World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

To workers at closed Clairoix tire plant

திக்ஷீணீஸீநீமீ: சிஷீஸீtவீஸீமீஸீtணீறீ ஷீயீயீமீக்ஷீs 137-ணீ-னீஷீஸீtலீ ழீஷீதீs வீஸீ ஜிuஸீவீsவீணீ

மூடப்பட்டுள்ள கிளேறுவா டயர் ஆலைத் தொழிலாளர்களுக்கு

பிரான்ஸ்: கொன்டினென்டல் துனிசியாவில் மாதம் 137 யூரோக்களுக்கு வேலைகளைக் கொடுக்க முன்வருகிறது

By Kumaran Ira and Alex Lantier
14 April 2010

Back to screen version

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கொன்டினென்டல் டயர் தயாரிப்பு நிறுவனம் அதன் Clairoix ஆலையில் பணிநீக்கம் செய்திருந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் துனிசியாவில் வேலைகளைப் பெறலாம் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, தொழிலாளர்கள் கடும்சீற்றம் அடைந்தனர். ஏனெனில் அங்கு அவர்கள் பிரான்சில் மூன்று நாள் குறைந்த பட்ச ஊதியத்திற்கு சமமாக, மாதத்திற்கு 137 யூரோக்களைப் பெறுவர்.

மார்ச் 2009ல் வடக்கு பிரான்சில் Clairoix ல் உள்ள தன் ஆலையை மூடுவதாக கொன்டினென்டல் அறிவித்தது. அதைத் தவிர ஜேர்மனியில் உள்ள அதன் ஹனோவர் ஆலையையும் மூட இருப்பதாகக் கூறியது. இவற்றில் இருந்து 1,900 வேலைகள் அகற்றப்பட்டன. Clairoix ஆலை ஆண்டு ஒன்றுக்கு 8 மில்லியன் டயர்களை தயாரித்து வந்தது. 2008ம் ஆண்டு இது 28 மில்லியன் யூரோக்கள் இலாபத்தை பெற்றது.

கொன்டினென்டல் கூற்றின்படி Clairoix ஆலை அதிக உற்பத்திச் செலவுகளை ஒட்டி மூடப்பட்டது என்பதாகும். ஆலை மூடல்களையும் உற்பத்தி வெட்டுக்களையும் நியாயப்படுத்தும் விதத்தில் நிறுவனம் ஐரோப்பா, சர்வதேச அளவில் கார் விற்பனை குறைவதைக் காரணம் காட்டியது. ஆனால், ஸ்ராலினிச செய்தித்தாள் l'Humanite மார்ச் 31ல் கூறியுள்ளபடி, "ஓராண்டிற்கு பின்னர் கொன்டினென்டல் அதன் பங்குதாரர்களுக்கு 325 மில்லியன் யூரோக்களை பங்குத் தொகையாகக் கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது."

மார்ச் 24ம் தேதி தொழிலாளர்கள் கொன்டினென்டலில் இருந்து அவர்களுக்கு துனிசியாவில் வேலை கொடுக்கும் வாய்ப்பு பற்றிய ஒரு கடிதத்தைப் பெற்றனர். "இந்தப் பணி உங்கள் தொழில்திறமைத் தகுதியை ஒத்திருக்கிறது என்றாலும், எங்கள் துனிசிய துணை நிறுவனம் மாதம் கொடுக்க இருக்கும் மொத்த சம்பளம் குறைந்தபட்ச ஊதியமான 260 டினார்கள்தான் என்பதை நாங்கள் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புறோம். துனிசியத் தரங்களுக்கு இது பொருந்தியிருந்தாலும், பிரான்சில் கொன்டினென்டல் கொடுத்து வந்த குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைந்ததுதான். ஆயினும்கூட இத்திட்டத்தை உங்கள் முன் வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு."

இத்தகைய வாய்ப்பைத் தருவது அதன் சட்டபூர்வ கடமை பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு புதிய வேலைகள் கொடுப்பது என்பதை மதிக்கும் விதத்தில் உள்ளது என்றும் கொன்டினென்டல் சிடுமூஞ்சித்தனமாக கூறியுள்ளது. AFP இடம் ஒரு கொன்டினென்டல் அதிகாரி பின்வருமாறு கூறினார்: "இது ஒரு சட்டபூர்வ கட்டாயம் ஆகும். இது ஒன்றும் ஒரு தூண்டுதல் அல்ல. உள் நிலைமை Clairoix ன் முன்னாள் ஊழியர்களின் தகுதிகளுக்கு ஒத்து உள்ளது, ஆலையில் பேசப்படுவது பிரெஞ்சு மொழி, எனவே இதை முன்வைக்கும் கட்டாயத்தில் உள்ளோம். இக்கடமைகளை மதிக்கவில்லை என்றால் ஒரு நீதிமன்றம் நிறுவனத்தை குற்றம் சார்ந்தது என்று கருதிவிடும்."

இந்த அதிகாரி ஒலிம்பியா என்னும் socks தயாரிப்பு நிறுவன விவகாரத்தைக் குறிப்பிட்டிருந்தார். அது ருமேனியாவில் அதன் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு புதிய வேலைகளை முன்வைக்காததற்காக 2.5 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கொடுக்குமாறு பிரெஞ்சு நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டது.

தன் நடவடிக்கைகளுக்கு ஒரு போலித்தன சட்டபூர்வ மறைப்பை அளிக்கும் முயற்சி இருந்தாலும், கொன்டினென்டல் உண்மையில் அதன் சட்டபூர்வக் கடமைகளைத் தவிர்க்க முயல்கிறது. கடந்த ஜூன் மாதம் ஆலை மூடல்போது தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் கொண்ட உடன்பாட்டில், ஆலை மூடலுக்கு இழப்பீடாக 50,000 யூரோக்கள், வேலை மாற்றங்களை ஊழியர்களில் 80 சதவிகிதத்தினருக்கு Clairoix ல் முன்பு கொடுக்கப்பட்ட நிகர ஊதியங்களின் 80 சதவிகிதம் அளித்தல் ஆகியவை அடங்கியிருந்தன. இப்பொழுது அது அத்தகைய வேலைகளைக் கொடுக்க முடியாது என்றும் அதற்குப் பதிலாக துனிசியாவில் 600 தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க விரும்புகிறது என்றும் நிறுவனம் கூறுகின்றது.

Clairoix தொழிலாளர்கள் கமிட்டியின் ஒரு உறுப்பினரான Christian Lahargure குறிப்பிட்டார்: "தொழிற்சாலை மூடல் உடன்பாட்டில் இருந்து வெளியேறும் விதத்தில், தொழிலாளர்களை மனச் சிதைவிற்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவற்றை அவர்கள் செய்கின்றனர்''

கொன்டினென்டலின் திட்டம் ஒரு வெட்கம் கெட்ட ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். இது முழுத் தொழிலாள வர்க்கத்தையும் தங்கள் பணியிடங்களில் தொழிலாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் தோற்கடிக்கப்படுவர் என்ற நினைப்பில் தள்ளும் ஒரு மிரட்டல் முயற்சி ஆகும். நிறுவனங்கள் தங்கள் வேலைகளை எப்பொழுதும் ஏழை நாடுகளில் உள்ள பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு குறிப்பாக பிரான்சின் முன்னாள் குடியேற்றங்களில் மிகக் குறைந்த ஊதியத்தில் கொடுக்க முயற்சிக்கின்றன.

இந்த வாதத்தை முன்வைக்கையில், ஆளும் வர்க்கம் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் வர்க்க ஒத்துழைப்பை முக்கியமாக நம்பியுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்ததில் இருந்து அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நடைபெற்ற தொடர்ச்சியான ஆலை மூடல்களில் கொன்டினென்டல் மூடப்பட்டதும் ஒரு பகுதியாகும். ஒரு ஆலை மூடப்படுவதற்கு இலக்கு கொள்ளப்பட்டபின், தொழிற்சங்கங்கள் ஆலையைத் தனிமைப்படுத்தி தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கான ஒரு நிதியை ஏற்க திட்டத்தை முன்வைப்பர். தொழிலாளர்கள் தோற்றவுடன், நிர்வாகமும், நீதிமன்றங்களும் பணித் துண்டிப்புப் பொதியின் விவரங்களை முடிவு செய்துவிடும்.

மிக அதிக விளம்பரப்படுத்தப்பட்ட, தனியார் துறையில் ஆலை மூடல்களுக்கு எதிரான வேலை நிறுத்தங்களை பிரான்ஸ் கண்டுள்ளது. குறிப்பாகக் கொன்டினென்டல், குட் இயர், மோலெக்ஸ் மற்றும் New Fabrics ஆகியவையாகும். இவற்றைத் தொடர்ந்து நிர்வாகிகள் கடத்தப்படுதல், ஆலைகள் தகர்க்கப்படும் என்ற அச்சுறுத்தல்களும் வெளிவந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு பரந்த மக்கள் ஆதரவு இருந்தது. ஏனெனில் அரசாங்கத்திற்கும் வங்கி பிணை எடுப்புகளுக்கும் மக்களின் விரோதப் போக்கு அந்த அளவு இருந்தது. மிகப் பரந்து இருந்த நிலைமை தடையற்ற சந்தைமுறை ஆதரவாளரும் முன்னாள் சோசலிசக் கட்சி வேட்பாளராக 2007 ஜனாதிபதித் தேர்தலில் நின்றவருமான செகோலின் ரோயால் ஏப்ரல் 2009ல் பகிரங்கமாக ஏன் தொழிலாளர்கள் இத்தகைய நடவடிக்கையை எடுக்கின்றனர் என்று தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று அறிவித்தார்.

Clairoix, Hanover ஆலைகளில் இருந்த தொழிலாளர்கள் கடந்த ஆண்டு கொன்டினென்டலின் ஆலை முடல்களுக்கு எதிராகக் கூட்டு எதிர்ப்புக்களை நடத்தினர். Clairoix ல் பல மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர், வேலை நிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்களும் நடந்தன. போராட்டம் இறுதியில் தொழிற்சங்கங்களால் தனிமைப் படுத்தப்பட்டு, தோற்கடிக்கப்பட்டன.

பரந்த வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதை தடுக்கும் பணி தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஆலைகளின் நடவடிக்கைகளை தனிமைப்படுத்துகின்றன. தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்ற அவர்களுடைய அச்சங்களை தவிர, முதலாளித்துவத்தின் இலக்கான பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதன் பேரில், முழுச்சுமைகளையும் தொழிலாளர்களின் முதுகில் கட்டியடிப்பதற்கு தொழிற்சங்கங்கள் உடன்பாடு கொண்டிருக்கிறது. கொன்டினென்டலை பொறுத்தவரை, அதன் நிர்வாகம் சுட்டிக்காட்டியது போல், "பணிநீக்கங்களுக்கான பொருளாதார உந்துதல்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளாலேயே நன்கு உணரப்பட்டன" என்பதாகும்.

இந்த ஆண்டு முழு நனவுடன் தனியார் துறைகளில் நடந்துவரும் வேலைநிறுத்தங்களை நாசப்படுத்தும் போக்கு தொடர்கிறது. பெப்ருவரி மாதம் Total எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் டன்கிர்க் சுத்திகரிப்பு தொழிலாளர்களுடன் ஒற்றுமையுடன் வேலைநிறுத்தம் செய்தனர். டோட்டல் நிரந்தர மூடலை அறிவித்ததால் ஏராள பணி நீக்கங்களை தொழிலாளர்கள் எதிர்கொண்டிருந்தனர். ஆறு நாட்களுக்கு பின்னர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தன. இதன்பின்பு, டன்கிர்க் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விற்கப்பட்டுவிட்டனர்.

அரசியல் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணி --தொழிலாளர்களை வலுவின்மையாக்கி தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு பின்னே தள்ளும் பணி-- முன்னாள் இடது அமைப்புக்களின் காட்டிக் கொடுப்போரிடம் உள்ளது. அதாவது ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PCF), LO எனப்படும் தொழிலாளர் போராட்டம் அமைப்பு, ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவற்றிடம் உள்ளது.

கொன்டினென்டல் மூடலுக்கு, இக்கட்சிகளின் இழிந்த சொற்றொடர் தேடும் முயற்சிக்கு உதாரணம் PCF செயலர் Marie Geroge Buffet இடமிருந்து வந்தது. "தவறான உறுதிமொழிகள் பலவற்றைக் கொடுத்து, குற்றம் சார்ந்த முதலாளிகள் கூட்டத்தை விரும்பியதை செய்வதற்கு அனுமதித்த அரசாங்கம் இப்பொழுது இந்த அனுமதிக்கப்பட முடியாத விவகாரத்தில் தலையிடுவதற்குக் கடமைப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இது அவருடைய வாசகர்களுடைய அறிவை அவமதிப்பதாகும். ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் அரசாங்கத்திற்கு ஏற்றம் கொடுக்கும் நயமற்ற முயற்சி ஆகும். டஜன் கணக்கான ஆலைகள் மூடலுக்கு பின்னர் Buffet, அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றியது என்று கூறியுள்ளார். எவரேனும் இந்த ஆலைத் தொழிலாளர்களுக்கு உதவ சார்க்கோசி "கடமைப்பட்டுள்ளார்" என்றால் நம்புவார்களா?

கடந்த ஆண்டு New Fasbris போராட்டம் நடந்தபோது, NPA பல பணியிடங்களில் நடக்கும் போராட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டது பற்றி குறிப்பிட்டு எழுதியது: "இன்று தொழிலாளர்களே உருப்படியான முன்னோக்குகளை விவாதித்து, முன்வைப்பதற்கான வாய்ப்பு ஆகும். ஆனால் அத்தகைய கூட்டம் வெறும் ஆணைப்படி நடத்தப்பட முடியாது... மூடப்படும் ஆலைகள் என்ற பாதிப்பிற்கு பிரான்சில் உட்பட்டுள்ள 15 அல்லது அதற்கு அதிகமான நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒன்றாகக் கொண்டுவந்து ஒரு 'NPA முறையீட்டை' முன்வைக்க இயலும். ஆனால், அது அப்படி நடந்து கொள்ளுவது இல்லை."

தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்புக்காக அவர்களைத் திரட்ட முற்படும் ஒரு கட்சிக்கும், முன்னாள் இடதுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி இதைவிடத் தெளிவான அறிக்கை இருக்க முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved