WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Greek trade unions line up behind government austerity measures
கிரேக்கத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன
By Robert Stevens
31 March 2010
Use this version
to print | Send
feedback
GSEE எனப்படும் கிரேக்கத்
தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பும் பொதுத்துறை அரசாங்க ஊழியர்கள் கூட்டமைப்பும்
(ADEDY) சோசலிச
கட்சி(PASOK)
அரசாங்கம் சுமத்தும் 16 பில்லியனுக்கான கடும் சிக்கன நடவடிக்கைப் பொதிக்கு வந்துள்ள எதிர்ப்பை நெரிக்க முற்படுகின்றன.
ஞாயிறன்று கிரேக்க செய்தித்தாட்கள் 300,000 பொதுத் துறை ஊழியர்கள் வேலை
இழப்பர், 4,000 மாநகரப்பிரிவுகள் கடந்த வார ஐரோப்பிய ஒன்றிய/சர்வதேச நாணய நிதியத்துடனான கிரேக்கக்க
கடன் நெருக்கடி பற்றிய உடன்பாட்டின் விளைவால் மூடப்படும் என்ற தகவல்களைத் பெரும் தலைப்புக்கள் கொடுத்து
வெளியிட்டன.
உத்தியோகபூர்வ வேலையின்மை ஏற்கனவே 10.3 சதவிகிதம் உயர்ந்து விட்டது.
514,000 மக்கள் வேலையின்மையில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மகளிரில் வேலையின்மை 2009 நான்காம்
காலாண்டுப் பகுதியில் ஆண்களைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாயிற்று. வேலையின்மை விகிதம் 25.8 சதவிகிதம்
என்ற விதத்தில் 15 முதல் 29 வயது வரை இருக்கும் இளைஞர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
GSEE உட்பட மற்ற மதிப்பீட்டுக்களின்படி
உண்மையான வேலையின்மை விகிதம் இன்னும் அதிகமாக, கிட்டத்தட்ட 16 சதவிகிதம் என்று உள்ளது. இது இந்த
ஆண்டு 20 சதவிகிதத்தை எட்டக்கூடும். மார்ச் 5ம் தேதி அரசாங்கம் அதன் சமீபத்திய வெட்டுப் பொதிகளை
4.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிற்குச் செயல்படுத்தத் தொடங்கியதில் இருந்து, தொழிற்சங்கங்கள் முன்பு அனுமதித்திருந்த
குறைந்தபட்ச 24 மணி நேர வேலைநிறுத்தங்களைக்கூட நிறுத்திவிட்டன. ஐந்து மில்லியன் எண்ணிக்கையுடைய கிரேக்கத்
தொழிலாளர் வர்க்கத்தில் பாதிக்கும் மேலானவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கள்
அதிக வேலைநிறுத்தங்களை நடத்தாததுடன், மார்ச் 11 முதல் ஒருநாள் வேலைநிறுத்தங்கள் ஒன்றைக்கூடச் செய்யவில்லை.
மார்ச் 15ம் திகதி சிக்கனத் திட்டத்தில் உள்ள சில கடுமையான தாக்குதல்கள்
நடைமுறைக்கு வந்தன இதில் பல அன்றாடப் பாவனைப்பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியில்(VAT)
ஏற்றமும் அடங்கியிருந்தது. GSEE
இந்த நாளை "நுகர்வோர் தினம்" என்று அறிவித்து ஒரு தேசியவாத "கிரேக்கப் பொருட்களை வாங்குக" என்ற
பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தது.
அப்பொழுது முதல் பல துறைகளில் இருக்கும் தொழிலாளர்களும் தனிப்பட்ட,
வெவ்வேறு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 19 அன்று கட்டுமான பொறியியலாளர்கள்,
புவியியல்-தொழில்நுட்பப் பொறியியலாளர்கள் மற்றும் கிரேக்க பொறியியல், விவசாய அறிவியல் பல்கலைக்கழக
ஆசிரியர்கள் நான்கு மணிநேர வேலைநிறுத்தத்தில்,
PASOK அறிவித்த வரி எதிர்ப்புக்களுக்கு எதிராக வேலைநிறுத்தம்
செய்தனர். அரசாங்க மருத்துவமனைகளில் வேலையில் இருக்கும் வைத்தியர்களும் நிலுவையிலுள்ள ஊதியங்களைக்
கோரிய விதத்தில் எதிர்ப்புக்களில் சேர்ந்தனர்.
மார்ச் 23ம் தேதி வக்கீல்கள் ஒரு 48 மணி நேர வேலைநிறுத்தம் செய்தனர், சில
தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறைகளில் இருந்து மூன்று மணி நேர வேலைநிறுத்தம் செய்தனர். மட்டுப்படுத்தப்பட்டளவு
பொதுத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் ஓய்வூதியக் குறைப்புக்கள் மற்றும் பிற கடும்சிக்கன நடவடிக்கைகளை
எதிர்த்தும் நடந்தன. ஆனால் ADEDY
இவற்றிற்கு அழைப்பு விடவில்லை. இதில் தொடர்பு கொண்டவர்கள் அஞ்சல் துறை ஊழியர்கள், இரயில்வேத்துறை
தொழிலாளர்கள், தீயணைப்புத் துறை ஊழியர்கள் மற்றும்
Hellenic
Telecommunications Organizastion
ஊழியர்கள் ஆவர்.
தொழிற்சங்க அதிகாரிகள் தொழிலாளவர்க்கத்தின் அணிதிரளலை தவிர்க்கும் முயற்சியில்
ஈடுபட்டதின் விளைவு அன்று ஏதென்ஸில் மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில ஆயிரம் மக்களே பங்கு
பெற்றனர்.
இவர்களில் முக்கியமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், பல போலி இடது
கூட்டமைப்புக்களின் உறுப்பினர்கள் இருந்தனர். இது ஒவ்வொரு முக்கிய பெருநகரம், சிறுநகரத்திலும் இரண்டு
மில்லியனுக்கும் மேலான மக்கள் பரந்த விதத்தில் ஒருநாள் பொது வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து
பங்கு பெற்றதற்குப் பின் வந்தது ஆகும்.
மில்லியன்கணக்கான தொழிலாளர்களுடைய எதிர்ப்பு இருந்த போதிலும்கூட,
தொழிற்சங்க அதிகாரத்துவம் அராங்கம் அதன் கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதில் முக்கிய
பங்கைக் கொண்டுள்ளது. இரு தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் தலைமையும்
PASOK யின்
உயர்மட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
பெப்ருவரி, மார்ச் மாதங்களில் அவை ஒருநாள் பொது வேலைநிறுத்தங்களுக்கு
அழைப்பு விடுத்து, அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாளவர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பிற்கு ஒரு ஆபத்தில்லாத
பாதுகாப்பு வடிகாலைக் கொடுத்தன. இதன் நோக்கம் தொழிலாளர் வர்க்க எதிர்ப்பு இயக்கத்தைக்
கட்டமைப்பது அல்ல. மாறாக அத்தகைய இயக்கத்தைத் தவிர்க்கும் விதத்திலும் தொழிலாளர், இளைஞர்களின்
சீற்றத்தைச் சிதைத்து விடுவதும் ஆகும்.
PASOK க்கு தொழிற்சங்கங்களின்
ஆதரவு மார்ச் 18-21 தேதிகளில் நடைபெற்ற GSEE
யின் 34வது காங்கிரஸில் எடுத்துக்காட்டப்பட்டது. மார்ச் 19ம் திகதி, பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ
காங்கிரஸில் உரையாற்றி, PASOK
யின் கடும் சிக்கன நடவடிக்கை முயற்சிகளில் எந்தவித தளர்வும் இராது என்று அறிவித்தார். தன் அரசாங்கத்தின்
திட்டத்திற்கு ஆதரவைக் கோரிய பிரதம மந்திரி, "பொருளாதாரத்தைக் காப்பாற்றுதல் மற்றும் நம்பகத்தன்மையை
மீட்பது என்பது நாம் விரும்பும் நாட்டைத் தோற்றிவிக்க முன்னிபந்தனை ஆகும்." என்றார்.
GSEE இடம் அவர், "இந்த
நாட்டில் எந்த அரசாங்கமும் எடுத்திராத மிகக் கடினமாக முடிவுகளை நாங்கள் எடுக்கும் கட்டாயத்திற்கு
உட்பட்டோம். இப்போக்கை மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்....இன்று நாம் தியாகங்களைச் செய்யாவிடில்
பிரச்சினை நம் கைகளைவிட்டு சென்றுவிடும்." என்றார்.
கூடியிருந்த பிரதிநிதிகள் இந்த உரைக்கு பாராட்டுத் தெரிவித்தனர். இதன் முக்கிய தெளிவான நோக்கம்
கிரேக்க முதலாளித்துவம் தொழிலாளர் வர்க்கத்தின்மீது அறிவித்துள்ள போராகும்
PASOK உறுப்பினர்கள்
GSEE க்குள்
காங்கிரஸில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பான்மை கொண்ட முகாமாயினர்.
PASOK உடன்
இணைந்துள்ள PASKE
குழு 478 வாக்குகளில் 230 ஐ (48.2%) பெற்றது.
DAKE என்ற வலதுசாரி
எதிர்க்கட்சி புதிய ஜனநாயகக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு 118 வாக்குகளை (24.69%) பெற்றது.
கிரேக்க ஸ்ராலினிச கம்யூனிஸ் கட்சியுடன் இணைந்த All
Workers Militant Front (PAME) 100
வாக்குகளை(20.92%) வாக்குகளைப் பெற்றது. வாடிக்கையாக
GSEE ஐ
"மஞ்சள்" தொழிற்சங்கம், அதன் "வேலைநிறுத்தத்தை முறிக்கும்" நடவடிக்கைகளைக் கண்டித்தாலும்,
ஸ்ராலினிஸ்டுகள் அதே தொழிற்சங்கத் தலைமையில் இடங்களைப் பெறுவதில் மன உறுத்துல் கொள்ளுவதில்லை.
PASOK உடன் தொழிற்சங்கங்கள்
கொண்டுள்ள ஒரே வேறுபாடுகள் பின்விளைவைத் தூண்டாவிதத்தில் எப்படி வெட்டுக்களைச் சுமத்த
தந்திரோபாயங்களைக் கொள்ளுவது என்பதில்தான். தொழிற்சங்கங்கள் சர்வதேச வங்கிகளுக்கு கொடுக்கப்பட
வேண்டிய கடன்கள் மறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பவில்லை.
இந்த ஆண்டு மட்டும், அரசாங்கம் 53பில்லியன் யூரோக்களை ($72.4 பில்லியன்)
மிச்சப்படுத்த வேண்டும். இந்த மொத்தத்தில் பழைய கடன்களைப் புதுப்பிக்கத் தேவைப்படும் 20 பில்லியன்
யூரோக்கள் ஏப்ரல் 20 மற்றும் மே இறுதிக்குள் சேர்க்கவேண்டும்.
இதற்கு மாறாக, GSEEன்
தலைவர் யானிஸ் பனகோபுலோஸ், குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வாங்க வேண்டும் என்னும் அரசாங்கக்
கோரிக்கையைத்தான் எதிரொலிக்கிறார். "மற்ற நாடுகளைப்போல் அதே குறைந்த விகிதத்தில் கிரேக்கம்
கடன்களை வாங்க வேண்டும்" என்றார் அவர். கடந்த வாரம்
GSEE ன் செய்தித்
தொடர்பாளரும், நிர்வாகக்குழு உறுப்பினருமான ஸ்ராதிஸ் அனெஸ்திஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், "நம் நாடு
இருக்கும் நிலை பற்றி நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்....தயார் நிலை என்ற நடைமுறை உண்மைக்கு ஏற்ற,
பொறுப்பான நிலைப்பாட்டைத் தக்க வைக்க விரும்புகிறோம்."
"நடைமுறைக்கு ஏற்ற" என்ற பெயரில் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது மிகக்
கடுமையான தாக்குதல்களை செயல்படுத்துவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்பதைத்தான் உறுதிபடுத்துகின்றனர்.
GSEE மாநாட்டில் நிகழ்த்திய தன்
உரையில் ADEDY
தலைவர் ஸ்பிரோஸ் பப்பாஸ்பிரோஸ், PASOK
உலகப் பொருளாதார நெருக்கடியினால் பரிதாபமாக பாதிக்கப்பட்டுவிட்டதைப்போல் விளக்கமளித்தார்.
அரசாங்கம் "நெருக்கடிக்கு பொறுப்பு இல்லாதவர்கள்மீது ஒருதலைப்பட்சமாக சுமையை சுமத்த
தள்ளப்பட்டுவிட்டது" என்று அவர் கூறினார்.
தொழிற்சங்கங்கள் கடும் சிக்கன எதிர்ப்புப் போராட்டங்களை நாசப்படுத்துகையில்,
கிரேக்கத்தின் ஆளும் உயரடுக்கு அதன் தாக்குதல்களை விரிவுபடுத்தத் திட்டங்களைக் கொண்டுள்ளது.
GSEE மாநாடு
நடந்து கொண்டிருக்கும்போதே, பெருவணிகம், முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஏதென்ஸில், "கிரேக்கம் திக்குத்திசையற்று
நிற்கிறது; சீர்திருத்தங்கள் போட்டித் தன்மையையும், முதலீட்டையும் கொண்டு வருமா?"
என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் பங்கு பெற்றனர்.
இந்த மாநாடு கிரேக்க நாளேடான
Kathimerini
இன் சகோதர நாளேடான International
Herald Tribune இனால் ஆதரவளிக்கப்பட்டது. இதில் நிதி
மந்திரி ஜோர்ஜ் பப்பாகொன்ஸ்டன்ரீனோ
மாற்று வெளியுறவு மந்திரி டிமிட்ரிஸ் ட்ரெளட்சஸ் மற்றும் புதிய ஜனநாயகக்
கட்சித் தலைவர் அன்ரோனியோ சாமாராஸ் ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்தினர்..
பொருளாதார நெருக்கடி எப்படி நிரந்தரமாக சமூக உறவுகளைத் தொழிலாளர்
வர்க்கத்தின் வாழக்கைத்தர இழப்பில் மறுகட்டமைக்கப் பன்படுத்தலாம் என்பதை விளக்கிய அரசாங்க மந்திரி ஹெரிஸ்
பம்போக்ஹிஸ் மாநாட்டில், "பொருளாதார நெருக்கடியை கிரேக்கமும் ஐரோப்பாவும் முன்னேறுவதற்கு ஒரு பெரிய
சந்தர்ப்பமாக காணலாம்" என்று கூறினார்.
மார்ச் 22ம் திகதி
Kathimerini தொழிலாளவர்க்கத்தின் மீதான பொலிஸ்
போல் தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய கருத்தை வெளியிட்டது. "ஒவ்வொரு நிறுவமும்,
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு தனிநபரும் தன்னை முழு சமூத்தைப் பொறுத்து, மறு வரையறை செய்து கொள்ள
வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடி இராணுவ சர்வாதிகாரம் 1967-74 வலதுசாரி சர்வாதிகாரத்தைத்
தீவிரநிலைக்கு கொண்டுவந்து, அதை முற்றிலும் அரசியல், சமூக விருப்பம் என்பதை மதிப்பிளக்க செய்தபின் வந்துள்ள
பெரும் கிரியா ஊக்கியாகும்." என்றார்.
கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலை நிறுத்தங்களும் எதிர்ப்புக்களும்
அதே போல் "தீவிரம்" என்று உட்குறிப்பாக கூறும்
Kathimerini முடிவுரையாக, "தொழிற்சங்கங்கள் இப்பொழுது
தங்களை பற்றி கடினப் பார்வையில் காண வேண்டும், ஊழியர்களுக்கு அது இந்த இழப்பு என்றாலும் தாங்கள் கிரேக்க
சீர்திருத்தத்திற்கு பங்களிக்க முடியுமா அல்லது தொழிலாளர்களுக்கு இன்னும் பாரிய இழப்புக்களைத்தான் கொடுக்கும்
தேவையற்றதை உரக்கக் கூவி, அணிவகுத்துச் செல்லுவரா என்பதை தீர்மானிக்க வேணடும்." என்று கூறியுள்ளது.
Kathimerini காலத்திற்கு
ஓரளவு பின்தங்கியுள்ளது என்பது வெளிப்படை. ஏற்கனவே நன்கு தெளிவாகியுள்ளபடி, தொழிற்சங்கங்கள்
தொழிலாளர் வர்க்கத்தை முடக்கவும் கிரேக்கத்தின் ஆளும் உயரடுக்கின் பின் கைகட்டி நிற்கவும்தான் முனைகின்றன. |