World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்Franco-Italian summit makes strategic deals, calls for bailout of Greece பிரான்ஸ்-இத்தாலிய உச்சிமாநாடு மூலோபாய உடன்பாடுகளைக் காண்கிறது, கிரேக்கப் பிணை எடுப்பிற்கு அழைப்பு விடுகிறது By Alex Lantier ஏப்ரல் 9ம் திகதி இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனிக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கும் இடையே பாரிசில் நடந்த பிரான்ஸ்-இத்தாலிய உச்சிமாநாடு இரு அரசாங்கத் தலைவர்களும் ஒரு தொடர்வரிசையான தொழில்துறை, இராணுவ உடன்பாடுகளில் கையெழுத்திடவும் ஐரோப்பாவின் எழுச்சி பெறும் அரசியல் நெருக்கடி பற்றி கூட்டு நிலைப்பாடு பற்றி அறிவிக்கவும் அனுமதித்தது. இரு முக்கிய தலைவர்களும் கிரேக்கத்திற்கு ஒரு நிதியப் பிணை எடுப்பு பற்றி வலியுறுத்தி ஜேர்மனிய-ரஷ்ய அச்சு ஒன்று வளர்வதற்கு எதிரான எச்சரிக்கையையும் அளித்தனர். அணுசக்தி பற்றி ஒரு பெரிய உடன்பாட்டையும் உச்சிமாநாடு ஏற்றது. பிரெஞ்சு அணுசக்தி நிறுவனம் Areva இத்தாலியின் Ansaldo Nucleare (Fimmeccanica குழுவின் பகுதி) உடன் அணுசக்தி பொறியியல் மற்றும் பிரெஞ்சு வடிவமைப்புக்கள் உலைப் பகுதிகள் கட்டமைப்பு பற்றி உடன்பாடுகளில் கையெழுத்திட்டது. Areva மற்றும் பிரெஞ்சு அரசாங்கம் இத்தாலிய அணுசக்தித் தொழில்நுட்பத் திறன் உடையவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. EDF எனப்படும் பிரான்சின் மின்சாரம் வழங்கல் நிறுவனமும் ENEL ம் 2013ல் தொடங்கி நான்கு அணு உலை ஆலைகளைக் கட்டமைக்கும் கூட்டு முயற்சியிலும் கையழுத்திட்டன சோவியத் ஒன்றியத்தில் Chernobyl அணுசக்தி நிலையப் பேரழவிற்குப்பின், 1986ல் இருந்து இத்தாலி அணுசக்தியைப் பயன்படுத்தியது இல்லை. இத்தாலிய நாளேடு La Republica பெர்லுஸ்கோனி "வருங்கால அணுசக்தி ஆலைகளின் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய தேவை உண்டு என்று ஒப்புக் கொண்டுள்ளார்." என்று குறிப்பிட்டுள்ளது. இத்தாலி தனக்குத் தேவையான எரிசக்தி பயன்பாட்டில் 80 சதவிகிதத்தை, பிரான்சின் 58 அணுசக்தி ஆலைகளில் இருந்து கணிசமான அளவு உட்பட, இறக்குமதி செய்கிறது. போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் பெர்லுஸ்கோனி எரிசக்தியை மலிவாக உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பெர்லுஸ்கோனி நம்புகிறார். இந்த ஒப்பந்தங்கள் இத்தாலிக்கு அணுசக்தி வடிவமைப்பில் தொழில்நுட்பத் தேர்ச்சி, ஆய்வு பற்றி "பல ஆண்டுகள் சேமிப்பை" கொடுக்கும் என்று அவர் கருதுகிறார். தன்னுடைய எரிசக்தி பயன்பாட்டில் 25 சதவிகிதத்தை 2030க்குள் உற்பத்தி செய்யும் நோக்கத்தை இத்தாலி கொண்டுள்ளது. அதையொட்டி எரிபொருள், எரிவாயு ஆகியவற்றிற்கு ரஷ்யா அல்லது மத்திய கிழக்கை நம்பியிருப்பது குறையும். ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் தென் கொரியாவின் பொது மின்சார நிறுவனமான Kepco விடம் $20 பில்லியன் ஒப்பந்தத்தை இழந்த பின்னர் பாரிஸைப் பொறுத்தவரை, இது பிரான்சின் அணுசக்தித் தொழில் வணிகத்திற்கு உகந்த சந்தையாகும். பிரான்சின் கார்த் தயாரிப்பு நிறுவனம் ரெனோல்ட்டும் EEL உடன் மின்சாரக் கார்களுக்கு வழங்கல் தளத்தைக் கட்டமைக்க உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. 2008ல் ENEL ஆனது ஜேர்மனிய நிறுவனம் டைம்லருடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அது தற்பொழுது Renault-Nissan உடன் ஒரு மூலோபாயக் கூட்டிற்கான திட்டங்களுக்காக செயல்படுகிறது--இதனால் ரோம், மிலன், பிசா நகரங்களில் மின் கார்களுக்காக 400 சக்தியளிக்கும் நிலையங்கள் நிறுவப்படும். தங்கள் மின் கார்களை இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பாவில் விற்பதற்கும் ரெனோல்ட் திட்டமிட்டுள்ளது. பிரான்சின் தேசிய இரயில் நிறுவனமான SNCF ம் அதன் இரயில் வலையமைப்பை இத்தாலிய அரசாங்க இரயில் துறையான Ferrovie dello Stato உடன் போட்டிக்குவிட ஒப்புக் கொண்டுள்ளது. SNCF இத்தாலியில் கவலையைத் தூண்டும் விதத்தில் தனியார் இத்தாலிய இரயில் நிறுவனமான NTV யில் ஒரு பங்கைக் கொண்டது. பிந்தையது அதற்குத் தேவையான தளவாடங்களை பிரெஞ்சு பொறியியல் நிறுவனம் Alstom இடம் இருந்து வாங்குகிறது. பிரான்ஸ் மற்றும் இத்தாலியானது கடனில் ஆழ்ந்துள்ள கிரேக்கத்திற்கு பிணை எடுப்பு வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவும் உச்சிமாநாடு வாய்ப்பு கொடுத்தது. இதற்கு இதுவரை ஜேர்மனி வலுவாக எதிர்ப்புக் காட்டி வருகிறது. கிரேக்க அரசாங்கம் திவால் ஆகக்கூடிய திறனைக் கொண்டுள்ளது என்னும் கவலைகளுக்கு இடையே இந்த அழைப்பு வந்துள்ளது. கடந்த வாரம் ஜேர்மனியின் அரசாங்கக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.5 என்று உயர்ந்தது--இது ஜேர்மனி கொடுக்கும் விகிதத்தைவிட இரு மடங்கு ஆகும். ஏப்ரல் 8ம் திகதி கிரேக்கக் கடன்களை அதிகமாகக் கொண்டுள்ள, கிரேக்கத்தில் தங்கள் கிளைகளையும் கொண்ட பல பிரெஞ்சு வங்கிகளின் பங்கு விலைகள் பாரிஸ் பங்குச் சந்தையில் சரிந்தன. Banque de France உடைய கவர்னர் Christian Noyer பிரெஞ்சு அதிகாரிகள் "குறிப்பாகக் கவலை கொள்ளவில்லை", ஆனால் கிரேக்கப் பொதுக் கடன்களை பிரெஞ்சு வங்கிகள் கிட்டத்தட்ட 50 பில்லியன் யூரோக்கள் என்று கொண்டிருப்பதால், அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்றார். உச்சிமாநாட்டிற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சார்க்கோசியும் பெர்லுஸ்கோனியும் கிரேக்கத்திற்கு பிணை எடுப்பு பற்றி அழைப்பு விடுத்தனர். பிரஸ்ஸல்ஸில் மார்ச் 25-26 நடைபெற்ற உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இது இருக்க வேண்டும் என்றனர். "கிரேக்கம் யூரோப்பகுதியை சேர்ந்தது, அதற்கு நம்முடைய ஆதரவைக் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நம் நாணயத்தின் மீது எதிர்மறை விளைவுகள் இருக்கும் என்பது பற்றி நாங்கள் முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளோம்" என்று பெர்லுஸ்கோனி கூறினார். "யூரோப்பகுதி நாடுகள் அனைத்தும் ஒரு பிணை எடுப்புத் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளன. கிரேக்கத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு அதைச் செயல்படுத்த நாங்கள் தயார்" என்று சார்க்கோசி கூறினார். "தக்க தருணம் எது என்பதை முடிவு செய்ய வேண்டியது ஐரோப்பிய அதிகாரிகளின் பொறுப்பு" என்று அவர் வலியுறுத்தினார். "ஒவ்வொரு தரமும் ஐரோப்பா நெருக்கடியை சந்தித்திருக்கிறது அதாவது நிதிய நெருக்கடி, ஹங்கேரி நெருக்கடி, லாட்விய நெருக்கடி என்று அதை எதிர்கொண்டுள்ளது. கிரேக்கத்திற்கும் இது நடக்கும் என்பது பற்றி எவரும் சந்தேகப்பட வேண்டிய தேவையில்லை" என்று அவர் சேர்த்துக் கொண்டார். பல உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரிகள் ஒரு கிரேக்கப் பிணை எடுப்பிற்கு அழுத்தம் கொடுத்துள்ள நேரத்தில் சார்க்கோசியின் கருத்துக்கள் வந்துள்ளன. ஏப்ரல் 8 திகதி செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் Jean Claude Trichet, "கிரேக்கம் கடனைத் திருப்பித் தருவதில் தாமதம் என்பது ஏற்படாது." முக்கிய ஐரோப்பிய செய்தித்தாட்களுக்குFrankfurter Allgemeine Zeitung, De Standaard, El Pais, and Le Mondeஏப்ரல் 9 கொடுத்த பேட்டியில் ஐரோப்பிய சபையின் தலைவர் Herman van Rompuy பிணை எடுப்பிற்கு அழைப்புக் கொடுத்து "நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை" என்று வலியுறுத்தினார். Le Figaro வால் ஏப்ரல் 8 அன்று பேட்டி காணப்பட்ட இத்தாலிய வெளியுறவு மந்திரி Franco Frattini உச்சிமாநாட்டின் நிரல் பற்றி தன்னுடைய அரசாங்கத்தின் கருத்துக்களைக் கூறினார். பேச்சுக்களில் கிரேக்கம் பற்றி இருக்குமா என்று கேட்கப்பட்டதற்கு அவர், "கிரேக்கத்திற்கு நம் ஆதரவு முழுமையாக, அரசியலில் மட்டுமின்றி பொருளாதார மட்டத்திலும் இருக்கும் என்பதை நாம் அறிவிக்க வேண்டும். கிரேக்கத்தை அதன் விதிக்கு நாம் கைவிட்டால், சந்தைகள் அதிலிருந்து அனுமானிக்கலாம் அதனால் மற்ற நாடுகளும் அதற்கு திரும்பும். அது யூரோப்பகுதிக்கு ஆபத்தைக் கொடுக்கும்." என்றார்.பிரட்டனி கூறாவிட்டாலும், இத்தாலியே தன் கடன்களைப் பற்றி கவலைகளைக் கொண்டுள்ளது. யூரோப்பகுதியில் அதிக கடன்கள் இருக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் கடன் 116 சதவிகிதம் என்று உள்ளது. ஜேர்மனிய இறக்குமதிகளுடன் அது போட்டியிட முடியவில்லை. ஆனால் இரு நாடுகளும் ஒரே நாணய முறையைத்தான் கொண்டுள்ளன. 2005ல் ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பு வாக்கெடுப்பின் தோல்விக்கு பின்னர் இத்தாலிய பொதுநல மந்திரி Roberto Maroni இத்தாலி யூரோவைக் கைவிட்டு லிராவிற்கு திரும்ப வேண்டும் என்றார். பிரட்டினியும் Le Figaro உம் ஐரோப்பாவில் மூலோபாய அழுத்தங்கள் உயர்வதைப் பற்றியும், குறிப்பாக 2008 ஜோர்ஜியப் போர் கையாளப்பட்டது பற்றி, குறிப்புக் காட்டினர். அதில் அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதி மிகாயல் சாகேஷ்விலியின் ஜோர்ஜிய அரசாங்கம் தெற்கு ஒசேஷியாவில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய படைகளை தாக்கின. ஜேர்மனி ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்கக்கூடும் என்ற அச்சம் பற்றியும் குறிப்புக் காட்டினர். "ஜேர்மனி பாரிசிடம் இருந்து விலகுகிறது" என்று கூறும் பகுப்பாய்வளர்களுடன் உடன்படுகிறாரா என்று கேட்கப்பட்டதற்கு பிரட்டனி கூறினார்: "உண்மையில் இல்லை. ஜேர்மனியின் நலனுக்கு அது உகந்ததாக இராது. மாறாக இத்தாலி, பிரான்சைப் போல் ஜேர்மனியும் ரஷ்யாவை ஐரோப்பிவிற்கு நெருக்கமாகக் கொண்டுவர அனைத்தையும் செய்ய வேண்டும். ஜோர்ஜியாவில் சில்வியோ பெர்லுஸ்கோனியும் நிக்கோலோ சார்க்கோசியும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டனர். நெருக்கடிகளில் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே பிரான்ஸ், இத்தாலி இரண்டுமே நேட்டோ-ரஷ்யக் குழு என்று இருப்பதைத் தக்க வைக்க விரும்புகின்றனர். இது நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது." உச்சிமாநாட்டில் இத்தாலியும் பிரான்ஸும் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் திட்டங்களையும் அறிவித்தனர். ஒரு கூட்டு அல்பின் பிரிவைத் தோற்றுவிக்க அத்திட்டம் நோக்கம் கொண்டது. இதை எலிசே ஜனாதிபதி அரண்மனை "மலைப்பகுதிகளில் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் திறன் உடைய, குறிப்பாக ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில், ஒரு ஒருங்கிணைந்த இராணுவ அதிகாரிகள் இருப்பது" என்று இதை விவரித்தது. செய்தி ஊடகத் தகவல்கள் இது 5,000 பேர் கொண்ட பிரெஞ்சு-ஜேர்மனிய மாதிரியில் அமைக்கப்படும் என்று கூறுகின்றன. இத்தாலியும் பிரான்ஸும் ஏற்கனவே ஒரு அடுத்த தலைமுறை தளப்போர்க்கப்பல் கட்டமைப்பு பற்றி--FREEMM (Multi-Mission Europea Frigate) என்று அழைக்கப்படுவது-- உடன்பாடு கொண்டுள்ளன. இது 2012ல் தொடக்கப்பட உள்ளது. இரு நாடுகளும் கடற்படைக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான tanker ஒன்றைக் கட்டமைக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளன. ஆப்கானிஸ்தானிலும், நேட்டோ நாடுகளிலும் கூட, நேட்டோ ஆக்கிரமிப்பிற்குப் பெரும் மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், பிரான்ஸ்-இத்தாலிய நாடுகள் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் கொண்டுள்ள பங்கை அதிகரிக்கும் திட்டம், அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் அவற்றின் ஒத்துழைப்பைப் பெருக்குவதற்கான திட்டங்களும் வந்துள்ளன. 2010 முடிவில் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்புவதற்கான காலகெடுவைக் கடந்து அங்கு துருப்புக்களை நிறுத்தவதற்கு இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்ததை ஒட்டி டச்சு நாட்டில் அரசாங்கம் பெப்ருவரி மாதம் கவிழ்ந்தது. ஏப்ரல் 7 அன்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சரகம் வெளியிட்ட பச்சைப் புத்தகம் இங்கிலாந்திற்கும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பு வேண்டும் என்று கூறியுள்ளது. "பிரான்ஸ் நேட்டோவின் ஒருங்கிணைந்த இராணுவக் கட்டமைப்புக்களுக்குள் 2009ல் மீண்டும் வந்தமை, பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பங்காளியுடன் இராணுவ ஒத்துழைப்பிற்கு வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பியப் பாதுகாப்பு பற்றி, லண்டனின் International Institute for Strategic Studies ல் பகுப்பாய்வாளராக இருக்கும் Bastian Giegerich Le Figaro இடம், "இங்கிலாந்தும், பிரான்ஸும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பிற்கு என்று அதிகம் ஒதுக்குபவை. உலகம் முழுவதும் மூலோபாய தலையீட்டிற்கு வாய்ப்பு உடையவர்கள். இந்த இரு நாடுகளும் ஐரோப்பாவில் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆயுதத் திட்டங்கள் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் அதிக நலன்களை அடைய முடியும்." |