WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
French President Sarkozy's visit to Rwanda
பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி ருவண்டாவிற்கு வருகை
By Anthony Torres
12 April 2010
Use this version
to print | Send
feedback
பெப்ருவரி 25ம் திகதி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ருவண்டா தலைநகரம்
கிகாலிக்கு அந்நாட்டு ஜனாதிபதி போல் ககாமேயைச் சந்திக்கச் சென்றார். 800,000 டுட்சி மக்களை, பிரான்சின்
ஆதரவுடன் ஹுட்டு பழங்குடி சக்திகள் 1994ல் செய்திருந்த இனப்படுகொலைகள் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்
இந்த வருகை நிகழ்ந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுடன் ருவண்டா தூதரக உறவுகளை முறித்துக்
கொண்டது. ருவண்டாவின் ஜனாதிபதி
Juvenal Habyarimana
வின் விமானத்தைச் சுட்டுவீழ்த்தி, இனக்கொலைகளைத் தூண்டிவிட்ட சம்பவத்தில், ககாமேயின் படைகள் பங்கு
கொண்டிருந்தன என்று ககாமே ஆட்சியைத் தொடர்புபடுத்தும் விதத்தில் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அப்பொழுது
பிரெஞ்சு அரசாங்கம் முற்பட்டுக் கொண்டிருந்தது.
உண்மையில் ஒரு சில மணி நேரங்களே நீடித்த சார்க்கோசியின் பயணத்தின்
நோக்கம், இனப்படுகொலைகளில் பிரான்சின் பங்கு கவனிக்கப்படாமல் விடப்படும் என்றால், தூதரக உறவுகளைப்
புதுப்பித்தல் என்ற நிபந்தனையாக இருந்தது.
சார்க்கோசி இதுவரை பிரெஞ்சு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள்
கூறிவந்துள்ள பொய்களைத்தான் மீண்டும் கூறியுள்ளார். அவற்றின்படி ருவண்டாவில் என்ன நடந்தது என்று பாரிசுக்கு
தெரியாது என்பதாகும். "ஒரு பிழையான தீர்ப்பு, கொலை செய்யப்பட்ட ஜனாதிபதியின் அரசாங்கத்தின்
இனப்படுகொலைகளின் அளவு பற்றி நம் பார்வையற்ற நிலை,
"Operation Turquoise"
துவக்கப்பட்டதில் ஏற்பட்ட கால தாமதத்
தவறுகள், போதுமான படைகள் இல்லாதவை" ஆகியவை பற்றி சார்க்கோசி தெரிவித்தார். 2007ல்
சார்க்கோசி "பிரான்ஸ் உட்பட" சர்வதேச சமூகத்தின் "பலவீனங்கள், தவறுகள்" பற்றியும் பேசியிருந்தார்.
2008ல் வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் "ஒரு பிரெஞ்சு அரசியல் பிழை"
என்று கூறிய அளவிற்கு சார்க்கோசி செல்லவில்லை. அது பிரெஞ்சுத் தலைவர்கள் எட்வார்ட் பலடூர்
(1993 ல் இருந்து 1995
வரை பிரதமராக இருந்தவர்) மற்றும் அவருடைய வெளியுறவு மந்திரி அலன் யூப்பே போன்றவர்களின் சீற்றத்தைத்
தூண்டியது. பலடூர் குஷ்நெருக்கு எழுதிய கடிதத்தில் "குஷ்நெர் பிரான்சை கெளரவப்படுத்தவில்லை... நிக்கோலோ
சார்க்கோசி தன் அரசாங்கத்தில் அவருடைய தேவையை கொண்டிருக்கவில்லை" என்று வலியுறுத்தினார்.
இத் தலைவர்கள், ருவண்டாவில் நடந்த குற்றங்களைப் பற்றி விசாரிக்கும்
பொறுப்பைக் கொண்டிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் சட்டபூர்வ வழக்குப் பதிவை எதிர்கொள்ள நேரிடும் என்ற
அச்சத்தினால், ஒப்புதல் வாக்கு மூலங்களைக் கொடுக்க விரும்பவில்லை.
ககாமேயைப் பொறுத்த வரை, அவர் பிரான்சிற்கும் ருவண்டாவிற்கும் இடையே
இருந்த "கடினமான கடந்த காலம்" பற்றிப் பேசினார். மே மாத இறுதியில், நீசில் ( Nice)
நடக்க இருக்கும் பிரான்ஸ் - ஆபிரிக்கா மாநாட்டில் பங்கு பெற இருப்பது பற்றி தான் ஆழ்ந்திருப்பதாக ககாமே
கூறினார்.
கிகாலிக்கு நல்லெண்ண அடையாளமாக பிரெஞ்சு அதிகாரிகள்
Juvenal
உடைய விதவை மனைவி
Agathe Habyarimana
வை, மார்ச் 3 அன்று விடுவிப்பதற்கு முன் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். இவர், 1994ல் பிரான்சின்
பாதுகாப்புடன் ருவண்டாவில் இருந்து கொங்கோ வழியே தப்பி பிரான்சுக்கு வந்து வசித்து வந்திருந்தார். ஹுட்டு
தீவிரவாதி
Habyarimana
கூட்டாளிகளின் சிறிய குழுவான அகஜுவில் (Akazu)
இவர் முக்கிய உறுப்பினராக
இருந்தார் என்று கருதப்படுகிறது. இந்த குழுதான் இனப்படுகொலைகளை திட்டமிட்டு ஊக்குவித்திருந்தது.
திருமதி ஹப்யரிமனா பிரான்சில் சிறிது காலம் வசித்திருந்தாலும்,
OFPRA
எனப்படும் பிரான்சின் அகதிகள், குடிபெயர்ந்தவர்கள் பாதுகாப்பு அலுவலகம் பலமுறையும் அவருக்கு அரசியல்
தஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டது. அவர் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்திருக்கக்கூடும் என்பதற்குத்
தீவிர காரணங்கள் உள்ளன" என்று தன் மறுப்பை அது நியாயப்படுத்தியது.
கடந்த நவம்பர் மாதம் இவரை நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கிகாலி
கோரியிருந்தது. எத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்வார் என்பது தெளிவாக இல்லை.
அவரை ருவண்டாவிற்கு தற்போது அனுப்பி வைக்காமல், பிரான்சில் வைத்து விசாரிக்கும் சாத்தியங்கள்பற்றி
Jeune Afrique
தனது கருத்தை எழுப்பியது. "ருவண்டாவின் நீதிமுறையின் நடுநிலை பற்றி பிரெஞ்சு நீதித்துறை நம்பிக்கை
கொள்ளவில்லை" என்று அது குறிப்பிட்டுள்ளது.
ருவண்டாவில் பிரான்சின் பங்கு
1994ல் பிரான்சுடன் நட்பாக இருந்த ஹுட்டு அரசாங்கம் நடத்திய டுட்சி எதிர்ப்பு
இனப் படுகொலைகளில் பிரான்சின் பங்கு பற்றி விவரித்து, ஆகஸ்ட் 5, 2008ல் கிகாலியில் இருந்த ருவண்டா அரசாங்கம்
ஒரு 500 பக்க ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய ஏற்றுமதிப்பொருளான கோப்பி விலைகள் வீழ்ச்சியடைந்ததை
அடுத்து பெரும் பொருளாதார மந்தநிலையும், அதன் நாணயத்தை (CFA
franc) சர்வதேச நாணய
நிதியம் பெரும் மதிப்புக் குறைப்பிற்கு கோரிக்கை விடுத்த நிலையிலும் இந்தப் படுகொலைகள் நடந்தன.
ருவண்டாவின் நாணயம் பிரெஞ்சு பிராங்குடன் இணைப்புக் கொண்டு இருந்ததோடு, முன்னாள் ஆப்பிரிக்கக் குடியேற்றங்கள்
மீது பிரான்ஸ் வலுவான நிதிய, பொருளாதார செல்வாக்கையும் மேற்கொண்டிருந்தது.
அமெரிக்க நலன்களுடன் பிணைந்திருந்து, அதனது ஆதரவையும் பெற்று டுட்சிக்களை
பெரும்பான்மையாக கொண்டிருந்த ருவண்டா தேசபக்த முன்னணியின் (FPR)
தலைமையிலான படையெடுப்பையும் ருவண்டா அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
Le Monde
பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் ("சார்க்கோசி,
ருவண்டாவில் சரியான சொற்களை கண்டுபிடிக்கவேண்டும்'') பெல்ஜிய செனட்டில் ருவண்டா இனப்படுகொலை பற்றி
விசாரணைக்குழு தேவை என்று குறிப்பிட்ட செனட்டர்
Alain Destexh,
பிரான்ஸின் பங்கு பற்றி விளக்கியுள்ளார். 1990 ல்
Habyarimana
அரசாங்கத்திற்கு கொடுத்துவந்த ஆதரவை பெல்ஜியம் விலக்கிக் கொண்ட பிறகு, பிரான்ஸ் தனது கட்டுப்பாட்டைக்
அதன் மீது மேற்கொண்டது. ருவண்டா இராணுவத்தின் வலிமை ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டது. ஆயுத
அளிப்புக்கள் பெருகின. பிரெஞ்சுத் துருப்புக்கள் ருவண்டா இராணுவத்திற்கு பயிற்சி அளித்து
FPR
க்கு எதிரான சண்டைகளில் நேரான பங்கையும் மேற்கொண்டது.
அந்த நேரம் பிரான்ஸ் முதலாளித்துவ இடது, வலது கூட்டணியினால் ஆளப்பட்டு
வந்தது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மிட்டராண்ட் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆவார். அரசாங்கம்
வலதுசாரி கோலிச
RPR கட்சியைக்
கொண்டிருந்தது. மித்திரோன் எப்பொழுதும் இந்த இனப்படுகொலைகளில் பிரான்ஸின் பங்கு பற்றிப் பேச
மறுத்திருந்தார்.
1994 ஏப்ரல் மாதம், ருவண்டா ஜனாதிபதி
Juvenal Habyarimana
பயனம் செய்த விமானம் கிகாலிக்கு மேல் பறந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார்.
அரசாங்கம்
Interahamwe இராணுவக்
குழுவுக்கு வானொலி மூலம் அழைப்புவிடத் தொடங்கியது. அதில் பெரும்பாலும் வேலையில்லாமல் இருந்த ஹுட்டு
இளைஞர்கள் டுட்சிகளைப் படுகொலை செய்வதற்கு சேர்க்கப்பட்டனர். ஏப்ரல் முதல் ஜூன் வரை
Interahamwe
மற்றும் இதர இராணுவக் குழுக்கள் 800,000 பேரைக் படுகொலை செய்தன. கொலைசெய்யப்பட்டவர்களில்,
பெரும்பாலானவர்கள் டுட்சிக்களாக இருந்ததோடு, அரசாங்க எதிர்ப்பு ஹுட்டுக்களும் அதில் அடங்கியிருந்தனர்.
Operation Turquoise
என்னும் நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான துருப்புக்களை நாட்டின் தென்மேற்குப் பகுதியை
ஆக்கிரமிக்க அனுப்பியது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் பலமாக இணைந்திருந்து இனப்படுகொலைகளுக்கு காரணமாக
இருந்தவர்கள் உட்பட, முடிந்த அளவு ஹுட்டுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தையே இந்த நடவடிக்கை
கொண்டிருந்தது. இந்தக் குழுக்கள் பல அருகிலுள்ள கொங்கோவிற்கு தப்பியோடி தொடர்ந்தும் சண்டையை
மேற்கொண்டிருந்தன. கொங்கோ எல்லைப் பகுதியில் இருந்து படுகொலைகளைத் தூண்டிவிட்ட
Radio Mille Collines
நிலையமானது பிரெஞ்சு வெளியுறவு அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலும், பிரான்சின் பாதுகாப்புடனும் ஒலிபரப்பிக்
கொண்டிருந்தது.
Kigali New Times
கருத்துப்படி, ருவண்டா
வெளியிட்ட அறிக்கையானது இனத்தூய்மைப்படுத்தும் படுகொலைகள் நடைபெற்றபோது, அதில் பிரான்சினுடைய ஒத்துழைப்பை
அம்பலப்படுத்துகிறது. "பிரெஞ்சுத் துருப்புக்கள் நிலத்தை பொசுக்கும் கொள்கையை ஏற்றனர்.
Cyangugu, Kibuye,
Gkongoro நிர்வாகப் பகுதிகளின்
மூன்று உள்ளூராட்சி அரசாங்க அதிகாரிகளுக்கு ஹுட்டு மக்களை
Zaire
க்கு மொத்தமாகத் தப்பி ஓட துண்டிவிடுமாறு அவை உத்தரவிட்டன. மேலும் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்திருந்த
டுட்சிக்களை தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும்
Interahamwe
இராணுவக் குழு அவர்களில் சிலரையாவது கொல்ல வேண்டும் என்றும் அவர்கள்
கோரினர். இந்த மூன்று உள்ளூராட்சி பகுதிகளில், தமது கண்களுக்கு முன்னால் டுட்சிக்கள் கொல்லப்படுவதையும் அவர்கள்
அனுமதித்தனர்.''
பிரான்சின் இந்த நடவடிக்கையானது, மோதலை மேற்கே கொங்கோ ஜனநாயகக்
குடியரசுப் பக்கம் நகர்த்தியது. அதுதான் 1998ல் இருந்து 2003 வரை நடந்த பிராந்தியப் போர்களின்
மையத்தில் இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் குறுக்கீட்டுப் படை
Monuc
கொங்கோவிற்கு கிழக்கே திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சு வார்த்தைகளுக்கு இடையே சார்க்கோசியின்
பெப்ருவரிப் பயணம் நடந்தது.
பிரெஞ்சு செய்தி ஊடகத்தின் சிடுமூஞ்சித்தனம்
பெப்ருவரி 26, 2010ல் வெளிவந்த
Le Monde
ன் ஆசிரிய தலையங்கமானது
("The right words"),
ருவண்டாவின் பெரும் சோகம் பற்றிய பிரெஞ்சு செய்தி ஊடகத்தின்
சிடுமூஞ்சித்தனமான தகவல் கொடுக்கும் முறைக்கு ஒரு உதாரணம் ஆகும். சார்க்கோசியின் கிகாலி உரையை அது
"சரியான சொற்கள்" என்று விவரித்தது. அதாவது ருவண்டா நிகழ்வுகளைப் பற்றி "ஒரு பகுதி ஆனால் சரியான
கணிப்பு" என்றது.
உண்மையில், பிரான்ஸ் ஊக்குவித்து ஆதரவு கொடுத்திருந்த படுகொலைகள் பற்றி
சார்க்கோசி சுட்டிக்காட்டவோ அல்லது பிரெஞ்சுத் தலைவர்களின் உடந்தை பற்றி மன்னிப்பு கேட்கவோ இல்லை.
இந்த விடுபடல்பற்றி
Le Monde
"கூறப்படாத கூறுபாடு" என்று விளக்கியது. அதாவது எவரும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. "மன
உளைச்சலுக்குப் பதிலாக பிரான்ஸ்-ருவண்டா பிரச்சினையில் கூறப்படாமல் விட்டுவிடுவதுதான் சிந்தனைக்கு உரியது,
இது ஒரு வரலாற்று ஆய்விற்கு உட்பட்டது."
இதன் பின்
Le Monde
சார்க்கோசியின் ருவண்டா பற்றிய கொள்கைகளை விளக்கமில்லாத தெளிவற்ற குறிப்புக்கள் மூலம் பூச்சுப்பூச
முற்பட்டது. ககாமேயுடன் இணைந்து, ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்திய உறவுகளை முன்னேற்றுவிக்க சார்க்கோசி
விரும்பினார் என்பதையே நன்கு அறிந்த வாசகருக்கு இப்பத்திரிகை தெரிவிக்கிறது. -- ஏனெனில், ஈராக் மற்றும்
ஆப்கானிஸ்தானில் குற்றம் மிகுந்த ஆக்கிரமிப்புக்களுக்கு பாரிஸ் ஆதரவு தருகிறது-- மேலும் இப்பத்திரிகையானது,
சார்க்கோசியின் பயணம் "ஒரு ஆரோக்கியமான வகையில்
Fashoda
சிக்கலில்" இருந்து மாற்றியது எனக் கூறியுள்ளது.
சூடானில் பூகோள மூலோபாய முக்கித்துவம் வாய்ந்த சிறு நகரத்தைக் காட்டி பெயரிடப்பட்டுள்ள
பஷோடா நெருக்கடியானது பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையே 1898ல் நடந்தது. பிரான்ஸ் பஷோடாவிற்கு
விரைவாக படையை அனுப்பியபோது, அப்பகுதியில் இருந்து பிரிட்டிஷார் வெளியேறியிருந்தனர். ஆனால், இந்தப்
படையெடுப்பு பிரிட்டனைத் தூண்டிவிட்டதோடு, அது அருகில் இருந்த எகிப்தில் தனது நலன்களை உறுதி செய்ய
உத்தரவாதம் எடுத்தது. பிரிட்டனுடன் பூசல் மூளலாம் என்ற அச்சுறுத்தலில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இறுதியில் பஷோடாவைக்
கைவிட்டிருந்த போதிலும், பிரிட்டனுக்கு எதிரான நச்சுச் சூழ்நிலையை பிரான்சில் அது தக்க வைத்துக் கொண்டது.
ஒரு சிடுமூஞ்சித்தனமான கலவையாக, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ருவண்டாவில்
கொண்டிருந்த பங்கை மறைக்கும் விதத்தில்
Le Monde,
"அனைத்து சான்றுகளுக்கும் எதிராக, பிரெஞ்சு இராணுவம்
படுகொலைகளில் உடந்தையாக இருந்தது என்று கூறுபவர்கள், ஒரு புதிய
Dreyfus
விவகாரத்தில் முக்கியமாக இருப்பவர்கள்" என்று
குறை கூறியுள்ளது.
அதாவது
Le Monde
ன் கருத்துப்படி, பிரெஞ்சு
இராணுவம் 1894ல் ஆல்பிரெட் ட்ரேபுஸுக்கு எதிராக அது கொண்டுவந்த யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுக்களை ஒத்த
பிரச்சாரத்தில் இலக்காக உள்ளது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு
Dreyfus
நிரபராதி என்பது குறிப்பிடப்பட வேண்டும். அதே நேரத்தில் பிரெஞ்சு அரசாங்கம் படுகொலையில் தங்கள் பங்கிற்கு
உண்மையில் பொறுப்பு கொண்டவையாக இருந்தன. உண்மையில் ருவண்டா படுகொலைக்கும்
Dreyfus
விவகாரத்திற்கும் இடையே உள்ள பொது உறவு இரண்டிலும்
பிரெஞ்சு இராணுவம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திமிர்த்தனமாக பொய் சொன்னது என்பதாகும்.
ருவண்டாவில் சார்க்கோசியின் உரை "நாட்டின் கெளரவத்திற்கு இழுக்கு கொடுப்பதற்குப்
பதிலாக, பெரும் சுமையைக் குறைத்துள்ளது" என்று
Le Monde
முடித்துள்ளது. உண்மையில்
ருவண்டா இனப்படுகொலையில் பிரான்சின் பங்கை மன்னிப்பதானது, சார்க்கோசியும்
Le Monde
ம் உலகெங்கிலும் உள்ள மக்களை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி, அடுத்த குற்றங்களை செய்வதற்கான
ஒரு தயாரிப்பாகும். |