World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government suffers reversal in its war on Maoists and tribals

மாவோயிஸ்டுக்கள் மற்றும் பழங்குடிகள் உடனான அதன் போரில் இந்திய அரசாங்கம் பின்னடைவைச் சந்திக்கின்றது

By Kranti Kumara
21 April 2010

Use this version to print | Send feedback

காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், மாவோயிச எழுச்சி விரிவடைதலுக்கு எதிராக போர் பாதையில் நிற்பதற்கு, ஏப்ரல் 6ம் தேதி மாவோயிச கெரில்லாக்கள் நடத்திய தீவிரத் தாக்குதலால் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. அத் தாக்குதலில் 76 பாதுகாப்பு படையினர் கிழக்கு மாநிலமான சட்டிஸ்கரில் உள்ள காடுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரையும் இல்லாத அளவிற்கு டன்டேவாடாத் தாக்குதல் மாவோயிஸ்டுகளிடத்தில் அதாவது நக்சலைட்டுக்கள் என்றும் அறியப்படும் இவர்களால் இந்திய அரச படைகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களில் மிகப் பெரியதாகும். விவசாயிகளைத் தளமாகக் கொண்டும், இன்னும் சமீபத்தில் இந்தியாவின் ஒடுக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களையும் தளமாகக் கொண்ட ஒரு "நீண்ட மக்கள் யுத்தத்தை" இந்த அமைப்பு நான்கு தசாப்தங்களாக அபிவிருத்தி செய்ய முயன்று வருகிறது.

சமீப ஆண்டுகளில் நாட்டின் 626 நிர்வாக மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டவற்றில் பரவியுள்ள மாவோயிச எழுச்சியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது நாட்டின் "மிகப் பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்று கருதுகிறது. ஏனெனில் இது, காங்கிரஸ் கட்சியின் இலக்கான பழங்குடி மக்களின் நிலங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக கைப்பற்றுதல் என்பதற்கு குறுக்கே நிற்கிறது. மே 2009ல் இரண்டாவது ஆட்சிக் காலத்திற்கு மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட பின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமானது மாவோயிசத் தலைமையிலான பழங்குடி எழுச்சியை அடக்குவதற்கு உயர் முன்னுரிமையை அறிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு காட்டுமலைப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களின் பிரிவுகள் பல தசாப்தங்களாக நீடித்த அடக்குமுறை, இடம் பெயர்தல் மற்றும் படுகொலைகளை இந்திய அரசிடம் இருந்து அனுபவித்த பின், பெரும் நம்பிக்கை இழந்து மாவோயிஸ்டுக்கள் பக்கம் திரும்பியுள்ளன.

இறந்த 76 பேர்களில், 75 பேர் இந்திய அரசாங்கத்தின் துணை இராணுவ மத்திய ரிசேர்வ் பொலிஸ் படையை (CRPF) ஐச் சேர்ந்தவர்கள், ஒருவர் சட்டிஸ்கர் மாநில அரச பொலிஸைச் சேர்ந்தவர்

தாக்குதல் நடந்து இரு தினங்களுக்கு பின்னர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதலின் முக்கிய அரசியல் சிற்பியான உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தன் இராஜிநாமாவை எழுத்து மூலம் சமர்ப்பித்தார். வியப்பு ஏதும் இல்லாத வகையில் இது பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியால் உடனே நிராகரிக்கப்பட்டது. பிந்தையவரைத்தான் சிங் UPA அரசாங்கத்தின் உண்மையான தலைவர் என ஒப்புக் கொள்ளுகிறார்.

அரசாங்கத்தின் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலானது Operation Green Hunt (பசுமை வேட்டை நடவடிக்கை) என்று கூறப்பட்டது ஆறு மாநிலங்களில் விரிந்துள்ளது; முக்கியமாக கிழக்குப் பகுதியில் என்பதுடன் ஏற்கனவே அதிக ஆயுதம் தரித்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மத்திய அரசாங்கத் துணை இராணுவமும் மற்றும் பொலிஸ் பிரிவுகளும் ஆறு மாநிலங்களிலும் ஈடுபட்டுள்ளது.

பசுமை வேட்டை நடவடிக்கையை நடத்திவரும் 80,000க்கும் அதிகமான துணை இராணுவப் படையினர் இந்திய இராணுவத்திடம் இருந்து காட்டுப் பகுதி போர்முறைப் பயிற்சியையும் விநியோக உதவியையும் பெற்று வருகின்றனர்.

சிதம்பரத்தின் போக்கையும், கெளரவத்தையும் டன்டேவாடா தாக்குதில் வெற்றி தீவிரமாக உடைத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. பசுமை வேட்டை நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே இந்திய உள்நாட்டு அமைச்சரகம் அதன் திட்டத்தை மேற்பார்வையிட்டு வந்தது. ஒருங்கிணைப்பதிலும், பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் முதலாவது தேசிய அளவில் இயக்கப்பட்ட மாவோயிச எழுச்சி எதிர்த் தாக்குதலை வளர்த்ததில் சிதம்பரம் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

சிதம்பரம் பசுமை வேட்டை நடவடிக்கையை வளர்த்ததன் அதிக பகிரங்கப் பங்கு தாக்குதலினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அதிகமாக்கியுள்ளது என்று The Times of India கூறியுள்ளது. "இதன் விளைவுகள் சாதாரணமாக இருக்கக்கூடியதை விட அதிகமாகும். ஏனெனில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒரு பொது முன்னணியைக் காண்பதில் ஈடுபட வேண்டும் என்று மாநிலங்களுக்கு அழைப்பு விடுவதில் சிதம்பரம் அப்பட்டமாகப் பேசியிருந்தது இதற்குக் காரணமாகும்." என்றும் அது எழுதியுள்ளது.

எனவே டான்டேவாடா தாக்குதலுக்குப் பின்னர் முக்கிய எதிர்க்கட்சிகள் அதாவது இந்து மேலாதிக்க BJP யில் இருந்து இடது முன்னணி வரை அரசாங்கத்திற்கு ஆதரவாக பகிரங்கமாக நின்று எழுச்சி எதிர் நடவடிக்கைகளுக்கு தங்கள் தொடர்ந்த ஆதரவைக் கொடுத்ததில் அரசாங்கம் திருப்தி அடைந்துள்ளது.

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான BJP பொதுவாக UPA அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுப்பதும், பயங்கரவாதம் பற்றி அரசாங்கம் மிருதுவான போக்கைக் கொண்டிருப்பதாகவும் இந்தியாவின் வறிய முஸ்லிம் சிறுபான்மைக்கு ஆதரவளிப்பதாகவும் பலமுறையும் கூறுவதாக காட்டிக் கொள்ளும் ஆனால் டான்டேவாடா தாக்குதலை அடுத்து உடனடியாக BJP சிதம்பரத்திற்கு ஆதரவாக விரைந்து மாவோயிச எழுச்சியை எதிர்கொள்ளுவதில் அவர் சிறந்தவர் என்று பாராட்டியது.

இடது முன்னணியின் முக்கிய பங்காளியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது [CPM], இதே போல் பசுமை வேட்டை நடவடிக்கைக்கும் சிதம்பரத்திற்கும் தன் ஆதரவை அறிவித்தது. தாக்குதல்கள் நடந்த பிந்தைய நாட்களில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோ உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதல் மந்திரி புத்ததேப் பட்டாச்சார்ஜி உட்பட பல மூத்த CPM தலைவர்கள், மாவோயிச எழுச்சி இந்தியாவை எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்னும் மன்மோகன் சிங்கின் வாதத்தைப் பலமுறையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தங்கள் ஆதரவை ஸ்ராலிஸ்டுக்கள் நியாயப்படுத்தியது அதிகப் பின்காலத்தில் இல்லை--இடது முன்னணியானது நான்கு ஆண்டுகளுக்கு ஆளும் கூட்டணிக்குப் பாராளுமன்றப் பெரும்பான்மையை கொடுத்தது. அது ஜூன் 2008ல்தான் முடிவடைந்தது--அதுதான் "வகுப்புவாத பாசிச" BJP பதவிக்கு மீண்டும் வருவதைத் தடுக்கும் ஒரே வழி என்று அவர்கள் வாதிட்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் BJP உடன் சேர்ந்துகொண்டு மாவோயிச எழுச்சியை புஷ்ஷின் "பயங்கரவாதத்தின்மீது போர்" என்ற விதத்தில் சித்தரிப்பதில் சேர்ந்து கொண்டுள்ளனர். இந்தப் பழங்குடி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது, அவர்களின் மேல் நடத்திய அரசாங்க வன்முறைகள் இவற்றைக் குறைவாகக் கூறி, இல்லாவிட்டால் நிராகரிக்கும் விதத்தில்தான் பேசியுள்ளனர்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது சிதம்பரத்திற்கு பட்டாச்சார்ஜி ஒப்புதல் கொடுத்துள்ளது ஆகும். ஏப்ரல் தொடக்கத்தில் உள்நாட்டு மந்திரி பகிரங்கமாக மேற்கு வங்க முதல் மந்திரியை மேற்கு வங்கத்தில் பெருகியுள்ள அரசியல் வன்முறைக்காக கடிந்து கூறி, அதையொட்டி வருங்காலத்தில் ஒரு மாநிலத்தை சட்டம் ஒழுங்கு முறிந்தால் அதை "ஜனாதிபதி", அதாவது மத்திய ஆட்சியின்கீழ் கொண்டுவரலாம் எனக்கூறும் அரசியலமைப்பு விதி 356 ஐ உபயோகிக்கக்கூடும் என்ற அடையாளத்தை காட்டியிருந்தார். ஒரு வங்க பிராந்தியக் கட்சியும், காங்கிரஸ் தலைமையில் உள்ள UPA கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியுமான திருணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த மே மாத தேசியத் தேர்தல் முடிந்ததில் இருந்து பிரச்சாரம் செய்து வருகிறது. அது CPM க்கும் இடது முன்னணிக்கும் அவமானகரமான தேர்தல் தோல்வியை கொடுத்திருந்தது.

சிதம்பரத்தின் கடிந்துரையால் இன்னும் தலைதூக்கவில்லை என்றாலும், பட்டச்சார்ஜி டன்டேவாடா தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில், "எவரையும் குறைகூறும் நேரமல்ல இது. ஒன்றாக உழைக்க வேண்டிய நேரமாகும். நாம் கூட்டாக உழைக்க வேண்டும்" என்று அறிவித்தார்.

அதாவது போரை நடத்துவதில் "கூட்டாக உழைக்க வேண்டும்" என்று பொருள். பசுமை வேட்டை நடவடிக்கைக்கு பொது ஆதரவைத் திரட்டுவதில் சிதம்பரம் முன்பு அரசாங்கம் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் CPI(Maoist)"சமாதானப் பேச்சுக்கள்" நடத்த அரசாங்கத்தின் விருப்பத்தைப் பற்றி பேசியிருந்தார். ஆனால் இப்பொழுது இத்தாக்குதல் "பயங்கரவாதிகளுடன்" பேச்சுக்களுக்கு இடம் இல்லை என்பதற்கு நிரூபணமாக அரசியல் ஸ்தாபனத்தால் மேற்கோளிடப்பட்டுள்ளது.

இந்தியப் பாதுகாப்புப் படைகளானது மனித உரிமைகள் மீறலுக்காக இழிவு பெற்றவை. அவற்றுள் விசாரணையற்ற மரணதண்டனைகளும் சித்திரவதையும் உள்ளன. ஆனால் சிதம்பரமோ இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, "மாவோயிஸ்டுகளின் காட்டுமிராண்டித்தனத் தன்மையை இது காட்டுகிறது--அவர்களால் இயலுமான மிருகத்தன, காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகிறது." என்று அறிவிக்கப் பயன்படுத்தினார். ஆளும் உயரடுக்கின் பழிவாங்கும் உணர்விற்குக் குரல் கொடுக்கும் வகையில் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அரசாங்கம் மாவோயிஸ்டுகளுக்கு "தக்க விடையிறுக்கும்" என்று உறுதியளித்தார்.

பசுமை வேட்டை நடவடிக்கைக்கு ஆதரவாக இன்னும் 6,000 CRPF துருப்பினர் பயன்படுத்தப்படுவர் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள 50 வீடுகள் கொண்ட முக்ரம் என்னும் கிராம மக்கள் CRPF அதிகாரிகளிடம் இருந்து பதிலடி வரும் என்ற அச்சத்தில் காட்டிற்குள் ஓடிவிட்டனர் என்றும் முக்ரம் கிராம மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு கொடுத்த தகவல்தான் தாக்குதலுக்கு உதவியது என்று குற்றம் சாட்டியுள்ளனர் என்று Hindu தகவல் கொடுத்துள்ளது. ஒரு கிராமவாசி, "கிராமத்தைத் தாக்குவதின் மூலம் பொலிஸ் பழிவாங்கும் என்று அனைவரும் பீதியில் உள்ளனர். ஏற்கனவே அவர்கள் ஒருவரைக் கொன்றுவிட்டனர்" என்று கூறியதாக ஏப்ரல் 12 திகதி Hindu மேற்கோளிட்டுள்ளது.

டன்டேவாடா தாக்குதல் இந்திய உயரடுக்கிற்குள் மாவோயிச எழுச்சியாளர்களை அடக்குவதற்கு இந்திய இராணுவத்தை நேரடியாகப் பயன்படுத்துவது பற்றிய விவாதங்களைப் புதுப்பித்துள்ளது. UPA அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள், பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் உள்துறை மந்திரி சிதம்பரம் இருவரும் செய்தி ஊடகத்திடம் "அனைத்து வழிகளும் திறந்து இருக்கின்றன" என்று கூறினார்கள்.

அரசியல் ஸ்தாபனத்தில் பலரும் எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கையில் இராணுவத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகையில், இராணுவம், விமானப்படைத் தலைவர்கள் பகிரங்கமாக அத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தின் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக உயர்த்தப்பட்டுள்ள தளபதி விஜய் சிங், "நக்சலைட் பிரச்சினை ஒரு சட்ட, ஒழுங்குப் பிரச்சினை, மாநில விவகாரம் ஆகும். ஆட்சி, நிர்வாகம், சமூகப் பொருளாதாரக் காரணிகள் என்று இருக்கும் பிரச்சினைகளில் இருந்து இது வந்துள்ளது" என்று கூறினார்.

இதேபோல் விமானப் படைத் தலைவர், "இராணுவம்-விமானப்படை, தரைப்படை, கடற்படை--ஆகியவை குறைந்த இறப்பு இயக்கத்திற்கு பயிற்சி கொடுக்கப்படவில்லை. நாங்கள் கொண்டிருக்கும் ஆயுதங்கள் எல்லை கடந்தவற்றிற்குத்தான். எனவே நக்சல் பிரச்சினை போன்ற நிலைமைகளில் விமானப்படை பயன்படுத்தப்படுவதை நான் ஆதரிக்கவில்லை." என்று கருத்துக் கூறினார்.

இந்திய இராணுவத்தின் உயர் தலைமை அதிக தீவிரமற்ற போரில், மன ஊக்கத்தை தளரவகைக்கும், இராணுவத்திற்கு மக்கள் ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போரில் ஈடுபட அஞ்சுகிறது. மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கையில் இராணுவத்தை ஈடுபடுத்துவது எதிர்பாரா பதிலடி கொடுக்கக்கூடும், அரசாங்க எதிர்ப்பு உணர்வை கொடுமைகளும் அடக்குமுறையும் தூண்டிவிடும் என்றும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

டன்டேவாடா தாக்குதல் இந்திய முதலாளித்துவம் மற்றும் அதன் அரசாங்கம் பழங்குடி மக்களுடன் கொண்டுள்ள உறவைச் சுட்டிக் காட்டுகிறது. அரசாங்க அதிகாரிகள் வெளியாட்கள் என்று காணப்படுகின்றனர். இராணுவப் பாதுகாப்பு துருப்புக்கள் ஒரு புறம் இருக்க, அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பைக் கூட கிராம மக்கள் ஒதுக்குகின்றனர்.

அப்படி இருந்தும், மாவோயிச எழுச்சி தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களுக்கும் ஒரு முன்னேற்றப்பாதையைக் கொடுக்கவில்லை. ஒரு பிற்போக்குத்தன தேசியவாத-ஸ்ராலினிச இயக்கம் தான் நக்சலைட்டுகளுடையது. அது நீண்ட காலம் முன்னரே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம், மேலாதிக்கம் ஆகியவற்றிற்கான போராட்டத்தை அதாவது சோசலிச நனவை நிராகரித்துள்ளது. மாறாக, அவர்கள் கிராமப்புற தளத்தைக் கொண்ட கெரில்லா போர் முறையின் வளர்ச்சியை தங்கள் செயற்பாட்டின் குவிப்பாகக் கொண்டுள்ளனர்.

CPI மற்றும் CPM போலவே, தன்னுடைய தோற்றத்தில் தன்னுடைய அடையாளத்தை கொண்டுள்ள அது அவற்றின் வரலாற்றை வணங்குகின்ற விதத்தில் மாவோயிஸ்டுகளும் CPI(Maoist) சோசலிசத்திற்கான போராட்டம் இந்தியாவின் வரலாற்றுச் செயற்பட்டியலில் இன்னும் இல்லை என்று கூறுகிறது. அது ஒருங்கிணைந்த ஆயுதமேந்திய போராட்டத்துடன் பல சாதி, இனங்கள், பழங்குடி அடையாளங்களை ஊக்குவிப்பது மற்றும் முதலாளித்துவ ஸ்தாபனத்தில் உள்ள கட்சிகளின் சந்தர்ப்பவாத தந்திர உத்திகளையும் இணைப்பது என்று நடந்து கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுக்கள் திருணமூல் காங்கிரசுடன் தங்களை இணைத்துக் கொண்டு, இந்த வலதுசாரி காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிவதற்கும், அடிக்கடி BJP ஐ மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்திற்கு பெருகிய மக்கள் எதிர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் செயல்படும் அமைப்பின் முயற்சிகளுக்கு உதவியுள்ளது.

டன்டேவாடா தாக்குதலை அடுத்து உடனடியாக மாவோயிஸ்டுக்கள் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுக்களுக்கான தங்கள் அழைப்பை வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய நக்சல் எழுச்சி ஒரு புறத்தில் இந்தியாவின் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் இருக்கும் பெரும் மோசமான நிலைமைகளால் என்று கூறமுடியும். மறுபுறம் ஸ்ராலினிச இடது முன்னணி தொடரும் குற்றம் சார்ந்த கொள்கைகளினால் எனலாம். பல தசாப்தங்களாக CPI மற்றும் CPM இரண்டும் தொழிலாள வர்க்கத்தை இந்திய உயரடுக்குக் கட்சிகளின் பாராளுமன்ற தந்திர உத்திகளுக்கு தாழ்த்தியுள்ளன. இதையொட்டி அவை இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டன. அவர்கள் அரசாங்கம் அமைத்துள்ள மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், சிறிதும் குழப்பமின்றி அவர்கள் முதலீட்டுச் சார்புடைய கொள்கைகளை தொடர்கின்றனர்.

சமூக நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வை முன்வைப்பதற்கு தொழிலாள வர்க்கம் தடுக்கப்பட்டுவிட்டதால்தான் மாவோயிசம் தற்காலிகமாக இந்தியாவின் மிக வறிய பழங்குடிப் பிரிவுகள் ஒன்றின் ஆதரவைப் பெற முடிந்துள்ளது. நிலப்பிரபுத்துவமுறை மற்றும் சாதியம் ஆகியவற்றை ஒழித்தும் இன்னும் ஜனநாயகப் புரட்சியால் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இந்தியாவின் உழைக்கும் மக்களை முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிவதற்கு அணிதிரட்டவேண்டும்.