பாய்ச்சி கூட்டத்தை கலைத்தல் மற்றும் தடியடி நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்ட ஒரு பொலிஸ் வன்முறைத் தாக்குதல் மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில் நடத்தப்பட்டதில் 20 தொழிலாளர்களுக்கும் மேல் காயமுற்றனர்.

* கடந்த திங்கள் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்ற அச்சுறுத்தல் அரசாங்கத்திடம் இருந்து வெளிவந்தது.

Greater Kashmir க்கு மூத்த அரசாங்க அதிகாரிகள் "கசிய விட்ட" தகவலில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டின் தலைவருமான உமர் அப்துல்லா பொது நிர்வாகத் துறையை போராட்டத்திற்கு வழிநடத்தி "தொந்திரவு கொடுப்போர்" பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும், அதையொட்டி "அவர்கள் கடுமையாக நடத்தப்படுவர்" என்று கூறியதும் வெளிவந்தது.

ஏப்ரல் 12ம் திகதி, ஜம்மு-காஷ்மீர் பிரதேச (மாநில) காங்கிரஸ் குழுவின் தலைவரான பேராசிரியர் சைபுதின் சோஸ் அரசாங்க ஊழியர்கள் விரைவில் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுக்கு பதிலாக வேலை செய்ய உடன்படும் கருங்காலிகளுக்கு ஏற்பாட்டைத் தான் செய்ய இருப்பதாக கூறினார். "அவர்களுடைய கோரிக்கைகள் உண்மையற்றவை என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு மாநிலம் முழுவதற்கும் பாதிப்பு கொடுப்பது நியாயமற்றது ஆகும். அடுத்த 3 நாட்களுக்குள் வேலைக்கு திரும்பவில்லை என்றால், கட்சித் தொண்டர்களை அவர்களுக்கு பதிலாக திரட்டுவேன்" என்று சோஸ் அறிவித்தார்.

தன்னுடைய அச்சுறுத்தலுக்கு கனம் கொடுக்கும் விதத்தில் சோஸ் மாநிலத்தில் உள்ள ஏராளமான வேலையற்றவர்கள் எண்ணிக்கையை சுட்டிக் காட்டினார். இந்தியா முழுவதிலும் இங்குத்தான் வேலையின்மை விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன. "ஆயிரக்கணக்கான படித்த, வேலையற்ற இளைஞர்கள் வேலைக்குக் காத்திருக்கின்றனர். பொதுத்துறை தொழிலாளர்கள் தங்கள் போக்கை திருத்திக் கொள்ளவில்லை என்றால், அரசாங்கம் புதிய ஊழியர்களை கொண்டு வரும் விருப்புரிமைக்கு தள்ளப்படும்" என்றார் சோஸ்.

செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சில மணிநேரங்களுக்குள் குறைந்தது ஒரு தொழிற்சங்கமாவது வேலைநிறுத்தத்தை அது முடிப்பதாக அறிவித்தது. புதனன்று மற்ற தொழிற்சங்கங்களும் அதைப் பின்பற்றி, முதல் மந்திரி அப்துல்லா தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி தலைவர்களுடன் விவாதிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறின.

கடந்த ஜூலை 31 அன்று அளிக்கப்பட்ட ஊதிய உயர்வு, தேசிய ஆறாவது சம்பளக் குழு பரிந்துரைத்தபடி ஜனவரி 2006ல் இருந்து வழங்கப்பட வேண்டும். ஓய்வூதிய வயது 58ல் இருந்து 60 என உயர்த்தப்பட வேண்டும்; தற்காலிக, அன்றாட, இடைக்கால ஊழியர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பவை இவற்றுள் அடங்கியிருந்தன.

"முதல் மந்திரி கொடுத்துள்ள உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்று நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். அரசாங்கம் கைது செய்துள்ள எங்கள் சக ஊழியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று நம்புகிறோம்" என்று ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவரான குர்ஷிட் ஆலம் கூறினார்.

தொழிலாளர்கள் கோரிக்கையை நிறுவேற்றுவது பற்றி கட்டுப்பட்ட அரசாங்கத்தின் உறுதியை வெல்வது ஒரு புறம் இருக்க, ஆலமின் அறிக்கை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான பதிலடிகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்ற உத்தரவாதங்களை கூட அரசாங்கத்திடம் இருந்து பெறாமல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஏப்ரல் 3 அன்று தொடங்கிய வேலைநிறுத்தமானது இந்து மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஒரு பொதுப் போராட்டத்தில் ஒன்றாகக் கொண்டுவந்தது. நீண்ட காலமாக மிக அதிக வகுப்புவாத அடிப்படை எதிர்முனையில் இருந்த தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஐக்கியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்தியாவின் ஒரேயொரு முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட மாநிலமான காஷ்மீர் கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய ஆட்சிக்கு எதிரான எழுச்சியால் அதிர்வு கொண்டுள்ளது--இந்த எழுச்சி 1987ல் மாநிலத் தேர்தல்களில் ராஜிவ் காந்தி அரசாங்கத்தின் திமிர்த்தன மோசடி மற்றும் வட இந்தியாவில் இந்து மேலாதிக்க வளர்ச்சி ஆகியவற்றால் தூண்டிவிடப்பட்டது ஆகும்.

இந்த எழுச்சியை அடக்குவதில், இந்திய அதிகாரிகள் சிவில் உரிமைகள் மீது கடுமையான தடுப்புக்களை சுமத்தியுள்ளனர். அடிக்கடி முழு முஸ்லிம் சமூகத்தையும் இலக்கு கொண்டு, பெரும் வன்முறையையும் பயன்படுத்தியுள்ளனர். அதில் விசாரணையற்ற மரண தண்டனைகளும் சித்திரவதையும் அடங்கும். தங்கள் பங்கிற்கு எழுச்சியாளர்கள் இந்துக்கள் மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள் மீது வகுப்புவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் இந்து மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு இடையே இருந்த ஐக்கியம் காட்டப்பட்டது பற்றி இந்திய செய்தித்தாள் கவனத்தில் கொண்டு, சமீபத்திய ஆண்டுகளில் மற்ற போராட்டங்களில் எழுப்பப்பட்டிருந்த கோரிக்கைகள் போல் இல்லாமல், வேலைநிறுத்தக்காரர்கள் "ஒரு குறிப்பிட்ட குழுவுடன் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை" என்று எழுதியது.

வேலைநிறுத்தத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தன அடக்குமுறை ஆகியவற்றின் முக்கியத்துவம் இருந்தாலும், இடது முன்னணியின் மேலாதிக்க பங்காளி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்திற்கு தொழிலாளர்களை தயாரிப்பதற்கான ஒரு ஆதரவு திரட்டுவதற்கு ஏதும் செய்யவில்லை. CPI (M) வலைத் தளம் வேலைநிறுத்தம் பற்றி எந்தக் குறிப்பையும் கூறவில்லை. உள்ளுர் CPI(M) பிரிவானது முதல் மந்திரி உமர் அப்துல்லாவிற்கு மத்திய அரசாங்கத்திடம் கூடுதலான நிதிக்கு முறையீடு செய்ய அனைத்துக் கட்சி குழுவிற்கு தலைமை தாங்கிச் செல்லுமாறு கோரியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved