WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Gujarat Chief Minister interrogated about his role in
2002 anti-Muslim pogrom
2002 முஸ்லிம் எதிர்ப்பு இனப் படுகொலைகளில் குஜராத் முதல் மந்திரி பங்கு பற்றி அவர்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்
By Kranti Kumara
14 April 2010
Use this
version to print | Send
feedback
குஜராத்தின் முதல் மந்திரியும் இந்தியாவின் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியான பாரதிய
ஜனதாக் கட்சி (BJP)
யின் முக்கியத் தலைவருமான நரேந்திர மோடி கடந்த மாதம் 2002 முஸ்லிம் எதிர்ப்பு இனப்படுகொலைகள் இந்தியாவின்
மேற்கு மாநிலத்தில் நடந்தபோது அவருடைய பங்கு பற்றி ஒன்பது மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
SIT எனப்படும் சிறப்பு விசாரணைக்
குழு இந்த விசாரணையை நடத்தியது. இக்குழு மார்ச் 2008ல் குஜராத்தின் அரசாங்கம், பொலிஸ், நீதித்துறை
என்பவற்றின் அதிகாரிகள் இனப்படுகொலைகளுக்கு பொறுப்பானவர்களை காப்பாற்றுகின்றன என பல புகார்கள்
எழுந்ததை அடுத்து இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 60 பேர் இறந்துவிட்ட -- பெரும்பாலானவர்கள் இந்து வகுப்புவாத செயற்பாட்டாளர்கள்--
கோத்ரா இரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மாநிலத்தின் முஸ்லிம் சிறுபான்மையினரை பகிரங்கமாக
BJP தலைவர்களும்,
இப்பொழுது முதல் மந்திரியாக இருக்கும் மோடியும் குற்றம் சாட்டிய பின் குஜராத்தில் பெப்ருவரி-மார்ச் 2002ல்
அதிர்வை ஏற்படுத்திய கலவரங்கள், கொலைகள் அதிர்வுகள் பற்றி விசாரிக்க
SIT க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படுகொலைகளினால் 1,500 பேருக்கும் மேலானவர்கள் இறந்து போனார்கள்.
அநேகமாக அனைவருமே முஸ்லிம்கள் ஆவார்கள். நூறாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்த நிலையும்
ஏற்பட்டது. இன்றளவும் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதி
முகாம்களில் போதிய நீர், கழிவுநீர், மின் வசதிகள் இல்லாமல் வசிக்கும் கட்டாயத்தில் உள்ளனர்.
ஆரம்பத்தில் SIT
யினால் விசாரிக்கப்படுவதற்கு மோடி மறுத்துவிட்டார். அவருக்கு மார்ச் மாத நடுவில்
SIT அனுப்பியிருந்த
ஆணை சட்டபூர்வமற்றது என்று வாதிட்டார். ஆனால் படுகொலைகள் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் 27
அன்று, இரு சுற்றுக்கள் வினாக்களை எதிர்கொள்ள அவர் ஒப்புக் கொண்டார்.
சில செய்தித்தாள்கள் கொடுத்துள்ள தகவலின்படி, வெகுஜன கொலைகளில்
ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதற்கான வினாவிற்கு உட்படுவது ஒருபுறம் இருக்க, ஒரு குற்றவழக்கில் இந்திய மாநிலம்
ஒன்றில் முதலமைச்சராக பதவியில் இருப்பவர் விசாரிக்கப்படுவதும் முதல் தடவையாக மோடியே என்று தெரிகிறது.
மோடியை விசாரணை செய்த பின்னர்
SIT தலைவர்
ஆர்.கே. ராகவன் முதல் மந்திரியின் விடைகள் "மர்மங்களை அவிழ்ப்பதில் ஒரு பெரிய கட்டமாக இருந்தது" என்று
குறிப்பிட்டார். இன்னும் விசாரணைக்காக மோடியை அழைக்கும் உரிமையானது குழுவிற்கு உண்டு என்றும் அவர்
குறிப்பிட்டார்.
மோடி கூறியதைப் பற்றி வெளியிட அது சட்டபூர்வமான நிலை இல்லை என்று
SIT
கூறியுள்ளது. ஆனால் அது விசாரித்திக் கொண்டிருக்கும் 10 வழக்குகளில் இன்னும் ஏதேனும் புதிய குற்றச் சாட்டுகள்
தேவையா என்பது பற்றி உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை கொடுப்பதற்கு முன்னதாக, ஏப்ரல் 30க்கு முன், கூட
இருப்பதாக உறுதி அளித்துள்ளது.
இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகளால் தங்களுக்காக செயல்படுத்தத் தயாராக
இருக்கும் தன்மைக்காக அடிக்கடி பாராட்டப்படும் மோடி,
SIT க்கு முன்
தான் தோன்றியது, "என்னை குறைகூறுபவர்களுக்கு சரியான பதில் என்றார். இது
SIT விடுத்த
ஆணைக்கு ஆரம்பத்தில் அவர் மறுத்ததால் தூண்டிவிடப்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிய குறிப்பாகும்.
இப்படுகொலைகளுக்கு அரசியல் மற்றும் குற்றவியல் பொறுப்பை மோடி
கொண்டுள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரும், அவருடைய அரசாங்கமும் எந்த விசாரணை நடப்பதற்கு
முன்பும் கோத்ரா தீவிபத்து திட்டமிடப்பட்ட நாச வேலை, முஸ்லிம்கள் கூட்டாக இதற்குப் பொறுப்பு, கோத்ரா
இறப்புக்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய "எதிர்ப்பு" வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு என்று அறிவித்த விதத்தில்
வன்முறையைத் தூண்டிவிட்டனர். BJP
மாநில அரசாங்கமும், BJP
தலைமையிலான தேசிய அரசாங்கமும் இனப்படுகொலைகள் தொடர அனுமதித்தன என்பதற்கு நிறைய சான்றுகள்
உள்ளன. பொலிசார் இந்து வகுப்புவாத குண்டர் கூட்டத்திற்கு தீவிரமாக உதவாமல் வெறுமனே பார்த்துக் கொண்டு
இருந்தனர்.
2002 இனப்படுகொலை நேரத்தில்
இறந்த முன்னாள் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்
Ehsan Jaffrey
உடைய விதவை திருமதி ஜாகியா ஜாப்ரே பதிவு செய்திருந்த குற்றவியல் புகாரை ஒட்டி
SIT அதிக அளவில்
மோடியை விசாரித்து இருந்திருக்க வேண்டும்.
தன்னுடைய கணவரின் இறப்பில் குஜராத் அதிகாரிகள் குற்றச் சார்புடைய உடந்தை
கொண்டிருந்தார் என்னும் ஜாகியா ஜாப்ரேயின் புகார் தான்
SIT ஐ நிறுவும்
முடிவை உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாகக் கொடுத்தது.
தன்னுடைய புகாரில் திருமதி ஜாப்ரே, மோடியின் பங்கை பற்றிக் குறிப்பாக கவனத்தை
ஈர்த்திருந்தார். தன்னுடைய கணவர் கொல்லப்படுவதற்கு முன்பு, அவர்கள் வசித்து வந்த அஹமதாபாத் நகரத்தில்
இருந்து குல்பர்க் சங்கத்தில் உள்ள வீடுகளைத் தாக்க வந்த குண்டர்கள் கூட்டத்தை அடக்கப் பாதுகாப்புப் படைகளை
அனுப்பமாறு அவர் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு வாதிட்டிருந்தார். ஆனால் இதில் தலையிட முதல் மந்திரி
மறுத்து தன்னுடைய மற்றும் தன்னுடைய அயலவர்களின் உயிர்களைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்த ஜாப்ரேயை
எள்ளி நகையாடினார்.
2002 படுகொலைக்கு பின்னர், குல்பர்க் சங்கக் குடியிருப்பில் இருந்த எஹ்சான்
ஜாப்ரே உட்பட 39 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகப் பட்டியிலடப்பட்டனர். மற்றும் 30 பேர் காணமல்
போயுள்ளதாக கூறப்பட்டது. இப்பொழுது அந்த 30 பேரையும் இறந்தவர்கள் என்று அதிகாரிகள் வகைப்படுத்தி
குல்பர்க் சங்கக் குடியிருப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கையை 69 ஆக உயர்த்தியுள்ளனர்.
SIT யையே மனித உரிமைகள்
ஆர்வலர்களால் செய்யத்தவறிய செயல்கள், ஒருதலைப்பட்ட கருத்து, விசாரணையில் அதிக அக்கறையின்மை
ஆகியவற்றை கொண்டுள்ளதாக திரும்பத் திரும்ப குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
SIT யின் உயர்மட்ட
உறுப்பினர்களில் ஒருவரும், சூரத் பொலிஸ் ஆணையாளருமான
Shivanand Jha,
ஜாப்ரியால் உண்மையில், அவருடைய முதல் குற்றச்சாட்டில், மாநில அரசாங்க உடந்தையுடன் நடந்த தன் கணவர்
கொலை பற்றிய புகாரில் பெயரிடப்பட்டிருந்தார். செய்தி ஏடான
Tehelka
சேகரித்திருந்த ஒலிநாடப் பதிவுகளின் சான்றுகளை அவசரமாக உதறித்தள்ளியதற்காகவும்
Shivanand Jha
கடுமையான குறைகூறலுக்கு உட்பட்டவர். இந்த ஒலிநாடாக்களில்
BJP உடன்
இணைந்த பல இந்து மேலாதிக்க அமைப்புக்களின் தலைவர்கள் படுகொலையை ஏற்பாடு செய்வதில் தங்கள் பங்கு
பற்றி பெருமை பேசியதும் மோடி அரசாங்கத்திடம் இருந்து அவர்கள் பெற்ற ஆதரவு பற்றிய தகவல்களும்
இருந்தன. (See: "Magazine exposé shows
BJP state government organized 2002 pogrom")
SIT யில் உள்ள மற்றொரு
உறுப்பினர் கீதா ஜோஹ்ரி 2007ல் ஒரு முஸ்லிம் தம்பதியை முறையற்ற விதத்தில் கொன்று அதை மறைப்பதற்கு
இறப்புக்களை பயங்கரவாத/குற்றம் சார்ந்தவர்கள் மீது "encounter
கொலை" என்று காட்டியதில் குஜராத் பொலிஸ் நடந்து கொண்டதில் அவருடைய செயலற்ற தன்மைக்காக உயர்
நீதிமன்றம் அவரைக் கடிந்து கொண்டது.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றம்,
Jha, Johri
இருவரையும் SIT
யில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்ற மனு மீது இறுதித் தீர்ப்பு கொடுக்கப்படும் வரை, அவர்களை
அதன் பணியில் இருந்து தற்காலிகமாக ஒதுக்கி வைக்குமாறு
SIT க்கு
உத்தரவிட்டுள்ளது.
SIT அதன் அமைப்பில் நிறைய
குஜராத் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டிருக்கும் நிலையில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவது நம்பப்பட
முடியாது என்று குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுடைய சார்பில் வாதிட்டுக் கொண்டிருக்கும்
அரசாங்கம் சாரா அமைப்பான Centee for
Peace and Justice உச்ச நீதிமன்றத்திற்கு இது அதிகாரம்
கொண்டுள்ள வழக்குகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள
CBI க்கு
மாற்றுமாறு மனு போட்டுள்ளது.
எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், பல விசாரணைகள் மற்றும் ஒரு மாநில
விசாரணைக்குழுவின் செயல்கள் முடிந்தபின்னும், எந்த மூத்த பொலிஸ் அல்லது அரசாங்க அதிகாரியும், அல்லது இந்து
வகுப்புவாத அமைப்பின் முக்கிய தலைவருமோ, குஜராத் படுகொலையைத் தூண்டிவிட்டு, வளர்த்ததில் கொண்ட
பங்கிற்காக தண்டனை பெறவில்லை. அதேபோல் படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்புத்
தொகை என்பது அற்பமாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
மோடி அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நானாவதி குழு முதல் மந்திரி எந்த
முறையற்றவிதத்திலும் நடந்து கொள்ளவில்லை என்று கொடுத்த அறிக்கையில் வியப்பு ஏதும் இல்லை. இந்திய
இரயில்வே அமைச்சு 2005ல் நிறுவிய பானெர்ஜி குழுத் தீர்ப்பை நேரடியாக முரண்படுத்தும் விதத்தில் நானவதி குழு
கோத்ரா ரயில் தீவிபத்து "ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி" என்று அறிவித்த விதத்தினில் தன்னுடைய
நம்பகமற்ற தன்மையைத்தான் அதிகப்படுத்திக் கொண்டது. நன்கு ஆராயப்பட்ட குற்ற விசாரணைகள் முறைக்குப்
பின், பானெர்ஜி குழு கோத்ரா தீவிபத்து தற்செயலாகத்தான் ஏற்பட்டது என்ற முடிவிற்கு வந்தது.
படுகொலைக்கு ஊக்கம் கொடுக்கும் விதத்தில்
BJP மையப்பங்கைக்
கொண்டு நடந்து கொண்டது என்பதற்கு தக்க சான்று குஜராத் முஸ்லிம்-எதிர்ப்பு படுகொலைகளின் போது இந்திய
ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணனிடம் இருந்தே வந்தது. ஒரு
BJP தலைமையில்
இருந்த கூட்டணி அரசாங்கத்தின் அப்பொழுதைய பிரதம மந்திரியான அடல் பிகாரி வாஜ்பேயிடம் முஸ்லிம் எதிர்ப்புப்
படுகொலைகள் அடக்குவதற்கு குஜராத்தில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்துமாறு தான் வலியுறுத்தியதாக அவர்
அறிவித்திருந்தார். ஆனால் பெருநிறுவனச் செய்தி ஊடகத்தின் பெரும் ஆதரவைக் கொண்டிருந்த
BJP தலைவர் ஒரு
பெரும் அரசியல் வல்லுனர் என்ற தோற்றத்தை வளர்த்திருந்து, ஜனாதிபதியின் வேண்டுகோள்களை புறக்கணித்திருந்தார்.
"இது மாநில, மத்திய அரசாங்கங்களுக்கு இடையே குஜராத் வன்முறைக்கு பொறுப்பு எவர் என்பது பற்றிய ஒரு
சதியாகும்" என்று நாராயணன் கூறினார்.
மோடியை SIT
விசாரணைக்கு அழைத்துள்ளது என்பது தெரியவந்தபின், இந்தியாவின் முக்கிய முதலாளித்துவக் கட்சியும் தற்போதைய
ஆளும் கூட்டணியின் மேலாதிக்க பங்காளியுமான காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் மோடி இராஜிநாமா செய்ய
வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் குஜராத் படுகொலை பற்றி ஒரு தெளிவற்ற அணுகுமுறையைத்தான் காங்கிரஸ்
கட்சி அதிகமாகக் கொண்டிருந்தது. 2002 மாநிலத் தேர்தலில், மோடி தன்னை ஒரு இந்து தேசியவாத வலுவுடையவர்
என்று காட்டிக் கொண்டபோது, காங்கிரஸ் செய்தி ஊடகமே இந்துத்துவம் அல்லது இந்து தேசியவாதம் என்று முத்திரையிட்ட
ஒரு விஞ்ஞாபனத்தின்பேரில்தான் தேர்தலில் கலந்து கொண்டது. சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் பல
BJP
யில் இருந்து நீங்கியவர்களிடம் உடன்பாட்டைக் கொண்டது. அவர்கள் 2002ல் மோடி அரசாங்கத்தில் முக்கிய
பதவிகளை வகித்தவர்கள். முஸ்லிம் எதிர்ப்புப் படுகொலைகளில் பெரிதும் தொடர்புபடுத்தப்பட்டவர்கள்.
தன்னுடைய பங்கிற்கு BJP
மோடி இராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கோரியதற்கு காங்கிரஸ் பிரதமர் இந்திரா
காந்தி படுகொலை செய்யப்பட்டபின் எழுந்த சீக்கிய எதிர்ப்பு படுகொலைகளைத் தூண்டிவிட்ட முக்கிய காங்கிரஸ்
அரசியல்வாதிகளின் பங்கைச் சுட்டிக்காட்டியது.
கடந்த கால் நூற்றாண்டில் மூன்று முறை இந்தியா கொடூரமான வகுப்புவாதப்
படுகொலைகளால் அதிர்வுற்றது--1984 சீக்கிய எதிர்ப்புக் கலகங்கள், டிசம்பர் 1992 ல் அயோத்தியில் பாபர்
மசூதி தரைமட்டமாக்கப்பட்டதை தொடர்ந்து வட இந்தியா முழுவதும் எழுந்த முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை அலை,
மற்றும் 2002 குஜராத் படுகொலைகள் என்பவையே அவைகள்.
ஒவ்வொரு விவகாரத்திலும் இந்திய அரசாங்கம்--மத்திய, மாநில அரசாங்கங்கள்,
பொலிஸ் மற்றும் நீதித்துறை--வெளிப்படையாக வன்முறையில் பொறுப்பு கொண்டவர்களை நீதிமுன் நிறுத்துவதில்
தோல்வி அடைந்தது. உண்மையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் விசாரணைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன.
குண்டர்களும் எடுபிடிகளும்தான் தவிர்க்க முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். வெகுஜன வன்முறையை தூண்டி
வளர்த்துவிட்ட, வகுப்புவாதத்தை தூண்டியவர்களோ, அரசியல்வாதிகளோ, பொலிஸ் அதிகாரிகளோ அல்ல. |