World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனாChina's growing social polarisation சீனாவில் சமூகத் துருவப்படுத்தல் பெருகுகிறது By Jean Shaoul எங்கும் படர்ந்து, மிக அதிக விலையில் சர்வதேச ஆடம்பரப் பொருட்களை விற்கும் சீனாவின் வனப்புக் கடைகள் 2009 ம் ஆண்டு US$9.4 பில்லியனுக்கு வியாபாரம் செய்தன. ஒவ்வொரு ஆடம்பரக் கார் மாதிரிக்கான விற்பனை உரிமைகள் எல்லா முக்கிய நகரங்களிலும் காணலாம். சீனா இப்பொழுது உலகின் ஆடம்பரப் பொருட்களில் 27.5 சதவிகிதத்தை நுகர்கிறது. இது அமெரிக்காவை விட அதிகமாகும், ஜப்பானுக்கு அடுத்தபடியான நிலை என்று World Luxury Association உடைய ஆண்டறிக்கை கூறுகிறது. பேரரசின் நகர ஹைடியன் பகுதியில் உள்ள கோடை அரண்மனை மற்றும் பூங்காங்களின் அருகே உள்ள பெய்ஜிங்கின் மிக ஆடம்பர வீடுகள் வளர்ச்சி நிறுவனம் தனித்தனி நீச்சல் குளம், Jacuzzi, தோட்டம் மற்றும் நிலத்தடி கார் நிறுத்துமிடம் கொண்ட வீடுகளை ஒன்று $7 மில்லியன் என விற்கிறது. சீனாவில் செல்வந்தர்களின் வளர்ச்சி அதிகமாகியுள்ளது. சீனாவில் முதல் செல்வந்தர்கள் பட்டியலை Forbes 1999ல் இருந்து தயாரிக்க தொடங்கிய போது, 50 உயரிடங்களில் வருவதற்கு $6 மில்லியன் போதுமானாதாக இருந்தது. 10 ஆண்டுகள் கழித்து 2009ல் இந்த சொத்து மதிப்பு $1.3 பில்லியன் என்று ஆகிவிட்டது.
பெய்ஜிங்கில் ஹைடியன் குடியிருப்பு மாவட்டப் பகுதியில் ஒரு தெரு 1978 ல் சந்தைச் சீர்திருத்தங்களுக்கு சீனா மாறியதற்கு தீவிர அரச நடவடிக்கை, அடக்குமுறை, வன்முறை ஆகியவை தேவைப்பட்டன. அதைத் தொடர்ந்து பெரும் ஊழல், சுரண்டுவதற்கு குழுக்களை அமைத்துக் கொள்வது, இலஞ்சம் கொடுப்பது, மிரட்டுதல் ஆகியவை ஏற்பட்டுள்ளன. இது பற்றி சீனாவின் செய்தி ஊடகத்தில் அன்றாடம் அறிந்து கொள்ள முடியும். இதில் ஒரு சிறிய சலுகை பெற்ற அடுக்கு, மகத்தான சொத்துக்களை பெரும்பாலான பொதுமக்கள் இழப்பில் கொண்டு, நிலைபெற்றுள்ளது. சொத்துச் சமத்துவமின்மையை அளக்கும் Gini Coefficient கடந்த 30 ஆண்டுகளில் 0.46 என வளர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. நகர்ப்புறங்களில் 10 சதவிகித குடும்பங்கள் மொத்த நகர்புறச் செல்வத்தையும் கொண்டுள்ளன.ஆண்டுக்கு சராசரி 9 சதவிகிதம் என்ற சீனப் பொருளாதார வளர்ச்சியில் இருந்து நலன்களைப் பெறுவதற்கு முற்றிலும் மாறாக, தொழிலாளர்கள் தங்கள் வருமானம் 1955ல் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 51.4 சதவிகிதம் என்பதில் இருந்து 2008ல் 39.7 சதவிகிதம் என்று சரிந்துவிட்டதைத்தான் கண்டுள்ளனர். 167 மில்லியன் கிராமப்புறத்தில் இருந்துஅரசாங்க நிறுவனங்களில் வேலைகளை நாடி நகரங்களுக்குக் குடி பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் உள்ள நிலையில்--மொத்த நகர்ப்புற மக்கள் எண்ணிக்கையில் இது நான்கில் ஒரு பகுதி ஆகும்--தொழிலாளர்கள் ஏராளமாக பணி நீக்கம் பெற்றுள்ளனர், அல்லது மிகக் குறைந்த ஊதியங்கள், அதிக நேரம், கடுமையான பணி நிலைமைகள் ஆகியவற்றை ஏற்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
ஹைடியனில் ஒரு குறுகிய சந்து கடந்த ஆண்டு மட்டும் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று Beiging Morning Post கூறும் விதத்தில் நிலங்கள் விலை உயர்ந்த நிலையில், மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு கெளரவமான வீடு வாங்க முடியாத நிலைதான் உள்ளது. பெய்ஜிங்கின் மிக வியையுயர்ந்த வீடுகள் மற்றும் பெருமதிப்பிற்கு உரிய பல்கலைக்கழகங்கள், அறிவியில் பூங்காங்கள் பகுதியில் இருந்து கூப்பிடு தூரத்தில் ஏராளமான ஒற்றை அறை, மரத்தினாலான சேரிகள், குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. அங்கு இருக்கும் மற்ற கட்டிடங்களுடன் இவையும் வளர்ந்துள்ளன. ஒரு பொது சாக்கடை உள்ளது, குளியலறை கிடையாது. வசிக்கும் மக்கள் பகுதியில் இருக்கும் பொதுக் கழிப்பு அறைகளைத்தான் பயன்படுத்தவேண்டும். சீனாவின் நகரங்களில் இது வாடிக்கையான காட்சி ஆகும். குப்பைகள், இடர்பாடுகள் நிறைந்த குறுகிய சந்துகள் ஒரு மழை பெய்தால் சகதியும் சேறும் நிறைந்து காணப்படும். கட்டுமான இடங்களில் வேலை செய்யும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், நகரங்களில் ஆலைகளிலும், பணித்துறையிலும் உள்ளவர்களின் நிலைமையை காட்டிலும் இன்னும் மோசமாக உள்ளது. நகரத்தில் வசிப்பவர்கள் பெறும் ஊதியங்களைவிட மிகக் குறைவான ஊதியங்களைப் பெறும் இவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் கெளரவமான கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான வாய்ப்புக்கள் இல்லை. பல நேரமும் மிக இழிந்து வீட்டு நிலைமையில், பரிதாபமாக வாழ்கின்றனர். கடந்த வாரம் China Daily, Dongguan உள்ள Foxconn ஆலையில் இந்த ஆண்டு நடந்த மூன்றாவது தற்கொலை பற்றித் தகவல் கொடுத்துள்ளது. 1999 ல் தொடங்கிய சீனாவின் பல்கலைக்கழகங்களின் விரைவான விரிவாக்கத்தின் விளைவாக--இப்பொழுது அவை 20 மில்லியன் மாணவர்களைப் பட்டப்படிப்பிற்காகச் சேர்கின்றன--கிட்டத்தட்ட 3 மில்லியன் பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் உள்ளனர். குறைந்த தகுதி வேலையில் உள்ளனர். அவர்களுடைய நிலைமையைச் சித்திரிக்கும் "எறும்புகள் கூட்டம்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளவிதத்தில், அவர்கள் இழிந்த வீடுகள், முன்கூட்டித் தயாரிக்கப்பட்ட உலோக உறைவிடங்களில் வசிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவை பல அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒன்றிற்கு அமெரிக்க $65 டொலர் வாடகை கொடுக்க வேண்டும். ஒரு நல்ல வேலைக்கு முதல் படியாக இருக்கும் என்ற வீணான நம்பிக்கையில் குறைந்த ஊதிய பயிற்சி வேலைகளில் சேருகின்றனர்.
ஒற்றை அறை வீடுகள் (ஹைடியன்) புதிய பணக்காரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைத் தவிர, முக்கியமாக கிழக்கு கடலோர மாநிலங்களில் உள்ள, சீன மக்களில் 46.2 சதவிகிதம் என்றுள்ள 622 மில்லியன் நகர்ப்புறத் தொழிலாளர்களுக்கும் மேற்கு, மத்திய மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் இடையேயும் பரந்த, பெருகும் இடைவெளி உள்ளது. தேசியப் புள்ளிவிவர அலுவலகக் கூற்றின்படி, சீனாவின் நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு இடையே வருமான இடைவெளி 2008ல் ஆண்டுக்கு 11,020 யுவான் ($1,621). என்பதில் இருந்து 2009ல் 12,022 யுவானாக ($1768) என்று பெருகிவிட்டது. செலவழிக்கக்கூடிய ஆண்டு தலா நபர் வருமானம் நகர்ப்புற வீடுகளில் 2009ல் 17,175 யுவான் ($2,526) என்று உள்ளபோது, கிராமப்புற வீடுகளில் இப்பிரிவின் தொகை 5,153 யுவான்தான் ($757). பல கிராமப்புறக் குடும்பங்களில் கிடைக்கும் ஒரே வருமானம் நகரத்திற்கு சென்றுள்ள குடும்ப உறவினர்கள் அனுப்பும் பணம் ஒன்றுதான் முழு வறுமையில் இருந்து அவற்றைக் காப்பாற்றுகின்றன. தொலைதூரக் கிராமப் பகுதிகளில், குறிப்பாக தென் மேற்கில், மக்களுக்குத் தூய குடிநீர், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை கிடைப்பதில்லை. கிராமப்புற குழந்தைகள் நகரத்தில் உள்ள குழந்தைகளைவிட 3 முதல் 6 மடங்கு அதிகமாக, ஐந்து வயதிற்கு முன்னரே இறந்துவிடும் நிலைதான் இதையொட்டி உள்ளது என்று Lancet மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. சாலைகள் இல்லாத நிலையும் சந்தைகளுக்கு உபரி உற்பத்திப் பொருட்களை அனுப்புவதை முடியாததாகச் செய்துள்ளது. எப்படியும் அதிக உபரி ஏதும் இல்லை. ஏனெனில் நிலங்கள் மூன்றில் ஒரு பங்கு ஏக்கர் என்று மிகச் சிறியதாகத்தான் உள்ளன. சீனாவின் மேற்கு மலைப்பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய மாநிலங்களின் எல்லை பகுதிகளில் அதிக இனவழிச் சிறுபான்மையினர் நிறைந்துள்ள மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வகையில் மோசமான பாதிப்பிற்கு உட்பட்டு அங்கு வறுமை முற்றிலும் படர்ந்துள்ளது.
ஒரு சேரிப்பகுதி வீடு (ஹைடியன்) அதன் மொத்த கிராமப்புற மக்கட் தொகையான 800 மில்லியனுக்கும் அதிகமானதில் 4.2 சதவிகிதமான சீனாவின் கிராமப்புறப்பகுதியின் 40 மில்லியன் மக்கள் பெரும் வறுமையில், ஆண்டுக்கு தலா நபர் வருமானம் $175 என்ற நிலையில்தான் உள்ளனர். தென் மேற்கு மாநிலங்களில் உள்ள வறட்சி நிலைமை இன்னும் பல மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. இதற்குக் காரணம் மழையின்மையினால் அறுவடைக்கு இடமில்லை, விதைகளை விதைக்க வகையில்லை என்று போனதுதான். ஒரு சமீபத்திய மதிப்பீட்டு வினா கேட்கப்பட்டவர்களில் 72 சதவிகிதத்தினர் சொத்துப் பகிர்வு நியாயமற்ற முறையில் உள்ளது என நம்பியதாகவும், 60 சதவிகிதத்தினர் மிக முக்கியமான பிரச்சினை தொழிலாளர்களின் மிகக் குறைவான வருமானம் என்று கூறியதையும் காட்டுகிறது. இத்தகைய துருவப்படுத்தல் நிலைமையினால் சமூக அழுத்தங்களும் மோதல்களும் பெருகிவிட்டன. கடந்த வாரம் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கும் சீன வடமேற்கு மாநில யுன்னனின் தலைநகரான குன்மிங்கில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர், 10 வாகனங்கள் சேதமுற்றன. தெருக்களில் உரிமை இல்லாத விற்பனையாளர்களை அகற்றுதல் மற்றும் செல்வந்தர்கள், பொது அதிகாரிகளுக்கு நலன் கொடுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்காக வீடுகள் இடிக்கப்படுவதை மேற்பார்வையிடும் அதிகாரிகள், Chenguan அமைப்பில் இருந்து வந்தவர்கள், உரிமம் இல்லாமல் பொருட்களை விற்க வந்திருந்த தெரு வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்க முற்பட்டபோது இந்த மோதல் விளைந்தது. செங்குவன் குண்டர் முறைக்கு மறு பெயர் என்றுள்ள நிலையில், ஒரு தெரு விற்பனையாளர் கொல்லப்பட்டார் என்னும் வதந்தி பரவி, அதையொட்டி ஒரு கலகம் ஏற்பட்டது. ஒழுங்கை மீட்பதற்கு ஆறு மணி நேரம் ஆயிற்று. இந்தக் கலகம் உள்ளுராட்சிக்கு எதிரான மக்கள் விரோதப் போக்கின் அடையாளம்தான் என்று ஒரு செய்தித்தாள் கூறியது இது "எந்த நேரமும் ஒரு வெடிகுண்டு" போல் வெடிக்கலாம் என்றும் அது கூறியுள்ளது. வதந்தி உண்மையல்ல என்று தெரியவந்தாலும், சென்குவனின் மிருகத்தனத் தாக்குதலுக்கு மக்கள் ஏராளமான பாதிப்பிற்குட்பட்டுள்ளனர் என்ற நிலையுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்புதான் ஒரு புதிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பன்றிப் பண்ணை கட்டாயமாக இடித்துஅகற்றப்பட்டதை எதிர்த்ததை ஒட்டி ஒரு விவசாயியும் அவர் தகப்பனாரும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது பதிலடியில் விவசாயி இறந்தும், அவர் தகப்பனார் காயமுற்றும் போனார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு பண்ணையை அமைக்க விவசாயி செலவழித்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உள்ளுராட்சி கொடுக்க மறுத்ததால் அவர்கள் அழிவைத்தான் எதிர்கொண்டிருந்தனர். விவசாயிகள் தங்களை வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கொண்டு 100க்கும் மேற்பட்ட சென்குவன்கள் வீட்டை இடிக்க வந்துபோது பெட்ரோலைத் தரையில் கொட்டி தீ வைத்தனர். தகர்க்க வந்த குழு இருவரையும் அகற்றவில்லை, ஆனால் புல்டோசரை வீட்டிற்குள் செலுத்தி, வீட்டைத் தகர்த்தனர். செங்டுவில் கடந்த நவம்பர் மாதம் இதே போல் நடந்த நிகழ்வை அடுத்து இது வந்துள்ளது. China Daily ல் ஒரு கட்டுரையாளர் அதிகாரிகளை அவர்களுடைய பொருட்படுத்தாத்தன்மைக்கு குறைகூறியுள்ளது. "அதிகாரிகள் உயிர் என்பது அவர்களுடைய கருத்தில் ஒரு பேரப் பொருள் என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை என்ற முடிவைக் காட்ட விரும்பினர்."
பெய்ஜிங்கில் குடிபெயர்ந்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் சீனாவில் பல பகுதிகள் ஒரு பெரிய கட்டுமானப் பகுதியை ஒத்திருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் மற்றும் ஊழல் மிகுந்த பொது அதிகாரிகளுடைய நலன்களுக்காக செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்காக கட்டாயமாக வேறு இடத்தில் சென்று குடியேற நிர்ப்பந்திப்பதால் ஏற்பட்டுள்ளஅச்சம் பரந்து காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை வேறு இடங்களுக்கு குடிபெயரும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர். கிராமப்புற சொத்துக்களை வளர்க்கும் நிறுவனங்கள் கைக்கூலிகளைப் பயன்படுத்தி மக்கள் வேறு இடங்களுக்கு கட்டாயமாக செல்ல வைக்கின்றனர். அதற்காக அவர்களுடைய மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்படுவதுடன் வீடுகளும் இடிக்கப்படுகின்றன. கலகங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்பு நடவடிக்கையின் உண்மை எண்ணிக்கையை மங்கிய முறையில் மட்டுமே பிரதிபலிக்கும் உத்தியோகபூர்வ எண்ணிக்கை, 1995ல் 10,000 என்று மட்டுமே இருந்து வெகுஜன எதிர்ப்பு நிகழ்வுகள் 2005ல் 87,000 என்று உயர்ந்துவிட்டதைக் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் மிக அதிகம் தெரிந்த உதாரணங்கள் Weng'an, Longnan ல் நடைபெற்றன. 2008 ஜூலை மாதம், ஆயிரக்கணக்கான மக்கள் Guizou மாநிலத்தின் வென்கான் பகுதியில் ஒரு சிறுவயது மாணவியின் இறப்பு பற்றிய உத்தியோகப்பூர்வ காரணத்தை அவள் பெற்றோர்கள் மறுத்ததற்குப் பிறகு, கலகத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 2008ல் குய்ஜு மாநிலத்தின் லோங்னன் பகுதியில் 30 பேர் உள்ளூராட்சி அலுவலகத்திற்கு வீடுகள், நிலம், பொருளாதாரப் பிரச்சினை பற்றி புகார் கூறச் சென்றிருந்தனர். குறுகிய காலத்தில் அலுவலகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க 2,000 பேர் கூடிய நிகழ்வு வெடிப்பிற்கு உட்பட்டது. சிறு வணிகர்களை ஏமாற்றும் நிகழ்வுகளுக்கு எதிராகவும் எதிர்ப்புக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் பெய்ஜிங்கில் Chaoyang ல் ஒரு பல்பொருள் அங்காடியின் நூற்றுக்கணக்கான வாடகைக்காரர்கள் நிர்வாகம் அவர்கள் முன்கூட்டியே கொடுத்திருந்த வாடகையைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். அங்காடி திறந்து மூன்று மாதங்களுக்குள் மூடப்பட்டுவிட்டது. பணப்பாக்கி சராசரியாக 100,000 யுவான் ($14,286) என்று இருந்தது. பெரும் திகைப்பில் உள்ள குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்கள் கொடிய முதலாளிகள் ஊதியங்களைக் கொடுக்க மறுப்பதற்காக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பல நேரமும் மாதக் கணக்கில் சம்பளப் பாக்கி இருந்தது. 2008TM Sechuan மாநில நிலநடுக்கத்தின் போது முறையாகக் கட்டப்படாத பள்ளிகள் சரிந்ததால் இறந்துவிட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இரு செயலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உத்தியோகபூர்வ ஊழல், வணிகர்களுடன் கூட்டுறவு, இடைவிடாமல் மூடிமறைத்தல் ஆகியவற்றை எதிர்க்கும் சீற்றங்கள் ஆர்ப்பாட்டங்களாக வருகின்றன. உதாரணமாக பல குழந்தைகளைக் கொன்று, பலரை நோய்க்கு உட்படுத்திய hepatitis B தடுப்பூசி ஊழல் ஷாங்சி மாநிலத்தில் ஏற்பட்டதற்கு அதிகாரிகள் விடையிறுக்காததால் கலகம் ஏற்பட்டது. ஒரு தனியார் நிறுவனம் தக்க குளிர்சாதன வசதி இல்லாமல் தடுப்பூசி மருந்துகளை சேகரித்து விற்று வந்ததால் அந்த இறப்புக்கள் ஏற்பட்டன. தேசிய மக்கள் காங்கிரஸிற்கு கடந்த மாதம் வென் ஜியாபோ கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இன்னும் மோசமான நிலை வரவுள்ளது என்ற அச்சம் காட்டப்பட்டுள்ளது. அறிக்கை ஜனரஞ்சக வனப்புரையை கொண்டிருந்தது, சமூக நிதியை வலியுறுத்தியிருந்தது. ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்க வகையிலான அறிவிப்பு சமூக நலச் செலவினங்கள் பாதியாக்கப்படும், வருமானம் நியாயமான மறுபங்கீட்டிற்காக பெரும் துவக்க முயற்சிகள் இராது மற்றும் "பொது பாதுகாப்பிற்கான" செலவுகள் அதிகரிக்கப்படும் என்பவைதான்.
|