World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு Is a US attack on Iran imminent? ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் நெருங்குகின்றதா? Alex Lantier சமீபத்திய வாரங்களில் தொடர்ந்து செய்தி ஊடகத் தகவல்களும் இராணுவ வல்லுனர்களின் அறிக்கைகளும் ஒபாமா நிர்வாகம் அல்லது இஸ்ரேலிய அரசாங்கம், அல்லது இரண்டுமே சேர்ந்து, ஈரான் மீதான தாக்குதலை நோக்கி நகரலாம் என்பதை உறுதியாக காட்டும் விதத்தில் வெளிவந்துள்ளன. விரிவானதாகவும் ஆத்திரமூட்டும்தன்மையையும் கொண்டிருக்கும் சில செய்தி ஊடகத் தகவல்கள் இராணுவ நடவடிக்கைக்கான உண்மைத் திட்டங்களை விவரிக்கின்றனவா அல்லது தெஹ்ரானில் உள்ள மதகுருமார் ஆட்சிமீது அழுத்தத்தை அதிகரிக்க "வெறுமே" எழுதப்பட்டனவா என்பதை நிர்ணயிப்பது கடினமாகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இச்சந்தர்ப்பத்தில் போர் தொடர்பாக பதட்டத்துடன் ஈடுபட்டாலும், அவற்றின் அரசியல், இராணுவத் தர்க்க முறை தவிர்க்கமுடியாமல் போருக்குத்தான் இட்டுச் செல்லும். நேற்று உலக சோசலிச வலைத்தளம் Brookigs Institution உடைய ஈரானை இலக்காகக் கொண்ட போர் மாதிரித் தயாரிப்பு விளையாட்டுக்களை நடத்தியது பற்றிக் குறிப்பிட்டிருந்தது. (பார்க்கவும்: "Washington ratchets up war threats against Iran"). அதில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இன்னும் பிற பிராந்திய சக்திகளைப் போல் "விளையாடிய" அமெரிக்க அதிகாரிகள் குழுக்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது ஒரு இஸ்ரேலியத் தாக்குதல் விளைவை நிர்ணயிக்க முயன்றன. இந்தப் போர் விளையாட்டு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தற்பொழுது இராணுவரீதியில் இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் பரிமாற்றங்களை மட்டும் முன்வைக்க முயன்றது. ஆனால் ஈரான் மீது பாரிய தாக்குதலை இறுதியில் செலுத்துவதைக் கருத்தில் கொண்டுள்ளதை அமெரிக்கக் கொள்கை இயற்றுபவர்கள் அறியப்படுத்தியுள்ளனர். போர் விளையாட்டு ஒரு வாரம் போர் என்பதற்குப் பின் நிறுத்தப்பட்டது. ஈரானிய இராணுவத்தின் பெரும் பிரிவுகளைத் தகர்த்துவிடத் அமெரிக்கா தாக்குதல்கள் தயாரிப்பு நடத்தும் விதத்தில் ஈரானிய அல்லது ஈரானிய சார்பு உடைய லெபனோன், இஸ்ரேல், ஆக்கிரமிப்புப்பகுதிகள், அரேபிய தீபகற்பம், பாரசிய வளைகுடாவிற்குள் பரவிவிட்டது எனக்காட்டப்பட்டது. அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் தொடர்ச்சியான ஈரானுக்கு எதிரான ஆத்திரமூட்டும் அறிவிப்புக்களில் இது மிகவும் முக்கியமானது ஆகும். கடந்த வாரம் அமெரிக்கா ஈரானில் இருப்பாதகக் கூறப்படும் அணுசக்தி நிலையங்களை அழிக்க தியாகோ கார்சியாவின் விமானத்தளங்களில் பங்கர் தகர்க்கும் குண்டுகளை தயார் நிலையில் வைப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதேபோல் இஸ்ரேல் அதே நிலையங்கள்மீது அணுகுண்டுகள் போடத் திட்டமிடடிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. தீவிரமான இராணுவ நடவடிக்கைக்கு தயாரிப்பதற்கும், தெஹ்ரான் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தேவையான சமூக ஆதரவைப் பெறுவதற்கும் மற்றும் அரசியல் உந்துதர் பெறுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஆதரவு கொண்ட "பச்சை புரட்சி" வெளிப்படையாகத் தோல்வியுற்றதற்கும் இடையே தொடர்பு உள்ளது. ஒரு குறைந்த மத்தியதரவர்க்க அடித்தளத்திற்கு வெளியே ஆதரவை ஒருபொழுதும் கொண்டிராத பச்சைப் புரட்சி இயக்கம், இன்னும் மோசமாக 2009 இறுதி மாதங்களில் வலுவிழந்து போயிற்று. அதே நேரத்தில் வாஷிங்டன் ஈரான் மீது அதன் அணுசக்தி திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தத்தை அதிகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு ஏற்கக்கூடிய பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. 2009 டிசம்பர் மாதம் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரையில் ஈரானிய இராணுவத்தின் அஹ்மதிநெஜாட் சார்பு உடைய பிரிவுகளின் எழுச்சி பெறும் சக்தியை விவரித்து, "கடும்நிலைப்பாட்டாளர்களின் எழுச்சி ஈரானிய அணுத்திட்டம் தொடர்பான நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது" என்ற தலைப்பில் வெளியிட்டது. போருக்கான தயாரிப்புக்கள் பற்றிய செய்தி ஊடகத் தகவல்கள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் பச்சைப் புரட்சி ஒரு தோல்வி என்பதை ஒப்புக் கொண்டபின்தான் வெளிப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களாக நடைபெற்றுவரும் அமெரிக்கச் செய்தி ஊடகப் பிரச்சாரத்தை மறுக்கும் விதத்தில் அமெரிக்க வெளி உறவுகள் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஹாஸ் CNN இடம் பெப்ருவரி 14 அன்று பச்சை புரட்சிச் செய்தித் தொடர்பாளர் இயக்கத்தின் வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவி கடந்த ஜூன் தேர்தல்களில் வெற்றி பெற்றார் என்று கூறியதற்கு ஆதாரம் கொடுக்க அமெரிக்காவிடம் உண்மைகள் ஏதும் இல்லை என்றார். தேர்தலுக்கு முன்பே ஒரு அமெரிக்கக் கருத்துக் கணிப்பு அஹ்மதிநெஜாட்டிற்கு 57 சதவிகிதம், மெளசவிக்கு 27 சதவிகிதம் என்று வெளியிடப்பட்டது பற்றி கேட்கப்பட்டதற்கு, ஹாஸ், "எதிர்ப்பு 25 சதவிகிதமா, 50 சதவிகிதமா அல்லது இன்னும் அதிகமா என்று எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். தற்பொழுதைக்கு வாஷிங்டனின் பச்சைப் புரட்சி போலிச் சவால்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. இந்த பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா ஒரு இராணுவத் தயாரிப்பிற்கான பணிகள் நடைபெறுகின்றன என்பது போன்ற தகவல்ளை செய்தி ஊடகத்திற்கு கசிய விட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய அச்சுறுத்தும் தகவல்களின் நோக்கங்களின் ஒன்று தெஹ்ரானை ஏதேனும் ஒருவிதத்தில் தற்காப்பு நடவடிக்கைக்கு தள்ள வேண்டும் என்று உள்ளது. அதனால் அமெரிக்க அரசாங்கமும் செய்தி ஊடகமும் ஒரு விரோத இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று சித்தரிக்க முடியும். அது அமெரிக்காவிற்கு ஈரான்மீது தாக்குதல் நட்தத ஒரு காரணத்தைக் கொடுக்கும். மற்றொரு கூறுபாடு அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) ஈரான்மீது அழுத்தம் தெஹ்ரானின் அரசியல் உயரடுக்கிற்குள் புதிய பிளவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கிறது. ஏதேனும் ஒரு விதத்தில் ஈரான் மீது வாஷிங்டன் மன்னர் ஷா CIA வின் முக்கிய முகவராக செயற்பட்டுவந்த 1979 புரட்சிக்கு முன் கொண்டிருந்த அரசியல், பொருளாதாரக் கட்டுப்பாட்டை மீட்க உறுதி கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஈரானிய நெருக்கடி ஒபாமா, புஷ்ஷின் கொள்கைகளில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட கொள்கைகளை தொடர்வார் என்ற கூற்றுக்களுக்கு எதிராக, அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படைத் தொடர்பைத்தான் விளக்குகிறது. உண்மையில் ஈராக்கில் இருந்ததாகக் கூறப்பட்ட "பேரழிவு ஆயுதங்கள்" என்ற பொய்களை தீயமுறையில் நினைவுறுத்தும் வகையில், அமெரிக்க அதிகாரிகள் ஈரானிய அணுசக்தித்திட்டம் பற்றி உறுதியான ஆதாரம் இல்லை என்று ஒப்புக்கொண்டாலும், அச்சுறுத்தல்களை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றனர். ஈரான் மீதான ஒரு அமெரிக்க மற்றும்/அல்லது இஸ்ரேலிய தாக்குதல் அரக்கத்தனமான ஏகாதிபத்தியக் குற்றம் வாய்ந்த தன்மையைக் கொண்டிருக்கும். பல ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் போரின் முதல் மணி நேரங்களில் கொல்லப்படுவர். மேலும் ஈரானுக்கு எதிரான போர் சொல்லமுடியாத அளவிற்கு சர்வதேச பிரதிவிளைவுகளை ஏற்படுத்தி, உலகம் முழுவதையும் ஒரு அணுவாயுதக் கொந்தளிப்பு நிலைமைக்கு அருகே கொண்டு செல்லும். |