WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Greece moves to borrow from Wall Street
வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து கடன் வாங்க கிரேக்கம் முயல்கிறது
By Alex Lantier
8 April 2010
Use this version
to print | Send
feedback
ஏப்ரல் 5ம் தேதி தன்னை "எழுச்சியடைந்துகொண்டிருக்கும் சந்தை" எனக்
காட்டிக்கொண்டு அமெரிக்காவில் 5 பில்லியனில் இருந்து 10 பில்லியன் டாலர் வரை கடன் வாங்க இருக்கும்
திட்டத்தை கிரேக்கம் அறிவித்துள்ளது. அதாவது செலுத்துமதி அபாயத்தை ஈடுசெய்வதற்காக பெற்ற கடன்களுக்காக
அதிக வட்டிகளை கொடுக்கும் ஒரு ஏழை நாடு எனக் கூறிக் கொள்கிறது.
கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு கிரேக்கம் நிதியுதவிக்கு முறையிட்டதுடன்
இணைந்தவிதத்தில் கிரேக்கத்தை ஒரு எழுச்சியடைந்துகொண்டிருக்கும் சந்தை என வகைப்படுத்திக் கொள்வது வேலைக்குறைப்புக்கள்,
செலவுக் குறைப்புக்கள் என்று சர்வதேச நாணய நிதியம் ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 1970ல்
இருந்து மேற்கொண்ட செயல்கள் இப்பொழுது ஐரோப்பாவிற்கும் வருகிறது என்பதற்கு மற்றொரு குறிப்பு ஆகும்.
ஒரு இலண்டன் தளத்தைக் கொண்ட பொருளாதார வல்லுனர்
Nikos Mourkogiannis
தெரிவித்த கருத்தாவது: "கிரேக்கம் ஒரு எழுச்சியடைந்துகொண்டிருக்கும் சந்தையாகவும் ஒரு பால்கன்
நாடாகவும், அது ஒரு யூரோப்பகுதி அங்கத்துவ நாடாக இருப்பது என்பது ஒரு முரண்பாடு அல்ல."
மோர்கன் ஸ்ரான்லி போன்ற வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கிகள் மேற்பார்வையில்
நடைபெறும் ஏலங்களில் பத்திரங்கள் மூலம் நிதியை எழுப்பும் திட்டத்தை கிரேக்கம் கொண்டுள்ளது. கிரேக்க ஏலத்தை
முதலில் கோல்ட்மன் சாஷ்ஸ் மேற்பார்வை இடுவதாக இருந்தது: ஆனால் இத்திட்டம் சீன முதலீட்டாளர்கள் கிரேக்கத்திற்கு
கடன் கொடுப்பதாக இல்லை என்று வெளிவந்த வதந்திகளை அடுத்துக் கைவிடப்பட்டது.
கிரேக்க நிதி மந்திரி ஜோர்ஜ் பாப்பாகான்ஸ்டான்டிநெள அமெரிக்காவிற்கு "ஏப்ரல்
20க்குப் பின்னர்" பயணிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்கு சென்று வந்தபின், ஆசியாவிற்கு
செல்ல இருந்த திட்டங்களை கைவிட்டார்.
ஐரோப்பிய நிதியச் சந்தைகளில் நிதி திரட்டுவதில் பெருகிய இடர்பாடுகளை
எதிர்கொண்டபின் இந்நடவடிக்கை கிரேக்கத்தில் இருந்து வந்துள்ளது. 10 ஆண்டு பத்திரங்களில் கிரேக்க அரசாங்கம்
கடன் வாங்குவது ஏப்ரல் 6ம் தேதி மிக அதிகமாக 7.161% என ஆயிற்று. இந்த வட்டிவிகிதம் ஜேர்மனி
கொடுக்கும் வட்டியைவிட அதிகம் ஆகும். ஒப்புமையில் பிரேசிலின் 10 ஆண்டிற்கான வட்டிவிகிதம் 4.9 சதவிகிதம்,
மெக்சிகோ 4.8 சதவிகிதம், போலந்து 5.5 சதவிகிதம், ஹங்கேரி 6.6 சதவிகிதம் என்று உள்ளன. கிரேக்கக்
கடனில் இரு ஆண்டுகளில் வட்டி விகிதம் 1.2 சதவிகிதம் உயர்ந்து 6.48 என ஆயிற்று இது அசாதாரண முறையில்
ஒற்றை நாள் நடவடிக்கையில் கூடுதலாகும்; கிரேக்கம் கடன்களை செலுத்துமதி தகமையை இழந்துவிடும் என்ற
அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய கடன் புதுப்பித்தல் தேவைகளை ஏப்ரல் மாதத்திற்கு கிரேக்கம் ஈடுசெய்து
கொள்ள முடிந்தது. ஆனால் மே மாதம் அது 10
பில்லியன் டாலர்களை திரட்ட வேண்டும்.
தன்னுடைய கடன்களைக் கொடுப்பதில் செலுத்துமதியின்மையை கிரேக்கம் தவிக்கமுடியும்
என்பது சந்தேகத்திற்கு உரியது எனத் தோன்றுகிறது. ஏனெனில் அது கொடுக்கும் வட்டி விகிதங்கள் கடன்களை
அதிகமாக்குகின்றன அதே நேரத்தில் நாட்டில் வேலைக் குறைப்புக்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள்
அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்களை குறைத்து விட்டன.
கிரேக்கச் செல்வந்தர்கள் பெருகிய முறையில் தங்கள் நிதிகளை நாட்டை விட்டு
அகற்றிக் கொண்டு வருகின்றனர். இது கிரேக்க வங்கிகளை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நேற்று டெய்லி
டெலிகிராப் கிரேக்க மக்கள் பெப்ருவரியில் 3 பில்லியன் யூரோக்கள், ஜனவரியில் 5 பில்லியன் யூரோக்களை
கடல்கடந்த கணக்குகளாக ஐரோப்பிய வங்கிகளின் சேமித்தன, இதில்
HSBC,
சுவிட்ஸ்ர்லாந்தின் Société Générale
போன்ற வங்கிகளுக்கும்,
இங்கிலாந்து, சைப்ரஸ் நாடுகளுக்கும் கிரேக்க பணம்
செல்கின்றதாக கூறப்படுகிறது.
CreditSights பகுப்பாய்வாளர்
ஜோன் ரேமண்ட், "வங்கிகளே மூலதனம் வெளியேறுவது குறித்துக் கவலை கொண்டுள்ளன. ஏனெனில் அவை இப்பொழுது
வேறு எங்கும் நிதியம் பெற முடியாது. கிரேக்க வங்கிகள் சேமிப்புக்கள் அதிகரிக்காவிட்டால் கடன் கொடுக்கும்
தொகையை கூடுதலாக்க முடியாது. தொடர்ந்த சரிவு சேமிப்புத்தளத்தில் ஏற்பட்டால் அது அவை கொடுக்கும் கடன்களைக்
குறைக்கும். உண்மையான பொருளாதார வளர்ச்சியை நெரித்துவிடும்" என்று கூறியதாக டெலிகிராப் மேற்கோளிட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய மார்ச் மாத பிரஸ்ஸல்ஸ் உச்சி மாநாட்டில்
எழுப்பப்பட்ட கூட்டு ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச நாண நிதிய திட்டங்கள், கிரேக்க மீட்புப் பொதிக்கு என்பது,
சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டன. யூரோப்பகுதி அரசாங்கங்கள் கிரேக்கத்திற்கு "உதவித் தொகை கணக்கு
இல்லாத" வட்டி விகிதத்தில் கிரேக்கத்திற்கு கடன் கொடுக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால்
இப்பொழுது வட்டி விகிதம் பிரச்சனைக்குள்ளாகிவிட்டது. பெரும்பாலான யூரோப்பகுதி நாடுகள் 4 முதல் 4.5
சதவிகிதத்திற்கு கடன் கொடுக்கத் தயாராக இருக்கையில், ஜேர்மனி கிரேக்கம் 6 முதல் 6.5 சதவிகிதம் வட்டி
கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது; இது செலுத்துமதியின்மை நிலையை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
ஒரு "மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி" பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்:
"கிரேக்கம் மற்றும் ஜேர்மனி கொடுக்கும் வட்டிவிகித்தில் உள்ள அதிக வேறுபாடுதான் "கிரேக்கத்தின் முழு
ஒருங்கிணைப்பு முயற்சியை ஆபத்திற்கு உட்படுத்துகிறது என்று நீங்கள் கருதினால், அந்த பிளவைக் குறைக்க
முயலவேண்டும்."
பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப், அமெரிக்கா
திறமையான தடுப்பதிகாரத்தை கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியம் ஜேர்மனியக் கொள்கை அபராதத் தன்மை
உடையது என்று கருதினால், வரவு செலவுத் திட்டத்தை சரிசெய்ய சர்வதேச நாண நிதிய குறைப்புக்கள் கூட
பயன்படாது என்று கருதினால், ஜேர்மனியுடன் மோதலைக் கொள்ளும் என்றார். "சர்வதேச நாண நிதிய
ஐரோப்பிய ஆணையத்துடன் கருத்து வேறுபாடு கொண்டால் என்ன ஏற்படும்? அத்தகைய கருத்து வேறுபாடு
வரும்போல் தோன்றுகிறது. கிரேக்கம் ஒப்புக் கொண்டுள்ள நிதிய இறுக்கத் தன்மை, மூன்று ஆண்டுகளில் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதக் குறைப்பு என்பது, செய்ய முடியாதது எனத் தோன்றுகிறது; அதுவும் நிதியக்
கொள்கை அல்லது மாற்று விகித வளைந்து கொடுக்காத தன்மையில். இப்பொழுதுள்ள சாதகமற்ற தொடக்க
நிலைமையில் எந்தத் திட்டமும் வெற்றிபெற முடியாமல் போகலாம்.
2001ம் ஆண்டு தன் கடன்கொடுத்தலில் செலுத்துமதியின்மையை ஏற்படுத்திய
ஆர்ஜன்டினாவுடன் கிரேக்கத்தை ஒப்பிட்டு, BlueGold
Capital Management LLP யின் ஸ்ரெபான் ஜென்
கூறினார்: "கிரேக்கம், ஆர்ஜன்டினா பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை என்று கூற முடியாது. ஆனாலும்
நாணயத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை, மூலதன வெளியேற்றம் மற்றும் கடும் சிக்கன நடவடிக்கைகள்
வளர்ச்சியில் தீவிர குறைப்பு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் பல ஒற்றுமைகள் உள்ளன."
கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச
நாண நிதிய பிணை எடுப்புத் திட்டம் மற்றும் கிரேக்கத்திற்கு ஐரோப்பிய மத்திய வங்கி (ECB)
மறுபடியும் கடன் கொடுத்தலை மீண்டும் நிறுவுவது, கிரேக்கத் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் தேசிய வேலைநிறுத்தங்களுக்கு
முற்றுப்புள்ளி ஆகியவை கிரேக்க நெருக்கடி முடிவிற்கு வருவதை குறிக்கிறது என்று கூறியுள்ளார். இவ்விதத்தில் அவர்
Le Nouvel Observateur
இடம் கூறினார்: "நெருக்கடியின் மோசமான கட்டத்தைக் கடந்து விட்டோம், ஒருவிதத்தில் நெருக்கடியின் உச்சக்
கட்டத்தை கடந்து விட்டோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியது உள்ளது.
கிரேக்கம் அதன் நம்பகத் தன்மையை மீட்டுவிட்டது."
ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் இத்தகைய கருத்துக்களை சிதைத்துவிட்டன. மேலும்
தெருக்களை விட்டு நீங்கி தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ள நிலையில், முதலாளித்துவ மூலோபாயம் இயற்றுபவர்கள்
இப்பொழுது மக்கள்மீது இன்னும் தாக்குதல்களை நடத்த சுதந்திரம் பெற்றுவிட்டதாக நினைக்கின்றனர். கடன்
செலுத்தமதியின்மை என்பது பெரிய வங்கிகளுக்கு நேரடியாக ஊதியங்களைக் குறைக்க, சமூகச் செலவுகளைக்
குறைக்க, கிரேக்க அரசாங்கத்தை ஆணையிடும் அரங்கை ஏற்படுத்திவிடும்.
ஒரு சமீபத்தியக் கருத்துக் கணிப்பு கிரேக்க மக்களில் 34.7 சதவிகிதம்தான்
பாப்பாண்ட்ரூ மற்றும் அவருடைய சமூக ஜனநாயக
PASOK கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு
கொடுப்பதாகக் காட்டுகிறது. இந்தக் குறைந்த ஆதரவுத் தரம்கூட மக்களில் 60 சதவிகிதத்தினர் கிரேக்க நிதிய
நிலைமை முன்னேறும் என்று எதிர்பார்ப்பைக் கொண்டவர்களிடையேதான் உள்ளது. ஆனால் சமீபத்தில் பாப்பாண்ட்ரூ
தன்னுடைய கொள்கை இடர்பாடுகளை அதிகப்படுத்தும், நிலைமை "தடைகளினால், ஊதியக் குறைப்புக்களினால்,
பொருளாதார நடவடிக்கைகளினால் இன்னும் வேதனைதான் தரும், வரவிருக்கும் ஆண்டுகளின் முழு மக்கள் தொகையும்
அதை உணர்வர்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொழிற்சங்கங்களின், குறிப்பாக தனியார் துறை தொழிற்சங்கம்
GSEE, மற்றும்
PASOK
வழிநடத்தும் பொதுத்துறை ADEDY
தொழிற்சங்கம் ஆகியவற்றின் காட்டிக் கொடுக்கும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசாங்கத்திற்கு
எதிராக எழுந்துள்ள பொதுச் சீற்றத்தை திசை திருப்பும் விதத்தில் வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்தாலும்,
பாப்பாண்ட்ரூ சற்று சுமை குறைந்த கொள்கைகளை செயல்படுத்த அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற கருத்திற்கு
ஊக்கம் கொடுக்கின்றன. GSEE
செய்தித் தொடர்பாளர் ஸ்ராதிஸ் அனஸ்ரிடிஸ் உலக சோசலிச வலைத் தளத்திடம், "நியாயம் என்று தோன்றினால்
கடுமையான நிபந்தனைகள் உள்ள நிலையையும் ஏற்க நாங்கள் விருப்பத்துடன் உள்ளோம்." என்றார்.
வோல் ஸ்ட்ரீட்டிற்கு செல்லுவதில், கிரேக்க அரசாங்கம் தொழிற்சங்கங்களை தன்
சிக்கனத் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வைத்திருப்பது மற்றும் சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை
அடக்குவதில் கொண்டுள்ள பங்கு ஆகியவை முக்கிய விற்பனைக் கருத்துக்கள் ஆகும்.
வெட்டுக்களை தொடர்ந்து எதிர்க்கும் தொழிலாள வர்க்கம் இருக்கும் இந்த
நாட்டையும் முக்கிய வங்கிகள் அழித்துவிடும் என்று வணிக நாளேடு
Les Echos ல்
பிரான்சின் பொருளாதாரப் பகுப்பாய்வுக் குழுவின்
Jacques Delpla விளக்கியுள்ளார்.
அவர் எழுதியது: "பிரான்சின் போட்டித் தன்மையை அடைவதற்கு ஸ்பெயின் தன்
தொழிலாளர் செலவுகளை 20 சதவிகிதமும், கிரேக்கம் 25 சதவிகிதமும் குறைக்க வேண்டும்; அல்லது சர்வதேச
தனிக் கடன்கொடுப்பவர்கள் திடீரெனக் கடன் கொடுத்தலை நிறுத்தக் கூடும். மிக மோசமாக இந்நாடுகளின்
மக்கள் முற்போக்குத்தன சீர்திருத்தங்களுடன் தொடர்பு கொண்ட தங்கள் வாழ்க்கை தரங்களின் மிருகத்தன
மாறுதலை ஏற்க மறுக்கக்கூடும். பொது மற்றுத் தனியார் கடன்களில் பின்னர் தவறு ஏற்படுவது தவிர்க்க முடியாதது
ஆகிவிடும்; அத்துடன் அந்நாடுகள் யூரோப்பகுதியில் இருந்து வெளியேற நேரிடும். முக்கிய மந்த நிலை (தங்கள்
வரவுசெலவுத்திட்ட, வணிகப் பற்றாக்குறைகளால் ஏற்படக்கூடிய உடனடி குறைப்புக்களால் வருவது) மற்றும் அவற்றின்
வங்கிகளின் பொதுவான திவால்தன்மையினால் வருபவை, அம்மக்களுக்கு இதையொட்டி பெரும் பாதிப்பை தரும்
விளைவுகளைக் கொடுக்கும்''.
தொழிற்சங்கங்களின் அரசாங்க சார்பு முன்னோக்கு தற்காலிகமாக தொழிலாள
வர்க்க எதிர்ப்பை ஓரம் கட்டிவிட்ட போதிலும், சர்வதேசப் பிளவுகள் முன்ணிக்கு வந்துள்ளன.
ஏப்ரல் 5ம் தேதி கிரேக்க துணைப் பிரதம மந்திரி
Theodoros Pangalos
போர்த்துகலுக்கு சென்றிருந்தார்; அந்நாடும் பெரும் கடன்களில் உள்ளது. வணிக ஏடு
Jornal de Negocios
க்கு கொடுத்த பேட்டியில், அவர் கிரேக்கத்தின் நெருக்கடிக்காக ஜேர்மனியின் "அறநெறி சார்ந்த, இனவழி
அணுகுமுறையைத்" தாக்கினார். கிரேக்கர்கள் போதுமான கடின உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஜேர்மனியர்கள்
நினைப்பு அதுவும் "கிரேக்கத் தொழில்துறை, விவசாயத்தில் அவர்கள் கொண்டுள்ள வலுவான உற்பத்தித் திறன் ஆதாயங்களைக்
காணும்போது நகைப்பிற்கு இடமானது", " என்று அவர் கூறினார்.
Jornal de Negocios இடம்
அவர், "நீங்கள் அடுத்த பாதிப்புப் பெறக்கூடியவர்கள்.... அவ்வாறு வரக்கூடாது என்று நம்புகிறேன், ஒற்றுமை
உணர்வு உள்ளது, இந்த [கடன் செலவுகள்] விரிவாக்கத்தில் இருந்து நமக்கு வெளியேறும்வழி கிடைக்கும். ஆனால்
அப்படி ஏற்படவில்லை என்றால், அடுத்த பாதிப்பு போர்த்துகல்லுக்கு இருக்கக்கூடும். நாங்கள் இன்னும் மோசமான
நிலைமையில் இருந்ததால் எங்களுக்கு இப்பொழுது இது நேர்ந்துள்ளது, ஆனால் ஸ்பெயின், போர்த்துகல்லுக்கும் இது
நேரக்கூடும்."
வோல் ஸ்ட்ரீட்டிடம் இருந்து கடன் வாங்குவது என்னும் ஏதென்ஸின் முடிவு அமெரிக்காவை
ஜேர்மனிக்கு மாற்று கனம் உடையதாக செய்யும் முயற்சியைப் பிரதிபலிக்கிறது. மார்ச் மாதம் வாஷிங்டனுக்கு
வந்திருந்தபோது, அவர் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் மார்ச் 12, 1947ல் நிகழ்த்திய உரையை
பாராட்டினார்; அதில் அவர் வலதுசாரி கிரேக்க அரசாங்கத்திற்கு கிரேக்கத் தொழிலாளர்கள், விவசாயிகளின்
புரட்சிகர ஆயுதமேந்திய இயக்கத்திற்கு எதிராக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதையொட்டி கிரேக்க
உள்நாட்டுப் போரில் அமெரிக்கா தலையிட்டது, பனிப்போரைத் தொடக்கியது.
ஐரோப்பாவில் அமெரிக்க செல்வாக்கை தொடக்கும் தளமாக கிரேக்கம்
இருக்கலாம் என்று இவ்விதத்தில் கூறப்படுவது தற்போதைய நிதிய, அரசியல் பின்னணியில் மிகவும் முக்கியமானது
ஆகும். சர்வதேச அழுத்தங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், கிரேக்கத்தின் செலுத்தமதியின்மை என்ற விவாதத்திற்கு
நடுவில்--அதையொட்டி எவருக்குப் பணம் கிடைக்கும் என்று கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவர்களுக்கு இடையே
அரசியல் போராட்டம் ஏற்படும்--ஏதென்ஸ் தன்னை பெரிய சக்திகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் முறையில்
பாதுகாத்துக் கொள்ள முற்பட்டுள்ளது. இது கிரேக்க நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களை
உயர்த்திவிடும். |