World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Unions isolate struggle at British Airways

பிரிட்டிஷ் ஏயர்வேஸ் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் தனிமைப்படுத்துகின்றன

Chris Marsden
2 April 2010

Use this version to print | Send feedback

சமீபத்தில் கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸ் பொது வேலைநிறுத்தங்கள் உட்பட, ஐரோப்பா முழுவதும் நடக்கும் வேலைநிறுத்தங்கள் அலை, வேலைக் குறைப்புக்கள் மற்றும் அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சுமத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெளிப்படும் வெகுஜன இயக்க எழுச்சியின் ஆரம்ப வெளிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

ஆனால் இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் தொழிற்சங்கங்கள் இன்னும் தெளிவானமுறையில் தொழிலாளர் வர்க்கம் எதிர்த் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தடையாகத்தான் செயல்படுகின்றன.

இதில் உதாரணமாக இருப்பது பிரிட்டிஷ் ஏயர்வேஸ் விமான பணியாளர்குழுவின் நடவடிக்கையாகும். நான்கு-நாள் வேலைநிறுத்தங்கள் இரு சுற்றுக்கள் நடந்தபின், தொழிற்சங்கம் நிர்வாகத்துடன் புதிய பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்து, ஈஸ்டரை ஒட்டி வேலைநிறுத்தங்கள் நடத்துவதில்லை என்றும் உறுதி கொடுத்துள்ளது. Unite ன் கூட்டுத் தலைவரான ரொனி வூட்லி, BBC இடம், "இறுதியில் இனி எங்களிடையே இந்தப் மோதல்களும் இல்லை என்று கூறக்குடிய விதத்தில் ..ஒரு உடன்பாட்டைக் காணமுடியும் என்று நினைக்க விரும்புகிறேன்." என்றார்.

பிரிட்டிஷ் ஏயர்வேஸ் நிர்வாகத் தலைவர் வில்லி வால்ஷிற்கு பறிமாற்றப்பட்ட கடிதங்களில், அவர் "பிரிட்டிஷ் ஏயர்வேஸ் தப்பிப் பிழைப்பதற்கு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்." என்று எழுதியுள்ளார்.

புதிய பேச்சுக்களுக்கு அழைப்பு கொடுப்பதற்கு வூட்லியிடம் எந்த அடிப்படையும் இல்லை. ா80மில்லியன் குறைப்புக்கள், ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்கள், மற்றும் இரு ஆண்டுகள் ஊதியத் தேக்கம் என்ற தன் கோரிக்கையில் இருந்து பிரிட்டிஷ் ஏயர்வேஸ் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தன்னுடைய மலிந்த விமான நிறுவத்திற்கான உதவித் தொகையை பறக்கும் ஒரு மணி நேரத்திற்கு ா2.60 என்பதையும், மேலதிகவேலைநேர கொடுப்பனவு, உணவுக்கான உதவித்தொகை, நீண்டநேரம் பறப்பதற்காற சம்பளங்கள் இல்லாத ஒப்பந்தம் ஒன்றை அறிமுகப்படுத்த விரும்புகிறது. Unite தலைமை எதிர்ப்பை மூடிவைத்துவிட்டு, அதன் தன்னுடைய நீண்ட கால பெரும் ஊதியம் ஈட்டும் திட்டத்தை நிர்வாகத்துடன் தொடர விரும்புகிறது. இந்த உறவு ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலைளை இழக்கும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

இதே நிலைமைதான் ஐரோப்பா முழுவதும் காணப்படுகிறது. அதன் நலன்களைப் பாதுகாக்க தொழிலாளவர்க்கத்திற்கு உண்மையான தலைமை இருந்திருந்தால், பிரிட்டிஷ் ஏயர்வேஸ் வேலைநிறுத்தம் விமானிகள், விமான பணியாளர்கள், விமானப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் என்ற அனைத்து விமானத் தொழிலாளர்களினதும் கண்டம் முழுவதும் பரந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இவர்கள் அனைவரும் பயணிகளுக்கும் மற்றும் விமானப்பாதைகளுக்காக பெரும் போட்டியில் ஈடுபட்டுச் செலவுகளைக் குறைக்க முற்படும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கைகளில் ஒரே மாதிரியான தாக்குதல்களைத்தான் எதிர்கொண்டுள்ளனர். இதற்குபதிலாக தொழிற்சங்கங்கள் பிரிட்டிஸ் ஏயர்வேஸ் தொழிலாளர்களை தனிமையில் விட்டுள்ளதுடன், ஒவ்வொரு நாட்டிலும் இப்போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில், ஏயர் பிரான்ஸ் விமான பணியாளர்களின் நான்கு நாள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. இதேபோல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தமும் பெப்ருவரியில் கைவிடப்பட்டது. நூற்றுக்கணக்கான வேலை வெட்டுக்களுக்கு எதிரான ஏயர் பிரான்ஸ் விமான ஓட்டிகளின் வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டது. TAPபோர்த்துக்கல் இனால் மார்ச் 26 இற்கும் 31 இற்கும் இடையில் நடைபெறவிருந்த 6நாள் வேலைநிறுத்தம் பணவீக்கத்தினை கூட ஈடுசெய்யாத 1.8% ஊதிய அதிகரிப்புடன் கைவிடப்பட்டது.

British Airways, Alitalia விமானப்பணியாளர்கள் போன்ற வேலைநிறுத்தங்கள் நடக்கும்போதும், தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை சர்வதேச ஐக்கியப்பட்ட நடவடிக்கை ஒவ்வாதது என்பது போன்ற கருத்தைத்தான் கொண்டுள்ளன. மாறாக, தொழிற்சங்கங்கள் சந்தைப் பங்கிற்கான நிர்வாகங்களின் போராட்டத்தில் அவற்றுடன் ஒத்துழைக்க முன்வருகின்றன.

ஜேர்மனியின் லுப்ட்ஹன்சாவின் Vereinigung Cockpit தொழிற்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோர்க் கன்ட்வேர்க் இதைத்தான் சுருக்கிக் கூறினார்; அந்தத் தொழிற்சங்கம் பெப்ருவரியில் வேலை நிறுத்தத்தைக் கைவிட்ட பிறகு மீண்டம் நடவடிக்கையைத் துவக்குவதாக அச்சுறுத்தியுள்ளது. 21 மாத ஊதியத் தேக்கம், மற்றும் கூடுதலான உற்பத்தித்திறனை ஏற்க தொழிற்சங்கத்தின் விருப்பத்தை வலியுறுத்தி அவர் லூப்ட்ஹன்சா அதன் வெளிநாட்டு உதவி நிறுவனங்களை விரிவாக்கி தொழிலாளர் செலவுகளைக் குறைக்க விரும்புகிறது என்று குறைகூறினார். "பல ஆண்டுகள் போட்டியாளர்களைச் சந்தையில் இருந்து வெளியேற்றும் உந்துதலுக்கு நாங்கள் உழைத்துள்ளோம், இந்த பலமிழந்த நிறுவனங்கள் விட்டுவிலக முன் லுப்ட்ஹன்சா அவற்றை நாங்கள் உழைத்துக் கொடுத்த பணத்தின் மூலம் விலைக்கு வாங்குகிறது." என்றார் அவர்.

தொழிலாளவர்க்க அணிதிரளலைத் தவிர்ப்பதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகள் அதன் முழு அளவில் அயர்லாந்தின் Aer Lingus ல் காட்டப்படுகின்றது. கடந்த வாரம் Aer Lingus ன் விமான பணியாளர் குழுவினர் 92 சதவிகிதப் பெரும்பான்மையில் 600 வேலைகளைத் தகர்க்க அச்சுறுத்திய 97 மில்லியன் செலவுக் குறைப்புகள் திட்டத்தை ஏற்றனர். முந்தைய வாக்குப்பதிவில் இப்பொதி ஒரு மாதம் முன்பு நிராகரிக்கப்பட்டதற்குப் பிறகு இந்த வாக்களிப்பு வந்துள்ளது. Impact தொழிற்சங்கத் தலைமையின் மீதான மகத்தான நம்பிக்கையின்மையை இது பிரதிபலித்தது. தன்னுடைய மகிழ்ச்சியை வலியுறுத்தும் வகையில், "ஒரு கூட்டுப் பேச்சு வார்த்தை வழிவகை மூலம் இந்த முடிவு அடையப்பட்டது", "பேச்சுவார்த்தைகளின் எந்தக்க கட்டத்திலும் தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலோ, தன்மையோ இல்லாதாத விதத்தில் இது அடையப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

பிரிட்டிஸ் ஏயர்வேஸின் தலைவர் வில்லி வோல்ஸ் முன்பு Aer Lingusன் விமான ஓட்டிகள் தொழிற்சங்கமான IALPAயின் தலைமைப்பேச்சுவார்த்தைகள் நடத்துபவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Aer Lingus ன் நிர்வாகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக சேருவதற்கு முன்பு 2,000 வேலைகளைக் குறைத்திருந்தார்.

1980களில் இருந்து, அமெரிக்காவில் PATCO எனப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் காட்டிக் கொடுப்பு மற்றும் 1984-85 பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்கள் காட்டிக் கொடுப்பில் இருந்து, தொழிற்சங்கங்கள் ஒரு தோல்விக்குப்பின் மறுதோல்வி என்வற்றைக் கண்டு வருகின்றன. அதே நேரத்தில் அவை தம்மை பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் முக்கிய பிரிவுகளுடன் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டுவிட்டன.

இன்று, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு தொழிற்சங்கங்கள் எந்த அர்த்தத்திலும் தொழிலாளர்கள் அமைப்பாக இல்லை. ஆனால் நிர்வாகத்தின் இரண்டாம் கரமாக, தங்கள் உறுப்பினர்கள் மீதே காவல்துறை போல் காண்காணித்து, ஆளும் வர்க்கத்தின் ஆணைகளைச் சுமத்தும் பணியைக் கொண்டுள்ளன. இந்த மாறுதல் அடிப்படையில் தொழிற்சங்கங்களின் தேசியவாத, முதலாளித்துவ சார்பு உடைய முன்னோக்கில் வேர்களை கொண்டுள்ளது. வரலாற்றுரீதியாக அது தனி, சலுகைபெற்ற நிலையில் தொழிற்சங்க அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு அடித்தளத்தை கொடுத்துள்ளது.

முந்தைய காலங்களில் இந்த அதிகாரத்துவ அமைப்புக்கள் தங்கள் உறுப்பினர்களுக்காக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட அணிதிரட்டல்கள் மூலம் தமது அங்கத்தவர்களுக்கு சில சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்களைப் பெறமுடிந்த போதிலும், இவ்வாறான நடைமுறை நீண்ட காலத்திற்கு முன்னே செயலற்றுவிட்டது.

இலாபமுறையின் வரலாற்று நெருக்கடிச் சூழலில், ஆளும் உயரடுக்குகள், உலக மந்தநிலையால் ஆணையிடப்படும் செலவு குறைப்பு , பணி நீக்கம் போன்றவற்றிற்கு ஆதரவு வழங்குமாறும், பெருநிறுவனங்கள், அரசாங்கங்களுக்கு இடையே சரியும் சந்தைகளினால் ஏற்படும் பூசலைத் தீர்க்கும் விதத்தில் அது இரக்கமின்றி வர்க்கப் போராட்டத்தை நசுக்கி, செலவுகளைக் குறைக்கும், வேலைகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்க அதிகாரத்துவத்தை கோருகின்றன.

தொழிலாளர் வர்க்கம் ஒரு புதிய அடித்தளத்தில் இருந்து எழும், வர்க்கப் போராட்டங்களை நடத்த வேண்டிய அமைப்புக்களைக் கட்டமைக்கும் உடனடியான, தவிர்க்க முடியாத பணியை எதிர்கொண்டுள்ளன. ஆனால் இதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கு இடையே மிக நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய புதிய சோசலிச, சர்வதேசத் தலைமை தேவைப்படுகிறது.

பிரிட்டிஷ் ஏயர்வேஸ் வேலைநிறுத்தம் நிரூபித்துள்ளபடி, இந்தப்போராட்டம் தொழில்துறைப் பிரிவுடன் நின்றுவிடவில்லை. துவக்கத்தில் இருந்தே, விமான பணியாளர்கள் நிர்வாகம், அரசாங்கம், செய்தி ஊடகம், ஆகியவற்றின் ஒன்றுபட்ட தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் வேலைநிறுத்தத்தையே தடுக்கும் முயற்சியைக் கொண்ட உயர்நீதிமன்ற நடவடிக்கையும் அடங்கும். நேற்று, இதே விதத்தில், வாக்குப்பதவி ஒழுங்கீனங்கள் என்று கூறி உயர் நீதிமன்றம் Rail Maritime and Translport Union அடுத்த வாரம் நாட்கு நாட்கள் Network Rail வேலைநிறுத்தும் நிகழாவண்ணம் தடுத்துவிட்டது. செவ்வாய்கிழமை வேலைநிறுத்தம் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் ஒரு பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததை எதிர்கொள்ளும் விதத்தில் அழைப்புவிடப்பட்டது.

முழு முறையில் ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கம் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை எந்தவிதத்திலும் பொறுத்துக் கொள்ளாது மிக ஒடுக்குமுறையான முறையில்தான் நடந்து கொள்ளும். தொழிலாளர் வர்க்கமும் இதே விதத்தில் விடையிறுக்க சோசலிசத்திற்கான ஒரு அரசியல் போராட்டத்தைத் துவக்க வேண்டும்.