World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Stalinists' "jail bharo": a political stunt

இந்திய ஸ்ராலினிஸ்ட்டுக்களின் "சிறை நிரப்பும்" போராட்டம்: ஒரு அரசியல் வித்தை

By Sampath Perera
8 April 2010

Use this version to print | Send feedback

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் பெருவணிகச் சார்பு பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி இன்று நடத்துகிறது.

அதன் சமீபத்திய வரவு-செலவுத் திட்டத்தில் UPA ஆனது பெருவணிகத்திற்கும் செல்வந்தர்களுக்கும் பெரியளவு வரிச் சலுகைகளை கொடுத்த விதத்தில் வெகுமதி செய்த அதே நேரத்தில் சமூக நலச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட உண்மையான அளவு பணத்தை வெட்டியுள்ளது. இந்தியாவின் உழைக்கும் மக்கள் உயரும் விலைவாசியால் தண்டிக்கப்பட்டுள்ள நிலைமையில்--மொத்த உணவுப் பொருள் விலை ஆண்டுக் கணக்கில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் உயர்ந்துவிட்டது--அரசாங்கம் டிசல், பெட்ரோல் மீது வரிகளை உயர்த்தியுள்ளதுடன் உர விலையில் உதவி நிதியையும் குறைத்துவிட்டது.

"சிறை நிரப்பும் போராட்டம்" என்று கூறப்படும் இப்பிரச்சாரத்தில், நான்கு கட்சிகளினது இடது முன்னணியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசாங்க அலுவலகக் கட்டிடங்களுக்கு முன்பு மறியல் நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தைப் போல் வேண்டுமென்றே கைதுக்கு உட்படுவர். இடது முன்னணித் தலைவர்கள் 2.5 மில்லியன் மக்களுக்கும் மேலாக --கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (CPM) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உடைய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் மற்றும் மாணவர் அமைப்புக்கள் மூலம்--பலரும் போராட்டத்தில் இணைவார்கள்.

உலகெங்கிலும் நடப்பது போலவே, இந்தியாவில் தொழிலாள வர்க்கப் போர்க்குணம் ஆளும் வர்க்கத்தின் உந்துதலான முதலாளித்துவ நெருக்கடிக்கு சமூக நலச் செலவு வெட்டுக்கள், பிற்போக்குத்தன வரி அதிகரிப்புக்கள், பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள் இன்னும் பல சுமைகள் மூலம் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்பதற்கு விடையிறுக்கும் வகையில் எழுச்சி அடைகிறது.

இந்தியாவின் பெருவணிக உயரடுக்கு கடந்த இலையுதிர்காலத்தில் குர்காம்-மனேசர் பகுதியில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு குவிந்த மக்கள் ஆதரவைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளது. தற்பொழுது 450,000 ஆசிரியர்களும் மற்ற பொதுத் துறை ஊழியர்களும் ஜம்மு, காஷ்மீரில் வேலைநிறுத்தத்தில் உள்ளனர். அரசாங்கம் அடிப்படைப் பணிகள் நிலைநிறுத்துதல் சட்டத்தை முன்வைத்தும் கூட வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். ஒரு பொதுத்துறைக்கு சொந்தமான பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL ல் உள்ள தொழிலாளர்கள் ஏப்ரல் 20 முதல் UPA அரசாங்கத்தின் திட்டமான 100,000 வேலைகளை அகற்றுதல், 30 சதவிகித பங்குகளை விற்றல் ஆகியவற்றை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். 800,000 சுரங்கத் தொழிலாளர்களும் துணைத் துறைத் தொழிலாளர்களும் அரசாங்கம் (பகுதியாக தனியார் மயமாக்குதல் என்ற முறையில்) பங்குகளை விற்பதை கைவிடாவிட்டால் மே தொடங்கி மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக உறுதியளித்துள்ளனர்.

ஆனால் இடது முன்னணியின் "சிறை நிரப்பும்" போராட்டம், தொழிலாள வர்க்கமும் உழைப்பாளிகளும் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை ஒரு குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு உற்பத்திப் பகுதியாக மாற்றுவதை எதிர்க்கும் ஒரு சுயாதீனமான வகையில் இயக்கத்தை வளர்ப்பது என்ற நோக்கத்தில் இருந்து முற்றிலும் எதிரானது ஆகும்

இடது முன்னணி ஆர்ப்பாட்ட எதிர்ப்புகளானது தொழிலாள வர்க்கம் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட அடுக்குகளின் பெருகிய சீற்றத்தைக் கட்டுப்படுத்தி அதை பெரு வணிகம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான UPA "மக்கள் சார்பு" கொள்கைகளை தொடர்வதற்கு அழுத்தம் கொடுப்பதில் தோல்வி அடையும் மற்றொரு முயற்சியாக திசை திருப்புகிறது. இரண்டாவது நோக்கம் இடது முன்னணியின் பெருகிய முறையில் ஒரு எதிர்க்கட்சி, பெருவணிக எதிர்ப்பு சக்தி என்னும் நம்பகத்தன்மை பெருகிய முறையில் சரிவதை ஈடுகட்டுவதாகும்.

மே 2004 தேர்தல்களின் BJP அதிர்ச்சித் தோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணியை ஒன்றாகக் கொண்டுவருவதற்கு இடது முன்னணி உதவியது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. பின்அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அது அதன் பாராளுமன்ற வாக்குகள் மூலம் UPA ஐ அதிகாரத்தில் தக்க வைத்தது. UPAக்கு தங்கள் ஆதரவை நியாயப்படுத்தும் விதத்தில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அது மக்கள் அழுத்தத்திற்கு கட்டுப்படும் என்று கூறினர் --அதற்கு முந்தைய BJP தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையில் இருந்து அதிகம் மாறுபட்டிராதவற்றை கடைப்பிடித்தும். மேலும் மரபார்ந்த வகையில் முதலாளித்துவத்தின் அரசாங்கம் என்று இருந்த காங்கிரஸிற்கு ஆதரவு கொடுப்பது ஒன்றுதான் BJP மீண்டும் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் என்றும் கூறுகிறது.

இறுதியில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இருவரும் இடதுடன் தங்கள் கூட்டை முறித்துக் கொள்ள விரும்பினார்கள். அதையொட்டி அக்கட்சி இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அதன் "உலகளாவிய மூலோபாயப் பங்காளித்தனத்தை" உறுதி படுத்திக் கொள்ளமுடியும் என்பதற்காக.

பெருவணிக UPA அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்னும் ஸ்ராலினிச முன்னோக்கு அவர்கள் கோஷமான "மன்மோகன் அரசாங்கம் தன் நிலையை உணர்ந்து விலையேற்றத்தை தடுக்க வேண்டும்" என்பதில் உதராணத்தை கொண்டுள்ளது.

UPA அரசாங்கம் டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்தை திரும்பப் பெறவில்லை என்றால் தான் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் என்று இடது முன்னணி கூறியுள்ளது. "அரசாங்கம் கூறுவதைக் கேட்கவில்லை என்றால், நாம் வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடரில் இனி அதற்கு எதிராகச் செயல்படுவோம் என்று மார்க்ஸிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கட்சியின் வாராந்திர ஏடான People's Democracy ல் எழுதியுள்ளார்.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் "பிற மதசார்பற்ற" கட்சிகளுடன் சேர்ந்துவிடுவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். அதாவது ஏராளமான வட்டார, சாதியக் கட்சிகள், காங்கிரஸிற்கும் BJP க்கும் இடையே ஊசலாடுபவற்றுடன் -- வரவு-செலவுத் திட்ட சட்ட வரைவைத் தோற்கடிப்பதற்காக.

ஆனால் காரத் இது மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டாம் என்பதையும் அவசரமாக தெளிவுபடுத்தியுள்ளார். "பாராளுமன்றத்திற்குள் நடக்கும் போராட்டம் அரசாங்கத்தை கவிழ்க்கும் வடிவமைப்பை கொள்ளவில்லை. ஆளும் கட்சியை தனிமைப்படுத்தும் அரசியல் போராட்டம் ஆகும், அதன் பிற்போக்குத்தன கொள்கையை மாற்றுவதற்கான போராட்டம் ஆகும்."

அலங்காரச் சொற்கள் ஒருபுறம் இருக்க, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வரக்கூடிய காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான UPA பதவியில் நீடிப்பதைத் தெளிவாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஹிந்து மேலாதிக்க BJP ஐ விட இது "குறைந்த தீமை" என்ற கருத்தையும் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இன்னும் எதிர்ப்புத் தன்மை நிறைந்த நிலைப்பாட்டை அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டாலும், அது ஒரு மாற்றீடு முதலாளித்துவக் கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கும். மே 2009 லோக் சபா பொதுத் தேர்தலில், UPA யினால் ஒதுக்கப்பட்ட ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மூன்றாவது முன்னணி என அழைக்கப்பட்ட ஒரு கூட்டணிக்கு வாதிட்டு முன்னிற்கின்றனர். இதில் TDP, AIDMK போன்ற கட்சிகளும் இருந்தன. அவை புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும் பிற வகையில் தொழிலாள வர்க்கத்தை தாக்குவதிலும் இழி தன்மை கொண்டவை ஆகும்.

அத்தேர்தல்களில் இடது முன்னணி ஒரு தேர்தல் சங்கடத்தை கண்டது. அதன் பாராளுமன்ற பிரதிநிதிகள் 60க்கும் மேல் என்பதில் இருந்து 24 தான் என்று எண்ணிக்கையில் குறைந்தனர். இது தேசிய பாராளுமன்ற அரங்கில் இடதின் வலதுசாரித் தந்திரங்களின் விளைவு ஆகும். ஆனால் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா என்னும் மூன்று மாநிலங்களில் இடது முன்னணி அமைத்திருந்த அரசாங்கங்களின் முதலீட்டுச் சார்பு கொள்கைகளை தொடர்ந்ததை மக்கள் நிராகரித்ததை அடுத்தும் ஏற்பட்டது.

"சோசலிசம் நடைமுறைக்கு ஒத்துவராது" என்று கூறி, மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கம் தகவல் தொழில்நுட்பம், மற்றும் அதன் தொடர்புடைய பிரிவில் வேலைநிறுத்தங்களுக்கு தடை செய்ததுடன், சிறப்புப் பொருளாதார பகுதிகளில் நிலங்களை எடுத்துக் கொள்வதற்கு எழுந்த விவசாய எதிர்ப்பை அடக்க பொலிசையும் குண்டர்களையும் பயன்படுத்தியது.

2009 மே தேர்தலில் இருந்து, மேற்கு வங்க அரசாங்கம் இன்னும் வலதிற்கு மாறியுள்ளது. UPA அரசாங்கத்தின் முடிவான மாவோயிசக் கெரில்லாக்களுக்கு எதிரான தேசியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட எழுச்சி-எதிர்ப்புப் போருக்கு முக்கிய அரசியல் ஆதரவைக் கொடுத்துள்ளது. அதையொட்டி இந்தியாவின் பழங்குடிப் பகுதிகள் பெரும் இருப்புக்களை சுரண்டும் திட்டங்களுக்கு திறந்துவிடப்பட முடியும். அதே நேரத்தில் அது பல முறையும் காங்கிரஸ் கட்சி வங்க பிராந்தியவாத தீவிர வலதுசாரியான TMC எனப்படும் திருணமூல் காங்கிரஸுடன் முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளது. அதுவோ இடது முன்னணியின் பொதுவான எதிர்ப்பை பயன்படுத்தி சில வெற்றிகளை பெற்றுள்ளது. மார்க்ஸிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், இடது முன்னணியில் மேலாதிக்கம் கொண்டவர்கள், பல முறையும் தங்கள் கட்சி TMC ஐ விட காங்கிரஸிற்கு பொறுப்பான நட்பைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளனர். அதற்குச் சான்றாக, அவர்கள் மே 2004 முதல் ஜூன் 2008 வரை பாராளுமன்றத்தில் UPA க்கு கொடுத்த ஆதரவைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள் பல தசாப்தங்களாக முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தில் ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் செயல்பட்டு வருகின்றன. இந்தியத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய வேலைத்திட்டமும் கட்சியும் தேவை. அது நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் அதாவது நிலப்பிரபுத்துவ முறையை அகற்றுதல், சாதி அடக்குமுறையை அகற்றுதல், மற்றய பற்றியெரியும் ஜனநாயகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்பது இந்திய, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இதை உறுதிப்படுத்த முடியும்.