WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
Socialist Equality Party Manifesto for the 2010 British
general election
2010 பிரிட்டிஷ் பொதுத் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் விஞ்ஞாபனம்
6 April 2010
Use this version
to print | Send
feedbac
David O'Sullivan
பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன், மே 6ம் தேதி பொதுத்
தேர்தலுக்கான தயாரிப்பை ஒட்டி இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி இரு வேட்பாளர்களை நிறுத்திகிறது. 46
வயதான டேவிட் ஓ' சுல்லிவன் ஆக்ஸ்போர்ட் கிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். லண்டனில் பிறந்த இவர்
1984ம் ஆண்டில் இருந்து சோசலிச அரசியலில் தீவிரமாக ஈடுபடுகிறார். வாட்போர்ட் ரோல்ஸ் ரோய்ஸில் அது
மூடப்படும் வரை முன்பு இயந்திரப் பொறியியல் வல்லுனராக இருந்த அவர் இப்பொழுது லண்டன் நிலத்தடி இரயிலில்
வேலை பார்க்கிறார். திருமணமாகியுள்ள இவருக்கு ஆறு குழந்தைகளும் ஒரு பேரக் குழந்தையும் உள்ளது.
Robert Skelton
40 வயதான ரொபேர்ட் ஸ்கெல்ட்ன்
மான்செஸ்டர் மத்திய தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். இவர் மான்செஸ்டரில் பிறந்து, அங்கேயே வசிப்பவர்.
1988ல் இருந்து தீவிர சோசலிச அரசியலில் ஈடுபட்டுள்ள இவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தொடர்ச்சியாக
கட்டுரைகளை எழுதுகிறார். அவை ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் போராட்டங்களை எடுத்துரைப்பவை.
இவர் முழு நேர பராமரிப்புத் தொழிலை மேற்கொள்ளுவதற்கு முன்பு அழைப்பு மையப் பணியில் வேலைபார்த்து
வந்தார்.
***
* ஊதியங்கள், வேலைகள் மற்றும்
சேவைகளில் வெட்டுக்களை இல்லாமல் செய்யவும்
* ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில்
போர்களை நிறுத்தவும்
* ஒரு புதிய சோசலிச
கட்சிக்காக, தொழிற் கட்சியுடன் முறித்துக் கொள்ளவும்
* சர்வதேச தொழிலாளர் ஐக்கியத்தை
கட்டமைக்கவும்
* ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை
நிறுவி, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தவும்
கடும் சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு
தொழிலாள வர்க்க சுயாதீன அரசியல் இயக்கத்தை தயாரிப்பதற்காக தேர்தலில் நிற்கும் எமது வேட்பாளர்களுக்கு
வாக்களிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது.
இப்பொதுத் தேர்தல் ஒரு அரசியல் மோசடி ஆகும். அடுத்த அரசாங்கத்தின் தன்மை
எப்படி இருந்தாலும், அதன் செயற்பட்டியல் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுவிட்டது. சர்வதேச நிதிய நிறுவனங்கள்,
பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும் தங்கள் செய்கையால் வந்திராத
பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றன.
ஊதியங்கள், வேலைகள் முக்கிய சமூக சேவைகளில் வெட்டுக்கள் என்று
"தியாகத்திற்காக" விடுக்கப்பட்டுள்ள அனைத்து அழைப்புக்களையும் சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது.
1930 களுக்குப் பின்னர் மோசமான பொருளாதார நெருக்கடி முக்கிய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களின்
குற்றம் சார்ந்த ஊக நடவடிக்கைகளால் ஏற்பட்டது. அவற்றின் செயல்பாடுகள் உலகப் பொருளாதாரத்தை
கரைப்பின் சரிவில் கொண்டு நிறுத்தியது. ஆயினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும், எவரும் இதற்குப் பொறுப்பு
ஏற்க வைக்கப்படவில்லை. அதே போல் வங்கிகள், ஒதுக்கு நிதியங்களின் செயல்களை தடுக்கும் விதத்திலும் எந்த
நடவடிக்கையையும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட
கால் பகுதி 10
டிரில்லியன் பவுண்டுகள் நிதி, வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டன.
பிரிட்டனில் தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஊக்கப் பொதிகளின் மொத்த அளவு
ா1
டிரில்லியனை எட்ட உள்ளது. இது ஒரு தசாப்தத்திற்கு தேசிய சுகாதாரப் பணிகளுக்கு நிதி அளிக்கப் போதுமான
தொகையாகும்.
பெருவணிகமும் வங்கிகளும் நிதிய நெருக்கடியை தங்கள் நலன்களுக்கு ஏற்ப
பொருளாதார, சமூக உறவுகளைக் கட்டமைக்க பயன்படுத்துகின்றன. உலகப் பொருளாதார சரிவைத் தடுக்க
அவசரகால நடவடிக்கை என்று கூறப்பட்டது குற்றம் செய்தவர்களை பிணை எடுக்கவும் அவர்களுடைய ஒட்டுண்ணித்தன
செயல்களை தொடர அனுமதிப்பதும், பொது நிதியைக் கொள்ளை அடிப்பதும் என்றுதான் உள்ளது. இவற்றின்
ஆபத்தான விளைவுகள் பல தலைமுறைக்கு ஏற்படும்.
உலகின் பில்லியனர்கள் தங்கள் செல்வம் கடந்த ஆண்டு 50 சதவிகிதம் அதிகரித்ததைக்
கண்டனர்--இதன் நிகர மதிப்பு ா2.4
டிரில்லியன் ஆகும். இந்த 1,000 பேர் அல்லது தனிமனிதர்கள் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா தவிர மற்ற
ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக தனிச் சொத்துக்களை கொண்டுள்ளனர்.
இதற்கு மாறுபட்ட விதத்தில் முழு நாடுகளும் திவால் தன்மை அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.
அவற்றின் அரசாங்கங்கள்--"தொழிற் கட்சி" ஆயினும், "கன்சர்வேடிவ்" ஆயினும், தொழிலாளர்களின் வேலைகள்,
ஊதியங்கள், சமூக சேவைகள் ஆகியவற்றில் பெரும் தாக்குதல்களை நடத்துகின்றன. முதல் இலக்குகள் கிரேக்கம்,
ஸ்பெயின், அயர்லாந்து, போர்த்துக்கல், கிழக்கு ஐரோப்பிய மற்றும் பால்டிக் நாடுகள் என்று உள்ளன. ஆனால்
இது ஒரு ஆரம்பந்தான். ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் பின்பற்றப்பட இருக்கும் செயல்களுக்கு
முன்னோடி அமைக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியமும் (IMF),
ஐரோப்பிய மத்திய வங்கியும் எந்த அரசாங்கம் வந்தாலும் மிகப் பெரிய முறையில் பொதுச் செலவுகள் 20
சதவிகிதம் வரை பிரிட்டனில் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளன. இப்படி திட்டமிடப்பட்டுள்ள வெட்டுக்கள்
எவையும் மீண்டும் பழைய நிலை இல்லை என்பதை உறுதிபடுத்தும். மாறாக சுகாதார சேவைகள், அரசாங்கக்
கல்வி மற்றும் பொதுநலன்களில் எஞ்சியிருப்பவற்றை தகர்ப்பதற்கும் பெரும் பாய்ச்சல் செய்யப்படும்.
"வேலையின்மை", "வேலையிழப்புக்கள் மீட்பு" என்னும் பேச்சுக்களானது ஊதியக் குறைப்புக்கள், வேலை
இழப்புக்கள் ஆகியவை நிரந்தரமாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
வெளிப்பட்டுள்ள நிதியப் பேரழிவு ஒரு வெறும் தற்காலிக சரிவு அல்ல. இது முதலாளித்துவம்
என்னும் முழு அமைப்புமுறையின் தோல்வி ஆகும். அனைத்து உத்தியோகபூர்வ நிறுவனங்களும்--பாராளுமன்றம், பாங்க்
ஆப் இங்கிலாந்து, நிதிய சேவைகள் அமைப்பு மற்றும் செய்தி ஊடகங்கள்-- முறையாக, முன்னோடியற்ற விதத்தில்
நடக்கும் நிதியக் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக உள்ளன.
மற்றொரு பெரும் மந்தநிலை என்னும் ஆவியுருவுடன் இராணுவவாதம் மற்றும்
போருக்கான திருப்பமும் வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆதரவைக் கொண்டுள்ள அமெரிக்கா இதற்கான வழிவகை
செய்யும் விதத்தில் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் காலனித்துவ போர்களுக்கு தலைமை தாங்குகிறது. அவற்றின்
நோக்கம் முக்கியச் சந்தைகள், இருப்புக்கள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டை பெறுவது ஆகும். இராணுவவாத
வளர்ச்சி மகத்தான ஆபத்துக்களை காட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தது போலவே,
பொருளாதார நிலை குலைவு முக்கிய சக்திகளிடையே அழுத்தங்களை தீவிரமாகப் பெருக்கி, காப்புவரிக்
கொள்கை, வணிகப் போர் இவற்றிற்கு வழிவகுத்து, மனிதகுலம் தப்பிப் பிழைப்பதையே அச்சுறுத்தும் ஒரு புதிய
உலகப் போர் தோன்றும் ஆபத்து என்ற ஆவியுருவை எழுப்பியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் அதன் சொந்த விடையைக் கொடுக்க
வேண்டும். இது முற்றிலும் தேசிய அடிப்படையில் இயலாதது ஆகும். கடும் சிக்கனம் மற்றும் போருக்கு எதிரான
போராட்டத்தில், தொழிலாளர்கள் தங்கள் அரசாங்கம், அதன் அரச கருவிகளை எதிர்கொள்ளுவது மட்டும்
இல்லாமல், ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க ஆளும் வர்க்கங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களையும்
எதிர்கொள்கின்றன.
இதை எதிர்த்துப் போரிடுவதற்கு உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச
எதிர் தாக்குதல் தேவைப்படுகிறது.
ஐரோப்பா முழுவதும் வேலை நிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் தோன்றியுள்ளன. எல்லா
இடங்களிலும் தொழிலாளர்கள் பொதுப் பிரச்சினைகளையும் ஆளும் உயரடுக்கினருக்கு எதிரான, சமரசத்திற்கு இடம்
இல்லாத நலன்களையும் எதிர்கொள்ளும் பங்கைக் கொண்டுள்ளனர் என்பதற்கு நிரூபணம் ஆகும். ஒரு ஐரோப்பா
தழுவிய தொழிலாளர் இயக்கம் வெளிப்படுவதற்கான புறநிலைமைகள் வெளிப்பட்டுவருகின்றன. இது வர்க்கப்
போராட்டத்தின் சர்வதேச மறு எழுச்சியின் ஒரு பகுதி ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவைப்படுவது முழு
நனவுடன் தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் உலகப் பொருளாதாரம் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யவதற்கு
மறுகட்டமைக்கக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்பதுதான்.
தொழிற்கட்சி: பெருவணிகத்தின் ஒரு வலதுசாரிக் கட்சி
தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் மோசமான நிலைமைக்கு தொழிற்கட்சி
அரசாங்கம் நேரடிப் பொறுப்பை கொண்டுள்ளது. 13 ஆண்டுகள் இது பதவியில் இருந்தது, கன்சர்வேடிவ்களைவிட
சற்றும் குறையாத ஒரு வலதுசாரி பெருவணிகக் கட்சியாகத்தான் தொழிற்கட்சி உள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது.
புதிய தொழிற்கட்சியானது "மக்கள் இழிவான பெரும் செல்வம் அடைவது பற்றி
கவலையற்று உள்ளது" என்று பெருமை பேசிக் கொள்ளும் அரசாங்கம், லண்டன் நகரம் மற்றும் பெரு வணிகம்
ஆகியவற்றின் நலன்களை தன் முன்னுரிமையாக கொண்டு "செல்வச் செழிப்பு, தகர்ப்பு" ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் என்று கூறுகிறது. ஆனால் அது சாதித்தது எல்லாம் கடல் கடந்த வரிப்பாதுகாப்பு பகுதியாகவும்,
ஏமாற்றுபவர்கள், நிதிக் கொள்ளைக்காரர்களுக்கு மையமாகவும் பிரிட்டனை மாற்றியுள்ளதுதான். மார்க்கிரெட்
தாட்சரின் வழியைப் பின்பற்றி தொழிற்கட்சியானது பெருநிறுவனத்தின் மீதான வரிகளைக் குறைத்து நகரத்தை
கிட்டத்தட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுவித்ததுதான். இதையொட்டி பல முக்கிய நிறுவனங்கள்
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட எவ்வித வரியையும் செலுத்துவது இல்லை.
பெரும் செல்வம் படைத்த நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்காக, வாழ்வின் ஒவ்வொரு
கூறுபாடும் சந்தைக்கு தாழ்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு பின், பொதுநல
அரசு தோற்றுவிக்கப்படுவதற்கு முன் இருந்த, சமூக சமத்துவமின்மையில் அதிகரிப்புத்தான்.
"பிரிட்டன் ஒரு சமத்துவமற்ற நாடு, மற்ற தொழில்துறை வளர்ச்சியுறா
நாடுகளைவிட, ஒரு தலைமுறைக்கு முன்பு இருந்ததைவிட அதிகமாக, என்று" அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
மக்களில் செல்வம் அதிகம் படைத்த 10 சதவிகிதத்தினர் வறிய 10 சதவிகிதத்தினரைப் போல் 100 மடங்கு
வசதியுடன் வாழ்கின்றனர். வறியவர்கள் வாரத்திற்கு ா56
பணத்தில் வாழ்கின்றனர். மிகச் செல்வம் படைத்த 0.5 சதவிகித
செல்வந்தர்கள் 1937ல் இருந்ததை விட தேசியச் சொத்துக்களில் அதிக பங்கைக் கொண்டுள்ளனர்.
தொழில்துறை தகர்க்கப்படுதல், நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகள் அழிக்கப்படுதல்
ஆகியவை மகத்தான விரிவாக்கத்தை பகுதிநேர வேலைகள் பிரிவில் ஏற்படுத்தியுள்ளது. 40 சதவிகித ஆடவரும் 30
சதவிகிதப் பெண்மணிகளும் கட்டாயமாக தற்காலிக வேலையில் ஈடுபட்டுள்ள நிலை வந்துள்ளது. இது ஊதிய விகிதங்களைக்
குறைத்துவிட்டது. ஒரு வயது வந்தவரின் குறைந்தபட்ச ஊதியம் 5.9 பவுண்டு ஒரு மணிக்கு என்பது நடைமுறையாகிவிட்டது.
நான்கு மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றன, 1.7 மில்லியன் பேர்கள் கடுமையான ஏழ்மையில் உள்ளனர்.
வரவு செலவை சரிக் கட்டவதற்கு குடும்பங்கள் மலைபோல் கடன்களை
வாங்கியுள்ளன--மொத்தம் ா1.5
டிரில்லியன் அல்லது வீட்டிற்கு
ா116,000
என்று. இதில் பெரும்பகுதி அடைமானங்களில் உள்ளது. தவணைகளை கட்டாவிட்டால் பலரும் வீடிழப்பர் என்ற
அச்சுறுத்தலுக்கு இது தள்ளியுள்ளது. உத்தரவாதம் இல்லாத சராசரிக் கடன்கள் (சொந்தக்கடன்கள் மற்றும் கடன்
அட்டைகள்) வீட்டிற்கு ா18,500
என்று உள்ளது.
தனிநபர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்திவிட்டன.
உலக வரலாற்றில் மிகப் பெரிய பிணை எடுப்பை தொடர்ந்து வரி செலுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் உடைமையாகக்
கொண்டிருக்கும் Royal Bank of Scotland
1.5 க்கும் 2 பில்லியன் பவுண்டுகளுக்கும் இடையே போனஸாக வழங்கியது.
செல்வத்தில் தங்களை பணக்காரர்கள் அமிழ்த்திக் கொண்ட நிலையில், தங்கள்
வேலைகள், ஊதியங்கள், பணிநிலைமைகளை தொழிலாளர்கள் பாதுகாக்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும்
சீற்றமிகுந்த கண்டனங்களையும், சட்ட பூர்வ நடவடிக்கைகளையும் கூட எதிர்கொள்கிறது.
உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் பொதுத்துறையில் எந்த அளவு வெட்டுக்கள்
வேண்டும் என்பதில் போட்டி போடுகையில், வேலையின்மை இந்த ஆண்டு இறுதிக்குள் 3 மில்லியனை அடையக்கூடும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியும் பவுண்டு மற்றும் ஏறும் விலைகள் இன்னும் பலரை வறுமையில் ஆழ்த்தும்.
இடைவிடா அரசாங்க, செய்தி ஊடக வேட்டைகள் "பொதுநல நிதியைச்
சுரண்டுபவர்கள்" என்று சூனிய வேட்டையாடும்போது, வேலையின்மை பலரையும் வாரத்திற்கு
ா70 க்கும் குறைவான பணத்தில் வாழவேண்டிய கட்டாயத்தில்
தள்ளியுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் இயலாதவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நலன்களை முற்றிலும்
இழக்கக்கூடிய ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
இளைஞர்களுக்கு நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மிகக் கடுமையாக உள்ளது. 25
வயதிற்கு கீழே உள்ளவர்களில் 20 சதவிகிதத்தினருக்கு வேலை இல்லை. பலருக்கும் எவ்வித வருமானமும் இல்லை
தங்கள் பெரும் திகைப்பு கொடுக்கும் சூழலில் இருந்து வெளியேற நம்பிக்கையற்று உள்ளனர். இந்த ஆண்டு
200,000 இளைஞர்களுக்கு பல்கலைக்கழகப் படிப்பு மறுக்கப்பட்டது. இதற்குக் காரணம் வரவு-செலவு
திட்டக் குறைப்புக்கள் ஆகும். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணங்களுக்காக கடன் வாங்கும்
கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் இப்பொழுது வேலையின்மை அல்லது முட்டுச் சந்து வேலைகளைத்தான் எதிர்கொள்கின்றனர்.
கடன்களை திருப்பித்தர இயலாது.
தொழிற்கட்சி: போர் ஆதரவுக் கட்சி
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள்மீது தாக்குதலுடன் தொழிற்கட்சியானது
அமெரிக்க இராணுவவாதத்திற்கு மிகவும் ஆர்வத்துடன் ஆதரவு கொடுத்து, தவிர்க்க முடியாத போர் என்னும் சட்டவிரோதக்
கொள்கைக்கு முழு ஆதரவைக் கொடுத்துள்ளது.
ஈராக் போரையும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும்
பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர். ஆயினும்கூட கொலை செய்தல் தொடர்கிறது. ஈராக்கின் வன்முறையால்
சிவிலிய இறப்புக்கள் பற்றிய மதிப்பீடு 100,000த்தில் இருந்து 600,000 மேல் என்று உள்ளன. ஆப்கானிஸ்தானில்
இந்த ஆண்டு இதுவரை 1,440 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்--இது முந்தைய எட்டு ஆண்டுகளின் மொத்த இறப்பு
எண்ணிக்கைக்குக் கிட்டத்தட்ட சமமாக உள்ளது. நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் படையினர் உயிரிழந்துள்ளனர். இரு தலையீடுகளினாலும்
ஏறப்ட்டுள்ள செலவு ா20
பில்லியன் ஆகும்.
ஒன்றன்பின் ஒன்றாக விசாரணைகள் வந்தும், போர்க் குற்றங்களுக்கு
பொறுப்பானவர்கள் எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. முன்னாள் பிரதம மந்தரி டோனி பிளேயர்
மத்திய கிழக்குப்பகுதி "சமாதானத் தூதர்" என்று பெருமை பேசிக்கொள்ளுவதுடன், அதிக இலாபம் தரும்
ஒப்பந்தங்களில் இருந்து மில்லியன்களை பெறுகிறார். இதில் ஈராக்கில் நலன்களைக் கொண்டுள்ள பெரு எண்ணெய்
நிறுவங்களுடனான ஒப்பந்தங்களும் உள்ளன. இதற்கிடையில், அவருடைய கூட்டு சதி உடந்தையினர் ஆப்கானிஸ்தானிற்கு
கூடுதலான படைகளை அனுப்பி வைத்து, வணிக செல்வாக்கு தேடும் குழுக்களிடம் இருந்து பெரும் நலன்களை
பெறுகின்றனர்.
கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் ஜனநாயகவாதிகள் இந்தப்போர் உந்துதலுக்கு முழு
ஆதரவைக் கொடுக்கின்றனர். அரசாங்கத்தை பற்றிய அவர்கள் குறைகூறல் எப்படி போர் முயற்சிக்கு நிதி
திரட்டப்பட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. "எமது பிள்ளைகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்"
என்னும் ஏராளமான வேண்டுகோள்களுக்கு இடையே, ஆப்கானிய மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புக்களை
நெறிப்படுத்தவும், புதிய படையெடுப்புப் போர்களுக்கு தயாரிப்பு நடத்தவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு நாளும் இராணுவச் செலவுகளுக்கான புதிய கோரிக்கைகள் எழுகின்றன.
Trident
அணுசக்திமுறையை மாற்றுவதற்கு ா100
பில்லியன் செலவழிக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைக் கேடய
திட்டத்தைப் போல், இது ஒன்றும் பாதுகாப்புடன் தொடர்பு கொண்டது இல்லை. வாஷிங்டன் மற்றும் லண்டன்
போட்டியாளர்களுக்கு எதிராக இயக்கப்படுவது. எல்லாவற்றிற்கும் மேலாக இது சீனா, ரஷ்யாவை எதிர்த்து.
தொழிற்கட்சி: ஒரு சர்வாதிகாரப் போக்கு நிறைந்த கட்சி
"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மறைப்பில் தொழிற்கட்சி குடி உரிமைகளை
முறையாக தகர்த்துள்ளது. சர்வதேச அளவில் அரசாங்கமானது வாஷிங்டன் செய்துள்ள அனைத்து போர்க்
குற்றங்களிலும் உடந்தையாக இருந்துள்ளது--இவற்றுள் சித்திரவதை, அசாதாரணக் கடத்தல், இலக்கு வைக்கப்பட்ட
படுகொலைகள் ஆகியவை அடங்கும். இஸ்ரேல் போன்ற தன் நட்பு நாடுகளுக்கு போர்க் குற்றவாளிகளுக்கு பிரிட்டன்
பாதுகாப்பான இடம் என்றும் உறுதிமொழி கொடுத்துள்ளது.
உள்நாட்டில், தொழிற்கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் பொலிஸ் அரசாங்கத்திற்கான
சட்டபூர்வ வடிவமைப்பை கொண்டுள்ளன. ஆட்கொணர்தல் --ஒருதலைப்பட்ச கைது, சிறைவாசம் இவற்றில் இருந்து
சுதந்திரம் அளிப்பது-- குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது, ஜூரி முறை விசாரணைக்கான உரிமை குறைக்கப்பட்டுள்ளது,
பேச்சுரிமை, வெளிப்பாட்டு உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளன, குற்றம் நிரூபிக்கப்படும் வரை கைது செய்யப்பட்டவர்
நிரபராதி என்று கொள்ள வேண்டிய கருத்து தூக்கி எறியப்பட்டுள்ளது. பாராளுமன்ற இசைவு இல்லாமல் அவசர
காலம் என்று அறிவிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டதைத்தவிர, அரசாங்கம் ஒரு இரகசிய "கொலை செய்யச்
சுடு" என்ற சட்டத்தை இயற்றியுள்ளது; இதன்படி Jean
Charles de Menezes உடைய உயிர் எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளாலும் பெரும்பாலும்
ஏற்கப்பட்டுவிட்டன. பிரிட்டனில் அரசியல் ஸ்தாபனமானது ஜனநாயக உரிமைகளுக்கு உண்மையான கடப்பாடு
என்பதைக் கைவிட்டுவிட்டதை இது உறுதிப்படுத்துகிறது. பாராளுமன்றம் பெரும் செல்வந்தர்கள் கோரும்
கொள்கைகளுக்கு முத்திரை இடும் அமைப்பாக மாறிவிட்டது. வரி செலுத்துவோர் இழப்பில் எம்.பி.க்கள் தங்களை
பைகளை நிரப்பிக் கொள்ளும் அரங்காகிவிட்டது.
சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் ஆகியவற்றுடன் ஜனநாயகம் இயைந்து இருக்க
முடியாது. பெரும்பாலான மக்களுடைய நலனுக்கு எதிராக இயக்கப்படும் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு வாக்கு
இருக்க முடியாது. இவை திணிக்கப்படத்தான் வேண்டும்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஆரம்ப இலக்கு பிரிட்டனில்
உள்ள சிறுபான்மைச் சமூகங்கள் ஆகும். அவை "பயங்கரவாத" சோதனைகள், துன்புறுத்தப்படல், பொலிஸ் தடுத்து
நிறுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உள்ளாகின்றன. முஸ்லிம்கள், தஞ்சம் கோருவோர், குடிபெயர்பவர்கள்
ஆகியோருக்கு எதிரான வெறி இந்த அடக்கு முறை நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் தொழிலாள வர்க்க
மக்களை இன, மத வகைகளில் பிரிப்பதையும் நோக்கம் கொண்டவை.
இன்னும் அண்மையில், ஆர்ப்பாட்டக்காரர்களும், நிரபராதியான அருகில் நின்றவர்களும்
எந்தக் கேள்வியும் இல்லாமல் பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளனர், ஏன் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்ட
எதிர்ப்பு அமைப்புக்களில் அரசாங்க ஒற்றர்கள், தூண்டிவிடுபவர்களுடைய ஊடுருவல் உள்ளன.
பிரிட்டிஷ் ஏயர்வேஸ் வேலைநிறுத்தம் ஒரு தொழில்துறை "பயங்கரவாதம்" என்று செய்தி
ஊடகங்கள் விவரித்ததில் இருந்து எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆளும் உயரடுக்கு சமூக, அரசியல்
அதிருப்தியை எதிர்கொண்டுள்ளவிதம், அடுத்த கட்டத்தில் அரசாங்க வன்முறை தவிர்க்க முடியாமல் பெருகும் என்பதையே
காட்டுகிறது.
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய, உண்மையான சோசலிச கட்சியைக்
கட்டமைப்பதில்தான் அனைத்தும் தங்கியுள்ளது.
தொழிற்கட்சி அரசாங்கமானது இத்தேர்தல்களில் "குறைந்த தீமை" எனப்படும் கூற்றை
SEP
நிராகரிக்கிறது. அது வர்க்க விரோதம் கொண்டுள்ள ஒரு கட்சியாகும். அதே போல் இன்று தொழிற்சங்கங்கள்
நிர்வாகத்தின் கரம் போல் செயல்பட்டு பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் கோரும் தாக்குதல்களை சுமத்த
உதவுகின்றன. தேசிய பொருளாதாரத்தை வளர்க்கும் தொழிற்சங்கங்கள் "தேசிய நலன்களுக்காக கடும் சிக்கன
நடவடிக்கைகளை அவை ஆதரிப்பதில் இருந்து பிரிக்க முடியாதவை. பிரிட்டனின் போட்டித்தன்மைக்காக இது என்று
கூறுகின்றனர். வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புவிடும் கட்டாயத்திலும், அவற்றின் ஒரே நோக்கம் தவிர்க்க முடியாத
காட்டிக் கொடுப்பை அமைப்பதற்கு முன் சமூக சீற்றத்தை சிதைப்பதும்தான்.
முற்றிலும் புதிய வகைப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
SEP ஆனது
தொழிலாள வர்க்கம் பழைய அதிகாரத்துவ அமைப்புக்களில் இருந்து சுயாதீனமாக தங்களை அமைத்துக் கொள்ளும்
எந்த முயற்சிக்கும் ஆதரவை தீவிரமாகக் கொடுக்கிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டமைக்கவும், ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கு
போராடவும் இது மிகவும் முக்கியம் ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சி கீழ்க்கண்டவற்றிற்காக உறுதியுடன் நிற்கிறது:
1. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம்
உலகப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைப்பு மனிதகுலத்தின் தேவைகள் அனைத்தையும்
நிறைவு செய்யும் தளத்தைக் கொடுக்கிறது. ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் இது எல்லா இடங்களிலும் இருக்கும்
தொழிலாளர்களின் நிலைமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தத்தான் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்துவித இனவெறி, தேசியவாதம், பிரிட்டிஷ், ஸ்காட்டிஷ், இங்கிலீஷ் மற்றும்
வேல்ஷ் தம்முள் மாறுபட்ட தன்மைகள் உட்பட, கருத்துக்களையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். தங்கள்
போராட்டங்களை வங்கிகள் மற்றும் உலகளாவிய பெருநிறுவனங்களின் தாக்குதலை எதிர்க்க ஐரோப்பா முழுவதும்
ஏற்பட்டுள்ள போராட்டங்களுடன் இணைக்க வேண்டும்.
நாம் கூறுகிறோம்: ஐரோப்பிய பெரு வணிகம் வேண்டாம்! ஐரோப்பிய ஐக்கிய
சோசலிச அரசுகள் வேண்டும்! இவை உலக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பகுத்தறிவார்ந்த முறையில்
பொருளாதார வாழ்வை மறுசீரமைப்பதின் ஒரு பகுதி ஆகும்.
2. வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் சமூக உடைமையாக்கப்படல்
நிதிய, பெருநிறுவன உயரடுக்கு சமூகத்தின்மீது கொண்டுள்ள ஏகபோக உரிமை,
நெருக்கடிக்கு முற்போக்கான, ஜனநாயகத் தீர்வுடன் பொருந்தியிராது.
நாம் கூறுவோம்: சர்வதேச நிதிய நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன்கள்
அனைத்தையும் இரத்து செய்! வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை பொது உடமையாக்கவும், அவற்றை ஜனநாயகக்
கட்டுப்பாட்டினுள் பயனுடையதாகவும் மாற்றவும்!
3. செல்வம் மறுபங்கீடு செய்யப்படல்
தற்கால வாழ்வின் சிக்கல் நிறைந்த தேவைகள் ஒரு ஒட்டுண்ணித்தன உயரடுக்கு இன்னும்
கூடுதலான செல்வக் கொழிப்பு பெறும் ஒரு பொருளாதார முறையின் தளத்தின் வடிவமைப்பிற்குள் தீர்க்கப்பட
முடியாதவை ஆகும். பெரும் செல்வந்தர்களின் நெறி தவறிச் சேகரித்த சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு அடிப்படை
சமூகத் தேவைகளைக் கொடுக்க பயன்படுத்தப்பட வேண்டும்.
4. ஒரு அவசரக்கால பொதுப் பணித் திட்டம்
மேலே பட்டியலிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் மகத்தான பொதுப்பணித் திட்டத்தை செயல்படுத்தப்
போதுமான இருப்புக்களை அளிக்கும். அவை வேலையின்மை என்ற பெரும் தீமைக்கு முற்றுப் புள்ளி வைக்கும். கெளரவ
ஊதியம் கொடுக்கும் வேலைகள், இலவச உயர்தர சுகாதாரம், வீடுகள், கல்வி, மற்றும் சமூகத் தேவைகளை
அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கொடுக்கும்.
5. இராணுவவாதம் மற்றும் போருக்கு முடிவு
பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் இராணுவ செயல்களுக்கு எதிராக தொழிலாளர்கள்
உறுதியான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் எங்கெல்லாம் பிரிட்டிஷ் படைகள்
நிறுத்தப்பட்டுள்ளனவோ, அங்கிருந்து அவை திரும்பப்பெறப்பட வேண்டும். பிரிட்டிஷ் இராணுவத்தினால் பேரழிவிற்கு
உட்பட்ட நாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும். போருக்கான தயாரிப்பு நடத்தியவர்கள்
போர்க்குற்றங்களுக்காக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். நேட்டோ தகர்க்கப்பட வேண்டும். அணுவாயுதங்கள்
திட்டம் இரத்து செய்யப்பட வேண்டும், பிரிட்டனின் ஆயுதத் தயாரிப்பு தொழில் சமூகத்திற்கு பயன்படும் உற்பத்திகளை
மேற்கொள்ள வேண்டும்.
6. ஜனநாயக உரிமைகளைக் பாதுகாக்க
சமூக சமத்துவம் என்பது உண்மையான ஜனநாயகத்திற்கு முன்னிபந்தனை ஆகும். அந்த
அஸ்திவாரத்தில்தான் முழு சட்டமுறையும் சீரமைக்கப்பட வேண்டும். தொழிற்கட்சியின் தொழிலாளர் எதிர்ப்பு மற்றும்
பிற நடவடிக்கைகள், தனி மனித உரிமைகளை குறைப்பவை அகற்றப்பட வேண்டும். அனைத்து தொழிற்சங்க விரோத,
வேலைநிறுத்த விரோத சட்டங்கள் அகற்றப்பட வேண்டும். அரசியல், பொருளாதார முடிவெடுக்கும் நிலைப்பாட்டில்
மக்கள் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் நடவடிக்கைகள் இயற்றப்பட வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவுதான் சோசலிச சமத்துவக்
கட்சி ஆகும். இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பெரும் தைரியம் உடைய, தொலை நோக்குடைய
பிரதிநிதிகளின் மரபில் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அவர்கள் தங்களை சோசலிசத்திற்கான போராட்டம்,
அனைத்துவித தேசியவாதம் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டங்களில் அர்ப்பணித்துக்
கொண்டவர்கள்.
எங்கள் கட்சி அதன் தோற்றத்தை லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்த இடது
எதிர்ப்பின் போராட்டத்தில் கொண்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தில் எழுந்த ஸ்ராலினிச அதிகாரத்தவ கொடூரத்திற்கு
எதிரான உலக சோசலிச புரட்சி என்ற முன்னோக்கை பாதுகாக்க தோன்றியது. 1938ல் ட்ரொட்ஸ்கி நிறுவிய
நான்காம் அகிலம் அதன் பணியை தொடர்கிறது.
ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் உள்ள எங்கள்
சகோதரக் கட்சிகளுடன் இணைந்து நாங்கள் தொழிலாளர் இயக்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் சோசலிச
நோக்கு ஆகியவற்றை அன்றாடச் செய்திகள் மற்றும் ஆய்வுகளை உலக சோசலிச வலைத் தளம் அதாவது
wsws.org மூலம்
வெளியிட்டு அதை நிறுவப் பாடுபடுகிறோம்.
வெகுஜன வேலையின்மை, அடக்குமுறை மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச
மாற்றீட்டிற்கு ஆதரவு தரும் அனைவரையும் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெறுமாறும், எங்கள்
வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம். |